ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏
🔥🔥நான் என்கிற நினைவு இல்லாத இடமே சொரூபமாகும்.....அதுவே மௌனம் எனப்படும். சொரூபமே ஜகம், சொரூபமே நான், சொரூபமே ஈசுவரன், எல்லாம் சிவஸ்வரூபமே..🔥🔥
என்னென்ன நினைவுகள் நம் மனம் எத்தனை எண்ணங்களை எழுப்பினால் என்ன, ஜாக்கிறதையாய் ஒவ்வொரு எண்ணமும் கிளம்பும் போதே இது யாருக்குண்டாயிற்று என்று விசாரித்தால் எனக்கு என்று தோன்றும்...நினைவே மனிதன் சொரூபம்... நான் என்னும் நினைவே மனத்தின் முதல் நினைவு. அதுவே அகங்காரம்..
மனம் அளவிறந்த நினைவுகளால் விரிகின்றபடியால் ஒவ்வொரு நினைவும் அதிபலவீனமாகப் போகின்றது. நினைவுகள் அடங்க, ஏகாக்கிரகத் தன்மையடைந்து அதனால் பலத்தை அடைந்த மனத்திற்கு ஆத்ம விசாரம் சுலபமாய் சித்திக்கும்....
தொன்று தொட்டு வருகின்ற சகல விஷய வாசனைகளும் ஒடுங்கிச் சொரூப மாத்திரமாய் இருக்கமுடியுமா, முடியாதா என்கிற சந்தேக நினைவுக்கு இடம் கொடுக்காமல் சொரூப தியானத்தை விடாப்பிடியாகப் பிடிக்க வேண்டும். தான் என்னும் எண்ணத்தையும் அறவே ஒழித்து சொரூப தியானத்தில் ஊக்கமுள்ளவனாயிருந்தால் அவன் நிச்சயம் கடைத்ததேறுவான்.....
நல்ல மனம், கெட்ட மனம் என்று இரண்டு மனங்கள் இல்லை. மனம் ஒன்றே. வாசனைகளே சுபமென்றும் அசுபமென்றும் இரண்டுவிதம், மனம் சுபவாசனை உள்ளதாய் நிற்கும்போது நல்ல மனம் என்றும், அசுபவாசனை உள்ளதாய் நிற்கும்போது கெட்ட மனமென்னும் சொல்லப்படும்...
உலக விஷயங்களிலும், பிறர் காரியங்களிலும் – மனதை விடக்கூடாது. பிறர் எவ்வளவு கெட்டவர்களாய் இருந்தாலும் அவர்களிடத்தில் துவேஷம் வைக்கலாகாது...எ
எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்து நடக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நன்மையுண்டு. மனத்தை அடக்கிக் கொண்டிருந்தால் எங்கேயிருந்தாலும் இருக்கலாம்...நான் என்கிற நினைவு இல்லாத இடமே சொரூபமாகும். அதுவே மௌனம் எனப்படும். சொரூபமே ஜகம், சொரூபமே நான், சொரூபமே ஈசுவரன், எல்லாம் சிவஸ்வரூபமே.
என்னென்ன நினைவுகள் உற்பத்தியாகின்றனவோ அவற்றை ஒன்றுகூட விடாமல் உற்பத்தி ஸ்தானத்திலேயே நசுக்கிப் போடுவதே வைராக்கியம். வைராக்கியத்துடன் தன்னுள் ஆழ்ந்து மூழ்கி முத்தை அடையலாம்.
🙏எவன் தன்னையே கடவுளாகிய – சொரூபத்தினடத்தில் தியாகம் செய்கிறானோ அவனே சிறந்த பக்திமான்....🙏
திருச்சிற்றம்பலம்...🙏தில்லையம்பலம்.🙏
ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக