ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள்..🙏🏻🙏🏻
சீரடி சாய் பகவான் இன்றும் முழு சக்தியோடு, தன் சூட்சம சரீரத்தில் அண்ட சராசரமெங்கும் இயங்கிக் கொண்டு இருக்கின்றார் என்பதில் ஐயம் வேண்டாம....சீரடி பகவான், நாம் எண்ண அதிர்விற்கு ஏற்றாற் போல் தீர்வைத் தர முழு வீச்சுடன் செயல்பட்டு ஆசிர்வதிப்பார்... பாபாவை புரிந்துகொள்ள ஒவ்வொருவரும் சீரடி பாபாவின் பேராற்றலையும், பேரன்பையும் அனுபவித்து தான் உணர வேண்டும்... பகவான் இன்னமும் இவ்வுலகில் சுறுசுறுப்பாக இருந்து வருகிறாரா என்று பலருக்கு சந்தேகம் எழலாம்..அவர் வாழும் காலத்தில் இருந்த வீர்ய பேராற்றலை விட, அதாவது மகாசமாதி ஆனபிறகு, இன்னும் அதிக சுறுசுறுப்பாக எங்கும் உலா வருகின்றார்..இது பலரது சாய் பக்தர்களின் வாழ்வில் நடந்து வருகின்றது....
ஆத்மார்த்தமான அன்புடன், நிலைமாறாத பக்தியுடன், உண்மையாக, தீவிரமாக விரும்பும் எந்த பக்தர்கள், இன்றும் பாபாவுடன் தொடர்பு கொள்கின்றனர்.. எவ்வளவு முறைகள் பக்தர்களிடம் , பகவான் தாம் அழிவற்றவர் என்பதைப் பறை சாற்றியிருக்கிறார் தெரியுமா....தாமோதர் ராசனேயிடம் ," என்னை எண்ணிய மாத்திரத்தில், நான் வந்து விடுகிறேன் " என்றும், ஸ்ரீமதி தார்கட் அம்மையாரிடம் "தாயே! நான் எங்கும் போகவில்லை என்றும், என்னை எப்பொது எந்த இடத்தில் நினைத்தாலும், அப்போது அந்த இடத்தில் தோன்றுகிறேன்" என்றும், " என்னுடைய சமாதியிலிருந்தும் நான்முழு வீச்சுடன் இயங்குவேன்" என்றும் கூறியிருக்கின்றார்....
பிறர் எண்ணங்களை அறிவது, பிறர் மனதிலுள்ளதை அறிவது, வெறுங்கைகளிலிருந்து விபூதியை உண்டு பண்ணுவது போன்றவற்றைச் செய்தும், சாயிபாபாவை போன்று ஆடை உடுத்துவது, போன்ற தோற்ற மாயையால் எதையோ உருவாக்கினால் மட்டும் பாபாவின் மறு அவதாரமாக ஆகிவிட முடியாது...பாபாவின் பேராற்றல் ஆராயாச்சிக்கு அப்பாற்பட்டது.. அதனை உணர்ந்து தெளிந்து அனுபூதி அடைந்தால் மட்டுமே, அவரின் எல்லையற்ற பேராற்றலை கணித்துச் சொல்ல முடியும்..
பகவான் எங்கும் நிறைந்த பரஞ்சோதியாய்.. பரமாத்மாவாய், கற்பகவிருக்ஷமாய், ஏகாக்ஷரமாய், எகாந்தமாய், ஏகமாய் அண்ட சராசரமெங்கும் நீக்கமற வியாபித்து கொண்டிருப்பவர்...அவரின் ஈடு இணையில்லா ஆற்றலை உணர,அவரின்பால் ஆத்மார்த்தமாக தூய சத்திய அன்புடன், அவர் கூறிய வழிமுறைகளைப் பின்பற்றி, நம்மை அவரின் பால் பிணைத்துக் கொள்ள வேண்டும்....நாம் எதையும் கேட்காமலேயே விரும்பியது அனைத்தையும் கிடைக்கச் செய்வார்..
ஓம் ஶ்ரீ சாய்ராம்..🙏🙏🙏
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻🙏🏻.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக