சனி, அக்டோபர் 28, 2023

கடவுளிடம் தீர்வுகளை எதிர்பார்க்கக்கூடாது என்றால், வேறு எதற்காகத்தான் பிரார்த்தனைகள்...?

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🙏🙏

கடவுளிடம் தீர்வுகளை எதிர்பார்க்கக் கூடாது என்றால், வேறு எதற்காகத் தான் பிரார்த்தனைகள்...? பிரார்த்தனைகள் என்பது  உங்களுக்கு  இப்படித்தான்..??

சாதகமாக ஏதாவது நடந்துவிட்டால், அது கடவுள் அருளால் நடந்தது என்பார்கள். நடக்கவில்லை என்றால், அது கடவுளின் சித்தம்.. அதைக் கேள்வி கேட்கக்கூடாது என்பார்கள் பிரார்த்தனை...என்பது மண்டியிட்டு, சில குறிப்பிட்ட சுலோகங்களைச் சொல்வதோ, துதிப்பாடல்களைப் பாடி நம் ஆசையை நிறைவேற்றும்படி கடவுளிடம் மன்றாடுவதோ அல்ல... அது கடவுளுக்காக அல்ல....

உங்களுக்காக..! உங்கள் வேதனைகளைக் கடவுளிடம் கொண்டு செல்லாதீர்கள்..துக்கத்தில் இருப்பவர்களால் கடவுளைத் தரிசிக்க முடியாது. முதலில், ஆனந்தமாக வாழ்வது எப்படி என்று உணர்ந்து கொள்ளுங்கள். அதன்பின் கடவுளைப் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம்.... எதற்காகப் பிரார்த்தனை செய்கிறீர்கள்..? கடவுளை அறிந்து கொள்வதற்காகவா..? அதல்ல உங்கள் நோக்கம். உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் ஒரு முட்டாள் இயந்திரமாகக் கடவுளை நினைத்திருக்கிறீர்கள்..பிரார்த்தனை என்பது வெறும் சடங்காக நின்றுவிடாமல், ஒருவித உள்ளுணர்வாக மலர வேண்டும். ஆலயத்தில் பணிவாக சேவகன் போல் நடந்து கொள்கிறீர்கள். ஆனால், உங்களுக்குக் கீழே வேலை செய்பவர்களிடம் நீங்களே கடவுள் போல் இறுமாப்பாக நடந்து கொள்கிறீர்கள். இதுவா பிரார்த்தனை உணர்வு..?

முதியவர் ஒருவர் பிரார்த்தனை நேரத்தில் கோயிலுக்கு  வருவார். அவரைத் தொடர்ந்து கவனித்து வந்த அர்ச்சகர், ஒருநாள் அவரைக் கூப்பிட்டனுப்பினார்..."பிரார்த்தனை நேரத்தில், நீங்கள் வாய் திறந்து முணுமுணுத்துக்கூடப் பார்த்ததில்லை. பின் எதற்காக வருகிறீர்கள்...?""நான் கடவுளிடம் பேச வரவில்லை. அவர் சொல்வதைக் கவனிக்க வருகிறேன்" என்றார் முதியவர்..."ஓ கடவுள் உங்கள் காதில் மட்டும் பேசுகிறாராக்கும்! அப்படி என்னதான் சொல்கிறார்..?""அவரும் என்னைப் போல்தான். பேச வருவதில்லை. கவனிக்கத்தான் வருகிறார்..!"

வாழ்க்கை அப்படித்தான்...வேறு லயத்தில் இயங்கிக் கொண்டு இருக்கிறது. அமைதியாக, உன்னிப்பாகக் கவனித்தால் போதும்... நீங்கள் விரும்பியதெல்லாம் எங்கே இருக்கிறது என்பது புலப்படும். கடவுளிடம் நீங்கள் இரைச்சலாகப் பேசிக்கொண்டு இருப்பதாலேயே எதையும் கவனிக்க முடியாமல் போகிறது...கவனிக்கத் தவறிவிட்டு, பிரார்த்தனைகள் மூலம் கடவுளைக் கூப்பிட்டால், அவர் தன் சுண்டுவிரலைக்கூட உங்களுக்காக அசைக்க மாட்டார். அது புரியாமல் நீங்களும் இது சாபம், அது அருள் என்று பேசிக் கொண்டு இருப்பீர்கள். உங்களுக்கு நான் சொல்வதெல்லாம் இதுதான்....

கடவுள் சந்நிதியில் சொல்வது மட்டும் தான் பிரார்த்தனை என்பது அல்ல....இந்த உலகமே, இந்தப் பிரபஞ்சமே இறைவனின் ஆலயம். எனவே, நடப்பதை, உணவு உட்கொள்ளுவதை, அடுத்தவரிடம் அன்பு காட்டுவதை என ஒவ்வொரு செயலையுமே பிரார்த்தனை போல் செய்யுங்கள்...உலகில் இருப்பதையெல்லாம் ரசிக்கிறேன், மதிக்கிறேன். வாழ்க்கையையே பிரார்த்தனை போல் நடத்திச் செல்வதுதான் என் நோக்கம். அதற்கொரு பயிற்சியாக கோயிலிலும் பிரார்த்தனைகள் சொல்கிறேன்' என்றால், அதில் அர்த்தம் இருக்கிறது...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏

தன்னை அறியாமல் யாரும் இறைவனின் பாதத்தை சரணடைய முடியாது ..முழுமையான தன்னையறிதலே இறையின் உச்சம்..!?

 


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🙏🙏

தன்னை அறியாமல் யாரும் இறைவனின் பாதத்தை சரணடைய முடியாது ..முழுமையான தன்னையறிதலே இறையின் உச்சம்..!?

‘நான்’ என்ற அகந்தை எல்லாச் செயல்களையும் நாமே செய்கிறோம் என்ற தவறான கருத்தை உண்டாக்குகிறது. உண்மையில் நாம் ஒரு கருவியே..கர்த்தா அல்ல.. இதை உணர்ந்துவிட்டால் , அகந்தை நம்மிடமிருந்து வெளியேறி விடும்....எவ்வளவுக்கு எவ்வளவு பணிந்து நடக்கிறோமொ அவ்வளவுக்கவ்வளவு நன்மையுண்டு....பகவானுக்கு ருசி முக்கியமில்லை... அடியார்களது பக்திதான் முக்கியம்....நம் மனம் யாரிடம் வசப்படுகிறதோ அவரே சரியான குரு...பரம்பொருளைத தொடர்ந்து விடாமல் பற்றி நிற்பதே சமாதி எனப்படும்...புதிய ஆசைகளை வளர்க்காதீர்கள். புதிய வாசனைகளைத் தேடிக் கொள்ளாதீர்கள். அதுவே நீங்கள் செய்திருக்கக்கூடிய தவற்றிலிருந்து மீளுவதற்க்கு உரிய பிராயச்சித்தம் ஆகும்.

பிறப்பும் இறப்பும் வாழ்க்கையின் எல்லைகள். இந்த இரண்டையும் கடந்து நிற்பதே ஆன்மா அதை உணர்ந்தால் இந்த இரண்டுமே பொருள்ளற்றதாக ஆகிவிடும். தன்னை உணர்ந்த மனிதன் இந்த நிலைகளைக் கடந்துவிடுகிறான. இறப்பு அவனைப் பாதிப்பதில்லை...ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் தேடிக்கொள்ளும் நற்பலன்கள் அதிகமாக இருந்தால், அதை ஒட்டி அவனக்கு மரணத்துக்குப் பின் இனிய அனுபவம் ஏற்படுகிறது. கெட்ட பலன்களே அதிகமாக இருந்தால் துன்பம் நிறைந்த அனுபவம் உண்டாகிறது.

நூல்களில் மூன்றுவித தீஷைகள் கூறப்பட்டுள்ளன. ‘ஹஸ்த தீக்ஷை’ என்பது சீடனின் சிரசைத் தொட்டு அருள் புரிதல், ‘சக்ஷதீக்ஷை’ என்பது அருட்பார்வையால் தீக்ஷை அளிப்பது. ‘மானசீக தீக்ஷை என்பது மனதினால் அருள் புரிதல், இவற்றில் மானசீக தீக்ஷையே அனைத்திலும் சிறந்தது”

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏

வெள்ளி, அக்டோபர் 27, 2023

உன் கேள்வியில் என் பதில்...!



ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🙏

 உன் கேள்வியில் என் பதில்...!

பார்த்தால் தான் தெரியும்..பால் வெள்ளையாக இருக்கும், பசுவின் மடியில் இருந்து கறந்தால் வருவது, நீர்மம் போல் இருக்கும் என்று எவ்வளவு சொன்னாலும் பாலின் சுவையை உணரவே முடியாது. இதுபோல எவ்வளவுதான் மெய்யறிவுநூல்களை ஆழ ஆழ நுணுகி நுணுகிப்படித்தாலும், "நான் யார்" என்றறியும் அறிவு பெறுவது அரிது...

திருநாவுக்கரசர் பெருமான் பாடிய புகழ்பெற்ற ஒரு...பாட்டின் கடைசி இருவரிகளில் பேருண்மை உள்ளது...ஆனாலும் பாலின் சுவையை அறியாதார் நூலறிவால் அறிய முற்படுவது போன்றே இருக்கும். ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது என்பார்களே அதுபோலவே.....

ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே

அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே

ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே

உருகு வித்தால் ஆரொருவர் உருகா தாரே

பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே

பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே

காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே

காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே

இதே போல காரைக்கால் அம்மையார் அற்புதத் திருவந்தாதி என்னும் பாட்டில்

அறிவானும் தானே அறிவிப்பான் தானே

அறிவா(ய்) அறிகின்றான் தானே - அறிகின்ற

மெய்ப்பொருளும் தானே; விரிசுடர்பார் ஆகாசம்

அப்பொருளும் தானே அவன்⁠...

இதில் 'நான் யார்' என்பதற்கான 'விளக்கம்' நேர்பட உள்ளது...ஆனாலும் பாலின் சுவை போன்றதே.

ஓம் ஶ்ரீ சாயீராம்....🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏

கடவுளிடம் பிரார்த்தனை எப்படி வைக்க வேண்டும்...?

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🙏

கடவுளிடம் பிரார்த்தனை எப்படி வைக்க வேண்டும்...?

என்னுடன் பயணிக்கு ஒவ்வொரு ஆத்மாவையும்..என் சொற்க்களை உணர்வு பூர்வமாக உள்வாங்கும் ஒவ்வொரு ஆத்மாவையும் நான் என்றென்றும் என் குழந்தைகளாகவே நினைக்கிறேன்.அதனால் தான் உங்களுக்கு இறைவனையும் அவன் சக்தியையும் எப்படி புரியவைப்பது என்று சிந்தித்து  சிறு கதையாகவோ அல்லது கீதையாகவோ சொல்கிறேன்.உங்கள் உள்ளம் கோயிலாக மாற வேண்டும் அதுவே என் பிரார்த்தனை.....ஒரு நாள் ஒரு சின்ன பையன் தன் அம்மாவுடன் கடைக்கு போனான்..அந்தக்  கடைக்காரர் பையன் அழகா இருக்கானே என்று சொல்லிவிட்டு பாட்டிலில் இருந்து சாக்லேட்டை காட்டி எவ்வளவு வேணுமோ எடுத்துக்கோப்பா என்றார்..ஆனால் அந்த பையன் சாக்லேட்டை எடுக்கவே இல்லை...கடைக்காரர் எவ்வளவோ வற்புறுத்தியும் அவன் எடுக்கவில்லை..அதைப் பார்த்த அவன் அம்மா சாக்லேட் பாட்டிலில் இருந்து எடுத்துக்கோ என்றார்...அப்பவும் அவன் சாக்லெட்டை எடுக்கவே இல்லை...பிறகு அந்த கடைக்காரரே சாக்லேட்டை அள்ளி அவன் கைகளில் வைத்தார்...அவன் ஆசையுடன் இரண்டு கைகளாலும் வாங்கிகொண்டான்....

வீட்டிற்கு போனவுடன் அவன் அம்மா ஏன் சாக்லேட்டை பாட்டிலில் இருந்து நீயே எடுத்து கொள்ளவில்லை என்று கேட்டார்...அம்மா என் கையை பாருங்கள் எவ்வளவு சின்னதா இருக்குது...நானே பாட்டிலில் இருந்து எடுத்து இருந்தால் எனக்கு கொஞ்சமாக தான் கிடைத்திருக்கும்...இப்ப பாருங்க அவர் எடுத்து கொடுத்ததால் எவ்வளவு அதிகமா சாக்லேட் கிடைச்சிருக்கு பாருங்கள் என்றான்.

நீதி : கடவுளிடம் பிரார்த்தனை செய்யும்போது எனக்கு கார் வேண்டும், வீடு வேண்டும், பணம் வேண்டும், நகை வேண்டும் என பிரார்த்தனை செய்யாதீர்கள்.....என் வாழ்க்கையையே உன் கையில் ஒப்படைத்து விட்டேன்....என் வாழ்க்கையின் சாரதியாக இருந்து என்னை வழிநடத்தி செல் என்று இறையருளிடம் உங்கள் வாழ்க்கையை ஒப்படைத்து விடுங்கள்....!நீங்கள் கேட்க நினைத்த வசதிகள் மட்டுமல்ல, நீங்கள் கேட்காத வசதிகள் உட்பட சகல சம்பத்துகளையும் அந்த இறையருள் உங்களுக்கு அளிக்கும்...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏🙏

மனமே மருந்து...!?”


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்.....🙏🙏

 மனமே மருந்து...!?

முயற்சி செய்து மனத்தை எண்ணங்களிலிருந்து விடுவிக்க வேண்டும். அந்த நிலையில் தொடர்ந்து நாம் இருப்போமேயானால் அதுவே நமது சாதனைக்ளுக்கு வழிவகுக்கும்..நம்மால் எதிலும் தனித்து செய்ல்பட முடியவில்லை என்றால் அதற்குக் காரணம் நமது வலிமை அற்ற மனம் தான்...தவறான செயல்களைச் செய்துவிட்டு, அகந்தையின் காரணமாக அதை மறைத்தல் கூடாது. எனவே குற்றங்களைச் செய்யும் பழக்கத்தை விட்டுவிட்டு நல்ல ஒழுக்கத்துடன் வாழ பழகுதலே சிறப்பு...அறிவின் சொரூபமே சச்சிதானந்தம்...மனம் அடங்கிய ஜகம் மறையும்...மனம் என்பதோ ஆத்ம சொரூபத்திலுள்ள ஓர் அதிசய சக்தி அது சகல நினைவுகளையும் தோற்றுவிக்கிறது. நினைவுகளையெல்லாம் நீக்கிப் பார்க்கின்ற போது தனியாய் மனம் என்று ஒரு பொருள் இல்லை. ஆகையினால் நினைவே மனிதன் சொரூபம். நினைவுகளைத் தவிர்த்து ஜகம் என்பது அன்னியமாயில்லை...மனதின் சொரூபத்தை விசாரித்துக் கொண்டே போனால் மனம் தானாய் முடியும்...நான், நான் என்று எண்ணிக் கொண்டிருந்தாலும் கூட அவ்விடத்தில் கொண்டு போய்விட்டுவிடும். மனதில் தோன்றும் நினைவுகள் எல்லாவற்றிற்கும் நான் என்னும் நினைவே முதல் நினைவு. இது எழுந்த பிறகே ஏனைய மற்ற நினைவுகள் எழுகின்றன. தன்மை தோன்றிய பிறகே, முன்னிலை படர்க்கைகளை தோன்றிகின்றன. தன்மையின்றி மன்னிலைப் படர்க்கைகள் இரா!

மனம் எப்படி அடங்கும் என்றால் ‘நான்’ யார் என்னும் விசாரனையினாலேயே, நான் யார் என்னும் நினைவு மற்ற நினைவுகளை எல்லாம் ஒழித்து முடிவில் தானும் அழியும். பிறகு சொரூப தரிசனம் உண்டாகும்....

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏

சிவனும்,.கார்த்திகேயன்(முருகன் ) அவதாரமும்..குருதத்துவமே என்று உணர்க...!?



ஓம்  ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்... 🙏🙏🙏

சிவனும்,.கார்த்திகேயன்(முருகன் ) அவதாரமும்..குருதத்துவமே என்று உணர்க...!?

சிவபெருமான் ஆட்சி செய்யும் ஐம்பெரும் பூதங்கள் (நிலம், நீர், காற்று, நெருப்பு மற்றும் வெளி) சக்தியுடன் (சுத்த பிரக்ஞை) ஒன்றான போது கார்த்திகேயர் பிறந்தார்..சிவபெருமானை பஞ்சானனா என்கிறோம் – ஐந்து தலைகள் கொண்ட கடவுள். இந்த ஐந்து தலைகள் இயற்கையின் ஐந்து கூறுகளை குறிக்கிறது. இந்த ஐந்து கூறுகளும் ஆறாவதுடன், அதாவது சுத்த பிரக்ஞையுடன் இணையும்போது ஷடானனன் (ஆறு தலை கொண்டவர்) பிறந்தார். இவர்தான் கார்த்திகேயர் எனப்படுகிறார்.....

குண்டலினி சக்தியின் கூறுகளின் மூலமும் இதைப் புரிந்து கொள்ளலாம். (குண்டலினி -ஆதியான, சலனமில்லாத,..ஆனால் பெருஞ்சக்தி கொண்டதும், சுருண்ட வடிவில் முதுகுத் தண்டின் அடிப்பகுதியில் இருப்பதும்). நம்மிடம் ஏழு சக்கரங்கள் (சக்தி மையங்கள்) இருக்கிறது. ஆறு சக்கரங்களில் சக்தி ஊற்றெடுக்கும் போது அது ஆறாவது சக்கரமான‘ஆக்ஞை’(நம் இரு புருவங்களுக்கு மத்தியில் உள்ளது) சக்கரத்தில் நிலை பெறுகிறது, அதுவே திருக்கார்த்திகேயர் ஆக மலர்கிறது....

கார்த்திகேயர் குருதத்துவத்தின் அடையாளம். இந்த ஆக்ஞை சக்கரம்தான் குரு தத்துவத்தின் இடம். இங்குதான் குரு தத்துவம் மலர்ந்து தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. குரு தத்துவம் தான் கார்த்திகேய தத்துவம்....சிவ பெருமான் என்பவர் தன்னை வெளிபடுத்தாத இறை..கார்த்திகேயர் என்பவர் அதன் வெளிப்பாடு. எனவே குண்டலினி சக்தியின் அடையாளமாக நீங்கள் திருக்கார்த்திகேயரை நினைக்கலாம்....

இச்சா சக்தி (முனைப்பு சக்தி) மற்றும் ஞான சக்தி (சுயம் பற்றிய ஞானம்) என இவ்விரண்டும் குண்டலினி சக்தியுடன் கூடுகின்றன. உண்மையில், இச்சா சக்தியும், கிரியா சக்தியும் (ஆக்க சக்தி) அதிக அளவில், ஞான சக்தியின் ஒரு வடிவங்களே....இச்சா சக்தியும் கிரியா சக்தியும் - இரண்டுமே குண்டலினி சக்தியின் (கார்த்திகேயா) பாகங்கள். அவையே வள்ளி மற்றும் தெய்வயானையாக, கார்த்திகேயரின் இரு துணைவியராக வெளிப்பட்டு இருக்கிறது.  திருக்கார்த்திகேயர் ஞானத்தின் உருவம். எனவே கார்த்திகேய தத்துவம்தான் குரு தத்துவம்...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏

வியாழன், அக்டோபர் 26, 2023

குரு உபதேசம் ...!!

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🙏🙏

குரு உபதேசம் ...!!

மாலை சூரியன் சாயும் நேரம். மங்களகரமான சூழல். மக்கள் கூடி நிற்க குரு அவர்களுக்கு அருளாசி வழங்கி கொண்டிருந்தார். ஒவ்வொருவரும் தங்கள் குறைகளை கூறி அதற்கான தீர்வு கேட்டுகொண்டிருந்தார்கள்.ஒரு சாதரண குடியானவன் அங்கு வந்தான்.."இறையருள் பெற்ற குருவே ...! எனக்கு ஒரு வழி கூறுங்கள். எனது வாழ்க்கையில் எப்பொழுதும் குறைகளே நிறைந்திருக்கிறது...துன்பத்திற்கு அளவே இல்லை...நான் இவ்வளவு சிரமப்பட என்ன காரணம்..?...."என கேட்டான்....அவனை தீர்க்கமாக பார்த்த குரு, ஒரு பாத்திரத்தில் தண்ணீரை தனது சிஷ்யர்களிடத்தில் கொண்டு வர சொன்னார்...குடியானவன் முன்பு பாத்திரத்தை வைத்து ,"மகனே ....கடவுள் உனக்கு அனைத்து ஆனந்தத்தையும் வழங்கட்டும். உனது கைகளை இந்த பாத்திரத்தில் நன்றாக கழுவு ..." என்றார்.கைகளை கழுவினான் குடியானவன். குரு குடியானவனை பார்த்து கேட்டார்," மகனே , இப்பொழுது அந்த நீர் அசுத்தமாகி விட்டது. முன்பு இருந்ததை போல சுத்தமான நீரை எனக்கு தா""குருவே .....எனது கைகளில் உள்ள அழுக்கால் அந்த நீர் அசுத்தமாகி விட்டது. மீண்டும் எப்படி அந்த நீரையே சுத்தமாக தருவது..? " என்றான் குடியானவன்.

"எனது மகனே அது போன்றது தான் வாழ்க்கையும். கடவுள் எப்பொழுதும் சுத்தமான நிலையிலேயே வாழ்க்கையை நமக்கு தருகிறார்... நமது கைகளைக் கொண்டே அதை அசுத்தமாக்குகிறோம்...இனி வரும் காலங்களில் எந்த செயல் செய்தாலும் முதலில் சிந்தித்து செயல்படு...உனது செயல்கள் அனைத்தும் சுத்தமாகவே இருக்கும். ஆனந்தமான வாழ்கையை ஆனந்தமாக வாழு..."குடியானவன் மட்டுமல்ல அங்கு கூடி இருந்தவர்களும் உள்நிலையில் சுத்தமானார்கள்."வாழ்கையில் எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு துன்பம்...?"என மன வேதனைப்படுபவர்கள் பலர் உண்டு.

🔥நமது கர்மாவை பற்றி எபொழுதும் சங்கடப்படுவதை விட. கடவுள் அளித்த கர்மாவை சிறப்பாக செயல்படுத்த முயல வேண்டும்...பரார்த்த கர்மா நமது கைகளில் இல்லை. ஆனால் சஞ்சிதம் எனும் கர்மா நமது கைகளுக்குள் உண்டு, சஞ்சிதத்தை சஞ்சலம் இன்றி அமைத்துக் கொண்டால் ஆனந்தமயமான வாழ்க்கை நமக்கு காத்திருக்கும்..🔥

ஓம் நமசிவாய..🙏

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏

புதன், அக்டோபர் 25, 2023

குரு உபதேசம்...!

 

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்.....🙏🙏

குரு உபதேசம்...!🙏🙏

குரு மரண படுக்கையில் இருந்தார்...?!

பொது மக்களும் சிஷ்யர்களும் குருவின் படுக்கையை சுற்றி நின்று இருந்தார்கள்...... தலைமை சீடன் குருவை நெருங்கி கலங்கிய கண்களுடன் கேட்டான்,"...!?குருவே உங்கள் திருவடிக்கு எனது வணக்கம்... உங்களை சிறிது காலத்திற்கு பிறகு ஸ்துல உடலில் பார்க்க முடியாது... இதை நினைக்கும் பொழுது ஏற்ப்படும் வருத்தத்தை அளவிட முடியாது... தயவு செய்து எனக்கு கடைசியாக ஒரு உபதேசம் செய்யுங்கள். இனி வரும் காலங்களில் உங்கள் உபதேசம் எனக்கு குருவாக இருக்கட்டும்...

உடலில் இருந்து உயிர் பிரியும் நிலையிலும் அமைதியும் ஆனந்தமும் குடி கொண்ட முகத்துடன் சிஷ்யனை பார்த்தார் குரு...பின்பு தனது வாயை அகலமாக திறந்தார்... பற்கள் இல்லாத வாயை காட்டினார். தனது நாக்கையும் காண்பித்தார்...சிஷ்யனுக்கோ ஒன்றும் புரியவில்லை..!?? கேள்விக்குறியை முகத்தில் தாங்கி நிற்கும் சிஷ்யனை பார்த்து கூறினார்,..!

"எனது பற்கள் கடினமானதாக இருந்தன , அவை எனது இறுதி காலம் வரை என்னுடன் இல்லை. மென்மையான எனது நாக்கு என்னுடன் இப்பொழுதும் இருக்கிறது...!எனதருமை சிஷ்யா..! எப்பொழுதும் மென்மையாக இரு. இதுவே எனது இறுதி உபதேசம் .."!சிஷ்ய பரம்பரைக்கு உபதேசித்த குருவின் பிராணன் "மென்மையாக" பிரிந்தது...!

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏🙏

நீ பார்க்கும் பார்வையில்...!


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🙏

நீங்கள் பார்க்கும் பார்வையில்...!

இருட்டில் திசைகளை அறியமுடியாத பிரமை சூரியன் உதித்தவுடன் நீங்குவது போல, இல்லாத ஒன்றான ‘நான்’ என்ற அகங்காரத்தையும் ‘எனது’ என்ற மமகாரத்தையும், உள்ள ஒன்றேயான பிரும்ம சொரூப அனுபவத்தில் தனக்குத் தானே உதிக்கும்போது  ஞானம் அழித்துவிடும்… வண்டினால் கொட்டப்பட்ட புழு வண்டாகவே ஆவதுபோல உனது உண்மை நிலையில் நீ இருப்பாய்… சாதாரணமாக ஒருவன் காண்பது என்றால் அங்கு காண்பவன்-காணப்படுவது-காட்சி என்ற முப்புடிகள் வருகின்றன. அது ஒருவனது ஊனக் கண்ணால் காணும் காட்சி. ஒரு யோகியானவன் எல்லாம் ஒன்றே என்று காண்பது அவனது ஞானக்கண் காட்சி. ஒரு யோகிக்கு அந்த சாதாரண ஊனக்கண் காட்சி கிடையாதா என்று கேட்டால் உண்டு என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அப்படி அவன் பார்க்கும்போது பார்க்கப்படும் பொருளும் ஆன்மாவாகவே அவனுக்குத் தெரியும்.…!

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏🙏

ஞாயிறு, அக்டோபர் 22, 2023

பல குருமார்கள் பலவிதமான கர்மங்களை சொல்லியிருக்கிறார்கள்...!


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🙏

பல குருமார்கள் பலவிதமான கர்மங்களை சொல்லியிருக்கிறார்கள்...முறைப்படி செய்தால் ஒவ்வொன்றுக்கும் அற்புதமான பலன்கள் கிடைக்கும் என்பதும் உண்மை....அஷ்டமா சித்தி இந்த வகையைச் சேர்ந்தவைதான். அதாவது, செய்யப்படும் கர்மத்திற்கு அதன் விளைவு என்று ஒன்றிருக்கிறது,..அவைகளை அனுபவிப்பவன் என்றும் ஒருவன் இருக்கிறான்.....

கர்மங்களைத் தொடர்ந்து செய்துக் கொண்டு அதற்கான பலன்களையும் தொடர்ந்து அனுபவிப்பவன் என்ற நிலைதான் அவனுக்கு மிஞ்சுமே தவிர, அதனால் அவனுடைய முக்திக்கு வேண்டிய அறிவு கிடைக்காது... கர்மங்கள் செய்து கொண்டிருப்பதால் அவைகளைச் செய்பவனுக்கு, தான் செய்கிறோம் என்ற கர்வம் தலைக்கேறவும் வாய்ப்பு இருக்கிறது..அது தூலமாகவும் இருக்கலாம், நுண்ணியதாகவும் மாறலாம்....ஸ்தூலமாக இருக்கும் போது அவனது அகந்தை வெளிப்படையாக மற்றவர்களை விரட்டுவது, உதாசீனமாகப் பார்ப்பது என்று இவ்வாறாகத் தெரியும். நுண்ணியதாக மாறும்போது, இவ்வளவு செய்திருக்கிறேனே அதற்கு இதுதானா பலன் என்று புலம்புவதாகவோ, இவ்வளவு என்னிடம் வாங்கிக் கொண்டார்களே அதற்கு அவர்கள் செய்யும் கைம்மாறு இதுதானா என்று அரற்றுவதாகவோ ஆகிவிடும். அதனால் கர்மம் செய்பவன் எந்த மனநிலையில் செய்யவேண்டும் என்ற விதி இருக்கிறது. அதன்படி செய்பவனுக்கே ஞானம் பிறக்க வாய்ப்பு இருக்கிறது...

அறியாமைக்குப் பகை அன்று அதனால் கன்மம்

அறியாமை தன்னை அகற்றாது  

அறிவே அழிக்கும் அறியாமை ஒளி அந்தகாரக் கும்பு

ஒழிக்குமாறு என்றே உணர்

அஞ்ஞானம் போக வேண்டுமென்று செய்யப்படும் கர்மங்கள் எல்லாம் அஞ்ஞானத்திற்கு எதிராகச் செயல்படாததால், அவைகள் அஞ்ஞானத்தை நீக்குவதில்லை. ஞானம் ஒன்றே அஞ்ஞானத்திற்கு எதிராகச் செயல்படக் கூடியதால் அது ஒன்றே ஞானம் எனக்கு இல்லை என்ற அறியாமையைப் போக்கும். காரிருளை நீக்குவதற்கு எப்படி ஒளி தேவைப்படுகிறதோ அப்படியே அஞ்ஞானத்தை நீக்குவதற்கு ஞானம் தேவைப்படுகிறது....

கும்மிருட்டைப் போக்குவதற்கு ஒளி தேவைப்படுவது போல தனக்கு ஞானம் இல்லை என்ற அறியாமையைப் போக்குவதற்கு வேண்டியதே ஆன்ம அறிவு...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏🙏

கயிற்றை ஒருவன் பாம்பாக எண்ணுவது போல, எங்கும் பரவியுள்ள ஆன்ம வடிவான தன்னை தனித்தே விடப்பட்ட ஜீவன் என எண்ணி பயப்படுகிறான்...!?

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🙏

கயிற்றை ஒருவன் பாம்பாக எண்ணுவது போல, எங்கும் பரவியுள்ள ஆன்ம வடிவான தன்னை தனித்தே விடப்பட்ட ஜீவன் என எண்ணி பயப்படுகிறான்... எப்போது அவன் தான் ஜீவனல்ல, பரமாத்ம சொரூபமே என்று அறிந்து தெளிகிறானோ, அப்போதே அவன் பயம் நீங்கியவனாக ஆகிறான்…. சட்டி, பானை, குடம் போன்ற ஜடப் பொருட்கள் எங்கிருக்கின்றன என்பதைப் பார்ப்பதற்கு விளக்கு ஒன்று தேவையாவது போல, ஏக வடிவாய் இருக்கும் ஆத்மா தான் மனம், புத்தி, இந்திரியங்கள் முதலானவற்றைப் பிரகாசிக்கச் செய்யும். சுய பிரகாசமற்ற ஜடமாகிய அவைகளினால் தேஜோமயமான ஆத்மா ஒருபோதும் பிரகாசிக்கப்படுவதில்லை என்பதை உணர்ந்துக் கொள்…“எல்லா ஒளிகளிலும் அவற்றிற்கு ஒளியாவது நீ” என குரு சொல்ல, “நான் அதுவே” என்கிறான் சீடன்....அந்த “நான்” என்பது “எப்போதும் அறிவோடு கூடிய தன்மயமாக இருக்கும்” ஆன்மாவிலிருந்து பெறப்பட்ட உணர்வு என்பதால், அந்த சுயம் பிரகாசமான பேரறிவை அறிவதற்கு வேறு எந்த அறிவின் துணையும் தேவை இல்லை. வேறு எதுவும் அந்தப் பேரறிவுக்கு ஒளி தருவதாகவும் இல்லை என்பதே இங்கு விளக்கப்பட்டுள்ளது. அதனாலேயே எவரும் “நான் இருக்கிறேனா...?” என்று கேட்பதில்லை. தான் இருக்கிறோம் என்பதை அடிப்படையாகக் கொண்டே அனைவரும் மற்ற விஷயங்களை அறிகின்றனர், பேசுகின்றனர்…

ஓம் நமசிவாய..🙏

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான படம்...🙏🙏🙏