ஞாயிறு, ஜூன் 13, 2021

ஶ்ரீ சீரடிபாபாவின் சாய்சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாயத்தின் வெளியீடு..அத்தியாயம் முப்பத்து நான்கு (34)

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள  இன்றைய அத்தியாய வெளியீடு....🙏🏼🙏🏻🙏🏻

🙏ஶ்ரீசாய் சத்சரித்திரம்🙏

🙏 அத்தியாயம்:: முப்பத்து நான்கு (34)🙏

 🔥முதலில் புனித வேத நூலான ஶ்ரீசாய்  சத்சரித்திரம்  பாராயணம் செய்வதன்  முக்கியத்துவமும், பெறப்போகும்  நன்மைகள் என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥

ஶ்ரீசீரடி  சாய்பாபாவின் புனித  வேதநூல்  என்பது சாய் சத்சரித்திரம் என்பதாகும்..இதில் ஶ்ரீசீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத  எழுத்திலும் வியாப்பித்து  படர்ந்து இருக்கின்றது...ஶ்ரீசாய்  சத்சரிதத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல், மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய  ஶ்ரீசாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது....

ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து சாய் சத்சரித்திரத்தில்  இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட  முயல வேண்டும்... இவ்வாறாக நாம் அனைவரும் சாய்  சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும்  அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்...ஆகவே சாய் சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்...நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக..🙏

🔥குறிப்பு..சாய் சத்சரித்திர வேதப்  பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥

தனி மனித உயிரின் சித்தம்  தெளிவடையும்... மேலும் அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரியத் தன்மையை அடையலாம்...இவ்வேத பாராயணத்தின் மூலமாக  ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று  உயரியத் தன்மையை  அடையும் நிலையைப்  பெறலாம்...மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம்,நேர்மை, மனிதநேயம் போன்ற  இறைப்  பண்புகளைப்  பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுப் பெறவும்  இந்த சாய் சத்சரித்திர  வேதப் பாராயணம் துணைப் புரிகின்றது...

மேலும் இப்பாராயணத்தின் மூலம்  மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில்  வெற்றி வாகை சூடலாம்... அவரவர்கள்  விரும்பி வேண்டியது கிடைக்கப் பெறும்...சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்...மேலும் அனைத்து விதமான  கர்ம வினைகள் நீங்கப்பெற்று,பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு,சீரடி பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும் ஒருசேரப்பெறலாம்🙏

🙏அத்தியாயம்:: முப்பத்து நான்கு(34)🙏

🙏முன்னுரை..🙏

பகவானின் ஆசியாலும் ,சக்தி நிறைந்த உதி என்கின்ற விபூதியாலும் எவ்வாறு குணமாக்க இயலாத எலும்புருக்கி நோய் குணமானது என்பதைப்  பற்றியும், மேலும் பாபாவின் எங்கும் நிறைந்த பேரறிவால் மருத்துவரின் எண்ணங்களை புரிந்துக்கொண்டு, எவ்வாறு  கனவின் மூலம் உணர்த்தி  ஆசிர்வதித்து  சீரடி வரவழைத்தார்  என்பதன் விளக்கவுரைகள்..

சீரடி பாபாவின் ஆத்மார்த்தமான நெருங்கிய பக்தர் மருத்துவர் பிள்ளையின் நரம்புச் சிலந்தி நோயை எவ்வாறு உதியின் மூலம்  குணப்படுத்தி ஆசிர்வதித்தார் என்பதைப் பற்றிய அனுபவ விளக்கவுரை... 

பிளேக் வியாதியால்  தாக்கப்பட்டுள்ள  ஷாமாவின் உறவினர் பெண்ணை, எவ்வாறு பாபா  உதியை வழங்கி ஆசிர்வதித்து அந்நோயைக் குணப்படுத்தினார் என்பதன் விளக்கவுரை...

எவ்வித சிகிச்சையும் பலனளிக்காத நிலையில் உள்ள ஈரானியப் பெண்ணின் வலிப்பு நோய், எவ்வாறு உதியின் மூலமாக குணமாக்கப்பட்டது என்பதன் விளக்கவுரை...

ஹர்தாவைச் சேர்ந்த முதியவரின் சிறுநீர் கல் பிரச்சனை எவ்வாறு உதியின் மூலம் குணமாக்கப்பட்டது என்பதன் அனுபவ உரை...

மும்பையைச் சேர்ந்த ஒரு பெண்ணின் பிரசவத்தின் போது வருகின்ற தீவிரமான பிரச்சனையை ,எவ்வாறு  பாபா உதியின் மூலம் ஆசிர்வதித்து குணப்படுத்தினார்  என்பதன் அனுபவ உரை...

மேற்க்கண்ட தலைப்புக்களின் விளக்கவுரைகளைப் பற்றி ஒவ்வொன்றாகக் கீழே காண்போம்...

🔥முதலில் பகவானின் ஆசியாலும் , சக்தி நிறைந்த உதி என்கின்ற விபூதியாலும், எவ்வாறு குணமாக்க இயலாத எலும்புருக்கி நோய் குணமானது என்பதைப்பற்றியும், மேலும் பாபாவின்  எங்கும் நிறைந்த பேரறிவால் மருத்துவரின் எண்ணங்களை புரிந்துக் கொண்டு, எவ்வாறு  கனவின் மூலம் உணர்த்தி  ஆசிர்வதித்து  சீரடி வரவழைத்தார்  என்பதன் விளக்கவுரைகள் இங்கே..🔥

இந்த அத்தியாத்தில் சீரடி பாபாவின் ஆசியாலும், பல உயரிய சூட்சம சக்திகள் நிறைந்த உதி என்கின்ற விபூதியின்  மூலமாக எவ்வாறு  பாபா தீர்க்க  முடியாத வியாதிகளையும்,  வலியையும் தாய்மையுணர்வுடன் குணப்படுத்தினார் என்பதைப் பற்றிய அனுபவங்களை  இங்கு  பார்ப்போம்...

மாலேகாங்வின் நாசிக் ஜில்லாவில் ஒரு மருத்துவர் இருந்தார்...மருத்துவரின்  சகோதரியின் மகன் குணமாக்க இயலாத எலும்புருக்கி நோய்க்கட்டியால்  துன்பப்பட்டான்...மருத்துவரும், அவரின் சகோதரர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களும் எல்லாவிதமான சிகிச்சைகளையும், அறுவை சிகிச்சையும் கூட முயன்று பார்த்தனர்...  எவ்வளவு முயன்றும் குணமாகவில்லை...  அச்சிறுவனின் துன்பத்திற்கும் ஒரு முடிவில்லை.  நண்பர்களும், உறவினர்களும் அந்த சிறுவனின் பெற்றோர்களிடம் தெய்வீக உதவியைக் கோரும்படியும், குணமாக்க இயலாத வியாதிகளையெல்லாம் தமது வெறும் கடைக்கண் பார்வையினால் மட்டுமே குணமாக்கிவிடும் சாயிபாபாவிடம் முயற்சிக்கும் படியும் அறிவுறுத்தினர்...எனவே பெற்றோர்கள் சீரடிக்குச் சென்று  பாபாவை தரிசனம் செய்ய வருகைப் புரிந்தனர்... பாபாவின் முன்னர் மகனை  வைத்துப் பணிவுடனும், மரியாதையுடனும் வேண்டினர். தங்கள் பையனைக் காக்கும்படி மன்றாடிப் பிரார்த்தித்தனர்...  

கருணையுள்ள பாபா அவர்களுக்கு ஆறுதலளித்து, "இம்மசூதியை அடைக்கலம் புகுவோர் இந்தப் பிறப்பிலும், காலத்தின் முடிவு வரையிலும் எதைக் குறித்தும் துன்பப்  படமாட்டார்கள்.  இப்போது கவலையற்று இருப்பீராக.. உதியைக்  கட்டியின்மீது தடவுங்கள்...ஒரு வாரத்திற்குள் அவன் குணமடைவான்... கடவுளை நம்புவீராக..  இது மசூதியல்ல.. துவாரமாகாயீ.. இவ்விடத்தில் காலடி வைப்பவன் துரிதமாக உடல் நலத்தையும், மகிழ்ச்சியையும் பெறுவான்.. அவனுடைய தொல்லைகள் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்துவிடும்" என்றார்...பையன் பாபாவின் முன்னர் உட்காரவைக்கப்பட்டான்...  நலிவுற்ற பகுதியின் மீது பாபா தமது கையை வைத்துத் தடவி அவன் மீது தமது அன்புப் பார்வையைச் செலுத்தினார்..பையன் மிகுந்த மகிழ்ச்சியடைந்தான்....உதியைத் தடவிய பின்னர் அவன் குணமடையத் தொடங்கினான்... சில நாட்களுக்குப் பின்னர் பூரண ஆரோக்கியமானான்.. பின்னர் பாபா உதியினாலும், அருட்பார்வையினாலும் குணப்படுத்தியதற்கு பாபாவுக்கு நன்றி கூறிவிட்டுப் பெற்றோர் சீரடியை விட்டுப் புறப்பட்டனர்....

இதையறிந்த அப்பையனின் மாமாவாகிய மருத்துவர்  ஆச்சரியமடைந்தார்...தாம் ஏதோ விஷயமாக பம்பாய்க்குப் போகும் வழியில்  சீரடிக்குப் போக விரும்பினார்...ஆனால் மாலேகாவனிலும், மன்மாடிலும் அவரிடம் சிலர் பாபாவுக்கு எதிராகப் பேசி அவரது செவிகளில் விஷத்தைப் பாய்ச்சினர்.  எனவே சீரடிக்குத் தாம் விஜயம் செய்ய இருந்த எண்ணத்தை விட்டுவிட்டு பம்பாய்க்கு நேரடியாகச் சென்று விட்டார்...தமது விடுமுறையின் மீதமுள்ள நாட்களை அவர் அலிபாகில் கழிக்க விரும்பினார்..ஆனால் பம்பாயில் இருந்தபோது மூன்று தொடர்ந்த இரவுகளிலும் "இன்னும் நீ என்னை நம்ப மறுக்கிறாயா...?" என்ற ஒரு குரல் எழுந்தது....பின்னர் மருத்துவர்  தமது மனதை மாற்றிக்கொண்டு சீரடிக்குச் செல்லத் தீர்மானித்தார்...பம்பாயில் கடும் காய்ச்சல் வந்த ஒரு நோயாளியை அவர் கவனிக்க வேண்டியிருந்தது....

நோயாளி விரைவில் குணமடையும் அறிகுறி எதையும் காணோம்...எனவே தமது சீரடி விஜயம் ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது என்று அவர் நினைத்தார்.  எனினும் தமது மனதில் ஒரு சிறிய பரீட்சை வைத்துக்கொண்டார்...! நோயாளி இன்று குணமடைந்தால் நான் நாளை சீரடி விஜயம் செய்வேன் என்று கூறிக்கொண்டார்.  ஆச்சர்யம் என்னவெனில் அவர் அத்தீர்மானம் எடுத்த அக்கணந்தொட்டே காய்ச்சல்  நீங்கத் தொடங்கி உடல் சாதாரண நிலைக்கு வந்துவிட்டது...பின்னர் தமது தீர்மானத்தின்படி அவர் சீரடிக்குச் சென்றார்.  பாபாவின் தரிசனத்தைப் பெற்று அவரை வீழ்ந்துப் பணிந்தார்...அவர் தமக்கு அடியவராகும் வண்ணம் பாபா அவருக்கு அத்தகைய அனுபவங்களை அளித்தார்..அவர் அங்கு நான்கு நாட்கள் தங்கியிருந்தார்.பாபாவின் உதி ஆசீர்வாதங்களுடன் வீட்டுக்குத் திரும்பினார்.  பதினைந்தே நாட்களுள் பீஜப்பூருக்கு உத்தியோக உயர்வில் மாற்றப்பட்டார்.. இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு, அவருடைய சகோதரி மகன் பாபாவைப் பார்ப்பதற்கு அவருக்கு ஒரு சந்தர்ப்பமளித்தது...இந்த அனுபவமானது,  ஞானியின் பாத கமலங்களின் மீது அசைக்க இயலாத பக்தியை அவரிடம் தோற்றுவிப்பதற்குக் காரணமாய் இருந்தது....

🔥சீரடி பாபாவின் ஆத்மார்த்தமான நெருங்கிய பக்தர் மருத்துவர் பிள்ளையின் நரம்புச் சிலந்தி நோயை எவ்வாறு உதியின் மூலம்  குணப்படுத்தி ஆசிர்வதித்தார் என்பதைப் பற்றிய அனுபவ விளக்கவுரை இங்கே... 🔥

மருத்துவர்  பிள்ளை என்பவர் பாபாவின் மிக நெருங்கிய பக்தராவார்...பாபா அவரை மிகவும் விருபத்துடன் நேசித்தார்...எப்போதும் அவரை பாவ் (சகோதரன்) என்று அழைத்தார்...பாபா அவருடன் அடிக்கடி பேசினார்...எல்லா விஷயங்களிலும் அவரைக் கலந்து ஆலோசித்தார்..பாபா எப்போதும் தமதருகில் இருக்கவும் விரும்பினார்...இந்த பிள்ளை ஒருமுறை நரம்புச் சிலந்தி நோய் வந்து மிகவும் அவதியுற்றார்...அவர் காகா சாஹேப் தீஷித்திடம், "இந்த வலி உயிர்வதையாகவும், தாங்க முடியாததாகவும் இருக்கிறது..அதைவிட இறப்பதையே  விரும்புகிறேன்...முன் ஊழ்வினையால் இவ்வலியும் வேதனையும்  நேர்ந்தது என்பது எனக்குத் தெரியும்..ஆனால் பாபாவிடம் சென்று வலியை நிறுத்தும்படியும், எனது முன் ஊழ்வினையை வரப்போகும் பத்து பிறப்புக்களுக்கும் மாற்றும்படியும் கூறுங்கள்" என்றார்.. தீஷித் பாபாவிடம் சென்று அவரின் வேண்டுகோளைத் தெரிவித்தார்..பாபா அவரது வேண்டுகோளைக் கேட்டு மனமிரங்கி தீஷித்திடம் "பயப்படாதிருக்கும்படி அவரிடம் கூறுங்கள்.. ஏன் அவர் பத்து ஜென்மங்கள் துன்பப்பட வேண்டும்...பத்தே நாட்களில் அவர் தொல்லைகளையும், முன்னைய ஊழ்வினைகளையும் உழைத்து நிறைவேற்ற முடியும்..ஶ்ரீஅவருக்கு இகபர நலன்களை அளிக்க நான் இவ்விடத்தில் இருக்கும்போது  அவர் ஏன் இறப்பதற்கு  வேண்டிக் கொள்ள வேண்டும்...!  யார் முதுகிலாவது மருத்துவரை  இவ்விடம் கொண்டு வாருங்கள்...நாம் வேலை செய்து அவர்தம் தொல்லைகளை அடியோடு களைந்துவிடலாம்" என்றார்...மருத்துவர் அந்நிலையில் அங்கு  கொண்டு வரப்பட்டார்... பாபாவின் வலப்புறத்தில் ஃபக்கிர் பாபா எப்போதும் அமரும் இடத்தில் மருத்துவர்  அமர   வைக்கப்பட்டார்....பாபா தமது திண்டையே அவருக்கு அளித்து, "இங்கேயே அமைதியாக படுத்து ஆசுவாசப்படுத்திக் கொள் என்று கூறினார் பாபா...உண்மையான சிகிச்சை யாதெனில் முன் வினைகளின் பலனை அனுபவித்துத்தான் ஆக வேண்டும்.. மேலும் நமது கர்மங்களின் விளைவே இன்ப-துன்பங்கள்...எனவே, உனக்கு நேரிடும் அனைத்தையும் பொறுத்துக்கொள்...அல்லாவே தீர்ப்பவர்...காப்பவர்...அவரையே எப்போதும் நினை..அவர் உன்னைக் கவனித்துக் கொள்வார்...உனது உடலால், உள்ளத்தால், செல்வத்தால், வாக்கால் ஒளிவு மறைவின்றி  சரணாகதி அடைவீராக...பின்னர் அவர் என்ன செய்கிறார் என்பதைக் கவனி...!" என்று உபதேசித்தார் மருத்துவர் பிள்ளையிடம் பாபா..

நானா சாஹேப்  ஒரு கட்டு போட்டிருப்பதாகவும், ஆயினும் அவர் எவ்வித நிவாரணத்தையும்  அளிக்கவில்லை என்றும் மருத்துவர் பிள்ளை பதில் கூறினார்.  "நானா ஒரு மடையன்" என்றார் பாபா.  "அந்தக் கட்டை எடுத்துவிடு... இல்லாவிடில் செத்துவிடுவாய்...இப்போது ஒரு காக்கை வந்து உன்னைக் கொத்தும்...அதன்பின் நீ குணமடைவாய்" என்றார்... இவ்வுரையாடல் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது  எப்போதும் விளக்குகளை ஒழுங்குபடுத்தி மசூதியைச் சுத்தப்படுத்தும் அப்துல் என்பவர் வந்தார்..அவர் தனது சுத்தப்படுத்தும்  வேலையை கவனித்துக் கொண்டிருக்கையில் தற்செயலாக அவரது பாதம் மருத்துவர்  பிள்ளையின் நீட்டப்பட்ட கால்களின்மீது பட்டுவிட்டது...(அதாவது மிதித்துவிட்டார்)  கால் ஏற்கனவே வீங்கியிருந்தது....அப்துலின் கால்வேறு மிதித்துவிட்டதால் ஏழு சிலந்திப் புழுக்களும் (Guinea worms) வெளியே தள்ளப்பட்டன... வலி தாங்க முடியாமல் டாக்டர் பிள்ளை பெருங்கூச்சலில் அலறினார்...சில சமயத்தில் அவர் அமைதியடைந்து மாறிமாறிப் பாடவும், அழவும் தொடங்கினார்... பாபா அப்போது, "பார், நமது சகோதரன் இப்போது சௌக்கியமாகிப் பாடிக் கொண்டிருக்கிறார்.,,!" என்றார்...அப்போது பிள்ளை "காக்கை எப்போது வரும்...? கொத்தும்" என்று கேட்டார்...பாபா "காக்கையை நீ காணவில்லையா...? அவன் மீண்டும் வரமாட்டான்..அப்துல் தான் காக்கை என்றார் பாபா.. இப்போது வாதாவுக்குப் போய் ஓய்வெடுத்துக் கொள்... விரைவில் நீ குணமடைவாய்" என்றார்...உதியைத் தடவியும் அதைத் தண்ணீருடன் உட்கொண்டும் வேறு எவ்வித சிகிச்சையும், மருந்தும் இல்லாமலேயே பாபா முன்பே  கூறியபடி பத்தே நாட்களில் வியாதி பூரண குணமாக்கப்பட்டது.

🔥பிளேக் வியாதியால்  தாக்கப்பட்டுள்ள  ஷாமாவின் உறவினர் பெண்ணை, எவ்வாறு பாபா  உதியை  வழங்கி ஆசிர்வதித்து அந்நோயைக் குணப்படுத்தினார் என்பதன் விளக்கவுரை இங்கே...🔥

ஷாமாவின் சகோதரர்  பாபாஜி என்பவர் ஸாவ்லிவிஹீர்  என்கின்ற  கிராமத்துக்கு அருகில் தங்கியிருந்தார்.. ஒருமுறை  அவர் மனைவி கட்டிகளுள்ள  பிளேக் வியாதியால் தாக்கப்பட்டாள்...அவளுக்கு அதிகமான காய்ச்சலும் இருந்தன...அடிவயிற்றில் இரு கட்டிகளும் ஏற்பட்டன.  பாபாஜி  சீரடிக்கு வருகைப்புரிந்து,  தன் சகோதரன்  ஷாமாவிடம்  உதவி செய்யும்படி கூறினார்...ஷாமா கலக்கம்  அடைந்தார்...ஆனால் தமது வழக்கப்படி பாபாவிடம் சென்று அவர் திருமுன் வீழ்ந்துப் பணிந்து, பாபாவின் ஆசியைக் கோரி வியாதியைக் குணமாக்கும்படி கேட்டுக் கொண்டார். தன் சகோதரரின்  வீட்டிற்குச் செல்வதற்கு பாபாவின்  உத்தரவை வேண்டி நின்றார்... பாபா "அங்கே இந்தப் பின்னிரவு நேரத்தில் செல்ல வேண்டாம்...அவளுக்கு உதியை அனுப்பு..காய்ச்சலைப்  பற்றியும், கட்டியைப் பற்றியும், ஏன் கவலைப்பட வேண்டும்...?  கடவுளே நமக்குத் தந்தையும், எஜமானரும் ஆவார்..எளிதில் அவள் குணமடைவாள்...  இப்போது போகாதே... நாளை காலையில் போய் உடனே திரும்பிவிடு" என்றார் பாபா...

பாபா ஆசிர்வதித்து வழங்கும்  உதியில் ஷாமாவுக்குப் பூரணமான  நம்பிக்கை உண்டு...உதி ஷாமாவின்  சகோதரன்  பாபாஜியிடம் அனுப்பப்பட்டது...கட்டிகளின் மீது அது தடவப்பட்டது...சிறிது  தண்ணீரில் கரைக்கப்பட்டு அருந்தக் கொடுக்கப்பட்டது.  அதை உட்கொண்டது தான் தாமதம், பெருமளவில் வேர்த்துக்கொட்டி காய்ச்சல்  நீங்கியது...நோயாளிக்கு நல்ல தூக்கம் கிடைத்தது... அடுத்தநாள் காலை பாபாஜி தமது மனைவியின் உடல்நிலை தேறிவிட்டதையும், காய்ச்சல்,  கட்டிகள் நீங்கி, உடலில் வலிமையும், சக்தியும்  பெற்றதையும் கண்டு அதிசயப்பட்டார். ஷாமா அவ்விடத்திற்கு அடுத்தநாள் சென்றபோது அப்பெண்மணி அடுப்பருகில் அமர்ந்து தேநீர் தயாரித்துக் கொண்டிருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.. ஷாமா, நோய் குணமாகிவிட்டதா  தன்  சகோதரனை விசாரித்தார்.. பாபாவின் உதி தன் மனைவியை  முழுவதுமாக ஒரே இரவில் குணமாக்கிவிட்டது என்று கூறினார்.. "காலையில் சென்று உடனே திரும்பு" என்னும் பாபாவின் மொழிகளிலுள்ள குறிப்பு நுட்பத்தை அப்போது ஷாமா புரிந்து கொண்டார்...

தேநீர் உட்கொண்டதும் ஷாமா திரும்பினார்...  பாபாவை வணங்கிய பின், "தேவா..! தங்களது திருவிளையாடல்தான் என்ன...?  தாங்கள் முதலில் புயலை எழுப்பி எங்களை நிலைகுலையச் செய்கிறீர்கள்...பின்னர் அதை அமைதிப்படுத்தி ஆசுவாசப்படுத்துகிறீர்கள்" என்றார்... பாபா "நடவடிக்கைகளின் வழி விளங்காப் புதிர்நிலையாக உள்ளது...நான் எதையும் செய்யவில்லையாயினும், ஊழ்வினையின் காரணமாக நிகழும் செயல்களுக்கெல்லாம் பக்தர்கள்  என்னைப் பொறுப்பாளி ஆக்குகின்றார்கள்...நான் அவர்களின் சாட்சி மாத்திரமே..கடவுள் ஒருவரே ஒரே செயலாளர்...  அகத்தூண்டுவிப்பாளர்...  மேலும் கடவுள் மிகவும் கருணையுள்ளவர்... நான் கடவுளோ, பரமாத்மாவோ அல்ல என்று கூறி தன்னை எளிமையின் இருப்பிடமாகக் காட்டிக்கொண்டார்...யான் கடவுளின் பணிவுள்ள ஒரு வேலைக்காரனும், அவரை அடிக்கடி நினைவில் இருத்திக் கொள்பவனும் மட்டுமே என்றார் பாபா..மேலும்  எவனொருவன் தனது அகங்காரத்தை ஒதுக்கித்தள்ளி கடவுளுக்கு  நன்றி செலுத்தி, அவரை முழுமையாக நம்புகின்றானோ, அப்போது தான்  அவனது பந்தங்கள் அறுபட்டுப் போகின்றன... அவன் முக்தியடைகிறான்" என்றார்...

🔥எவ்வித சிகிச்சையும் பலனளிக்காத நிலையில் உள்ள ஈரானியப் பெண்ணின் வலிப்பு நோய்  எவ்வாறு உதியின் மூலமாக குணமாக்கப்பட்டது என்பதன் விளக்கவுரையை இங்கு காண்போம்.....🔥

ஒரு ஈரானிய கனவானுடைய அனுபவத்தை இப்போது இங்கு  பார்ப்போம்..அவரின் சிறு மகளுக்கு ஒவ்வொரு  மணி நேரத்திற்கு ஒரு முறை  வலிப்பு வந்தது..அப்போது அவள் பேசும் சக்தியை இழந்தாள்...அங்கங்கள் குறுகி உணர்வின்றிக் கீழே சாய்ந்தாள்...எந்த சிகிச்சையும் அவளுக்கு எவ்வித குணத்தையும் அளிக்கவில்லை.. பாபாவின் சக்தி வாய்ந்த  உதியைப் பற்றி எடுத்துக்கூறி  சில நண்பர்கள் அவளது தந்தைக்குச் சிபாரிசு செய்து,  உதியை  பம்பாயில் விலேபார்லேயில்  உள்ள காகா சாஹேப் தீஷித்திடம் இருந்து பெறும்படி கூறினார்கள்...பின்னர் ஈரானிய கனவான் உதியைப் பெற்றுத் தினந்தோறும் அதை நீரில் கலந்து தன் மகளுக்குக் கொடுத்து வந்தார்.. ஆரம்பத்தில்  ஒரு மணி நேரத்திற்கு  ஒருமுறை வந்துக் கொண்டிருந்த வலிப்பு,  நாளடைவில் ஏழு மணி நேரத்திற்கு  ஒருமுறை வரத்தொடங்கியது...அதற்குச் சில தினங்களுக்குப் பின் அவள் முழுமையாக  குணமடைந்தாள் என்பது குறிப்பிடத்தக்கது..

🔥ஹர்தாவைச் சேர்ந்த முதியவரின் சிறுநீர் கல் பிரச்சினை, எவ்வாறு உதியின் மூலம் குணமாக்கப்பட்டது என்பதன் அனுபவ உரையை இங்கு காண்போம்...🔥

ஹர்தாவைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தமது மூத்திரப் பையிலுள்ள  கல் ஒன்றால் கஷ்டப்பட்டார்...அத்தகைய கற்களை  பொதுவாக ரணசிகிச்சை மூலமாகவே நீக்கப்படுகின்றன...மக்கள் அவரையும் ஒரு அறுவை சிகிச்சை செய்துக் கொள்ளும்படி கூறினர்.  அவர் முதுமையும், தளர்ச்சியும் உடையவராயிருந்தார்...அவருக்கு மனோதிடமும் தேவையாயிருந்தது...அறுவை சிகிச்சைக்குத் தன்னை உட்படுத்திக் கொள்வதை அவரால் நினைக்க இயலவில்லை...அந்த நகரத்தின் இனாம்தார், அந்நேரத்தில் அவ்விடத்துக்கு வரும்படியாக நிகழ்வு இருந்தது..அவர் பாபாவின் அடியவர்களில் ஒருவர்...எப்போதும் தம்மிடம் உதி கையிருப்பை வைத்திருந்தார்.. சிலரின் சிபாரிசின் பேரில் அம்முதியவரின் மகன் உதியை சிறிது அவரிடமிருந்து பெற்று, தண்ணீரில்  உதியைக்  கலந்து  தனது  வயதான தந்தைக்கு உட்கொள்ளக் கொடுத்தான்...ஐந்தே நிமிடத்திற்குள் உதி உடம்பில் சார்ந்து...கல் கரைந்து சிறுநீர் வழியாக வெளிவந்துவிட்டது... முதியவரும் விரைவில் குணம் அடைந்தார்....

🔥மும்பையைச் சேர்ந்த ஒரு பெண்ணின் பிரசவத்தின் போது வருகின்ற தீவிரமான பிரச்சனையை , எவ்வாறு  பாபா உதியின் மூலம்  ஆசிர்வதித்து குணப்படுத்தினார்  என்பதன் அனுபவ உரையை இங்கு காண்போம்...🔥

பம்பாயில், காயஸ்த பிரபு இனத்தைச்  சேர்ந்த  ஒரு பெண்மணி பிரசவத்தின் போதேல்லாம் கடும் வேதனையடைந்தாள்.ஒவ்வொரு முறை தான் கர்ப்பமானதும் என்ன செய்வதென்று தெரியாமல் அவள் பீதியடைந்து வருத்தமுற்றாள்...பாபாவின்  பக்தரான கல்யாணைச் சேர்ந்த ராமமாருதி என்பவர், சுகப்பிரசவத்திற்காக அப்பெண்ணை  சீரடிக்கு அழைத்துச் செல்லும்படி அவளது கணவனுக்கு அறிவுரைத்தார்..மீண்டும் அவள் கருவுற்றபோது கணவனும் மனைவியும் சீரடிக்குச் சென்று, அங்கு சில மாதங்கள் தங்கி பாபாவை வணங்கி, சேவைகள் செய்து பாபாவின் ஆசிர்வாதத்தைப்  பெற்று அதீத  பலன்களை அடைந்தனர்...

சிலநாட்களுக்குப்பின் பிரசவ நேரம் வந்தது. வழக்கம் போல் கருப்பையிலிருந்து வரும் வழியில் தடங்கல் ஏற்பட்டது...பிரசவ வேதனையை அவள் அனுபவித்தாள்..என்ன செய்வதென்று தெரியவில்லை...ஆனால் பாபாவை நோக்கி நிவாரணத்திற்கு கடும்  பிரார்த்தனை செய்தாள்.. இத்தருணத்தில் பக்கத்தில் இருந்த ஒரு பெண்மணி வந்து சேர்ந்தாள்.  பாபாவைத் தொழுது பிரார்த்தனை செய்தபின் உதிக் கலவையை பருகுவதற்கு அவளிடம் கொடுத்தாள்..ஐந்தே நிமிடங்களில் அப்பெண் பத்திரமாகவும், வலியேதுமின்றியும் பிரசவித்தாள்..பிறந்த குழந்தை அதன் தலைவிதிப்படி இறந்தே பிறந்தது..ஆனால் தாயோ கவலையின்றும், வலியின்றும் நீங்கியவளாய் காப்பாற்றப்பட்டதற்காக  பாபாவுக்கு நன்றி கூறி,  எப்போதும் அவர்பால் நன்றியுள்ளவளாய் இருந்தாள் அந்தப் பக்தை.....

ஓம்  ஶ்ரீ சாய்ராம்...🙏🙏

ஸ்ரீ சாயீயை பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்...🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசாயீ  சர்வசக்தி சுயவிழிப்புணர்வு தியான பீடம்..🙏🏼🙏🏼🙏🏼


https://youtu.be/60ffsVc8CpU

https://youtu.be/0E62yQlxWIE

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக