புதன், ஜனவரி 31, 2024

இறைவன் இருக்கின்றான்....! நம்பித்தான் ஆகவேண்டும்....!


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻🙏🏻

இறைவன் இருக்கின்றான்....! உணர்ந்து தெளிந்து நம்பித்தான் ஆகவேண்டும்....!🙏🏻🙏🏻

ஒருவன் மாலை நேரத்தில் ஆற்றங்கரையில் ஒய்விற்காக நடந்து சென்று இயற்கையை ரசித்தான். ஆற்றில் நீரில்லை. வரண்டிருந்த்து. அடுத்த நாளும் இயற்கையை ரசிக்கச் சென்றவன் ஆச்சரியப்பட்டான். ஆற்றில் நீர் நொப்பும் நுரையுமாக ஓடிக்கொண்டிருந்தது. மேற்கே மழை. அதனால் ஆற்றில் வெள்ளம் என அவனைக் கடந்தசென்ற ஒருவர் சொல்லிச் சென்றார், இவன் கண்டது வெள்ளம். காணாதது மழை. நம்பித்தான் ஆக வேண்டும். கண்ட வெள்ளத்தைக் கொண்டு காணாத மழையை நம்ப வேண்டும்.. உலகில் காணும் இயற்கையின் செயல்களிலிருந்து நாம் இதுகாறும் காணத இறையை அளவிடத்தான் வேண்டும்.....

காலத்தில் இலைகள் உதிர்ந்து மீண்டும் தளிர்கின்றன....பூ பூத்துக் காய்கின்றன. பனி கொட்டுகின்றது...குளிர் வந்து போகின்றது. வெய்யில் வெம்மை காட்டுகின்றது. மழை பெய்கின்றது. தென்றல் வீசுகின்றது.... இயற்கையின் இந்த விளையாட்டுகளுக்குச் சொந்தக்காரன் யார்..யார் இந்த விளையாட்டை புவியில் நிகழ்த்துபவன். காணும் ஒன்றிலிருந்து ஓர் அளவைக் கொண்டு காண ஒன்றை நிர்ணயித்து உணர்ந்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்....

பௌர்ணமி நாளில் ஒருவன் கோவிலுக்குப் போகின்றான....ஒருவன் ஒருவனைக் கொல்ல சதித் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கின்றான்... ஒருவன் தன் வாழ்வில் முன்னேற வழி என்ன என்று யோசனையிலிருக்கின்றான். இது போன்ற பல்லாயிரக்கணக்காண நிகழ்வுகள் செயல்கள் அந்த பௌர்ணமி நாளில் நடந்து கொண்டிருப்பதால் அந்த செயல்களின் நன்மை தீமைகளுக்கு அந்த நாள் எப்படி பொறுப்பாகும். ஒவ்வொரு நிகழ் செயலும் அந்தந்த உயிர்களின் ஆன்மாக்களையே சாரும் என்பதை உணர்வாய்....!

ஓம் நமசிவாய...🙏🏻🙏🏻

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக