ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ....🙏🙏
ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🙏
இறைவன் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறான்...? (ஒவ்வொரு தனி மனிதனுக்கும் )....நீங்கள் யாராவது ஒருவருக்கு ஒரு பொருளை பயன்படுத்துவதற்கு கொடுத்தால் அந்த பொருளை அந்த நபர் பயன்படுத்தி விட்டு கொடுக்கும் பொழுது அந்த பொருள் நீங்கள் கொடுத்தது போலவே நன்றாக இருந்தால் நீங்கள் அப்பொழுது என்ன நினைப்பீர்கள் ..?
அந்த நபர் மீது உங்களுக்கு ஒரு நம்பிக்கை வரும் அந்த நம்பிக்கை எப்படி என்றால் அந்த நபருக்கு நீங்கள் திரும்பவும் அவர் கேட்கும் பொருளை கொடுக்க முன்வருவீர்கள் அப்படிதானே..? அதே அந்த நபர் உங்கள் பொருளை பழுதாக்கியோ அல்லது சேதபடுத்தியோ உங்களிடம் திரும்ப கொடுத்தால் ..உங்களுக்கு அவர் மீது என்ன எண்ணம் தோன்றும்..?
அந்த நபர் திரும்ப எத்தனை முறை கேட்டாலும் நீங்கள் எந்த பொருளையும் கொடுக்க மறுப்பீர்கள் அப்படிதானே..?மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையிலேயே இப்படிப்பட்ட நம்பிக்கை சார்ந்த செயலாற்றம் இருக்கும் பொழுது நாம் இறைவனிடம் (பிரபஞ்சத்திடம்) கேட்கும் எந்த ஒரு பிரார்த்ததனைக்கும் எவ்வளவு நம்பிக்கை சார்ந்த செயல்முறை தேவை...!!
பிரபஞ்சம் உன்னிடம் கொடுத்த காற்று, நீர்,உணவு,உணர்ச்சி ,நிலம் ஆகியவற்றை அது கொடுத்தது போலவே அவற்றை அதன் தன்மை மாறாமல் நீ இதுவரை கொடுத்திருக்கிறாயா..! அல்லது கொடுக்க முயற்சியாவது எடுத்திருக்கிறாயா..!?தனித் தனியே ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த பிரபஞ்சம் மேலே குறிப்பிட்ட எல்லாவற்றையும் பயன்படுத்த கொடுத்தது...ஆனால் நீ அவற்றையெல்லாம் எப்படி திரும்ப கொடுத்திருக்கிறாய்..?
கொஞ்சம் சிந்தித்து பார்..?கொடுத்ததை எல்லாம் சேதபடுத்தி வைத்திருக்கிறாய் அதனால் தான் உன் பிராத்தனையோ அல்லது வேண்டுதலோ இறைவனிடம் ஏற்றுக் கொள்ள மறுக்கபடுகிறது....உன் சுயசிந்தனையில் உனக்கு என்றைக்கு இறைவன் கொடுத்ததை நாம் சரியாக தான் பயன்படுத்தியிருக்கிறோம் என்று உணர்கிறாயோ அன்று உனக்கு நீ கேட்கும் பதில் கிடைக்கும்..இதுவும் நம்பிக்கை சார்ந்ததே.... அந்த நம்பிக்கையே இறைநம்பிக்கை...!
உங்கள் சுற்றுசூழல் நன்றாக இருந்தால் நீங்களும் நோய் நொடி இல்லாமல் நன்றாக இருப்பீர்கள்.நீங்கள் உண்ணும் உணவையும் , அருந்தும் நீரையும்,சுவாசிக்கும் காற்றையும் சுத்தமாக இருக்க கவனியுங்கள்.. ..சேதபடுத்திவிட்டு திரும்பவும் உங்களுக்கு புது வாழ்க்கை கேட்டால் படைப்பின் சக்தி எப்படி கொடுக்கும் ...?!
மீண்டும் பேசுகிறேன்...!? இன்னும் பேசுவேன் ஏனென்றால் பொருள் என்னுடையது...
ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக