ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻
ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻
நம்பினால் நம்புங்கள்.....!🙏🏻
உயிர் என்பது என்ன..! அது எங்கே இருக்கின்றது. அதைக் கண்டு பிடித்தவர் யார்...! அதற்கு எடையோ, பரிமாணமோ இருக்கின்றதா இல்லையே. ஆனால் அது ஐம்பூதங்களையும் வெல்லும் இயக்கும் சக்தி கொண்டுள்ளது. சிலை வடிக்கும் சிற்பியைப் போல் அனைத்து உயிரினங்களுக்கும் உடலை வெவ்வேறு வகையாகத் தருகின்றது. மரத்திற்கு மரம் இலையை விதவிதமாக வடிவமைக்கின்றது. மலர்களை வித வித வண்ணங்களாக தோன்றுவித்து பூமியை அழகு படுத்துகின்றது. பறவைகளுக்கு பலவித ஸ்வரங்களுடன் கூடிய குரலை அளித்து இன்னிசையை ஏற்படுத்துகின்றது. ஒவ்வொரு இனமும் அதன் பிரத்தியோக சைகை சமிக்ஞை ஒலிகளைப் பெற்றுள்ளது. உயிர்களுக்காக உற்பத்தியாகும் பொருள்களுக்கு சுவையை சேர்த்து விடுகின்றது. உயிர்கள் இயங்க ஆக்ஸிஜனை தாவரங்களிலிருந்து வெளிப்படுத்துகின்றது. இப்படி ஒவ்வொரு உயிரினங்களுக்கும் தனித் தன்மையுடன் விளங்கக் காரணம் கண்ணுக்குப் புலனாகாத நுண்ணிய செல்-அணு தன்னுள்ளே கொண்டுள்ள ஜெர்ம் என்பதே ஆகும். சகல ஜீவன்களுக்கும் உயிர் கொடுக்கும் இந்த செல் அணு எப்படி தோன்றியது. இயற்கை உயிரைப் படைக்க வில்லை. மலைகளும் மரம் செடி கொடிகளும் நீரும் கடலும் உயிரை தோற்றுவிக்க ஏதுவானதாயில்லாமல் இருக்க சிறந்த உயிரை புவியில் தோற்றுவித்த அந்த படைப்பாளி யார்...!
பிராணிகளுக்கும் விலங்குகளுக்கும் ஒரு வித ஞானத்தை இயற்கைத் தூண்டுதலை புகட்டினவன் யார்...சால்மன் என்ற ஒருவகை மீன் பலவருடங்கள் கடலில் வாழ்ந்துவிட்டு ஆற்றுக்கு திரும்பி வருகின்றது. கிளை நதி பிரியும் ஓர் இடந்தில் பிறந்த அது பல வருடங்களுக்குப்பின் அந்த இடத்திற்கு வந்து சேரும் ஞானம் அதற்கு கொடுத்தவன் யார்.ஈல் என்ற நீர் பிராணிகள் வளர்ந்து முதிர்ச்சியடைந்ததும் கடலுக்குச் சென்று முட்டையிட்டு தன் இனம் வளர குஞ்சு பொறித்து இனவிருத்தி செய்து இறந்துவிடும். நீரைத் தவிர வேறொன்றும் அறியாத குஞ்சுகள் புறப்பட்டு பயணம் செய்து தன் பெற்றோர் வசித்த நீர் நிலைகளுக்கு வந்து சேரும் ஞானத்தை அளித்தவன் யார்..! அவைகளுக்கு வழிகாட்டி யார்...!
ஒரு வகை குளவிகள் முட்டையிட்டு அந்த இடத்தில் ஓர் வெட்டுக்கிளியை மூர்ச்சையடையும் அளவிற்கு கொட்டி வைத்துவிடும். வெட்டுக்கிளி சாகாது. ஆனால் மயக்க நிலையிலேயே இருக்கும். குளவியின் குஞ்சுகள் செத்த உயிரின் மாமிசம் ஒத்துக்கொள்ளாது என்பதால் உயிரோடு அவைகளுக்கு உண்ண மயக்க நிலையில் உள்ள வெட்டுக்கிளி. இந்த ஏற்பாடுகளை செய்த குளவி மீண்டும் தன் குஞ்சுகளைப் பார்க்க வருவதேயில்லை. எங்கோ சென்று அது இறந்து விடுகின்றது. இந்த ஞான அறிவை குளவிக்கு கொடுத்தவன் யார்...!
கூட்டமாக பறக்கும் பறவைகள் அம்பின் முனைபோன்ற அமைப்பில் பறப்பது தான் மற்றொன்றுடன் மோதிவிடக்கூடாது என்பதற்காக! குருவிகள் கூடு கட்டியிருப்பதை நேர்த்தியான அந்தபின்னலை அவைகளுக்குச் சொல்லிக் கொடுத்தவர் யார்...!பிராணிகளுக்கு இருக்கும் இயற்கைத் தூண்டுதலைவிட மேலான திறம் கொண்ட சக்தி ஒன்று மனிதனுக்கு இருக்கிறது என்றால் அது காரண காரியங்களை ஆய்வு செய்யும் பகுத்தறிவாகும். வேறு எந்த பிராணிக்கும் இல்லாத இது எதனால்! இது எப்படி! என சிந்திக்கும் ஆற்றல் அளித்த அந்த பரம ஞான சக்தி யார்...!
ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻
ஓம் நமசிவாய...🙏🏻🙏🏻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக