திங்கள், மே 31, 2021

ஶ்ரீ சீரடிபாபாவின் சாய்சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாயத்தின் வெளியீடு..அத்தியாயம் இருபத்தொன்று (21)

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏻🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள  இன்றைய  அத்தியாய  வெளியீடு....🙏🏼🙏🏻🙏🏻

🙏 அத்தியாயம் ::-இருபத்தொன்று (21) 

 🔥முதலில் புனித வேத நூலான ஶ்ரீசாய்  சத்சரித்திரம்  பாராயணம் செய்வதன்  முக்கியத்துவமும், பெறப்போகும்  நன்மைகள்  என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் புனித வேத நூல் என்பது சாய் சத்சரித்திரம் என்பதாகும்....சீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத  எழுத்திலும் வியாப்பித்து  படர்ந்து இருக்கின்றது...

சத்சரிதத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல், மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது....ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து சாய் சத்சரித்திரத்தில்  இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்....

இவ்வாறாக நாம் அனைவரும் சாய்  சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும்  அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்...ஆகவே  ஶ்ரீசாய் சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்...நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக...🔥

🔥குறிப்பு..சாய் சத்சரித்திர வேதப்  பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥

தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்.. மேலும் அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரியத் தன்மையை அடையலாம்...இவ்வேத பாராயணத்தின் மூலமாக ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரியத் தன்மையை  அடையும் நிலையைப்  பெறலாம்.....

மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம்,நேர்மை, மனிதநேயம் போன்ற  இறைப்  பண்புகளைப்  பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுப் பெறவும்  இந்த சாய் சத்சரித்திர  வேதப் பாராயணம் துணைப்புரிகின்றது....

மேலும் இப்பாராயணத்தின் மூலம்   மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில்  வெற்றி வாகை சூடலாம்.... அவரவர்கள்  விரும்பி வேண்டியது கிடைக்கப் பெறும்...சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்....மேலும் அனைத்து விதமான  கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி  பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும்  ஒருசேரப்பெறலாம்.... 🔥

🙏 அத்தியாயம் ::-இருபத்தொன்று (21)🙏

🙏🙏முன்னுரை..🙏🙏

சீரடி பகவானுடைய ஆசியை முழுமையாகப் பெற்றவரும் , ஶ்ரீசாய் சத்சரித்திரத்தின் ஆசிரியருமான ஹேமாட்பந்த் அவர்கள், தன்னுடைய சத்குருவின்  ஆசியால் பெற்ற  நன்மைகளைப் பற்றிக் கூறிய அனுபவ விளக்கவுரை..

பகவானின் பக்தர்களான திரு. விநாயக் ஹரிச்சந்திர டாகூர்,  புனேவைச் சேர்ந்த அனந்தராவ் பாடண்கர், பண்டரீபுரத்து வக்கீல் ஆகியோரின்  கதைகளைப் பற்றி சாய் சத்சரித்திர நூலாசிரியர்  ஹேமாட்பந்தின் விளக்கவுரைகள்....

குறிப்பு....மேற்க்கண்ட பக்தர்களின்  கதைகள் அனைத்தும்  நிறைந்த சுவையானவை... ஆழமானவை.. அவைகளை மிகுந்த கவனத்துடன் கற்றுக் கிரகித்துக் கொண்டால் பக்தர்களை  அது ஆன்மீகப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்க்கண்ட தலைப்புக்களின் விளக்கவுரைகளை ஒவ்வொன்றாக கீழே காண்போம்....

🔥முதலில்  சீரடி பகவானுடைய ஆசியை முழுமையாகப் பெற்றவரும் , ஶ்ரீசாய் சத்சரித்திரத்தின் ஆசிரியருமான ஹேமாட்பந்த் அவர்கள்,தன்னுடைய சத்குருவின்  ஆசியால் பெற்ற நன்மைகளைப் பற்றிக் கூறிய  அனுபவ விளக்கவுரையை இங்கே காண்போம்..🔥

முற்பிறவிகளில் சேகரித்த நல்வினைகள் என்ற ரூபத்தில் உள்ள  நல் அதிஷ்டமே,  மகான்களின்  கூட்டுறவை நாம் விரைவில்  பெறுவதற்கு அடிநாதமா வழியாக  இருக்கின்றது....இந்த சத்குரு  என்கின்ற பிணைப்பினால்  மட்டுமே, தனிமனித  உயிர்கள்  எளிதாக கடைத்தேற்றம் அடைய முடியும்  என்பது  பொதுவான நியதியாகும்.  இந்நியதியின் விளக்கமாக ஹேமாட்பந்த் தமது சொந்த நிகழ்ச்சியை எடுத்துக் காண்பிக்கின்றார்.  பம்பாயின் புறநகர்ப்பகுதியான பாந்த்ராவில் பல ஆண்டுகளாக அவர் ரெஸிடெண்ட் மாஜிஸ்ட்ரேட்டாக இருந்தார்....  

பீர் மௌலானா என்னும் பெயருடைய புகழ்பெற்ற முகம்மதிய முனிவர் ஒருவர் அங்கு வசித்து வந்தார்...  பல இந்துக்கள், பார்சியர்கள், மற்றும் பல மதத்தினரும் அவரிடம் சென்று தரிசனம் பெறுவது வழக்கம்... இனூஸ் என்ற பெயர்கொண்ட  முஜாவர்(பூசாரி) என்பவர்  இரவும், பகலும் பலமுறை முகம்மதிய முனிவரைச்  சென்று தரிசிக்கும்படி ஹேமாட்பந்தை வற்புறுத்தி வந்தார்...ஆனால் என்ன காரணத்தாலோ ஹேமாட்பந்தால்  பீர் மௌலானா என்ற பெயரைக்  கொண்ட முனிவரைத்  தரிசிக்க முடியவில்லை.  பல ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய முறை வந்தது.  சீரடிக்கு ஹேமாட்பந்த்  அழைக்கப்பட்டார்...  அவர் அங்கேயே சாயீபாபாவின் தர்பாரில் நிரந்தரமாகச் சேர்க்கப்பட்டார்...  துரதிஷ்டம் உள்ளவர்கள், முனிவர்களின் தொடர்பை இப்படிப் பெறுவதில்லை.  அதிஷ்டசாலிகள் மட்டுமே அதைப் பெறுகின்றார்கள்...நினைவுக்கும் எட்டாத பழங்காலத்திலிருந்தே இவ்வுலகில் மகான்களுக்கு  ஆசிரமங்கள் இருந்து வருகின்றன..பல முனிவர்கள், மகான்கள்  வெவ்வேறு இடங்களில் தம்மைத் தாமே ஆசிரமம்  தோற்றுவித்துக் கொண்டு, தங்களுக்காக ஒதுக்கபட்ட பணித்திட்டங்களை நிறைவேற்றுகிறார்கள்.  வெவ்வேறு இடங்களில் செயலாற்றியபோதும் அவர்கள் அனைவரும் ஒருவரேயாவர்...மூலம் ஒன்று தானே...  அனைத்தும் வல்ல பரம்பொருள் என்கின்ற பொதுவான ஆணையுரிமையின் கீழ் அவர்கள் அனைவரும் ஒத்தியையுடன் செயல்படுகின்றார்கள்....  அவர்கள் ஒவ்வொருவருக்கும் மற்றவர்கள் தத்தம் இடங்களில் என்ன செய்துக் கொண்டு இருக்கின்றார்கள் என்பது நன்றாகவே தெரியும்..தேவைகள் ஏற்படும்போது பிறிதொருவரின் வேலையை நிறைவு செய்கின்றார்கள்...இதை விளக்கும்  நிகழ்ச்சிகளைப்  பற்றிப் பார்ப்போம் இங்கே... 

🔥பகவானின்  பக்தர்களான திரு. விநாயக் ஹரிச்சந்திர டாகூர்,  புனேவைச் சேர்ந்த அனந்தராவ் பாடண்கர், பண்டரீபுரத்து வக்கீல் ஆகியோரின்  கதைகளைப் பற்றி சத்சரித்திர நூலாசிரியர்  ஹேமாட்பந்தின் விளக்க உரைகளைப்  பற்றி இங்கு காண்போம்...🔥

🔥முதலில் திரு.விநாயக் ஹரிச்சந்திர  டாகூர் பற்றிய அனுபவ  உரையைப் பற்றி இங்கு காண்போம்.....🔥

V.H.டாகூர் B.A., என்பவர் வருவாய்த்துறை அலுவலகத்தில் ஒரு குமாஸ்தாவாக வேலை செய்தார். அவர் ஒருமுறை ஒரு சர்வே குழுவினருடன்  பெல்காமுக்கு (தெற்கு மஹாராஷ்டிரம்) அருகிலுள்ள வட்காவனுக்கு சென்றுள்ளார்.. அங்கு அவர் கன்னட முனிவர் ஒருவரை தரிசித்து  அவர் முன் வணக்கம் செலுத்தினார்...  நிச்சலதாஸின் 'விசார சாகரம்' என்ற நூலின் (வேதாந்தத்தைப் பற்றிய இயல் மதிப்பார்ந்த இலக்கியப் படைப்பு)  ஒரு பகுதியை அவையோரின் முன் எடுத்து விளக்கிக் கொண்டிருந்தார்...டாகூர் புறப்படுவதற்காக முனிவரிடம் விடை பெறும்போது அவர், "நீ இந்தப் புத்தகத்தைக் கற்கவேண்டும்...அங்ஙனம் செய்வாயாகில் உனது விருப்பங்கள் நிறைவேற்றப்படும்... எதிர்காலத்தில் உமது அலுவலகக் கடமைகளின் நிமித்தமாக நீ வடக்கே செல்லும்போது உமது நல் அதிஷ்டத்தினால் ஒரு பெரிய  மகானைக்  காண்பாய்....அவர் உனக்கு எதிர் காலத்திற்குரிய வழியைக் காண்பிப்பார்.  உனது மனதுக்கு ஓய்வுகொடுத்து உன்னை மகிழச் செய்வார்" என்று கூறினார்...பின்னர் அவர் ஜுன்னருக்கு மாற்றப்பட்டார்..  நாணேகாட் என்ற  நாணே மலைத்தொடரை அவர் கடந்து செல்ல வேண்டியதாய் இருந்தது... மலைத்தொடர் மிகவும் செங்குத்தாகவும், கடப்பதற்கு இயலாததாகவும் இருந்தது.  அதனைக் கடக்க ஒரு எருமை மாட்டைத் தவிர வேறு எவ்விதப் போக்குவரத்து வசதியும் இல்லை.. எனவே மலைத்தொடரின் மீது செல்வதற்கு அவர் எருமையின் மீது சவாரி செய்யவேண்டியதாயிற்று.  அது அவரை மிகுந்த அசௌகரியத்திற்கும், வலிக்கும்  உட்படுத்தியது...  

பின்னர் அவர் கல்யாணுக்கு உயர்ந்த பதவியில் மாற்றப்பட்டார்.  அங்கு அவருக்கு நானா சாஹேப் சாந்தோர்கரின் பழக்கம் ஏற்பட்டது.... சாயீபாபாவைப் பற்றி அவரிடமிருந்து நிரம்பக் கேள்விப்பட்டிருந்தார்...அவரைப் பார்க்க விரும்பினார். அடுத்தநாள் நானா சாஹேப் சீரடிக்குச் செல்வதாக இருந்தார், போகும்போது டாகூரையும் தன்னுடன் கூட வரும்படி அழைப்பு  விடுத்தார்...  டாகூரால் அவருடன் செல்ல இயலவில்லை.. ஏனெனில், ஒரு சிவில் வழக்கு விஷயமாக அவர், தாணே சிவில் கோட்டில் ஆஜராக வேண்டியிருந்தது.. எனவே, நானா சாஹேப் தனியாகச் சீரடிக்குச் சென்றார்...டாகூர் தாணேவுக்குச் சென்றார்... அனால், அங்கு விசாரணை ஒத்திப் போடப்பட்டது...  பின்னர், அவர் தாம் நானா சாஹேப்புடன் செல்லாததற்கு வருத்தப்பட்டார்.. எனினும் அவர் சீரடிக்குச் சென்றார்.  அங்கு சென்றபோது அதற்கு முதல் தினமே நானா சாஹேப் சீரடியை விட்டுச் சென்றதாக அறிந்தார்...அவ்விடத்தில் சந்தித்த அவருடைய மற்ற நண்பர்கள் டாகூரை பாபாவிடம் அழைத்துச் சென்றார்கள். டாகூர்  பாபாவைத் தரிசித்து அவருடைய பாதங்களில் வீழ்ந்து வணங்கினார்.  அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்தார்...அவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பொங்கியது..டாகூரின்  உடம்பு புல்லரித்தது...சிறிது நேரத்திற்குப் பின்னர் எங்கும் நிறை பேரறிவாளராகிய பாபா அவரைநோக்கி, "இவ்விடத்தினுடைய வழியானது கன்னடதேச முனிவரான அப்பாவின் உபதேசங்களைப் போன்றோ, நாணேகாட்டின் எருமைச் சவாரியைப் போன்றோ அவ்வளவு எளிதானதன்று...இது ஆத்மீக வழியாக இருக்கின்றது ..மேலும்  இவ்வழி மிகவும் கடினமானது.

ஆகையால் நீர் மிகச்சிறந்த முயற்சியைக் கைக்கொள்ளுதல் அவசியமாகும்" என்று கூறினார்... தாம் மட்டுமே அறிந்த இத்தகைய உட்கருத்து வளஞ்செறிந்த அடையாளங்களையும், சொற்களையும் கேட்டு டாகூர் ஆனந்தக் களிப்பில் மூழ்கினார்... கன்னடதேச முனிவரின் கூற்று உண்மையானதைத் தெரிந்துகொண்டார்.  பின்னர் அவர் தனது இருகரங்களையும் கூப்பி வணங்கித் தனது சிரத்தை  பகவானின் பாதங்களில் வைத்து,  தாம் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஆசீர்வதிக்கப்படவேண்டும் என்று வேண்டினார்.  பின்னர் பாபா கூறினார், " கன்னட அப்பா உன்னிடம் சொன்னது சரியானதே.  ஆனால், இவைகள் பயிலப்பட்டு வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்பட வேண்டும்... வெறும் கல்வியினால் பயனேதும் இல்லை... நீங்கள் சிந்தித்து, கற்றபடி நெறியில் நிற்றல் வேண்டும்.. இல்லாவிடில் அவைகளால் ஒரு பலனும் இல்லை... குருவின் அனுக்கிரஹமின்மையும், ஆத்மானுபூதியின்றியும் உள்ள வெறும் ஏட்டுப் படிப்பால் பயனில்லை".  விசார சாகரம் என்ற நூலின் கோட்பாட்டியல் பகுதி டாகூரினால் படிக்கப்பட்டு வந்தது.  ஆனால் சீரடியில் அவருக்கு நடைமுறையிலான வழி காண்பிக்கப்பட்டது...பின்னால் கொடுக்கப்பட்ட்ட மற்றொரு நிகழ்ச்சியும், இவ்வுண்மையை இன்னும் அதிக வன்மையுடன் வெளிக்கொணர்கிறது...

🔥 பகவானின் பக்தரான அனந்தராவ் பாடண்கர் என்பவர்  பற்றிய அனுபவ விளக்கவுரையை இங்கே காண்போம்...🔥

புனேவைச் சேர்ந்த  அனந்தராவ் பாடண்கர் என்ற பக்தர்  ஒருவர் பாபாவைக் காண விரும்பினார்...அவர் சீரடிக்கு வந்து பாபாவின் தரிசனத்தைப் பெற்றார்... அவரது அனைத்து ஆவல்களும் நிறைவேறியப் பாடண்கர் மிகவும் ஆனந்தமடைந்தார்...  பாபாவின் பாதங்களில் வீழ்ந்து  உரிய வழிபாட்டை நிகழ்த்தியபின்பு, பாபாவிடம் "நான் ஏராளமான நூல்களைப்  படித்திருக்கின்றேன்...வேதங்கள், வேதாந்தங்கள், உபநிஷதங்கள் இவைகளைப் பயின்றும், புராணங்களைக் கேட்டும் இருக்கிறேன்...ஆனால்  எனக்கு மன அமைதி ஏற்படவில்லை...எனவே, எனது கல்வியறிவு யாவும் பயனற்றவை என நினைக்கின்றேன்.. எளிய, ஒன்றும் அறியாத பக்தியுள்ள மக்கள் என்னைவிடச் சிறந்தவர்கள்...மனம் அடங்கினாலன்றி எந்த நூலறிவும் பயனில்லை....  தாங்கள்  அனைவரையும்  உற்று  நோக்கி, விளையாட்டான உபதேச  மொழிகளால், தாங்கள் எளிதாக எவ்வளவோ மக்களுக்கு மனச்சாந்தி வழங்குகின்றீர்கள் என்று நான் பலரிடம் இருந்து கேட்டிருக்கின்றேன்... எனவே, நான் இங்கே வந்திருக்கின்றேன்.. தயவுசெய்து என்மேல் இரக்கம் காண்பித்து, என்னை ஆசீர்வதியுங்கள்" என்று கூறினார்...

இதற்கு பாபா அவருக்கு ஒரு உருவகக் கதையைக் கூறுகின்றார்....ஒன்பது லத்தி உருண்டைகளின் கதை..  ஒன்பது நவவித பக்தியைத் தான் லத்தி உருண்டைகளாக உவமானத்தோடு கூறுகின்றார் பாபா...      

ஒருமுறை ஒரு வணிகன் இவ்விடம் வந்தான்.  அவன் முன்னால் ஒரு குதிரை லத்தி (சாணம்) இட்டது.  (ஒன்பது உருண்டை லத்தி) வணிகன் மனமார்ந்த அக்கறையுடன் தனது வேட்டியின் முனையை விரித்து அந்த ஒன்பது உருண்டைகளையும் அதில் சேகரித்தான்.  அதன் மூலம் அவன் மன ஒருமைப்பாட்டை (மன அமைதி) அடைந்தான் என்று பகவான் உணர்த்துகின்றார்...பாடண்கருக்கு இக்கதையின் உட்பொருள் விளங்கவில்லை.  எனவே, அவர் கணேஷ் தாமோதர் என்ற தாதா கேல்கரிடம் பாபா இதன்மூலம் என்ன பொருள் கொள்கின்றார் என்று கேட்டார்...அவர் "எனக்கும் பாபா பொருள் கொள்வது, சொல்லுவது அனைத்தும் தெரியாது என்றாலும், அவருடைய தெய்வீக அகத்தூண்டுதலால் நான் தெரிந்துக் கொண்டதைக் கூறுகிறேன்....குதிரையே கடவுளின் அருள்....வெளிப்பட்ட ஒன்பது உருண்டைகள் பக்தியின் ரூபங்கள் அல்லது வகைகள்...

அவையாவன:..

(1)  ஸ்ரணவம் ..என்றால்  கேட்டல்

(2)  கீர்த்தனை...என்றால்  வேண்டுதல்

(3)  ஸ்மரணம்..என்றால்  நினைவுறுத்திக் கொள்ளுதல்...

(4)  பாத சேவனம் .. என்றால்  பாதங்களைத் தஞ்சமடைதல்...

(5) அர்ச்சனை.என்றால் பூஜை

(6)  நமஸ்காரம் என்றால் வணங்குதல் .

(7)  தாஸ்யா .. என்றால்  சேவை

(8)  சக்யத்வா.. என்றால்  நட்பு 

(9)  ஆத்மா நிவேதனம் -என்றால்  தன்னையே இறைவனுக்குச் சமர்ப்பித்தல்..

மேற்க்கூறியவையே பக்தியின் ஒன்பது விதங்கள்...இவைகளில் ஏதாகிலும் நம்பிக்கையுடன் பின்பற்றப்பட்டால் பரமாத்மாவாகிய ஹரி மகிழ்வெய்தி பக்தனின் வீட்டில் தாமே வெளிப்படுவார்.....எல்லாச் சாதனைகளும் அதாவது ஜபம், தபம், யோகப்பயிற்சி, வேதபாராயணம் அவைகளின் வியாக்கியானப் பேச்சு ஆகியவை யாவும் பக்தியுடன் சேர்ந்திருந்தாலன்றி முழுவதுமாகப் பயனற்றவையே ஆகும்.  வேதஞானம் அல்லது பெரும் ஞானி என்ற புகழ், வெறும் சம்பிரதாய பஜனை இவற்றால் பயனில்லை..அன்பான பக்தியே தேவைப்படுவதாகும். வணிகனைப் போன்றோ அல்லது உண்மையைத் தேடும் ஒருவனைப் போன்றோ உங்களைக் கருதிக்கொள்ளுங்கள்.  ஒன்பது வகை பக்தியை விளைவிப்பதில் அல்லது ஒன்பதுவகை சேகரிப்பதில் அவன் கொண்டதைப் போன்ற கவலையுடனும், ஆர்வத்துடனும் இருங்கள். அப்போது நீங்கள் நிலையுறுதியையும், மனச்சாந்தியையும் எய்துவீர்கள்"..

அடுத்தநாள் பாடண்கர் பாபாவை வணங்கச் சென்றபோது, பாபா அவரை ஒன்பது லத்தி உருண்டைகளையும் சேகரித்தீரா எனக் கேட்டார்..  அதற்கு அவர் தான் ஒரு எளியவனாக இருப்பதால் பாபா அவருக்கு முதலில் அருள்செய்ய வேண்டுமென்றும், பின்னர் அவைகளை எளிதாகச் சேர்க்கலாம் என்றும் தெரிவித்தார்...அதன் பின் பாபா அவரை ஆசீவதித்து அவர் மன அமைதியைப் பெற்று  நன்மையும் அடைவார் என்று கூறி ஆறுதல் அளித்தார்....  இதைக்கேட்டு பாடண்கர் அளவுகடந்த இன்பமும், மகிழ்ச்சியும் அடைந்தார்....

🔥பகவானின் ஆத்மார்த்தமான பக்தர் பண்டரீபுரத்தில் வாழ்ந்த  வக்கீல் என்பவரைப்  பற்றிய விளக்கவுரையை இங்குக் காண்போம்.🔥

பாபாவின் எங்கும் நிறைந்த பேரறிவையும், மக்களைத் திருத்துவதையும், சரியான பாதையில் அவர்களை நெறிப்படுத்துவதையும் கூறி இவ்வத்தியாயத்தை முடிப்போம்... ஒருமுறை பண்டரீபுரத்திலிருந்து ஒரு வக்கீல் சீரடிக்கு வந்து மசூதிக்குச் சென்றார்.  சாயீபாபாவைக் கண்டு தரிசித்து அவர்தம் பாதத்தடியில் வீழ்ந்தார்.  கேட்காமலேயே சிறிது தக்க்ஷணை அளித்தார்...  ஒரு மூலையில் அமர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் உரையாடலைக் கேட்க ஆர்வமுள்ளவராக இருந்தார்..பின்னர் பாபா, தமது முகத்தை அவர் பக்கம் திருப்பி, "மக்கள் தாம் எவ்வளவு வஞ்சனை உடையவர்களாக இருக்கிறார்கள்..!  அவர்கள், பாதங்களில் விழுகிறார்கள், தக்க்ஷணை அளிக்கிறார்கள், ஆனால் அந்தரங்கமாக, காணாவிடத்தில் திட்டுகிறார்கள்... இது அற்புதமாக இல்லையா...? என்று கூறினார்..பகவான் கூறிய இந்த வார்த்தையானது  வக்கீலுக்குப் பொருத்தமாக இருந்தது...ஒருவருக்கும் இக்குறிப்பு விளங்கவில்லை.... வக்கீல் இதைக் கிரகித்தார்.ஆனால் அவர் அமைதியாய் இருந்தார்....      

அவர் வாதாவுக்குத் திரும்பியபோது வக்கீல், காகா சாஹேப் தீக்க்ஷித்திடம் கூறியதாவது, "பாபா குறிப்பிட்டது சரிநுட்பமாக உண்மையே ஆகும்...  இக்கணை என்மேலேயே எய்யப்படடது...அதாவது மற்றவர்களைத் திட்டுவதிலோ, அவதூறு பேசுவதிலோ, நான் மனம்போன போக்கில் போகக்கூடாது என்ற எனக்குரிய குறிப்பேயாகும்.பண்டாரீபுரத்தின் முன்சீஃப் அல்லது சப்-ஜட்ஜ் (நூல்கர்) தமது உடல்நல முன்னேற்றத்தை முன்னிட்டு இவ்விடம் வந்து தங்கியிருந்தபோது, பண்டரீபுரத்தின் பார்-ரூமில் (வக்கீல்கள் அறை) இந்த விஷயத்தைப் பற்றிய விவாதம் (மற்ற பார் அறைகளில் நடப்பதுபோன்று) நடந்தது...துன்புற்று வந்த நோய்கள் யாவும் சாயீபாபாவின் பின்னால் போவதால் மட்டுமே மருந்துகள் இன்றி குணப்படுத்தப்படும் வாய்ப்பு சிறிதேனும் உள்ளதா என்றும், சப்-ஜட்ஜைப் போன்ற படித்தவர்கள் இதைப்போன்ற முறைகளை அனுசரிப்பது சரியா என்று விவாதிக்கப்பட்டது.  அதாவது மறைமுகமாக சாயீபாபா அவதூறு பேசப்பட்டார் அல்லது குறைகூறப்பட்டார்.  நானும் இந்த  விவாத  விஷயத்தில் சிறிது  பங்கு கொண்டேன்....இப்போது சாயீபாபா எனது ஒழுங்கீனத்தை எடுத்துக் காட்டினார்...இது எனக்குரிய கண்டனமாகாது, ஆனால் ஓர் சகாயமாகும்... ஓர் உபதேசமாகும்..அதாவது நான் பிறரைத் தூற்றுவது, துஷ்பிரசாரம் செய்வது இவற்றில் தன்னிச்சையுடன் செயல்படக்கூடாது என்பது பற்றியும்,  அனாவசியமாகப் பிறர் காரியங்களில் தலையிடக்கூடாது என்பது பற்றியுமாகும்"  என்பதை உணர்ந்தேன்..

சீரடி,பண்டரீபுரத்திலிருந்து முந்நூறு (300) மைல் தூரத்தில் இருக்கிறது.  எனினும் அங்குள்ள பார் அறையில் என்ன நிகழ்ந்தது என்பதை பாபா தமது எங்கும் நிறை பேரறிவால் அறிந்திருந்தார்...இடையில் உள்ள இடங்கள், ஆறுகள், காடுகள், மலைகள் யாவும் அவர்தம் அனைத்தையும் உணரும் பார்வைக்குத் தடை செய்வன அல்ல...  அவர் எல்லோருடைய இதயங்களையும் பார்க்க முடியும்,  படிக்க முடியும்.  எதுவும் அவருக்கு இரகசியமோ, மறைக்கப்பட்டதோ அன்று.  அண்மையிலோ, சேய்மையிலோ உள்ள ஒவ்வொன்றும் பட்டப் பகலொளியைப் போன்று தெள்ளத் தெளிவாகவும், சுத்தமாகவும் பாபாவிற்குத்  தெரியும்....

ஒரு மனிதன் பக்கத்தில் இருந்தாலும் சரி....ஏழு கடலுக்கு அப்பால் இருந்தாலும் சரி...அவன் சாயீபாபாவின் எங்கும்நிறை கூர்ந்த பார்வையினின்று தப்ப முடியாது என்பதை உணர வேண்டும்....இதிலிருந்து மற்றவர்களைப் பற்றித் தூஷணையாகப்(தூற்றி) பேசக்கூடாது என்றும், தேவையில்லாமல் மற்றவரைக் குறைக் கூறக் கூடாது என்றும் வக்கீல் அறிந்துக் கொண்டார்..  இவ்வாறாக அவர்தம் கெட்டகுணம் முழுவதுமாக மறைந்து நல்வழிக்குத் திருப்பபட்டார்...இக்கதை வக்கீலுக்கே என்றாலும், அனைவருக்கும் இது பொருந்துவதேயாகும்.... அனைவரும் இந்நியதியை உள்ளத்தில் கொண்டு, அதனால் வரும் பயனை அடையவேண்டும்.....

சாயீபாபாவின் உபதேச மொழிகள் அனைத்தும் ஆழங்காண இயலாதது...அதீத வியாபகமுள்ளது..ஆராய்ச்சிக்கு அப்பாற்ப்பட்டது...  இவ்வாறே அவர்தம் அற்புதமான லீலைகளுமாகும்.....ஏனெனில் அவரே பரப்பிரம்ம அவதாரம் ஆவார்....

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🏻🙏🏻

ஸ்ரீ சாயீயைப் பணிக...அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்..🙏🏻🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻🙏🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக