ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🙏🙏
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள்..🙏🙏
சீரடிபகவானுடைய நன்மதிப்பையும் பேரன்பையும் பெற்ற உயரிய பக்தன் மாதவராவ் தேஷ்பாண்டே கூறுகின்றார்..🙏
பகவானே எங்களுக்கு எப்போதும் முத்தங்களையும், உண்பதற்கு இனிப்புக்களையும் வழங்கும் ஒரு கடவுளையே நாங்கள் விரும்புகின்றோம். தங்களிடமிருந்து எந்த மரியாதையையோ, மோக்ஷத்தையோ, புஷ்பக விமானம் முதலானவற்றையோ நாங்கள் வேண்டவில்லை. தங்கள் பாதாம்புயத்தின்பால் எங்களது நம்பிக்கை எப்போதும் மிக நன்றாக தெளிந்த விழிப்பு நிலையில் இருக்கவேண்டும், அதற்கு ஆசீர்வதியுங்கள் பாபா என்று கூறுகின்றார் மாதவராவ்...ஸ்ரீ சாய் சத்சரித்திரம்..🙏
இரவும், பகலும் எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ எவன் ஒருவன் என்னைப் பற்றி நினைத்து வருகிறானோ, அவன் இனிப்பும் சர்க்கரையும்போல, அலையும் கடலும் போல, கண்ணும் ஒளியும்போல என்னுடம் முழுமையாக இணைகிறான். அப்படிப்பட்டவன் எதற்கும் பயப்படத் தேவையில்லை..என் நாமத்தை எப்போதும் கூறுகின்றவர்கள், என்னையே அனைத்திற்குமாக நம்பிகின்றோம் என்று கூறுகின்றவர்கள் என் வார்த்தையின் மீது முழு நம்பிக்கையை வைத்து காத்திருப்பார்கள்..இந்த உலகமும் அதனுடைய மாயை வலைகளால் உண்டான அனைத்தும் அழிந்துவிடும்...ஆனால் என்னை நம்புகிறவர்களின் நம்பிக்கை ஒரு நாளும் அழிந்துவிடாது...
ஜீவனத்திற்காக (வாழ்கையை சார்ந்து) நீங்கள் கவலைப்படுகிற எல்லா விஷயங்களும் அழிந்துவிடும்....என்னையே எப்போதும் பற்றிக் கொண்டிருப்பவர்களுடைய குறிக்கோளை நான் அழிப்பதே இல்லை...அவனுக்கும், எனக்கும் அவநம்பிக்கை என்ற தடையில்லாமல் இருப்பதால் நான் வேகமாக நுழைந்து அவனைக் காத்துக்கொள்ள என்னால் முடிகிறது என்ற மூல சூட்சமத்தை உணர்வீர்களாக..
ஶ்ரீ சீரடி சாய்பாபா...🙏
ஓம் ஶ்ரீ சாய்ராம்....🙏🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக