ஞாயிறு, ஆகஸ்ட் 27, 2023

என்ன சுலோகம் சொல்லிக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டார் பாபா..!?

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவானின் உபதேச பொன்மொழிகள்...🙏🙏

கீதை பிறந்த கதையின் மூல சூட்சமம் என்னவென்றால்...

ஒரு சமயம் சீரடி சாயீபாபாவின் காலை வலி தீர வருடிக் கொண்டும் பிடித்துக் கொண்டும் இருந்தார் மகா பண்டிதரான ஒரு பிரமாணர். அவருடைய கண்கள் மூடியிருந்தாலும், வாய் ஏதோ சுலோகங்களைச் சொல்லிக் கொண்டிருந்தது....என்ன சுலோகம் சொல்லிக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டார் பாபா. பாபா நான் பகவத்கீதையைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்றார் அந்தப் பண்டிதர். உடனே பாபா அந்த சுலோகத்தைச் சொல்லி இதைத் தானே சொல்லிக் கொண்டிருக்கிறாய் என்ற கேட்டார். அந்த பண்டிதருக்கு வியப்பு தாளவில்லை. தான் மனத்திற்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டிருந்த சுலோகம் இவருக்கு எப்படித் தெரிந்தது என்று வியந்தார். சரி.. அதற்குப் பொருள் கூறு என்றார் பாபா. பண்டிதரும் கூறினார். தவறு.. தவறு.. நீ சொன்ன பதில் தவறு. அது தான் உண்மையான பதில் என்று நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். ஸ்ரீ வியாசர் அந்த அர்த்தத்தில் எழுதியிருக்க மாட்டார் என்று சொல்லி சரியான பொருளைக் கூறி அந்த வேத பண்டிதரை மேலும் வியக்க வைத்தார் பாபா. அப்படித்தான் சூரியபகவானுக்கு ஆதிகாலத்தில் உபதேசிக்கப்பட்ட பகவத்கீதை பலரால் கற்கப்பட்டாலும், பல சமயங்களில் சரியான பதில் சொல்லப்படாததாலும், ஸ்ரீ கிருஷ்ணர் இரண்டாவது முறையாக அர்ஜுனன் மூலமாக நமக்கு உபதேசித்தார். இதுவே கீதை பிறந்த கதை..

ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக