சனி, மே 22, 2021

ஶ்ரீ சீரடிபாபாவின் சாய்சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாயத்தின் வெளியீடு..அத்தியாயம் பத்து..

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள  இன்றைய  அத்தியாய  வெளியீடு....🙏🏼🙏🏼🙏🏼

🙏🏼ஶ்ரீசாய் சத்சரித்திரம்..🙏🏼

🙏🏼 அத்தியாயம்:: பத்து(10)🙏🏼

🔥முதலில் புனித வேத நூலான சாய்  சத்சரித்திரம்  பாராயணம் செய்வதன்  முக்கியத்துவமும், பெறப்போகும்  நன்மைகள்  என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேத நூல் என்பது சாய் சத்சரித்திரம் என்பதாகும்...இதில் ஶ்ரீசீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத எழுத்திலும் வியாப்பித்து  படர்ந்து இருக்கின்றது....

ஶ்ரீசாய் சத்சரித்திரத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல் ,மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது..ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து  சத் சரித்திரத்தில்  இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்....

இவ்வாறாக நாம் அனைவரும் சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும்  அனுக்கிரகத்தையும் பெற ஏதுவான வழியாக அமையும்..ஆகவே  சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்..நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக.🔥

🔥குறிப்பு...ஶ்ரீசாய் சத்சரித்திர வேதப் பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥

தனி மனித உயிரின்  சித்தம் தெளிவடையும்... அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரிய தன்மையை அடையலாம்....இவ்வேதப் பாராயணத்தின் மூலமாக ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரிய நிலையை அடையும் நிலையைப்  பெறலாம்...மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம், நேர்மறை, மனிதநேயம் போன்ற இறைப்பண்புகளைப் பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுபெறவும்  இந்த சத்சரித  வேதப்பாராயணம் துணைப்புரிகின்றது....  

மேலும் இப்பாராயணத்தின் மூலம்   மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில்  வெற்றி வாகை சூடலாம்....அவரவர்கள்  வேண்டியது கிடைக்கப்பெறும்..சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்... மேலும் அனைத்து விதமான  கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி  பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும்  ஒருசேரப்பெறலாம்....

🙏அத்தியாயம் ::பத்து 🙏

🙏முன்னுரை..🙏

சாயீபகவான் சாட்சியாக எதிலும் பற்றற்று இயல் வாழ்க்கையை, எவ்வாறு சீரடியில்  அமைத்துக்கொண்டார் என்பதன் விளக்கவுரை...

சீரடி பகவான் அறிதுயில் (உறங்குதல்) கொள்வதில் இருக்கின்ற மூல சூட்சமங்களைப் பற்றிய விளக்கவுரை...

சத்குருநாதர்  சீரடி பகவான் தன்னை தரிசிக்க வந்த பக்தர்களிடம், எவ்வாறு தன்னை வெளிப்படுத்திக்  கொண்டார் என்பதைப் பற்றிய விளக்கவுரை..

பாபாவின் சீரடி வாசமும், பிறந்த ஆண்டு பற்றி அனுமான கூற்றின் மூலமாக வெளிவந்த தகவலைப்  பற்றிய விளக்கவுரை....

சீரடி பகவான் அனைத்து மதத்தினரையும் ஒன்றாக இணைத்து, அனைத்து  பண்டிகைகளைக் பேதமில்லாமல் கொண்டாடி  மத நல்லிணக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வைப் பற்றிய அனுபவ விளக்கவுரை..

சீரடி பகவான்,  இயல்வாழ்க்கையில் எவ்வாறு தன்னை வெளிப்படுத்திக் கொண்டார் என்பது பற்றியும்,  மேலும் தன்னை நாடி வந்த பக்தர்களை , எவ்வாறு உயர்ந்த நிலையை அடைய வழிக்காட்டினார் என்பதன் விளக்கவுரை...

சீரடி பகவான் எவ்வாறு தாய்மையுணர்வு,  எளிமை, பணிவு மற்றும் சகிப்புத் தன்மையுடன் தான் வாழ்ந்து,  பக்தர்களை விழிப்புணர்வுடன் உற்று நோக்கி  உயரிய நிலையை அடையச் செய்ததைப் பற்றி விளக்கம்....

மேற்க்கண்ட தலைப்புக்களின் விளக்கவுரைகளை ஒவ்வொன்றாக கீழே பார்க்கலாம்...

🔥முதலில் சாயீபகவான் சாட்சியாக எதிலும் பற்றற்று இயல் வாழ்க்கையை, எவ்வாறு சீரடியில்  அமைத்துக்கொண்டார் என்பதன் விளக்கவுரையை இங்கே காண்போம்...🔥

ஆத்மார்த்தமான, தூய்மையான, நிலைமாறாத அன்பால் பகவானைப் பூஜித்து, பிணைத்துக் கொண்டு  சரணாகதி அடைய வேண்டும்..... எப்போதும் பகவானை உள்ளத்தில் நிறுத்தி வழிபட வேண்டும்.. ஏனெனில் பகவான்  அனைவருக்கும் நன்மை செய்யும் விதமாக ,பக்தர்களின் உயரிய அன்பால்  கவரப்பட்டு, பக்தனின் ஆத்மாவிலேயே உறைந்து இருக்கின்றார்..

நாம்  வாழ்க்கையில் கடைத்தேற்றம் அடைய  பகவான் நாமத்தை உச்சரித்து, பாதகமலத்தில்   சரணாகதி அடைவது  மட்டுமே..சாதனைகளில்  இதுதான் மிகமிக எளியதும், சிறந்ததுமான சாதனையாகும்..ஏனெனில் அது எவ்விதச் செலவையும் உள்ளடக்காதது.  இந்த  ஒரு சிறு முயற்சி  மிகப்பெறிய உயரியத் தன்மையைக் கொணர்கிறது..நமது புலன்கள் எல்லாம் நல்ல முறையில் இருக்குந்தோறும் நிமிடத்திற்கு நிமிடம், இந்த சாதனையைப் பழகவேண்டும்.  மற்ற எல்லாத் தேவைகளும் வெற்றுத் தோற்றமே...குருவே ஒரே கடவுள்.  சத்குருவின் புனிதத் திருவடிகளில் நம்மை முழுவதும் ஒப்படைத்தோமேயானால்,பகவான் நம் அனைவரையும் சத்தியப் பாதையில் வழிநடத்த ஏதுவான  வழியாக அமையும்...பகவானுக்கு  சிறப்பாகச் சேவை செய்வோமேயானால், நாம் நமது சம்சார பற்றிலிருந்து  விடுபடுகிறோம்.. உயர்ந்த தத்துவங்களை நாம் பயிலத் தேவையில்லை...

சீரடி பகவானை  நாம் சத்குருவாக ஏற்றுக் கொண்டு, அனைத்தையும் பகவான் பாதகமலத்தில் ஒப்படைத்து விட்டால், நாம் அனைவருக்கும் இக, ஜெக வழிக் காட்டியாக இருந்து, நம்மை சத்தியப் பாதையை நோக்கி முன்னேற வைப்பார்...இதனால்  நமது அனைத்துத் துன்பங்கள், துயரங்கள்,  கவலைகள் சூழ்ந்துள்ள  வாழ்க்கைக்  கடலை எளிதாகக் கடந்து செல்லலாம்...ஆற்றையும், கடலையும் கடப்பதில் நாம் மாலுமியை நம்பியிருப்பதைப் போன்றே, இவ்வுலக வாழ்வெனும் கடலைக் கடப்பதில், நமது சத்குருவின்  மீது திடமான நம்பிக்கை  அவசியம் வைக்க வேண்டும்...நாம் வைக்கின்ற  நம்பிக்கையும், விசுவாசத்தைப் பொருத்தே   பகவான் நமக்காக செயல்படுகின்ற  வழியாக அமைகின்றது..

🔥சீரடி பகவான் அறி துயில் (உறங்குதல்) கொள்வதில் இருக்கின்ற மூல சூட்சமங்களைப் பற்றிய விளக்கவுரை...🔥

பாபா எங்கு, எவ்வாறு தூங்கினார் என்பதைக் காண்போம்...நான்கு முழம் நீளமும், ஒரு முழம் அகலமும் உள்ள பலகையை பாபா படுத்து உறங்குவதற்காக நானா சாஹேப் டேங்க்லே கொணர்ந்தார்...அதனைத் தரையில் போட்டு அதன்மீது உறங்குவதற்குப் பதிலாக, மசூதியின் உத்தரங்களில் இற்றுப்போன கந்தல் துணிகளால் அதை ஒரு ஊஞ்சல்போல் கட்டி, அதன்மீது படுத்துறங்க ஆரம்பித்தார்... எப்படி பாபாவின் உடலை அது தங்குகிறது என்பது ஒருபுறமிருக்க, தனியாக ஊஞ்சலை மட்டும்  தாங்குவதே  பிரச்சனையாகவுள்ள அளவுக்கு மெல்லியதாகவும், இற்றுப்போயும் அக்கந்தல் துணி இருந்தது... ஆனால் பாபாவின் லீலையால் மட்டுமே அக்கந்தல் துணி பாபாவின் கனத்துடனும், பலகையையும் தாங்கவே செய்தது... பலகையின் நான்கு மூலைகளிலும், மூலைக்கொரு மண்விளக்கு வீதம் ஏற்றி, இரவு முழுவதும் எரிந்துக் கொண்டிருக்கும்படியாக வைப்பார்...

இப்பலகையின் மீது  பாபா அமர்ந்து கொண்டிருப்பதையோ, துயின்றுக் கொண்டிருப்பதையோ கண்ணுறும் தரிசனமானது தேவர்களுக்கும் கிடைப்பதற்கு அரியதொன்றாகும்...!  அதில் பாபா எங்ஙனம் ஏறி இறங்கினார் என்பது அனைவருக்கும் வியப்பை விளைவிப்பதாய் இருந்தது.  இதனை அறியும் ஆர்வத்துடன் பாபா ஏறுவதையும், இறங்குவதையும் காண்பதற்காகப் பல கவனமுள்ள பார்வையாளர்கள் பார்த்துக் கொண்டிருந்தப் போதிலும் ஒருவரும் அதனைக் காண்பதில் வெற்றிப் பெறவில்லை...  இவ்விசித்திரமான அருஞ்செயலைக் காண்பதற்காக கூட்டம் அதிரிக்கவே, ஒருநாள் பாபா பலகையைத் துண்டுத் துண்டாக உடைத்து எறிந்துவிட்டார்... எட்டுவிதமான மகாசித்திகளும் (அஷ்டமா சித்திகள்) பாபாவின் ஆணையில் இருந்தன..அவர் அவைகளை ஒருபோதும் பயிற்சிக்கவோ அவைகளுக்காக ஏங்கவோ இல்லை...அவைகள் பாபாவின் முழுமையினால் தாமாகவே அவரை வந்தெய்தின.... 

🔥சத்குருநாதர்  சீரடி பகவான் தன்னை தரிசிக்க வந்த  பக்தர்களிடம் எவ்வாறு தன்னை வெளிப்படுத்திக் கொண்டார் என்பதைப் பற்றிய விளக்கவுரை..🔥

ஐந்தடி மூன்று அங்குல உயரமுள்ள மனிதனைப் போல் பாபா தோற்றமளித்தாலும், அனைவரின் இதயத்திலும் அவர் வாழ்வார்.  அந்தரங்கமாக அவர் பந்தமற்றவராகவும், புறப்பார்வையால் நோக்கினால்  அக்கறையற்றவராக இருந்தாலும், ஆழ்நிலையில்  பொதுமக்களின் நலத்தை விரும்பினார்...அகத்திலே மிகவும் ஆர்வமற்றவராக இருப்பினும், புறத்தில் தமது பக்தர்களுக்காக ஆசைகள் நிரம்பப்பெற்றவராக இருந்தார்...உள்ளே சாந்தத்தின் இருப்பிடமாக அவர் இருப்பினும், வெளியில் இருப்புக் கொள்ளாதவராய் இருந்தார்..அந்தரங்கமாய் பரமானந்த நிலையை எய்தியவராய் அவர் இருந்தார்...பகிரங்கமாய்  கோப ஆவேசம் உடையவர்  போன்று நடந்துக்கொண்டார்.  அந்தரங்கமாய் அவர் அத்வைதத்தை விரும்பினார்...பகிரங்கமாய் உலகோடு கட்டுப்பட்டவராய் இருந்தார்... சில நேரங்களில் அனைவரையும் பாசம் ததும்ப நோக்கினார்.. சில சந்தர்ப்பங்களில் பக்தர்களின் மீது கற்களை விட்டெறிந்தார்...சிலசமயம் அவர்களைக் கடிந்துக்கொண்டார்...சில சந்தர்ப்பங்களில் அவர்களை அன்புடன் அரவணைத்தார்... ஆனால்  அகத்தில் அமைதியாகவும், பதட்டமற்றவராகவும், பொறுமையுள்ளவராகவும், சமநிலையுள்ளவராகவும் இருந்தார்.. ஆத்மாவிலேயே உறைந்து அதனாலேயே கவரப்பட்டு அதன் லயமாக ஆனார்.. தமது பக்தர்களுக்காகச் செய்யவேண்டியவற்றை நன்கு செய்து முடித்தார்.  எப்போதும் அவர் ஒரே ஆசனத்தில் அமர்ந்திருந்தார்.  ஒருபோதும் பிரயாணம் செய்யவில்லை...

பகவான் தன் கரங்களில் தண்டம்  வைத்திருந்தார். (சந்நியாசிகள், துறவின் அடையாளமாகத் தங்களுடன் வைத்திருக்க வேண்டிய நீளமான மூங்கில் கோல்) .. சாந்தமாகவும், எண்ணங்களிலிருந்து விடுபட்டவராகவும் இருந்தார்..செல்வத்தையும், புகழையும் அவர் இலட்சியம் செய்யாது, பிக்ஷை எடுத்தே வாழ்ந்தார்... இத்தகைய வாழ்க்கையையே அவர் விரும்பி  நடத்தினார்... 'அல்லா மாலிக்'..இறைவனே எஜமான் என்று அவர் எப்போதும் கூறிக் கொண்டிருந்தார்.  அடியவர்களிடம் அவர் கொண்டிருந்த அன்பு ஏராளமானதும், தடையற்றதுமாகும்... ஆத்மஞானச் சுரங்கமாகவும், பரமானந்தம் முழுமையும் நிரம்பப் பெற்றவராகவும் இருந்தார்....

சாயீபாபாவின் ரூபமானது தெய்வீகத் தன்மையுடன் இருந்தது... அத்தகைய எல்லையற்ற, முடிவற்ற, பாகு பாடில்லாத, புல்-பூண்டிலிருந்து பிரம்மா வரையுள்ள பிரபஞ்சமனைத்தையும் அரவணைக்கும் ஏகதத்துவமே சாயீபாபாவாக அவதரித்தது....  உண்மையில் தகைமையும், நல்ல அதிஷ்டமும் பெற்ற பெற்ற மக்கள் சாயீபாபா என்ற பொக்கிஷப் புதையலைப் பெற்றனர்.  உண்மையான மதிப்பை அறியாதவர்கள், அவரை ஒரு மனிதனாக, சாதாரண மானிடப் பிறவியாகக் கருதினார்கள், கருதுகிறார்கள்...?அவர்கள் உண்மையிலேயே பரிதாபத்துக்கு உரியவர்கள் ஆகிறார்கள்...                          

🔥பாபாவின் சீரடி வாசமும், பிறந்த ஆண்டு பற்றிய அனுமான கூற்றின் மூலமாக வெளிவந்தத் தகவலைப்  பற்றிய விளக்கவுரை.....🔥

சாயீபாபாவின் சரியான பிறந்த நாளையும், அவரது பெற்றோரையும் ஒருவரும் அறியார்கள்..அவரது சீரடி வாசத்தில் இருந்து அதை ஏறக்குறையத் தீர்மானிக்கலாம்.  அவர் பதினாறு வயதுப் பாலகனாக இருக்கும்போது முதலில் சீரடிக்குக்கு  வருகைப் புரிந்தார்... மூன்றாண்டுகள் அங்கு தங்கியிருந்தார்... பின்னர் திடீரென்று சிலகாலம் மறைந்து விட்டார்...  சிறிது காலத்திற்குப் பின் நைஜாம் ஓளரங்கபாத்துக்கு அருகில் இருபது வயது நிரம்பி இருக்கும்போது தோன்றினார்...மீண்டும் சீரடிக்கு சாந்த் பாடீலின் கல்யாண கோஷ்டியுடன் திரும்பினார்...பின்னர் தொடர்ந்து அறுபது ஆண்டுகள் அவர் சீரடியில் வாழ்ந்தார்.... அதற்குப் பின்னர் 1918..ஆம் ஆண்டில் மகாசமாதி அடைந்தார்...  இதில் இருந்து பாபாவின் பிறந்த வருடம் ஏறக்குறைய 1838ஆக இருக்கலாம் என்று கூற இயலும்...

🔥சீரடி பகவான் அனைத்து மதத்தினரையும் ஒன்றாக இணைத்து, அனைத்து  பண்டிகைகளைக் பேதமில்லாமல் கொண்டாடி  மத நல்லிணக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வைப்  பற்றிய விளக்கவுரை..🔥

பசுக்களையும், அந்தணர்களையும், யவனர்களிடமிருந்து (மொஹலாயர்களிடமிருந்து)  காப்பாற்றுதல் என்னும் தாம் மேற்கொண்ட குறிக்கோளை பெருமளவிற்கு நிறைவு செய்தார்.. ஆனால் இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னர், இரு வகுப்பினர்களுக்குள்ளும் மீண்டும் (இந்து - முஸ்லிம்கள்) வேற்றுமை அதிகரித்தது...அந்தப் பாதாளப் பள்ளத்தினை இணைக்கும் பாலமாக சாயீபகவான் திகழ்ந்து, மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தினார்..

பகவானின் நிரந்தரமான உபதேசத்தின் உட்கருத்து இவ்வாறனதாகும்.. "ராமரும் (இந்துக்களின் தெய்வம்) , ரஹீமும் (முஸ்லிம்களின் தெய்வம்)  மூலம்  ஒன்றே ஒன்றுதான்...அவர்களுக்குள் எள்ளளவும் வேற்றுமை இல்லை...பின்னர் ஏன் அடியவர்கள் சச்சரவு புரிந்து தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றனர்..?  கள்ளங்கபடு அறியாத மக்களாக கைகோர்த்து இரு வகுப்பினரும் ஒன்றாயிணைந்து விவேகத்துடன் நடந்துக் கொள்ளுங்கள்...இங்ஙனமாக உங்களது குறிக்கோளாகிய தேசீய ஒற்றுமையை ஈட்டப்பெறுவீர்கள்...போராடி வாதாடுதல் நன்றன்று...எனவே விவாதிக்க வேண்டாம்.  மற்றவர்களுடன் போட்டிபோட வேண்டாம்.  எப்போதும் உங்களது அக்கறையினையும், நலத்தினையுமே கருத்தில் கொள்வீர்களாக என்று உபதேசம் செய்தார் பகவான்...

கடவுள் உங்களைக் காப்பாற்றுவார்... யோகம், தியாகம், தவம், ஞானம் என்பன கடவுளையறியும் நெறிகள்...இந்த வழிகளில் ஏதேனும்  ஒன்றின் மூலம் நீங்கள் இதில் வெற்றிபெற இயலாவிடின், உங்கள் பிறப்பு வீணேயாகும்.  யாரேனும் ஏதாவது தீமையை உங்களுக்குச் செயவாரேயாகில், அதற்க்காகப் பழிக்குப் பழி வாங்காதீர்கள்.  நீங்கள் ஏதேனும் செய்ய இயலுமானால், பிறருக்குச் சிறிது நன்மையைச் செய்வீராக..!"  இது அனைவருக்கும் சாயீபாபா அளித்த உபதேசத்தின் சுருக்கம்.  இது லௌகிக, ஆன்மிக விஷயங்கள் இரண்டிலுமே நலம் பயப்பதாகும்...

🔥சீரடி பகவான்,  இயல்வாழ்க்கையில் எவ்வாறு தன்னை வெளிப்படுத்திக் கொண்டார் என்பது பற்றியும்,  மேலும் தன்னை நாடி வந்த பக்தர்களை , எவ்வாறு உயர்ந்த நிலையை அடைய வழிக்காட்டினார் என்பதன் விளக்கவுரையை இங்கே..🔥

ஏராளமான குருக்கள் இருக்கின்றனர்...தங்கள் கரங்களில் ஜால்ரா, தாளக்கருவி, வீணை சகிதம் வீடுதோறும் சென்று ஆத்மீகத்தைப் படாடோபம் செய்துக்கொள்ளும் குருமார்கள் நிறைய உண்டு...அவர்கள் மந்திரங்களைத் தமது சீடர்களின் காதில் ஓதி அவர்களிடமிருந்து பணத்தைக் கறப்பர்.. தமது சீடர்களுக்கு கடவுள் பற்றையும், கடவுள் நம்பிக்கையையும் உபதேசிப்பதாக உணர்ச்சி வகையில் வெளிப்படையாகக் காட்டிக்கொள்வர்.. ஆனால் அவர்களே இறையனுபவம் அற்றவராக இருப்பர்...ஆனால் சாயீபாபா தமது தகைமையையும், (கடவுள்பற்று), மெய்யுணர்வையும் காண்பிப்பதற்கு எவ்வித சிறிய முயற்சியையும் எடுக்கவேயில்லை.  அடியவர்களிடம் பெருமளவு அன்புக்  கொண்டிருந்தார்...இரண்டு விதமான குருமார்கள்  இருக்கின்றனர்....

(1)நியத்- நியமிக்கப்பட்டவர்கள்..

(2)அநியத்..நியமிக்கப்படாதவர்கள்..

பொதுவாக, பின்னவர்கள் தங்கள் உபதேசங்களால் நம்மிடத்தில் உள்ள நற்பண்புகளை அபிவிருத்தி செய்கின்றனர்.  நமது இதயத்தைத் தூய்மைப்படுத்துகின்றனர். நம்மை வீடுபேற்றை அடையும் பாதையில் செல்லத் தூண்டுகின்றனர்...இதற்கு மாறுபாடாக முன்னவர்களாகிய குருக்களோ நமது தனி இயல்பை (பேத உணர்வை) அழித்து, 'நீயே அது...!'என்று உணரச் செய்து, நம்மை ஏகத்வத்தில் ஸ்தாபிக்கின்றனர்...பல்வேறு வகையான உலக ஞானத்தை அளிக்கும் பல திறன்மிகுந்த  குருக்கள் இருக்கின்றனர்... ஆனால் நம்மை நமது இயற்கையில் (ஆத்மாவில்) நிலைப்படுத்தி உலகவாழ்வெனும் சாகரத்துக்கு அப்பால் நம்மைச் சுமந்து செல்பவரே சத்குரு எனப்படுவார்...சாயீபாபா அத்தகைய ஒரு சத்குரு ஆவார்...அவருடைய பெருமையை விவரிக்க இயலாது...யாரேனும் பாபாவின் தரிசனத்தைப் பெறச்சென்றால், கேட்கப்படாமலேயே அவரது கடந்தகால, நிகழ்கால, எதிர்காலங்களின் ஒவ்வொரு விவரத்தையும் உரைப்பார்... எல்லா ஜீவராசிகளிடமும் அவர் தெய்வீகத்தைக் கண்டார்.  நண்பர்களும், பகைவர்களும் அவருக்கு ஒன்றே....அவாவற்றவராகவும், சமன் செய்யப்பட்டவராகவும் இருந்த பாபா, தீயோருக்கும் கட்டுப்பட்டுச் செவி சாய்த்தார்... சுபிக்ஷசத்திலும்,  எதிரிடையான சூழ்நிலையிலும் அவர் ஒரே மாதிரியாய் இருந்தார்...எப்போதும், எவ்வித ஐயமும் அவரைத் தீண்டவில்லை..இவ்வுடம்பில் அவர் இயங்கினாரெனினும் எள்ளளவும் தமது தேகத்நில்  பற்றற்றவராக சாட்சியாக  இருந்தார்...உடலுருக்கொண்டு அவர் தோற்றமளித்தாலும் உண்மையில் அருவமானவர்...அதாவது இந்த வாழ்க்கையிலிருந்தே விடுதலையானவர்....  

அத்தகைய சாயீயை தங்கள் கடவுளாக வழிபட்ட சீரடி மக்கள் ஆசீர்வதிக்கபட்டவர்கள்...அவர்கள் உண்ணும்போதும், அருந்தும்போதும், பழக்கடையிலும், வயலிலும் மற்றபிற இல்லற தர்மங்களைச் செய்யும்போதும் சாயை நினைவு கூர்ந்தார்கள்..அவர்தம் புகழைப் பாடினார்கள்...சாயீயைத் தவிர பிறிதொரு கடவுளை அவர்களுக்குத் தெரியாது...சீரடியில் வசித்த பெண்களின் அன்பின் இனிமையை எங்ஙனம் விவரிக்கமுடியும்..! ஒன்றும்  அறியாதவர்களாக இருப்பினும், அவர்களின் தூயஅன்பு எளிய கிராமியமொழியில் பாபாவின் புகழை கவிதையாகவும், தெம்மாங்குப் பாடலாகவும் பாட  உணர்வூட்டியது.. எழுத்தறிவு அவர்களிடம் இல்லையாயினும் உண்மைக் கவித்துவத்தை அவர்களின் எளிமையான பாடல்களில் தெளிவாக உணரமுடியும்...படிப்பறிவு அன்று! ஆழ்ந்த அன்பே அத்தகைய பொருள்செறிந்த பாடல்களை வெளிக்கொணர்ந்தது... அப்பாடல்கள் ஆழ்ந்த அன்பின் வெளிப்பாடே..  சற்றே அறிவுக்கூர்மையுள்ள ஆர்வலரால் அவற்றை உணர்ந்து இன்புறமுடியும்....இந்த கிராமியப் பாடல்களை சேகரித்து தொகுப்பது மிகவும் அவசியமான ஒன்று....பாபாவின் விருப்பத்தால் அதிஷ்டமுடைய பக்தர் எவரேனும் இப்பணியை மேற்கொண்டு சாயீலீலா சஞ்சிகையிலோ அல்லது தனிப்புத்தகமாகவோ பிரசுரிக்கலாம்...

🔥சீரடி பகவான் எவ்வாறு தாய்மையுணர்வு,  எளிமை, பணிவு மற்றும் சகிப்புத் தன்மையுடன் தான் வாழ்ந்து, பக்தர்களை விழிப்புணர்வுடன் உற்று நோக்கி உயரிய நிலையை அடையச் செய்ததைப் பற்றி விளக்கம்....🔥

பரமாத்மா அல்லது கடவுள் ஆறு  குணாதிசயங்களை உடையவராக ககூறப்படுகிறது...அதாவது புகழ், செல்வம், பற்றின்மை, ஞானம், பேராற்றல், வள்ளன்மை ஆகியவையாகும்...பாபா மேற்க்கூறிய குணங்கள் அனைத்தையும் தன்னகத்தில் உடையவராக  விளங்கினார்.இவ்வுடம்பில் அடியவர்களுக்காக அவதரித்தார்...அவரது அருளும், அன்பும் அதிசயிக்கத் தக்கவை.  ஏனெனில் தமது அடியவர்களைத் தம்மிடம் தாய்மையுணர்வுடன் ஈர்த்துக் கொண்டார் பகவான்...இல்லாவிடில் யார்தான் அவரை அறிந்திருக்க இயலும்!  அவர் தமது பக்தர்களின் பொருட்டாக வாக்கின் தெய்வம் (சரஸ்வதிதேவி) கூட உரைக்கத் துணியாத அத்தகைய சொற்களை அவர் கூறினார்...அதற்கு இதோ ஓர் உதாரணம், மிகவும் எளிமையுடன் அவர் கூறியது பின்வருமாறு...

"நான் அடிமைகளுள் அடிமை.  உங்கள்ளுக்குக் கட்டுப்பட்டவன்.  உங்களது தரிசனத்திலே திருப்தியடைகிறேன்...தங்களது திருவடிகளைத் தரிசிக்கும் பெரும் பாக்கியம் பெற்றேன்...நான் தங்களது மலத்திலுள்ள ஒரு புழு....இவ்வாறாக  என்னை நான் ஆசீர்வதிக்கப்பட்டவனாகக் கருதுகிறேன்"...எத்தகைய பணிவுடைமை...?இதைப் பிரசுரிப்பதன் மூலம் சாயீக்கு எத்தகைய அவமரியாதையாவது செய்யப்பட்டது என்று எவரேனும் நினைப்பாராகில், அவர்களிடம் மன்னிப்பை வேண்டிக்கொள்கிறோம்.  இதற்குப் பிராயச்சித்தமாக பாபாவின் நாமத்தைப் பாடி ஜபிப்போமாக..!

பாபா வெளிப்படையாக உணர்ச்சி நுகர்வுக்கூறு மற்றும் பொருட்களால் மகிழ்பவர்போல் தோன்றினாலும், அவருக்கு அவைகளில் எள்ளளவும் தனிச்சுவைத் திறமோ, அவைகளை மகிழ்ந்து அனுபவிக்கும் பிரக்ஞையோ இருந்ததில்லை.  அவர் எதனையும் ஆவலுடன் உண்டார் எனினும், சுவை அறியவில்லை.  பார்த்தார் எனினும், பார்த்தவைகளில் அவர் எவ்வித விருப்பையும் உணர்ந்திருக்கவில்லை.  காம உணர்வுகளைப் பற்றிக் கருதும்கால் அவர் ஹனுமானைப் போன்ற பூரண பிரம்மச்சாரியாவார் என்பதாலும் பற்றற்றவராக இருந்தார்...அவரே தூய உணர்வுகளின் இருப்பிடமாகவும் , ஆசை, கோபம், மற்ற உணர்ச்சிகள் அடங்கி அமைதியுறும் இடமாகவும் திகழ்ந்தார்.  சுருக்கமாக அவர் அவாவற்றவர், கட்டற்றவர், முழு நிறைவானவர்.  இக்கூற்றைச் சித்தரிக்கும் வகையில் ஒரு அதிசய நிகழ்ச்சியைக் கூறலாம்.....  

சீரடியில் நானாவலி என்ற பெயரில் தனிப்போக்குள்ள விசித்திரமான மனிதன் ஒருவன் இருந்தான்.  அவன் பாபாவின் வேலைகளையும், காரியங்களையும் கவனித்துவந்தான்.  ஒருமுறை அவன், ஆசனத்தில் அமர்ந்திருந்த பாபாவிடம் சென்று, தான் அதில் உட்கார வேண்டியிருப்பதால் பாபாவை எழுந்திருக்கும்படி கூறினான்... பாபா உடனடியாக எழுந்திருந்து, தாம் அமர்ந்திருந்த ஆசனத்தைக் காலி செய்தார்...அதில் அவன் அமர்ந்துகொண்டான்....சிறிது நேரம் அமர்ந்திருந்த பின்னர் அவன் எழுந்திருந்து, பாபாவை அமர்ந்துகொள்ளக் கூறினான்...பாபா ஆசனத்தில் அமர்ந்தார்...பிறகு அவன் பாபாவின் பாதங்களில் வீழ்ந்து நமஸ்கரித்து விட்டுச் சென்றுவிட்டான்....  

தன் பக்தன்  அதிகாரம் செலுத்தப்பட்டதிலும், தான்  வெளியேற்றப்படதிலும், பாபா எள்ளளவும் வருத்தம் அடையவில்லை... இந்த நானாவலி, பாபாவை மிகவும் நேசித்தார்...பாபா மகாசமாதி எய்திய பதிமூன்றாவது நாள் தாமும் சமாதி அடைந்தான்....உயரிய  ஞான மார்க்கத்தை  அடைய மிகவும் எளியவழி என்னவென்றால் ...முனிவர்களுடைய கதைகளைக் கேட்பதும், அவர்களின் சத்சங்கத்தில் இருப்பதே...புறத்தில் சாயீபாபா சாதாரண மனிதர் போன்று நடித்தாலும், அவரது செய்கைகள் அவரது அசாதாரண புத்தி சாதுர்யத்தையும், திறமையையும் காண்பித்தன...அவர் எதைச் செய்தபோதிலும் அவைகள் அடியவர்களின் நன்மை கருதியே செய்யப்பட்டன... தமது அடியவர்களுக்காக, சுவாச நியமத்தையோ, அல்லது எத்தகைய வழிபாட்டுமுறையையோ, அவர் வகுத்துரைக்கவில்லை... அல்லது எவ்வித மந்திரத்தையும், எவர் காதிலும் அவர் ஓதவில்லை.. எல்லாவித புத்திசாலித் தனத்தையும் விட்டொழித்துவிட்டு எப்போதும் 'சாயி சாயி' என்று ஞாபக மூட்டிக்கொள்ளும்படி பக்தர்களிடம்  கூறினார்...இதைச் செய்வீர்களானால் உங்களது கட்டுக்களெல்லாம் விடுபட்டு விடுதலை அடைவீர்கள் என்று உரைத்தார்... ஐந்து நெருப்புக்களிடையே அமர்தலும், யாகங்களும், பராயணங்களும், அஷ்டாங்க யோகங்களும் அந்தணர்களால் மட்டுமே இயலுவதாகும்..  மற்றைய வகுப்பினருக்கு அவைகளால் எவ்விதப் பலனும் இல்லை...மனதில்  எண்ணமின்றி அது ஒரு நிமிடமும் இருக்கமுடியாது..புலன் உணர்விற்குச் சார்பான பொருளை மனதிற்கு நீங்கள் அளித்தால் அதைப்பற்றி நினைக்கும்..அதற்குப் பதிலாக சத்குருவை அளித்தால் அது குருவைப்பற்றி எண்ணமிடும்...அனைத்தும் நம்மிடமே ...

நீங்கள் மிக்க கவனத்துடன் சாயீயின் பெருமையையும், பேராற்றலையும் கேட்டீர்கள்...  இதுவே சாயீயை இயற்கையாக நினைவூட்டிக் கொள்ளுதலும், வழிபடுவதும், கீர்த்தனை செய்வதும் ஆகும்..  மேலே கூறப்பட்ட மற்ற சாதனைகளைப்போன்று இக்கதைகளைக் கேட்பது என்பது அவ்வளவு கடினமானது அல்ல.  இக்கதைகள் சம்சாரமென்னும் (உலக வாழ்க்கை) பயத்தை அழித்து, உங்களை ஆத்மீகப் பாதையில் அழைத்துச் செல்கின்றன.  எனவே இக்கதைகளைக் கவனத்துடன் கேளுங்கள்.  அவைகளைத் தியானித்து  ஜீரணித்துக்கொள்ளுங்கள் இம்முறை பின்பற்றப்பட்டால் அந்தணர்கள் மட்டுமன்று பெண்ணினமும், கீழ்குலத்தோரும் தூய்மை அடைந்து புனிதமடைவர்....  

நீங்கள் உங்களது உலகக் கடமைகளைச் செய்துகொண்டோ, கவனித்துக்கொண்டோ இருக்கலாம்...  ஆனால் உங்களது மனத்தை சாயீக்கும் அவரின் கதைகளுக்கும் அளித்துவிட்டால், உங்களை ஆசீர்வதிப்பது நிச்சயமாகும்.  இதுவே மிகவும் எளிமையான வழியாகும்... எனினும் அனைவரும் ஏன் அதைப் பின்பற்றவில்லை...?  காரணம் என்னவென்றால் கடவுள் அருளின்றி முனிவர்களின் கதைகளைக் கேட்கும் ஆர்வம் நமக்கு வருவதில்லை...கடவுள் அருளால் எல்லாம் தட்டுத்தடங்கல்கள் இன்றியும், எளிதாகவும் நடந்தேறுகிறது....  

மகான்களின்  கதைகளைக் கேட்பது என்பது ஒருவழியில் அவர்களின் சத்சங்கதைப் பெறுதலைப் போன்றதாகும்... முனிவர்களின் கூட்டுறவின் முக்கியத்துவமானது மிகவும் பெரியது.நமது உடல் உணர்வையும், அகங்காரத்தையும் அகற்றி, பிறப்பு - இறப்பு என்னும் சங்கிலித் தொடர்ச்சியை அறவே அழிக்கிறது.  இதய முடிச்சுக்களையெல்லாம் துண்டாக அறுத்துவிட்டு தூய உணர்வான கடவுளிடத்திலேயே நம்மை அழைத்துச் செல்கிறது.  புலன் உணர்வு விஷயங்களைப் பற்றி நமது அவாவின்மையை நிச்சயம் அதிகரித்து, இன்ப-துன்பங்களை நாம் முழுவதும் இலட்சியம் செயாதவராக்கி, ஆத்மீகப் பாதையில் மேன்மேலும் நம்மை அழைத்துச் செல்கிறது.  நாமஸ்மரணம், வழிபாடு அல்லது பக்தி போன்ற சாதனைகள் உங்களிடம் இல்லையாயினும், ஞானிகளிடம் உங்கள் முழு இதயத்தோடு சரணாகதி அடைவீர்களேயானால், இவ்வுலக வாழ்வெனும் பெருங்கடலுக்கு அப்பால் அவர்கள் நம்மைப் பத்திரமாக இட்டுச் செல்வார்கள்...

இக்காரணத்துக்காகவே மகான்கள் இவ்வுலகில் அவதரிக்கின்றார்கள்.  உலகத்தின் பாவங்களை அடித்துச் செல்லும் கங்கை, கோதாவாரி, கிருஷ்ணா, காவேரி முதலிய புனித ஆறுகள்கூட முனிவர்கள் ஸ்நானத்திற்காகத் தங்களிடம் வரவேண்டுமென்றும், தங்களைப் புனிதப்படுத்த வேண்டுமென்றும் விரும்புகின்றன.முனிவரின் பேராற்றல் அத்தகையது... முந்தைய பிறவிகளில் நாம் செய்த நற்கருமங்களின் சேமிப்புக் குவியல்களால் நாம் சாயீபாபாவினுடைய திருவடிகளை அடையப்பெற்றோம்.  சாயீயின் ரூப தியானத்துடன், இந்த அத்தியாயத்தை நாம் முடிக்கிறோம்...அத்தகைய சுந்தரமான அழகுபடைத்த சாயீ பகவான், மசூதியின் விளிம்பில் நின்றுகொண்டு 'உதீ 'யை ஒவ்வொரு பக்தருக்கும், அவரவர் நன்மையைக் கருத்திற்கொண்டு விநியோகித்துக் கொண்டிருக்கின்றார்..  இவ்வுலகை வெறுமையாய்க் கருதி பரமானந்தத்திலேயே எப்போதும் திளைத்துக் கொண்டிருக்கும் அவர் முன்னால் வீழ்ந்து வணங்குவோம்...

ஓம் ஶ்ரீ சாய்ராம்..🙏🙏🏼🙏🏼

ஸ்ரீ சாயீயைப் பணிக...அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்...🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுயவிழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🏼🙏🏼🙏🏼



வெள்ளி, மே 21, 2021

ஶ்ரீ சீரடிபாபாவின் சாய்சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாயத்தின் வெளியீடு..அத்தியாயம் ஒன்பது

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள  இன்றைய  அத்தியாய  வெளியீடு....🙏🏼🙏🏼🙏🏼

🙏🏼ஶ்ரீசாய் சத்சரித்திரம்..🙏🏼

🙏🏼அத்தியாயம்::ஒன்பது(9)🙏🏼

🔥முதலில் புனித வேத நூலான சாய்  சத்சரித்திரம் பாராயணம் செய்வதன்  முக்கியத்துவமும், பெறப்போகும்  நன்மைகள்  என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥

ஶ்ரீசீரடி சாயீன்  புனித வேதநூல் என்பது  சாய் சத்சரித்திரம் என்பதாகும்..பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத  எழுத்திலும் வியாப்பித்து படர்ந்து இருக்கின்றது...

ஶ்ரீசாய் சத்சரிதத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல் ,மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது..ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து  சத் சரித்திரத்தில்  இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்....

இவ்வாறாக நாம் அனைவரும் ஶ்ரீசாய் சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும்  அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்..ஆகவே  சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்..நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக.🔥

🔥குறிப்பு...சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥

தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்... அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரிய தன்மையை அடையலாம்..வேதப்  பாராயணத்தின் மூலமாக  ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரிய நிலையை அடையும் நிலையைப் பெறலாம்...மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம், நேர்மை, மனிதநேயம் போன்ற இறைப்பண்புகளைப் பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுபெறவும்  இந்த சத்சரித  வேதப்பாராயணம் துணைப்புரிகின்றது.... 

மேலும் இப்பாராயணத்தின் மூலம்   மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில்  வெற்றி வாகை சூடலாம்.... அவரவர்கள்  வேண்டியது கிடைக்கப்பெறும்.... சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்...மேலும் அனைத்து விதமான  கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி  பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும்  ஒருசேரப்பெறலாம்....🙏🏼🙏🏼

🙏🏼அத்தியாயம்.:ஒன்பது(9)🙏🏼

🙏முன்னுரை...🙏

பகவானை காண வரும் பக்தர்கள், விடைபெறும் போது  பாபாவின் ஆணையை  எவ்வாறு பின்பற்றி நடந்தனர்..அவ்வாறு பகவானின் ஆணைக்கு கீழ்ப்படியாது போனவர்கள் என்ன விளைவுகளைச் சந்திக்க நேரிட்டது என்பதன் விளக்கவுரை ..

பகவான் மதுகரீ பிக்ஷை எடுத்ததன் மூல சூட்சம விளக்கம்..மற்றும் பகவானுக்கு பிக்ஷை வழங்கியவர்கள் , எவ்வாறு துன்பத்துயரங்கள் நீங்கப் பெற்று பேறுபெற்றவர்கள் ஆனார்கள் என்பதைப் பற்றிய  விளக்கவுரை....

ஆத்மார்த்தமான  உயரியப் பக்தர் தர்கட்  குடும்பத்தில் பகவானை எவ்வாறு பூஜித்த விதமும்,  பகவான்  அப்பூஜையை  ஏற்றுக்கொண்டு, அவர்கள் அளிக்காமல் விடுத்த நிவேதனத்தை அறிவுருத்தி பெற்றுக்கொண்டதைப் பற்றிய அனுபவ விளக்கவுரை..

மேற்க்கண்ட தலைப்புக்களின் விளக்கவுரைகளை ஒவ்வொன்றாக கீழே பார்க்கலாம்...

🔥முதலில் பகவானை காண வரும் பக்தர்கள், விடைபெறும் போது  பாபாவின் ஆணையை  எவ்வாறு பின்பற்றி நடந்தனர்...அவ்வாறு பகவானின் ஆணைக்குக் கீழ்ப்படியாது போனவர்கள் என்ன விளைவுகளைச் சந்திக்க நேரிட்டது என்பதன் விளக்கவுரை.. 🔥

சீரடி  புனித யாத்திரையின் ஒரு சிறப்பான வினோதம் என்னவென்றால் எவரும் சீரடியை விட்டு பாபாவின் அனுமதியின்றி அவர்கள்  இருப்பிடத்திற்கு  செல்லமுடியாது.. அப்படிச் செல்வாரேயானால், அவர் சொல்லற்கரிய தொல்லைகளை வரவேற்கிறார்...ஆனால் எவரேனும் சீரடியைவிட்டு  வெளியேறிச் செல்லும்படி பாபாவால் கேட்டுக் கொள்ளப்பட்டால் அவர் அங்கு அதற்குமேல் தங்கியிருக்கமுடியாது...பக்தர்கள் பாபாவிடம் சென்று வந்தனம் செய்து விடைபெற்றுச் செல்லும்போது பகவான்  சில யோசனைகளை அல்லது குறிப்புக்களை வழங்குவார்... இந்த யோசனைகளை பின்பற்றப்பட வேண்டும்.. இவ்வாறு பகவான் ஆணையை பின்பற்றாமல் இருந்தால்,  ஏதாவது ஒரு விதத்தில் இடர்பாடுகளும், தொந்தரவுகளும்  நேரிடும்.. இதைப்பற்றிய அனுபவங்களைப் பற்றி கீழேப் பார்ப்போம்....  

தாத்யா கோதே பாடீல், ஒருமுறை கோபர்காவன் கடைவீதிக்குக் குதிரை வண்டியில் சென்று கொண்டிருந்தார்...அவர் மசூதிக்கு  அவசரமாகத் திரும்பிவந்து  பாபாவை வணங்கி, தான் கோபர்காவன் கடைவீதிக்குச் செல்லப் போவதாகக் கூறினார்...பாபாவோ, "அவசரப்படாதே...சிறிது தாமதித்துக் கடைவீதிக்குச் செல், கிராமத்தை விட்டு வெளியே செல்லாதே" என்று அறிவுருத்தி இருக்கின்றார்...ஆனால்  அவருடைய வேகத்தைக் கண்ட பாபா,ஷாமாவையாவது (மாதவராவ் தேஷ்பாண்டே) உடன் அழைத்துச் செல்லுமாறு கூறினார்... இந்த உத்தரவை  பொருட்படுத்தாது தாத்யா கோதே, உடனே குதிரை வண்டியை ஓட்டிச் சென்றார்....இரண்டு குதிரைகளில், ரூ.300 விலையுள்ள குதிரை மிகவும் சுறுசுறுப்பாகவும், இருப்புக் கொள்ளாமலும் இருந்தது...சாவ்லிவிஹீர்  என்ற கிராமத்தைத் தாண்டியப் பிறகு குதிரைகள்  தாறுமாறாக ஓடத் தொடங்கியது...  இடுப்பில் சுளுக்கு ஏற்பட்டுக் கீழே விழுந்துவிட்டது.. தாத்யா அதிகமாகக் காயப்படவில்லை..  ஆனால் சாயீபாபாவின் உத்தரவை நினைவிலுருத்திக்  கொண்டார்...மற்றொரு சந்தர்ப்பத்தில் கோல்ஹார் கிராமத்துக்குச் செல்லும்போது, பாபாவின் நெறிமுறையை மதிக்காமல் குதிரை வண்டியில் சென்றபோது அதுவும் இதே கதிக்கு இலக்காகியது...  

மேற்கூறிய  நிகழ்வைப் போன்றே ஐரோப்பிய பெருந்தகை ஒருவர்,சீரடிக்கு ஒருமுறை ஏதோ ஒரு குறிக்கோளுடன், நானா சாஹேப்பின் அறிமுகக் குறிப்புடன் வந்தார்...ஒரு கூடாரத்தில் சௌகரியமாகத் தங்கவைக்கப்பட்டார்.. அவர் பாபாவின் முன் மண்டியிட்டு பாபாவின் கையை முத்தமிட விரும்பினார்...எனவே அவர் மூன்றுமுறை மசூதிக்குள் நுழைய முயன்றார்....ஆனால் அவர் அப்படிச் செய்வதை பாபா தடுத்துவிட்டார்..கீழேயுள்ள திறந்தவெளி முற்றத்தில் அமர்ந்து, பாபாவின் தரிசனத்தைச் செய்யும்படி கேட்கப்பட்டார்...தமக்கு அளிக்கப்பட்ட வரவேற்பைக் கண்டு மகிழாத ஐரோப்பியர், சீரடியைவிட்டு உடனே புறப்பட விரும்பி  பாபாவிடம் விடைப் பெறுவதற்காக வந்தார்.. பாபா அவரை அடுத்தநாள் போகும்படியும், அவசரப்பட வேண்டாம் என்றும் கூறினார்...மற்ற பக்தர்களும்  அவரை பாபாவின் அறிவுரையின் படியே செல்லுமாறு  வேண்டிக் கொண்டனர்..

இவற்றையெல்லாம் செவிமடுக்காது, அவர் ஒரு குதிரை வண்டியில் சீரடியைவிட்டுப் புறப்பட்டார்...முதலில் குதிரைகள் ஒழுங்காக ஓடின...ஆனால்  சாவ்லிவிஹீர் கிராமத்தைத் தாண்டியதும், எதிரில் ஒரு சைக்கிள் வந்தது... இதைக்கண்டு குதிரைகள் மிரண்டு வேகமாக ஓடின...  குதிரைவண்டி தலைகீழாகக் கவிழ்ந்து, அந்தப்  ஐரோப்பியப் பக்தர்   கீழே விழுந்து சிறிது தூரம் தரையில் இழுத்துச் செல்லப்பட்டார்...உடனேயே அவர் காப்பாற்றப்பட்டார்  என்றாலும், தனக்கு ஏற்பட்ட காயங்களைக் குணப்படுத்துவதற்காக கோபர்காவன் மருத்துவமனைக்குச் சென்று படுக்க வேண்டியதாயிற்று.. இத்தகைய அனுபவங்கள் கணக்கில் அடங்கா என்றே கூறலாம்...பாபாவின் ஆணைகளுக்குக் கீழ்ப்படியாதவர்கள், ஏதோ ஒரு விதத்தில் இடர்பாடுகளையும், விபத்தையும் சந்திக்க நேரிட்டது...பகவான் ஆணைகளுக்கு  கீழ்ப்படிந்தவர்களோ பத்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தனர்..இதனை அனைத்து பக்தர்களும் பின்பற்றக் கற்றுக்கொண்டார்கள்...

🔥பகவான் மதுகரீ பிக்ஷை எடுத்ததன் மூல சூட்சம விளக்கம்..மற்றும் பகவானுக்கு பிக்ஷை வழங்கியவர்கள் , எவ்வாறு துன்பத்துயரங்கள் நீங்கப் பெற்று பேறுபெற்றவர்கள் ஆனார்கள் என்பதைப் பற்றிய  விளக்கவுரையை  இங்கே காண்போம்....🔥

சீரடி பகவானுடைய  காலடியில் அனைத்தும் இருந்தாலும், உலகத்தை ஆளுகின்ற பேராற்றலாகவும் , கடவுளின் அவதார புருஷராக  இருப்பினும்,  தமது வாழ்நாள் முழுவதும் பகவான் பிக்ஷையெடுக்கும் வழக்கத்தைப் ஏன் மேற்கொண்டவராய் இருத்தல் வேண்டும்...? என்னும் கேள்வி சிலரது உள்ளத்தில் எழக்கூடும்...  இக்கேள்விக்கான  மூல சூட்சம பதிலைப் பார்ப்போம்..  

முதலாவதாக , பிக்ஷையெடுத்து வாழ்வதற்கு உரிமையுள்ள தகுதியான மனித உயிர்கள்  யார் என்று உற்று நோக்கினால், வம்சாவிருத்தி, செல்வம், புகழ்  என்கின்ற  இம்மூன்று முக்கிய ஆசைகளையும் துறந்து,  பற்றில்லாத் தன்மையுடன் துறவை மேற்க்கொள்பவர்கள்  பிக்ஷையெடுத்து வாழத் தகுதியுடையோர்கள்  என்று நமது சாஸ்த்திரங்கள் அறிவுருத்துகின்றன...இவர்கள் சமைப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்து இல்லத்தில் உண்ண முடியாது. அவர்களுக்கு  உணவை அளிக்க வேண்டிய கடமை இல்லறத்தாரின் தோள்களில் விழுகிறது...

சாய்பகவான்  இல்லறத்தாருமல்ல.. வானப்பிரஸ்தருமல்ல...அவர் பிரம்மச்சர்யம் அனுஷ்டித்த சாட்சியாக, எதிலும் பற்றில்லாத  ஒரு உயரிய மகான் ஆவர்..அதாவது சிறுபருவம் முதற்க்கொண்டே  பகவான்,எதிலும்  பற்றில்லாமல் ஆழ்ந்த தியானத்தில் தனித்திருந்தார்.. இப்பிரபஞ்சமே தமது வீடு என்பதும்,  தாமே பிரபஞ்ச ஆதாரமும், அழிவற்ற பிரம்மமுமாகிய வாசுதேவனாகவும்  பகவான் இருக்கின்றார்..ஆகவே  பகவானுக்கு இறந்து  உண்ணும் அதாவது பிக்ஷை எடுக்கும்  வழக்கத்திற்கு முழு உரிமை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது...

இரண்டாவதாக,  கீழ்க்கண்ட நிலையின்படி ஐந்து பாவங்களை இல்லறத்தார்கள் உணவை சமைக்கும்  போது  தன்னை  அறியாமலே செய்து விடுகின்றனர்.. அதாவது... 

1..கண்டணீ-- பொடியாக்குதல் 

2. பேஷணீ -- அரைத்தல்  

3. உதக்கும்பி--பானைகளைக் கழுவுதல் 

4. மார்ஜனீ -- பெருக்கிச் சுத்தப்படுத்துதல்

5. சுள்ளீ  - அடுப்பு பற்றவைத்தல்...

மேற்கண்ட செயல்முறைகளில் மூலமாக  ஏராளமான சிறிய கிருமிகளையும், ஜந்துக்களையும் கொல்வதற்கு ஏதுவாகிறது.இவ்வாறாக இல்லறத்தார்கள்  ஓரளவு பாவத்தைச் செய்தவர்கள் ஆகின்றார்கள்.  இப்பாவத்துக்குப் பரிகாரமாக நமது சாத்திரங்கள் ஆறுவகையான தியாகங்களைச் செய்ய அறிவுருத்துகின்றனர்..

அது என்னவென்றால்...

1.  பிரம்மயக்ஞம்.. என்பது  பிரம்மதுக்குச் சமர்ப்பித்தல்

2.  வேத அத்யயனம்.. என்பது  வேத பராயணம்.

3.  பித்ரு யக்ஞம்..  என்பது  மூதாதையர்களுக்குச் சமர்ப்பித்தல்.

4.  தேவ யக்ஞம் -என்பது  தேவதைகளுக்குச் சமர்ப்பித்தல்..

5.  பூத யக்ஞம்--என்பது  ஜந்துக்களுக்குச் சமர்ப்பித்தல்.. 

6.  மனுஷ்ய அதிதி யக்ஞம்-- என்பது மனிதர்களுக்கும்,அழைக்கப்படாத விருந்தாளிகளுக்கும் சமர்ப்பித்தல்..

சாஸ்திரப்படி இந்தத் தியாகங்களை முறையாக அனுசரித்தால் மனத்தூய்மை பெற்று, ஞானமும், தன்னையுணர்தலையும் பெற உதவும்... பகவான்  வீட்டுக்கு வீடு சென்று பிக்ஷை எடுத்ததன்  மூலம், இல்லறத்தார்க்கு அவர்களின் புனிதக்கடமையை ஞாபகப்படுத்தினார்....  பாபாவால் தங்கள் வீட்டிலேயே இவ்வாறு  பாடம் கற்பிக்கப்பட்டவர்கள் பேறுபெற்ற மனிதர்கள்  ஆவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது...

மேலும் கிருஷ்ண பரமாத்மா, பகவத்கீதையில் "அன்புடனும், பக்தியுடனும் யாரொருவர் எனக்கு ஓர் இலை, மலர், பழம், அல்லது நீரை சமர்ப்பிக்கிறாரோ, அந்தத் தூய்மையான தன்னடக்கமுடைய அன்புக் காணிக்கையானது ஆர்வத்துடனும், தாமதமின்றியும் என்னால் ஏற்றுக்கொள்ளபடுகிறது" என்று கூறியிருக்கின்றார்...

🔥ஆத்மார்த்தமான உயரிய  பக்தரான  தர்கட்  என்பவர்,அவருடைய  குடும்பத்தில் எவ்வாறு  பகவானை பூஜித்தனர்  என்ற விளக்கமும், மற்றும்   பகவான்  அப்பூஜையை  ஏற்றுக்கொண்டு, அவர்கள் அளிக்காமல் விடுத்த நிவேதனத்தை அறிவுருத்தி பெற்றுக்கொண்டதைப் பற்றிய அனுபவ விளக்கவுரையை இங்கே காண்போம்..🔥

சாய்பாபாவின் விஷயத்தில் ஓர் பக்தர் உண்மையிலேயே எதையாவது  ஒன்றை சமர்ப்பிக்க ஆவலுடன் காத்திருந்து , பின்னால் அதையே சமர்ப்பிக்க பக்தர்  மறந்துவிட்டார் என்றால், பாபா அவருக்கு அல்லது அவரது நண்பருக்கு அந்தக் காணிக்கை மற்றும் நிவேதனத்தினை  ஞாபகப்படுத்தி, பக்தரை  அளிக்கச்செய்து, அதை பகவான்  ஏற்றுக் கொண்டு பக்தரை ஆசீர்வதிக்கிறார்...
இதுபோன்ற சில நிகழ்சிகள் கீழே குறிப்பிடப்பட்டிருக்கின்றது...பிரார்த்தனா சமாஜத்தைச் சேர்ந்த ராமச்சந்திர ஆத்மாராம் என்னும்  தர்கட் என்பவர்  சாய்பாபாவின் ஓர் உறுதியான பற்றுள்ள  பக்தர் ஆவார்.. அவருடைய மனைவியும், மகனும் சாய்பாபாவிடம்  சற்று ஆழமாக  அன்பு செலுத்தினர்...ஒருமுறை திருமதி தர்கட்டும், அவர்களது மகனும்  மே மாத  விடுமுறைக்கு சீரடிக்குப் போவது எனத் தீர்மானிக்கப்பட்டது.  ஆனால் மகன் போக விரும்பவில்லை..காரணம் அவன் பாந்த்ரா வீட்டைவிட்டுப் போவானாகில், வீட்டில் சாய்பாபாவின் பூஜை முறையாகக் கவனிக்கப்படமாட்டாது என்று அவன் கருதியதன் காரணமே....ஏனெனில், அவனது தகப்பனார் பிரார்த்தனா சமாஜத்தைச் சேர்ந்தவராதலால் சாய்பாபாவின் பெரிய படத்திற்குப்  பூஜை செய்வதை அவர் இலட்சியம் செய்யமாட்டார் என்று அவன் கருதினான்...  எனினும் தனது மகன் செய்வதைப் போன்று அதே விதமாக, தான் பூஜா கர்மங்களைச் செய்வதாக அவர் உறுதியாக வாக்களித்தப் பின்பு ஒரு வெள்ளிக்கிழமை இரவு தாயும், மகனும் சீரடிக்குப் புறப்பட்டனர்... 

அடுத்த நாள் (சனிக்கிழமை) தர்கட் அதிகாலையில் எழுந்திருந்து பூஜை செய்வதற்கு முன் நீராடிவிட்டுப் பூஜை அறையில் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து, "பாபா, எனது மகன் செய்த அதே மாதிரியாக நான் பூஜை செய்யப்போகிறேன்.  ஆனால் தயவுசெய்து அதை ஒரு இயந்திரகதியான பயிற்சியாக ஆக்கிவிடாதீர்கள்", என்று கூறிக்கொண்டே பூஜை செய்து, சில கற்கண்டுகளை நிவேதனமாக  சமர்ப்பித்தார்..  அக்கற்கண்டு பகல் உணவின்போது பகிர்ந்தளிக்கப்பட்டது....அந்த நாள் மாலையும், அதன்பின்னர் ஞாயிற்றுக்கிழமையும் எல்லாம் நலமாகவே நடந்தேறின.. தொடர்ந்து வேலை நாளான திங்கட்கிழமையும் நன்றாகவே கழிந்தது.  தனது வாழ்நாளிலேயே இம்மாதிரியாகப் பூஜை செய்தறியாத தர்கட் தன மகனுக்கு வாக்களித்தபடி எல்லாம் மிகவும் திருப்திகரமான முறையிலேயே நடந்தேறிக் கொண்டிருப்பதில் தனக்குள்ளேயே பெருமளவு நம்பிக்கை பெற்றார்...அடுத்த நாளான செவ்வாயன்று வழக்கம்போல் காலையில் பூஜை நிகழ்த்தியபின் தனது வேலைக்குச் சென்றார்... மதியம் வீட்டுக்கு வந்து உணவு பரிமாறப்பட்டபோது, பகிர்ந்துகொள்ள கற்கண்டு பிரசாதம் இல்லாததைக் கண்டார்.  அவர் தமது சமையல்காரனை விசாரித்ததில், காலையில் எவ்வித நிவேதனத்தை பகவானுக்கு  அளிக்க வில்லை என்று அறிந்தார்.. பூஜையின் நிவேதனம் வழங்க  அவர் அடியோடு மறந்துவிட்டிருந்தார்.  இதுகுறித்து தனது இருக்கையைவிட்டு எழுந்திருந்து பூஜையறையில் விழுந்து வணங்கி, தமது தவறுதலுக்காக வருத்தம் தெரிவித்து, அதே நேரத்தில் இத்தகைய ஒரு சாதாரணமான நடைமுறை விஷயத்தில் வழிகாட்டாததற்காக பாபாவை அவர் கடிந்துகொண்டார்..பின்பு தனது மகனுக்கு உண்மைகளைக் கூறி ஒரு கடிதம் எழுதி அதை பாபாவின் பாதத்தடியில் வைத்து புறக்கணிப்பிற்காகத் தம்மைப் பொறுத்தருள  வேண்டுமாறு எழுதியிருந்தார்.  செவ்வாய்க் கிழமை மதியத்தில் பாந்த்ராவில் இது நிகழ்ந்தது.... 

ஏறக்குறைய இதே நேரத்தில் சீரடியில் மத்தியான தீபாராதனை நிகழ்வதற்குச் சிறிது முன்பாக பகவான்,  திருமதி தர்கட்டை நோக்கி, "அம்மா, பாந்த்ராவில் உள்ள உனது வீட்டிற்கு ஏதேனும் உண்ணலாம் என்ற எண்ணத்துடன் சென்றிருந்தேன்.  கதவு பூட்டப்பட்டிருப்பதைக் கண்டேன்.  எப்படியோ உள்ளே நுழைந்து, பாவ் (தர்கட்), நான் உண்பதற்கு ஏதும் விட்டு வைக்கவில்லை என்பதை வருத்தத்துடன் அறிந்தேன்.  எனவே பசி தணிக்கப்படாமலேயே திரும்பிவிட்டேன்", என்று கூறினார்... அப்பெண்மணிக்கு  இது ஒன்றும்  புரியவில்லை..  அருகிலிருந்த மகனோ அதாவது பாந்த்ராவில் பூஜையில்  ஏதோ தவறு நிகழ்ந்திருக்கிறது என்று அனைத்தையும் புரிந்துகொண்டு, வீடு திரும்ப பாபாவின் அனுமதியை வேண்டினான்..பாபா இதை மறுத்தார்...எனினும் அங்கேயே அப்பையனைப் பூஜைசெய்ய அனுமதித்தார்....

அப்போது சீரடியில் நிகழ்ந்த விபரங்களையெல்லாம் பற்றி பையன், தகப்பனாருக்கு ஒரு கடிதம் எழுதி, வீட்டில் பூஜையை அலட்சியம் செய்யவேண்டாமென்று மன்றாடி வேண்டியிருந்தான்...இரண்டு கடிதங்களும் ஒன்றையொன்று தாண்டிப்போய் இருவருக்குமே அடுத்தநாள் கிடைத்தன.  இது ஓர் அற்புதமல்லவா...? தற்போது திருமதி தர்கட் அளித்த நிவேதனத்தை பகவான் எவ்வாறு ஏற்றுக்கொண்டார் என்பதைப் பார்ப்போம்... அவள் மூன்று பொருட்களைச் சமர்ப்பித்தாள்... அதாவது,

 (1) பரீத் என்பது  கத்தரிக்காய் தயிர் பச்சடி....

 (2) காச்சர்யா என்பது  முழு கத்தரிக்காய் பொரியல்...

(3) பேடா என்பது  பால் கேக்....  இவற்றை பாபா எங்கனம் ஏற்றுக்கொண்டார் என்பதைப் பார்ப்போம்.

ஒருமுறை பாபாவின்  பக்தரான, பாந்த்ராவைச் சேர்ந்த ரகுவீர் பாஸ்கர் புரந்தரே என்பவர் சீரடிக்கு தன் குடும்பத்துடன் புறப்பட்டார்.. பாந்த்ராவில் திருமதி புரந்தரேயிடம், திருமதி தர்கட் சென்று, அவளுக்கு இரண்டு கத்தரிக்காய்கள் அளித்து, சீரடியில் ஒரு கத்தரிக்காயில் பரீத்தும், மற்றதில் காச்சர்யாவும் செய்து, பாபாவுக்கு அவற்றைப் பரிமாறும்படி கூறியிருந்தாள்...  சீரடியை அடைந்தபின்னர், திருமதி புரந்தரே தனது பரீத்துடன் மசூதிக்குச் சென்ற அதே தருணத்தில், பாபா தமது சாப்பாட்டிற்காக அமர்ந்து கொண்டிருந்தார்.  பாபா, பரீத் மிகவும் ருசியாக இருப்பதைக் கண்டார்.  எனவே அதை அவர் அனைவருக்கும் பகிர்ந்தளித்துத் தனக்கு இப்போது காச்சர்யா வேண்டுமெனக் கூறினார்....

ராதாகிருஷ்ணமாயீக்கு, பாபா காச்சர்யாக்கள் வேண்டுகிறார் என்ற செய்தி அனுப்பப்பட்டது.  அது கத்தரிக்காய் சீசன் இல்லையாதலால் அவள் குழப்பமடைந்தாள்.  கத்தரிக்காயை எப்படிப் பெறுவது என்பதே தற்போதைய பிரச்சினை.  பரீத்தை யார் கொண்டுவந்தார் என்று விசாரித்ததில் காச்சர்யா பரிமாறும் பணியிலும் திருமதி புரந்தரே ஒப்புவிக்கப்பட்டிருந்தாள் என அறியப்பட்டது.  காச்சர்யாவைப் பற்றிய பாபாவின் வேண்டுதலின் உட்குறிப்பை அனைவரும் புரிந்துகொண்டனர்....  எங்கும் வியாபித்திருக்கும் அவர்தம் ஞானத்தைக் கண்ட அனைவரும் ஆச்சரியத்தில் செயலிழந்தனர்....

1915ஆம் வருடம் மார்கழி மாதத்தில் கோவிந்த் பாலாராம் மாநகர் என்பவன் தனது தந்தையின் திவசங்களையெல்லாம் செய்வதற்காக, சீரடிக்குச் செல்ல விரும்பினான்.  புறப்படுவதற்குமுன் திருமதி தர்கட்டைப் பார்க்க வந்தான்..அப்போது பாபாவுக்கு ஏதேனும் கொடுத்தனுப்ப வேண்டுமென்று திருமதி தர்கட் நினைத்தாள்.  வீடு அனைத்திலும் தேடியும் முன்னமே நிவேதனமாக அளிக்கப்பட்டிருந்த பேடா ஒன்றைத் தவிர வேறெதையும் அவள் காணவில்லை.. பையன் கோவிந்த் மிகவும் துயர் கொண்ட நிலையில் இருந்தான்... எனினும் பாபாவிடம் கொண்டுள்ள பெரும் பக்தியின் காரணமாக அவனிடம் பேடாவைக் கொடுத்து அனுப்பினாள்.. பாபா அதனை ஏற்றுக்கொள்வார் என நம்பினாள்...  

கோவிந்த் சீரடிக்குச் சென்று பாபாவைக் கண்டான்... ஆனால் பேடாவைத் தன்னுடன் எடுத்துச் செல்ல மறந்துவிட்டான்.  பாபா பொறுத்திருந்தார்.  மறுபடியும் மாலையில் சென்றபோதும் பேடாவைக் கொண்டுசெல்லாமல் வெறுங்கையுடன் சென்றான்... பாபா இதற்குமேல் பொறுக்க இயலாதவராய், "எனக்கு நீ என்ன கொண்டு வந்திருக்கிறாய்", என்று கேட்டார்..  "ஒன்றுமில்லை" என்று பதில் வந்தது. மீண்டும் பாபா அவனைக் கேட்டார். அதே பதில்தான் அளிக்கப்பட்டது.  பின்னர் பாபா, "நீ புறப்படும்போது அம்மா உன்னிடம் எனக்காக இனிப்புப் பலகாரம் கொடுக்கவில்லையா..?", என்ற குறிப்பான வினாவொன்று கேட்டார்.  உடனே பையனுக்கு எல்லாம் நினைவு வந்தது.  வெட்கமடைந்து பாபாவிடம் தன்னை மன்னிக்க வேண்டிக்கொண்டு,  தான் இருந்த இடத்திற்கு ஓடிப்போய் பேடாவைக் கொண்டுவந்து பாபாவிடம் கொடுத்தான்....கையில் அதைப் பெற்றவுடனேயே, பாபா வாயிலிட்டுப் பேராவலுடன் விழுங்கிவிட்டார்.  இவ்வாறாகத் திருமதி தர்கட்டின் பக்தி கண்டுணரப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.  "மனிதர் எவ்விதம் என்னை நம்புகிறார்களோ, அவ்விதமே நான் அவர்களை ஏற்றுக்கொள்கிறேன்" (கீதை அத். 4, ஸ்லோகம் 11) என்பது இந்நிகழ்ச்சியால் நிரூபிக்கப்பட்டது... 

ஒருமுறை திருமதி தர்கட் சீரடியில் ஒரு குறிப்பிட்ட வீட்டில் தங்கியிருந்தார்.  மதிய உணவு தயாராகி பதார்த்தங்கள் எல்லாம் பரிமாறப்படும்போது பசியுள்ள ஒரு நாய் அங்குவந்து குரைக்கத் தொடங்கியது.  திருமதி தர்கட் உடனே எழுந்திருந்து ஒரு ரொட்டித்துண்டை விட்டெறியவும், அது மிகுந்த சுவையுணர்வோடு அதைக்கவ்வி விரைவாக விழுங்கிவிட்டது...பிற்பகல் அவள் மசூதிக்குச் சென்று சிறிது தூரத்தில் அமர்ந்தபோது சாய்பாபா அவளிடம், "அம்மா நான் பெருமளவு திருப்தியுறும் வகையில் எனது பிராணன்கள் யாவும் நிறைவுபெற்றன.  இவ்விதமாக எப்போதுமே நடப்பாயாக...இது உன்னை நன்னிலையில் வைக்கும்.  இம்மசூதியில் அமர்ந்துகொண்டு பொய் பேசவே மாட்டேன்.  என்னிடம் இவ்விதமாக இரக்கங்கொள்வாயாக....

முதலில் பசியாய் இருப்போர்க்கு உணவு கொடுத்தப்பின் நீ உண்பாயாக...  இதை நன்றாகக் கவனித்துக்கொள்", என்று கூறினார்...முதலில் அவளால் அதன் பொருளை உணர இயலவில்லை...எனவே அவள், "எங்ஙனம் நான் தங்களுக்கு உணவு அளித்திருக்க முடியும்...?  நானே உணவுக்கு மற்றவர்களைச் சார்ந்து பணம் கொடுத்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்", எனக் கூறினாள்...இதற்கு பாபா, "அந்த கவர்ச்சிமிகு ரொட்டியை உண்டு நான் மனப்பூர்வமாகத் திருப்தியடைந்தேன்...நான் இன்னும் ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கிறேன்... உணவு வேலைக்கு முன்னர் நீ பார்த்து ரொட்டி அளித்த நாயானது என்னுடன் ஒன்றியதாகும்.  இவ்வாறாகவே மற்ற உயிரினங்களும் (பூனைகள், பன்றிகள், ஈக்கள், பசுக்கள் முதலியன) என்னுடன் ஒன்றானவைகளாகும்.  நான் அவைகளின் உருவத்தில் உலாவிக் கொண்டிருக்கிறேன்...என்னை இவ்வனைத்துப் படைப்புயிர்களிலும் பார்க்கிறவன் எனக்கு உகந்தவன்.. எனவே த்வைதத்தையும், பேதத்தையும் ஒழித்து இன்று செய்ததைப்போல் எனக்குச் சேவை செய்", என்று கூறினார்.  இவ்வமிர்தத்தினை போன்ற  நிகர் மொழிகளைக் கேட்டு அவள் உருகி, அவளது கண்கள் பனித்து, தொண்டை அடைத்து அவளது மகிழ்ச்சி எல்லையற்றதாக ஆகியது...

கடவுளை எல்லாப் படைப்புயிர்களிலும் காண்பாயாக' என்பதே இவ்வத்தியாயத்தின் நீதியாகும்... உபநிஷதங்கள், பகவத்கீதை, பாகவதம் இவைகளெல்லாம் ஜீவராசிகள் அனைத்திலும் கடவுள் அல்லது தெய்வீகத்தைக் காணும்படியாகவே வற்புறுத்தி அறிவுறுத்துகின்றன... இவ்வத்தியாயத்தின் முடிவில் சொல்லப்பட்ட நிகழ்சியாலும் இன்னும் பல சந்தர்ப்பங்களிலும், உபநிஷத போதனைகளை எவ்வாறு நடைமுறைக்குக் கொண்டு வருவது என்று சாய்பாபா விளக்கிக் காட்டியிருக்கிறார்... இவ்வாறாக சாய்பாபா உபநிஷத்தின் விரிவுரையாளராக அல்லது சத்குருவாக இருந்தருளினார் என்பது குறிப்பிடத்தக்கது.....

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🏼🙏🏼🙏🏼  

ஸ்ரீ சாயீயைப் பணிக...அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்..🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🏼🙏🏼🙏🏼

ஸ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியானபீடம் ..🙏🙏


வியாழன், மே 20, 2021

ஶ்ரீ சீரடிபாபாவின் சாய்சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாயத்தின் வெளியீடு..அத்தியாயம் எட்டு..

 ஓம்  ஶ்ரீ  சாய்நாதாய நமஹ...🙏🏼

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள  இன்றைய  அத்தியாய  வெளியீடு....🙏🏼🙏🏼

🔥அத்தியாயம்::எட்டு(8) 🔥

 🔥முதலில் புனித வேத நூலான சாய்  சத்சரித்திரம்  பாராயணம் செய்வதன்  முக்கியத்துவமும், பெறப்போகும்  நன்மைகள்  என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥

சீரடி சாயீன்  புனித  வேத நூல் என்பது  ஶ்ரீசாய்  சத்சரித்திரம் என்பதாகும்...இதில் சாய்பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத  எழுத்திலும் வியாப்பித்து  படர்ந்து இருக்கின்றது...

சத்சரிதத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல் ,மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது....ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து  சத் சரித்திரத்தில்  இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்.. 

இவ்வாறாக நாம் அனைவரும் சாய் சத்சரித்திர வேதப் பாராயணத்தை மேற்க்கொண்டால், சீரடி பகவானின் ஆசியையும், அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்..ஆகவே  ஶ்ரீசாய்  சத்சரித்திர வேதப் பாராயணம் செய்வோம்..நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக.🔥

🔥குறிப்பு...சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥

தனி மனித உயிரின்  சித்தம் தெளிவடையும்... அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரிய தன்மையை அடையலாம்... வேதப்பாராயணத்தின் மூலமாக  ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரிய நிலையை அடையும் நிலையைப் பெறலாம்...மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம், நேர்மறை, மனிதநேயம் போன்ற இறைப்பண்புகளைப் பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுபெறவும்  இந்த சத்சரித  வேதப்பாராயணம் துணைப்புரிகின்றது.... 

மேலும் இப்பாராயணத்தின் மூலம்  மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில்  வெற்றி வாகை சூடலாம்....அவரவர்கள்  வேண்டியது கிடைக்கப்பெறும்..சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்... மேலும் அனைத்து விதமான  கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி  பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும்  ஒருசேரப்பெறலாம்.... 🔥🔥

🔥அத்தியாயம்..எட்டு(8)🔥

🙏முன்னுரை...🙏

மானிடப் பிறவியின் சிறப்பியல்புகளைப் பற்றியும்,  எடுத்த இந்த.மானிடப் பிறவியின் மூலமாக எவ்வாறு உயரிய நிலையை அடைவது என்பதன் மூல சூட்சம விளக்கவுரை....

சீரடிபகவான் எவ்வாறு  உணவை மதுகரீ பிக்ஷை எடுத்ததன் சூட்சமம் என்ன என்பதன் விளக்கம்...

பாயஜாபாய் என்ற அம்மையார் மிகுந்த தாய்மையுணர்வோடு பகவானுக்கு நிவேதனம் அளித்த  உன்னத சேவையைப் பற்றிய விளக்கவுரையை இங்கே காண்போம்....

சீரடி பகவானோடு தாத்யா கோதே பாடீல் மற்றும்  மகல்சாபதி ஆகிய உயரியப் பக்தர்கள்  எவ்வாறு ஆத்ம பிணைப்பினால் பேரானந்தம் அடைந்தனர்  என்பதைப் பற்றி விளக்கவுரை....

ராஹதாவைச் சேர்ந்த குஷால்சந்த் என்பவருக்கும், சீரடி பகவானுக்கும் இடையேயான ஆத்மத் தொடர்பினால், பாபா எவ்வாறு குஷால்சந்தை ஆசிர்வதித்தார் என்பதைப் பற்றிய  விளக்கவுரை..

மேற்க்கண்ட தலைப்புக்களின் விளக்கவுரைகளைப் பற்றி  ஒவ்வொன்றாக கீழே காண்போம்...

🔥மானிடப் பிறவியின் சிறப்பியல்புகளைப் பற்றியும்,  எடுத்த இந்த.மானிடப் பிறவியின் மூலமாக எவ்வாறு உயரிய நிலையை அடைவது என்பதன் மூல சூட்சம விளக்கவுரையை இங்கே காண்போம்...🔥

இவ்வியத்தகு பிரபஞ்சத்தில் கடவுள் பல கோடிக்கணக்கான (இந்து சாஸ்திர கணக்குப்படி எண்பத்து நான்கு  இலட்சம் விதமான) மோட்சம், நரகம், நிலம், கடல், வானம், இடைப்பகுதிகள் ஆகியவைகளை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் ஜீவராசிகளை  அதாவது மனிதர்கள், மிருகங்கள், பூச்சிகள், தேவர்கள், உபதேவதைகள் உட்பட சிருஷ்டி செய்திருக்கிறார்... எவருடைய புண்ணியங்கள் மேம்படுகிறதோ அவர்கள், தங்களின் செய்கைகளின் பலன்களை மகிழ்ந்து அனுபவிக்கும்தோறும் மோட்சத்திற்கு சென்று வாழ்கிறார்கள்...அது முடிந்தபிறகு அவர்கள் கீழேயிறங்கி வருகிறார்கள்....தீமைகள்,  பாவங்கள் அதிகமுள்ள ஆத்மாக்களோ நரகத்திற்குச் சென்று, தாங்கள் துகுதியுள்ளதோறும், தங்கள் தீவினைகளின் பலன்களை அனுபவித்து அவதியுறுகிறார்கள்.... நல்வினை, தீவினை இரண்டும் சம அளவாய் இருப்பின், அவர்கள் மீண்டும் இவ்வுலகில் பிறக்கின்றனர்...தங்களது சுயமான முக்திக்கும், உழைக்கும் முயற்சிக்கு மீண்டும் ஒரு வாய்ப்புத் தரப்படுகிறார்கள்... முடிவாகத் தமது நல்வினை, தீவினை இரண்டுமே முழுமையாக அகற்றப்படும்போது, அவர்கள் சுதந்திரமடைந்து விடுவிக்கப்பட்டவர்களாகின்றார்கள்..இரத்தினச் சுருக்கமாக உரைத்தால், அவரவர்களின் செய்கைககளுக்கும், நுண்ணறிவு, மனப் பண்பாட்டிற்கேற்பப் பிறவிகளைப் பெறுகிறார்கள்.....  

நாம்.அனைவரும் அறிந்தபடியாக சர்வ ஜீவராசிகளுக்கும்,  நான்கு விஷயங்கள் பொதுவானதாகும்...அதாவது உணவு, உடை, பயம், புணர்ச்சி முதலியவை ஆகும்...  மனிதனுடைய  விஷயத்தில் அவன் ஒரு சிறப்பான சாமர்த்தியத்துடன் இயற்கையாகவே ஆக்கப்பட்டிருக்கிறான்..அதாவது மற்ற எல்லாப்  பிறப்பாலும் அடையப்பட இயலாத ஞானத்தின் மூலம் அவன் கடவுளின் காட்சியைப் பெறலாம்.. .இக்காரணத்திற்காகவே தேவர்கள், மனிதனது உரிமையை (நிலைமையை) குறித்துப் பொறாமைப்படுகிறார்கள்... தாங்கள் முடிவான விடுதலையைப் பெறுவதற்காக, மானுடர்களாய்ப்  பிறப்பதற்கு ஆவல் கொள்கிறார்கள்...கேவலமான அழுக்கு, சளி, கோழை, அசுத்தம், இவைகளால் நிரம்பியதும், தீராத  நோய் மற்றும்  மரணம் ஆகியவற்றிற்குக் காரணமாய் உள்ளதுமான இம்மனித உடம்பைவிடக் கேவலமானது எதுவும் இல்லை என்று சிலர் கூறுகின்றனர்..இது ஓரளவிற்கு உண்மை என்பதில் ஐயமில்லை.  இவ்வாறான குற்றம், குறைகள் இருப்பினும், இம்மனித உடம்பின் சிறப்பான மதிப்பு யாதெனில், ஞானத்தை அடைய மனிதனுக்கு ஆற்றல் இருக்கிறது என்பதே சத்தியமான உண்மை...

மனித உடம்பினால் மட்டுமே அல்லது அதன் பொருட்டே அழியக்கூடிய நிலையில்லாத உடம்பின் தன்மையைப்பற்றியும், இவ்வுலகத்தைப் பற்றியும், புலன் இன்பங்களின்மீது வெறுப்பையும், நித்ய-அநித்ய வஸ்துக்களைப் பகுத்தறியும் விவேகத்தையும், இங்ஙனமாக அதன் மூலம் கடவுள் காட்சியையும் ஒருவன் எய்த இயலுகிறது...அதன் அசுத்தத் தன்மைக்காக நாம் உடம்பைப் புறக்கணித்தோமானால், கடவுள் காட்சியைப் பெறும் வாய்ப்பை இழக்கிறோம்.  அதையே சீராட்டி புலன் இன்பங்களின் பின்னால் ஓடுவோமானால் அது விலை மதிப்பற்றதுமான  நரகத் தன்மையில்  வீழ்வோம்....எனவே, நாம் பின்பற்றவேண்டிய ஒழுங்கான நெறிமுறையானது பின்வருமாறு..

உடம்பைப் புறக்கணிக்கவோ, விரும்பிச் செல்லமாக பராமரிக்கவோ கூடாது..ஆனால் முறையாகப் பராமரிக்க வேண்டும்..குதிரையில் சவாரி செய்யும் ஓர் வழிப்பயணி, தான் போகுமிடத்தை அடைந்து வீடு திரும்பும் வரைக்கும் தனது குதிரையை எவ்வாறு பராமரிக்கின்றானோ, அதையொப்ப இவ்வுடம்பைப் பராமரிக்க வேண்டும்.... இவ்விதமாக எப்போதும் வாழ்க்கையின் உச்ச உயர் நோக்கமான கடவுள்-காட்சி அல்லது ஆத்மானுபூதியை அடையவே உபயோகப்படுத்தப்பட  வேண்டும்".....

பல்வேறு ஜீவராசிகளையும் கடவுள் படைத்தார்.  எனினும், அவைகளில் எதுவும் அவர்தம் வேலையை அறிந்து பாராட்ட இயலாததனால் ஆதி ஆற்றல்  திருப்தி அடையவில்லை...எனவே அவர் ஒரு சிறப்பான சாமர்த்தியமுள்ள மனிதனைப் படைக்க வேண்டியதாயிற்று... ஞானம்' என்னும் சிறந்த வரத்தையும் அளித்தார். கடவுளின்  லீலையையும், அற்புதமான வேலையையும், சாதுர்யத்தையும் மனிதன் பாராட்ட இயன்றபோது அவர் பெரிதும் மகிழ்ந்து திருப்தியடைந்தார்.  (ஸ்ரீமத் பாகவதம் 11:9:28)  இம்மானிட தேகம் எடுத்தது உண்மையிலேயே நல்ல அதிஷ்டமாகும்...அந்தணர் குலத்தில் தோன்றுவது  அதைக் காட்டிலும் நற்பேறுடையது....அதைக் காட்டிலும் மிகச்சிறப்பான அதிஷ்டமானது, சாயீபாபாவின் பாதங்களில் தஞ்சமடைந்து சரணாகதி அடையும் வாய்ப்பைப் பெற்றதேயாகும்....

மனித வாழ்க்கை எவ்வளவு உயர்ந்து  என்று உணர்ந்து, மரணம் உறுதி என்றறிந்து, அது எத்தருணத்திலும் நம்மைப் பற்றும் என்று உணர்ந்து , நமது வாழ்க்கையின் குறிக்கோளை அடைய கூடியவரை விரைவாகச் செயல்படவேண்டும்...அதாவது மனைவியை இழந்தவன் மறுமணம் புரிந்துகொள்ளக் கொண்டுள்ள மிகுதியான அக்கறை போன்றும், காணாமற்போன தன் மகனை, அரசன் சல்லடை போட்டுத் தேடுவது போன்றும் இருக்கவேண்டும். எனவே நமது இலக்கை எய்த நம்மிடத்திலுள்ள முழு ஊக்கத்துடனும், வேகத்துடனும் நாம் பாடுபட வேண்டும்..அதாவது 'தன்னை உணர்தல்' என்பதைக் கடைப்பிடிக்க வேண்டும்.. நமது சோம்பேறித்தனத்தை அகற்றிவிட்டு தூக்கத்தைக் களைந்து அல்லும், பகலும் ஆத்மஞானம் செய்தல் வேண்டும்..இதைச் செய்ய நாம் தவறுவோமேயானால், நம்மை நாமே மிருக நிலைக்குத் தாழ்த்திக் கொண்டவர்களாவோம்....

கடவுள்-காட்சியைத் தாமே எய்திய தகைமையுள்ள  ஞானிகள் , முனிவர்கள் அல்லது சத்குரு ஆகிய இவர்களை அணுகுவதே,  நமது குறிக்கோளை அடைய மிகச்சிறந்த பயன் அளிக்கக்கூடியதும், துரிதமுமான வழியாகும்...மதப் பிரசங்கங்களைக் கேட்டும், மத நூல்களைக் கற்றும் அடைய முடியாதவைகளை அம்மதிப்புமிக்க ஆன்மாக்களின் கூட்டுறவால் பெறலாம்...சூரியன் மட்டுமே கொடுக்கும் ஒளியை, மற்றெல்லா நட்சந்திரங்கள் சேர்ந்தாலும் கொடுக்க இயலாததைப் போன்றே, புனித நூல்கள் மற்றும்  மதப்பிரசங்கங்கள் அனைத்தும் சேர்ந்து கொடுக்க இயலாத ஆத்மா விவேகத்தை சத்குரு நமக்கு அளிக்கிறார்...

பகவானின்  அசைவுகளும் சாதாரணப் பேச்சும்  நமக்கு உயரிய சத்தியப் பாதையையும்,  மௌன உபதேசத்தையும்  நல்குகின்றது...மன்னித்தல், அடக்கம், உடைமை,, அவாவின்மை, தர்மம், உதாரணகுணம், மனம் - மெய் இவற்றின் கட்டுப்பாடு, அகங்காரமற்ற தன்மை முதலிய நற்பண்புகளெல்லாம் அத்தகைய தூய சாய்பகவானின் புனிதமான கூட்டுறவால் பயிற்சிக்கப்பட்டு அடியவர்களால் அனுசரிக்கப்படுகின்றன.  இந்த புனித கூட்டுறவானது  மனதை ஒளிப்படுத்தி, ஞானத்தை நல்கி, தன்னை உணரச்செய்கிறது...

சாயீபாபா அத்தகைய முன்னேற்றத்தை அருளும் 'ஞானி' அல்லது 'சத்குரு' ஆவார்... பக்கிரியைப் (இரவலர்) போன்று பகவான் தன்னைப் பாவித்துக் கொண்டாலும் , எப்போதும் ஆத்மாவிலேயே முற்றிலும் தன்வயப்பட்டிருந்தார்...கடவுள் அல்லது தெய்வீகத்தன்மையை சர்வஜீவராசிகளிலும்  கண்டு, அனைத்துயிர்களிலும்  பகவான்  எப்போதும் அன்பு செய்தார்...இன்பங்களால் அவர் உயரவுமில்லை.. துரதிஷ்டங்களால் தாழ்ச்சியுறவுமில்லை...அரசனும், ஆண்டியும் அவருக்கு ஒன்றே...

🔥சீரடி பகவான் மதுகரீ பிக்ஷை எடுத்ததில்  இருக்கின்ற,  மறைஞான சூட்சம விளக்கம் என்ன என்பதை இங்கே பார்ப்போம்..🔥

எவருடைய கடைக்கண் பார்வை, பிச்சைக்காரனையும் அரசனாக்க வல்லதோ, அவர் சீரடியில் வீட்டுக்கு வீடு சென்று உணவை யாசிப்பது வழக்கம்... அதை அவர் எப்படிச் செய்தார் என்று இப்போது கவனிப்போம்.... சீரடி மக்களின் வீடுகள் முன்னர் ஒரு பிச்சைக்காரனைப் போல் நின்று, "ஓ! லாசி(அம்மா), ஒரு ரொட்டித்துண்டு கொடு" என்று கூவி அப்பிச்சையை ஏற்கத் தம் திருக்கரங்களை நீட்டி அருளினாரோ அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்...அவர் ஒரு கையில் தகரக் குவளையும், மற்றொன்றில் ஸோலி என்ற சதுரத் துண்டும் வைத்திருந்தார்...தினந்தோறும் சில குறிப்பிட்ட வீடுகளுக்கும், ஒரு வீட்டிலிருந்து மற்றொரு வீட்டிற்கும் பிச்சையெடுக்கச் சென்றார்... திரவ ஆகாரமான சூப், காய்கறிகள், பால், மோர் முதலியவற்றை தகரக் குவளையிலும், சோறு, ரொட்டி முதலிய திடப் பொருட்களை துண்டிலும் வாங்கிக்கொண்டார்... பாபாவுக்கு  தம்  நாவுமேல் கட்டுப்பாடு உண்டாதலால் அதன் சுவையறிவதில்லை. எனவே பல்வேறு பொருட்களை ஒன்றுகூட்டிய  ருசியை எவ்வாறு அவர் பொருட்படுத்த முடியும்....துண்டிலும், தகரக் குவளையிலும் கொண்டுவரப்பட்ட எல்லா உணவுப் பொருட்களும் ஒன்று கலக்கப்பட்டு பாபாவால் அவர் மனம் நிறைவெய்தும் வண்ணம் பகிர்ந்து உட்கொள்ளப்பட்டது...

சில குறிப்பிட்ட பதார்த்தங்கள் சுவையானவையாகவோ, மாறாகவோ இருப்பினும், பகவான்  தமது நாக்கு முழுதும் சுவை உணர்வையே இழந்துவிட்டதைப் போலக் கவனிப்பதே இல்லை...பகவான்  மதியம்வரை பிச்சையெடுத்தார்...ஆனால் பிச்சையெடுப்பது மிகவும் நியதி இல்லாதிருந்தது...சில நாட்களில் சில சுற்றுக்களே சென்றார்...சில நாட்களில் பகல் பன்னிரண்டு மணிவரையும் எடுத்தார்... இவ்வாறு சேர்க்கப்பட்ட உணவு, ஒரு சட்டியில் கொட்டப்பட்டது... நாய்களும், காக்கைகளும், பூனைகளும் அதிலிருந்து தாராளமாக சாப்பிட்டன....பாபா அவைகளை விரட்டியதே இல்லை....மசூதியைப் பெருக்கிய பெண்மணி பத்து அல்லது பன்னிரண்டு ரொட்டித் துண்டுகளைத் தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றாள்...அவள் அங்ஙனம் செய்வதை யாரும் தடை செய்யவில்லை... கனவில் கூடப் பூனைகளையும், நாய்களையும் கடுஞ்சொற்களாலோ, ஜாடைகளாலோ விரட்டியறியாத அவர், எவ்வாறு  ஏழ்மையான திக்கற்ற மக்களுக்கு உணவை மறுக்க இயலும்...?  அத்தகைய உயர் குணமுடையவரின் வாழ்க்கை உண்மையிலேயே ஆசிகள் நிரம்பப்பெற்றதாகும்.....

சீரடி மக்கள் பகவானை  ஆரம்ப காலத்தில் மனநிலை பாதித்துள்ள  பக்கிரியாகக் கருதினர்.  இப்பெயராலேயே அவர் அறியப்பட்டார்...  இரந்த பிக்ஷை எடுத்த  சில ரொட்டித்துண்டுகளை உண்டு வாழ்ந்த அவர் எவ்வாறு  மதிக்கப்பட்டு, மரியாதை செய்யப்பட முடியும்.... ஆனால் இந்தப் பக்கிரியோ உள்ளத்திலும், கையிலும் மிகவும் தாராளமானவராகவும், அவாவற்றவராகவும், தர்ம சிந்தையுடையவராகவும் இருந்தார்.... மேலும்  ஸ்திரமில்லாதவராயும், இருப்புக் கொள்ளாதவராயும் புறத்தில் தோன்றினாலும் அகத்தில் உறுதியுள்ளவராயும், நிதானம் உள்ளவராயும் இருந்தார்...அவருடைய வழியோ அறிவுக்கெட்டாதது... எனினும் அச்சிறு கிராமத்தில்கூட அன்பும், ஆசீர்வாதமும் உள்ள சிலர் பாபாவை பரமாத்மா என்றே உணர்ந்து மதித்தனர்....அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி கீழே தரப்பட்டுள்ளது.....

🔥பாயஜாபாய் என்ற அம்மையார் மிகுந்த தாய்மையுணர்வோடு பகவானுக்கு நிவேதனம் அளித்த  உன்னத சேவையைப் பற்றிய விளக்கவுரையை இங்கே காண்போம்....🔥

தாத்யா கோதே பாடீலின் தாயார் பாயஜாபாய் ஆவார்...  அவர் தினந்தோறும் மதியம் ரொட்டியும், காய்கறிகளும் அடங்கிய கூடையை தன் தலையில் வைத்துக்கொண்டு காடுகளுக்குப் போவது வழக்கம்.  புதர், பூண்டுகளில் பல மைல் கணக்கில் அவ்வம்மையார் அலைந்து பகவானைக்  கண்டுபிடித்து, பகவான்  பாதத்தில் வீழ்ந்து, அடக்கமாகவும், அசைவில்லாமலும், தியானத்தில் அமர்ந்திருக்கும் பகவானின்   முன்னர் இலையை விரித்து ரொட்டி, காய்கறிகள் மற்ற உணவுப் பொருட்கள் முதலியவற்றை அதன்மேல் வைத்து அவரை பலவந்தமாக உண்ண வைத்தார்....பாயஜாபாயின் நம்பிக்கையும், சேவையும் வியக்கத்தக்கதாகும்...  ஒவ்வொரு நாளும் அவர் காட்டில் மதிய வேளைகளில் அலைந்து திரிந்து, உணவை உண்ணும்படி பாபாவை வற்புறுத்தினார்.....

அவருடைய சேவை, உபாசனை, தவம் என்று எவ்விதப் பெயரிட்டு அதை நாம் அழைத்தாலும், இறுதி மூச்சு வரையிலும் பகவான்  அதனை மறக்கவில்லை.  அவர் செய்த சேவையை முழுமையும் ஞாபகத்தில்கொண்ட பகவான்,, அவரது மகனுக்கு அபாரமான அளவிற்கு  உதவிசெய்தார்.  தாய்க்கும், மகனுக்கும் அவர்களது கடவுளான பகவானின்  மீது பெருமளவிற்கு நம்பிக்கை இருந்தது....  பாபா அவர்களிடம் அடிக்கடி, "ஆண்டித்தனமே உண்மையான  பிரபுத் தன்மையாகும்..  ஏனெனில், அது எப்போதும் நிலைத்திருக்கிறது....  புகழ்பெற்ற பிரபுத்தனமெல்லாம் (செல்வமெல்லாம்) நிலையற்றவை" என்று கூறுவார்....சில ஆண்டுகளுக்குப் பின்னால் பகவான்  காட்டுக்குப் போவதை விட்டுவிட்டு கிராமத்தில் வசிக்கத் தொடங்கினார்.  தமது உணவை மசூதியிலேயே உட்கொள்ளத் தொடங்கினார்....  அதிலிருந்து பாயஜாபாயி காடுகளில் சுற்றி அலையும் தொந்தரவுகள் முற்றுப்பெற்றன......

🔥சீரடி பகவானோடு தாத்யா கோதே பாடீல் மற்றும்  மகல்சாபதி ஆகிய  உயரியப் பக்தர்கள்  எவ்வாறு ஆத்ம பிணைப்பினால் பேரானந்தம் அடைந்தனர் என்பதைப் பற்றிப் பார்ப்போம்...🔥

எவர்களின் உள்ளத்தில் வாசுதேவர் உறைகிறாரோ, அந்த ஞானிகள் எப்போதும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.  அத்தகைய ஞானிகளின் கூட்டுறவைப் பெறும் அதிஷ்டமுடைய பக்தர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.  தாத்யா கோதே பாடீல், பகத் மகல்சாபதி என்ற அத்தகையான இரு அதிஷ்டசாலிகள் சாயீபாபாவின் கூட்டுறவைச் சமமாகப் பங்கிட்டுக் கொண்டனர்.  பாபாவும் அவர்கள் இருவரையும் சமமாக நேசித்தார்....இம்மூவரும் தங்கள் தலைகள் எல்லாம் கிழக்கு, மேற்கு, வடக்கு நோக்கி இருக்கும்படியும், தங்கள் கால்கள் எல்லாம் சந்திக்கும்படியும் மசூதியில் தூங்கினார்கள்..  தங்களது படுக்கையை விரித்து அதன்மீது படுத்துக்கொண்டு பல விஷயங்களைப்பற்றி அரட்டையடித்துக் கொண்டும், வம்பு பேசிக்கொண்டும் நள்ளிரவு நெடுநேரம்வரை படுத்திருப்பார்கள்...  

அவர்களுள் யாருக்காவது தூக்க அடையாளம் தென்பட்டால் மற்றவர்கள் அவரை எழுப்பிவிடவேண்டும்.  உதாரணமாகத் தாத்யா குறட்டைவிடத் தொடங்கினால் பாபா உடனே எழுந்திருந்து பக்கவாட்டில் அவரை அசைத்து, தலையை அழுத்தியும், மகல்சாபதி அவ்வாறு தூங்கினால் அவரை நெருங்கிக் கட்டியணைத்தும், அவரது முதுகைப் பிடித்துவிட்டும், கால்களை உதைத்தும் எழுப்பிவிடுவார்...  இவ்விதமாகப் பதினான்கு முழு ஆண்டுகளும், பாபாவின் மீதுள்ள அன்பால் தனது வீட்டிலுள்ள பெற்றோரை விட்டுவிட்டுத் தாத்யா மசூதியில் தூங்கினார்.  எத்துணை மகிழ்ச்சியும், மறக்க இயலாததுமான அத்தகைய நாட்கள்..!  அவ்வன்பை எவ்வாறு அளவீடு செய்வது.....? பாபாவின் ஆசியை எங்ஙனம் மதிப்பிடுவது...? தனது தந்தை காலமானதும் தாத்யா குடும்பப் பொறுப்பை ஏற்றார்.  பின்பு தமது வீட்டிலேயே தூங்க ஆரம்பித்தார்...  

🔥ராஹதாவைச் சேர்ந்த குஷால்சந்த் என்பவருக்கும், பகவானுக்கும் இடையேயான ஆத்மத் தொடர்பினால், பாபா எவ்வாறு குஷால்சந்தை ஆசிர்வதித்தார் என்பது பற்றிய விளக்கவுரை...🔥

சீரடியைச் சேர்ந்த கண்பத் கோதே பாடீலை பாபா விரும்பினார்..அதற்குச் சமமாக ராஹதாவைச் சேர்ந்த சந்த்ரபன்சேட் மார்வாடியையும் விரும்பினார்...  இந்த சேட் காலமான பின்பு அவர் சகோதரர் புத்திரரான குஷால்சந்த்தை அதற்குச் சமமாக அல்லது அதற்கு அதிகமாகவே கூட அன்பு செலுத்தி, அல்லும்-பகலும் அவர் நலத்தில் கண்ணாய் இருந்தார்....சில சமயங்களில் மாட்டு வண்டியிலோ அல்லது குதிரை வண்டியிலோ நண்பர்களுடன் பாபா ராஹாதாவிற்குச் செல்வார்...அக்கிராமத்து மக்கள் பேண்ட் வாத்திய இசையுடன் வந்து, கிராமத்தின் நுழைவாயிலில் பாபாவை வரவேற்று, அவர் முன்னால் வீழ்ந்து வணங்குவார்கள்.. பெரும் அலங்காரத்துடனும், விழாக்கோலத்துடனும் அவர் கிராமத்துக்குள் அழைத்துச் செல்லப்படுவார்...குஷால்சந்த் அவரைத் தன் வீட்டுக்கு அழைத்துச்சென்று வசதியாக ஆசனத்தில் அமர்த்தி நல்ல உணவை நிவேதனமாக அளிப்பார்...பின்னர் அவர்கள் சரளமாகவும், மகிழ்ச்சியுடனும் சிறிது நேரம் உரையாடியபின் அனைவர்க்கும் மகிழ்ச்சியையும், ஆசியையும் நல்கிவிட்டு பாபா சீரடிக்குத் திரும்புவார்.....

தெற்கே ராஹாதாவுக்கும், வடக்கே நீம்காவனுக்கும் இடையே சரியான மையப்பகுதியில் சீரடி அமைந்துள்ளது.  இந்த இடங்களுக்கு அப்பால், பாபா தமது வாழ்நாளில் சென்றதில்லை.  அவர் எவ்வித ரயில் வண்டியையும் பார்த்ததோ, பிரயாணம் செய்ததோ கிடையாது.... எனினும் எல்லா வண்டிகள் வரும், புறப்படும் நேரங்கள் எல்லாம் மிகச் சரியாகவே பாபாவுக்குத் தெரியும்.  தாங்கள் பாபாவிடம் விடைபெற்றுக் கொண்டபோது,  அவரின் அறிவுரைகளின்படி நடந்தவர்கள் நன்மையடைந்தனர்.  அதை மதிக்காதவர்கள் பலவித துர்ச்சம்பவங்களுக்கும், விபத்திற்கும் உள்ளானார்கள்.... இதைப்பற்றியும் இன்னும் பல நிகழ்ச்சிகள் குறித்தும் அடுத்த அத்தியாயத்தில் காண்போம்.

குறிப்பு : இவ்வத்தியாயத்தின் முடிவில் கொடுக்கப்பட்ட நிகழ்ச்சி குஷால்சந்த்  மீது பாபா செலுத்திய அன்பையும், அவர் ஒருநாள் மாலை காகா சாஹேப் தீஷித்தை ரஹாதாவுக்குச் சென்று குஷால்சந்தை அழைத்து வரும்படி கூறியதும், அத்தருணத்திலேயே குஷால்சந்தின் மதியத் தூக்கத்தில் கனவில் தோன்றி சீரடிக்கு வரும்படி கூறியதும், இங்கு விவரிக்கப்படவில்லை.  காரணம் பின்வரும் 30ஆம் அத்தியாயத்தில் அது விவரிக்கப்பட்டிருக்கிறது. 

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசாயீயைப் பணிக...அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்..🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏼🙏🏼🙏🏼

புதன், மே 19, 2021

ஶ்ரீ சீரடிபாபாவின் சாய்சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாயத்தின் வெளியீடு.அத்தியாயம் ஏழு..

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள  இன்றைய  அத்தியாய  வெளியீடு....🙏🏼🙏🏼🙏🏼

🙏🏼ஶ்ரீசாய் சத்சரித்திரம்..🙏🏼

🙏🏼அத்தியாயம்::ஏழு(7)

🔥முதலில் புனித வேத நூலான ஶ்ரீசாய்  சத்சரித்திரம்  பாராயணம் செய்வதன்  முக்கியத்துவமும், பெறப்போகும்  நன்மைகள்  என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதநூல் என்பது ஶ்ரீசாய் சத்சரித்திரம் என்பதாகும்...இதில் ஶ்ரீசீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத  எழுத்திலும் வியாப்பித்து  படர்ந்து இருக்கின்றது...

ஶ்ரீசாய் சத்சரித்திரத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல் ,மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது..ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து  சத் சரித்திரத்தில்  இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்....

இவ்வாறாக நாம் அனைவரும் சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும்  அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்..ஆகவே  சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்..நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக.🔥

🔥குறிப்பு...சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥

தனி மனித உயிரின்   சித்தம் தெளிவடையும். அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரிய தன்மையை அடையலாம்...வேத பாராயணத்தின் மூலமாக  ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரிய  நிலையை அடையும்  நிலையைப் பெறலாம்...மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம், நேர்மறை, மனிதநேயம் போன்ற இறைப்பண்புகளைப் பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுபெறவும்  இந்த சத்சரித  வேதப்பாராயணம் துணைப்புரிகின்றது....

மேலும் இப்பாராயணத்தின் மூலம்   மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில்  வெற்றி வாகை சூடலாம்... அவரவர்கள்  வேண்டியது கிடைக்கப்பெறும்.. சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்...மேலும் அனைத்து விதமான  கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி  பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும்  ஒருசேரப்பெறலாம்.... 🔥🔥

🙏அத்தியாயம்::ஏழு(7) 🙏

🙏முன்னுரை..🙏

சீரடி பகவான் எதிலும் பற்றில்லாமல் எவ்வாறு எளிமை மற்றும் சமநிலையில்  ஏகத் தன்மையுடன்,  வாழ்ந்த விதத்தைப் பற்றிய விளக்கம்...

சத்குருநாதர் சீரடி பாபா,  எவ்வாறு மிகுந்த தாய்மையுணர்வுடனும், உயரிய சிறப்பியல்புகளோடும், தன்னுடைய  பக்தர்களுக்கு  உபதேசம் செய்து வழி நடத்தினார் என்பதைப் பற்றிய விளக்கவுரை..

சத்குருநாதர் சீரடி பாபா, எவ்வாறு பேதமின்றி  அனைவரையும் நேசித்து, தனக்குரியதை பகிர்ந்து அளித்து, தன் பக்தர்களுடைய தீராத நோயை எவ்வாறு குணப்படுத்தினார் என்பதன்  விளக்கவுரை.. 

எங்கும் நிறைத்தன்மையும், கருணையுடைய பாபாவின் குணாதிசயத்தை எடுத்துக் காண்பிக்கும் அத்தகைய ஒரு நிகழ்ச்சியைப் பற்றிய குறிப்புரை....

ஆத்மார்த்தமான உயரிய பக்தன், பாகோஜி என்ற பெயர் கொண்ட  குஷ்டரோக அடியவரின் சேவையைப் பகவான் சகிப்புத்தன்மையுடன் ஏற்றுக்கொண்டதைப் பற்றிய குறிப்புரை..

தாதா சாஹேப்பின் குழந்தையினுடைய பிளேக் வியாதியை பகவான் எவ்வாறு நீக்கிக் காப்பாற்றிய அற்புதத்தைப்  பற்றிய அனுபவ விளக்கவுரை....

சத்குருநாதர் சீரடி பாபா, தன்னுடைய எங்கும் நிறைந்த பேரறிவால்,  எவ்வாறு  தன் பக்தனாகிய நானா சாஹேப் சாந்தோர்கருடைய சீரடிக்கு வருகைப்புரிந்து தன்னை தரிசிக்க வேண்டும் என்ற  ஆவலைப் பூர்த்திச்  செய்தார் என்பதைப் பற்றிய அனுபவ உரை...

சீரடி பாபா எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று ஆராய்ந்த  காஷிபாய் கனிட்கர் என்ற பக்தைக்கு பகவான் அளித்த விளக்கவுரை...

மேற்க்கண்ட தலைப்புக்களின் விளக்கவுரைகளைப்  பற்றி ஒவ்வொன்றாக கீழே காண்போம்....

🔥முதலில்  சீரடி பகவான் எதிலும் பற்றில்லாமல் எவ்வாறு எளிமை மற்றும் சமநிலையில்  ஏகத் தன்மையுடன், வாழ்ந்த விதத்தைப் பற்றிய விளக்கத்தை  இங்கே பார்ப்போம்..🔥

சாயீபகவான்  அனைத்து வித யோகப் பயிற்சிகளையும் அறிந்திருந்தார்...அவர் தவ்தி என்பது  22½ அடி நீளமும், 3 அங்குல அகலமும் உள்ள சணல்நார் அதாவது லினன்  துணியினால் வயிறு சுத்தம் செய்தல், கண்ட யோகமான உடல் உறுப்புகளைத் தனியாகக் கழற்றி பின்னர் சேர்த்தல் போன்ற  சமாதி உள்ளிட்ட ஆறு முறைகளிலும் கைதேர்ந்தவராக இருந்தார்..அவரை ஒரு இந்து என்று நீங்கள் கருதுவீர்களேயானால், ஒரு யவனரைப் போன்று தோற்றமளித்தார்.... நீங்கள் அவரை ஒரு யவனர் என்று கருதுவீர்களேயானால், பகவான் எந்த மதத்தையும் சேராத  மனிதராக  தோற்றமளித்தார்...அவர் ஒரு இந்துவா, முகம்மதியரா என்று ஒருவரும் திட்டமாக அறிந்திருக்கவில்லை... 

இந்துக்களின் விழாவான ராமநவமியை உரிய சகல மரியாதைகளுடனும் கொண்டாடி, அதேநேரத்தில் முகம்மதியர்களின் சந்தனக்கூடு ஊர்வலத்தையும் அனுமதித்தார்... திருவிழாக்களில் குத்துச்சண்டையை ஊக்குவித்து, வெற்றிபெற்றோர்க்குப் பரிசுகள் வழங்கினார்.  கோகுலாஷ்டமி வந்தபோது, 'கோபால்காலா' திருவிழாவை (கிருஷ்ணர் மேனியைக் கருமை நிறமாக்கும் வைபவம்) உரியமுறைப்படி செய்வித்தார்... ஈத்திருவிழாவின்  போது முகம்மதியர்களைத் தங்கள் தொழுகையை (நமாஸ்) தமது மசூதியில் செய்ய அனுமதித்தார்...ஒருமுறை மொஹரம் திருவிழாவின்போது சில முகம்மதியர்கள், மசூதியில் ஒரு 'தாஸியா' அல்லது 'தாபூத்' (முஸ்லிம் ஞானியரின் பாடை உருவகம்) செய்யவும்,  அதைச் சிலநாட்கள் மசூதியில் வைத்திருந்து, கிராமத்தின் வழியாக ஊர்வலமாக எடுத்துச்சென்று புதைக்கவும் தீர்மானித்தனர்..நான்கு நாட்களுக்கு தாபூத்தை மசூதியில் வைத்திருக்க சாயீபாபா சம்மதித்தார்..ஐந்தாவது நாள் சிறிதளவும் தமது செயல்களுக்காக வருந்தும் தன்மையேயின்றி மசூதியில் இருந்து அதை அப்புறப்படுத்தினார்.. நீங்கள் அவரை ஒரு முகம்மதியர் என்று கூறுவீர்களானால், (இந்து மத வழக்கப்படி) காது குத்தப்படிருந்தார்.  நீங்கள் அவரை ஒரு இந்து என்று கருதுவீர்களானால், அவர் சுன்னத் என்ற நிகழ்வு  செய்கின்ற வழக்கத்தை ஆதரித்தார்....  

B.V. தேவ் எழுதிய 'பாபா ஹிந்து கி யவன்?' என்ற கட்டுரையை சாயிலீலா சஞ்சிகையில் (பக்கம் 562) பார்க்க...  நீங்கள் அவரை இந்து என்று அழைத்தால் எப்போதும் மசூதியில் வாழ்ந்தார்.  முகம்மதியர் என்றால் துனி என்னும் அகண்ட நெருப்பை அவர் எப்போதும் மசூதியில் வைத்திருந்தார்.  மற்றும் முகம்மதிய மதத்திற்கு விரோதமான பின்வரும் மூன்று பழக்கங்களையும் கொண்டிருந்தார்.  அதாவது திருக்கையில் அரைப்பது, சங்கு ஊதுவது, மணியடிப்பது, தீயில் ஆகுதி செய்தல், பஜனை, தண்ணீரால் சாயீபாபாவின் பாதத்தை அர்க்கிய வழிபாடு செய்தல் முதலியன எப்போதும் அங்கு அனுமதிக்கப்பட்டன.  நீங்கள் அவரை முகம்மதியர் என்று நினைத்தால் பிராமண ஸ்ரேஷ்டர்களும், அக்னிஹோத்ரிகளும், தங்கள் வைதீகச் சம்பிரதாயத்தை விட்டிவிட்டு அவர் பாதங்களில் சாஷ்டாங்கமாக வீழ்ந்து பணிந்தனர்.  அவரது தேசம் முதலியவற்றை விசாரிக்கப் போனவர்கள் அவரது தரிசனத்தால், கவரப்பட்டுத் திகைத்து வாயடைத்து ஊமையானார்கள்.  

எனவே அவர் ஒரு முகம்மதியரா, இந்துவா என்பது ஒருவராலும் நிச்சயமாகத் தீர்க்க இயலாததாய் இருந்தது..அகங்காரத்தையும், உடல் உணர்வையும் ஒழிப்பதன் மூலம் பரமாத்மாவுடன் தன்னை முழுவதும் அர்ப்பணித்து, சரணாகதியடைந்து அவருடன் ஒன்றிவிடுபவனுக்கு ஜாதி, தேசம் என்னும் கேள்விகள் குறித்துக் கருத்திற்கொள்வதற்கு ஏதுமில்லை.  சாயீபாபாவைப் போன்ற அத்தகைய ஒருவர் ஜாதிக்குள்ளேயும், ஜந்துக்குள்ளேயும் எவ்வித வேறுபாட்டையும் காணவில்லை.  பக்கிரிகளுடன் மாமிசமும், மீனும் அவர் உண்டார்.  நாய்கள் அவைகளின் வாயால் அவ்வுணவைத் தீண்டியபோதும், அவர் சகிப்புத்தன்மையுடன் இருந்தார்...சாயீபாபா அத்தகைய தனிச்சிறப்பு வாய்ந்த வியத்தகு அவதாரமாவார்.  முன்னர் செய்த நல்வினைகளின் காரணமாகவே நான் அவர் பாதத்தடியில் உட்காருவதற்கும், அவருடைய ஆசீர்வதிக்கப்பட்ட நட்பை மகிழ்ந்து அனுபவிப்பதற்கும், நல்ல அதிஷ்டத்தைப் பெற்றேன்.  அதிலிருந்து நான் பெற்ற மகிழ்ச்சியும், ஆனந்தமும் தன்நிகர் இல்லாதவை. 

🔥 பகவான் எவ்வாறு மிகுந்த தாய்மையுணர்வுடனும், உயரிய சிறப்பியல்புகளோடும், தன்னுடைய  பக்தர்களுக்கு  உபதேசம் செய்து வழி நடத்தினார் என்பதைப் பற்றிய விளக்கவுரை🔥

உண்மையில் பகவான்  பரிபூரண ஆனந்தமும், உணர்வும் ஆவார்...அவரின் உயர்வையும், தனித்தன்மைச் சிறப்பையும் போதுமான அளவிற்கு நான் விளக்க இயலாது...  அவரின் பாதாரவிந்தங்களில் ஆனந்தத்தை நுகர்பவன் அவருடையதேயான ஆத்மாவிலேயே ஸ்தாபிக்கப்படுகிறான்.  முக்தியில் ஆர்வமுள்ள பல சந்நியாசிகள், சாதகர்கள் மற்றும் எல்லாவித மக்களும் சாயீபாபாவிடம் வந்தனர்.... எப்போதும் அவர் நடந்தார், பேசினார், அவர்களுடன் சேர்ந்து சிரித்தார்....எப்போதும் தம் நாவினால், 'அல்லாஹ் மாலிக்' (இறைவனே எஜமானர்) என மொழிந்தார்.  அவர் விவாதத்தையோ, கலகத்தையோ விரும்பவில்லை....

அவர் சிலநேரங்களில் கடுமையாக இருப்பினும் எப்போதும் அமைதியாகவும், கட்டுப்பாட்டுடனும் இருந்தார்.  எப்போதும் முழு வேதாந்தத்தையும் போதித்தார்.  கடைசிவரை பாபா யார் என்பது ஒருவருக்கும் தெரியாது.  அரசர்களும், ஏழைகளும் பகவான் முன் சமமாக நடத்தப்பட்டனர்.  அனைவருடைய ஆழ்ந்த இரகசியங்களையும் அவர் அறிவார்... அதை பாபா மொழிகளால் வெளியிட்டபோது அனைவரும் வியந்தனர்.  சர்வ விஞ்ஞானிகளின் கருவூலம் சீரடி பாபா., எனினும் அறியாதவர்போல் நடித்தார்.. புகழை பகவான்  விரும்பவில்லை இவைகளே சாயீபாபாவின் குணாதிசயங்கள்...அவர் மானிட உருவத்தில் இருப்பினும், அவரின் செய்கைகள் பகவான்  கடவுளின் அவதாரமாகவே  திகழ்ந்தார்  என்பதைக் காட்டுகின்றது..

அனைவரும் அவரை சீரடியில் இருக்கும் உயரிய பரமாத்மா என்றே வழிப்பட்டனர்...

🔥எவ்வாறு பேதமின்றி  அனைவரையும் நேசித்து, தனக்குரியதை பகிர்ந்து அளித்து, தன் பக்தர்களுடைய தீராத நோயை எவ்வாறு குணப்படுத்தினார் என்பதன்  விளக்கவுரை.🔥

ஆசிரியர் ஹேமாட்பந்த்  கூறுகின்றார்...பாபாவின் அற்புதங்களை விளக்கத் தெரியாத அறிவிலி நான்.  சீரடியிலுள்ள ஏறக்குறைய எல்லாக் கோவில்களையும் அவர் பழுதுபார்க்கச் செய்தார்...சனி, கணபதி, சங்கரர், சரஸ்வதி, கிராமதேவதை, மாருதி முதலிய எல்லாக் கோவில்களையும் தாத்யா பாடீல் மூலமாக ஒழுங்குபடுத்தச் செய்தார்...அவருடைய தர்மமும் குறிப்பிடும்படியானது.  தட்சணை என்ற பெயரில் அவர் வழக்கமாக வாங்கிவந்த பணமும் தாராளமாகப் பகிர்ந்து அளிக்கப்பட்டது...ரூ.20 சிலருக்கும், ரூ.15 அல்லது ரூ.50 மற்றவர்களுக்கும் தினந்தோறும் அளிக்கப்பட்டது... இது தூய தர்மப்பணம் என்றும், அதை உபயோகமாகப் பயன்படுத்தவும் பாபா விரும்பினார்...பாபாவின் தரிசனத்தைப் பெற்றால்,  மக்கள் மிகப்பெரும் அளவில் பயனடைந்தார்கள்... சிலர் ஆரோக்கியமும், நலமும் பெற்றனர்..கொடியவர்கள் நல்லவர்களாகத் திருந்தினார்கள்...சில சந்தர்ப்பத்தில் குஷ்டம் குணமாக்கப்பட்டது.  பலர் தங்களின் மனோபீஷ்டங்களில் பூர்த்தி எய்தினர்... குருடர்கள் தமது கண்களில் எவ்வித மருந்தோ, சாறோ விடப்படாமல் பார்வையை அடைந்தார்கள்...சில முடவர்கள் தன் உறுப்புக்களை மீண்டும் இயல்பாக  அடைந்தார்கள்...  

பகவானின் அசாதாரணப் பெருந்தன்மைக்கு ஒரு எல்லையை ஒருவராலும் காண இயலாது...  அவரது புகழ் நெடுந்தூரம் பரவி, எல்லா திசைகளிலிருந்தும் யாத்ரீகர்கள் சீரடியை நோக்கித் திரண்டனர்... பாபா எப்போதும் துனி அருகிலேயே அமர்ந்திருந்தார்...அங்கு தம்மை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்...எப்போதும் தியானத்தில் அமர்ந்திருந்தார்...  சில சமயங்களில் குளித்தும், மற்றநேரங்களில் குளிக்காமலும் இருந்தார்.  தமது தலையில் ஒரு வெள்ளை டர்பனும்(தலைப்பாகை), இடுப்பில் சுத்தமான வேஷ்டியும், தமது உடம்பில் ஒரு சட்டையும் அணிவது வழக்கம்... ஆரம்பத்தில் இதுவே அவரது உடையாகும்.. அவர் கிராமத்தில் முதலில் வைத்தியம் செய்தார்...  நோயாளிகளைக் கவனித்து மருந்து கொடுத்தார்...  அவர் எப்போதும் வெற்றிபெற்று ஹகீமைப் (வைத்தியர்) போன்று புகழடைந்தார்.  

ஒரு வினோதமான விஷயத்தை இங்கு கூறலாம்.  ஓர் அடியவரது கண்கள் சிவந்தும், வீங்கியும் இருந்தது...சீரடியில் ஒரு வைத்தியவரும் கிடைக்கவில்லை.. மற்ற அடியவர்கள் அவரை பாபாவிடம் அழைத்துச் சென்றனர்...அதைப்போன்ற வியாதிக்கு மற்ற டாக்டர்கள் களிம்பு, அஞ்சனம், பசும்பால், கற்பூராதி மருந்துகள் முதலியன உபயோகிப்பர்.  ஆனால் பாபாவின் சிகிச்சையோ முற்றிலும் தனித்தன்மை வாய்ந்தது.  சிறிது பிப்பாவை (சலவை செய்பவர் குறியிடும் செங்கோட்டைக் காயின் பசை) கைகளால் இரண்டு உருண்டைசெய்து, நோயாளியின் ஒவ்வொரு கண்களிலும் அவ்வுருண்டையைத் திணித்துவிட்டு துணியால் கண்களைச் சுற்றிக் கட்டுப்போட்டுவிட்டார்... மறுநாள் கட்டு அவிழ்க்கப்பட்டுத் தண்ணீரால் சுத்தப்படுத்தப்படது... எரிச்சல் மறைந்து கண்மணி வெண்மையாய் சுத்தமாகிவிட்டது.... கண்கள் நுண்ணிய உறுப்பான போதும் செங்கோட்டை பசை அவற்றுக்கு எவ்விதத் தீங்கையும் அளிக்கவில்லை.  இம்மாதிரிப் பல வியாதிகளைக் குறிப்பிடலாம்..ஆனால் இந்நிகழ்ச்சியே குறிப்பில் உள்ளது... பகவானுடைய  வழிமுறைகள்  எளிமையாக இருப்பினும்  ஆராய்ச்சிக்கு அப்பாற்ப்பட்ட ஆழமான  சூட்சமங்களை உள்ளடக்கியது..

🔥பகவானின் தனித்தன்மை வாய்ந்த யோகப் பயிற்சிகளும், அதனை பகவான் கையாண்ட விதத்தைப் பற்றிய குறிப்புரை...🔥

பாபா யோகத்தின் எல்லாப் பயிற்சிமுறைகளையும் அறிவார்.. அவைகளில் இரண்டை இங்கே குறிப்பிடுவோம்... 

தவ்தி அல்லது சுத்த விருத்தி என்பதன் விளக்கத்தைப் பார்ப்போம்...சில நேரங்களில் பாபா  யாரும் தன்னை  பார்க்காத நேரத்தில் ,  மசூதியிலிருந்து நெடுந்தொலைவிலுள்ள ஆலமரத்துக்கு அருகில் இருக்கும் கிணற்றுக்குச்  சென்று தமது வாயைக்கழுவிக்  குளிப்பார்...  ஒரு சந்தர்ப்பத்தில் தமது குடல், கும்பி முதலியவற்றை அவர் வாந்தியெடுத்து, அவைகளின் உட்புறத்தையும், வெளிப்புறத்தையும் சுத்தம் செய்து பக்கத்திலுள்ள நாவல் மரத்தில் உலர்வதற்காக வைத்தது கவனிக்கப்பட்டது... இதனைப் பார்த்தவர்கள் சீரடியில் உள்ளனர்.  அவர்கள் இவ்வுண்மையைச் சோதனை செய்து பார்த்துவிட்டனர்....

3 அங்குல அகலமும், 22½ அடி நீளமும் உள்ள நனைக்கப்பட்ட லினன் துணியால் தவ்தி செய்யப்படுகிறது...இது தொண்டைக்குள் விழுங்கபட்டு ஏறக்குறைய அரைமணி நேரத்திற்கு வயிற்றுக்குள்ளேயே கிரியைகள் நடத்த வைத்திருக்கப்பட்டுப் பிறகு வெளியே எடுக்கப்படுவதே சாதாரண தவ்தியாகும்... ஆனால் பாபாவின் தவ்தியோ மிகவும் தனிச்சிறப்பானதும், அசாதாரணமானதும் ஆகும்....

கண்டயோகம்... பாபா, தமது உடம்பிலிருந்து வெவ்வேறு உறுப்புக்களைப் பிய்த்தெடுத்து, மசூதியில் அவற்றைப் பல இடங்களிலும் தனியாக வைத்திருத்தார்.  ஒருமுறை, ஒரு பெருந்தகை மசூதிக்குச் சென்று பாபாவின் உடல் உறுப்புக்கள் தனித்தனியாக மசூதியின் பல இடங்களிலும் கிடப்பதைக் கண்டார்.  அவர் மிகவும் பீதியடைந்து, முதலில் கிராம அதிகாரிகளிடம் சென்று, பாபா கண்டதுண்டங்களாக வெட்டப்பட்டுக் கொலை செய்யப்பட்டதை அறிவிக்க எண்ணினார்...  அவரே முதல் தகவல் தந்தவராகி விடுவராதலாலும், அவ்விஷயத்தைப் பற்றி சிறிது அறிந்து இருந்தாலும், அவர்மீது பொறுப்பு சுமத்தப்பட்டுவிடும் என எண்ணி யாரிடமும் ஏதுமே பேசாமல் இருந்துவிட்டார்.  ஆனால் மசூதிக்குச் சென்றபோது, பாபா தேக ஆரோக்கியத்துடன்  முன்போலவே இருப்பதைக் கண்டு மிகவும் அதிசயம் அடைந்தார்...  தான் முதல்நாள் பார்த்தது வெறும் கனவு என்றே அவர் எண்ணினார்.  

பாபா தமது சிசுப் பருவத்தில் இருந்தே யோகம் பயின்றார்.பாபா பெற்றுள்ள திறமையை ஒருவரும் அறிந்திருக்கவில்லை அன்றி ஊகிக்கவும் இல்லை...தமது சிகிச்சைகளுக்கு எவ்வித பணமும் அவர் வசூலிக்கவில்லை.  தமது தகைமைகளின் திறத்தின் பயனால் புகழ்பெற்றுப் பெருமையுற்றார்.  பல ஏழைகளுக்கும், துன்பப்படும் மக்களுக்கும் அவர் ஆரோக்கியம் அளித்தார்...  வைத்தியர்களில் எல்லாம் தலைசிறந்த புகழ்பெற்ற வைத்தியரான அவர் தமது தேவைகளை லட்சியம் செய்யவில்லை.  மற்றவர்களின் நன்மைக்கும், சௌகரியத்திற்குமே எப்போதும் உழைத்தார்.  தாங்கமுடியாத பயங்கர வலிகளை எல்லாம் தாமே பலமுறை, இம்முறைகளில் தாங்கித் துயருற்றிருக்கிறார்..பகவான் தன் பக்தர்களுக்காக எதையும் ஏற்றுக்கொண்டு துயரத்திலிருந்து  மீட்டார்...

🔥எங்கும் நிறைத்தன்மையும், கருணையுடைய பாபாவின் குணாதிசயத்தை எடுத்துக் காண்பிக்கும் அத்தகைய ஒரு நிகழ்ச்சியைப் பற்றிய குறிப்புரையை இங்கே காண்போம்..🔥

1910..ஆம் ஆண்டில் தீபாவளி விடுமுறையின் போது, பாபா துனிக்கருகில் அமர்ந்து குளிர்காய்ந்து கொண்டிருந்தார்.... பிரகாசமாக எரிந்துகொண்டிருந்த துனியில் விறகை நுழைத்தார்.. சிறிது நேரத்திற்குப்பின் விறகுகளை நுழைப்பதற்குப் பதில், பாபா தமது கரத்தையே துனி உள்ளே நுழைத்துவிட்டார்...  கரம் உடனே கருகி வெந்துவிட்டது....இதனை ஆத்மார்த்தமான உயரியப் பக்தர்  மாதவ்ராவ் தேஷ்பாண்டே உடனே கவனித்தார்... உடனே அவர்கள் பாபாவிடம் ஓடினார்கள்.. மாதவ்ராவ் தனது கைகளை பாபாவின் இடுப்பில் கொடுத்துச் சேர்த்து, வலிந்து பின்னால் இழுத்து, "தேவா எதற்காக இங்ஙனம் செய்தீர்" என்று கேட்டார்...பின்னர் பாபா தம் உணர்வுவந்து பதில் அளித்தார்.. "தொலை தூரத்தில் உள்ள ஏதோ ஒரு இடத்தில், ஒரு கொல்லனின் மனைவி   உலைக்களத்தில் இருந்த துருத்தியில் வேலை செய்துக் கொண்டிருந்தாள்...அப்போது அவளது கணவன், அவளைக் கூப்பிட்டான்..அவள் தனது இடுப்பில் குழந்தை இருப்பதை மறந்து அவசரமாக ஓடினாள்...அதனால் ஊதுஉலைக்களத்தில் குழந்தை நழுவி விழுந்துவிட்டது.  நான் உடனே உலைக்களத்தில்  கையைவிட்டு  குழந்தையைக் காப்பாற்றினேன்....எனது கரங்கள் வெந்துப் போனதைப் பற்றி, நான் பொருட்படுத்தவில்லை...குழந்தையின் உயிர் காக்கப்பட்டதை எண்ணி நான் மகிழ்வடைகிறேன்."...என்று கூறினார் பகவான்...

🔥ஆத்மார்த்தமான உயரிய பக்தன், பாகோஜி என்ற பெயர் கொண்ட குஷ்டரோக அடியவரின் சேவையைப் பகவான் சகிப்புத்தன்மையுடன் ஏற்றுக்கொண்டதைப் பற்றிய அனுபவ சூட்சம உரையை இங்கே காண்போம்....🔥

மாதவ்ராவ் தேஷ்பாண்டேயிடமிருந்து, பாபாவின் கரங்கள் வெந்துபோனதைக் கேள்விப்பட்ட நானா சாஹேப் சாந்தோர்கர், பம்பாயைச் சேர்ந்த புகழ்பெற்ற டாக்டரான பரமானந்த் என்பவரை ஆயின்மென்ட், லிண்ட் துணி, பாண்டேஜ் துணி உட்பட மருத்துவச் சாமான்களுடன் அழைத்துவந்து, பாபாவின் கரத்தைப் பரிசோதிக்கவும், வெந்ததினால் ஏற்பட்ட தீக்காயத்துக்கு சிகிச்சை செய்யவும் வேண்டிக்கொண்டார்.  ஆனால் பாபாவினால் இது மறுக்கப்பட்டது...அது முதற்கொண்டு பாகோஜி ஷிண்டே என்ற குஷ்டரோகி அடியவரால், பாபாவுக்குச் சிகிச்சை செய்யப்பட்டு வந்தது....வெந்துபோன இடத்தை நெய்போட்டு நன்றாகத் தேய்த்துவிட்டு ஒரு இலையை அதன்மீது வைத்துக் கட்டிவிடுவது அவரது சிகிச்சையாகும்...நானா சாஹேப் பலமுறை பாபாவிடம் அந்தக்கட்டை நீக்கிவிட்டு, டாக்டர் பரமானந்தை காயத்தைச் சோதிக்கவும், சிகிச்சை செய்யவும், குணப்படுத்தவும் (அது விரைவில் குணப்படும் என்ற எண்ணத்துடன்) கேட்டுக்கொண்டார்...மருத்துவர்  பரமானந்தும் அதைப்போல்  பலமுறை வேண்டுகோள் விடுத்தார்...ஆனால் அல்லாவே அவரது மருத்துவர் என்றுகூறி பாபா மறுத்துவிட்டார். .... 

 தனது கையைச் சோதிக்க யாரையும்  அனுமதிக்கவேயில்லை...மருத்துவர்  பரமானந்தின் மருந்துகள்  சீரடியில் உபயோகப்படுத்தப் படவில்லை...இருப்பினும் டாக்டருக்கு பாபாவின் தரிசனத்தைப் பெறும்படியான நல்லதிஷ்டம் இருந்தது...  தினந்தோறும் பாகோஜி, அவர் கரத்திற்குச் சிகிச்சை செய்யஅனுமதிக்கப்பட்டார்.  சில நாட்களுக்குப்பின் பாபாவின்  கரம் குணப்படுத்தப்பட்டது...அனைவரும் மகிழ்ச்சியுற்றனர்...ஏதோ இலேசான வலி இன்னும் இருந்திருக்குமோ இல்லையோ என்பதை நாம் அறியோம்...தினந்தோறும் பாகோஜி கட்டுக்களைத் தளர்த்தி, நெய்யினால் அதை நன்றாக மீண்டும் தேய்த்து, அழுத்திக் கட்டுப்போடுவார்.  இது சாயிபாபாவின் மகாசமாதிவரை நடைபெற்றது...

பகவான் அனைத்தையும் கடந்தவர் என்பதால்  இந்த சிகிச்சை உண்மையில் அவருக்குத் தேவையிருக்கவில்லை...ஆனால் தமது அடியவர் மீதுள்ள அன்பின் காரணத்தால் பாகோஜியினது உபாசனையை (சேவையை) முழுவதுமாகத் தடையின்றி நடத்த அனுமதித்தார்...பாபா லெண்டித் தோட்டத்திற்க்குப் புறப்பட்டபோது பாகோஜி அவருக்குக் குடைபிடித்து அவருடன் கூடச் சென்றார்.  துனிக்கருகில் உள்ள கம்பத்தருகில் பாபா அமர்ந்ததும் பாகோஜி தனது சேவையை ஆரம்பித்தார்...பாகோஜி முந்தைய ஜென்மத்தில் தீவினையின் காரணமாக குஷ்டரோகத்தால் அவதியுற்றுக் கொண்டிருந்தார்...அவரது கைகள் சுருங்கியிருந்தன...அவர் உடம்பு முழுவதும் சீழாகி, மோசமாக, நாற்றம் அடித்தது.... வெளியில் அவர் துரதிர்ஷ்டசாலியாக இருப்பதைப்போல் தோன்றினாலும், அவர் மிகவும் அதிர்ஷ்டசாலியாகவும், மகிழ்ச்சியுள்ளவராகவும் இருந்தார்...ஏனெனில் அவரே பாபாவின் முதன்மையான சேவகர்....  பாபாவின் அருகில் அமரும் பெரும் பேற்றை அடையக்கூடிய வாய்ப்பைப் பெற்றார் பாகோஜி.... 

🔥தாதா சாஹேப்பின் குழந்தையினுடைய பிளேக் வியாதியை பகவான் எவ்வாறு நீக்கிக் காப்பாற்றிய அற்புதத்தைப்  பற்றிய அனுபவ விளக்கவுரையை இங்கு காண்போம்....🔥

பாபாவின் மற்றொரு வியத்தகு லீலையை இப்போது கூறுகிறேன்.  அமராவதியைச் சேர்ந்த தாதா சாஹேப் கபர்டேயின் மனைவி சீரடியில் தன் இளம் புதல்வனுடன் சிலநாட்கள் தங்கியிருந்தாள்.  அப்போது அவளது புதல்வனுக்கு அதிக காய்ச்சல் வந்து, அது நெறிகட்டி பிளேக்காகப் பெரிதானது...  தாயார் பயந்துபோய் மிகவும் மனவேதனை அடைந்தாள்...பின்பு அமராவதிக்குச் செல்ல நினைத்து, பாபா வழக்கமாக மாலையில் சுற்றுவரும்போது, வாதாவுக்கு (சமாதி மந்திர்) அருகில் வந்து கொண்டிருக்கையில் அவரது அனுமதியைப் பெறுவதற்காகப் பக்கத்தில் சென்று நடுங்கும் குரலில் தனது இளம் புத்திரன் பிளேக் நோயினால் பீடிக்கப்பட்டிருப்பதைத் தெரிவித்தாள்...பாபா அவளிடம் அன்பாகவும், மிருதுவாகவும், "வானம் மேகங்களால் சூழப்பட்டிருக்கிறது, அவைகள் உருகி ஓடிவிடும்.  எல்லாம் எளிதாகவும் தூயதாகவும் ஆகிவிடும்" என்று கூறினார்.  இவ்வாறு கூறிக்கொண்டே தமது கஃப்னி உடையை இடுப்புவரை தூக்கி அங்கு பிரசன்னமாயிருந்த அனைவருக்கும் நன்றாகப் பெரிதாக முட்டை அளவிற்குத் தோன்றியிருந்த பிளேக் கட்டிகளைக் காண்பித்து, "பாருங்கள், எனது அடியவர்களுக்காக நான் எங்கனம் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது.  அவர்களது கஷ்டங்களெல்லாம் எனதேயாகும்" என்றார்.....  

இந்தச் சிறப்பான அசாதாரணச் செயலை (லீலை) மக்கள் கண்ணுற்று, ஞானிகள் தங்கள் அடியவர்களின் துன்பங்களைத் தாங்குகிறார்கள் என்று உறுதியடைந்தனர்.  ஞானிகளின் உள்ளமோ மெழுகை விட மிருதுவானது. உள்ளும், புறமும் அது வெண்ணெயைப் போன்று மிருதுவாக இருக்கிறது.  எவ்வித இலாபம் பெரும் நோக்கமின்றியே அவர்கள் தங்கள் அடியவர்களை நேசிக்கிறார்கள்..பாபாவை தன்னுடைய  உண்மை உறவினராகக் கருதி  அன்பு செய்தனர்...

🔥சத்குருநாதர் சீரடி பாபா, தன்னுடைய எங்கும் நிறைந்த பேரறிவால்,  எவ்வாறு  தன் பக்தனாகிய நானா சாஹேப் சாந்தோர்கருடைய சீரடிக்கு வருகைப்புரிந்து தன்னை தரிசிக்க வேண்டும் என்ற  ஆவலைப்  பூர்த்திச்  செய்தார் என்பதைப் பற்றிய அனுபவ உரையை இங்கே காண்போம்...🔥

கான்தேஷில் உள்ள நந்துர்பாரின் மம்லதார் என்பவர் நானா சாஹேப் சாந்தோர்கர்...இவர்  பாபாவின் பெரும் அடியவர் ஆவார்.  அவருக்குப் பண்டரீபுரத்துக்கு மாற்றலாகும் உத்தரவு வந்தது...சாயீ பாபாவிடம் அவர் கொண்டுள்ள பக்தி எல்லையில்லாதது..  ஏனெனில், அவருக்குப் 'பூலோக வைகுண்டம்' என்றழைக்கப்படும் பண்டரீபுரத்துக்குச் செல்ல  உத்தரவு கிடைத்திருக்கிறது... நானா சாஹேப் அவசரமாக வேலையை ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்ததால், அவர் அவ்விடத்திற்கு உடனே ஒருவருக்கும் தெரிவிக்காமலும், எழுதாமலும் புறப்பட்டார்...  அவர் தனது பண்டரீபுரமான சீரடிக்கு, ஒரு திடீர் விஜயம் செய்ய விரும்பினார்...தமது விட்டோபா என்று பாவித்த சாயிபாவைப் பார்த்து வணக்கம் தெரிவித்தப் பின்னர் புறப்பட எண்ணினார்.. ஒருவரும் நானா சாஹேப்  சீரடிக்குச் செல்வார்  என்று கனவு கூடக் காணவில்லை....ஆனால் சாயிபாபா இது அனைத்தையும் அறிவார்.  ஏனெனில் அவர் கண்கள் எங்கும் வியாபித்திருந்தன. (சர்வாந்தர்யாமி)  

சீரடியிலிருந்து சில மைல்கள் உள்ள நீம்காவனை நானா சாஹேப் அடைந்தபோது, சீரடியில் மசூதியில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது.. பாபா அமர்ந்துக் கொண்டு மகல்சாபதி, அப்பாஷிண்டே, காஷிராம் இவர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில் திடீரென்று, "நாம் நால்வரும் பஜனை செய்வோம்... பண்டாரீபுரத்தின் கதவுகள் திறந்திருக்கின்றன...நாம் மகிழ்ச்சியாய்ப் பாடுவோம்" என்றார் பகவான்..

அப்போது கோஷ்டியாக அவர்கள் பாடத் தொடங்கினர்..அதன் பல்லவி கீழே.....

"நான் பண்டரீபுதத்துக்குப் போகவேண்டும்..!

அங்கே தங்க வேண்டும்..!

ஏனெனில் அதுவே என் பரமாத்மாவின் வீடு..!".

என்று பாபா பாடினார்...அடியவர்களும் அவரைத் தொடர்ந்து பாடினர்...சிறிது நேரத்தில் நானா சாஹேப் தனது குடும்பத்துடன் வந்து பாபாவின் முன்னால் வீழ்ந்துபணிந்து அவரைத் தங்களுடன் தங்கும்படியும் வேண்டிக்கொண்டார். அவ்வேண்டுகோள் பாபாவுக்குத் தேவையாய் இருக்கவில்லை.....  ஏனெனில் மற்ற அடியவர்கள் நானா சாஹேபிடம், பாபா ஏற்கனவே பண்டரீபுரத்திற்குப் போவதற்கும், அங்கு தங்குவதற்குமான ஊக்கத்துடன் இருப்பதாகத் தெரிவித்தனர். இதைக் கேட்டு நானா சாஹேப் உணர்ச்சிவசப்பட்டார்...பாபாவின் காலடியில் வீழ்ந்தார்..பிறகு பாபாவின் அனுமதி, உதி மற்றும் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டு, நானா சாஹேப் பண்டரீபுரத்துக்குப் புறப்பட்டார்.....

பாபாவின் கதைகளுக்கு ஒரு முடிவில்லை.  ஆனால் இங்கு நிறுத்தி, அடுத்த அத்தியாயத்தில் மானிட வாழ்க்கையின் முக்கியத்துவம், பாபாவின் இறந்து வாழும் வாழ்க்கை, பாயஜாபாயின் சேவை மற்றும் பலகதைகளையும் கூறுகிறேன்...பாபாவின் நெருங்கிய பக்தரும், அவருடன் எப்போதும் மசூதியிலும், சாவடியிலும் படுத்து உறங்கியவருமான மகல்சாபதி, பாபா தம்மிடம் ஒருமுறை தாம் 'பாத்ரி'யைச் சேர்ந்த பிராமணர் என்றும், பிறந்தபோதே (முஸ்லிம்) ஃபக்கீர் ஒருவரிடம் வளர்க்க ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறியிருக்கிறார்...இந்த உரையாடல் நிகழ்ந்த சமயம் பாத்திரியைச் சேர்ந்த சிலர் அங்கு வந்ததையும் அவர்களிடம், பாபா அங்கு வசிப்பவர்களைப்பற்றி விசாரித்ததையும் தெரிவித்திருக்கிறார்.  (சாயிலீலா சஞ்சிகை - வருடம் 1924, பக்கம் 179)    

திருமதி. காஷிபாய் கனிட்கர், புனேவைச் சேர்ந்த புகழ்பெற்ற கற்றறிந்த பெண்மணி ஆவார்.  இவர் தம்முடைய அனுபவமாக கூறியவை... சாயீலீலா சஞ்சிகையில் (வருடம் 1934, தொகுப்பு  2, பக்கம் 79) பதிக்கப்பட்டிருக்கிறது....

🔥சீரடி பாபா எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று ஆராய்ந்த  காஷிபாய் கனிட்கர் என்ற பக்தைக்கு பகவான் அளித்த விளக்கம் பின்வருமாறு...🔥

பாபாவின் அற்புதங்களைக் கேள்விப்பட்ட பிறகு எங்களுடைய   பிரம்மசமாஜ நம்பிக்கைகளுக்கும், வழிமுறைகளுக்கும் ஏற்ப பாபா மாயவேலை செய்யும் முகம்மதியரா அல்லது இந்து சித்தரா..! என்று விவாதித்துக் கொண்டிருந்தோம்.... 

பின்பு ஒருமறை  சீரடி செல்லும்போது இதைப்பற்றிய எண்ணம் என் மனதில் சுழன்றுகொண்டிருந்தது.  ஆனால் மசூதியின் படிகளை நான் நெருங்கியபோது, பாபா வெளியேவந்து என்னை உற்றுநோக்கி, சற்றே கடுமையான குரலில் தனது நெஞ்சை சுட்டிக்காட்டி, "நான் ஒரு பிராமணன்... தூய பிராமணன்...எனக்கும் மாயமந்திர வேலைக்கும் தொடர்பு எதுவுமில்லை....அது மாதிரியான சித்து வேலைசெய்யும் எந்த முகம்மதியனும் இங்கு நுழையத் துணிய முடியாது" என்றார் பாபா..மீண்டும் தன்னைச் சுட்டிக்காட்டி, "இந்த பிராமணர் இலட்சக்கணக்கான மக்களை தூய்மையான ஒளிநிறைந்த பாதைக்கு இழுத்து, அவர்களின் இலட்சியத்தை அடைய இட்டுச்செல்வார்...இது பிராமண மசூதி.  இங்கு மாயவேலை செய்யும் எந்த முகம்மதியனின் நிழல்படவும் அனுமதிக்கமாட்டேன்" என்றார்....

ஓம் ஶ்ரீ  சாய்ராம்....🙏🏼🙏🏼🙏🏼

ஸ்ரீ சாயீயைப் பணிக... அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்....🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏

செவ்வாய், மே 18, 2021

ஶ்ரீ சீரடிபாபாவின் சாய்சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாயத்தின் வெளியீடு...அத்தியாயம் ஆறு

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள  இன்றைய  அத்தியாய  வெளியீடு....🙏🏼🙏🏼,🙏🏼

 🙏🏼ஶ்ரீசாய் சத்சரித்திரம்..🙏🏼

🙏🏼 அத்தியாயம்::ஆறு(6)🙏🏼

🔥முதலில் புனித வேத நூலான சாய்  சத்சரித்திரம்  பாராயணம் செய்வதன்  முக்கியத்துவமும், பெறப்போகும்  நன்மைகள்  என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥

சீரடி பகவானின் புனித வேத நூல் என்பது ஶ்ரீசாய் சத்சரித்திரம் என்பதாகும்..இதில் சீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத  எழுத்திலும் வியாப்பித்து  படர்ந்து இருக்கின்றது...

சத்சரிதத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல் ,மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது..ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து  சத்சரித்திரத்தில்  இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்....

இவ்வாறாக நாம் அனைவரும் சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்...ஆகவே  சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்...நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக...🙏🏼🙏🏼

🔥குறிப்பு.:..சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்...🔥

தனிமனித உயிரின்  சித்தம் தெளிவடையும்... அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரிய தன்மையை  அடையலாம்...இவ்வேத பாராயணத்தின் மூலமாக  ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரிய நிலையை அடையும் நிலையைப் பெறலாம்...மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம், நேர்மறை, மனிதநேயம் போன்ற இறைப்பண்புகளைப் பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுபெறவும் இந்த சத்சரித  வேதப்பாராயணம் துணைப்புரிகின்றது....  

மேலும் இப்பாராயணத்தின் மூலம்   மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில்  வெற்றி வாகை சூடலாம்.... அவரவர்கள்  வேண்டியது கிடைக்கப்பெறும்.... சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்...மேலும் அனைத்து விதமான  கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி  பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும்  ஒருசேரப்பெறலாம்.... 🔥🔥

🙏அத்தியாயம் --ஆறு (6)

🙏முன்னுரை...🙏

குருவிடம் சரணாகதி அடைவதால் , ஒவ்வொரு மனித உயிர்களும் பெறப்போகும் பலாபலன்கள் என்ன என்பதன் விளக்கம்....

சீரடி பாபா, எவ்வாறு  அனைத்து மத பண்டிகைகளை ஒன்றாக நடத்தி, எவ்வாறு அனைத்து மனிதர்கள் இடையேயான  மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தினார்  என்பதைப் பற்றிய விளக்கவுரை...

சந்தனக்கூடு ஊர்வலம் ஏன் கொண்டாடினார்கள் என்பதைப் பற்றியும்,  அதற்குரிய மூலக்  காரணம்  என்ன என்பதன்  பற்றிய அனுபவ உரை...

ஏன் உருஸ் என்னும் பண்டிகைத் திருநாளன்று ,  எவ்வாறு ராமநவமிப் பண்டிகையும் கொண்டாடினார்கள் என்பதைப்  பற்றிய அனுபவ விளக்கவுரை..

சீரடி எவ்வாறு அனைவரும் வந்து வணங்கும் புனிதத்தலமானது  என்பதைப் பற்றிய விளக்கவுரை...

மசூதி  எவ்வாறு, யாரால்  பழுதுப் பார்க்கப்பட்டது என்பதைப் பற்றிய விளக்கம்..மற்றும் பழுதுப் பார்க்கும்போது பகவான் எவ்வாறு கோப ஆவேசமாக நடந்து கொண்டார் என்பதைப் பற்றிய  சூட்சம விளக்கவுரை...

மேற்க்கண்ட தலைப்புக்களின் விளக்கவுரைகளைப பற்றி ஒவ்வொன்றாக இங்கே காண்போம்....

🔥 முதலில் குருவிடம் சரணாகதி அடைவதால் , ஒவ்வொரு மனித உயிர்களும் பெறப்போகும் பலாபலன்கள் என்ன என்பதன் விளக்கத்தை இங்கே பார்ப்போம்...🔥

எங்கே  'சத்குரு' வழிகாட்டியாக இருக்கின்றாரோ, அங்கே இவ்வுலகப் பெருங்கடலுக்கு அப்பால் நம்மைப் பத்திரமாகவும், எளிதாகவும் அவர் நிச்சயம் அழைத்துச் செல்வார்.  சத்குரு என்னும் வாக்கியமானது கூட  நமது மனத்திற்கு சாயீபாவைக் கொணர்கிறது..எமக்கு முன்னால் பகவான்  நின்றுக் கொண்டிருப்பது போன்றும், உதீ என்னும் திருநீற்றை எனது நெற்றியில் இடுவதைப் போன்றும், அவரது ஆசிகள் நல்கும் கரத்தை என் தலைமீது வைப்பதைப் போன்றும் தோன்றுகிறது...எனது இதயம் மகிழ்ச்சியால் நிரம்புகிறது...அன்பு எனது கண்களில் இருந்து பொங்கி வழிகிறது....குருவின் கரம் தீண்டலின் சக்தியானது வியக்கத்தக்கதாகும்....உலகை அழிக்கும் நெருப்பால் அழிக்கப்படாத எண்ணங்களும்,ஆசைகளும் உடைய இந்த நுட்பமான உடம்பு, குரு சாதாரணமாக கரம் தீண்டுவதாலேயே அழிக்கப்படுகிறது.... முந்தைய பல பிறவிகளில் உண்டான பல பாவங்களும் சுத்தமாக அடித்துச் செல்லப்படுகின்றன...மதங்கள், கடவுளைப் பற்றிய பேச்சுக்களைக் கேட்டவுடனேயே சஞ்சலப்படுபவர்களின் பேச்சுக்கள் கூட சத்குருவின் ஆற்றலாள்  அமைதியடைகிறது... சாயீபாபாவின் சுந்தரரூபத்தைப் பார்த்தாலே மகிழ்ச்சியால் நமது தொண்டை அடைக்கிறது.. கண்ணீர் வெள்ளம் பெருக்கெடுக்கிறது..  உணர்ச்சிகள் உள்ளத்தை வெல்கின்றன.. .நானே பிரம்மம் என்னும் உணர்வை அது எழுப்பிவிடுகிறது...தன்னையறிதலின் ஆனந்தத்தை ஸ்தாபிக்கிறது...நான், நீ என்னும் வேறுபாட்டைக் கரைத்து அவ்வப்போதே நம்மை உச்சத்தில் மூல ஆற்றலுடன்  ஒன்றாக்குகிறது...

புனித நூல்களை யான் பாராயணம் செய்யும் பொழுதெல்லாம்,  ஒவ்வோர் அடியிலும் எனது சத்குருவால் ஞாபகமூட்டப்படுகிறேன்...  சாயீபாபாவே ராமனும், கிருஷ்ணனுமாகி என்னை அவரின் கதைகளைக் கேட்கச் செய்கின்றார்... உதாரணமாக நான் பாகவதம் கேட்கத் தொடங்கும் முன்பாக, தலையிலிருந்து கால்வரை சாயீபாபா கிருஷ்ணராகிவிடுவார்.  அவரே பாகவதத்தையோ, உத்தவ கீதையையோ (கிருஷ்ணபரமாத்மா தன் சீடர் உத்வருக்கு அளித்த உபதேசங்கள்) மக்களின் நன்மைக்காகப் பாடுகிறார் என்றும் நினைக்கிறேன்...நான் உரையாடத் துவங்கும்போது, உடனே சாயீபாபாவின் கதைகள், அதற்க்குரிய விளக்கங்கள் தருவதற்கு ஏதுவாக என் நினைவிற்கு வருகின்றன...  எதையாவது நான் எழுதத் தொடங்கும்போது சில வார்த்தைகளையோ, சில வாக்கியங்களையோ என்னால் எழுதமுடியாது.  ஆனால் அவராகவே என்னை எழுதச் செய்யும்போது நான் எழுதுகிறேன்... எழுதிக்கொண்டே இருக்கிறேன்...சீடனின் அஅங்காரம் தலையெடுக்கும்போது, அவர் தமது கரங்களால் அதைக் கீழே அழுத்தி, தமது சக்தியைக் கொடுத்து, அவனது குறிக்கோளை எய்தும்படி செய்கிறார்.... இவ்வாறாகத் திருப்திப்படுத்தி ஆசீர்வதிக்கிறார்..

 "சாயீயின் முன்னால் எவன் சாஷ்டாங்க சரணம் செய்து, தனது இதயத்தையும் உயிரையும் அவரிடம் சமர்ப்பிகின்றானோ, அவன் வாழ்க்கையின் நான்கு முக்கிய குறிக்கோளாகிய அறம்(தருமம்), பொருள்(செல்வம்), இன்பம்(ஆசை), வீடு(முக்தி) இவைகளை எளிதில் அடைகிறான்"...கர்மம், ஞானம், யோகம், பக்தி என்ற நான்கு வழிகள் நம்மைத் தனித்தனியே கடவுளிடம் இட்டுச்செல்கின்றன..இவைகளில் பக்திவழி முட்கள், பள்ளங்கள், படுகுழிகள் நிறைந்ததாயும்,  கடப்பதற்கு மிகவும் கடினமாயும் இருக்கிறது...ஆனால் நீங்கள் சாயீயைச்  சார்ந்து, குழிகளையும், முட்களையும் விலக்கி நேராக நடப்பீர்களானால், அது உங்கள் குறிக்கோளிடத்தில் (கடவுளிடத்தில்) அழைத்துச் செல்கிறது...இவ்வாறாக சாயீபாபா நிச்சயம் கூறுகிறார்...அந்தர்யாமியாய் இருக்கிற பிரம்மத்தைப் பற்றியும், இவ்வுலகைப் படைத்த அவரின் சக்தியைப் பற்றியும் (மாயை) அவ்வாறு உண்டாக்கப்பட்ட உலகத்தைப் பற்றியும் தத்துவம் பேசி, இவை மூன்றும் முடிவில் ஒன்றே என்றும் எடுத்துரைத்த பின்னர் பக்தர்களின் நலனுக்காக உத்திரவாதம் அளிக்கும் கீழ்கண்ட சாயீபகவானின்  மொழிகளை ஆசிரியர் ஹேமாட்பந்த்  கூறுகிறார்...  

"உணவு, உடை இவற்றைப் பொறுத்தமட்டில் வறுமையோ, இல்லாமையோ எனது அடியவர்களின்  வீட்டில் இருக்காது...  தங்கள் மனதை எப்போதும் என்மீது ஸ்திரப்படுத்தியவர்களாய் என்னையே முழுஇதயத்துடன் வழிபாடு செய்யும் அடியவர்களின் நலன்களை எப்போதும் கவனிப்பதே, எனது சிறப்பியல்பு...கீதையிலும் கிருஷ்ண பரமாத்மா இதையேதான் கூறியிருக்கிறார்.  எனவே உணவுக்காகவும், உடைக்காகவும் கடின முயற்சி எடுக்காதீர்கள்.  உங்களுக்கு ஏதாவது வேண்டுமானால், கடவுளிடம் இரந்து கேளுங்கள்.  இவ்வுலக கௌரவத்தை விட்டுவிடுங்கள். கடவுளின் அருளையும், ஆசியையும் பெறமுயலுங்கள்.  அவரின் சந்நிதானத்தில் கௌரவம் அடையுங்கள்.  உலக கௌரவங்களால் வழி தவறிவிடாதீர்கள்.  இறைவனின் ரூபம் மனதில் ஸ்திரமாகப் பதிக்கப்படவேண்டும்.  புலன் அனைத்தும், மனமும் எப்போதும் இறைவனது வழிபாட்டிற்கே உரித்தாக்கப்படும்.  வேறு எவ்விதப் பொருட்களிலும் எவ்விதக் கவர்ச்சியும் வேண்டாம்... உடல், செல்வம், வீடு முதலிய வேறு எதைப்பற்றியும் மனது அலைந்து திரியாமல் எப்போதும் என்னை நினைத்துக் கொண்டிருப்பதிலேயே மனதை ஸ்திரப்படுத்துங்கள். அப்போது அது அமைதியாகவும், அடக்கமாகவும், கவலையற்றும் இருக்கும்...  

நல்ல பழக்கங்களில் மனம் ஈடுபட்டிருப்பதற்கு இதுவே அடையாளம்..மனம் அலையும் தன்மை உடையதாய் இருந்தால் அது நன்றாக ஒன்றிவிட்டது என்று கூறமுடியாது.. இம்மொழிகளைக்  குறிப்பிட்ட பிறகு, சீரடியில் நடக்கும் ராமநவமித் திருவிழாவின் கதையை ஆசிரியர் குறிப்பிடுகிறார்....சீரடியில் கொண்டாடப்பட்ட திருவிழாக்களில் ராமநவமி பண்டிகை  சிறப்பானதாகக் கருதப்படுகின்றது... சாயீலீலா சஞ்சிகையில் (வருடம் 1925, பக்கம் 197) பதிப்பான மற்றொரு முழுவிபரமும் இதில் குறிக்கப்பட்டு இரண்டு நிகழ்ச்சிகளின் கூட்டுவிபரமும் இங்கே கொடுக்கப்படுகின்றது...

🔥சீரடி பாபா, எவ்வாறு  அனைத்து மத பண்டிகைகளை ஒன்றாக நடத்தி, எவ்வாறு அனைத்து மனிதர்கள் இடையேயான  மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தினார்  என்பதைப் பற்றிய விளக்கவுரையை இங்கே காண்போம்🔥

கோபர்காவனின் நில அளவுத்துறையில் சர்வேயராக இருந்தவர் கோபால்ராவ் குண்ட் ஆவார்...அவர் பாபாவின் பெரும் அடியவர்.  அவருக்கு மூன்று மனைவிகள் இருந்தும் ஒரு குழந்தையும் இல்லை..சாயீபாபாவின் அருளால் அவருக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது.  அந்த மகிழ்ச்சியினால் 1897-ஆம் ஆண்டில் அவருக்கு திருவிழா அல்லது உருஸ்(முஸ்லிம் ஞானியரின் நினைவுதினம்) கொண்டாடும் எண்ணம் உதிர்ந்தது..தாத்யா பாடீல், தாதா கோதே பாடீல், மாதவ்ராவ் தேஷ்பாண்டே போன்ற மற்ற சீரடி அடியவர்களிடம், கோபால்ராவ் தனது எண்ணத்தை வெளியிட்டார்...அவர்கள் எல்லோரும் இந்த யோசனைக்கு உடன்பட்டு, சாயீபாபாவின் அனுமதியையும், ஆசியையும் பெற்றனர்....இவ்விழாவைக் கொண்ட்டாடுவதற்கு கலெக்டரின் அனுமதி பெறுவதற்கு விண்ணப்பம் செய்யப்பட்டது...  ஆனால் கிராம குல்கர்ணி (அதிகாரி) திருவிழா நடத்துவதற்கு எதிரிடையாகத் தகவல் கொடுத்ததால் அனுமதி மறுக்கப்பட்டது.  ஆனால் சாயீபாபா அதை ஆசீர்வதித்திருப்பதால், அவர்கள் மறுபடியும் முயன்று, முடிவாக வெற்றிபெற்றனர்.  

சாயீபாபாவிடம் கலந்தாலோசித்த பிறகு உருஸ் தினமானது  ராமநவமியன்று இருக்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டது...பாபா தமது நோக்கத்தில்  ஏதோ ஒரு  முடிவு வைத்திருந்ததாகத்  தோன்றுகிறது...அதாவது ராமநவமி, உருஸ் என்ற இரண்டு பண்டிகைகளை இணைப்பதென்பது இரண்டு  இந்து, முஸ்லிம் ஆகிய இரு சமூகத்தினரையும் ஒற்றுமைப்படுத்துவதற்காக ஆகும்...  இக்குறிக்கோளை அடைந்ததைப் பிற்கால நிகழ்சிகள் காட்டுகின்றன....

திருவிழாவுக்கு அனுமதி கிடைத்தது...ஆனால் மற்ற கஷ்டங்கள் முளைத்தன...சீரடி ஒரு கிராமம்...அங்கு தண்ணீர்ப் பஞ்சம் இருந்தது.  சீரடியில் இரண்டு கிணறுகள் இருந்தன...  உபயோகப்படுத்திய ஒரு கிணற்றில் நீர் வற்றிவிட்டது..மற்றொன்று உப்புத் தண்ணீர்.  இந்த உப்புத் தண்ணீரானது சாயீபாபா மலர்களை வீசியதன்மூலம் இனிமை பொருந்தியதாக மாற்றப்பட்டது.  இக்கிணற்றுத் தண்ணீர் போதாமையால் நெடுந்தூரத்திலிருந்து தோல் சாக்குகளில் கிணற்றிலிருந்து நீர் கொண்டுவருவதற்குத் தாத்யா பாடீல் ஏற்பாடு செய்ய வேண்டியதாயிற்று... தற்காலிகக் கடைகள் கட்டப்பட்டு மல்யுத்தச் சண்டைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.  

கோபால்ராவ் குண்டிற்கு அஹமத்நகரைச் சேர்ந்த தாமு அண்ணா காஸார் என்ற ஒரு நண்பர் இருந்தார்.  அவர் இரண்டு மனைவிகளைத் திருமணம் செய்தும், பிள்ளையில்லாக் குறையில் அம்மாதிரியே மகிழ்ச்சியற்றவராய் இருந்தார்...அவரும் சாயீபாபாவினால் ஆசீர்வதிக்கப்பட்டு புதல்வர்களை அடைந்தார்.  திருவிழாவின் ஊர்வலத்திற்காக ஒரு சாதாரணக் கொடி தயாரித்துக் கொடுக்கும்படி இவரை குண்ட் தூண்டினார்....  நானா சாஹேப் நிமோண்கரை மற்றொரு எம்ப்ராய்டரி வேலை  (சரிகைவேலை) செய்யப்பட்ட கொடி தயாரித்துக் கொடுக்கும்படி அறிவுருத்தி , அதில் வெற்றியும் பெற்றார்.  கிராமத்தில் திருவிழாவில் இரண்டு கொடிகளும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு துவாரகாமாயீ என்று பாபாவினால் அழைக்கப்பட்ட மசூதியின் இரண்டு மூலைகளிலும் ஊன்றப்பட்டன.  இது இன்றளவும் நடைபெற்று வருகிறது.... 

🔥சந்தனக்கூடு ஊர்வலம் ஏன் கொண்டாடினார்கள் என்பதைப் பற்றியும், அதற்குரிய மூலக்  காரணம்  என்ன என்பதன்  பற்றிய அனுபவ உரையை இங்கே காண்போம்

இத்திருவிழாவில் மற்றொரு ஊர்வலமும் தொடக்கப்பட்டது...கொரலாவின் முஹமதிய பக்தரான அமீர் ஷக்கர் தலால் அவர்களால் இச்சந்தன ஊர்வலத்தின் எண்ணம் உருவானது பெரும் முஹமதிய ஞானியரைக் கௌரவிக்கும் முகமாக இவ்வூர்வலம் நடைபெற்றது...  இந்த ஊர்வலத்தில் சந்தனக் குழம்பும், சந்தனப் பொடியும் 'தாலி' என்னும் தட்டுக்களில் இடப்பட்டு, பேண்டு (சங்கீத இசைக் கூட்டம்) வாத்தியம் மற்றும் இசை முழங்கிவர நறுமணப் பொருட்கள் முன்னால் புகைந்துகொண்டு செல்ல கிராமத்தின் வழியாக எடுத்துச் செல்லப்பட்டது.  மசூதிக்குத் திரும்பியபின்னர் தட்டுக்களில் உள்ளவை நிம்பார் என்னும் தொழுகைமாடத்தில் தெளிக்கப்பட்டு மசூதியின் சுவரில் கைகளால் பூசப்பெற்றது.. முதல் மூன்று ஆண்டுகளில் அமீர் ஷக்கர் அவர்களால் இத்திருவிழா  மேற்பார்வையிடப்பட்டது...  பின்னர் அவரது மனைவியால் பார்க்கப்பட்டது...  எனவே ஒரே நாளில் முகம்மதியரால் சந்தனக்கூடும், இந்துக்களால் கொடிகளும் அருகருகில் சென்றன.  இப்போதும் எவ்வித இடையூறுமின்றி அவ்வாறே நடந்துக்  கொண்டிருக்கிறது..  

சாயீபாபாவின் அடியவர்களுக்கு இந்தநாள் புனிதமானதும் மிகவும் பிரியமானதுமாகும்.  பெரும்பாலான அடியவர்கள் கூடி விழாவை நிர்வகிப்பதில் பங்கு வகித்தனர்.. எல்லா வெளி ஏற்பாடுகளையும் தாத்யா கோதே பாடீல் பார்த்துக்கொண்டார்.  உள் நிர்வாகம் முழுவதும் சாயீபாபாவின் பக்தையான ராதாகிருஷ்ணமாயிடமே ஒப்புவிக்கப்பட்டது...  அவ்விழாவின்போது அவளது இருப்பிடம் விருந்தாளிகளால் நிறைந்து இருந்தது...  அவர்களது தேவைகளையும், விழாவிற்குத் தேவையான ஏற்பாட்டையும் அவள் கவனித்தாக வேண்டும்.  மசூதி முழுவதும் அதன் சுவர், தரை முதலியவைகளைக் கழுவி சுத்தம்செய்து, சாயீபாபாவின் அணையா விளக்காலும், துனியாலும்   கரிப்பிடித்து கறுத்துப் போயிருக்கும் மசூதிச் சுவர்களை எல்லாம் வெள்ளையடிப்பதும் அந்த அம்மையார்  விருப்பமுடன் செய்த மற்றொரு வேலை ஆகும்....  இவ்வேலையை ஒருநாள் விட்டு ஒருநாள் சாயீபாபா சாவடிக்குத் தூங்கப் போயிருக்கும் முந்தைய இரவில் செய்வாள்.. துனி (அணையா நெருப்பு) உட்பட எல்லாப் பொருட்களையும் எடுத்துக் கசடறக் கழுவி மசூதிச் சுவரை வெள்ளையடித்த பின்னர் முன்போல் திருப்பி வைத்துவிடவேண்டும்....  இத்திருவிழாவில் சாயீபாபாவிற்கு மிகவும் பிடித்த அம்சமான ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குதலும் ஒரு பெரும் நிகழ்ச்சியாகும்...     ராதாகிருஷ்ணமாயீன் இருப்பிடத்தில் பெருமளவில் சமையலும், பல்வேறு வகையான உணவுப் பொருட்களும், இனிப்புப் பதார்த்தங்களும் தயாரிக்கப்பட்டன.  பல்வேறு செல்வந்தர்கள், பக்தர்கள் இந்நிகழ்சிகளில் பெரும் பங்கு வகித்தனர்....

🔥ஏன் உருஸ் என்னும் பண்டிகைத் திருநாளன்று , எவ்வாறு ராமநவமிப் பண்டிகையும் கொண்டாடினார்கள் என்பதைப்  பற்றிய அனுபவ விளக்கவுரை...🔥 

1912-ஆம் ஆண்டு வரை இவ்விழா படிப்படியாக முக்கியத்துவம் அடைந்து வந்து, பிறகு ஒரு மாறுதல் நிகழ்ந்தது...அந்த ஆண்டு கிருஷ்ணராவ் ஜாகேஷ்வர் பீஷ்மர் (சாயீ சகுணோபாசனா என்ற சிறு புத்தகத்தின் ஆசிரியர்), அமராவதியைச் சேர்ந்த தாதா சாஹேப் கபர்டேயுடன் திருவிழாவிற்கு வந்து முந்தைய தினம் தீஷித் வாதாவில் தங்கியிருந்தார்..அவர் தாழ்வாரத்தில் படுத்துக் கொண்டிருந்த போது லக்ஷ்மண்ராவ் என்ற காகா மஹாஜனி, மசூதிக்குப் பூஜை சாமான்களுடன் போய்க்கொண்டு இருந்தார்....  அப்போது பீஷ்மாவுக்கு ஒரு புது எண்ணம் தோன்றியது...அவர் காகாவை நோக்கிப் பின்வருமாறு கூறினார்.

"சீரடியில் 'உருஸ்' அல்லது 'சந்தனத் திருவிழா' என்னும் பண்டிகையை , ஏன்  ராமநவமியன்று கொண்டாடுகின்றனர். என்ற  உண்மைக்கு ஏதோ ஒரு தெய்வப் பின்புலக் காரணம்  இருக்கிறது...இந்துக்களுக்கு ராமநவமி தினம் மிகவும் முக்கியமானது...பின்னர் ஏன் இந்த நாளில் ராமநவமிக் கொண்டாட்டத்தை ஆரம்பிக்கக்கூடாது?"  காகா மஹாஜனி இக்கருத்தை விரும்பினார்...பாபாவின் அனுமதியை இவ்விஷயத்தில் பெறுவது என முடிவுசெய்யப்பட்டது.  அத்திருவிழாவில் கீர்த்தனை செய்யும் (கடவுளின் புகழைப் பாடும்) ஹரிதாஸை  (பாடகர்) எவ்வாறு பாட வைப்பது  என்பது  முக்கியமான விஷயமாகும்...ராமர் பிறந்ததைப் பற்றி தன்னுடைய பாடல்களான 'ராம அக்யன்' என்பன  தயாராக இருப்பதாகவும், தானே இந்தக் கீர்த்தனைகளைப் பாடுவதாகவும் கூறி, பீஷ்மா இப்பிரச்சனைக்குத் தீர்வு கண்டார்.. காகா மஹாஜனி, அப்போது ஹார்மோனியம் வாசிக்கவேண்டும்...ராதாகிருஷ்ணமாயீயால் தயாரிக்கப்பட்ட  சுண்ட்வடா(சர்க்கரை கலந்த இஞ்சிப்பொடி) பிரசாதமாகப் பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது...பின்பு அவர்கள் பாபாவின் அனுமதியைப் பெறுவதற்குச் சென்றனர்..அங்கு நடந்துகொண்டிருந்த எல்லாவற்றையும் அறிந்திருந்த பாபா, "வாதாவில் என்ன நடந்துகொண்டிருந்தது" என்று மஹாஜனியிடம் வினவினார்.  

குழப்பமடைந்த மஹாஜனி கேள்வியின் அர்த்தத்தை அறியமுடியாமல் அமைதியாக இருந்தார்....பின்னர் பாபா, பீஷ்மாவை அவர் என்ன சொல்கிறார் என்று கேட்டார்...ராமநவமித் திருவிழா கொண்டாடுவதன் நோக்கத்தை  பகவானிடம்  தெரிவித்துப் பாபாவின் அனுமதியைக் கோரினார்..பாபாவும் உடனே அனுமதி கொடுத்தார்.. எல்லோரும் மகிழ்ச்சியுற்று விழாவிற்கு ஏற்பாடுகள் செய்யத் தொடங்கினர்.  மறுநாள், மசூதி துணி ஜோடனையால் அலங்கரிக்கப்பட்டது... ராதாகிருஷ்ணமாயீயால் ஒரு தொட்டில் கொடுக்கப்பட்டது...பாபாவின் ஆசனத்தின் முன்னர் அது வைக்கப்பட்டு நிகழ்சிகள் ஆரம்பமாயின...பீஷ்மா கீர்த்தனைக்காக முன்னால் எழுந்து நின்றார்...மகாஜனி ஹார்மோனியம் வாசித்தார்....மகாஜனியைக் கூப்பிடும்படி சாயீபாபா ஒரு ஆளை அனுப்பினார்.

பாபா நிகழ்சிகளைத் தொடர்ந்து நடத்துவதற்கு அனுமதிப்பாரா என ஐயம் கொண்டு மஹாஜனி போகத் தயங்கிக் கொண்டிருந்தார்...ஆனால் அவர் போனபின்பு பாபா அவரை என்ன நடந்துகொண்டிருக்கிறது என்றும், தொட்டில் ஏன் அங்கு வைக்கப்பட்டிருக்கிறது என்றும் கேட்டார்.  அவர் (மஹாஜனி) ராமநவமித் திருவிழா தொடக்கப்படிருக்கிறது என்றும், தொட்டில் அதற்காக வைக்கப்படிருக்கிறது என்றும் கூறினார்...அப்போது பாபா நிம்பாரிலிருந்து ஒரு மாலையை எடுத்து அவர் கழுத்திலிட்டு, பீஷ்மாவுக்கு மற்றொரு மாலையை அனுப்பினார்...கீர்த்தனை துவங்கியது...அது முடிவடைந்ததும் 'ஸ்ரீ ராமருக்கு ஜெயம்' என்ற கோஷம் வானைப் பிளந்தது....குலால் என்ற சிகப்புப் பொடி வாத்திய கோஷத்திடையே சுற்றிலும் தூவப்பட்டது....  

எல்லோரும் பெரும் மகிழ்ச்சியுற்றிருக்கையில் ஒரு கர்ஜனை கேட்டது....கண்டபடி தூவப்பட்ட சிகப்புப் பொடியானது பாபாவின் கண்களுக்குள் சென்றுவிட்டது....பாபா கோபாவேசம் அடைந்து, பெருங்குரலில் திட்டவும், கடிந்துகொள்ளவும் ஆரம்பித்தார்...  இக்காட்சியால் மக்கள் பீதியடைந்து ஓட ஆரம்பித்தார்கள்...பாபாவை நன்கு அறிந்த அவருடைய நெருங்கிய பக்தர்கள் பாபாவின் கடிந்துரைகளையும், திட்டல்களையும் வேஷமிடப்பட்ட ஆசீர்வாதங்கள் என்று எடுத்துக்கொண்டனர்...ராமர் அவதரித்ததும், இராவணனுக்கு  அகங்காரம், கெட்ட எண்ணங்கள் முதலியன தோன்றி,  அவனுடைய அரக்கர்களையும் கொல்வதற்கான நிலையைப் போல் , பகவான் கடுமையான கோபாவேஷம் அடைந்ததும் இருக்கின்றதே என அவர்கள் நினைத்தனர்...

மேலும் சீரடியில் ஏதாவது ஒரு புதிய வேலை ஆரம்பிக்கப்படுமானால், பாபா கடுமையாக கோபம்கொள்வது வழக்கம்...எனவே அவர்கள் அமைதியாய் இருந்தார்கள்...பாபா, தமது தொட்டிலை உடைத்து விடுவார் என்று  ராதாகிருஷ்ணமாயீ பயந்துபோய் மகாஜனிஜிடம்  தொட்டிலை  எடுத்து வந்து விடும்படி கூறினாள்....அவர் சென்று தொட்டிலைத்  தளர்த்தி கழற்றப்போன சமயம், பாபா அவரிடம் சென்று தொட்டிலை அகற்றவேண்டாம் என்று கூறிவிட்டார்...பின்னர் சற்று நேரத்தில் பாபா சாந்தமடைந்தார்...பின்பு மகாபூஜை, ஆரத்தி உள்ளிட்ட அந்நாளைய நிகழ்சிகள் எல்லாம் நிறைவேறின....பிறகு மகாஜனி, பாபாவிடம் தொட்டிலை அப்புறப்படுத்த அனுமதி கேட்டார்....இன்னும் விழா முடியவில்லை எனக்கூறி பாபா மறுத்துவிட்டார்...அடுத்த நாள் கீர்த்தனையும், கோபால்காலா விழாவும் நடைபெற்றன...  (கீர்த்தனைக்குப் பிறகு தயிரும், பொறி அரிசியும் கலந்த ஓர் மண்பானை உடைப்பதற்காகத் தொங்கவிடப்பட்டிருக்கும்... கிருஷ்ண பரமாத்மா தன் நண்பர்களான கோபாலர்களுக்குச் செய்ததையொப்ப, அதனுள் இருப்பவை எல்லோருக்கும் பகிர்ந்து அளிக்கப்படும்)  அதன் பின்னரே பாபா, தொட்டிலை அப்புறப்படுத்த அனுமதித்தார்...

இவ்வாறாக ராமநவமித் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கையில், பகலில் இரண்டு கொடி ஊர்வலமும், இரவில் சந்தனக்கூடு ஊர்வலமும் வழக்கமான கோலாகலத்துடனும், அனைவரின் ஆராவாரத்துடனும் நல்லமுறையில் நடைபெற்றன.  இத்தருணத்திலிருந்து பாபாவின் உருஸ் விழாவானது, ராமநவமித் திருவிழாவாக மாற்றப்பட்டது...அடுத்த ஆண்டிலிருந்து (1913) ராமநவமியின் நிகழ்ச்சிகள் அதிகரிக்க ஆரம்பித்தன...  ராதாகிருஷ்ணமாயீ சித்திரை முதல் தேதியிலிருந்து, நாம சப்தாஹம் செய்ய ஆரம்பித்தாள்...எல்லோரும் முறை வைத்துப் பங்கெடுத்துக்கொண்டனர்...அவளும் சிலநாட்கள் அதிகாலையில் கலந்துக் கொண்டாள்.… நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் ராமநவமி கொண்டாடப்படுவதால் ஹரிதாஸை(பாடகர்) பெருவது கஷ்டமாக மீண்டும் உணரப்பட்டது.  ஆனால் விழாவிற்கு ஐந்து அல்லது ஆறு நாட்களுக்குமுன் நவீன துகாராம் என்றறியப்பட்ட பாலபுவாமாலியைத் தற்செயலாக மகாஜனி சந்தித்தார்.. அவரை அவ்வாண்டு கீர்த்தனை புரியச்செய்தார்...  

அடுத்த ஆண்டு (1914) சாதாரா ஜில்லா, பிர்ஹாட்ஸித்த கவடே நகரைச் சேர்ந்த பாலபுபா சாதார்கர் என்பவர் தமது நகரில் பிளேக் (ஒரு கொடிய பக்டீரியா தொற்றுநோய்) பரவியிருந்த காரணத்தால் அங்கு ஹரிதாஸாக இயங்க முடியவில்லை....எனவே, சீரடிக்கு வந்து, காகா சாஹேப் மூலம் பெற்ற அனுமதியுடன் கீர்த்தனை செய்தார்.  அவரது முயற்சிக்குப் போதுமான அளவு சன்மானம் கொடுக்கப்பட்டது...முடிவாக  ஒவ்வோர் ஆண்டும் புதிய "ஹரிதாஸ்" ஒருவர் கிடைக்கப்பெறும் சிரமத்தை 1914-ஆம்  ஆண்டிற்குப்  பின் தாஸ்கணு மஹராஜை இப்பணியில் சாயீபாபா நிரந்தரமாக நியமித்ததன் மூலம் தீர்த்தார்...  அந்நாளிலிருந்து தற்போது வரைக்கும் அவ்வேளையைத் தாஸ்கணு வெற்றிகரமாகவும் , சிறப்பானமுறையிலும் நிறைவேற்றி வருகின்றார்...1912-ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் திருவிழா படிப்படியாக வளரத் தொடங்கியது...சித்திரை  8-ஆம் தேதியிலிருந்து 12-ஆம் தேதிவரை சீரடி, தேன் கூட்டைப்போல் மக்கள் திரளாகக் காட்ச்சியளித்தது  கடைகள் அதிகரிக்கத் தொடங்கின....மல்யுத்தப் போட்டிகளில் புகழ்பெற்ற மல்யுத்த வீரர்கள் பங்கு எடுத்துக்கொண்டனர்...முன்னைவிடப் பெரிய அளவில் ஏழைகளுக்கு உணவு அளிக்கப்பட்டது...

🔥சீரடி எவ்வாறு அனைவரும் வந்து வணங்கும் புனிதத்தலமானது  என்பதைப் பற்றிய விளக்கவுரையை இங்கே பார்ப்போம்....🔥

ராதாகிருஷ்ணமாயீயின் பேருழைப்பு, சீரடியை ஒரு சமஸ்தானமாக்கியது.. அதற்குத் தேவையான பொருட்கள் சேர்க்கப்பட்டன. ஓர் அழகான குதிரை, பல்லக்கு, ரதம், வெள்ளிப் பொருட்கள், பாத்திரங்கள், பானைகள், வாளிகள், படங்கள், முகம் பார்க்கும் கண்ணாடிகள் முதலியவை அன்பளிப்பாக சமர்ப்பிக்கப்பட்டன.  இவ்வாறாக  தம் காலடியில் அனைத்தும் வந்து சேர்ந்தாலும்,  ஏராளமாக அதிகரித்த போதிலும் சாயீபாபா வந்த எந்த வஸ்துக்களையும்   மதிக்காது  சாட்சியாக , பற்றில்லாமல்  எளிமையை முன்போலவே அமர்ந்து இருந்தார்..  இரண்டு ஊர்வலங்களிலும் இந்துக்களும், முகம்மதியர்களும் ஒன்றாக வேலை செய்துவந்தும் அவர்களிடையே இதுவரை எவ்விதச் சச்சரவோ, இடையூறோ இருந்ததேயில்லை....  ஆரம்பத்தில் ஐயாயிரம் முதல் ஏழாயிரம் மக்கள்வரை கூடுவது வழக்கமாக இருந்தது...  ஆனால் அவ்வெண்ணிக்கை சில ஆண்டுகளில் எழுபத்தைந்தாயிரமாக அதிகரித்தது....எனினும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க விதத்தில் எவ்விதத் தொற்று வியாதியோ, கலகமோ கடந்த பல ஆண்டுகளாக ஏற்பட்டதேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது...

🔥மசூதி  எவ்வாறு, யாரால்  பழுதுப் பார்க்கப்பட்டது என்பதைப் பற்றிய விளக்கம்..மற்றும் பழுதுப் பார்க்கும்போது பகவான் எவ்வாறு கோப ஆவேசமாக நடந்து கொண்டதன்  சூட்சம விளக்கம் இங்கே.. .🔥

கோபால் ராவ் குண்டிற்கு மற்றொரு முக்கிய எண்ணமும் உதித்தது.  உருஸ் அல்லது சந்தனக்கூடு விழாவை அவர் தொடக்கியதைப் போன்றே, மசூதியைத் தாம் ஒழுங்குப்படுத்த வேண்டும் என எண்ணினார்.  எனவே பழுபார்க்கக் கற்களைச் சேகரித்து அதன் பக்கங்களைச் சமப்படுத்தவும் செய்தார்.  ஆனால் இப்பணி அவருக்கு அளிக்கப்பட்டதல்ல இது நானா சாஹேப் சாந்தோர்கருக்கும், தாழ்வாரத்தின் வேலை காகா சாஹேப் தீஷித்திற்கும் ஒதுக்கப்பட்டிருந்தது.  ஆனால் முதலில் பாபா, இவ்வேலைகளைச் செய்ய அவர்களுக்கு அனுமதியளிக்க மனமில்லாதவராய் இருந்தார்..ஆனால் மகல்சாபதி என்ற உள்ளூர் அடியவரின் குறுக்கீட்டினால் அவர்களுக்கு அனுமதி கிடைத்தது...மசூதியில் ஒரே இரவில் தாழ்வாரப்பணி முடிவடைந்ததும், பாபா தமது வழக்கமான ஆசனமான சாக்குத் துண்டை விட்டொழித்து தாம் அமர்வதற்கென ஒரு சிறு ஆசனம் அமைத்துக்கொண்டார்.  1911..ஆம் ஆண்டில்  சபாமண்டபம் பெரும் உழைப்புடனும், கடின முயற்சியுடனும் ஒழுங்குபடுத்தப்பட்டது...  மசூதிக்கு முன்னாள் இருந்த திறந்த வெளியானது சிறியதாகவும், அசௌகரியமுள்ளதாகவும் இருந்தது... காகா சாஹேப் தீஷித் அதை விசாலப்படுத்தி அதற்கு மேற்கூரை போடவிரும்பினார்...  பெருஞ்செலவில்  இரும்புத் தூண்கள், கம்பங்கள், துணிகள் முதலியவற்றை வரவழைத்து வேலையை ஆரம்பித்தார்....  இரவில் எல்லா அடியவர்களும் கடினமாக உழைத்து, கம்பங்களை ஊன்றினார்கள்... ஆனால் மறுநாள் காலை சாயீபாபா சாவடியிலிருந்து திரும்பிவந்தபோது எல்லாவற்றையும் வேருடன் பிடுங்கி வெளியே எறிந்தார்...  ஒருமுறை இவ்வாறு நிகழ்ந்தது... அவர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு ஒரு கம்பத்தை ஒரு கையில் பிடித்துக்கொண்டு அதை அசைத்து வெளியே எடுக்க ஆரம்பித்து, மற்றொரு கையால் தாத்யா பாடீலின் கழுத்தைப் பற்றினார்.  தாத்யாவின் முண்டாசை வலிந்து பற்றியிழுத்து ஒரு நெருப்புக் குச்சியைக் கொழுத்தி அதைப் பற்றவைத்துக் குழியில் தூக்கி எறிந்தார்...அச்சமயத்தில் பாபாவின் கண்கள் எரியும் நெருப்புத் துண்டம் போலிருந்தன.  ஒருவருக்கும் அவரைப் பார்க்கும் தைரியம் இல்லை.  எல்லோரும் பயங்கரமாக அஞ்சினார்கள்...

பாபா தமது பையிலிருந்து ஒரு ரூபாயை எடுத்து, அதை ஒரு புனித நிகழ்ச்சியின் நிவேதனம்போல் அங்கே விட்டெறிந்தார்....  தாத்யாவும் மிகவும் பயந்துபோனார்...  யாருக்கும் தாத்யாவுக்கு என்ன நிகழப்போகிறது என்பது தெரியவில்லை...  ஒருவருக்கும் தலையிடத் தைரியம் இல்லை.  பாபாவின் குஷ்டரோகி அடியவரான  பாகோஜி ஷிண்டே என்பவர் கொஞ்சம் முன்னேறத் துணிந்தார்.. ஆனால் அவர் பாபாவால் தள்ளப்பட்டார்.  மாதவராவுக்கும் அதைப்போன்ற மரியாதையே கிடைத்தது.  அவர் கற்களால் அடிக்கப்பட்டார்... ஆனால் சிறிது நேரத்திற்குப் பின் பாபாவின் கோபம் தணிந்து குளிர்ந்தது.  கடைக்காரனிடம் ஆள் அனுப்பி  பூவேலை  செய்த ஒரு முண்டாசு வாங்கி வரச்செய்து, தாத்யாவுக்கு ஒரு சிறப்பான கௌரவம் செய்வதைப்போல் தாமே அவர் தலையில் கட்டிவிட்டார்..பாபாவின் இவ்வினோதக் குணத்தைக் கண்டு எல்லோரும் ஆச்சர்யத்தால் தாக்கப்பட்டனர்...  அவ்வளவு வேகமாகப் பாபாவைக் கோபமடையச் செய்தது எது..?  தாத்யா பாடீலுக்கு உதை கொடுக்கும்படி செய்தது எது..? என்பதை அவர்கள் எல்லோரும் அறிந்துகொள்ள இயலவில்லை.  சிலவேளைகளில்  பாபா மிகவும் அமைதியாகவும், மௌனமாகவும் இருந்தார்.  இனிமையான விஷயங்களை அன்புடன் பேசினார்...பின்னர் உடனே சின்னப் பொய்க்காரணம் இருந்தோ, இல்லாமலோ கோபாவேசம் அடைந்தார்.  அத்தகைய பல சம்பவங்களை இங்கே கூறலாம்.  ஆனால் எனக்கு எதைச்சொல்வது, எதைவிடுவது என்று தெரியவில்லை...எனவே அவைகளை எனக்கு தோன்றியபோது கூறுகிறேன்...

அடுத்த அத்தியாயத்தில், பாபா ஒரு முகம்மதியரா, இந்துவா என்னும் மக்களின்  வினாவிற்கு, பகவான் எவ்வாறு தம்மை வெளிப்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வூட்டினார் என்று  விளக்கவுரையில் கூறப்படும்..பகவானின்  யோகப்பயிற்சிகள் மற்றும் பல விஷயங்களும் விளக்கவுரைகளில்  விவரிக்கப்படும்....

ஓம் ஶ்ரீ சாய்ராம்..🙏🏼🙏🏼🙏🏼

ஸ்ரீ சாயீயைப் பணிக..அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்...🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்..🙏🏼🙏🏼🙏🏼