ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻
ஶ்ரீசீரடி சாயீபகவானின் உபதேச பொன்மொழிகள்...🙏🏻🙏🏻
யோகம் என்பது என்ன...
குகையிலோ, வீட்டிலோ, வெளியிலோ, காட்டிலோ, மலையின் உச்சியிலோ, நீரிலோ, நெருப்பிலோ, ஒருவன் வசிக்கட்டும். இவைகளில் எங்கு வசித்தாலும்,..! எவனது உள்மனம் உமது திருப்பதத்தில் ஒன்றியதோ, அப்படி ஒன்றியிருத்தலே யோகம் எனப்படும்.. அவனே பரம யோகி எனப்படுவான்..அவனே எப்போதும் இன்பமயமாய் இருப்பவன்...!?🔥
இறைவனிடம் சரணடைந்தவன் எந்த இடத்தில் வசிக்கவேண்டும்.. எந்த மாதிரி வாழவேண்டும் என்று கேட்பவர்களுக்குப் பதில் சொல்வது போல இந்த வரிகள் அமைந்திருக்கிறது...
இவ்வுலகவாழ்க்கை முறைப்படியே வாழ்ந்து வரும் பக்தனுக்கு இப்படியான சந்தேகங்கள் எல்லாமே வரும். எதைச் செய்யவும் ஒரு நல்ல காலம் என்பதுபோல், எவரும் இடம், பொருள், ஏவல் என்று பார்த்துத் தான் எதையும் சொல்கிறார்கள், செயலும் ஆற்றுகிறார்கள். அதில் முதலாவதாக வரும் இடம் என்ற பரிமாணத்தைப் பற்றித்தான் இங்கு பேசப்பட்டிருக்கிறது. அதனால் பக்தன் தனது முயற்சி நன்கு கைகூடி வருவதற்கு ஏற்ற இடம் எது என்று கேட்கும் குணம் உள்ளவன்தான்....
எப்போதும் போல் வீட்டிலேயே இருக்கலாமா, அல்லது வீட்டை விட்டு வெளியேறி தனிமை மிகுந்த காட்டிற்குச் சென்று, அங்கு குகை எதிலாவது வசிக்கலாமா, அல்லது எவரும் எளிதில் அணுகமுடியாத மலைக்குச் சென்று அதன் உச்சியில் இருக்கலாமா, அல்லது எவரும் எதிர்பார்க்கக் கூட முடியாது நீரில் அமிழ்ந்தோ, நெருப்பினில் புகுந்தோ தவம் செய்ய வேண்டுமா என்று முடிந்தது, முடியாதது என்று எல்லாவற்றையும் அவன் கேட்கலாம். அதற்குப் பதிலாக “எங்கு முடியுமோ அங்கேயே இரு, ஆனால் எங்கிருந்தாலும் சரண் அடைந்திருக்கிறாயே அந்த ஞானியோ, பகவானோ அவனது பாதங்களை மனதினில் இறுகப் பற்றிக்கொள்”, அதுதான் மிக மிகத் தேவையானது என்று சொல்லப்பட்டிருக்கிறது.
அப்படி ஒன்றி இருப்பதுதான் யோகம் என்றும், அப்படி இருப்பவனை பரம யோகி என்றும் சொல்வார்கள். அவனுக்கு இன்பம்-துன்பம் என்று மாறி மாறி வராது, எப்போதும் அவன் இன்ப நிலையிலேயே இருப்பான் என்ற உத்திரவாதமும் இங்கு அளிக்கப்பட்டிருக்கிறது
ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்..🙏🏻🙏🏻.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக