செவ்வாய், ஜூன் 08, 2021

ஶ்ரீ சீரடிபாபாவின் சாய்சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாயத்தின் வெளியீடு..அத்தியாயம் இருபத்தொன்பது(29)🙏

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள  இன்றைய அத்தியாய வெளியீடு....🙏🏼🙏🏼🙏🏼

🙏ஶ்ரீசாய் சத்சரித்திரம்🙏

🙏அத்தியாயம் ::..இருபத்தொன்பது (29)🙏

🔥முதலில் புனித வேத நூலான ஶ்ரீசாய்  சத்சரித்திரம்  பாராயணம் செய்வதன்  முக்கியத்துவமும், பெறப்போகும்  நன்மைகள்  என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் புனித வேத நூல் என்பது சாய் சத்சரித்திரம் என்பதாகும்...ஶ்ரீசீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத  எழுத்திலும் வியாப்பித்து படர்ந்து இருக்கின்றது..ஶ்ரீசாய் சத்சரித்திரத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல், மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது....

ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து சாய் சத்சரித்திரத்தில்  இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்... இவ்வாறாக நாம் அனைவரும் சாய்  சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும்  அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்...ஆகவே ஶ்ரீசாய் சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்...நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக....🙏

🔥குறிப்பு..சாய் சத்சரித்திர வேதப்  பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥

தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்.. மேலும் அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரியத் தன்மையை அடையலாம்....வேத பாராயணத்தின் மூலமாக  ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரியத் தன்மையை  அடையும் நிலையைப்  பெறலாம்.. மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம்,நேர்மை, மனிதநேயம் போன்ற  இறைப்பண்புகளைப்  பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுப் பெறவும், இந்த ஶ்ரீசாய் சத்சரித்திர  வேதப் பாராயணம் துணைப்புரிகின்றது....

மேலும் இப்பாராயணத்தின் மூலம் மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில்  வெற்றி வாகை சூடலாம்.... அவரவர்கள்  விரும்பி வேண்டியது கிடைக்கப் பெறும்...சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்....மேலும் அனைத்து விதமான  கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி  பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும்  ஒருசேரப்பெறலாம்....🙏

 🙏 அத்தியாயம்::.. இருபத்தொன்பது(29)🙏

🙏முன்னுரை..🙏

சீரடி பாபா தன்னை நாடி வந்த  வறுமையால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய  பக்தர்களுக்கு எவ்வாறு தானதருமம் செய்தார் என்பதைப் பற்றியும், இவ்வாறு தானம் அளிப்பதைக் கேள்விப்பட்டு  வந்த பஜனைக் கூட்டத்தில் இருந்தவர்களுக்கு  பாபா  ஆசிகளையும், அற்புதக் காட்சியும்  அளித்து  எவ்வாறு உபதேசம் செய்தார்  என்பதைப் பற்றி விளக்கவுரை..... 

டெண்டுல்கர் என்ற பக்தரின் குடும்பம் பாபா மீது  ஆத்மார்த்தமான பக்தி செய்து, ஶ்ரீசாய்நாத் பஜன்மாலா என்ற நூலை  திருமதிடெண்டுவ்கர்  எழுதி, எவ்வாறு  பாபாவின் அதீத  அனுக்கிரகத்தையும் ஆசியையும்  பெற்றார் என்பதைப் பற்றிய விளக்கவுரை...

கேப்டன் ஹாடே என்ற பக்தரின்  ஆத்மார்த்தமான அன்பு மற்றும் பக்தியை ஏற்றுக்கொண்டு, எவ்வாறு  கனவில் தோன்றிக் காட்சியளித்தார் என்பதையும்,  ஹாடே அளித்த நாணயத்தை எவ்வாறு புனிதப்படுத்தி மீண்டும் வழங்கினார் என்பதைப் பற்றிய  விளக்கவுரை... 

வாமன் நார்வேகர் என்ற பக்தர்,  ஆத்மார்த்தமான பக்திக்கொண்டு, இறை உருவங்கள் பொறிக்கப்பட்ட நாணயத்தை பாபாவிற்கு அளித்ததைப் பற்றியும்,  அதனை பாபா என்ன செய்தார் என்பதைப் பற்றிய விளக்கவுரை.... 

மேற்க்கண்ட தலைப்புக்களின் விளக்கவுரைகளை ஒவ்வொன்றாகக் கீழே காண்போம்....

🔥 முதலில் சீரடி பாபா தன்னை நாடி வந்த  வறுமையால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய  பக்தர்களுக்கு எவ்வாறு தானதருமம் செய்தார் என்பதைப் பற்றியும், இவ்வாறு தானம் அளிப்பதைக் கேள்விப்பட்டு  வந்த பஜனைக் கூட்டத்தில் இருந்தவர்களுக்கு  பாபா ஆசிகளையும், அற்புதக் காட்சியும்  அளித்து  எவ்வாறு உபதேசம் செய்தார்  என்பதைப் பற்றி விளக்கவுரை இங்கே....🔥

இந்த அத்தியாயம் சாயீபாபாவைப் பற்றிய மற்ற பல அற்புதமான, சுவையான கதைகளை விவரிக்கிறது...முதலில் இங்கு சென்னை பஜனை சங்கத்தினர்  பற்றிய அனுபவ உரையைக் காண்போம்...1916- ஆம் ஆண்டில் இந்தக் குழு காசிக்குத் தீர்த்தயாத்திரையாக புறப்பட்டது...ஒரு மனிதர், அவரின்  மனைவி, மகள், மைத்துனி ஆகியோரையே அக்குழு கொண்டிருந்தது...துரதிர்ஷ்டவசமாக அவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை... போகும் வழியில் அகமத்நகர் ஜில்லா கோபர்காவன் தாலுக்காவிலுள்ள சீரடியில், தமது பக்தர்களுக்கும், அங்கு சென்று தங்களது திறமைகளைக் காட்டிய திறமைசாலிகளுக்கும், தினந்தோறும் தானதர்மங்களைச் செய்யும்       தாய்மையுணர்வும், தாராளமும், அமைதியும், சாந்தியும் உடைய பெரும்ஞானி ஒருவர் இருக்கின்றார் என்று பஜனைக் குழுவினர் கேள்விப்பட்டனர்..

சாயிபாபாவால் தக்ஷிணையாக ஏராளமான பணம் தினந்தோறும் சேகரிக்கப்பட்டது. இத்தொகையிலிருந்து பக்த கொண்டாஜியின் மகளான அமனி என்ற  மூன்று  வயது குழந்தைக்குத் தினந்தோறும் ரூ.1ம், வேறு சிலருக்குத் தினந்தோறும் ரூ.2 முதல் ரூ.5 வரையும், அமனியின் தாயாருக்குத் தினந்தோறும் ரூ.10 முதல் ரூ.20 வரையிலும், சமயத்தில் ரூ.50 கூட அவர் வினியோகம் செய்யப்பட்டது....

இவற்றையெல்லாம் கேள்விப்பட்டு அந்தப் பஜனைக் குழுவினர்  சீரடிக்கு வந்து தங்கினர்...அக்குழுவினர்கள் மிக நன்றாக பஜனை செய்து மிகச்சிறந்த பாடல்களையெல்லாம் பாடினார்கள்..ஆனால் அந்தரங்கமாக அவர்கள் பணத்துக்காக பெரும்  ஆவல் கொண்டனர்..அந்தக்  குழுவினர் மூவர் பேராசை பிடித்தவர்களாய் இருந்தனர்..ஆனால் அவ்வீட்டுத் தலைவியின் குணம் வேறுபட்டதாய் இருந்தது..அவளுக்கு பாபாவின் மேல் அன்பும், பக்தியும், பிரியமும் இருந்தது...ஒருநாள் மத்தியான ஆரத்தியின்போது அவளது பக்தி, நம்பிக்கை இவற்றில் பெருமகிழ்வடைந்த பாபா அந்த பெண்ணிற்கு, அவளது இஷ்ட தெய்வக் காட்சியை அளித்தார்..வழக்கப்படி சாயிநாதனுக்குப் பதில் சீதாநாதனாக (ராமனாக) காட்சியளித்தார்...அவளது இஷ்ட தெய்வத்தைக் கண்டு மிகமிக உருகிப் போய்விட்டாள்...கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பொங்கிவழிய மகிழ்ச்சியில் கைகளைத் தட்டினாள்...மக்கள் அவளது ஆனந்த நிலையைக் கண்டு அதிசயமுற்றனர்.. ஆனால் அதன் காரணத்தை அவர்கள் அறிய இயலவில்லை.

பின்னர் மாலைப் பொழுதில் எல்லாவற்றையும் அவள் தன் கணவனுக்கு விளக்கினாள்... சாயிபாபாவுக்குப் பதிலாக அவள் எங்ஙனம் ராமரைக் கண்டாள் என விளக்கமாகக்  கூறினாள்...மிகுந்த எளிமையும், பக்தியும் உடையவளாதலால் அது அவளது 'மனப் பிராந்தியே' என அவளின் கணவர் நினைத்தார். "மற்றவர்கள் எல்லாம் சாயிபாபாவைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது  நீ மட்டும் ராமனைக் காண்பதாவது" என்று கணவர்  அவளைக் கேலி செய்தார்...அவளது மனம் அமைதியாகவும், சாந்தமாகவும் இருந்தபோதெல்லாம் அடிக்கடி ஸ்ரீராம தரிசனத்தைக் கண்டாள்.ஆதலால் அவள் இக்கூற்றுக்குச் செவி சாய்க்கவில்லை.... இம்மாதிரியாக எல்லாம் நடந்து கொண்டிருக்கும்  போது ஒருநாள் இரவு அவள் கணவர் தன் கனவில் அற்புதக் காட்சி ஒன்றைக் கண்டார்...அது கீழ்வருமாறு...அவர் ஒரு பெரிய நகரத்தில் இருக்கிறார்...போலீஸ் அவரைக் கைதுசெய்து கைகளைக் கட்டி, லாக்-அப்பில் வைத்திருக்கிறது. போலீஸ் நன்றாக அழுத்திக் கட்டிக் கொண்டிருக்கும் போது ஜெயிலுக்கு வெளியில் சாயிபாபா அமைதியாக நின்றுக் கொண்டிருப்பதைக்  காண்கிறார்...பாபா இவ்வளவு அருகில் இருப்பதைக் கண்டு வெளிப்படையான குரலில் அவரிடம் "உமது புகழைக் கேள்விப்பட்டு நான் உமது திருவடிகளிடையே வந்தேன்..தாங்களே நேரில் நின்றுகொண்டிருக்கும்போது எனக்கு இந்தக் கேடு ஏன் நிகழ வேண்டும்..? என வினவுகின்றார். 

பாபா :  உனது கர்மத்தின் விளைவை நீ அனுபவித்தாக வேண்டும் என்கிறார்...

பக்தர் :  இந்தப் பிறவியில் இத்தகைய துரதிர்ஷ்டத்தை அளிக்கும் விதத்தில் நான் ஏதும் செய்யவில்லையே..?

பாபா :  இப்பிறவியில் இல்லையென்றால் உனது போன பிறவியில் நீ ஏதும் பாவம் செய்திருப்பாய்.

அவர் :  எனது முந்தைய பிறவிப்பற்றி எனக்கு ஏதும் தெரியாது...ஆனால் அப்படியே நான் செய்திருப்பதாகவே வைத்துக் கொண்டபோதிலும் தங்கள் சாந்நித்யத்தின் முன்னர், நெருப்பில் வைக்கோல் எரிவதைப்போன்று ஏன் அவைகள் அழிக்கப்படக்கூடாது..?

பாபா:  உனக்கு அத்தகைய நம்பிக்கை உண்டா..?

அவர்:  ஆம்...

பாபா :  உனது கண்களை மூடு...

அவர் கண்களை மூடியது தான் தாமதம்...ஏதோ ஒன்று நிலத்தில் விழுந்து பலத்த அடி விழுவதுபோல் கேட்டது...அவர் கணைகளைத் திறந்த போது தாம் விடுதலையாகி இருப்பதையும், போலீஸ் இரத்தம் சிந்தி கீழே விழுந்து கிடப்பதையும் கண்டார்.. மிகவும் பீதியடைந்து பாபாவை அவர் பார்த்தார்.

பாபா :  நீ இப்போது நன்றாகப் பிடிபட்டுக்கொண்டாய்....இப்போது அதிகாரிகள் வந்து உன்னைக் கைது செய்வார்கள்... 

அவர் : (கெஞ்சினார்) தங்களைத் தவிர என்னைக் காப்பாற்றுவார் வேறு ஒருவரும் இல்லை...எப்படியாவது என்னைக் காப்பாற்றுங்கள் என்று கூறுகிறார்...

பின்னர் பாபா அவரை மீண்டும் கண்களை மூடக் கூறினார்...அவர் அதே மாதிரியாகச் செய்து பின் கண்களைத் திறந்ததும், அவர் ஜெயிலுக்கு வெளியே விடுதலையாகி இருப்பதையும் பாபா அவரருகில் இருப்பதையும் கண்டார்...பாபாவின் காலடிகளில் அப்போது அவர் வீழ்ந்தார், "இந்த நமஸ்காரத்திற்கும் முந்தைய நமஸ்காரங்களுக்கும் ஏதேனும் வித்தியாசம் உண்டா..?" என்று பாபா கேட்டார்.  "ஏராளமான வித்தியாசம் இருக்கிறது...எனது முந்தைய நமஸ்காரங்களெல்லாம் தங்களிடமிருந்து பணம் பெறுவதற்காகச் செய்யப்பட்டன.. ஆனால் இந்த நமஸ்காரமோ தாங்கள் கடவுள் என்ற எண்ணத்தில் செய்யப்படுகிறது...அத்துடன் தாங்கள் முகம்மதியனாக  இருந்துகொண்டு இந்துக்களைப் பாழ்படுத்துவதாக நினைத்தேன்.

பாபா :  முகம்மதியக் கடவுள் மீது உனக்கு நம்பிக்கை இல்லையா..? என்று கேட்கின்றார்..

அவர் :  இல்லை என்றுக் கூறுகிறார்...

பாபா:  'பஞ்ஜா' என்ற உலோகத்தாலான கை அடையாளம் உங்கள் வீட்டில் இல்லையா..?  'தாபூத்' (மொஹரம்) சமயத்தில் நீ அதனை வழிபடுவதில்லையா..?  கல்யாணம் மற்றும் இதர பண்டிகைக் காலங்களில் நீங்கள் அமைதிப்படுத்தி ஆற்றும் காட்பீபீ என்ற மற்றொரு முகம்மதியப் பெண் தெய்வம் உங்கள் வீட்டில் இல்லையா..? பாபா கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் ஆம் என்று  ஏற்றுக்கொண்டார்...

பாபா:  உனக்கு வேறென்ன வேண்டும்..?

அவரது குரு ராம்தாஸின் தரிசனத்தைப் பெற அவர் மனதில் அவா ஒன்று எழுந்தது...அப்போது பாபா பின்னால் திரும்பிப் பார்க்கச் கூறினார்....அவர் திரும்பியபோது ராம்தாஸ் நின்றுக் கொண்டிருந்தார்.  அவர் காலடியில் விழப்போன போது ராம்தாஸ் மறைந்துவிட்டார்.  பின்னர் அவர் பாபாவை விருப்பத்துடன் "நீங்கள் வயதானவராகத் தோன்றுகிறீர்களே, உங்கள் வயது என்னவென்று தெரியுமா..?" என்று கேட்டார்.

பாபா:  என்ன.! நான் கிழவன் என்றா சொல்கிறாய்..? என்னோடு ஒரு ஓட்டப்பந்தயம் விட்டுப் பார்த்துவிட்டுக் கூறு என்றார்...

இதைக் கூறிவிட்டு பாபா ஓடத் தொடங்கினார்.  அவரும் பின்னால் ஓடினார்.  ஓடும்போது பாபா அவர்தம் பாதத்தால் எழுப்பிய தூசியில் மறைந்துவிட்டார்..அவரும் கண்விழித்தார்.. விழித்தபின் கனவுக்காட்சியைப் பற்றி அவர் தீவிரமாகச் சிந்தித்தார்..அவரது மனோபாவனை முற்றிலுமாக மாறிவிட்டது... பாபாவின் பெருமையை அவர் உணர்ந்துக் கொண்டார்.. இதன்பின் அவரது தேவையற்ற ஆவல்  குணமும், சந்தேகமும் மறைந்து ஒழிந்தன.  பாபாவின் பாதாம்புயத்தில் உண்மையான பக்தி அவருக்கு ஏற்பட்டது...அக்காட்சி கனவாக இருந்தாலும் கூட, அங்கு கேட்கப்பட்ட வினா விடைகள் மிகவும் விருவிறுப்பானதும் பொருள் செறிந்ததும் ஆகும்...

மறுநாள் காலை எல்லோரும் ஆரத்திக்காக மசூதியில் குழுமியபோது பாபா அவருக்கு இரண்டு ரூபாய் மதிப்புள்ள இனிப்புக்களையும், தம் பாக்கெட்டிலிருந்து இரண்டு ரூபாய் பணமும் எடுத்து பிரசாதமாக அளித்தார்.. மேலும் சில நாட்கள் அவரை அங்கு தங்கச்செய்து, "அல்லா உனக்கு தாராளமாக அளிப்பார்...உனக்கு எல்லாவித நன்மைகளையும் செய்வார்" என்று ஆசி கூறினார்...அங்கு அவர் அதிகமாகப் பணம் பெறவில்லை..ஆனால் அதற்கும் மேலானவைகளைப் பெற்றார்...அதாவது பாபாவின் ஆசியை! அது அவருக்குத் தொடர்ந்து நன்மையளித்து வந்தது...பின்னால் அப்பஜனைக் குழுவிற்கு  ஏராளமான வருமானம்  கிடைத்தது..அவர்களது பிரயாணம் வெற்றிகரமாக முடிவடைந்தது...அவர்கள் பிரயாணத்தின் போது எவ்வித அசௌகரியமோ, தொல்லையோ ஏற்படவில்லை... பாபாவின் அருளால் எய்திய ஆனந்தத்தையும், ஆசிகளையும் நினைத்தவாறே பத்திரமாகவும், சௌக்கியமாகவும் வீடு திரும்பினர்...

🔥டெண்டுல்கர் என்ற பக்தரின் குடும்பம் பாபா மீது  ஆத்மார்த்தமான பக்தி செய்து, ஶ்ரீசாய்நாத் பஜன்மாலா என்ற  நூலை திருமதிடெண்டுவ்கர்  எழுதி, எவ்வாறு  பாபாவின் அதீத  அனுக்கிரகத்தையும் ஆசியையும்  பெற்றனர் என்பதைப் பற்றிய விளக்கவுரையை இங்கு காண்போம்...🔥

பாந்த்ராவில் டெண்டுல்கர் என்பவர், தனது  குடும்பத்துடன்  வசித்து வந்தார்.. அக்குடும்பத்தின்  உறுப்பினர்கள் அனைவரும்  பாபாவிடம் பக்தி பூண்டவர்களாக வாழ்ந்து வந்தனர்.. ஸ்ரீ சாயிநாத் பஜன்மாலா' என்னும் என்னூறு  செய்யுள்கள் கொண்ட ஒரு நூலை திருமதி. சாவித்ரிபாயி டெண்டுல்கர் பதிப்பித்திருக்கிறார்...அப்புத்தகம்  பாபாவின் லீலைகள் அனைத்தையும் உள்ளடக்கியது..  பாபாவைப்பற்றி ஆர்வம் கொண்டோர் எல்லோரும் படிக்க உகந்த நூல் அது... 

ஒருமுறை பாபு டெண்டுல்கரின்  புதல்வன் இரவும், பகலும் அரும்பாடுபட்டு படித்துக் கொண்டிருந்தான்...அவன் மருத்துவத் தேர்விற்கு  செல்லவேண்டும்....சில ஜோதிடர்களைக் கலந்தாலோசித்தார்கள்.. அவனது ஜாதகத்தைப் பரிசீலித்துவிட்டு கிரகங்கள் அவனுக்கு இவ்வருடம் சாதகமில்லை என்றும், எனவே அடுத்த வருடம் அவன் தேர்வுக்குச் சென்றால் நிச்சயம் வெற்றிப் பெறுவான் என்றும் அவர்கள் கூறினர்...இது அவனைக்   கவலைக்குள்ளாக்கி, நிலைக் கொள்ளாமலிருக்கச் செய்தது...சில நாட்களுக்குப்பின் அவனது தாயார் சீரடி சென்று பாபாவைத் தரிசித்தாள்....

பல விஷயங்களுடன், சில நாட்களில் பரீட்சை எழுதவிருந்த தன் மகனின் கவலைக்கிடமான நிலைமைகளையும் அவள் பாபாவுக்குக் கூறினாள்... இதைக்கேட்டுவிட்டு பாபா கூறினார், "உனது மகனிடம் என்னை நம்பும்படி சொல். ஜாதகம், கைரேகைக்காரர்களின் ஜோதிடம் ஆகிய முன்னோடி உரைகளைத் தூக்கியெறிந்துவிட்டு அவன் பாட்டுக்குப் படித்துக் கொண்டிருக்கட்டும்..தேர்வை அமைதியாக எழுதட்டும்..அவன் இவ்வாண்டு தேர்ச்சிப் பெருவது உறுதி...என்னை நம்பும்படியும் ஏமாற்றமடைய வேண்டாம் என்றும் சொல்"..என்று பாபா அறிவுருத்தினார்..உடனே அந்தத் தாயானவள் வீட்டிற்குத் திரும்பி இச்செய்தியை மகனுக்குத் தெரிவித்தாள்.. பின்னர் அவன் கஷ்டப்பட்டுப் படித்து உரிய காலத்தில் தேர்வையும் எழுதினான்...எழுதியத் தேர்வை  அவன் நன்றாகச் செய்திருந்தான்.. ஆனால் சந்தேகத்தால் பீடிக்கப்பட்டு தேர்ச்சிப்  பெறுவதற்குப் போதுமான மதிப்பெண்  தான் பெறப்போவதில்லை என்று எண்ணினான்... எனவே  வாய்மொழித் தேர்வுக்கு  செல்வதைப் பற்றி அவன் கவலைப்படவில்லை...ஆனால் தேர்வு  அதிகாரி அவனை விடுவதாக இல்லை....

அவன் எழுதிய பேப்பர்களில் தேர்ச்சிப்  பெற்று விட்டதாகவும், வாய்மொழித் தேர்விற்கு  அவன் வரவேண்டும் என்றும் சகமாணவன் ஒருவன் மூலம் செய்தியனுப்பினார்...இவ்வாறாக அவன் அத்தேர்வில்  தேறுவதற்கு ஊக்குவிக்கப்பட்டு, இரண்டிலுமே வெற்றியடைந்தான்...கிரகங்கள் அவனுக்கு எதிராக இருந்தபோதிலும், பாபாவின் அருளால் அவன் இவ்வாறாக வெற்றிப் பெற்றான்...ஐயங்களும், கஷ்டங்களும் நம்மை சற்றே அசைத்து நம்பிக்கையை உறுதிப்படுத்தவே சூழ்கின்றன என்பதை இங்கே அறிந்து கொள்ளல் வேண்டும்....நாம் வாழ்க்கையில்  பல்வேறு விதமான சோதனைக்கு  உள்ளாக்கப்படுகிறோம்...முழு நம்பிக்கையுடன் பாபாவைப் பற்றிக்கொண்டு நமது முயற்சிகளைத் தொடர்ந்து செய்வோமேயானால் நமது முயற்சிகள் அனைத்தும் முடிவாக சிறந்தத் தீர்வைப் பெற்றுத்தரும்..

இவர்களின் தந்தையாரான ரகுநாத்ராவ் பம்பாயில் உள்ள வெளிநாட்டு வணிக நிறுவனம்  ஒன்றில் பணியாற்றி வந்தார்.  வயதாகிவிட்டபடியால் அவரால் வேலையைச் சரியாகச் செய்ய இயலவில்லை...எனவே அவர் ஓய்விற்காக விடுப்பு எடுக்க வேண்டியதாயிற்று. விடுமுறையின்போது அவர் தேகநிலை முன்னேறாததால் லீவை அதிகப்படுத்துவதோ அல்லது வேலையினின்று ஓய்வு பெறுவதோ தவிர்க்க முடியாததாகிவிட்டது...அவர் முதுமையும், நம்பிக்கையும் வாய்ந்த பணியாளராக இருப்பதால் அந்த ஸ்தாபனத்தின் முக்கிய அதிகாரி அவருக்கு ஓய்வுத் தொகையுடன் விடுப்பு ஓய்வும் வழங்கத்  தீர்மானித்தார்....

எவ்வளவு ஓய்வுத்தொகை வழங்குவது  என்ற பிரச்சனை இத்தகைய தீர்மானத்திலிருந்து வந்தது...அவர் மாதம் ரூ.150 பெற்று வந்தார்...ஓய்வுத் தொகையான ரூ.75 வீட்டுச் செலவுகளைப் பராமரிக்கப் போதுமானவை அன்று..ஆகவே  குடும்பத்தில் அனைவரும் இவ்விஷயத்தில் கவலையுள்ளவர்களாக இருந்தனர்...முடிவானத் தீர்விற்கு  பதினைந்து தினங்களுக்கு  முன்பாக பாபா, திருமதி டெண்டுல்கரின் கனவில் தோன்றி, "பென்ஷன் நூறு ரூபாயாக அளிக்கப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன்...இது உனக்குத் திருப்திதானே...?"என்று கேட்டார்.  "பாபா இம்மாதிரி ஏன் என்னைக் கேட்கவேண்டும்..?  நாங்கள் உங்களையே முழுவதும் நம்புகிறோம்" என்று திருமதி டெண்டுல்கர் பதிலளித்தார். பாபா ரூ.100 என்று கூறியபோதும், ரூ.10 இன்னும் அதிகமாகவே கொடுக்கப்பட்டது...இது ஒரு விசேஷ நியதியாக, தமது பக்தர்களுக்கு அத்தகைய அற்புதமான அன்பையும், பாதுகாப்பையும் பாபா தாய்மையுணர்வுடன்  காண்பிக்கிறார் என்பதை உணர்த்துகிறது..

🔥கேப்டன் ஹாடே என்ற பக்தரின் ஆத்மார்த்தமான அன்பு மற்றும் பக்தியை ஏற்றுக்கொண்டு, எவ்வாறு பாபா கனவில் தோன்றி காட்சியளித்தார் என்பதையும், ஹாடே அளித்த நாணயத்தை எவ்வாறு புனிதப்படுத்தி மீண்டும் வழங்கினார் என்பதைப் பற்றிய விளக்கவுரையை இங்கே காண்போம்...🔥 

குவாலியரில் தங்கியிருந்த கேப்டன் ஹாடே என்பவர் பாபாவின் மிகப்பெரும் பக்தர்... ஒருமுறை அவரது கனவில் பாபா தோன்றி "என்னை மறந்துவிட்டாயா..?" என்று கேட்டார்.. ஹாடே உடனே பாபாவின் பாதங்களைப் பிடித்துக்கொண்டு, "தனது தாயைக் குழந்தை மறந்துவிட்டால் அது எங்ஙனம் காப்பாற்றப்படும்...?" என்றார்..பின்னர் ஹாடே தோட்டத்திற்குச் சென்று அவரைக்காய் பறித்து ஒரு விருந்துக்கும், தஷிணைக்கும் ஏற்பாடு செய்துவிட்டு, இவைகளை எல்லாம் பாபாவுக்குச் சமர்ப்பிக்க இருந்தபோது விழித்துக்கொண்டார்...சிலநாட்களுக்குப்பின் அவர் குவாலியர் வந்தவுடன் ஒரு நண்பருக்கு ரூ.12ஐ மணியார்டர் மூலம் அனுப்பி ரூ.2ஐ ஷிதா (மளிகை) பொருட்களுக்கும், காய்கறிகளுக்கும் ரூ.10ஐ பாபாவுக்குத் தக்ஷிணையாக அளிக்கும் குறிப்பையும் அனுப்பியிருந்தார்..அந்த நண்பர்  சீரடிக்குச் சென்று குறிப்பிடப்பட்ட பொருட்கள் அனைத்தும்  வாங்கினார்..ஆனால் காய்கறிகள் கிடைக்கவில்லை.. சிறிது நேரத்தில் தலையில் சுமந்துகொண்டு ஒரு கூடைக்காரி வீதியில் எதிர்ப்பட்டாள்.  வியப்பிற்கேற்ப அந்தக் கூடையில் வேண்டிய அவரைக்காய் கிடைத்தது. அது வாங்கப்பட்டு மற்று அனைத்துப் பொருட்களுடன் சேர்த்து கேப்டன் ஹாடேயின் சார்பில் பாபாவுக்குச் சமர்ப்பிக்கப்பட்டன....

நிமோண்கர் அடுத்த நாள் நிவேதனம் தயார் செய்து பாபாவுக்கு,  கேப்டன் ஹாடேயின் சார்பில் சமர்ப்பித்தார்...சாப்பிடும்போது அவரைக்காயையே பாபா முதலில் எடுத்துச் சாப்பிட்டதையும், சாதம் முதலியவற்றைத் தொடாதது கண்டும் அனைவரும் அதிசயப்பட்டனர்....இதைத் தன் நண்பன் மூலமாகக் கேட்டறிந்த ஹாடேயின் மகிழ்ச்சி கரைகாணாது போயிற்று.. மேலும்  நாணயம் ஒன்று  பாபாவின் ஸ்பரிசத்தால்  புனிதமாக்கப்பட்டு, தன் வீட்டில் இருக்க வேண்டுமென பிறிதொரு சமயத்தில் கேப்டன் ஹாடே விரும்பினார்..சீரடிக்குப் போய்க் கொண்டிருந்த நண்பர் ஒருவரைச் சந்தித்தார்.. அவரிடம் தமது நாணயத்தை அனுப்பினார்... அந்த நண்பர் சீரடிக்குச் சென்று நமஸ்கரித்தபின் முதலில் தமது ரூபாயைத் தக்ஷிணையாக அவர் பாபாவுக்கு அளித்தார். அதை அவர் வாங்கி சட்டைப்பையில் போட்டுக்கொண்டார்....பின் நண்பர் ஹாடேயின் நாணயத்தைக் கொடுத்தார்...அதை பாபா வாங்கி உற்றுப் பார்த்துவிட்டு, தமது வலதுகை கட்டைவிரலால் சுண்டிவிட்டு பிடித்து விளையாடினார்....

பின் அந்த நண்பரிடம் அவர் உதிப் பிரசாதத்துடன் இதை அதன் உரிமையாளரிடம் திரும்பக்கோடு...அவரிடமிருந்து எனக்கு எதுவும் வேண்டியதில்லை என்று கூறு... அமைதியுடனும்,  திருப்தியுடனும் அவரை வாழச்சொல்" என்று கூறினார்...அந்த நண்பர் குவாலியருக்குத் திரும்பி புனிதமாக்கப்பட்ட நாணயத்தை ஹாடேவிடம் திரும்ப அளித்து, சீரடியில் நிகழ்ந்த எல்லாவற்றையும் அவருக்குக் கூறினார்.  இம்முறை ஹாடே மிகவும் மகிழ்ந்து, பாபா எப்போதும் தாம் விரும்பிய மாதிரியான நல்ல எண்ணங்களை ஊக்குவித்து ஆசிர்வதிக்கின்றார் என்று உணர்ந்தார்.... பாபாவும் அதையே முறையாக  நிறைவேற்றினார்....

🔥வாமன் நார்வேகர் என்ற பக்தர் தூய்மையான  பக்தியுடன், இறை உருவங்கள் பொறிக்கப்பட்ட நாணயத்தை பாபாவிடம் சமர்ப்பித்து  ஆசிப்பெற நினைத்ததை, பகவான்  வாங்கி   என்ன செய்தார் என்பதைப் பற்றிய அனுபவ உரையைக் இங்கே காண்போம்.. 🔥

இப்போது வாசகர்கள் மற்றொரு கதையைக் கேளுங்கள்..வாமன் நார்வேகர் என்ற பக்தர்  ஒருவர் பாபாவை மிகவும் நேசித்தார்..அவர் ஒருமுறை ஒரு நாணயம் கொண்டு வந்தார்... அதன் ஒரு பக்கத்தில் ராமர், சீதா, லக்ஷ்மணர் ஆகியோரின் உருவங்களும், மற்றொரு பக்கத்தில் கூப்பிய கரங்களுடன் ஆஞ்சநேயர் உருவமும் பொறிக்கப்பட்டிருந்தது.  அதை பாபா தமது ஸ்பரிசத்தால் புனிதப்படுத்தி உதீயுடன் திருப்பி அளிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் பாபாவுக்கு நாணயத்தை  அளித்தார்...ஆனால் பாபா உடனே அதைத் தம் பாக்கெட்டிற்குள் போட்டுக் கொண்டுவிட்டார்...வாமன்ராவின் எண்ணத்தை அறிந்த  ஷாமா, பின்னர் பாபாவுக்கு தெரிவித்து அதைத் திருப்பியளிக்க வேண்டினார்....

பாபா பின்னர் வாமன்ராவின் முன்னிலையில் இவ்வாறு பேசினார்.  "அது ஏன் அவருக்குத் திருப்பியளிக்கப் படவேண்டும்..? அதை நாமேதான் வைத்துக் கொள்ளவேண்டும்... அதற்காக ரூ.25 கொடுத்தாரானால் அது திருப்பியளிக்கப்படும்"....வாமன்ராவ் ரூ.25 சேகரித்து அவற்றை பாபாவின் முன்னிலையில் வைத்தார்....பின்னர் பாபா, "அந்த நாணயத்தின் மதிப்பு 25 ரூபாயைவிட மிகமிக அதிகமாகும்.. ஷாமா இந்த ரூபாயை எடுத்து நம்மிடத்தில்  வைத்துக்கொள்....நாணயத்தை உனது பூஜை அறையில் வைத்து வழிபடு" என்றார்..பாபா இம்மாதிரியான செயலை ஏன் பின்பற்றினார் என்பதைக் கேட்க ஒருவருக்கும் தைரியமில்லை. ஒவ்வொருவருக்கும் எது மிகச்சிறந்தது, எது மிகப் பொருத்தமானது, எது தேவை  என்பதை பாபா மட்டுமே அறிவார்  என்பதை உணர்ந்து பகவானுடைய  பாத கமலத்தில் சரணாகி அடைய வேண்டும்..

ஓம் ஶ்ரீ சாய்ராம்..🙏🏼🙏🏼

ஸ்ரீ சாயீயைப் பணிக..அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்..🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுயவிழிப்புணர்வு தியானபீடம்..🙏🏼🙏🏻🙏🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக