ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🙏
ஶ்ரீசீரடி சாயீன் சாய்சரித்திர உபதேச அருள்மொழிகள் மற்றும் சுயவிழிப்புணர்வு போதனைகளும்....🙏
🔥குரு பக்தியைப் பற்றிச் சில அருள்மொழிகள்...🔥.
சத்குருவின் மேல் நம்பிக்கைக் கொள்வதற்கு .ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை" என்கின்றார் பாபா..அவ்விதமாகத்தான், தான் அனுபூதியடைந்ததாக பகவான் கூறுகின்றார்... சாய்பாபாவின் மேல் உள்ள நம் பக்தியை வளர்த்துக் கொள்வதற்குரிய சில கருத்துக்களை பகிர்வது உபயோகமாயிருக்கும் என்று கருதுகின்றேன்....
முதன்முதலில் சாயீபாபாவின் ஓர் உருவப்படம் இன்றியமையாத ஒன்று...ஏனெனில், பாபாவும் அவரது உருவப்படமும் வேறல்ல...பகவானின் ஒட்டுமொத்த பேராற்றல் உருவப்படத்திலும் அடங்கியுள்ளது...தவிர, அது பாபாவின் மேல் இடையறாது தியானம் செய்ய வேண்டியதன் உயர்வைப் பற்றிச் சக்தி வாய்ந்த முறையில் நினைவுபடுத்துகிறது...
பாபாவின் பிரசன்ன உருவப்படம் அத்தகைய குறிக்கோளை அடைய முயலும் படித் தூண்டுகிறது...பாபாவின் உருவப் படத்தை சிறு குழந்தையைப் போன்ற பாங்கில், நம்மை வெற்றிடமாக வைத்துக் கொண்டு உற்று கவனிப்பது என்பது மிகவும் சக்தி வாய்ந்த சாதனையாகும்....சாய் பக்தர்கள் இதனை உணர்ந்தவர்கள் ஏராளமானோர்கள் இருக்கின்றனர்..
இரண்டாவதாக, பாபாவின் வாழ்க்கைச் சரிதத்தைத் தவறாமல் பாராயணம் செய்வது,... நமது மனதை ஆத்மீகக் குறிக்கோளை நோக்கி இழுக்கும் வல்லமை வாய்ந்தது...நமது எல்லா எண்ணங்களும், உணர்வுகளும் பாபாவைப்பற்றியத் தெளிவையும் உணர்தலையும் நமக்குள் ஏற்படுத்துவதற்கு வழியாக அமையும்....
மூன்றாவதாக, எப்போதுமே பாபாவின் நினைவிலேயே மூழ்கி, அவரது திவ்ய நாமத்தை இடையறாது உச்சரிப்பதில் நம் மனதை ஒருநிலையில் ஈடுபடுத்தும்படியான வழக்கத்தை வளர்த்துக் கொள்ளல் வேண்டும்......
நான்காவதாக, நாம் எதை உண்பதாக இருந்தாலும் அல்லது பருகினாலும்,அதை மானசீகமாகப் பாபாவுக்கு நிவேதனம் செய்தப் பிறகு ,அதைப் பிரசாதமாக உண்ணும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளல் வேண்டும்....
ஐந்தாவதாக, நாளின் முதல் பதினைந்து நிமிடநேரத்தை,நாள் முழுவதும் நாம் பாபாவின் நினைவில் லயித்துருப்பதாக, நம் பாவனையை இசைவு செய்துக் கொள்ளுவதில் செலவிடவேண்டும்...மீண்டும் தூங்குவதற்கு முன், நாளின் இறுதிப் பதினைந்து நிமிடங்களையும் பாபாவைப் பற்றிச் சிந்திப்பதிலும் செலவிட முயல வேண்டும்..?அன்றாட செய்த செயல்களின் படிவத்தை இரவு பத்து நிமிடம், நாம் ஒரு முறை மீண்டும் நமக்குள்ளே கவனிக்க வேண்டும்...
ஆறாவதாக, ஸ்ரீ சாயீபாபாவின் விபூதியை நாள்தோறும் இட்டுக் கொள்ளும் வழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்...தண்ணீரிலும் கலந்து பருகலாம்...தினம் அல்லது வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் பாபாவை மனமார வழிபடுவதற்காக ஒதுக்க வேண்டும்.... பாபா, தமது படத்தோடு ஒன்றுப்பட்டவர் என்பதைப் பலமாக நினைவுக்கூர்ந்து, அவரது இருப்பை உணர்ந்து, அவரது படத்தைப் பூஜை செய்ய வேண்டும்..... அவரின் பால் நம்மை பிணைத்துக் கொள்ள வேண்டும்...
ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🙏
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுயவிழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக