ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻
பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் என்ன செய்கிறார் என்று தெரியுமா..?
அர்ஜுனரின் மனம் எங்கெல்லாம் கவரப்பட்டு செல்லுமோ அங்கிருந்தெல்லாம் அதைத் திரும்ப வரவழைத்து தன் மீதே குவிய வைக்கிறார். அதனால் தான் இதில் ஞானமும் அறிவியலும் ஈடுபட்டு இருக்கிறது, மேலும் இதுதான் இந்த கீதையின் தனித்துவம். ஸ்ரீ கிருஷ்ண பகவான் இந்த விசேஷமான ஞானத்தை கொண்டு, அர்ஜுனரின் மனம் எங்கெல்லாம் போகுமோ அங்கிருந்தெல்லாம் அதை இழுத்து தன் மீது குவிய வைக்கிறார். அப்படியென்றால், அர்ஜுனருடைய மனதை அர்ஜுனருகுள்ளேயே செலுத்தி அர்ஜுனரின் மெய்யுணர்வின் மீது குவிய வைக்கிறார். இதுதான் குருவின் வேலை மற்றும் ஒரு சீடனின் கடமை...
எனவே, ஒருவர் எங்கெல்லாம் பெருவலிமையைக் காண்கிறாரோ, அதெல்லாம் இறைவனுடையது, அதை வெளிக் காட்டுபவருக்கு சொந்தமானது அல்ல என்பதை ஒருவர் உணர வேண்டும். எங்கெல்லாம் ஒருவர் அழகைக் காண்கிறாரோ, அது அந்த மனிதருடையதல்ல, அழகின் பின் இறைவன் இருக்கிறார் என்பதை உணர வேண்டும். இறைவன் இல்லாமல் எந்த அழகும் இருக்க முடியாது. அதனால் தான், ‘சத்யம் சிவம் சுந்தரம்’, என்று சொல்லப்படுகிறது. எங்கெல்லாம் சிவ பெருமான் இருக்கிறாரோ அங்கெல்லாம் அழகும் சத்தியமும் இருக்கிறது. இதை சொல்வதின் மூலம், ஸ்ரீ கிருஷ்ண பகவான் அர்ஜுனரின் மனம் கவரப்படக்கூடிய எல்லாவற்றிலிருந்தும் விடுவித்து, தன்னை நோக்கி இழுக்கிறார். கிருஷ்ணா என்றால் கவர்ச்சி.. அப்படியென்றால் எல்லாவற்றையும் தன்னை நோக்கிக் கவரக் கூடிய ஒருவர் என்று பொருள். மனம் எங்கெல்லாம் அலையக்கூடுமோ அதிலிருந்தேல்லாம் விடுவித்து மையத்திற்கு கொண்டுவருவது அதுதான் அந்த மையம் தான் ஸ்ரீ கிருஷ்ண பகவான்...
எனவே, எங்கேனும் யாராவது ‘தேஜ்-புஞ்’ ஆல் (ஆன்மீக ஞானத்தால் விளைந்த பிரகாசம் – ஞானப் பிரகாசம்) பிரகாசமாக காணப்பட்டால், அவர் ஸ்ரீ கிருஷ்ண பகவான் மீது ஆழ்ந்த அன்பில், காதலில் இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள், அதனால் தான் அவரால் எல்லோரையும் தன்னை நோக்கிக் கவர முடிகிறது. மூன்று குணங்களால் உலகில் ஏற்பட்டிருக்கும் வித்தியாசமான வற்றிலிருந்து மனதைத் திருப்பி இழுத்து, நம்முள் இருக்கும் பரிசுத்தமான மெய்யுணர்வின் மீது குவிப்பது...
சர்வம் கிருஷ்ணா அர்ப்பணம்..🙏🏻
ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக