ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻
சுலோகம்....
யே ச்சை-வ சாத்விகா பாவா ராஜசாஸ் தாமசாஸ் ச்ச யே. மத்த ஏவேதி தான் வித்தி ந த்வ-ஹம் தேஷூ தே மயி. (7.12)
ஸ்ரீகிருஷ்ணா பரமாத்மா கூறுகிறார்,..ஓ அர்ஜுனா, மூன்று குணங்களான, சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய மூன்றும் என்னிடமிருந்து பிறந்தவை. ஆனால் அதில் நான் இல்லை மற்றும் அதுவும் என்னிடம் இல்லை, ஆனாலும் அவை என்னிடமிருந்து வந்தவை. இதைத்தான் நீ தெரிந்து கொள்ள வேண்டும்’.இது மிகப் புதிதாய் இருக்கிறது.…
ஸ்ரீ கிருஷ்ணா பகவான் கூறுகிறார்,..‘நான் இந்த மூன்று குணங்களால் ஆளப்படுவதில்லை மற்றும் இந்த மூன்று குணங்களும் என்னிடம் இல்லை, ஆனாலும் இவை என்னிடமிருந்து மட்டுமே உருவாகி இருக்கிறது. இதற்குப் பின்னே ஒரு மிகப் பெரிய அறிவியல் உண்மை இருக்கிறது. இந்த மூன்று குணங்களின் விளையாட்டிற்கு சாட்சியாய் மாறிவிட்டால், அவை எல்லாவற்றிலுமிருந்து நீங்கள் பிரிந்து விடுகிறீர்கள் என்பதை, இதை ஆழமாய் புரிந்து கொள்ள விழைந்தால் நீங்கள் உணர்வீர்கள். எனவே அவர் கூறுகிறார், ‘இந்த மூன்று குணங்களும் என்னிடமிருந்து பிரிந்து இருந்தாலும், அவை என்னுடைய தொடர்ச்சியே.’ நான் இந்த ஆடையை என் உடம்பில் உடுத்தியிருக்கிறேன் ஆனால் நான் அந்த ஆடை அல்ல, நான் அந்த ஆடையின் ஒரு பாகமுமல்ல. எப்படி நாம் ஆடையை உடுத்தினாலும் நாம் அந்த ஆடையல்லவோ மற்றும் அந்த ஆடையின் ஒரு பாகமும் அல்லவோ, ஆனாலும் அந்த உடை நம்முடையது தானோ - அப்படித்தான் இது. இதைப் புரிந்துகொண்டீர்களா..?
ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார், ‘நான் தான் இந்த மூன்று குணங்களை (உடை) உருவாக்கினேன் மற்றும் அவை என்னுடையது, ஆனாலும் அவற்றால் நான் பாதிக்கப்படவில்லை மற்றும் அவை என்னிடம் இருப்பதில்லை மற்றும் நான் இந்த மூன்று குணங்களுமல்ல. எனவே, ஓ தனஞ்சயா (மாபெரும் செல்வங்களை வெல்பவன் என்ற பொருள் கொண்ட அர்ஜுனரின் மற்றொரு பெயர்), நீயும் இந்த மூன்று குணங்களுக்கு சாட்சியாய் மாற வேண்டும். இவை என்னுடைய இறை இயல்பின் ஒரு அங்கம் என்பதை நீ புரிந்துகொள்ள வேண்டும். இவை என்னால் உருவாக்கப்பட்டது மற்றும் இதை நான் தான் தாங்கிக் கொண்டிருக்கிறேன், ஆனாலும் நான் இந்த மூன்று குணங்கள் அல்ல’...
ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻🙏🏻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக