செவ்வாய், அக்டோபர் 03, 2023

பிரம்மார்ப்பணம்





ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ.🙏🙏

பிரம்மார்ப்பணம்...🙏

‘எதை செய்கிறாயோ, எதை உண்கிறாயோ, எதை ஹோமம் செய்கிறாயோ, எதை தானம் செய்கிறாயோ அவற்றை எல்லாம் எனக்கு அர்ப்பணம் செய். இதனால், புண்ணிய, பாவங்களிலிருந்து நீ விடுபடுவாய்’ என்கிறார் பகவான்..அதாவது,நாம் செய்யும் காரியங்களை எல்லாம் பகவானுக்கு அர்ப்பணமாக செய்வது பிரம்மார்ப்பணம். பிரம்மார்ப்பணம் என்பது முக்தி நிலைக்கு அழைத்துச் செல்லும் முதல்படி. ..

முதல்படியில் ஏறுவது எளிது அல்லவா..? இறைவனுக்கு நாம் அன்புடன், ஆசையுடன், ஆர்வத்துடன் எதை சமர்ப்பித்தாலும் அதை உள்ளன்போடு இறைவன் ஏற்றுக்கொள்கிறார். அது மட்டும் உண்மை. ’எவன் பக்தியுடன் ஒரு பச்சிலையோ, புஷ்பமோ, தீர்த்தமோ சமர்ப்பிக்கிறானோ அவற்றை எல்லாம் உள்ளன்புடன், பிரியமாய் நான் ஏற்கிறேன்’ . என்கிறார் கீதையில் பகவான்... 

அதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. குசேலர் பக்தியுடன் தந்த ஒருபிடி அவல், திரவுபதி தந்த ஒரு சிட்டிகை கீரை, கஜேந்திரன் துதிக்கையால் எடுத்து அளித்த புஷ்பம், சபரி அளித்த பழம் என இப்படி பக்தியுடன் வழங்கப்பட்ட எளிய பொருள்களை இறைவன் ஏற்றுக்கொண்டான் என்பதற்கு ஆதார பட்டியல் நீளும். இறைவன் நம்மிடமிருத்து பெரிதாக எந்தப் பொருளையோ, கஷ்டமான காரியத்தையோ எதிர் பார்ப்பதில்லை. ஆகையால் நாம் உடலாலோ, மனதாலோ, வாக்காலோ, தர்ம செயல்களாலோ, பக்தியினாலோ, இயற்கை வசப்பட்டு சுவபாவத்தாலோ எது எதைச் செய்கிறோமோ அது எல்லாவற்றையும் இறைவனுக்கே என அர்ப்பணிக்க வேண்டும். இப்படி நாம் நாளும் செய்கின்ற சின்ன சின்ன அர்ப்பணங்கள் நமக்கும் இறைவனுக்குமான உறவை வலுப்படுத்திக்கொண்டே இருக்கும்.

ஒரு சிறு கம்பி கிடைத்தால் கூட அதைப் பற்றிக் கொண்டு மின்சார சக்தி அதன் வழியாக எளிதில் பாய்ந்து செல்வது போல, இறைவனின் அருளும் நாம் செய்கின்ற சிறு அர்ப்பணப் பொருள் வழியே நம்மிடம் பாய்கிறது. ‘எவன் என்னை எங்கும் பார்க்கிறானோ, என்னிடத்தில் எல்லாவற்றையும் பார்க்கிறானோ, அவனுக்கு நான் காணாமல் போவதில்லை. அவனும் எனக்கு காணாமல் போவதில்லை. அவன் எந்த நிலையில் இருந்தாலும், எத்தொழிலைப் புரிந்தாலும் என்னிடத்திலே இருப்பான்.’ என்று கீதையில் பகவான் உறுதியளித்திருக்கிறார்.... 

ஆதலால், நம்பிக்கையோடு ஒவ்வொரு பொழுதையும் பகவானுக்காக அர்ப்பணம் செய்துவருவோம். நம் அன்றாடம் செய்கின்ற கடமையில் உண்மையுடன் சிரத்தையுடன் இருப்போம். இறைவனின் ஆசி கிடைக்கும் வரை பொறுத்திருப்போம்....

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏

த்விதிய த்வை பயம் பவதி’...!




ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🙏

 த்விதிய த்வை பயம் பவதி’....என்று ஒரு பழமொழி உண்டு...பயத்தின் காரணம் இரண்டாய் இருப்பது என்பதே இதன் பொருள். சுயத்தோடு ஒன்றாமல் இருப்பதே இரண்டாய் இருப்பதாக இங்கே குறிப்பிடப்படுகிறது.) தனக்குள்ளே தன் மெய்யுணர்வோடு ஒன்றாமால் இருப்பவர்கள் (அந்தர்முகி), உள்முகமாக நோக்கி தன் சுயத்தோடு ஒன்றாமல் இருப்பவர்கள்...இவர்களை உறுதியானவர்களாக கூறவே முடியாது. தாபங்களும், ஜூர வேகமும் (பரிதவிப்பு) கொண்டவர்களால் தமக்குள் சென்று சுயத்துடன் ஒன்றுவது என்பது முடியவே முடியாது..

ஒருவர் தமக்குள்ளே மையத்தில் இரு inக்கும் போது மட்டுமே பெரும் வலிமை பிறக்கிறது. அப்படிப்பட்ட வலிமை, தாபம் மற்றும் ஜூர வேகங்களினால் வரும் எதிர்மறை விளைவுகள் அற்றது, மேலும் இது அவற்றையெல்லாம் தாண்டியது. அது மட்டுமே உண்மையான வலிமை. இதனால் தான் ஸ்ரீகிருஷ்ண பகவான் சொல்கிறார், ‘எங்கெல்லாம் தூய வலிமையை பார்க்கிறீர்களோ, அது நான் என்று தெரிந்துகொள்....

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்..🙏🙏

திங்கள், அக்டோபர் 02, 2023

ஷீரடி சாய்பாபாவை பற்றி..? அகத்திய மாமுனிவர்(குருநாதர்)வாக்கு..!

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🙏

அகத்திய மாமுனிவர் என்பவர் யார்..?

முக்தி விக்கினத்தை அழிப்பவர் அகத்திய மாமுனிவர்....

கேள்வி : ஶ்ரீசீரடி சாய்பாபாவை பற்றி..?

அகத்திய மாமுனிவர்(குருநாதர்)வாக்கு..!

இறைவனின் கருணையால், மனிதர்களை நல்வழியில் திசை திருப்புவதற்கு அவ்வப்பாெழுது இறைவன் பல்வேறு ஞானிகளைப் படைக்கிறான். சில ஞானிகள் தங்களை அடையாளம் காட்டிக் காெள்கிறார்கள். பல ஞானிகள் தம்மை அடையாளம் காட்டிக் காெள்ளாமலேயே மனித குலத்திற்கு பல்வேறு நன்மைகளை செய்கிறார்கள். எனவே  அப்படிப்பட்ட ஞானிகளில் ஒருவர்தான் இன்னவள் விளம்பிய அன்னவன்(ஶ்ரீசீரடி சாய்பாபா)...

பல்வேறு விதமான இறை நிகழ்வை, தன்னை ஒரு கருவியாக வைத்துக் காெண்டு இறைவன் செய்ய, தன்னுடைய புண்ணிய பலத்தை அதற்கு இறைவன் பயன்படுத்திக் காெண்டார் என்ற மனநிறைவாேடு பல்வேறு மக்களுக்கு நல்லுபதேசங்களையும், கர்மவினை குறித்தும், அந்தந்த சமுதாய சூழலுக்கு ஏற்ப அவன்(ஷீரடி சாய்பாபா) இறைவன் அருளால் எடுத்து இயம்பியிருக்கிறான். இறைவன் விரும்பி பல்வேறு மகான்களை அனுப்புவது உண்டு.சில மகான்கள் தாமாகவே விரும்பி இது பாேன்ற பணிகளை தேர்ந்தெடுப்பதும் உண்டு. இஃதாெப்ப நிலையில் இறைவன் அனுப்பிய மகான்களில் ஒருவரே அவன்(சீரடி சாய்பாபா).

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏

குருவே...கடவுள்...!!?

 

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏

ஶ்ரீசீரடீ சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🙏

குருவே...கடவுள்...!!?

ஸ்ரீரமண மகரிஷியின் கூற்றுப்படி, ஆன்மீக ஆர்வலர் போதுமான அளவு முதிர்ச்சி அடைந்தால், ஆன்மீக ஆர்வலர் முன் கடவுள் தன்னை ஒரு குருவாக வெளிப்படுத்துவார் . எனவே குருவுக்கும் கடவுளுக்கும் வித்தியாசம் இல்லை...மேலும், சிஷ்யன் தன் குருவுக்கு சேவை செய்வதிலும், குரு கூறிய வழிமுறைகளைப் பின்பற்றுவதிலும், உரிய காலத்தில் ஒருவனாக மாறுகிறான்...எனவே ஸ்ரீ சாயீயின் பக்தர்களைப் பொறுத்த வரையில், ஸ்ரீசீரடி சாய் தான் அவர்களின் குரு/கடவுள்...மனமே குரு...குருவே சிவம்...சிவமூலனாக இருப்பவர்...ஆகவே உயர்நிலையில் சாயீயைப் பாவித்து வணங்கினால் அனைத்து இடர்களும் நீங்கும் என்பதில் ஐயமில்லை...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏

அகந்தை...!


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🙏

அகந்தை...! 

இருட்டிலே  கருப்பா ஒரு  உருவம் தெரிகிறது... அதை ஏதோ பேய் நிற்கிறது என்று கற்பனை  பண்றான்..அது என்னன்னு  பக்கத்திலே  போய்  பார்த்தாள் பேய்  இல்லை ,மரமோ, கட்டையோ அவன்  சரியாப்  பார்க்கலேன்னா  பேய்  அவனைப்  பயமுறுத்தும்...போய்  பாத்துட்டா  ... பேய்  மறைஞ்சுடும்...பேய்  உண்மையிலே எப்பவும்  இல்லை அப்படித்தான் அகந்தைஅது  என்னன்னு  தேடாத வரைக்கும்  அது  படுத்தியெடுக்கும் அது என்னதான்னு  பாத்த மறைஞ்சுடும்... இருக்காது  ..!

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏

இறைவனை அடைதல்...!



ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🙏

கலியுகத்தில் இறைவனை அடைய ஒரே வழிதான் உள்ளது. இருப்பதில், மிக மிக இலகுவானதிலும் இலகுவான வழி இவ்வழி ஒன்றே..முதலில் இறைவனை அடைதல் என்றால் என்ன...?

முதலில் நாம் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டியது இறைவன் என்பது எங்கோ இருக்கும் ஒரு பொருளோ, ஒரு நபரோ, ஆணோ, பெண்ணோ, அலியோ, அக்ரினையோ, உயர்தினையோ.. அல்ல. இறைவன் என்பது நம் அறிவால் விளங்கிக்கொள்ள வேண்டிய மாபெரும் சத்தியம்...!!!நம் உடல் என்பது ஒரு பொருளாக தோன்றினாலும், சற்றே சிந்தித்தால், பல எண்ணற்ற உயிரணுக்களின்/ செல்களின் ஒருங்கிணைப்பே நம் உடம்பு ஆகும். இதை யாராலும் மறுக்க முடியாது. பல அனந்தகோடி உயிரணுக்கள் ஒன்றிணைந்து உடம்பு என்னும் ஒருபொருள் ஆவது போல, சத்தியத்தில் உள்ள, சூரியன், சந்திரன், நீங்கள், நான், நாய், நரி, மீன், மான், கோள்கள், அண்டங்கள்...இவை அனைத்தின் ஒருங்கிணைந்த ஒன்றிற்கு அளிக்கும் பெயரே  பிரபஞ்சம், இறைவன்...என்றெல்லாம்...இதை நாம் அறிவால் தான் விளங்கவேண்டும்.. இதைத்தான் இறைவன் அறிவுஸ்வரூபன் என்பது... 

இறைவனை அடைதல்...

இங்கு நம் அறியாமையை எண்ணி நாம் கட்டாயம் முட்டிக்கொள்ளதான் வேண்டும். இறைவனில் ஒரு பகுதியாக, இறைவனில் ஒரு அங்கமாக, ஏன் இறைவனாகவே இருக்கும் நாம், நம்மை தனி ஜீவன் என்று எண்ணுவது எத்துனை மடமை. நாம் உடலளவில் என்றுமே இறைவனை பிரிந்தது இல்லை. ஏனெனில், உடம்பு முழுமையே வடிவான இறைவனில் ஓரங்கம். ஆனால் நாம் இறைவனில் இருந்து பிரிவது மனத்தால், எண்ணத்தால்....

நான் வேறு, இறைவன் வேறு என்ற எண்ணம் ஒன்றே நம்மை இறைவனிடம் சேராமல் தடுக்கிறது. எண்ணங்கள் ஓய்ந்த நிலையே இறைநிலை ஆகும்...அந்த எண்ணங்கள் ஓய இரண்டு அவசியம். ஒன்று ஞானம், மற்றொன்று பக்தி....இவை இரண்டுமே பறவையின் இரண்டு இறகுகளைப்போன்று நமக்கு. ஞானம் என்பது முன்கூறினார் போல, இறைவன் யார்...? அவனிடம் இருந்து நாம் எவ்வாறு பிரிகிறோம்? என்று "அறிதல்" (Theory), அறிந்தபடி, எண்ணங்கள் உதிக்காமல் வாழ்வதே பக்தி (Practical) இவை இரண்டில் எதில் தேர்ச்சி அடையாவிட்டாலும் தோல்வியே...

ஞானம் கண்களை போல - நடக்க சரியான பாதையை காட்டும்...

பக்தி கால்களைப்போல - சரியான பாதையில் நடக்கும்... 

"பக்தி இல்லா ஞானி முடவன் ஆவான்.

 ஞானம் இல்லா பக்தன் குருடன் ஆவான்"

ஆக அறிதலும், நடைமுறை படுத்துதலும் இரண்டும் அவசியம்...

இந்த நவீன யுகத்தில் மனதை கட்டுப்படுத்த எந்த உக்தியாலும் இயலாது. யாதாலும் பயன் இல்லை.யோகம் பழகினாலும், யோகம் செய்யும் அந்த அரைமணிநேரம் மனம் சும்மா இருக்கும். பிறகு தன் வேலையை துவங்கிவிடும்.பூஜையும், புனஸ்காரமும்,,தீர்த்த யாத்திரையும், புத்தகம் படித்தாலும்...அனைத்துமே அவ்வாறே..ஆனால் மகான்கள் கண்ட எளிய ஒரே வழி "இறைவன் திருநாமத்தை சொல்வது" ஒன்றே.. தியானம் செய்ய, யோகம் பழக, பூசை செய்ய...தனி நேரமும் இடமும் தேவை. ஆனால் இறைவனின் நாமத்தை கூற இடம் பொருள் ஏவல் ஏதும் இல்லை. எப்பொழுதும் எங்கும் கூறலாம்..

அனைத்தும் அவன் பெயர்களே. ஏதாவது ஒரு பெயரை திரும்பத்திரும்ப கூறுவதால் மனம் தானே நசிக்கும். சிந்தனைகள் தானே குறையும். எதைப் பற்றியும் கவலை வேண்டாம். இறைவன் நாமம் கட்டாயம் நம்மை காக்கும்...இறைநாம ஜபம் ஒன்றே முக்திக்கு ஒரே வழி...!!

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏🙏

மனத்தை நல்ல வழியிலேயே நிலைத்திருக்கச் செய்வதெப்படி...?

 

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🙏

பக்தர் :...மனத்தை நல்ல வழியிலேயே நிலைத்திருக்கச் செய்வதெப்படி...?

பகவான்...எல்லா உயிர்களுமே தங்கள் இருப்பையும் தங்களைச் சூழ்ந்திருப்பவற்றையும் உணர்ந்து அப்புத்தியால் வாழ்க்கையை நடத்துகின்றன . ஆனால் தினசரி வாழ்க்கையோடு நில்லாது , மேற்கொண்டு ஆலோசிக்கும் திறமை மனிதனிடம் காணப்படுகிறது ..இருக்கும் நிலைமையிலுள்ள குறைகளைக் கண்டு குறைவற்ற வாழ்க்கையை நாடி ஏதேதோ முயல்கிறான்...எதனிலும் நிலைத்த இன்பம் காணாது தவிக்கிறான்..நிலைத்த இன்பமே அவனது இயல்பாதலால் அதை அறிந்தடைந்தாலன்றி மனம் அமைதியுறாது .. முடிவில் நிலைத்த இன்பத்தை நாடி முயலும் தனது நிஜஸ்வரூபமே நிலைத்த இன்பமயமென்று உணர்ந்து அதனில் நிலைத்து அமைதியுறுகின்றான்...நிறைவுறுகின்றான்...  தனதாற்றலால் புத்தி எவ்வெதனையோ நாடி முயன்று நிறைவுறாது..தனக்கொளி தருவதும் தன்னை இயக்கிக்கொண்டிருப்பதுமாம் , ஓர் பேரொளியை , ஓர் மஹாசக்தியை , ஓர் பரவுண்மையைச் சரணடைகிறது. அகந்தை அவ்வாறு ஒடுங்கியவிடத்தே அகண்டான்ம சொரூபம் தடையின்றியொளிர்கின்றது . அதுவே வாழ்க்கைப் பயன் , ஜன்ம ஸாபல்யம் ..

ஓம் ஶ்ரீ சாயீராம்....🙏.

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏

என் குருவின் வாக்கு..எனக்கு உயிர் நாடி..!!


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🙏

என் குருவின் வாக்கு..எனக்கு உயிர் நாடி..!!

இன்று சிவராத்திரியை கொண்டாடுகிறோம். "சிவராத்திரி" என்றால் "மங்கள இருள்" என்று பொருள். இந்த நாளிலாவது இரவு முழுவதும் சிவ நாமத்தை ஜபிக்க வேண்டும். வருடத்தில் ஒரு நாளாவது இறைவனின் திருநாமத்தை உச்சரிக்கவும். இந்த இரவில், பக்தர்கள் சிவனின் புனித நாமத்தை உச்சரித்து விழித்திருக்க வேண்டும். வேறு எந்த வகையிலும் விழித்திருப்பது நோக்கமற்றது. இறைவனின் திருநாமத்தைச் சொல்லி இரவைக் கழிப்பது ஒருவருடைய வாழ்க்கையைப் புனிதமாக்குகிறது...

சிவராத்திரிக்கு பலவிதமான அர்த்தங்கள் உண்டு. "ராத்திரி" என்பது இரவின் இருளைக் குறிக்கிறது. ஆனால் "சிவராத்திரி" என்பது இருளை அல்ல, இந்த இரவின் சிறப்பு புனிதத்தை குறிக்கிறது. இந்த இரவிலும் இருள் இருக்கிறது, ஆனால் இந்த இருள் சுபத்துவத்துடன் முதலீடு செய்யப்படுகிறது. காரணம், பௌர்ணமிக்குப் பிறகு (சதுர்த்தசி நாள்) இந்த நான்காவது நாளில், மனதிற்கு அதிபதியான சந்திரன் தனது பதினாறு இலக்கங்களில் பதினைந்து இலக்கங்களை உதிர்த்துள்ளான். கடவுளுடன் நெருங்கிப் பழகுவதற்கு இது ஒரு நல்ல நேரம்....

மனிதன் இருப்பது-அறிவு-ஆனந்தம் (சத்-சித்-ஆனந்த) என்ற தெய்வீக நிலையை அனுபவிக்கும் நாள் உண்மையில் சிவராத்திரியின் புனித நாளாகும். அதுவரை மனிதன் நிரந்தர இருளில் இருக்கிறான். மரத்தில் பழம் பழுக்கும் வரை அதன் சாறு இனிப்பாக இருக்காது. பழம் முழுமையாக பழுத்தவுடன், அது மரத்திலிருந்து விழும். மரத்தின் மீதுள்ள பற்று போய்விட்டது. அதேபோல், ஒரு மனிதன் ஆன்மீக முதிர்ச்சியை அடையும்போது, ​​அவன் தானாகவே பற்றின்மை (வைராக்யம்) பெறுகிறான். மனிதன் தனது உணர்வை மாற்றியமைக்கும் ஆன்மீக நடைமுறைகளால் இந்த முதிர்ச்சி நிலையை அடைய முயற்சிக்க வேண்டும். உங்கள் மனதை தெய்வீகத்தின் பக்கம் திருப்புங்கள். இறைவனின் திருநாமங்களைத் திரும்பத் திரும்பக் கூறுவது, உலக விஷயங்களிலிருந்து உங்கள் மனதைத் திருப்புவதற்கு ஒரு ஆன்மீக ஒழுக்கமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த இரவு முழுவதையும் இறைவனைப் பற்றிய சிந்தனைகளில் ஈடுபடுத்தினால், உன்னால் உன்னத நிலையை அடைய முடியாவிட்டாலும், உன் மனம் மாறும்...ஶ்ரீசாயீயை பணிக..

ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏

ஞாயிறு, அக்டோபர் 01, 2023

பக்தி உன் குறையைத் தீர்க்கும், அதற்கு வழி சரணாகதி...!

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🙏

உருவத்தில் இருத்தலில் நீங்கள் தியானித்தால்  தியானம்...ஆத்மாவிலே  பண்ணினால் ஆத்ம விசாரம்..பக்தி  உன்  குறையைத்  தீர்க்கும்,  அதற்கு  வழி  சரணாகதி... நம்மளோட வேலையை  ஒழுங்காய் பார்த்தோமென்றால்  அதுதான் நமஸ்காரம்... .

இறைவனிடம் முழு சரணாகதி அடைவது என்பது எல்லா எண்ணங்களையும் கைவிட்டு மனதை அவனிடம் ஒருமுகப்படுத்துவதாகும். நாம் அவனில் கவனம் செலுத்த முடிந்தால், மற்ற எண்ணங்கள் மறைந்துவிடும். மனம், பேச்சு, உடல் ஆகியவற்றின் செயல்கள் இறைவனுடன் இணைந்தால், நம் வாழ்வின் அனைத்து சுமைகளும் அவன் மீதுதான் இருக்கும்...

அனைத்து வேதாந்தத்தின் நிறுவப்பட்ட முடிவின் சாராம்சத்தை நான் உண்மையாக அறிவிக்கிறேன். 'நான்' (அஹங்காரம்) இறந்து, 'நான்' (ஒருவரின் சொந்த இயல்பு) 'அது' ('பிரம்மன்') [கண்டுபிடிக்கப்பட்டால்] 'அது' ('பிரம்மன்') எனில், அந்த 'நான்', விழிப்புணர்வின் வடிவமாக, தனியாக இருப்பதை அறிந்து கொள்ளுங்கள். இருக்கும்.

எல்லா 'சாதனங்களும்' (ஆன்மீக நடைமுறைகள்) நீங்கள் உடல் என்ற மாயையிலிருந்து விடுபடுவதற்காகவே. 'நான்' என்ற அறிவு எப்போதும் உள்ளது: அதை 'ஆத்மா' அல்லது 'பரமாத்மா' அல்லது நீங்கள் விரும்பியதை அழைக்கவும். ‘நான் உடல்’ என்ற எண்ணத்திலிருந்து விடுபட வேண்டும். சுயமாகிய அந்த ‘நான்’ என்று தேட வேண்டிய அவசியமில்லை. அந்த சுயம் எங்கும் நிறைந்திருக்கிறது.

தன்னை அறியாமல், வேறு ஏதாவது தெரிந்தால் என்ன...? ஒருவன் தன்னை அறிந்திருந்தால், தெரிந்துக் கொள்ள என்ன இருக்கிறது...? வெவ்வேறு ஜீவராசிகளில் வேறுபாடு இல்லாமல் பிரகாசிக்கும் அந்த சுயம், தன்னில் அறியப்படும்போது, ​​'ஆத்மா' (ஒருவரின் இன்றியமையாத இயல்பு) பிரகாசம் மட்டுமே தனக்குள் வெளிப்படும். இது அருளின் பிரகாசம், 'நான்' (அஹங்காரம்) அழிந்து, மகிழ்ச்சியின் மலர்ச்சி...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏

"நான் யார்...?" விசாரணை...!


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🙏

"நான் யார்..என்பதற்கான மூல சூட்சம விழிப்புணர்வு விளக்கம்...🙏

எல்லா எண்ணங்களுக்கும் ஆதாரம் ‘நான்’ என்ற எண்ணமே...

‘நான் யார்..?’ என்ற சுயவிசாரணையால்தான் மனம் ஒன்றிப்போகும், ‘நான் யார்...?’ என்ற எண்ணம் மற்ற எல்லா எண்ணங்களையும் அழித்து இறுதியில் தன்னையும் கொன்றுவிடும். மற்ற எண்ணங்கள் எழுந்தால், அவற்றை முடிக்க முயற்சிக்காமல், இந்த எண்ணம் யாருக்கு எழுந்தது என்று விசாரிக்க வேண்டும். எத்தனை எண்ணங்கள் எழுகின்றன என்பது என்ன...? ஒவ்வொரு எண்ணம் எழும்பும்போதும் உஷாராக இருக்க வேண்டும், இந்த எண்ணம் யாருக்கு வருகிறது என்று கேட்க வேண்டும். ‘எனக்கு’ என்று பதில் வரும். ‘நான் யார்...?’ என்று நீங்கள் விசாரித்தால், மனம் அதன் மூலத்திற்கு (அல்லது எங்கிருந்து வந்தது) திரும்பும். எழுந்த எண்ணமும் மூழ்கும். இப்படி அதிகமாகப் பயிற்சி செய்யும்போது, ​​மனதின் மூலாதாரமாக நிலைத்து நிற்கும் சக்தி அதிகரிக்கிறது...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏

சுய விசாரணை...!

 

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🙏

🔥"நமக்கு என்ன நடக்கிறது என்பதற்கு மற்றவர்கள் பொறுப்பல்ல. அவை நமக்கு ஏதாவது ஒரு வழியில் அல்லது வேறு என்ன நடக்கும் என்பதற்கான கருவிகள் மட்டுமே."🔥

"சுய விசாரணை ஒன்றுதான், தவறில்லாத ஒரே வழி, நீங்கள் உண்மையில் இருக்கும் நிபந்தனையற்ற, முழுமையான இருப்பை உணர ஒரே நேரடியான ஒன்று."

“ஒருவன் பிறருடைய குறைகளைக் கண்டுகொள்ளாமல், அவர்களின் தகுதிகளை மட்டும் பார்த்து, மனதை அமைதிப்படுத்தினால், அவனது வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கும். எல்லாவற்றிலும் அக்கறையில்லாமல், மனம் குளிர்ந்து, ஆசைகள் அற்ற, வெறுப்பின்றி இருப்பது தேடுபவனுக்கு அழகு.”

நான் அல்லாத உலக இன்பங்களின் சுட்டெரிக்கும் மணலைத் தின்று, வெளியில் அலையாதீர்கள்; அமைதி பரந்த, நிரந்தரமான, குளிர்ந்த நிழலாக பிரகாசிக்கும் இதயத்தின் வீட்டிற்கு வந்து, சுயத்தின் பேரின்ப விருந்தை அனுபவிக்கவும்...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏