சனி, மே 08, 2021

சீரடி பகவானை சத்குருவாக ஏற்றுக் கொண்டு வழிபடுவதன் மூலம், நாம் அடையப் போகும் நன்மைகள் என்ன என்பதன் விளக்க்ம்...🔥

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🙏🙏

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள்....🙏🏻🙏🏻🙏🏻

🔥சீரடி பகவானை சத்குருவாக ஏற்றுக் கொண்டு வழிபடுவதன்  மூலம், நாம் அடையப் போகும் நன்மைகள் என்ன என்பதன் விளக்க்ம்...🔥

ஆத்மாக்கள் தங்கள் கர்ம வினைகளிலிருந்தும், பல பிறவிகளில் இருந்தும் விடுபடுவதற்காக, அவர்களைத் தம் பக்கம் இழுத்து, உதவி  செய்து பண்படுத்தி,ஆன்மீக வழியில் முன்னேற்றம் அடையச் செய்வதே பரம சத்குருவான ஸ்ரீ சாயிநாத்தின் முக்கியப் பணியாகும். எல்லா ஆத்மாக்களும் ஆன்மீக முன்னேற்றத்தில் எந்த நிலையில் உள்ளனர் என்பது பற்றியும் அவர் தெளிவாக அறிந்திருக்கிறார்... எனவே அனைத்து ஆத்மாக்களையும் நற்பயன் அளிக்கும் முறையில் கட்டுபடுத்தி வழிகாட்டுகிறார்...பாபா அடிக்கடி கூறுவார்- 'ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் என் பக்தர்கள் இருந்தபோதும், என் பக்தரில் எவரேனும் ஒருவர் இறப்பைச் சந்திக்க நேரிடும்போது, அந்த ஆத்மாவை என்னிடம் இழுத்துக் கொள்ள முடியும். எல்லாரையும் பற்றி எல்லாவற்றையும் நான் அறிந்திருக்கிறேன்.'

ஒரு உண்மையான பக்தனுக்கு, இப்படிப்பட்ட ஒரு சமர்த்த சத்குருவைப் பற்றிக்கொள்வதே அடிப்படையான மற்றும் இறுதியான தேவையாகும்...இந்த மனிதப் பிறவியின் துன்பங்களிலிருந்தும்,குறைபாடுகளிலிருந்தும்  விடுபட்டு ஆன்மீக முன்னேற்றம் காண்பதற்காகத் தான்  எல்லாவிதமான பிரார்த்தனைகள், தியானமுறைகள், சாதனைகள், பூஜைகள், யோகப் பயிற்சிகளின் நோக்கமாகும். எனவே ஜீவாத்மாக்களை, முழுமையான  ஆதி மூல பேராற்றலோடு சேர்க்க அழைத்துச் செல்லக் கூடிய சக்தி  சத்குருவுக்கு மட்டுமே சாத்தியம்.. சத்குருவால் மட்டுமே முடியும்...

ஒவ்வொரு மனித உயிரையும் வாழ்கின்ற இயல் வாழ்க்கையிலேயே  சத்திய  நெறி முறைகளையும்  சூட்சமமாக  உணர்த்துவார்.... தன் பக்தர்களை  ஒரே நேர்க்கோட்டில் பயணிக்க வைத்து, ஒவ்வொரு தனி மனித உயிருக்குள்ளும்  உள்ள மூல சிவமே  சீவனாக இருக்கின்றது என்பதனை  உணர்த்தி பிறவா நிலையை அடையச்  செய்வதில் வல்லவரும் சத்குருவே...,பிறப்பு, இறப்பு அற்றவர் என்பதால் அவருடைய பக்தர்களின் பல பிறவிகளுக்கும் அவரே வழிகாட்டியாய் அமைகிறார்...

பெற்றோர்கள் ஒரு பிறவியில் நம்முடன் தொடர்புடையவர்கள். ஆனால் ' ஸ்ரீ சாயிபாபா ' பல பிறவிகளாக நம்முடன் தொடர்பு உடையவர். தந்தை, தாய், மனைவி, குழந்தைகள் என எல்லா மனித உறவுகளும் இறப்பு வரையே ஒருவருடன் கூட வரமுடியும். ஆனால், பாபா ஒருவர் மட்டும் தான் தமது பக்தர்களாகிய நமது இறப்பிற்குப் பிறகும் நம்முடனேயே வருகிறார். ஆகவே, அவரே நமது சிறந்த, நிலையான துணையாவார்...நாம் கொண்டிருக்கும் ஆழ்ந்த அன்பு, பக்தி, நம்பிக்கை இவற்றை முழுமையாக அவர்பால் செலுத்தி அவரையே நாம் இறுகப் பற்றிக்கொள்ளவேண்டும்....

ஓம் ஶ்ரீ சாய்ராம்....🙏🙏🙏

ஶ்ரீசாயீ சர்வ சக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🏻🙏🙏


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக