திங்கள், ஜனவரி 29, 2024

உன்னை அறிய உனக்கு உன்னை அறியோன்....!

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

உன்னை அறிய உனக்கு உன்னை அறியோன்....!

திரைகளைக் கடந்து சூரியன் வெளியே வரும்போது அது மட்டும் பிரகாசிக்காது, சுற்றியுள்ள அனைத்தையும் பிரகாசிக்கச் செய்வதுபோல, சாதகன் தன் உண்மை நிலையை அறிய வரும்போது அவனது அறிவும் அனைத்துலகையும் உள்ளது உள்ளபடி அறிய முடிகிறது. அது மட்டுமல்லாது அவனைச் சுற்றியுள்ள அனைவரையும் ஆன்மா பற்றி அறிய வைக்கவும் முடிகிறது...ஒரு முறை ரமணர் இருக்கும் பக்கம் அவருக்கு வெகு அருகில் ஒரு பாம்பு வந்ததாம். அவர் பாம்பைப் பார்த்துக்கொண்டு நிற்க, பாம்பும் அவரைப் பார்த்து படமெடுத்துக் கொண்டு நின்றதாம். வெகு நேரம் சென்ற பின் பாம்பு தன் வழியே போக, அவரும் அங்கிருந்து சென்றுவிட்டார். அந்த அரிய காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த அன்பர் ஒருவர் ரமணருக்கு அந்த சமயத்தில் என்ன மாதிரி உணர்வு இருந்தது என்று அவரிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அவர் சொன்னது...“நான் பாம்பை இன்னொரு மனிதனாகப் பார்த்துக் கொண்டு நின்றேன், பாம்பும் என்னை இன்னொரு பாம்பாகப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தது”. ஆக மற்றதைச் சரியாகப் பார்க்கும் அறிவை நாம் வளர்த்துக் கொள்ளவேண்டும்.?

அதனால் ரமணர் சொல்வதுபோல், “அறிவும் அறியாமையும் யார்க்கு என்று அம்முதலாம் தன்னை அறியும் அறிவே அறிவு”. மற்றதெல்லாம் அறிவின்மை கலந்த அறிவே...

ஓம் நமசிவாய...🙏🏻

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக