ஶ்ரீசீரடி சாய்பாபாவின் சாய்சரித்திர உபதேச பொன்மொழிகள் மற்றும் சுய விழிப்புணர்வு போதனைகள் ....🙏🏼
நானா சாகேப் தெங்களே எனும் ஒரு பக்தர் ஒரு முறை வெள்ளித்தட்டு நிறைய பலவகை ருசியான பண்டங்களைக் கொண்டு வந்து பாபாவிடம் அவற்றை சாப்பிட வேண்டுமென வேண்டினார்... பாபா உரக்க கத்தினார்... ஒரு கருப்பு நாய் ஓடி வந்து அந்த உணவின் ஒரு பகுதியை நக்கிவிட்டது... அருகில் நின்று கொண்டிருந்த நானா சாகேப் இதை அருவெறுப்புடன் நோக்கினார்.. "இந்த கீழ்த்தரமான நாய்க்காகவா நான் இவற்றை தயார் செய்தேன்..!" என அவர் மனதில் எண்ணம் தோன்றியது...உடனே பாபா உணவுப் பொருட்களுடன் அந்த தட்டை தூக்கி எறிந்து. "இதை எடுத்துச் செல்" என உத்தரவிட்டார்.... அப்போது நான் அங்கிருந்தேன் (தாமோதர் ஸாவால்ராம் ராஸனே)...ஈனமான ஜந்துக்களையும், தாழ்ந்த நிலையில் உள்ளோரையும் தமக்கு இணையாகவோ, அல்லது தாமாகவோ பாபா நடத்தி வந்ததை நான் எப்போதும் நினைவில்கொண்டுள்ளேன்...
ஒரு சமயம் பாபா எங்கும் வரமாட்டார், என் விடுதியில் உணவு ஏற்கமாட்டார் என நன்கு அறிந்த நான் பாபாவிடம் சென்று பாலா படேலை எனது விருந்தாளியாக அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொண்டேன்..பாலா படேல் தாழ்ந்த குலத்தைச் சார்ந்தவர்....ஆகவே அவரை அனுப்ப சம்மதித்த பாபா, "அவனிடம் தட் தட் எனக் கத்தாதே...!" எனக் கூறினார்... அதாவது நாம் சாப்பிடும் இடத்திலிருந்து விலகி தனியே இலை போட்டு அவரை உண்ணவைத்து அவரை அவமரியாதை செய்யக்கூடாது என்பது அர்த்தம்.. நான் ஒப்புக்கொண்டேன்... அறுசுவை உணவு தயார் செய்து, பாபாவுக்காக ஒரு இலை போட்டு எல்லா உணவு வகைகளையும் அதில் பரிமாறி "பாபா!வருக..!"என அழைத்தேன்...ஒரு கருப்பு நாய் ஓடிவந்து அந்த உணவை உண்டது. அது சாப்பிட்டு முடிக்கும் வரை நான் பயப்பக்தியுடன் காத்திருந்து, அதன் பின்னர் பிறருக்கு விருந்தளித்து நானும் உண்டேன். என் அருகில் பாலாவுக்கு ஒரு இலை போட்டு சாப்பிட வைத்தேன். வீட்டுக்கு வெளியில் அல்ல...
ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🙏
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக