ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼🙏🏻
ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாய வெளியீடு....🙏🏼🙏🏻🙏🏻
🙏ஶ்ரீசாய் சத்சரித்திரம்🙏
🙏 அத்தியாயம் ::நாற்பத்தெட்டு(48)🙏
🔥முதலில் புனித வேத நூலான ஶ்ரீசாய் சத்சரித்திரம் பாராயணம் செய்வதன் முக்கியத்துவமும், பெறப்போகும் நன்மைகள் என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் புனித வேத நூல் என்பது சாய் சத்சரித்திரம் என்பதாகும்...இதில் ஶ்ரீசீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத எழுத்திலும் வியாப்பித்து படர்ந்து இருக்கின்றது...
ஶ்ரீசாய் சத்சரிதத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல், மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது.ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்...
இவ்வாறாக நாம் அனைவரும் சாய் சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்..ஆகவே சாய் சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்... நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக..🙏🙏
🔥குறிப்பு..சாய் சத்சரித்திர வேதப் பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥
தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்.. மேலும் அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரியத் தன்மையை அடையலாம்...இவ்வேத பாராயணத்தின் மூலமாக ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரியத் தன்மையை அடையும் நிலையைப் பெறலாம்...
மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம்,நேர்மை, மனிதநேயம் போன்ற இறைப் பண்புகளைப் பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுப் பெறவும் இந்த சாய் சத்சரித்திர வேதப்பாராயணம் துணைப்புரிகின்றது..மேலும் இப்பாராயணத்தின் மூலம் மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில் வெற்றி வாகை சூடலாம்...
அவரவர்கள் விரும்பி வேண்டியது கிடைக்கப் பெறும்...சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்...மேலும் அனைத்து விதமான கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும் ஒருசேரப்பெறலாம்..🙏
🙏அத்தியாயம்:: நாற்பத்தெட்டு(48)🙏
🙏முன்னுரை...🙏
சத்குரு என்பவர் யார்..? சத்குருவின் சிறப்பியல்புகளும், லக்ஷணங்கள் பற்றிய சூட்சம விளக்கமும் மற்றும் சீரடிபாபா தன் இயல் வாழ்க்கை முறையை எவ்வாறு அனுஷ்டித்தார் என்பதன் விளக்கம் மற்றும் தூய்மையான அன்புடன் இறையைப் பின்பற்றுதலே உயரிய நிலையை அடைய வழி வகுக்கும் என்பதன் மூல சூட்சம உரை ..
சேவடே தன்னுடைய சத்குருவின் வைத்திருந்த நம்பிக்கையினால், என்னை பாபா தேர்வில் வெற்றிப்பெறச் செய்வார் என்று கூறியதைக் கேட்டு அவமதித்த சபட்ணேகர், மேலும் பாபா மீது வைத்திருந்த நம்பிக்கையையும், பாபாவின் அருட்செயலையும் கேலிசெய்தக் காரணத்தால் , பாபாவின் ஆசியைப் பெறமுடியாமல் போனதற்காக எவ்வாறு பிரார்த்தனைச் செய்து ஆசிப்பெற்றார் என்பதன் அனுபவ விளக்கவுரை...
திருமதி சபட்ணேகர் என்ற பக்தையின் கனவில் பகவான் காட்சி வழங்கியதைப் பற்றி தன் கணவனிடம் எடுத்துக் கூறியவுடன், இருவரும் சீரடி சென்று பாபாவைச் சந்தித்தப் போது , பாபா இவ்விருவர்களின் இயல் வாழ்க்கையில் நடந்த அனைத்து நிகழ்வையும் எடுத்துக்கூறி, எவ்வாறு குழந்தைப்பாக்கியத்தை அருளி ஆசிர்வதித்தார் என்பதைப் பற்றிய அனுபவ விளக்கவுரை..
மேற்க்கண்ட தலைப்புக்களின் விளக்கவுரைகளைப் பற்றி இங்கு கீழே காண்போம்...
🔥 முதலில் சத்குரு என்பவர் யார்..? சத்குருவின் சிறப்பியல்புகளும், லக்ஷணங்கள் பற்றிய சூட்சம விளக்கமும் மற்றும் சீரடிபாபா தன் இயல் வாழ்க்கை முறையை எவ்வாறு அனுஷ்டித்தார் என்பதன் விளக்கம் மற்றும் தூய்மையான அன்புடன் இறையைப் பின்பற்றுதலே உயரிய நிலையை அடைய வழி வகுக்கும் என்பதன் மூல சூட்சம உரையை இங்கு காண்போம்....🔥
இவ்வத்தியாயத் தொடக்கத்தில் சாயீபகவான் என்பவர், குருவா அல்லது சத்குருவா என்று ஒரு பக்தர் கேட்டக் கேள்விக்கு விடையளிக்கும் விதமாக, ஆசிரியர் ஹேமாட்பந்த் அவர்கள் சத்குருவின் லட்சணங்களையும், அடையாளங்களையும் பின்வருமாறு குறிப்பிடுகிறார்..வேதம், வேதாந்தம் அல்லது சாஸ்திரங்கள் ஆறையும் நமக்குக் கற்பிப்பவர், மூச்சைக் கட்டுப்படுத்துபவர், தமது உடம்பில் முத்திரைச் சின்னகளைப் ( அதாவது விஷ்ணுவின் சங்கு சக்கரச் சின்னங்களைப்) பொறித்துக் கொண்டிருப்பவர், பிரம்மத்தைப் பற்றி இனிமையாக உபதேசம் செய்பவர், தமது சீடர்களுக்குச் சில மந்திரங்களை உபதேசித்து, அதைக் குறிப்பிட்ட முறை ஜெபிக்கச் கூறி குறிப்பிட்ட நிச்சயக்கப்பட்டக் காலத்திற்குள் அதனால் ஏற்படும் பலனைக் காட்டஇயலாதவர், உயரிய மூலத் தத்துவங்களைத் தனது வார்த்தை ஞானத்தால் அழகாக விளக்கினாலும் தனக்கு எவ்வித சொந்த அனுபவமோ, ஆன்ம உணர்வோ இல்லாதவர் எவரோ ஆகிய இவரெல்லாம் சத்குரு என்பவர் அல்ல என்பதைப் புரிந்துக்கொள்ளவும்...
தனது உபன்யாசத்தால் இகபர இன்பங்களின் மீது வெறுப்புத் தோன்றச் செய்து, ஆன்ம உணர்வில் ஒரு சுவையை அளிப்பவரும், ஆன்ம உணர்வைப்பற்றிய அனுபூதி தன்மையும், எதிலும் பற்றின்மையும், அனைத்திற்கும் அப்பாற்ப்பட்டவரும், தனக்குள்ளே அண்ட சராசரத்தையும் கண்டவரும், நடைமுறை ஞானம் இவை இரண்டிலும் தேர்ச்சி பெற்றவரும் 'சத்குரு' என்று அழைக்கபபடுவற்குத் தகுதி உடையவராகின்றார். ஆத்ம மறுமலர்ச்சி பெறாமல் குறைபாடு உடையவரும், ஆத்ம அனுபூதி அடையாத ஒருவர் அஃதை எவ்வாறு பிறருக்கு உபதேசம் அளிக்க இயலும்..? சத்குரு என்பவர் கனவிலும் கூடத் தமது அடியவர்களிடம் இருந்து எவ்விதச் சேவையையோ,உதவியையோ, இலாபத்தையோ எதிர்பார்ப்பதில்லை... மாறாக அவர்களுக்குச் சேவைகள் செய்ய விரும்புகின்றார்..தாம் உயர்ந்தவர், தமது அடியவர் தாழ்ந்தவர் என்றும் அவர் ஒருபோதும் எண்ணியதில்லை..தன் பக்தர்களைத் தமது புதல்வன் என்று கருதுவதோடு மட்டுமல்லாது, தமக்குச் சமமானவன் அல்லது பிரம்மத்துக்குச் சமமானவன் என்றேக் கருதுகின்றார்.. சத்குருவின் முக்கியமான சிறப்பியல்புகள் என்னவென்றால, அவர் அமைதி, சாந்தம், சத்தியம், உண்மை, உயரிய தூய்மையான அன்பு, தாய்மையுணர்வு ஆகியவற்றின் உறைவிடமாக இருக்கின்றார் என்பதேயாகும்.. அவர் அமைதியற்றோ, வருத்தமாகவோ, எதனையும் எதிர்பார்த்தோ இருந்ததே இல்லை எனலாம்.. மூத்தோன், கற்றோன், அனைத்தும் தெரியும் என்ற கர்வம், அவருக்குக் ஒருபோதும் கிடையாது.. ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், நல்லவன், கெட்டவன், அர்த்தசாஸ்த்திரம் அறிந்தவன், ஒன்றுமே அறியாதவன், சத்தியன், அசத்தியன் ஆகியோர் எவராக இருந்தாலும் பேதம். பாராது அனைவரையும் ஏற்றுக்கொண்டு, ஒவ்வோரு தனிமனித உயிருக்கு ஏற்றாற்ப்போல் உபதேசம் வழங்கி சூட்சமமாக அறிவுருத்திக் கடைத்தேற்றம் அடையச்செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது..
முந்தைய பிறப்புக்களில் செய்த நற்கருமங்களின் குவியலின் விளைவால் சாயீபாபாவைப் போன்ற சத்குருவைச் சந்தித்து தாம் அவரால் ஆசீர்வதிக்கப்படும் நல்லதிர்ஷ்டத்தைப் பெற்றதாக ஹேமாட்ப்ந்த் இங்கே குறிப்பிடுகின்றார்.. தம்முடைய இளமையான காலத்தில் கூட பாபா எதையும் சேகரிக்கவில்லை எதன்மீதும் பற்று இல்லை.. (சில்லிம் என்ற புகைக்குழாய் மட்டும் கரங்களில் இருந்திருக்கின்றது.) அவருக்குக் குடும்பம் ஏதுமில்லை, நண்பர்கள் யாருமில்லை, வீடு ஏதும் இல்லை, எவ்வித ஆதாரமும் இல்லை.. பதினெட்டாம் வயதிலிருந்தே பாபாவின் மனக்கட்டுப்பாடு முழுமையானதாகவும், எதிலும் பற்றின்மையும், அசாதாரணமானதாகவும் இருந்தது..அப்போது அவர் தனிமையான இடத்தை தேர்வு செய்து தியானம் மேற்க்கொண்டவாறு பயமற்று வாழ்ந்தார்... எப்போதும் அவர் ஆன்ம உணர்விலேயே மூழ்கி இருந்தார்..தமது அடியவர்களின் தூய அன்பைக்கண்டு அவர்களின் விருப்பப்படியே, அவர் எப்போதும் நடந்தார். எனவே ஒருவகையில் தன் அடியவர்கள் பால் சார்ந்தவரானார்... பூதவுடலில் வாழ்ந்தபோது தமது அடியவர்களுக்கு என்னென்ன அனுபவங்களை அளித்து வந்தாரோ, அதே அனுபவங்களை அவரை நேசிப்பவர்களுக்கு, மகாசமாதியான பின்பும் இன்று வரையில் அளித்து வருகின்றார்.
பக்தி, நம்பிக்கை என்னும் அகவிளக்கை நாம் ஏற்றி, அன்பெனும் திரியை ஏற்றவேண்டும்.. இவ்வாறு செய்யப்படும்போது, ஞானம் (ஆன்ம உணர்வு) என்னும் ஜோதி சுடர்விட்டு அதிகமாகப் பிரகாசிக்கும். அன்பில்லாத வெறும் ஞானம் வறண்டது, எவரும் அத்தகைய ஞானத்தை விரும்புவதில்லை. அன்பின்றி திருப்தி ஏற்படுவதில்லை..எனவே நாம் தடையற்ற, எல்லையற்ற, எதனையும் எதிர்பாராத அன்பு உடையவர்களாக வேண்டும்...அன்பை எங்ஙனம் நாம் எடுத்துக்கூறினாலும், தூய்மையான அதன்முன் எதுவும் முக்கியமற்று விடுகிறது...? அன்பின்றி நமது கல்வி, கேள்வி, படிப்பு யாவும் பயனற்றுவிடுகிறது..அன்பு உள்ளத்தில் உதயமாகும்போது பக்தி, பற்றின்மை, அமைதி, விடுதலை இவையாவும் அவைகளின் அனைத்துச் செல்வக் களஞ்சியங்களுடன் வருகின்றன..அன்பை அடைய ஊக்கத்துடன் விரும்பினாலன்றி, எதைக்கொடுத்தும் பெற இயலாது..எனவே எங்கே உண்மையான அன்பும், ஆர்வமும், ஏக்கமும் இருக்கின்றதோ, கடவுள் தம்மைத்தாமே அவ்விடத்தில் ப்ரதிஷ்டை செய்துக் கொள்கின்றார்..அது அன்பை உள்ளடக்கிய விடுதலைக்கு ஒரு வழியாகிறது...இப்பொழுது இந்த அத்தியாயத்தின் முக்கிய நிகழ்விற்கு இப்போது திரும்புவோம்..ஒரு ஞானியிடம் ஒரு மனிதன் தூய உள்ளத்துடன் சத்குருவின் பாதக்கமலத்தில் சரணாகதி அடைந்தால், முடிவாக அவன் காப்பாற்றப்படுவது உறுதி. இது பின்வரும் நிகழ்வால் விளக்கப்படுகிறது...
🔥சேவடே தன்னுடைய சத்குருவின் வைத்திருந்த நம்பிக்கையினால், என்னை பாபா தேர்வில் வெற்றிப்பெறச் செய்வார் என்று கூறியதைக் கேட்டு அவமதித்த சபட்ணேகர், மேலும் பாபா மீது வைத்திருந்த நம்பிக்கையையும், பாபாவின் அருட்செயலையும் கேலிசெய்தக் காரணத்தால் , பாபாவின் ஆசியைப் பெறமுடியாமல் போனதற்காக எவ்வாறு பிரார்த்தனைச் செய்து ஆசிப்பெற்றார் என்பதன் அனுபவ விளக்கவுரையை இங்கு காண்போம்....🔥
சோலாப்பூர் ஜில்லா, அக்கல்கோட்டைச் சேர்ந்த சபட்ணேகர் வக்கீலுக்குப் படித்துக் கொண்டிருந்தார்..அவருடன் படிக்கும் சேவடே அவரைச் சந்தித்தார்..மற்றும் பல மாணவர்களும் ஒன்றாகக் கூடித் தாங்கள் படிக்கும் பாடங்களை ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டிருந்தனர்..அவர்களுக்குள் ஏற்பட்ட வினா விடைகளிலிருந்து சேவடே என்பவர்தான் எல்லோரைக்காட்டிலும் பரீட்சைக்குத் தயாரற்ற நிலையிலிருந்தார் என்று தெரியவந்தது... எனவே, மற்றவர்கள் அவரைக் கேலி செய்தனர்...தாம் சரியாகப் படிக்கவில்லையாயினும் தமது சாயிபாபா இருப்பதால் தம்மை வெற்றியடையச் செய்வார் என்று தான் உறுதியாக நம்புவதாகக் கூறினார்.
சபட்ணேகர் இக்கூற்றால் ஆச்சரியமடைந்தார்.. அவர் சேவடேயைத் தனியே அழைத்துக் கொண்டுபோய் அவர் அவ்வளவு உயர்வுபடக் கூறும் சாயீபாபா என்பவர் யார் என்று கேட்டார். அகமத்நகர் ஜில்லா சீரடியில் உள்ள மசூதியில் பக்கிரி ஒருவர் வாழ்கின்றார்...அவர் மிகப்பெரும் சத்புருஷர்.. மற்ற ஞானிகள் இருக்கலாம், ஆனால் இவர் ஒப்பற்றவர்... முன்வினையில் பல நற்கருமங்களின் பலன் பெருமளவில் குவிக்கப்பட்டு இருந்தாலன்றி ஒருவரும் அவரைப் பார்க்க முடியாது...நான் முழுமையும் அவரை நிச்சயம் நம்புகிறேன். அவர் சொல்வது பொய்யாவதில்லை.. அடுத்த ஆண்டு நான் தேறிவிடுவேன் என்று அவர் எனக்கு உறுதிக் கூறி இருக்கிறார்...கடைசி வருடத் தேர்வையும், அவர்தம் கருணையால் நான் தேறிவிடுவேன் எனக்கூறினார் சேவடே... சபட்ணேகர் அவர் நம்பிக்கையைக் கண்டு சிரித்து அவரையும், சாயீபாபாவையும் கேலி செய்தார்.....
சபட்ணேகர் தமது தேர்வில் வெற்றிப்பெற்று அக்கல்கோட்டில் குடியேறி அங்கு வக்கீலாகத் தொழில் நடத்தினார்... இதற்குப் பத்தாண்டுகளுக்குப் பிறகு அதாவது, 1913-ஆம் ஆண்டில் தொண்டையில் வந்த வியாதி காரணமாக அவரது ஒரே மகனை இழக்க நேரிட்டது..அது அவர் உள்ளத்தைப் பிளந்தது...பண்டரீபுரம், கனகாபூர் மற்றும் பல புனித க்ஷேத்திரங்களுக்கு அவர் க்ஷேத்ராடனம் செய்து அமைதியைத் தேடினார்..அவருக்கு மனஅமைதி கிடைக்கவில்லை.. பின்னர் வேதாந்தம் கற்கத் தொடங்கினார்..அதுவும் அவருக்குப் பயனளிக்கவில்லை.... இத்தருணத்தில், தமது நண்பரான சேவடே, பாபாவைப் பற்றிக் கூறியதும், பாபாவின்மேல் அவருக்குள்ள நம்பிக்கையையும், சபட்ணேகர் நினைவு கூர்ந்தார். தாமும் சீரடிக்குச் சென்று பாபாவைக் காணவேண்டுமென்று அவர் எண்ணினார்..தம் தம்பி பண்டிட்ராவுடன் அவர் சீரடிக்குச் சென்றார்.. பாபாவைத் தூரத்திலிருந்து கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தார்..பாபா அருகே சென்று வீழ்ந்துபணிந்து, பக்தியுடன் ஒரு தேங்காயை முன்னே வைத்தபோது, "போ...! வெளியே" என்று பாபா கூச்சலிட்டார்...சபட்ணேகர் தலைகுனிந்துக் கொண்டு, பின்னால் நகர்ந்துபோய் வேறுபக்கம் அமர்ந்திருந்தார்... மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்பதை அவர் யாரிடமாவது கலந்து ஆலோசிக்க விரும்பினார்...யாரோ பாலா ஷிம்பியின் பெயரைக் குறிப்பிட்டனர்.. சபட்ணேகர் அவரைச் சந்தித்து அவருடைய உதவியை வேண்டினார்... அவர்கள் பாபாவின் போட்டோக்களை வாங்கிக்கொண்டு அவற்றுடன் மசூதிக்குள் வந்தனர்..பாலா ஷிம்பி ஒரு போட்டோவை எடுத்து பாபா கையில் கொடுத்து அது யார் போட்டோ என்று கேட்டார்.. பாபா சபட்ணேகரைக் காண்பித்து, இது அவரது காதலன் போட்டோ என்று கூறிவிட்டுச் சிரித்தார். எல்லோரும் சிரித்தனர். பாலா ஷிம்பி பாபாவை அச்சிரிப்பின் குறிப்பு என்ன என்று கேட்டுக்கொண்டே சபட்ணேகரை முன்னால் வந்து தரிசனம் செய்துகொள்ளும்படி சமிக்ஞை செய்தார்....
சபட்ணேகர் வீழ்ந்து கும்பிடத் தொடங்குகையில், பாபா மீண்டும் "போ...! வெளியே" என்று கூச்சலிட்டார்...சபட்ணேகருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை..பின்னர், இருவரும் (பாலா ஷிம்பி, சபட்ணேகர்) கைக்கோர்த்து பாபாவின்முன் அமர்ந்து பிரார்த்தனை செய்தனர். பாபா முடிவாக சபட்ணேகரை உடனே வெளியே போகும்படி கட்டளையிட்டார்...இருவரும் வருத்தமடைந்து, மனமுடைந்து போயினர். பாபாவின் ஆணைக்குக் கீழ்ப்படிய வேண்டுமாதலால் மறுமுறை வரும்போது தரிசனம் தரவேண்டுமென்று, பிரார்த்தனை செய்துக்கொண்டு சபட்ணேகர் சோர்ந்த உள்ளத்துடன் வீடு திரும்பினார்..
🔥திருமதி சபட்ணேகர் என்ற பக்தை, தனது கனவில் பகவான் காட்சி வழங்கியதைப் பற்றி தன் கணவனிடம் எடுத்துக் கூறியவுடன், இருவரும் சீரடி சென்று பாபாவைச் சந்தித்தப் போது , பாபா இவ்விருவர்களின் இயல் வாழ்க்கையில் முன்னர் நடந்த அனைத்து நிகழ்வையும் எடுத்துக்கூறி, எவ்வாறு குழந்தைப் பாக்கியத்தை அருளி ஆசிர்வதித்தார் என்பதைப் பற்றிய அனுபவ விளக்கவுரை.. 🔥
ஓர் ஆண்டு ஓடியது.. எனினும் சபட்ணேகர் மனம் அமைதியடையவில்லை...கனகாபூருக்குச் சென்றார்.. அங்கு அவர் இன்னும் அதிகமான மனக் கலக்கத்தை அடைந்தார்.. பின்னர் ஓய்வுக்காக மதேகாவன் சென்றார்... பின்னர் முடிவாக காசிக்குச் செல்லத் தீர்மானித்தார். புறப்படுவதற்கு இரண்டு தினங்களுக்குமுன் அவரின் மனைவி ஒரு கனவு கண்டாள். அக்கனவில் தான் ஒரு மண் பானையுடன் லக்கட்ஷாவின் கிணற்றுக்குப் போய்க்கொண்டு இருப்பதாகவும், வேப்பமரத்தடியில் ஒரு துண்டைத் தலையில் கட்டிக்கொண்டு ஒரு பக்கிரி அமர்ந்திருப்பதையும், அவர் அவளருகில் வந்து, "அன்புள்ள பெண்ணே...! எதற்காக ஒன்றுமில்லாத ஆயாசம்..? நான் உனது பானையில் தண்ணீர் நிரப்பித் தருகிறேன்" என்று கூறியதாகவும் கண்டாள். .அப்பக்கிரிக்குப் பயந்து காலிப் பானையுடன் விரைவாகத் திரும்பியபோது, அவரால் தொடரப்பட்டத் தருணத்தில் தூக்கம் கலைந்து கண்ணைத் திறந்து பார்த்தாள். இக்கனவைத் தனது கணவனிடம் கூறினாள்...இது ஒரு புனிதமான நேரம் என்று அவர்கள் நினைத்து சீரடிக்குப் புறப்பட்டனர்.. அவர்கள் மசூதியை அடைந்தபோது பாபா அங்கில்லை... லெண்டித்தோட்டத்திற்குச் சென்றிருந்தார்.. பகவான் திரும்பிவரும் வரையில் காத்திருந்தனர்..அவர் திரும்பிவந்ததும் அவள் கனவில் கண்ட அப்பக்கிரியின் தோற்றம் பாபாவுடன் சரியாக ஒத்திருந்ததைக் கண்டு அவள் ஆச்சரியம் அடைந்தாள்..பணிவுடன் அவள் பாபாவின்முன் வீழ்த்து வணங்கிவிட்டு அவரை நோக்கி அமர்ந்திருந்தாள்...
அவளது பணிவைக்கண்டு பாபா மிகவும் மகிழ்ச்சி அடைந்து, அவருக்கே உரிய விசித்திரமான பாணியில் மூன்றாமவர் ஒருவரிடம் ஒரு கதை சொல்லத் தொடங்கினார்.. எனது புயம், அடிவயிறு, இடுப்பு எல்லாம் நீண்ட நாட்களாக வலித்துக்கொண்டு இருந்தன..பல மருந்துகளைச் சாப்பிட்டேன்...வலி குறையவில்லை. மருந்துகள் எவ்வித நிவாரணத்தையும் அளிக்கவில்லை...ஆதலால் நான் மருந்துகளின் மேல் வெறுப்படைந்தேன். ஆனால் இப்போது திடீரென்று எல்லா வலிகளும் நீங்கிவிட்டது கண்டு ஆச்சரியம் அடைகிறேன்" என்றார்... எவ்விதப் பெயரும் கூறப்படவில்லை..ஆயினும் உண்மையில் அது திருமதி சபட்ணேகரின் கதையே ஆகும்..பாபா விவரித்தபடியே அவளது வலி உடனே நீங்கிவிட்டது... அவள் மகிழ்ச்சி அடைந்தாள்...
பின் சபட்ணேகர் தரிசனம் செய்துகொள்ள முன்னால் சென்றார்..அவர் மீண்டும் முந்தைய "வெளியே போ!" என்ற வார்த்தைகளுடன் வரவேற்கப்பட்டார்...இந்த முறை அவர் தவறுக்கு வருந்துபவராகவும், இன்னும் விடாமுயற்சி உள்ளவராகவும் இருந்தார்..தனது முந்தைய வினைகளே பாபாவின் அதிருப்திக்குக் காரணம் என்று நினைத்து அதற்கு ஈடுசெய்யத் தீர்மானித்தார்..பாபாவைத் தனியாகக் கண்டு, தனது முந்தைய வினைகளுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்ள முடிவுசெய்து தனது தலையை பாபாவின் பாதத்தின் மீது வைத்தார்..பாபா தமது கையை கையை அவர் தலைமீது வைத்தார்..பாபாவின் கால்களை சபட்ணேகர் கீழே அமர்ந்து வருடத் தொடங்கினார்..பின் ஆடுமேய்க்கும் ஆய்மகள் ஒருத்தி பாபாவின் இடுப்பை உட்கார்ந்து பிடித்துவிடத் தொடங்கினாள்...பாபா தமக்கே உரிய பாணியில் ஒரு வணிகனின் கதையைக் கூறத் தொடங்கினார்....
வணிகனின் வாழ்க்கை முழுவதிலும் ஏற்பட்ட மாறுதல்களையும், அவனது ஒரே மகன் இறந்தது உட்பட அனைத்தையும் எடுத்துரைத்தார்...பாபா கூறிக் கொண்டிருந்த கதை முழுவதும் தன்னுடையதே என்று அறிந்து, சபட்ணேகர் ஆச்சரியமடைந்தார்...பாபாவுக்கு அதன் ஒவ்வொரு விவரமும் தெரிந்தது கண்டு அதிசயமடைந்தார்...அவர் நிறைப் பேரறிவுடையவர் என்றும், அனைவரின் இதயங்களையும் அறிந்திருப்பவர் என்றும் அறியலானார்...இந்த எண்ணம் அவர் மனதில் எழுந்த போது, பாபா ஆடுமேய்க்கும் பெண்ணை நோக்கி சபட்ணேகரைச் சுட்டிக்காண்பித்து, "இந்த ஆள் அவரது குழந்தையை நான் கொன்றுவிட்டதாக, என் மீது பழி சுமத்தித் திட்டுகின்றார்...நான் எனது மக்களின் குழந்தைகளைக் கொல்கின்றேனா..? ஏன் இவர் மசூதிக்கு வந்து அழுகிறார்..? நான் இப்போதே ஒன்றைச் செய்கிறேன்..அதே குழந்தையை மீண்டும் அவரது மனைவியின் கருப்பையில் கொண்டு வைக்கின்றேன்" என்று கூறினார்...
இவ்வார்த்தைகளைக் கூறிக்கொண்டே தமது ஆசி வழங்கும் கரத்தை, அவர் தலைமீது வைத்து, "இப்பாதங்கள் தொன்மையானவை, புனிதமானவை...இப்போது உனக்குக் கவலையில்லை...என்மீது முழு நம்பிக்கையையும் வைப்பீராக...நீ சீக்கிரத்தில் உனது குறிக்கோளை எய்துவாய்.!" என்று கூறித் தேற்றினார்..சபட்ணேகர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு, பாபாவின் பாதங்களைத் தன் கண்ணீரால் கழுவிவிட்டுத் தனது இருப்பிடத்தை அடைந்தார்..பின்னர் அவர் பூஜை, நிவேதனம் இவைகளைத் தயார் செய்துக் கொண்டு மனைவியுடன் மசூதிக்கு வந்தார்...தினந்தோறும் இவைகளை பாபாவுக்குச் சமர்ப்பித்து, அவரிடமிருந்து பிரசாதம் பெற்றுக்கொண்டிருந்தார்..மசூதிக்குள் கூட்டமாக இருந்தது...சபட்ணேகர் அங்குசென்று மீண்டும் மீண்டும் வணங்கிக் கொண்டிருந்தார்.. தலையோடு தலைகள் மோதிக் கொள்வதைக் கண்ட பாபா சபட்ணேகரை நோக்கி, "ஓ...! நீ ஏன் அடிக்கடி வணங்கிக் கொண்டிருக்கின்றாய்...?" என்று கேட்டார்... "பணிவுடனும், அன்புடனும் செய்யும் ஒரு நமஸ்காரமே போதும்" என்றார்.. அன்றிரவு முன்னரே விவரிக்கப்பட்ட சாவடி ஊர்வலத்தை சபட்ணேகர் கண்டுகளித்தார். ஊர்வலத்தின்போது பாபா, பாண்டுரங்கன் மாதிரியே காட்சியளித்தார்...
மறுநாள் விடைபெறும்போது தக்ஷிணையாக ஒரு ரூபாய் கொடுக்க வேண்டுமென்றும், பாபா மீண்டும் கேட்டால் இல்லையென்று கூறாமல், பிரயாணம் செய்வதற்குப் போதுமான பணத்தை ஒதுக்கி வைத்துக் கொண்டு, மேலும் ஒரு ரூபாய் கொடுக்கவேண்டு என்றும் நினைத்தார்... மசூதிக்கு அவர் சென்று ஒரு ரூபாய் அளித்தபோது, அவருடைய எண்ணத்தின் படியே பாபா மேலும் ஒரு ரூபாய் கேட்டார்..அது கொடுக்கப்பட்டபோது, பாபா இதைக்கூறி ஆசீர்வதித்தார்...இத்தேங்காயை எடுத்து உனது மனைவியின் சேலை முந்தானையில் போட்டுவிட்டு எவ்விதக் கவலையும் படாமல் சௌகரியமாகப் போய் வா" என்றார்..அவரும் அங்ஙனமே செய்தார்...
ஒரு வருடத்திற்குள் அவருக்கு ஒரு மகன் பிறந்தான்...எட்டு மாதக் குழந்தையுடன் அவ்விருவரும் சீரடிக்கு வந்தனர்..அதை பாபாவின் காலடிகளில் வைத்து, "ஓ...! சாயிநாத், தங்கள் உதவிக்கு என்ன கைம்மாறு செய்வது என்று நாங்கள் அறியாமல் இருக்கின்றோம்.. எனவே தங்கள்முன் வீழ்ந்து பணிகின்றோம்.. எளிய ஆதரவற்ற எங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறோம்..இனி தங்களின் புனிதப் பாதங்களே எங்களது ஒரே அடைக்கலமாக இருக்கட்டும்...பற்பல எண்ணங்கள் கனவிலும், நினைவிலும் எங்களை தொல்லைப் படுத்துகின்றன... எங்கள் மனதை அப்பாதிப்பிலிருந்து திரும்பச்செய்து, எங்களை தங்கள் வழிபாட்டுக்குத் திருப்பி ஆசீர்வதிக்க வேண்டுகிறோம்" எனப் பிரார்த்தித்தனர்.. புத்திரனுக்கு 'முரளீதர்' என்று பெயரிடப்பட்டது.. பின்னர் பாஸ்கர், தினகர் என்ற இருவரும் பிறந்தனர்..இங்ஙனமாக சபட்ணேகர் தம்பதிகள் பாபாவின் மொழிகள் பொய்ப்பதில்லை என்றும், நிறைவேறாமல் போவதில்லை என்றும், முற்றிலும் உண்மையாகவே நிகழ்கின்றன என்றும் உணர்ந்தனர்...
ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🏼🙏🏼
ஸ்ரீ சாயீயைப் பணிக... அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்....🙏🏼🙏