ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼
ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாய வெளியீடு....🙏🏼🙏🏻🙏🏻
🙏🏼ஶ்ரீசாய் சத்சரித்திரம்🙏🏼
🙏🏼 அத்தியாயம்::- முப்பத்து மூன்று (33)🙏🏼
🔥முதலில் புனித வேத நூலான ஶ்ரீசாய் சத்சரித்திரம் பாராயணம் செய்வதன் முக்கியத்துவமும், பெறப்போகும் நன்மைகள் என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் புனித வேத நூல் என்பது சாய் சத்சரித்திரம் என்பதாகும்...இதில் ஶ்ரீசீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத எழுத்திலும் வியாப்பித்து படர்ந்து இருக்கின்றது...ஶ்ரீசாய் சத்சரிதத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல், மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது....
ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்.. இவ்வாறாக நாம் அனைவரும் சாய் சத்சரித்திர வேதப் பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்..ஆகவே சாய் சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்...நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக....🙏
🔥குறிப்பு..சாய் சத்சரித்திர வேதப் பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥
தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்.. மேலும் அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரியத் தன்மையை அடையலாம்..இவ்வேத பாராயணத்தின் மூலமாக ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரியத் தன்மையை அடையும் நிலையைப் பெறலாம்... மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம்,நேர்மை, மனிதநேயம் போன்ற இறைப் பண்புகளைப் பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுப் பெறவும் இந்த சாய் சத்சரித்திர வேதப் பாராயணம் துணைப்புரிகின்றது...
மேலும் இப்பாராயணத்தின் மூலம் மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில் வெற்றி வாகை சூடலாம்... அவரவர்கள் விரும்பி வேண்டியது கிடைக்கப் பெறும்...சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்...மேலும் அனைத்து விதமான கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும் ஒருசேரப்பெறலாம்..🙏🏼
🙏🏼அத்தியாயம்::-முப்பத்து மூன்று(33)🙏🏼
🙏🏼முன்னுரை...🙏🏼
பாபா தன்னை நாடி வந்த பக்தர்கள் அனைவருக்கும் ஏன் உதியை வழங்கினார் என்பதன் விளக்கமும், உதியில் அடங்கியுள்ள மறை ஞான மூல சூட்சமமும், உதியின்(விபூதி) மூலமாக பெறப்போகும் பலன்கள் என்ன என்பதன் விளக்கவுரைகள்....
சீரடி பகவானின் அருட்பிரசாதமான உதியைப் பயன்படுத்துவதன் மூலம், நாராயண் மோதிராம் ஜனி என்பவர் எவ்வாறு தேள்கடி விஷத் தாக்கத்திலிருந்து மீண்டார் என்பதன் விளக்கவுரை..
பாபாவின் பக்தர் ஒருவர் தன்னிடம் உதி இல்லாத காரணத்தினால், தனது காலடி மண்ணையே உதியாகப் பாவித்து பயன்படுத்தி எவ்வாறு பிளாக் வியாதிருந்து மீட்டார் என்பதன் விளக்கவுரை..
நானா சாஹேப் சாந்தோர்கரின் மகள் மைனாதாயினுடைய பிரசவத்தில் உள்ள பிரச்சினைகளைத் போக்குவதற்காக, எவ்வாறு பாபா உதி வழங்கி ஆசிர்வதித்து காப்பாற்றியதன் அனுபவ விளக்கவுரை.
நாராயண்ராவ் என்ற பக்தருக்கு, பாபா கனவுக்காட்சியின் மூலமாக ஆசிர்வதித்து, எவ்வாறு தீராத நோயை குணப்படுத்தினார் என்பதைப் பற்றிய அனுபவ விளக்கவுரை....
அப்பா சாஹேப் குல்கர்ணி என்ற பக்தரின் பேரன்பால் ஈர்க்கப்பட்ட பாபா, எவ்வாறு சாஹேப்பின் வீட்டிற்கு வருகைப்புரிந்து ஆசிர்வதித்து தக்ஷிணை பெற்றுக்கொண்டார் என்பதைப் பற்றிய அனுபவ விளக்கவுரை...
பாலாபுவா சுதார் என்ற பக்தர் பாபாவின் புகைப்படத்தை ஈடுபாட்டுடன் வழிப்பட்டு, பாபாவிடம் ஆசி பெற்றதைப் பற்றி அனுபவ விளக்கவுரை...
அப்பா சாஹேப் இல்லத்திற்கு வருகைப் பரிந்த பாபா எவ்வாறு ஆசியும் அனுக்கிரமும் செய்தார் என்பதைப் பற்றியும்..மேலும் நவவித பக்தியைக் குறிப்பது போல் ஒன்பது ரூபாய்களை அப்பா சாஹேப்பிற்கு வழங்கி ஆசிர்வதித்ததைப் பற்றிய அனுபவ விளக்கவுரை...
ஹரிபாவ் கர்ணிக் என்ற அடியவரின் கொடுக்க மறந்து தக்ஷிணையை பாபா எவ்வாறு நரசிங்க மஹராஜ் என்ற ஞானி மூலம் பெற்று பாபா தான் அனைவருக்குள்ளும் இருக்கின்றேன் என்பதை தெளிவுபடுத்திய அற்புத விளக்கவுரை...
மேற்க்கண்ட தலைப்புக்களின் விளக்கவுரைகளை பற்றி ஒவ்வொன்றாகக் கீழே காண்போம்..
🔥 முதலில் பாபா தன்னை நாடி வந்த பக்தர்கள் அனைவருக்கும், ஏன் உதியை வழங்கினார் என்பதன் விளக்கமும், உதியில் அடங்கியுள்ள மறை ஞான மூல சூட்சமமும், உதியின் மூலமாக நாம் பெறப்போகும் பலன்கள் என்ன என்பதன் விளக்கவுரைகளை இங்குக் காண்போம்..🔥
சென்ற அத்தியாயத்தில் குருவின் சிறப்பியல்புகளைப் பற்றி நாம் விவரித்தோம்.. இந்த அத்தியாயத்தில் உதியின் அடங்கியுள்ள மறைஞான மூல சூட்சமத்தையும், உதி என்கிற விபூதியைப் பயன்படுத்துவதால் பெறப்போகும் பலன்களைப் பார்ப்போம்...இப்போது நமது சத்குருநாதர் சீரடி பாபாவை தலைதாழ்த்தி வணங்குவோம். அவர்களின் கருணை நிறைந்த கடைக்கண் பார்வையே மலைப் போன்ற பாவங்களை அழித்து, நமது மனதில் உள்ள தீய கறைகளை நீக்கிச் சீர்படுத்துகிறது.. பாபாவின் உபதேசமே நம் வாழ்க்கையை நல்வழியில் இட்டுச் செல்கின்றது... நமக்கு அழியாத இன்பத்தை நல்குகின்றது...'இது எங்களுடையது, அது உங்களுடையது' என்ற பாகுபாடு அவர்கள் மனதில் எழுவதே இல்லை... அவர்களது கடனானது இப்பிறவியிலும், இனிவரும் பிறவிகளிலும் நம்மால் திருப்பிக் கொடுக்கப்படப் போவதேயில்லை....
உதி என்கிற விபூதியைப் பற்றி இங்கே காண்போம்...
பாபா அனைவரிடமிருந்தும் தக்ஷிணையைப் பெற்றார்...இவ்வாறாகச் சேகரிக்கப்பட்ட பணத்திலிருந்து அவர் பெருமளவு தான தர்மத்திற்கும், மீதியை விறகு வாங்குவதற்கும் செலவழித்தார்..அவர் எப்போதும் எரியவிட்டுக் கொண்டிருந்த துனி என்ற புனித யாகத்தின் நெருப்பில் விறகை இட்டார்...இந்த புனித நெருப்பிலிருந்து வரும் சாம்பலானது 'உதி'(விபூதி ) என்று அழைக்கப்பட்டது... பக்தர்கள் சீரடியை விட்டுப் புறப்படும் சமயத்தில் இந்த உதியானது தாராளமாக வினியோகிக்கப்பட்டது ..
உதியின் முக்கியத்துவத்தைப் பற்றி பாபா குறிப்பிடுவது அல்லது உபதேசிப்பது என்னவென்றால், இப்பிரபஞ்சத்தில் காணப்படும் நிகழ்ச்சிகள் யாவும் சாம்பலைப் போன்று நிலையற்ற பொருள் என்பதே..பஞ்ச பூதங்களால் அமைக்கப்பட்ட நம் உடம்பானது அவைகளின் எல்லா இன்பங்களையும் துய்த்து முடித்து ஓய்ந்த பின்னர் சாம்பலாக்கப்படும்... அவர்களின் உடல் சாம்பலாக்கப்படும் என்ற உண்மையை பக்தர்களுக்கு நினைவூட்டவே பாபா உதியை வழங்குகிறார். பிரம்மம் ஒன்றே மெய்ப்பொருள் என்பதையும், பிரபஞ்சம் நிலையற்றது என்றும், தந்தை, தாய், மகன் இவர்கள் யாவரும் உண்மையில் நம்முடையவர் அல்ல என்றும் இதன் மூலம் உபதேசித்தார். இவ்வுலகத்துக்கு நாம் தனியாக வந்தோம்... தனியாகவே உலகைவிட்டுப் போகவேண்டும்... உதி பலவிதமான உடல் மற்றும் மன நோய்களைக் குணப்படுத்தியது என்பது அறியப்பட்டது...இப்போதும் கூட உதியை நம்பிக்கையுடன் பயன்படுத்துபவர்கள் பலருடைய வாழ்வில் பல அற்புதங்கள் நிகழ்கின்றன ...
நித்ய மற்றும் அநித்ய வஸ்துக்களைப் பகுத்துணரும் விவேகம், மற்றும் அநித்ய வஸ்துக்களில் பற்றின்மை பற்றிய உயரிய மூல சூட்சம தத்துவங்களை பாபா அவரது உதி மற்றும் தக்ஷிணையின் மூலம் அடியவர்களுக்கு அறிவுருத்த விரும்பினார்...உதி என்பது விவேகத்தையும், தக்ஷிணைப் பற்றின்மையையும் நமக்கு அறிவுறுத்துகின்றது...இவ்விரண்டும் நம்மிடத்தில் இருந்தாலொழிய நாம் இச்சம்சார சாகரத்தைக் கடக்க முடியாது.. எனவே பாபா தக்ஷிணையைக் கேட்டுப் பெற்றார். அவர்கள் விடைபெறும்போது உதியைப் பிரசாதமாக அளித்து அதை அவர்கள் நெற்றியிலிட்டுத் தமது வரம் நல்கும் கரத்தை அவர்கள் தலைமீது வைத்தார்...பாபா மகிழ்வான மனநிலையில் இருக்கும்போது ஆனந்தமாகப் பாடுவார்... அத்தகைய ஒரு பாட்டு, உதியைப் பற்றியதாகும்..
அந்தப் பாடலை இங்கே காண்போம்....
ரமதே ராம் ஆவோஜி..! ஆவோஜி..!
உதியாங்கி கோனியா லாவோஜி..! லாவோஜி..!
ஓ..! விளையாட்டு ராமா, வாரும்..! வாரும்..!
பாபா இதனை மிகுந்த தெளிவான இனிமையான குரலில் பாடுவது வழக்கம்... உதியைப் பற்றி ஆன்மிகக் குறிப்பாகச் சொல்லப்பட்ட பொருள் இவ்வளவே...உதியின் பயன்பாட்டில் அதற்கு லௌகீக தனிமுறைச் சிறப்பும்கூட உண்டு....உதியைப் பூசுவதாலும், நீரில் கலந்து பருகுவதாலும் தீராத நோய் குணமாகுதல், மன அமைதி, சாந்தம் ஆரோக்கியம், சுபிட்சம், கவலைகளினின்று விடுதலை மற்றும் பல லோகாயத லாபங்களை அளித்தது...உதி என்கிற விபூதியைப் பயன்படுத்தி நன்மை அடைந்தவர்களின் அனுபவ விளக்க உரைகளைப் பற்றி ஒவ்வொன்றாக கீழே காண்போம் ...
🔥சீரடி பகவானின் அருட்பிரசாதமான உதியைப் பயன்படுத்துவதன் மூலம், நாராயண் மோதிராம் ஜனி என்பவர் எவ்வாறு தேள்கடி விஷத் தாக்கத்திலிருந்து மீண்டார் என்பதன் விளக்கவுரை இங்கே...🔥
நாசிக்கைச் சேர்ந்த நாராயண் மோதிராம் ஜனி என்பவர் பாபாவின் பக்தராவார்...இவர் ராமச்சந்திர வாமன் மோடக் என்ற பாபாவின் மற்றுமொரு அடியவரின் கீழ் வேலை பார்த்து வந்தார்...ஒருமுறை அவர் தமது தாயாருடன் சீரடிக்கு சென்று பாபாவை தரிசனம் செய்தார்... .அப்போது பாபா அவளிடம், அவரது மகன் இனிமேல் வேலைசெய்யக் கூடாதென்றும் சுய வியாபாரம் ஆரம்பிக்க வேண்டுமென்றும் கூறினார்... சில நாட்களுக்குப் பின் பாபாவின் வாக்குரை உண்மையானது... நாராயண் ஜனி வேலையை விட்டுவிட்டு ஆனந்தாஸ்ரம் என்ற ஒரு தங்கும் விடுதியை ஆரம்பித்தார்...அது செழிப்பாக வளர்ந்தது.
ஒருமுறை இந்த நாராயண் ஜனியின் நண்பர் ஒருவரைத் தேள் கடித்தது..அதனால் ஏற்பட்ட வலி தீவிரமாக இருந்திருக்கின்றது.. தாங்கிக்கொள்ள முடியாமல் இருந்து இருக்கின்றார்..அத்தகைய சந்தர்ப்பங்களில் உதி மிகவும் பலனுள்ளதாக இருந்திருக்கின்றது....வலிக்கும் இடத்தில் அது தடவப்படவேண்டும்.எனவே நண்பர் நாராயண் உதியைத் தேடினார்....ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை...பின்னர் அவர் பாபாவின் படத்தின்முன் நின்று பாபாவின் உதவியை வேண்டி, அவர் நாமத்தை ஜெபித்து பாபாவின் படத்தின் முன்னால் புகைந்து கொண்டிருக்கும் ஊதுபத்தியின் சாம்பலிலிருந்து ஒரு சிட்டிகை எடுத்து அதை பாபாவின் உதியாக நினைத்துக் கொண்டு வலிக்கும் இடத்திலும், கடிவாயிலும் தடவினார்..அவர் விரலை எடுத்த உடனேயே வலி மறைந்துவிட்டது....இருவருமே உணர்ச்சிவசப்பட்டுப் பெருமகிழ்ச்சியுற்றனர்.
🔥பாபாவின் பக்தர் ஒருவர் தன்னிடம் உதி இல்லாத காரணத்தினால், தனது காலடி மண்ணையே உதியாகப் பாவித்து பயன்படுத்தி எவ்வாறு பிளாக் வியாதிருந்து மீட்டார் என்பதன் விளக்கவுரை இங்கே..🔥
ஒருமுறை பாந்த்ராவிலுள்ள பாபாவின் அடியவர் ஒருவர், வேறோர் இடத்திலுள்ள தனது மகள், நெறிகட்டும் பிளேக் வியாதியால் துன்புற்றுக் கொண்டிருக்கிறாள் என்பதை அறிந்தார்...அவரிடம் உதி இல்லை. எனவே அவர் நானா சாஹேப் சாந்தோர்கரிடம் உதியை அனுப்பும்படி விஷயத்தைத் தெரியப்படுத்தினார்...நானா சாஹேப் தனது மனைவியுடன் கல்யாணுக்குப் பயணம் செய்து கொண்டிருந்த போது தாணே ரயில் நிலையத்துக்கருகில் உள்ள ஒரு சாலையில் இவ்விஷயத்தைக் கேள்விப்பட்டார்...அப்போது அவரிடம் உதி இல்லை. எனவே அவர் தரையிலிருந்து கொஞ்சம் மண்ணை எடுத்து பாபாவைத் தியானித்து , பாபாவின் ஆசியை தொழுது வேண்டிக் கொண்டு, அருகிலிருந்த தனது மனைவியின் நெற்றியில் இட்டார். அடியவர் இவையெல்லாவற்றையும் கண்டார்.. .பின்பு அவர் தமது மகள் வீட்டுக்குச் சென்றபோது மூன்று நாட்களாகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த தனது மகள், தாணே ரயில் நிலையத்தருகில் நானா பாபாவை வேண்டிக் கொண்ட அதே சமயத்திலிருந்து குணமடையலானாள் என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தார்...
🔥நானா சாஹேப் சாந்தோர்கரின் மகள் மைனாதாயினுடைய பிரசவத்தில் உள்ள பிரச்சினைகளைத் போக்குவதற்காக, எவ்வாறு பாபா உதி வழங்கி ஆசிர்வதித்து காப்பாற்றியதன் அனுபவ விளக்கவுரையை இங்கு காண்போம்....🔥
1904-ஆம் ஆண்டில், நானா சாஹேப் சாந்தோர்கர் சீரடியிலிருந்து நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள கான்தேஷ் ஜில்லாவிலுள்ள ஜாம்நேரின் மம்லதாராக இருந்தார்....அவரது மகளான மைனாதாயி கருவுற்றுப் பிரசவிக்க இருந்தாள்...அவளது பிரசவம் மிகவும் கடினமான நிலையில் இரண்டு மூன்று நாட்களாக பிரசவ வேதனையால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாள்....நானா சாஹேப் எல்லாவிதப் பரிகாங்களைச் செய்ய முயற்சித்தும் பலனில்லை...அவர் பாபாவை நினைவுகூர்ந்து அவரின் உதவியைத் தொழுது வேண்டினார்... அப்போது சீரடியில் பாபுகீர்புவா என்று பாபா கூப்பிடும் ராம்கீர்புவா என்பவர் காந்தேஷிலுள்ள தமது சொந்த ஊருக்குப் போக விரும்பினார்....பாபா அவரைக் கூப்பிட்டு, அவர் வீட்டுக்குப் போகும் வழியில் உள்ள ஜாம்நேரில் சிறிது தங்கி ஓய்வெடுத்துக் கொண்டு செல்லுமாறும், நானா சாஹேப்பிடம் உதியையும், ஆரத்தி பாட்டையும் அளிக்கும் படியும் கூறினார்....ராம்கீர்புபா தன்னிடம் இரண்டே ரூபாய்கள் தான் இருப்பதாகவும் ஜல்காவன் வரையிலுள்ள ரயில்வே கட்டணத்திற்கு மட்டுமே இது போதுமானது என்றும், ஜல்காவனில் இருந்து முப்பது மைல் தூரத்திலுள்ள ஜாம்நேர் வரை போவது தம்மால் இயலாது என்றும் கூறினார்...இதற்கு பாபா, எல்லா ஏற்பாடுகளும் செய்யப்ப்படுமாதலால் அவரைக் கவலைப்பட வேண்டாம் என்றும் உறுதியளித்தார்...
பின்னர் மாதவ் அட்கரால் புனையப்பட்ட புகழ்பெற்ற ஆரத்திப்பாடலை (அதன் மொழிபெயர்ப்பு இறுதியில் அளிக்கப்படுகிறது) ஷாமாவிடம் எழுதச்சொல்லி, அதன் பிரதியுடன் உதியையும் இணைத்து ராம்கீர்புபாவிடம் கொடுத்து, நானா சாஹேப்பிடம் கொடுக்கும்படி கூறினார்...பின்னர் ராம்கீர்புவா பாபாவின் மொழிகளை நம்பி சீரடியைவிட்டுப் புறப்பட்டு ஜல்காவனை அதிகாலை இரண்டு மணியளவில் அடைந்தார்...அப்போது அவரிடம் இரண்டே அணாக்கள்தாம் மீதமிருந்தன..மிகவும் நெருக்கடியான நிலையில் இருந்தார்...அவரது பெருஞ்சுமை தணிவுறும் வகையில், "யார் சீரடியைச் சேர்ந்த பாபுகீர்புவா..?" என்று யாரோ கூப்பிடுவது கேட்டது...பின்னர் அவர் அவனிடம் சென்று, தாமே பாபுகீர்புவா என்று கூறினார்.. .தாம் நானா சாஹேப்பிடமிருந்து வருவதாகவும் அவருடைய வேலையாள் என்றும் கூறி நல்ல ஜோடிக் குதிரைகளுடன் கூடிய ஒரு பிரமாதமான வண்டியிடம் அழைத்துச் சென்றார்...அவர்கள் இருவரும் அதில் பிரயாணம் செய்தார்கள்...வண்டி வேகமாக ஓடியது.. அதிகாலையில் அவர்கள் ஓடைக்கரையொன்றை அடைந்தனர். வண்டியோட்டி குதிரைகளைத் தண்ணீர் குடிக்க அழைத்துச் சென்றான்...பியூன், ராம்கீர்புவாவை சிறிது உணவு உட்கொள்ளுமாறு கூறினார் ...பியூனின் தாடி, மீசை இவைகள் அனைத்தும் ராம்கீர்புவா பார்த்துவிட்டு அவனை முகம்மதியனாகச் சந்தேகப்பட்டு எவ்விதச் சிற்றுண்டியையும் அவனிடமிருந்து பெற விருப்பமில்லாதவராய் இருந்தார்....ஆனால் வண்டியை ஓட்டி வந்தவர் தாம் ஒரு இந்து, கார்வாலைச் சேர்ந்த க்ஷத்திரியன் என்றும், நானா சாஹேப் இந்தசிற்றுண்டிகளை எல்லாம் அனுப்பியிருந்ததாகவும் இதை ஏற்றுக் கொள்வதில் எவ்விதக் கஷ்டமோ, சந்தேகமோ வேண்டியது இல்லையென்றும் கூறினார்... பின்னர் அவர்கள் இருவரும் சிற்றுண்டி உண்டு மீண்டும் புறப்பட்டனர்.. பொழுது விடியும்போது ஜாம்நேரை அடைந்தனர்..
ராம்கீர்புவா சிறுநீர் கழிக்கச் சென்று சில நிமிடங்களில் திரும்பி வந்தார்...அப்போது குதிரைவண்டியையும், வண்டியோட்டியையும் காணாது பேச்சற்றவரானார்...பின்னர் அருகிலுள்ள கச்சேரிக்குச் சென்று விசாரித்து மம்லதார், வீட்டில் இருப்பதை அறிந்துக் கொண்டார்.. நானா சாஹேபின் வீட்டுக்குச் சென்று தம்மை அறிமுகப் படுத்திக்கொண்டு பாபாவின் உதியையும், ஆரத்தியையும் அளித்தார். இத்தருணத்தில் மைனாதாயின் விஷயம் மிகமிகத் தீவிரமடைந்து வீட்டிலிருந்தோர் அனைவரும் அவளைக் குறித்து ஆழ்ந்த கவலையுற்றனர்...நானா சாஹேப் தனது மனைவியை அழைத்து உதியைத் தண்ணீரில் கரைத்துக் கொடுக்கும் படியும், ஆரத்தியைப் பாடும்படியும் கேட்டுக் கொண்டார்... பாபாவின் உதவி, உற்ற சமயத்தில் கிடைத்திருக்கிறதென அவர் நினைத்தார்..சில நிமிடங்களில் பிரசவம் நன்றாக முடிந்தது என்றும், மிகப்பெரியக் கண்டம் கடந்து போய்விட்டது என்றும், பிரசவ அறையிலிருந்து செய்தி கிடைத்தது.. ராம்கீர்புவா நானா சாஹேப் அவர்களிடம் பியூன், வண்டி, சிற்றுண்டி முதலியவைகளுக்காக நன்றி செலுத்தியபோது பெருமளவு நானா சாஹேப் ஆச்சரியப்பட்டார்... ஏனெனில் அவர் ஸ்டேஷனுக்கு ஒருவரையும் அனுப்பவில்லை. சீரடியிலிருந்து எந்த ஆள் வருவதும் அவருக்குத் தெரியாது....
தாணேவைச் சேர்ந்த திரு B.V.தேவ் என்னும் ஓய்வுபெற்ற மம்லதார் இதைப்பற்றி நானாவின் புதல்வனான பாபுராவ் சாந்தோர்கரிடமும், சீரடியைச் சேர்ந்த ராம்கீர்புவாவிடமும் விசாரித்துவிட்டு தன்னைத்தானே திருப்திப்படுத்திக்கொண்ட பின்பு, சாயிலீலா சஞ்சிகையில் (தொகுப்பு 13, எண்.11,12 &13) ஒரு பகுதி உரைநடையாகவும், ஒரு பகுதி கவிதையாகவும் கொண்ட கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார்...மேலும் சகோதரர் B.V.நரசிம்மஸ்வாமி, மைனாதாயி, பாபு சாஹேப் சாந்தோர்கர், ராம்கீர்புவா இவர்களிடமிருந்து 1.6.1936, 16.9.1936, 1.12.1936 ஆகிய தேதிகளிடப்பட்ட வாக்குமூலத்தைப் பெற்று "அடியவர்களின் அனுபவங்கள்" பகுதியில் பதிப்பித்து இருக்கிறார். ராம்கீர்புவாவின் வாக்குமூலம் கீழ்வருமாறு...
"ஒருநாள் பாபா என்னை அவரிடம் அழைத்து, உதிப்பொட்டலம் ஒன்றையும், பாபாவின் ஆரத்தியின் பிரதி ஒன்றையும் கொடுத்தார்.. அச்சமயம் நான் கான்தேஷ் போக வேண்டியிருந்தது...பாபா என்னை ஜாம்நேர் போகும்படியும், ஆரத்திப்பாடலையும், உதியையும் ஜாம்நேரில் நானா சாஹேப் சாந்தோர்கரிடம் கொடுக்கும்படியும் கூறினார். என்னிடம் இருப்பதெல்லாம் ரூ.2 என்றும் கோபர்காவனிலிருந்து ஜல்காவன், பின்னர் வண்டியில் ஜல்காவனிலிருந்து ஜாம்நேர் செல்வதற்கும் அது எங்ஙனம் போதும் என்று நான் அவரிடம் கேட்டேன்...பாபா "கடவுள் கொடுப்பார்" என்று கூறினார்...அன்று வெள்ளிக்கிழமை...நான் உடனே புறப்பட்டேன்... மன்மாட் இரவு 7:30 மணிக்குச் சென்றேன். பின்னர் ஜல்காவனிற்கு காலை 2:45க்குச் சென்றேன்.. அந்த நாட்களில் பிளேக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன...எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. ஜாம்நேர் செல்வதற்கு என்ன செய்யவேண்டும் என்று நான் கண்டுபிடிக்க வேண்டியதிருந்தது. காலை சுமார் மூன்று மணியளவில் பூட்ஸ், டர்பன், நல்ல உடைகளுடன் கூடிய ஒரு வேலையாள் என்னிடம் வந்து என்னை வண்டியில் அமர்த்தி ஓட்டிச்சென்றான்.. நான் திகிலுடன் இருந்தேன்... வழியில் பாகூரில் சிற்றுண்டி உட்கொண்டேன். ஜாம்நேரை நாங்கள் அதிகாலை அடைந்தோம்.. நான் சிறுநீர் கழிக்கச் சென்று திரும்பியபோது குதிரைவண்டியைக் காணவில்லை... வண்டிக்காரனும் மறைந்துப் போனான்" என்று ராம்கீர்புவா கூறினார்....
🔥நாராயண்ராவ் என்ற பக்தருக்கு, பாபா கனவுக்காட்சியின் மூலமாக ஆசிர்வதித்து, எவ்வாறு தீராத நோயை குணப்படுத்தினார் என்பதைப் பற்றிய அனுபவ விளக்கவுரை இங்கே....🔥
பக்தர் நாராயண்ராவ் (தந்தை பெயரும், உபபெயரும் தரப்படவில்லை) பாபாவை நேரடியாக இரண்டுமுறை சந்திக்கும் நல்லதிர்ஷ்டம் பெற்றிருந்தார்.. பாபா காலமான 1918..ஆம் வருடத்தின் பிறகு மூன்றாண்டுகளுக்குப் பின்னர் அவர் சீரடிக்குச் செல்ல விரும்பினார்...ஆனால் அவர் செல்ல முடியவில்லை..பாபாவின் மகாசமாதியான ஓர் ஆண்டிற்குள் அவர் நோய்வாய்ப்பட்டு மிகவும் அவதியுற்றார்... எல்லாவிதமான சாதாரண சிகிச்சைகளும் அவருக்குப் பலன் அளிக்கவில்லை...எனவே பாபாவை அல்லும், பகலும் தியானித்தார்... ஒரு நாளிரவு கனவில் அவர் ஓர் காட்சி கண்டார்..பாபா நிலவறை ஒன்றிலிருந்து வெளிவந்து அவருக்கு ஆறுதலளித்து, "கவலைப்படாதே, நாளையிலிருந்து நீ குணமடைவாய்..மேலும் ஒரு வாரத்திற்குள் நன்றாக நடமாடுவாய்" என்று கூறினார்...கனவில் குறிப்பிடப்பட்ட தினத்திற்குள் நாராயண்ராவ் பூரண குணமடைந்தார்... இப்போது நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்...
"உடல் இருந்ததனால் பாபா வாழ்ந்துக் கொண்டிருந்தார் எனவும், உடலை விட்டுவிட்டதனால் இறந்துவிட்டாரா..? என்று நினைக்கின்றீர்களா...இல்லையே..பாபா எப்போதுமே வாழ்கின்றார்...ஏனெனில் 'பிறப்பு - இறப்பு' என்ற இருமையையும் கடந்தவர் அவர். எவனொருவன் முழுமத்துடன் அவரை நேசிக்கிறானோ, அவன் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் அவரிடமிருந்து பதிலைப் பெறுகிறான். நமது அருகிலேயே அவர் எப்போதும் இருக்கிறார்....எந்த ரூபத்தையும் எடுத்துக்கொள்கிறார்...பிரியமுள்ள பக்தனிடத்தில் தோன்றி அவனை திருப்திப்படுத்துகிறார்."
🔥அப்பா சாஹேப் குல்கர்ணி என்ற பக்தரின் பேரன்பால் ஈர்க்கப்பட்ட பாபா, எவ்வாறு சாஹேப்பின் வீட்டிற்கு வருகைப்புரிந்து ஆசிர்வதித்து தக்ஷிணை பெற்றுக்கொண்டார் என்பதைப் பற்றிய அனுபவ விளக்கவுரை இங்கே....🔥
1917-ஆம் ஆண்டு அப்பா சாஹேப் குல்கர்ணி என்பவருக்கு பாபாவை வழிபடும் ஒரு வாய்ப்பு நேரிட்டது... அவர் தாணேவுக்கு மாற்றப்பட்டு, பாபா சாஹேப் பாடேயால் அளிக்கப்பட்ட பாபாவின் படத்தை வழிபடத் தொடங்கினார். உண்மையான ஆர்வத்துடன் அவர் வழிபாடு செய்தார். பூ, சந்தனம், நிவேதனம் இவைகளைத் தினமும் பாபாவின் படத்தின்முன் சமர்ப்பித்தார்..அவரை நேரில் காணவும் விரும்பினார்...இது தொடர்பாக ஒன்றைக் குறிப்பிடலாம்... பாபாவின் படத்தை ஆர்வத்துடன் பார்த்து தரிசிப்பது அவரை நேரில் காண்பதற்குச் சமமாகும். கீழ்வரும் கதை இவ்வுண்மையை வெளிப்படுத்துகிறது.
🔥பாலாபுவா சுதார் என்ற பக்தர் பாபாவின் புகைப்படத்தை ஈடுபாட்டுடன் வழிப்பட்டு, பாபாவிடம் ஆசி பெற்றதைப் பற்றி அனுபவ விளக்கவுரை இங்கே....🔥
பம்பாயைச் சேர்ந்த பாலாபுவா சுதார் என்னும் அருட்தொண்டர், அவர்தம் கடவுள்பற்று, பக்தி மற்றும் பஜனை முதலியவற்றால் நவீன துகாராம் என்று அழைக்கப்பட்டார்...அவர் முதல்முறையாக 1917 -ஆம் ஆண்டில் சீரடிக்கு வந்தார்...பாபாவின் முன்னால் நமஸ்கரித்தபோது பாபா, "இம்மனிதரை நான் நான்கு ஆண்டுகளாக அறிவேன்" என்றார்...பாலாபுவா ஆச்சரியப்பட்டு, இதுவே தமது முதல் சீரடி விஜயமாதலால், அஃதெங்கனம் இருக்கமுடியும் என்று எண்ணினார்...ஆனால் அதைப்பற்றித் தீவிரமாகச் சிந்தித்தபோது நான்காண்டுகளுக்கு முன்னர் பம்பாயில் பாபாவின் படத்தின் முன்னர் வீழ்ந்து நமஸ்கரித்தது நினைவிற்கு வந்தது...தனக்குள் தன்னை அறிந்த ஞானிகள் எத்தகைய நிறைபேரறிவு உடையவர்களாகவும், சர்வவியாபிகளாகவும் இருக்கிறார்கள். தமது அடியவர்களிடம் அவர்கள் எத்தகைய அன்புடன் விளங்குகின்றனர். அவர்தம் புகைப்படத்தின முன்னர் நான் பணிந்தேன். இவ்வுண்மை பாபாவால் கவனிக்கப்பட்டது.. உரிய தருணத்தில் தமது படத்தைக் காண்பது நேரில் தம்மைக் காண்பதற்குச் சமமாகும் என்பதை அவர் உணரும்படி செய்தார் என்று கூறுகின்றார் பாலா புவா...
🔥அப்பா சாஹேப் இல்லத்திற்கு வருகைப் பரிந்த பாபா எவ்வாறு ஆசியும் அனுக்கிரமும் செய்தார் என்பதைப் பற்றியும்..மேலும் நவவித பக்தியைக் குறிப்பது போல் ஒன்பது ரூபாய்களை அப்பா சாஹேப்பிற்கு வழங்கி ஆசிர்வதித்ததைப் பற்றிய அனுபவ விளக்கவுரை இங்கே...🔥
அப்பா சாஹேப் தாணேவில் இருந்தபோது பிவண்டி என்னுமிடத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது...ஒரு வாரத்திற்குள் அப்பா சாஹேப் திரும்புவார் என்று எதிர்பார்க்கப் படவில்லை..அவர் இல்லாதபோது மூன்றாவதுநாள், பின்வரும் ஒரு வியப்பூட்டும் சம்பவம் நிகழ்ந்தது.. மத்தியானம் ஒரு பக்கிரி, அப்பா சாஹேபின் வீட்டிற்கு வருகைப் புரிந்தார்..அவருடைய அங்க அமைப்பெல்லாம் பாபாவின் படத்துடன் சரியாக ஒத்திருந்தன. குல்கர்ணியின் மனைவியும், குழந்தைகளும் அவரை அவர் சீரடி சாய்பாபாவா..? எனக் கேட்டனர்..அதற்கு அவர் இல்லை என்று கூறினாலும், யான் பாபாவின் பணிவுள்ள ஒரு வேலையாள் என்றும், உங்களின் இல்லத்திற்கு பாபாவின் கட்டளைப்படியே உங்களின் குடும்ப நலத்தை விசாரிக்க வந்திருப்பதாகவும் கூறினார்...பின்னர் அவர் தக்ஷிணை கேட்டார். அப்பெண்மணி ஒரு ரூபாய் கொடுத்தாள்..அவர் உதிப் பொட்டலம் ஒன்றைக் கொடுத்து அதை வழிபாட்டுக்காக பூஜையறையில் படத்துடன் வைக்கும்படி கூறினார்..பின்னர் அவர் வீட்டை விட்டுச் சென்று விட்டார்...மேலும் அப்பா சாஹேப், தனது குதிரை பிவண்டியில் நோய்வாய்ப்பட்டதால் பயணத்தைத் தொடர முடியவில்லை..அந்நாள் மாலை அவர் வீட்டிற்குத் திரும்பினார்..மனைவியின் மூலம் பக்கிரி விஜயத்தைப் பற்றி கேட்டு அறிந்தார்...தான் அப்பக்கிரியின் தரிசனம் பெறாததையும், ஒரே ஒரு ரூபாய் மட்டும் தக்ஷிணையாக அளிக்கப்பட்டது குறித்து திருப்தியில்லாததையும் நினைத்து மனதில் சிந்தனை செய்தார்.. தாம் அப்போது இருந்திருந்தால் பத்து ரூபாய்க்குக் குறைவாக தக்ஷிணை அளித்திருக்கமாட்டேன் என்று கூறினார்...பின் உடனே பக்கிரியைத் தேடிக்கொண்டுச் சென்றார்.உணவு உட்கொள்ளாமல் மசூதியிலும் மற்ற இடங்களிலும் அவரைத் தேடினார்...எங்கு தேடியும் காண இயலவில்லை...
பாபாவின் கொள்கையை வாசகர்கள் முப்பத்திரெண்டாம் அத்தியாயத்தில் பாராயணம் செய்திருப்பீர்கள்...அதாவது வெறும் வயிற்றுடன் கடவுளைத் தேடுதல் கூடாது என்பதாகும்... உணவுக்குப்பின் சித்ரே என்ற நண்பருடன் அவர் உலாவப் புறப்பட்டார். சிறிதுதூரம் சென்றபின், விரைவாக ஒரு பக்கிரி அவர்களை நோக்கி வருவதைக் கண்டனர்... பாபாவின் புகைப்படத்தில் இருந்த அந்த அடையாளங்களுடன் இப்பக்கிரியின் உருவமும் ஒத்திருந்ததால் இவரே மத்தியானம் தமது வீட்டிற்கு வந்தவராக இருக்கக்கூடும் என்று அப்பா சாஹேப் கருதினார்..பக்கிரி உடனே தமது கையை நீட்டி தக்ஷிணை கேட்டார்..அப்பா சாஹேப் அவருக்கு ஒரு ரூபாயை அளித்தார்... அவர் மீண்டும் கேட்கவே அப்பா சாஹேப் மேலும் இரண்டு ரூபாய் வழங்கினார்..அப்போதும் அவர் திருப்தி அடையவில்லை...பின்னர் அவர் சித்ரேயிடம் மூன்று ரூபாய் கடன் வாங்கி அதை அவருக்கு வழங்கினார்...பக்கிரி மேலும் விரும்பினார்..அப்பா சாஹேப் மீண்டும் அவருக்கு மூன்று ரூபாய் வழங்கினார்.... மொத்தத்தில் ஒன்பது ரூபாய்.. பக்கிரி அவர்கள் திருப்தியடைந்தவராகக் காணப்படவில்லை.. மேலும் கேட்டார்...பின்னர் தம்மிடம் ஒரு பத்து ரூபாய் நோட்டாக இருப்பதாக அவரிடம் கூறினார்..பக்கிரியும் அதையே கேட்டு வாங்கிக்கொண்டு ஒன்பது ரூபாயைத் திருப்பிக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்....முன்னர் அப்பா சாஹேப் தாம் பத்து ரூபாய் கொடுக்கிறேன் என்று கூறினார்... அத்தொகையும் அவரிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டது...பாபாவின் ஸ்பரிசத்தால் புனிதமாக்கப்பட்ட ஒன்பது ரூபாய்களும் அவரிடமே திருப்பித்தரப்பட்டன..ஒன்பது என்ற எண் குறிப்பிடத்தக்கது...இது நவவித பக்தியைக் குறிக்கிறது. (21ஆம் அத்தியாயத்தில் நவவிதப் பக்தியைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது..பார்க்கவும் ).
லக்ஷ்மிபாயீ ஷிண்டேவுக்கு பாபா தமது கடைசித் தருணத்தில் ஒன்பது ரூபாய் கொடுத்ததை இங்கே ஒப்பிட்டு நவவிதப் பக்தியின் முக்கியத்துவத்தையும், சிறப்பியல்புகள் பற்றி மேலும் உணரக் கூடிய நிகழ்வாக இந்நிகழ்வும் இருக்கின்றது....அப்பா சாஹேப் உதிப்பொட்டலத்தைச் சோதனை செய்தார். அதில் சில மலர் இதழ்களும், அக்ஷதைகளும் இருப்பதைக் கண்டார். பின் சில நாட்களுக்குப் பிறகு சீரடி சென்றபோது பாபாவின் ரோமம் ஒன்று அவருக்குக் கிடைத்தது...ரோமத்தையும் உதிப் பொட்டலத்தையும் ஒரு தாயதிற்குள் வைத்து எப்போதும் தமது புயத்தில் அணிந்துக் கொண்டார். அப்பா சாஹேப் உதியின் சக்தியை உணர்ந்துக் கொண்டார்... அவர் மிகவும் புத்திசாலியாய் இருந்தபோதும் ஆரம்பத்தில் சம்பளமாக ரூ.40 பெற்று வந்தார். பாபாவின் படமும், உதியையும் பெற்றான பிறகு நாற்பது ரூபாயைப் போலப் பலமடங்கு அவர் மாதச் சம்பளமாகப் பெறக் கூடிய நிலையை அடைந்தார்...அதிக ஆற்றலும், செல்வாக்கும் படைத்தவரானார்....இந்த ஆசியானது உலக நன்மைகளுடன் கூட அவர்தம் ஆன்மிக முன்னேற்றமும் துரிதமானது...எனவே பாபாவின் உதியைப் பெற்றிருக்கும் நல்லதிர்ஷ்டம் உடையவர்கள், அதை குளித்தபின் நெற்றியில் இட்டுக்கொண்டு சிறிதளவு எடுத்துத் தண்ணீரில் கரைத்துப் புனித தீர்த்தமாகக் குடித்துவிடவேண்டும்...
🔥ஹரிபாவ் கர்ணிக் என்ற அடியவரின் கொடுக்க மறந்து தக்ஷிணையை பாபா எவ்வாறு நரசிங்க மஹராஜ் என்ற ஞானி மூலம் பெற்று பாபா தான் அனைவருக்குள்ளும் இருக்கின்றேன் என்பதை தெளிவுபடுத்திய அற்புத விளக்கவுரை இங்கே.....🔥
1917-ஆம் ஆண்டில் தாணே ஜில்லாவைச் சேர்ந்த ஹரிபாவ் கர்ணிக் என்பவர், சீரடிக்குக் குருபூர்ணிமா தினத்தன்று (ஆவணி மாதம்) சென்று உரிய சம்பிரதாயங்களுடன் பாபாவை வணங்கினார். உடைகளையும், தக்ஷிணையையும் அவர் சமர்ப்பித்தார்...ஷாமா மூலமாக பாபாவிடம் விடைபெற்ற பிறகு மசூதியின் படிகளில் இருந்து இறங்கினார்... பிறகு இன்னுமொரு ரூபாய் பாபாவுக்குத் தக்ஷிணை வழங்க எண்ணினார்..எனவே அவர் சற்றே திரும்பி, திரும்பவும் படிகளில் ஏற முயற்சித்தார். ஆனால் அவர் பாபாவின் விடையைப் பெற்றுக் கொண்டதால் போகும்படியும், திரும்பி வரவேண்டாம் என்றும் ஷாமா ஜாடை காண்பித்தார்...எனவே அவர் வீட்டுக்குக் கிளம்பினார்...திரும்புகையில் நாசிக்கில் காலாராமரின் கோவிலுக்குத் தரிசனத்துக்குச் சென்றார்...கோவிலின் பெரிய கதவுக்கு சிறிதே உட்புறம் அமரும் நரசிங்க மஹராஜ் என்ற ஞானி தமது அடியவர்களை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு ஹரிபாவிடம் வந்து, அவரின் மணிக்கட்டைப் பிடித்து "எனது ஒரு ரூபாயைக்" கொடு என்றார்...கர்ணிக் வியப்படைந்தார்..மிகுந்த இஷ்டத்துடன் அந்த ஒரு ரூபாயைக் கொடுத்தார்... சாயிபாபா எங்ஙனம் தான் கொடுக்க இஷ்டப்பட்டிருந்த ரூபாயை நாசிக்கைச் சேர்ந்த நரசிங்க மஹராஜ் வழியாக வாங்கினார் என்று எண்ணினார்... இக்கதை ஞானிகள் அனைவரும் ஒன்றே என்ற உண்மையையும், பாபாவின் பேராற்றல் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றது என்ற மூல சூட்சமத்தையும், எங்ஙனம் அவர்கள் ஒத்திசைவுடன் செயல்படுகிறார்கள் என்பதையும் காட்டுகிறது....
ஓம் ஶ்ரீ சாய்ராம்....🙏🙏
ஸ்ரீ சாயீயைப் பணிக...அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்...🙏🏻🙏🏻🙏🏻
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏🏻
https://youtu.be/z9GwOAvI06o