சனி, மே 08, 2021

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்...

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🙏

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்...🙏🙏

🔥ஒரு பக்தனுக்கு தனது குருவின் திருவடியே  தியானத்திற்கு மூலமாகவும், குருவின் பாதங்களே அனைத்துப் பூஜைகளுக்கும் உரிய மூலப்பொருளாகவும், குருவின் திருவாய் மொழிகளே அனைத்து மந்திரங்களிலும் சிறந்த மூல மந்திரமாகவும், குருவின் திருவருளே முக்திக்கு மூலமாகவும் விளங்குகிறது....🔥🔥

பாபா பூதவுடலில் இருந்தபோது என்னவெல்லாம் நடந்தனவோ அவையெல்லாம் அங்கே இப்போதும் நடந்து வருகின்றன.... அன்ன தானமா..? பஜனையா..? பக்தர் குறை தீர்த்தலா..? பிரார்த்தனையா..? சத்சங்கமா..? எதற்கும் சீரடியில் சிறிதும்  குறை இருக்காது.. துயரத்தோடும், கஷ்டத்தோடும் வருவோரின் துயர் துடைக்கும் நிவாரண மையமாக, இறைவன் சாய் பகவான்  நேரில் வந்து ஆறுதல் அளிக்கும் மையமாக புனிதத் தலமான சீரடி  விளங்கிக் கொண்டிருக்கிறது...உனக்குள் இருக்கும் கவலைகளை தூக்கி உனது தந்தையான இந்த சாயீயின் மீது வைத்துவிடு. இருப்பதை வைத்து திருப்தியாக வாழ்வதற்குப் பார்...பிறரது ஆலோசனை உனக்குப் பலன் தராது..என் மீது நம்பிக்கை வைத்து வழி நடத்துமாறு வேண்டி, முழு மனதோடு என்னை சரணடைந்து விடு....

உன்னுடைய பொறுப்பை நான் சுமப்பேன். உன் குடும்பத்தை தாங்குவேன். உன் கண்ணீரை என் விரல்கள் துடைப்பதை அப்போது நீ உணர்ந்துகொள்வாய். புதிய வழிகளை உருவாக்கித் தருவேன். நீயாக எந்த சிக்கலிலும் மாட்டிக்கொள்ளாதே...பொறு, உன்னுடைய கவலைகளைத் தூர எறி, உன்னுடைய துன்பங்கள் ஒரு முடிவுக்கு வந்து விட்டன. ஒருவன் எவ்வளவு தான் நசுக்கப்பட்டு வேதனைப்பட்டவனாக இருப்பினும், இச் சமாதியில் கால் வைத்தவுடனே அவன் மகிழ்ச்சியின் பாதையில் செல்கிறான். 

ஶ்ரீசீரடி சாய்பாபா...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக