செவ்வாய், செப்டம்பர் 05, 2023

பகவத் கீதையின் ஏழாவது அத்தியாயத்தில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இவ்வாறு கூறிக் கொண்டே ஆரம்பிக்கிறார்..!

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவானின் உபதேச பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

பகவத் கீதையின் ஏழாவது அத்தியாயத்தில், பகவான் ஸ்ரீகிருஷ்ணர் இவ்வாறு கூறிக் கொண்டே ஆரம்பிக்கிறார்...🙏🏻

மையா அசக்தாமனா பார்த்தா யோகம் யுஞ்சன் மத்-ஆஷ்ரயா. அஸம்ஸயம் ஸமாக்ரம் மாம் யதா ஞாஸ்யாஸி தத்-ச்ருணு’ (7-1). அவர் சொல்கிறார்.,‘ உன்னுடைய பாசம் முழுவதையும் என்னிடம் வைத்து, நான் விவரித்துள்ளவாறு யோகப் பாதையைப் பயிற்சி செய்து, என்னை நீ எவ்வாறு முழுமையாக தெரிந்து கொள்வதென நான் உனக்கு இப்போது விவரிக்கிறேன்...

இங்கு,ஆசக்தி என்பது பாசமென பொருள்படும்,ஆஷ்ரயா என்பது நாம் எதைச் சார்ந்திருக்கிறோமோ அது. நாம் அன்பு செலுதுபவர்களைக் குறித்து பாசம் (ஆசக்தி) உள்ளது, நாம் சார்ந்திருப்பவர்களும் (ஆஷ்ரயா) இருக்கிறார்கள். நாம் எதோடு தொடர்பு கொண்டுள்ளோமோ அது யோகா எனப்படுகிறது.  இங்கே, ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அனைத்தையும் சேர்க்கிறார். உங்கள் இருதயம், உங்கள் மனம், இரண்டும் ஈடுபட்டுள்ளன. உதாரணத்திற்கு, உன்னுடைய வேலை, உன்னுடைய பொழுது போக்கிலிருந்து மாறுபட்டது. உன்னுடைய பொழுதுபோக்கு குறித்து ஆசக்தி, (அதாவது ஆசை அல்லது பிடிப்பு)  உள்ளது ஆனால் நீ வேலை என்று செய்ய வேண்டியிருப்பதால் நீ அதைச் செய்கிறாய். ஆகவே, எவ்வாறு இருந்தாலும் வேலை செய்துகொண்டிருப்பது கர்ம யோகமாகும் (ஒருவர் பணி செய்யும் பாதை). நாம் வேலை செய்ய வேண்டியுள்ளதால் ஒரு பக்கம் வேலை செய்யும் போது, நம்முடைய பிடிப்பு வேறெங்கேயோ, வேறெதையோ குறித்து உள்ளது..

ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்.....🙏🏻🙏🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக