வெள்ளி, செப்டம்பர் 01, 2023

உண்மையான ஆன்மீக சாதனை என்பது..!?

 


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவானின் உபதேச பொன்மொழிகள்....🙏🙏

🔥உண்மையான ஆன்மீக சாதனை என்பது அனைத்து வேலைகளையும் இறைவனின் பணியாக எண்ணிச் செய்வதுதான். வெறும் ஜபம், தியானம் இவையெல்லாம் அல்ல. கடவுள் எங்கும் நிறைந்தவர். இதைத்தான் வேதம் இவ்வாறு உரைக்கிறது.🔥.


          ஸர்வதஃப் பாணிபாதம் தத்

          ஸர்வ தோட்சி ஸிரோ முகம்,

          ஸர்வத ஸ்ருதி மல்லோகே ஸர்வமாவ்

          ரித்ய திஷ்டதி..!

(அவரது கண்கள், கரங்கள், பாதங்கள், சிரங்கள், வாய், காதுகள் எல்லா இடத்திலும் வியாபித்திருக்க, கடவுள் இப்பிரபஞ்சம் முழுவதையும் ஊடுருவி நிற்கிறார்). நீங்கள் யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம். ஆனால் கடவுளை மட்டும் ஏமாற்ற முடியாது. அவர் எப்போதும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார். அவர் நிரந்தர சாட்சி. அவர் உன்னிடம் இருக்கிறார். எப்படி… உன் கண்ணில் பார்வை எங்ஙனம் நிறைந்திருக்கிறதோ அப்படி. ஒரு புல்லின் நுனியும் கூட அவரது சங்கல்பமின்றி அசையாது. ‘நான் செய்தேன்’ என்ற எண்ணத்தில் மயங்கிவிடுவது முட்டாள் தனம். ஆகவே உனது சாதனைகளைப் பற்றிய வீண் பெருமை வேண்டாம். இறைவனே செய்கிறான், அதன் பலனையும் அனுபவிக்கின்றான் என்ற புனித உணர்வுகளை வளர்த்துக் கொள்ளுங்கள். எல்லாமே இறைவனின் சங்கல்பம் என்ற எண்ணம் வேண்டும். உனக்கு எது நடந்தாலும், அது லாபமோ, நஷ்டமோ, துன்பமோ, மகிழ்ச்சியோ, அது கடைமுடிவாக உனக்கு நன்மையையே தரும் என்ற உறுதியான நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக