திங்கள், செப்டம்பர் 18, 2023

ஆன்மீகம் என்பது இருமை நிலையை கடந்து செல்லும் ஒன்று..!

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ....🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🙏

ஆன்மீகம் என்பது இருமை நிலையை கடந்து செல்லும் ஒன்று..!நல்லது கெட்டது உலகத்தில் நீங்கள் பார்த்தீர்களானால் எல்லாமே இருமை தன்மையைக் கொண்டது தான் உதாரணமாக ஆண், பெண் இரவு, பகல் இப்படி பல....உலகத்தில் நல்லது, கெட்டது என்பது தான் உலகத்தை இரு வகையாகப் பிரித்துள்ளது...

வெறும் ஆன்மீக சிந்தனை மட்டுமே நம்மை ஆன்மீகத்தின் உண்மை தன்மையை அறிய உதவாது...நல்லவர்கள் கெட்டவர்கள் என்ற பாகுபாடு மூலமாக பார்த்தால் உலகத்தில் உள்ள அத்தனை துறைகளிலும் ஆன்மீகம் உட்பட நல்லவர்களும் இருப்பார்கள் கெட்டவர்களும் இருப்பார்கள்.

உண்மையில் ஆன்மிகம் ஒருவரை என்ன செய்கிறது என்றால் இந்த இருமை நிலையான, நல்லது கெட்டது இவைகளை கடந்து உலகத்தின் உண்மைத் தன்மையை அறிந்துக்  கொள்ள உதவி, உலகத்துக்கு நமக்கும் இருக்கும் அனைத்து வேற்றுமைகளையும் ஒன்றுமில்லாமல் செய்து உலகத்தோடு ஒன்றினைக்கிறது...

எப்படி ஒன்று இனைக்கிறது என்றால் இந்த உலகம் ஐந்து பூதங்களால் ஆனது நம் உடலும் ஐந்து பூதங்களால் ஆனது. ஆன்மிகத்தின் மூலம் இரண்டு தனித்தனி ஐம்பூதங்களும் ஒன்றோடு ஒன்றாகி விடுகிறது..

ஆன்மீகத்தின் இந்த அனுபவ நிலையில் உள்ள‌ ஒரு யோகி.. ஞானி , உலகத்தை எப்படிப் பார்க்கிறார் என்றால் தான் வேறு உலகம் வேறு என்று பார்ப்பதில்லை உலகத்தையே தனதாக பார்க்கிறார்.

ஞானியின் பார்வையில் உலகத்தில் அவர் ஒருவர்தான் இருக்கிறார் மற்றவர்கள் எல்லாமே மனிதன், விலங்குகள், மரம், செடி, கொடி எல்லாமே அவர்தான்...அண்டமும் பிண்டமும் ஒன்றே.. !

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக