ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏
ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🙏
இறைவனைப் பற்றி நினைப்பது எது..?நமது மனம். இது எப்படிப்பட்டது..?மனம் என்பது மாட்டைப் போன்றது என்று கூறுகின்றன நீதி நூல்கள்....
"மனமென்னும் மாடடங்கில்" எனத் தொடங்குகிறது இடைக்காட்டுச் சித்தரின் ஒரு பாடல்....
ஆடு காட்டி வேங்கையை...
அகப் படுத்துமாறு போல
மாடுகாட்டி என்னை நீ
மதிமயக்கல் ஆகுமோ..?
மாட்டின் இயல்பென்ன..? தனக்குத் தெரிந்த எல்லையை மட்டுமே சுற்றி வர விரும்புவது. அதைவிடுத்து புதிய இடத்திற்கு போக விரும்பாதது...விவசாயிகள் மாட்டு வண்டிகளில் விளை பொருட்களை ஏற்றிவிட்டு வண்டியை பூட்டி வண்டியிலே படுத்து தூங்கி விடுவார்கள். மாடு வழக்கமான பாதையில் பயணித்து செல்ல வேண்டிய இடத்தை தானாக அடையும்..தனக்கு தெரிந்த எல்லையிலேயே சுற்றி வரும் மாட்டைப் போல மனமும் தனக்குத் தெரிந்த எல்லையையே சுற்றி வருகிறது. நமக்கு தெரிந்த எல்லை நாம் இந்த பிரபஞ்சத்தை எந்த அளவு உணந்துள்ளோமோ அவ்வளவே..
மனிதன் இந்த அண்டத்தை ஐந்து வகையில் உணர்கிறான். பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், ஸ்பரிசம் போன்ற ஐந்து வகையில் இந்த அண்டத்தை உணர்வதால் தான் இந்த அண்டத்திற்கு பிரபஞ்சம் என்று பெயர் வைத்தான்....நமக்கே மற்றொரு புலன் இருந்திருந்தால் இந்த அண்டத்தை பற்றிய அறிவு வேறு மாதிரி இருந்திருக்கலாம். பிற விலங்குகள், புழு, பூச்சிகள் இந்த உலகத்தை எவ்வாறு உணர்கிறது என்பது நமக்கு தெரியாது. மரம், செடி, கொடி போன்றவற்றிற்கு இந்த உலகத்தை பற்றிய புரிதல் எவ்வாறு இருக்கும் என்று நமக்குத் தெரியாது....
நாம் வசிக்கும் பூமி, சூரியன், மற்ற கோள்களை அடக்கியது ஒரு சூரியக் குடும்பம். இப்படிப்பட்ட பல்லாயிரக்கணக்கான சூரிய குடும்பத்தைக் கொண்டது ஒரு galaxy எனும் அண்டம். இப்படி கோடிக்கணக்கான அண்டங்களைக் கொண்டது ஒரு பேரண்டம். பிறகு..? பிறகு..? அது நமது எண்ணங்களுக்கு எட்டாதது, நாம் கற்பனை செய்தே பார்க்க இயலாதது...தெரிந்த எல்லையிலேயே சுற்றி வரும் மாட்டைப் போல நாம் உணர்ந்த எல்லையிலேயே எண்ணக்கூடிய மனதால் பிரபஞ்சத்தைப் பற்றி முழுவதும் சிந்திக்கவே இயலாத போது பிரபஞ்சத்தை படைத்த இறைவனை நாம் அறிந்துக் கொண்டோம் என்று சொல்வது கடலிலே உள்ள ஒரு துளி நீரைப் பருகிவிட்டு கடல் முழுவதும் குடித்ததாக சொல்வதற்குச் சமம் அல்லவா..?இதனால் தான் "எண்ணிறந் தெல்லை யிலாதானே...!" எண்ணங்களால் சிந்திப்பதற்கும் அப்பாற்பட்டவனே என்று இறைவனை துதிக்கிறார்கள்....
ஓம் ஶ்ரீ சாயீராம்....🙏🙏
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக