புதன், செப்டம்பர் 06, 2023

ஒரு முட்டாளிடமிருந்தும் கற்கத் தயாராகவும், ஒரு குழந்தையிடமிருந்து அல்லது மாதர் அல்லது ஆடவர் இவர்களிடமிருந்து கற்கத் தயாரக இரு...,

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவானின் உபதேச பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

எமது குழந்தைகளே....ஒரு முட்டாளிடமிருந்தும் கற்கத் தயாராகவும், ஒரு குழந்தையிடமிருந்து அல்லது மாதர் அல்லது ஆடவர் இவர்களிடமிருந்து கற்கத் தயாரக இருப்பவனும், இறைவனை அனைத்திலும் காணும் காரணத்தால் எதன் மூலமாக வேண்டுமானாலும் அறிவைப் பெற தயாராக உள்ள ஒருவனும் பார்ப்பதற்கு அரிதானவன். அனைத்திலும் இறைவனைக் காணும் ஒரு மஹாத்மாவைப் பார்ப்பது கடினம்... 

சாபமிடும் ஒருவனிடமும், புகழும் ஒருவனிடமும் வாஸுதேவனைக் (தெய்வத்தை) கண்டு, உள்உறையும் ஆத்மாவை (வெளித் தோற்றத்தினாலும், வெளிப்பாடுகளினாலும் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லப்படாமல்) அறிந்து கொள்ளும் திறன் படைத்தவனைக் காண்பது அரிது. இதன் பொருள் நீ குழந்தைகளின் கால்களில் விழுந்து, அவர்களை, ‘வாசு தேவா! வாசுதேவா..! என்று அழைப்பது என்றல்ல. நீ அவர்களை பயமுறுத்தி விடுவாய். நீ சாதாரணமாக நடந்து கொள்ள வேண்டும் ஆனால் உன்னுடைய உள் மனதில், அனைத்தும் ஒரே தெய்வீகத்திடமிருந்து வந்துள்ளது என்ற ஆழ்ந்த உணருந்திறனைக் கொண்டிருக்க வேண்டும்...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம். ..🙏🏻🙏🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக