சனி, அக்டோபர் 21, 2023

குருவே சரணம்...!



ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🙏🙏

குருவே சரணம்...!

நீங்கள் அனுபவிக்கின்ற துயரங்களுக்கு எப்போதும் நீ மற்றவர்களையோ, சூழ்நிலைகளையோ குறைக் கூறிக் கொண்டு இருக்கிறாயோ அதுவரை உன் ஆன்மீகப் பயிற்சி ஆரம்பமாகவில்லை என்று அர்த்தமாகும்....நீ அனுபவிக்கின்ற துயரங்களுக்கு எப்பொழுது உன்னையே நீ குறைக் கூறிக் கொள்கிறாயோ அப்போது உன் ஆன்மீகப் பயிற்சி நடைபெறுகிறது என்று அர்த்தமாகும்....நீங்கள்  அனுபவிக்கின்ற துயரங்களுக்கு எப்பொழுது நீ மற்றவர்களையோ, சூழ்நிலைகளையோ அல்லது உன்னையோ குறைக் கூறவில்லையோ அப்பொழுது உன் ஆன்மீகப் பயிற்சி நிறைவு பெறுகிறது என்று அர்த்தமாகும்...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏🙏

கிருஷ்ணா வருவாயா...!

 

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🙏

கிருஷ்ணா வருவாயா...!

ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறுகிறார், ‘அஹம் வைஷ்ணவரோ புத்வா ப்ரனினாம்  தேஹமஸ்ரிதா.’ ‘நான் தான் ஜடாராக்னி’ (நம் வயிற்றில் உணவை செரிக்கும் நெருப்பு) ‘அனைத்து ஜீவா ராசிகளிலும் உள்ள பசி நானே மற்றும் நன்கு விதமான உணவை செரிப்பவனும் நானே.’

ஆனால் நாம் என்ன செய்கிறோம்..? அந்த பசியை வரக் கூட விடுவதில்லை. அதிகமான உணவுகளைக் கொண்டு வயிற்றை நிரப்பிக் கொண்டே இருக்கிறோம். ஸ்ரீ கிருஷ்ணரை நாம் கொஞ்ச நேரம் கூட இருக்க விடுவதில்லை..! 

 எனவே, பசிக்கும்போதெல்லாம், ஸ்ரீ கிருஷ்ணர்  வந்துவிட்டார் என்று தெரிந்துக் கொள்ளுங்கள். உங்கள் வயிற்றிலிருக்கும் நெருப்பும் இறைவன், பசியும் இறைவன்...உணவும் இறைவன். அதனால் தான் ஸ்ரீ கிருஷ்ணர் சொன்னார், ‘உங்கள் வயிற்றிலிருக்கும் பசி நான், நீங்கள் உண்ணும் உணவும் நான்தான்.’ இது சுவாரசியமான ஒரு மெய்யறிவு....இதைப் போன்ற மெய்யறிவு காண்பதற்கு அரிது. 

உலகத்திலுள்ள எல்லா நூல்களை படித்தாலும் கூட இப்படி ஒரு மெய்யறிவு கிடைக்காது.பலர் இதை புரிந்துக் கொள்வதில்லை. இதை ஏதோ சொல்லி இருக்கிறார் என்றே நினைக்கின்றனர். புத்திசாலிகள் இந்த மெய்யறிவை புரிந்துக் கொள்கிறார்கள். இதிலுள்ள உண்மையையும் அதன் சாரத்தையும் புரிந்துக் கொள்கிறார்கள்..

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்.....🙏🙏

வெள்ளி, அக்டோபர் 20, 2023

ஆசைகளைத் துறந்த பின் வாழ்க்கையில் என்ன இன்பம் இருக்கிறது..?



ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🙏🙏

ஆசைகளைத் துறந்த பின் வாழ்க்கையில் என்ன இன்பம் இருக்கிறது..?

மீன் ஒன்றைத் தூக்கிச் சென்ற ஒரு பருந்தை, வேறு சில பருந்துகளும், பல காக்கைகளும் சூழ்ந்து கொண்டு பருந்தைக் கொத்தி, மீனைப் பிடுங்க முயன்றன. அப்பருந்து எப்பக்கம் சென்ற போதிலும்,விடாது அவை கத்திக்கொண்டு பின் தொடர்ந்தன.. தொந்தரவு பொறுக்காது மீனைப் போட்டுவிடும்படி அதனைச் செய்தன. உடனே மற்றொரு பருந்து அம்மீனைக் கவ்விக் கொள்ள, அவையெல்லாம் இப்பொழுது அதைப் பின்தொடர்ந்தன. முந்தைய பருந்து, தொந்தரவு ஒழிந்து, ஒரு மரத்தின் கிளையில் அமைதியாக உட்கார்ந்தது. ஒருவன் தனக்குள்ள உபாதிகளை விட்ட பிறகே அவனுக்கு இவ்வுலகில் மன அமைதி உண்டாகும். புரிகிறதா..?

ஓம் ஶ்ரீ சாயீராம்....🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏🙏

வேதங்களைப் படித்தவன்தான் ஞானியாக இயலுமா...?



ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ.... 🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🙏🙏

வேதங்களைப் படித்தவன் தான் ஞானியாக இயலுமா...?

இந்த வருஷத்தில் இவ்வளவு கனமழை பெய்யுமெனப் பஞ்சாங்கத்தில் கூறப்பட்டிருக்கிறது...ஆனால் அந்தப் பஞ்சாங்கத்தைப் பிழிந்து பார்..! ஒரு துளிநீர் கூட அதனின்றும் வராது...அதுபோல வேத, புராண நூல்களில் பல உபதேசங்களை காணலாம். அவற்றை வாசிப்பதனால் மாத்திரம் ஒருவன் ஆத்மஞானி ஆக மாட்டான். அதன்படி அனுஷ்டானங்களைக் கடைப்பிடிப்பவனே ஆத்ம ஞானி ஆகமுடியும்....

ஓம் ஶ்ரீ சாயீராம்....🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏🙏

புரிகிறதா...!??

 


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🙏

புரிகிறதா...!??

குருவின் குணம் என்னவென்று அறியாத நாம் குருவை கோபித்து கொள்கிறோம்..குரு எந்த செயலை செய்தாலும் அதில் நமக்கு நல்லது மட்டுமே இருக்கும் ...அதை அறியாது நாம் புலம்புகிறோம்...ஒரு காட்டில், சிங்கமும், மானும் நண்பர்களாக இருந்தன. என்ன அதிசயம்! இரண்டும் தங்கள் நட்பிற்காக ஒரு ஒப்பந்தம் போட்டிருந்தன. “நீ என் உணவு என்றாலும், ஒரு போதும் உன்னை சாப்பிட மாட்டேன்’ என்றது சிங்கம்..“உனக்கு என்ன ஆபத்து வந்தாலும் காப்பாற்றுவேன்’ என சத்தியம் செய்தது மான். அந்த மானை குருவாக கொண்டிருந்தது ஒரு சின்னஞ்சிறு குட்டி மான்...

சிங்கத்தை நான்கு நாட்களாக காணவில்லை. மான் பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை. சிஷ்யனான மான் ஓடி வந்து, உங்கள் நண்பர் ஒரு வலையில் மாட்டிக் கொண்டிருக்கிறார். என்னால் அந்த வலையை அறுக்க  முடியவில்லை, உடனே வாருங்கள்” என அழைத்தது...ஒப்பந்தப்படி, தன் சிங்க நண்பனைக் காப்பாற்றச் சென்றது மான். சிங்கம் பலவீனமான குரலில், ஒரு வேடன் விரித்த வலையில் நான்கு நாட்களாக மாட்டிக் கொண்டு தவிக்கிறேன். இன்னும் சிறிது நேரத்தில் அவன் வந்து விடுவான், அதற்குள் என்னை காப்பாற்று…என்றது.

மான், தன் வாயால், வலையை, மெதுவாகக் கடித்து அறுக்க ஆரம்பித்தது. குட்டி மான் சொன்னது…இந்த வலையை நீங்கள் வேகமாக ஒரு இழு இழுத்தால் போதும்… ஆனால் மெதுவாகக் கடிக்கிறீர்களே…வேகமாக இழுங்கள்…பெரிய மான், சிரிப்பை பதிலாகத் தந்து விட்டு மீண்டும் மிக மெதுவாக வலையைக் கடித்தது… சிங்கம், சீக்கிரமாகக் காப்பாற்று…” எனக் கெஞ்சியது....

 என்ன  நண்பன் நீங்கள்..? உங்கள் நண்பன் நான்கு நாட்களாக தண்ணீர் கூட இல்லாமல் தவிக்கிறான். வேகமாக வலையை அறுத்துக் காப்பாற்றாமல், இப்படி மெதுவாக வலையைக் கடிக்கிறீர்களே… இது நண்பனுக்கு செய்யும் துரோகம் இல்லையா… நான் உங்களைப் போல பெரிய ஆளாக இருந்திருந்தால், ஒரே கடியில் வலையை அறுத்து,சிங்கத்தைக் காப்பாற்றியிருப்பேன்…என்றது குட்டி மான்.

பெரிய மான் இப்போதும் புன்னகைத்து விட்டு, வலையை மெதுவாகவே அறுத்துக் கொண்டிருந்தது. சற்று தூரத்தில் வேடன் வருவதை பார்த்ததும், வலையை வேகமாக ஒரு இழு இழுத்தது மான். வலை அறுந்து, சிங்கம் ஒரு புறமும், மான்கள் இன்னொரு பக்கமுமாக தப்பித்து ஓடின...

குட்டி மான், குருவைப் பார்த்து கோபமாக...வேடனைப் பார்த்தவுடன் வேகமாக வலையை அறுத்ததை முன்பே செய்திருக்கலாமே, எத்தனை முறை சொன்னேன், ஏன் வலையை மெதுவாக அறுத்தீர்கள்..?” என கோபப்பட்டது...மான் இப்போதும் சிரித்த படி சொன்னது...குழந்தாய்…வேகமாக ஒரே தடவை இழுத்து என்னால் வலையை அறுத்திருக்க முடியும். உள்ளே இருக்கும் சிங்கம், நான்கு நாட்களாகப் பட்டினி. “என்னை சாப்பிட மாட்டேன்’ என்று மட்டுமே ஒப்பந்தம் போட்டிருக்கிறதே தவிர, உன்னோடு அல்ல. வெளியே வந்த வேகத்தில் உன்னைச் சாப்பிட்டிருக்கும். அதனால் தான் வேடன் வரும் வரை வலையை மெதுவாக அறுத்தேன்” எனக் கூறி விட்டுப் புன்னகைத்தது....

நாம் எல்லோருமே அந்த குட்டி மான் போலத்தான்…அவசரமாக முடிவெடுக்கிறோம். நிதானிப்பதில்லை.... தான் நினைப்பதே சரி என்ற பிடிவாதம் இதெல்லாம் நமக்கே ஆபத்தாக வரும். அப்போது குருவானவரே நம்மை காப்பாற்ற வல்லவர்...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏

வியாழன், அக்டோபர் 19, 2023

சும்மா இருப்பது எப்படி...?"


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்.....🙏🙏 

மனதை வெற்றிடமாக வைத்துக் கொண்டு சும்மா இருப்பது எப்படி...?"

ஒரு மடத்தில் "சும்மா இருப்பது எப்படி..?"என செய்முறை விளக்கம்…. 

தருமாறு தன் சிஷ்யர்களுக்கு அந்த மடத்து குரு ஒரு பரீட்சை வைத்தார்.யார் சிறந்த விளக்கம் அளிக்கிறார்களோ அவன் ஞானத்தை உணர்ந்தவன் என பாராட்டி தலைமை பொறுப்பு அளிப்பதாக அறிவித்தார்....எல்லா மாணவர்களும் சுறுசுறுப்பாய்,சும்மா இருப்பதற்குண்டான வழிகளை பற்றி யோசிக்க ஆரம்பித்தனர்.சிலர் பேசாமலும்,சிலர் அசையாமலும்,சிலர் உணவு உண்ணாமலும் இருந்தனர்....சிலர் கண்களை மூடி தியானிப்பது போன்று சும்மா இருந்தார்கள்..இன்னும் சிலர் மலைகள்,காடுகள் என்று போய் சும்மா இருப்பதை செய்து காண்பித்தார்கள்...ஆனால் ஒரே ஒரு மாணவன் மட்டும் சும்மா இருக்க எந்த முயற்சியும் எடுக்காமல்,தன்னுடைய வேலைகளை எப்போதும்போல செய்துக் கொண்டிருந்தான்.போட்டியின் முடிவு நாள் வந்தது...குரு முடிவை சொன்னபோது அனைவருக்கும் அதிர்ச்சி.…எந்த முயற்சியும் எடுக்காத அந்த மாணவனுக்குத்தான் குரு பாராட்டி பொறுப்பை அளிப்பதாக அறிவித்தார்.இதை ஏற்காமல், எல்லா மாணவர்களும் குருவிடம் சென்று விளக்கம் கேட்டார்கள்...இதற்கு குரு,"நீங்கள் எல்லோரும் சும்மா இருப்பதைப் பற்றி சிந்தித்துக் சிந்தித்து,எப்படியெல்லாமோ சும்மா இருக்க முயற்சி செய்தீர்கள்... நீங்கள் எடுத்த முயற்சியாலேயே நீங்கள் சும்மா இருக்க தவறிவிட்டீர்கள்...ஆனால் எந்த முயற்சியும் எடுக்காமல்,அந்தந்த நேரத்தில் தன் முன்வரும் வேலைகளை செய்தபடி உண்மையாகவே சும்மா இருந்து காட்டியது இவன் மட்டுமே"என்று கூறினார் குரு....ஆக சும்மா இருப்பது என்பது மனதில் சும்மா இருப்பது...மனம்,நடந்து முடிந்து போன விஷயத்திற்கும்,இனி வரப்போகிற விஷயத்திற்கும் குழப்பமடையாமல் இருப்பதே சும்மா இருப்பது. ..

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய  விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏

நீ குருவின் பாதம் பணிந்தால் இவ்வுலகம் உன் பாதம் பணியும்..!


ஓம்  ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🙏

நீங்கள்  குருவின் பாதம் பணிந்தால் இவ்வுலகம் உங்களின்  பாதம் பணியும்..!

குரு” இந்த இரு எழுத்தின் மகிமையை வார்த்தையால் கூறமுடியாது. அவ்வளவு சக்தி அந்த இரு எழுத்துச் சொல்லுக்குள் அடக்கம். நாம் கூறுகின்ற சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெரும் சக்திகளுமே குரு. இவ்வாறு மகாசக்தி பெற்ற குரு வாய்க்கப் பெற்றவன் இப் பிறவியிலே மனிதப் பிறப்பின் நோக்கமாகிய முக்திப் பேறாகிய பிறவாப் பேரின்ப நிலையை அடைந்துது விடுகிறான் என்பது திண்ணம்...

குருவின் மகிமையை முற்றும் உணர்ந்த மகாஞானியாகிய ஆதிசங்கரர் சுவாமிகள் கூறுகையில்...

“உன் குருவின் பாத கமலத்தில்

அசையாத பக்தி வைப்பாயானால்

காண்பாய் உன் உள்ளத்தினுள்ளே உலகத்தை

ஆளும் பரமதேவனின் ஒளிமயக் காட்சியை”

இவ்வாறன சக்தி படைத்தவர் குரு. பிறவிப் பெருங்கடலை நீந்தி பிறவாப் பேரின்ப நிலையை அடையச் செய்ய வேண்டுமானால் ஒரு சற்குரு கிடைக்கப் பெற வேண்டும். அந்த சற்குருவை எங்கேயும் தேடியலைந்து கண்டுபிடிக்க முடியாது. உண்மையான பக்தியும் ஆன்மீக தேடலும் உள்ள ஒருவனுக்கே சற்குரு கிடைக்கப் பெறுவார். அவரின் வழி பின்பற்றி நடப்பேன் என்கின்ற திட நம்பிக்கையுடனும் இதயசுத்தியுடனும் தேடுவானேயானால் அவனின் பக்தி பக்குவ நிலைக்கேற்ப இறைவனே குருவாக அவனுக்கு கிடைப்பார், அல்லது தகுந்த ஒரு குருவை அனுப்பி வைத்து, அவன் சகல பிறவியிலும் செய்த கர்மாக்களில் இருந்து விடுபடச் செய்து மனித உருவில் நடமாடும் கடவுளாக வாழச் செய்துவிடுவார். இவ்வாறான சிறப்பு பொருந்தியவர் குரு....

குரு கீதையிலே குருவின் மகிமையை நோக்கும் போது எவர் குருவோ அவரே சிவன் எவர் சிவனோ அவரே குரு இவற்றில் வேறுபாடு காண்பவன் மீள முடியாத பாவச் செயலுக்கு ஆளாகிறான்....ஒருவன் சிவனின் கோபத்திற்கு ஆளானால் பரவாயில்லை குருவில் கோபத்திற்கு ஆளாகக்கூடாது. ஏன்னெனில் சிவனின் கோபத்திற்கு ஆளானால் குரு காப்பாற்றுவார், ஆனால் குருவின் கோபத்திற்கு ஆளானவனை இந்த மூவுலகிலும் யாராலும் காப்பாற்ற முடியாது. இதுதான் உண்மை இத்தகைய மகிமையும் சக்தியும் பொருந்தியவர் தான் குரு....

ஓம் ஸ்ரீ சாயீராம்....🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏🙏