ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻
ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻
🔥உலக வாழ்க்கை அல்லது ஆன்மீக பயிற்சி, எதுவாக இருப்பினும், அனைத்தையும் அது குருவிற்கு செய்யும் சேவை என எண்ணி செய்வதால் ஆன்மீக உணர்வு அதிகரிப்பதில் அதிகபட்ச பலன் கிடைக்கிறது..🔥
‘குரு என்பவர் யார்‘ ஒரு ஸாதகரின் வாழ்வில் குருவின் முக்கியத்துவம் என்ன என்பது பற்றி விளக்குகிறோம்....🙏🏻
இறைவனின் வெளிப்படாத (நிர்குண) வழிகாட்டும் தத்துவத்தின் மனித (ஸகுண) ரூபமே குரு என்பவர் ஆவார். இவ்வாழ்க்கை இறைவனின் கருணையால் நாம் பெற்ற பரிசு ஆகும். இறைவனை உணர்ந்து அவருடன் ஒன்றர இணைய, பிறப்பு-இறப்பு சக்கரத்திலிருந்து விடுவிக்கும் பொருட்டு பல ஜென்மங்களாக குரு அல்லது இறைவனின் வழிகாட்டும் தத்துவம் பொறுமையாக நம்முடன் பயணித்திருக்கிறது. இறைவனுடன் ஒன்றியிருக்கும் நிலையில் அமைதியில் திளைக்கிறோம். குரு எவ்வளவு தூரம் நம்மை வழிகாட்டி வளர்த்து விடுகிறார் எனவும், நம்மை திரும்ப திரும்ப காப்பாற்றி இருக்கிறார் எனவும் புரிந்து கொள்கையில் நம் நன்றியுணர்வு மேலோங்குகிறது.
குருவிற்கு செய்யும் சேவை இறைவனுக்கு செய்யும் சேவையாகும். மனித ரூபத்தில் இருக்கும் இறைவனுக்கு சேவை செய்து மகிழும் வாய்ப்பு நம்மில் அனைவருக்கும் கிடைப்பதில்லை. எனினும் நாம் செய்யும் எல்லா காரியங்களையும் குருவிற்கு செய்யும் சேவையாக எண்ணலாம்...
ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக