திங்கள், செப்டம்பர் 04, 2023

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா இவ்வாறு ஆரம்பிக்கிறார்,...!

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவானின் உபதேச பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா இவ்வாறு ஆரம்பிக்கிறார்... ‘என்னிடம் முழு பாசம் உடையவன், என்னை முழுவதுமாக சார்ந்துள்ளவன், யோகப் பயிற்சியின் மூலம் (பரமாத்மாவே விவரித்துள்ளபடி) சதா என்னோடு தொடர்பு உண்டாக்கிக் கொள்வதில் முனைந்திருப்பவன் மேலும் சந்தேகமற்று இருப்பவன்; எவ்வாறு அத்தகைய ஒருவன் என்னையும், என் முழு வடிவத்தையும் முழுவதுமாக அறிய முடியும், அதை நான் உனக்கு விவரிக்கிறேன்.’ பல முறைகள் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அர்ஜுனனிடம் கூறினார்,‘என்னிடம் மட்டும் மனதை நிலை நிறுத்து,இங்குமங்கும் அல்ல’. இதை அவர் ஏன் பல முறைகள் கூறினார்? ஏனெனில் அர்ஜுனன் அவ்வளவு மனமுடைந்து, அவனுடைய சந்தேகத்தினாலேயே பீடிக்கப்பட்டிருந்தான்...

எவன் ஒருவனுடைய சந்தேகங்கள் மறைந்துள்ளனவோ அவன் மட்டுமே அறிவைப் பெற முடியும். வழக்கமாக நாம் அது நேர்மாறாக என்று நினைக்கிறோம். அறிவை பெறுபவன் அனைத்து சந்தேகங்களிலிருந்தும் நிவாரணமடைகிறான். இரு விஷயங்கள் இருக்கின்றன. முதலாவதாக, அறிவைப் பெறுபவன் அனைத்து சந்தேகங்களிலிருந்தும் விடுவிக்கப்படுகிறான், இது, பௌதீக உலகத்திற்குப் பொருந்தும், அது வரையறக்குட்பட்டது. மற்றொன்று, சந்தேகத்திலிருந்து விடுவிக்கப்பட்டவன்; எந்த ஒருவனுடைய பிராணன் (நுண்ணிய உயிர் சக்தி அல்லது சக்தி) மிகவும் உயர்ந்துள்ளதோ, அறிவை மிகவும் ஆழமான நிலையில் புரிந்து கொள்ளும் சக்தியுள்ளவனாக ஆகிறான்... அவனே உண்மையில் அறிந்தவன்...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻🙏🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக