வியாழன், அக்டோபர் 19, 2023

நீ குருவின் பாதம் பணிந்தால் இவ்வுலகம் உன் பாதம் பணியும்..!


ஓம்  ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🙏

நீங்கள்  குருவின் பாதம் பணிந்தால் இவ்வுலகம் உங்களின்  பாதம் பணியும்..!

குரு” இந்த இரு எழுத்தின் மகிமையை வார்த்தையால் கூறமுடியாது. அவ்வளவு சக்தி அந்த இரு எழுத்துச் சொல்லுக்குள் அடக்கம். நாம் கூறுகின்ற சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெரும் சக்திகளுமே குரு. இவ்வாறு மகாசக்தி பெற்ற குரு வாய்க்கப் பெற்றவன் இப் பிறவியிலே மனிதப் பிறப்பின் நோக்கமாகிய முக்திப் பேறாகிய பிறவாப் பேரின்ப நிலையை அடைந்துது விடுகிறான் என்பது திண்ணம்...

குருவின் மகிமையை முற்றும் உணர்ந்த மகாஞானியாகிய ஆதிசங்கரர் சுவாமிகள் கூறுகையில்...

“உன் குருவின் பாத கமலத்தில்

அசையாத பக்தி வைப்பாயானால்

காண்பாய் உன் உள்ளத்தினுள்ளே உலகத்தை

ஆளும் பரமதேவனின் ஒளிமயக் காட்சியை”

இவ்வாறன சக்தி படைத்தவர் குரு. பிறவிப் பெருங்கடலை நீந்தி பிறவாப் பேரின்ப நிலையை அடையச் செய்ய வேண்டுமானால் ஒரு சற்குரு கிடைக்கப் பெற வேண்டும். அந்த சற்குருவை எங்கேயும் தேடியலைந்து கண்டுபிடிக்க முடியாது. உண்மையான பக்தியும் ஆன்மீக தேடலும் உள்ள ஒருவனுக்கே சற்குரு கிடைக்கப் பெறுவார். அவரின் வழி பின்பற்றி நடப்பேன் என்கின்ற திட நம்பிக்கையுடனும் இதயசுத்தியுடனும் தேடுவானேயானால் அவனின் பக்தி பக்குவ நிலைக்கேற்ப இறைவனே குருவாக அவனுக்கு கிடைப்பார், அல்லது தகுந்த ஒரு குருவை அனுப்பி வைத்து, அவன் சகல பிறவியிலும் செய்த கர்மாக்களில் இருந்து விடுபடச் செய்து மனித உருவில் நடமாடும் கடவுளாக வாழச் செய்துவிடுவார். இவ்வாறான சிறப்பு பொருந்தியவர் குரு....

குரு கீதையிலே குருவின் மகிமையை நோக்கும் போது எவர் குருவோ அவரே சிவன் எவர் சிவனோ அவரே குரு இவற்றில் வேறுபாடு காண்பவன் மீள முடியாத பாவச் செயலுக்கு ஆளாகிறான்....ஒருவன் சிவனின் கோபத்திற்கு ஆளானால் பரவாயில்லை குருவில் கோபத்திற்கு ஆளாகக்கூடாது. ஏன்னெனில் சிவனின் கோபத்திற்கு ஆளானால் குரு காப்பாற்றுவார், ஆனால் குருவின் கோபத்திற்கு ஆளானவனை இந்த மூவுலகிலும் யாராலும் காப்பாற்ற முடியாது. இதுதான் உண்மை இத்தகைய மகிமையும் சக்தியும் பொருந்தியவர் தான் குரு....

ஓம் ஸ்ரீ சாயீராம்....🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக