வியாழன், பிப்ரவரி 01, 2024

உலகில் நடக்கும் காரியங்களுக்கும் ஆன்மாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று இங்கு கூறப்படுகிறது.

 


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻🙏🏻

கருவிகளின் தொழில் கண்ட அவிவேகி

கருத்தன் போன்று ஆன்மாவைக் காண்பான்...துரிதமாய்

ஓடும் மேகம் கண்டு உணர்விலி சந்திரனே

ஓடுகிறான் என்பதை ஒத்து.....!

ஆகாயத்தில் வேகமாக ஓடும் மேகங்களைப் பார்த்த பகுத்தறிவில்லாத ஒருவன் சந்திரனே வேகமாகப் போகிறது என்று சொல்வதைப் போல, ஐந்து கர்ம இந்திரியங்களின் மூலம் செய்யப்படும் செய்கையைப் பார்த்து உள்ளதையும் இல்லாதையும் பிரித்துப் பார்த்து அறியமுடியாதவன் ஆன்மாவே செயலில் ஈடுபடுவதாக நினைப்பான்....

உலகில் நடக்கும் காரியங்களுக்கும் ஆன்மாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று இங்கு கூறப்படுகிறது. நாம் பயணம் செய்யும் ரயில் வண்டி வழியில் ஒரு ஸ்டேஷனில் நின்றுக் கொண்டு இருக்கும்போது, பக்கத்துத் தண்டவாளத்தில் உள்ள மற்றொரு ரயில் எதிர்ப்புறமாகக் கிளம்பினால் நமது வண்டியே கிளம்பிவிட்டது போலத் தோன்றுவது நமது அனுபவம் தானே...? அதேபோல வானத்தில் உள்ள மேகக் கூட்டங்கள் நகரும்போது, அவைகளின் பின்னால் உள்ள சந்திரன் நகர்வதுபோல் நமக்குத் தோன்றும். அதை நன்கு கவனித்துப் பார்ப்பவனுக்குத்தானே எது நிலை கொண்டுள்ளது, எது நகர்கிறது என்று தெரியும்? அதே போல, உடல் வேறு ஆன்மா வேறு என்று பிரித்துப் பார்த்து அறிய முடியாதவன், ஆன்மாவின் சந்நிதானத்தில் உடலின் கர்ம இந்திரியங்களால் நிகழும் நிகழ்ச்சிகளை ஆன்மாவே ஈடுபட்டுச் செய்வதாக நினைக்கிறான்...

ஓம் ஸ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻

ஓம் நமசிவாய...🙏🏻🙏🏻🙏🏻.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக