ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🙏
ஶ்ரீசீரடி சாயீபாபாவின் உபதேச பொன்மொழிகள்....🙏🙏
அல்லும் பகலும் உன்னை பற்றியே எனது சிந்தனை. எனக்கு உறக்கம் இல்லை. திரும்பத் திரும்ப உன்னுடைய பெயரை உச்சரித்த வண்ணம் உள்ளேன். ஒவ்வொரு அடியிலும் நான் உன்னை கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது....உனக்கு என்ன நேரும் என்பதை நான் மட்டுமே அறிவேன். கவனி, உன் பொருட்டு, உன் வேதனைகளை அகற்றி நான் அனுபவிக்க வேண்டியிருக்கிறது. உன்னை நான் ஒருபோதும் மறவேன்....
இரண்டாயிரம் மைல்களுக்கு அப்பால் நீ இருப்பினும் உன்னை நினைவில் வைத்திருப்பேன். நான் உன்னுடைய பக்தியை விரும்புகிறேன்.
சீடர் என்பவர், குருவின் பொற் பாதங்களில் தமது தலையை வைப்பது என்பது புறத்தோற்றமே. அந்தரங்கமாக இவர்கள் ஒன்றே. இருவரிடையே வேறுபாடு காண்பவர், இன்னும் பக்குவம் அற்றவராகவும், முதிர்ச்சியற்றவருமேயாவர். குருவும், சீடரும் ஒருவருக்கொருவர் அன்பு கூர்ந்து சேவை செய்ய வேண்டும். அவர்களிடையே எவ்வித பாகுபாடும், வித்தியாசமும் இல்லை என்பது பாபாவின் கருத்தாக இருந்தது...
ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக