ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🙏🙏
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் சாய்சரித்திர அருள்மொழிகள் மற்றும் சுய விழிப்புணர்வு போதனைகள்...🙏🏼🙏🏼🙏🏼
🔥🔥நாம் அனைவரும் ஏன் குருமார்களிடம் அசையாத நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதைப் பற்றி விளக்கம்....🔥🔥
நம்பிக்கையும், பொறுமையும் இல்லாதவர்களுக்கு பாபா அற்புதத்தைச் செய்வதே இல்லை... நம்பிக்கை இல்லாதவர்களுக்கு பாபாவிடமிருந்து அற்புதத்தைப் பெற இயலுவதுமில்லை என்றும் கூறலாம். எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் பாபா மீது நம்பிக்கை வைக்கும்போது, அவர் நமக்குத் தெளிவையும், விழிப்புணர்வையும் , சரியானத் தீர்வையும் தருகின்றார்.. செயல்படுவதில் தீவிர நாட்டத்தையும்,வெற்றி அடைவதற்கான தீவிர தன்னம்பிக்கையைத் தருகின்றார். உன்னுடைய கவலைகளை தூர எறி, உன்னுடைய துன்பங்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டன என்று அறிவுருத்துகின்றார்....
ஒருவன் எவ்வளவுதான் நசுக்கப்பட்டவனாக இருந்தாலும், இம்மசுதியில் கால் வைத்தவுடனே மகிழ்ச்சியின் பாதையில் செல்கிறான். இங்கேயுள்ள பக்கிரி மிகவும் அன்பானவர். இவர் இவ்வியாதியைக் குணப்படுத்துவார். அன்புடனும், ஆசையுடனும் எல்லோரையும் பாதுகாப்பார் என்று பக்தனுக்கு பாபா தன் சத்சரிதத்தில் நம்பிக்கை வாசகங்களை கூறியிருக்கின்றார்...
பல வேளைகளில் நமது நம்பிக்கை ஆட்டம் காணும் அளவுக்குப் பிரச்சனைகள் அதிகமாகும். நம்பிக்கையே போய்விடும். வேறு எங்காவது போய் பார்க்கலாமா..? என எண்ணத்தோன்றும். இப்படி அடிக்கடி மனம் மாறுகின்றாயா..? தன்னம்பிக்கை இழக்கின்றாயா..? அல்லது வருவது வரட்டும், பாபா தான் என்னோடு இருக்கின்றாரே..! என தைரியமாக இருக்கின்றாயா..? என்பதை அவர் உற்று தன் பக்தனைக் கவனிப்பார். என்ன செய்யப் போகின்றாய் என வேடிக்கையும் பார்ப்பார்..
ஆகவே நம் வாழ்வில் நடக்கின்ற அத்துனை காரியங்களையும், சாய் மாதாவின் பாத கமலத்தில் ஒப்படைத்து வெரும் சாட்சியாக,நம் அப்பா அனைத்திற்கும் நல் வழி காண்பிப்பார் என்ற நம்பிக்கையோடும், பொறுமையோடும், வைராக்கியத்தோடும் காத்திருந்து, நாம் நம்முடைய வாழ்க்கை இயக்கத்தில் உள்ள செயல்பாடுகளை மேற்கொண்டால், அனைத்திலும் குரு நம்மை உயர்த்துவார் என்பது திண்ணம் சாய் அன்பர்களே...
ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🙏🙏🏼
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக