ஞாயிறு, செப்டம்பர் 10, 2023

பிரபஞ்சத்தில் மூன்று விஷயங்கள் சிரஞ்சீவியானது.

 ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ....🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த உபதேச பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

பிரபஞ்சத்தில் மூன்று விஷயங்கள் சிரஞ்சீவியானது... ஒன்று பிரபஞ்சம், எப்போதும் இருப்பது. இரண்டாவது ஆத்மா.. ஒரு தனிப்பட்ட ஆத்மா சிரஞ்சீவியானது. மூன்றாவது, ஆகப் பெரிய மனம், அல்லது கடவுள்.. எப்போதும் இருப்பது. இல்லையென்றால் அது கடவுள் என்று அழைக்கப்பட மாட்டாது. கடவுள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்தார், இப்போது இல்லையென்றால் அது கடவுளில்லை. அல்லது கடவுள் எதிர்காலத்தில் வருவார் என்றாலும் அது கடவுள் இல்லை. கடவுள் என்பவர் முன்பு இருந்தார், இப்போது இருக்கிறார், எதிர்காலத்திலும் இருப்பார்..அது எங்கும் எப்போதும் இருப்பது. கடவுள் ஒரு மனிதரல்ல. அது ஒரு சக்தி, அது ஒரு வெளி. உபநிஷத்தில் ஒரு அழகான கதை உண்டு.

ஒரு எட்டு வயதுச் சிறுவன் தன் தந்தையிடம் கேட்டான், அப்பா, கடவுள் எப்படி இருப்பார்..?’ எனவே, தந்தை தன் மகனை வீட்டுக்கு வெளியே அழைத்துச் சென்று, அவனிடம் கேட்டார், ’இந்த கட்டிடம் கட்டுவதற்கு முன்பு இங்கே என்ன இருந்தது..?’அந்தச் சிறுவன் சொன்னான், ‘ஒரு வெட்ட வெளி. ’அந்தத் தந்தை கேட்டார், இந்தக் கட்டிடம் எங்கே நிற்கிறது..?’அந்தச் சிறுவன் பதலளித்தான், ‘வெட்ட வெளியில்.’‘அந்தக் கட்டிடம் இடிக்கப்பட்டால்அங்கு என்ன இருக்கும்..?’ அந்தச் சிறுவன் கூறினான், வெட்ட வெளி’ அந்தத் தந்தை கூறினார், எனவே வெட்ட வெளி என்பது எப்போதும் இருப்பது அல்லவா..?’அந்தச் சிறுவன் கூறினான், ’ஆம்.அந்தத் தந்தை கூறினார், அது போலத்தான் கடவுள் இருப்பார்...

ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான படம்...🙏🏻🙏🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக