ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🏻🙏🏻🙏🏻
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் சாய்சரித்திர உபதேச அருள்மொழிகள் மற்றும் சுய விழிப்புணர்வு போதனைகள்....🙏🏼🙏🏼🙏🏼
🔥🔥 பகவான் உபதேசிக்கின்றார்... “எவரிடமிருந்தும் மந்திரமோ, உபதேசமோ பெற முயலவேண்டாம். என்னையே உங்களது எண்ணங்கள், செயல்கள் இவற்றின் ஒரே குறிக்கோளாக அமைத்துக் கொள்ளுங்கள்.... சந்தேகம் ஏதுமின்றி உங்கள் குறிக்கோளை அடைவீர்கள்..என்று தன் பக்தரான ராவ் பகதூர் ஹரி விநாயக் ஸதேயிடம் கூறுகின்றார்.. இதனைப்பற்றிய அனுபவ விளக்கம்..🔥🔥
ராவ் பகதூர் கூறுகின்றார்....பாபா யாருக்கும் உபதேசம் அளித்ததில்லை. ஆகவே எனக்கு மந்திரோபதேசம் வேண்டுமென நான் அவரிடம் வேண்டவில்லை. ஆனால் பல சந்தர்ப்பங்களில் மற்ற குருக்களிடம் உபதேசம் பெற நான் அழைக்கப்பட்டேன்..பகவான் இருக்கும் பொழுது மற்ற குருக்களிடம் இந்த நோக்கத்துடன் நான் செல்லவேண்டுமா என்ற பிரச்னை எழுந்தது...பாபாவிடம் வேண்டினேன்; பாபா ஒப்புதல் அளிக்கவில்லை...பாபாவால் முறைப்படி தீக்ஷை அளிக்கப்படவில்லை எனினும், நான் திசைமாறா கவனத்துடன் அவரையே நம்பியிருக்கவேண்டும் என்பதே சத்குருவின் விருப்பம்...தனது பக்தனின் லௌகீக, ஆன்மீக நலன்கள் யாவற்றையும் கவனித்துக் கொள்ள அவர் சக்தி படைத்தவராகவும், தயாராகவும் இருந்தார்...குரு பௌர்ணமி தினத்தன்று பாபாவை சத் குருவாக ஏற்று , எல்லா பக்தர்களும் கூட்டு வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யும்படி என்னை பணித்தனர்...ஆனால் சிவராத்திரி நள்ளிரவில் அவரை சிவபெருமானாக நான் பூஜிக்க முயன்றபோது, அவர் அதை ஆமோதிக்கவில்ல..பாபா மற்றவர்களிடமிருந்து நான் உபதேசம் பெறுவதை விரும்பவில்லை.. எனினும் நான் சாதுக்களிடம் பணிவுடன் நடந்து கொண்டு அவர்களை உபசரிக்க வேண்டுமென விரும்பினார்...இதிலிருந்து உணர்ந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் நமக்கு எது தேவை என்பதை சத்குருவே அறிவார்.. நம்முடைய ஞான மார்க்க கதவுகளை திறந்து உயரிய நிலைக்கு அழைத்து செல்பவர் சத்குரு ஒருவரே...
ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🏻🙏🏻🙏🏻
ஶ்ரீசாயீ சர்வ சக்தி சுயவிழிப்புணர்வு தியானபீடம்...🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக