திங்கள், ஜனவரி 29, 2024

மகல்சாபதி பாபாவின் அத்யந்த பக்தர்.

 ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்..🙏🏻🙏🏻

பக்தர்களுக்கு பாபாவின் உபதேசங்கள்...

மகல்சாபதி பாபாவின் அத்யந்த பக்தர். இவருக்கு மூன்று பெண் குழந்தைகள். ஆண் வாரிசு இல்லாமல் பாபாவின் பரம பக்தராகிவிட்டார். பாபாவின் நிழலாக எப்போதும் திரிந்து கொண்டிருந்த மகல்சாபதியை பார்த்து பாபா, “மகல்சாபதி இந்து மதத்தில் புத்தரன் இல்லாதவன் ‘புத்’ என்ற நரகத்தில் தள்ளப்படுவான். என்னுடைய பக்தனாகிய உன்னை அப்படி ஆளாக்குவதற்கு எனக்கு மனம் சம்மதமில்லை. ஆகையால் நீ மீண்டும் சம்சார பந்தத்தில் ஈடுபட்டு புத்திரபாக்கியம் அடைவாயாக” என்றார் பாபா.“சுவாமி நான் ஒரு சந்நியாசி. நான் எப்படி மீண்டும் இல்லறவாசியாக முடியும்”..

“சந்நியாசிகளுக்கு சம்சார பந்தம் கூடாதென்று நான் ஒருபோதும் கூறவில்லையே. ஆண்டவனுக்கு எல்லாம் ஒன்றுதான். நீ போய்வா…” என்று அனுப்பி வைத்தார்...சாயிபாபா சகல சக்திகளின் உறைவிடமாகத் திகழ்ந்தாலும் மனித வாழ்க்கையின் நுட்பமான நடைமுறைகளையும், ஆழத்தையும் கடந்து அருளுரை வழங்குவதில் மகானாகத் திகழ்ந்தார்.ஆன்மீகத்தின் உள்ளர்த்தங்களை தமது பக்தர்களுக்கு தெளிவுபடுத்த பாபா விரும்பினார். பக்தர் நானா சாந்தோர்கர் ஒருமுறை, “பாபா இந்த சம்சார பந்தம் எனக்கு எதற்கு? சம்சாரம் என்பது தேவையற்றதாக சாரமற்றதாக இருக்கிறது.” ஆகையால் என்னிடமிருந்து அதனை அறுத்தெறிய  வேண்டும். சம்சாரம் முதலில் சந்தோஷமளித்தாலும் கடைசியில் துக்கத்தையே தருகிறது. ஆதலின் என்றும் மகிழ்ச்சி அளிக்கும் மார்க்கத்தை அளியுங்கள்.”

‘நானா’ தவறாகப் புரிந்துக்  கொண்டாய். பைத்தியம்போல் பேசுகிறாய். இவ்வுடல் உள்ளவரை சம்சாரம் இருக்கும். அதிலிருந்து இவ்வுலகில் யாரும் தப்ப முடியாது. உன்னால் மட்டும் எப்படி அது சாத்தியம்..? சம்சாரம் என்பது காமம். குரோதம் இவைகளின் வெளிப்பாடு தான். காட்டுக்குள் ஓடி ஒளிந்து கொள்வதால் சம்சாரத்திலிருந்து தப்பிவிட முடியாது. நீ முற்பிறவிகளில் செய்த கர்ம வினைகளின் பலனையே இப்போது அனுபவிக்கிறாய்.”

நானா அப்போது பாபாவிடம் கேட்டார். “மாறி மாறி இன்பமும், துன்பமும் ஆட்கொள்ளாமல் எப்படி இருப்பது...? என்றார்.

“நானா இன்பமாக தோன்றுவதெல்லாமல் உண்மையில் இன்பமில்லை. இன்பம, துன்பம் என்பது எல்லாம் ஒரு மாயை. சுகமும், துக்கமும் அவரவர் மனோபாவத்தைப் பொறுத்ததுதான். காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் ஆகியவை மாயையின் தோற்றம். இந்த ஆறு விரோதிகளை மனதில் எழாது அடக்கினால் நாம் விவேகத்தைப் பெற்று விடுவோம். அதன் பின் இன்ப, துன்பங்கள் நம்மை பாதிக்காது...

ஓம் நமசிவாய..🙏🏻🙏🏻

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக