சனி, மே 08, 2021

🔥🔥அனைவரும் தமது வாழ்நாளிலேயே பாபாவைப் பார்க்கவும், தெளிவாக உணரவும் முடியும்...ஆனால் அதற்குச் சில தகுதிகள் தேவைப்படுகின்றன.... மனிதர்கள் அத்தகுதிகளைப் பெற்றால், நிச்சயம் பாபாவை காண முடியும், அவருடன் பேசவும் முடியும். ஆகவே அந்த தகுதிகள் என்னென்ன என்பதைப் பற்றி பார்ப்போம்...🔥🔥

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🙏🙏

ஶ்ரீசீரடி  சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள்...🙏🏻🙏🏻

🔥🔥அனைவரும்  தமது வாழ்நாளிலேயே பாபாவைப்  பார்க்கவும், தெளிவாக உணரவும் முடியும்...ஆனால் அதற்குச் சில தகுதிகள் தேவைப்படுகின்றன.... மனிதர்கள் அத்தகுதிகளைப்  பெற்றால், நிச்சயம் பாபாவை காண முடியும், அவருடன் பேசவும் முடியும். ஆகவே அந்த தகுதிகள் என்னென்ன என்பதைப் பற்றி பார்ப்போம்...🔥🔥

1. முமுக்ஷை ...அதாவது சுதந்திர உணர்வுடன் கூடிய இறைவனைக் காண வேண்டும் என்ற விருப்பம். மனைவி, சமூகம், உறவு, வேலை என்று ஏகப்பட்ட விலங்குகளால், தான் பூட்டப்பட்டிருப்பதாக எண்ணுகிறான் மனிதன். முதலில் இந்த தடைகளிலிருந்து விடுபட வேண்டும்... தான் தடைகளாக நினைத்துக் கொண்டிருப்பவை எல்லாம் தடைகளே அல்ல என்பதை புரிந்து, பாபாவோடு இரண்டறக் கலந்தாக  வேண்டும் என்ற லட்சியத்தை மட்டும்  மேற்கொள்ளல் வேண்டும்...

2. விரக்தி... இந்த உலகப் பொருட்கள், புகழ், கெளரவம், ஆதாயம் ஆகியவற்றின் மீது இருக்கும் பற்றை விலக்க வேண்டும்... மேற்கூறியவற்றின் மீது பற்று வைக்கவே  கூடாது என்று பொருள் அல்ல... பணம், புகழ், கெளரவம், ஆதாயம் ஆகியவற்றை குறிக்கோளாகக் கொண்டு அவற்றுக்காகவே உழைக்கக் கூடாது....

3. அந்தர்முக்தா... உள்முகச் சிந்தனை.... மனிதன் வெளியில் நடப்பவற்றையே எப்போதும் பார்க்கிறான். அதை விடுத்து உட்புறமாகப் பார்க்க வேண்டும். அதாவது பாபாவை சிறிது நேரமாவது தியானம் செய்ய வேண்டும் அல்லது மனதை ஒருமுகமாக நிலை கொள்ள வேண்டும்..

4. தீவினைகள் கசடறக் கழிபடுதல் :.... கொலை, கொள்ளை, மற்றவர்களை அழிப்பது, தீங்கு விளைவிப்பது போன்ற கொடுஞ் செயல்களை செய்யக்கூடாது.

5. உண்மை : உண்மை பேசுவது, நேர்மையைக் கடைப்பிடிப்பது, மனிதர்கள் தமக்கு தாமே நேர்மை கடைபிடிக்க வேண்டும்...

6. புலனடக்கம் :... புலன் இன்பம் தருபவை ப்ரியாக்கள். ஆன்மிக வளர்ச்சி தருபவை ச்ரியாக்கள். பேராசை, அதிகப் பற்று போன்றவை புலன் இன்பத்துக்கே வழி வகுக்கும். அவற்றை விலக்கி பாபாவிடம் நாட்டம் செலுத்த வேண்டும்..

.7. வைராக்யம் : ...மனதையும், உணர்வையும் அடக்கி ஆளுதல்...

8. தூய்மை : ...மனத் தூய்மை வேண்டும். மனதளவிலும் எவ்வித ஜீவ ராசிகளுக்கும் தீமை எண்ணாமை...

9. குருவின் இன்றியமையாமை.. நல்ல குருவின் வழிகாட்டுதல் இல்லாமல் கடவுளைக் காண இயலாது. எனவே, கடவுளைக் காணவேண்டுமெனில் நல்ல குருவை நாட வேண்டும்...

10. பாபாவின் அனுக்கிரகம் :... முதல் ஒன்பது  கட்டளைகளையும் நிறைவேற்றினால், பகவானின் அருள் தானாகக் கிட்டும். .. ஒன்பது கட்டளைகளையும் நிறைவேற்றுபவரிடம் பாபா மகிழ்ச்சியுற்று தன்னை அடைய வழிகாட்டுவார் சீரடிசாய்பகவான் ..

இவ்வனைத்து கட்டளைகளையும் பெற ஒரே வழி பாபாவின் பால் சரணாகதி அடைவதே.என்பதனை நினைவில் கொள்வீராக....

ஓம் ஶ்ரீ சாய்ராம்..🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🏻🙏🏻🙏🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக