ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🙏🙏
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்...🙏🏻🙏🏻🙏🏻
🔥எவ்வளவு துன்பம் தரும் சோதனையாக இருந்தாலும், ஒரு சிஷ்யன் தன் குருதேவரைத் துறந்துவிடக்கூடாது...ஒருவருடைய குரு எவராக இருந்தாலும் அவர்மீது திடமான விசுவாசம் வைக்கவேண்டும்..வேறெங்கிலும் அவ்விசுவாசத்தை வைக்கலாகாது என்பதை மனதில் இருத்திக்கொள்வீராக.🔥
பக்த வத்சலனான சத்குரு தன கிருபையை எல்லா உயிர்களிடம் எப்பொழுதும் பொழிவார்... அவரைச் சேவித்தும் உன் துன்பங்கள் தீரவில்லையென்றால் உனக்கு அவரிடத்தில் முழுமையான பக்தி இல்லை.உன் மனதில் அவரை சந்தேகிக்கிறாய்...முழுமையான பக்தி யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்கு குருவின் கிருபை பூரணமாக கிடைக்கும்...பிரேமைக்கு அடிமையாகி கள்ளங்கபடமற்ற எளிமையான பக்தனைத் தேடிஅலைகிறேன்...வெளிவேஷம் போடுபவர்களுக்கு நான் என்றுமே அகப்படுவதில்லை...
உம்முடைய காரியத்தை நீர் சிறப்பாகச் செய்வீராக..மனத்தில் அணுவளவு தயக்கமும் வேண்டா....என்னுடைய வார்த்தைகளில் முழுவிசுவாசம் வைத்து,மனதை திடப்படுத்திக் கொள்வீராக"...என்னுடைய காரியங்களை நானே செய்கிறேன் என்று சொல்லுவது அகங்காரம்...சூத்ரதாரி சாயீயே...இயக்கம் முழுக்க முழுக்க சாயீநாதனைச் சேர்ந்ததே.. அகங்காரத்தை பாபாவின் பாதத்தில் சமர்பித்துவிட்டால் அபாரமான சுகம் கிடைக்கும் என்பதனை மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.....
ஓம் ஶ்ரீ சாய்ராம்....🙏🙏🙏
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻🙏🏻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக