ஞாயிறு, மே 09, 2021

🔥🔥ஶ்ரீசீரடி சாய் சத்சரித்திரத்தைப் பாராயணம் செய்வதன் முக்கியத்துவம் என்ன என்பதன் விளக்கம்....🔥🔥

 ஓம்  ஶ்ரீ  சாய்நாதாய  நமஹ.....🙏🙏🙏

ஶ்ரீசீரடி  சாய்பாபாவின் சாய்சரித்திர உபதேச  பொன்மொழிகள் மற்றும்  சுயவிழிப்புணர்வு போதனைகள்..🙏🙏🙏

🔥🔥ஶ்ரீசீரடி  சாய் சத்சரித்திரத்தைப் பாராயணம் செய்வதன் முக்கியத்துவம்  என்ன என்பதன் விளக்கம்....🔥🔥

எந்த பக்தர் தமக்கு நன்மைகள் ஏற்பட வேண்டுமென்ற ஆர்வத்தால் உந்தப்பட்டு பக்திபாவத்துடனும், ஒருமுனைப்பட்ட மனத்துடனும் ஸ்ரீ சாய் சத்சரிதத்தை படிக்கின்றாரோ, அவருடைய வழிபாடு என்றுமே வியர்த்தம் ஆகாது...சாய்பகவான் அவருடைய வேண்டுகோள்களை நிறைவேற்றுகின்றார்.... உலகியல் தேவைகளையும்,ஆன்மீகத் தேவைகளையும் பூர்த்திசெய்கிறார். அவர் செய்யும் வழிபாடு என்றுமே வீணாக போவதில்லை...கடைசியில் அவர் எல்லாப் பேறுகளையும் பெற்றவர் ஆகின்றார்...

குரு வழிபாடு என்பது தானாக நிகழ்வது அல்ல. ஏதோ இந்த பிறப்பில் நடந்தது என்றும் கூற முடியாது...பல ஜென்ம தேடல், பூர்வ புண்ணியங்களின் குவியல்கள் மூட்டை மூட்டையாக இருந்தவருக்கே அது வாய்க்கும்.... அப்படிப்பட்ட குருபக்தியை மேலும் வலுப்படுத்த மிகச்சிறந்த சாதனை யாதெனில், குருவின் சரிதத்தை தினமும் பாராயணம் செய்வதாகும்.. . பாபாவின் மீது அதீத அன்பு கொள்ளும் பக்தர்கள், தினமும் ஒரு அத்தியாயம் , அல்லது ஒரு பக்கம், அல்லது ஒரு வரியாவது ஸ்ரீ சாய் சத்சரித்திரத்தைப்  படியுங்கள்..

ஓம் ஶ்ரீ சாய்ராம்....🙏🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு  தியான பீடம்...🙏🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக