ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🙏🙏
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்...🙏🙏🙏
🔥ஶ்ரீசீரடி பகவான் சாய்சத்சரித்திரத்தை எழுதுவதற்கு தன் பக்தன் ஹேமாட்பந்தை எவ்வாறு வழிநடத்தினார் என்பது பற்றிய விளக்கம்....🔥
ஆண்டவர் வெவ்வேறு பணிகளை, வெவ்வேறு அடியவர்களிடம் ஒப்புவிக்கின்றார்...சிலர் கோவில், மடம் ஆகியவற்றை கட்டுவதற்கும் , சிலர் புண்ணிய தீர்த்தங்களுக்குப் படிக்கட்டுகள் அமைப்பதற்கும் நியமிக்கப்படுகின்றார்கள். சிலர் ஷேத்ராடன யாத்திரைக்கு அனுப்பப்படுகின்றார்கள்...ஆனாலும் எனக்கு ஶ்ரீசாய் சத்சரித்திரம் எழுதும் வேலை ஒப்படைக்கப்பட்டது என்று கூறுகின்றார் ஹேமாட்பந்த் ...ஒன்றும் முழுமையாகத் தெரியாதவனாகிய யான் இப்பணிக்குக் கொஞ்சமும் தகுதியுடையவன் அல்லன்.... பின்னர் ஏன் அத்தகைய கடினமான வேலையை மேற்கொள்ள வேண்டும்... எவர் சாயீபாபாவின் உண்மை வரலாற்றை எடுத்தியம்ப முடியும்...? சாயீபாபாவின் அருள் ஒன்று மட்டுமே இக்கடின வேலையை நிறைவேற்ற ஊக்கம் அளிக்க முடியும்...எனவே நான் எனது பேனாவைக் கையில் எடுத்தபோது பகவான் எனது அகங்காரத்தை அகற்றிவிட்டு அவரே தமது நிகழ்ச்சிகளையெல்லாம் வரையலனார்.... ஆதலின் இந்நிகழ்ச்சிகளை அனைத்தும் விவரிப்பதன் பெருமை பகவானை அடைகிறது.என்னையல்ல....
பிறப்பில் மறையவனாக இருப்பினும் ஸ்ருதி, ஸ்ம்ருதி என்ற இரண்டு கண்கள் (பார்வை அல்லது காட்சிகள்) தேவையுள்ளவனாக இருந்தேன். எனவே சத்சரிதத்தை எழுதவே இயலாத நிலையில் இருந்தேன்..ஆனாலும் ஆண்டவன் அருள், ஊமையைப் பேசவைக்கிறது.. முடவனை மலையைக் கடக்கச் செய்கிறது..அவரின் விருப்பப்படி காரியங்களைச் செயற்படுத்தும் தந்திரத்தை அவர் ஒருவரே அறிவார்...புல்லாங்குழலோ, ஹார்மோனியமோ எங்ஙனம் ஒலி எழுப்புகிறது என்பதை அறியா...இது அவற்றை வாசிப்பவனையே சார்ந்தது...சந்திரகாந்தக்கல் கசிவதும், கடல் பொங்கியெழுவதும் சந்திரோதயம் காரணமாகவே...அவற்றின் தன்மையால் அல்ல...நம்மை கனகச்சிதமாக இறையாற்றல் இயக்குகின்றது...ஆகவே நான் என்கின்ற சுவற்றை இடித்து, பற்றில்லாமல் சாட்சியாக இக வாழ்வியலின் இயக்க செயல்களை மேற்க்கொள்ளல் வேண்டும்...
ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🙏🙏
ஶ்ரீசாயீ சர்வ சக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக