ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🙏
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள்....🙏🏻🙏🏻
🔥 ஒவ்வொரு தனி மனித உயிரும் சீரடி சாய் நாதரின் ஆசியைப் பெற, என்னென்ன உயரியப் பண்புளைப் பெற்றிருக்க வேண்டும் மற்றும் குருவானவர் தன் பக்தர்களிடம் எவ்வாறு தன்னை வெளிப்படுத்திக் கொள்வார் என்பதைப் பற்றி விளக்கம்.....🔥
ஒவ்வொரு தனிப்பட்ட மனித உயிர்களும் தான் கடைத்தேற்றம் அடைய. அவரவர் வாழ்வியல் இயக்க முறைகளுக்கு ஏற்ற வகையிலும்,பல பிறவிகள் மூலம் பெற்று வந்த கர்ம வினைகளுக்கு ஏற்ற வகையில் தான் சத் குருவின் உயரிய பேராற்றலை உணர்ந்து பின்பற்றிட முடியும்...ஏனென்றால் ஒரு நற்குரு கிடைப்பது என்பது பூர்வ ஜென்ம புண்ணியப் பலன் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.... ஒவ்வொரு தனி மனித உயிரும் தனக்கென்று, ஒரு குருவைக் கண்டடைய வேண்டும் என்ற தீராத தாகமும்,ஏக்கமும் இருப்பவர்களுக்கு குருவே தன்னை வெளிப்படுத்திக் கொள்வார்.. அது எவ்வாறு என்றால் நான் என்ற அகந்தையும்,கர்வத்தையும்,அகங்காரத்தையும் விடுத்து, சிறு குழந்தை தன் தாயின் வருகைக்காக காத்திருப்பது போல குருவின் சூட்சம தரிசனத்திற்கும், ஆசிர்வாதத்திற்கும் காத்திருக்க வேண்டும்...
மேலும் நமக்கு நாமே நெறி முறைகளை வளர்த்துக் கொண்டு, குருவிடம் ஆத்மார்த்தமான அன்புடனும்,பூரண நம்பிக்கையுடனும்,நிலைமாறாத பக்தி மற்றும் திடமான விசுவாசத்தோடு சத்குருவின் சத்சரித்திர வாக்கை வேத வாக்காக எடுத்துக் கொள்பவர்களுடைய வாழ்வில் எத்தகைய இடர்கள் வந்தாலும் , குருவானவர் தன் பக்தனுக்குப்பதிலாக, அந்த சுமைகளை தானே ஏற்றுக் கொண்டு பக்தர்களைக் காப்பாற்றுவார்.. குருவை நம்பால் ஈர்க்க, நாம் அவர்கள் வகுத்த நெறி முறைகளைப் பின்பற்றி , சத்திய கோட்பாடுகளோடும் ,இறைபண்புகளோடும் வாழ்ந்து, ,மனித நேயம் காத்து , தெய்வீகத் தன்மையை வளர்த்துக் கொண்டு, இறையச்சத்துடன் வாழ்ந்து , இறையதிர்வின் மூலக் கோட்பாடுகளை அறிந்து , அண்ட சராசரத்தில் அனைத்திலும் நீக்கமற நிறைந்து இருப்பது ஆதி சிவ மூல பேராற்றலே என்பதை உணர்ந்து, அந்த மூலப் பேராற்றலின் முழுத் தன்மையில் தானே குருவின் பேராற்றலும் அடங்கியுள்ளது என்கிற மூல சூட்சமத்தை உணர்ந்து, அதன் வழி நடந்துக் கொண்டோமேயானால் குருவின் பேர் ஆசியை எளிதாக பெற முடியும்..
மேற்க்கூறிய மூல சூட்சம வீர்யமிக்க கோட்பாடுகளையும், சத்திய நெறி முறைகளையும் கடைப்பிடிப்பவர்களுக்கு குருவின் ஆசியும், அனுக்கிரகமும் தானாகத் தேடி வரும்....நாம் இறை மற்றும் குருவின் ஆற்றலைத் தேடி போகத் தேவையில்லை...நாம் மேற்கூறிய நெறிமுறைகளைப் பின்பற்றினால் இறையாற்றல் நம்மை தானாக ஆட்கொள்ளும்.. .ஏனென்றால் அனைத்தும் நம்மிடமே இருக்கின்றது ..ஆதி மூல சிவமானது. சீவனாக, உயிராக நம்மிடமே இருக்கின்றது.. நாம் தான் அதனை உணராமல் மாயையில் நம்மை ஆட்படுத்திக் கொண்டு மூலத்தை உணராமல் இருக்கின்றோம்...குரு என்கின்ற மூல சூட்சம பேராற்றலின் தன்மை எவ்வாறு சூழப்பட்டு இருக்கின்றதென்றால்.தூய அன்பினாலும் , சத்தியத்தாலும், மனித நேயத்தாலும், தெய்வீகத்தாலும்,நேர்மையினாலும்,ஒழுக்க நெறி முறைகளினாலும், சாந்தத்தினாலும், தவத்தாலும், தானத்தாலும்,தியாகத்தாலும், நன்னெறி கோட்பாடுகளாலும், நேர்மறை செயல்களாவும், அகிம்சையினாலும் சூழப்பட்டு இருக்கின்றது....
மேலும் மனித உயிரின் இயல் பண்புகளான மனித நேயமும், தானமும், தவமும் ,ஒழுக்க நெறி முறைகளாலும், ஏற்றத் தாழ்வின்றி அனைவரையும் சமமாகக் கருதுதல், மற்றும் தனக்கு சொந்தமான பிண்ட உயிர்களைப் போன்று பிற உயிர்களையும் சமமாக நேசிக்க வேண்டும் என்ற ஏகத் தாய்மை உணர்வாலும் தான் குருவின் சூட்சம பேராற்றல் உருவாக்கப்பட்டுள்ளது..ஆகவே மேலே கூறிய பண்புகளை பெற்று இருந்தோம் என்றால், நமது சித்தம் தூய்மையடைந்து சித்தத்தில் உள்ள சித்தம் பரம் என்ற ஆதி மூல பேராற்றலாகிய சிவம் வெளிப்படும்...சித்தம் செத்தவர்கள் சித்தனாகிறான்... சிவமாகின்றார்கள்...ஆகவே சித்தம் தூய்மை அடைந்து விட்டால் குருவின் பேராற்றலும் ஆதி மூல பேராற்றலும் நம்மை ஆட்படுத்திக் கொண்டு, அந்த ஆற்றல் தானாக நம்மில் இருந்து நம்மை இயக்கவும் இயங்கவும் ஆரம்பிக்கும்..
மேற்க்கூறிய பண்புகளைப் பெற்றவர்கள் எதனையும் தேடி ஓடி நாடத் தேவையிவ்லை. அவர்கள் நாவால் உச்சரிக்கின்ற நாமக்காரகனும், தெய்வ தேவதா சக்தியின் பேராற்றலும் தானாக விழிப்புற்று நம்மில் இயங்க ஆரம்பிக்கும்... சித்தம் தெளிவடைவதற்காக, நமக்கு வகுக்கப்பட்ட இயல் நெறிமுறைப் பண்புகளோடு நாம் பின்பற்றாத காரணத்தினால் தான், நம்மால் வாழ்வியல் இயக்க முறைகளில் நம்மை நேரியப் பாதையில் நம்மை உட்புகுத்திக் கொண்டு வெற்றிக் காண முடிவதில்லை....இந்தப் பண்புகளையும் கோட்பாடுகளையும் பெற்றவர்களுக்கு பிரபஞ்சம் வாழ்த்தி அனைத்தையும் வாரி வழங்கும் ..பிரபஞ்ச ஆற்றல் அன்பு மற்றும் மேற்கூறிய பண்புகளின் மூல வித்தாகத் தான் அமைந்துள்ளது . மேலும் ஏகத்தன்மையை நாம் வளர்த்துக் கொண்டோமேயானால் பிரபஞ்சத்திற்கும் நமக்கும் இடைவெளி இல்லாமல் ஒரு முழுமைடைந்த நிலையில் மூல ஆற்றலான பிரபஞ்சத்தோடு கலந்து விடுவோம்..நாமும் பிரபஞ்சமும் வேறல்ல....
விழிப்புணர்வோடு பற்றில்லாமல் சாட்சியாக எதனையும் அணுகினால் குருவும்,இறையும், நமக்குத் தேவையானவற்றை அனைத்தையும் வழங்கும் ... பிரபஞ்சம் என்ற மூல ஆற்றலோடு நாம் கலந்து விடுவோம்... இதனால் நாம் எண்ணுகின்ற ஆக்கப்பூர்வமான , பிறரைப் பாதிக்காத செயல் திட்டங்கள் அனைத்தும் செயல்பட ஆரம்பிக்கும்....இதனை உணர்ந்து தெளிந்து குருவழிப் பாதையை பின்பற்றி உயர்ந்த நிலையை அடைவோம் சாய் அன்பர்களே. ...
ஒம் ஶ்ரீ சாய்ராம்..🙏🙏
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்..🙏🏻🙏🏻🙏🏻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக