வியாழன், செப்டம்பர் 21, 2023

மக்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்படும் ஆன்மீக விஷயங்கள் ..?!


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🙏🙏

மக்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்படும் ஆன்மீக விஷயங்கள் ..?!

மைக் பிடித்து , மேடையில் பேசி,பெரிய நிலங்களை வளைத்துபோட்டு, ஆடல் பாடல்களுடன், கைதட்டினால் தான் இறைவனுக்கு கேட்கும் என்பது போல, பெரிய சிலைகள், அதைவிட பெரிய உண்டியல்கள். இதெல்லாம் இருந்தால் தான் ஆன்மீகம்...இப்படி தான் மக்களும் ஏமாந்து கொண்டே இருக்கிறார்கள்...என்னைக்காச்சும் யோசிச்சு பார்த்து இருக்கீங்களா..? ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள் என்று மேடைகளில் பிரச்சாரம் செய்யும் இந்த மத அரசியல்வாதிகள், மத வியாபாரம் செய்யும் விற்பனையாளர்கள் தாங்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் ஏன் இலவச கல்வியை ஏழை மாணவர்களுக்கு வழங்க முன்வருவதில்லை..?இங்கு மக்களும் கூட, குறிப்பாக படித்த மக்களும் கூட வியாபாரம் செய்யும் மத விற்பனையாளர்கள் செய்வது தான் ஆன்மீகம் என்கிற தவறான புரிதலில் இருக்கிறார்கள்....

இறைவனை அடைவதற்கு இடைத்தரகர்கள் எதற்கு..? ஆன்மீகம் என்பது உன்னை சார்ந்தது, உன்னை மட்டுமே சார்ந்தது....அதனை இமயமலை மூலமோ, ஜெருசலேம் மூலமோ, ஹஜ் பயணம் மூலமோ கொடுத்துவிட முடியாது...அவைதான் கொடுக்க முடியும் என்றால் இந்நேரம் காற்றில் ஆன்மீகம் பரவியிருக்கும், அந்த காற்றும் இமயமலை தொடங்கி, ஜெருசலேம் சென்று, ஹஜ் பயணம் செய்திருக்கும்...தற்போது அந்த காற்றின் ஆன்மீக மதம் என்ன..? அனைத்து மதங்களிலும் ஆன்மீகம் என்பது மதத்துடன் தொடர்பு படுத்தப்பட்டு தவறாக சித்தரிக்கப்படுகிறது...

இறைவன் குடிகொள்ளும் உள்ளமே இறைவனது இல்லம்...ஆன்மீகத்தை வெளியில் தேடாதீர்கள், அது உங்களுக்கு உள்ளே இருக்கிறது....உணருங்கள். இறைவனை ஏற்றுக் கொள்ளுங்கள்...அன்பே சிவம் இயேசு அல்லா

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்... 🙏🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக