சனி, ஜூன் 19, 2021

ஶ்ரீ சீரடிபாபாவின் சாய்சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாயத்தின் வெளியீடு... அத்தியாயம் நாற்பது (40)

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான ஶ்ரீசாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள  இன்றைய அத்தியாய வெளியீடு....🙏🏼

🙏ஶ்ரீசாய் சத்சரித்திரம்🙏

🙏 அத்தியாயம் ::நாற்பது (40)🙏

 🔥முதலில் புனித வேத நூலான ஶ்ரீசாய்  சத்சரித்திரம்  பாராயணம் செய்வதன்  முக்கியத்துவமும், பெறப்போகும்  நன்மைகள்  என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் புனித வேத நூல் என்பது சாய் சத்சரித்திரம் என்பதாகும்...இதில் ஶ்ரீசீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத  எழுத்திலும் வியாப்பித்து  படர்ந்து இருக்கின்றது...

ஶ்ரீசாய்  சத்சரிதத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல், மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய் சத்சரித்திரம்  செயல்படுகின்றது..ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து சாய் சத்சரித்திரத்தில்  இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்.... 

இவ்வாறாக நாம் அனைவரும் சாய்  சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும்  அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்..ஆகவே சாய் சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்... நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக..🙏

🔥குறிப்பு..சாய் சத்சரித்திர வேதப்  பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥

தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்.. மேலும் அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரியத் தன்மையை அடையலாம்...இவ்வேத பாராயணத்தின் மூலமாக  ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரியத் தன்மையை  அடையும் நிலையைப்  பெறலாம்...

மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம்,நேர்மை, மனிதநேயம் போன்ற  இறைப்  பண்புகளைப்  பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுப் பெறவும்  இந்த சாய் சத்சரித்திர  வேதப் பாராயணம் துணைப்புரிகின்றது...

மேலும் இப்பாராயணத்தின் மூலம்  மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில்  வெற்றி வாகை சூடலாம்... அவரவர்கள்  விரும்பி வேண்டியது கிடைக்கப் பெறும்...சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்...மேலும் அனைத்து விதமான  கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி  பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும்  ஒருசேரப்பெறலாம்..🙏

🙏அத்தியாயம் ::..நாற்பது (40)🙏

🙏முன்னுரை..🙏

பாலாசாஹேப் தேவ் என்ற பரம பக்தருடைய தாயார் அனைவரின் நல்வாழ்வுக்காகவும் விரதங்களை அனுஷ்டித்து முடிவில் நிறைவு செய்வதற்கான நடத்தப்பட்ட  'உத்யாபன்' விழாவிற்கு, எவ்வாறு பாபா சந்நியாசி வடிவில் மற்ற இருவருடன் சென்று விருந்து உண்டார் என்பதைப்  பற்றிய அனுபவ  விளக்கவுரை....

ஹேமாட்பந்தின் கனவில் தோன்றி உம் வீட்டிற்கு உணவருந்த வருவேன் என்று அறிவுருத்தியப் பிறகு ,எவ்வாறு பாபா  சித்திர ரூபத்தில் ஹேமத்பந்தின்  வீட்டுக்கு  சென்று விருந்தில் கலந்துக்கொண்டார் என்பதன் அனுபவ விளக்கவுரை....

மேற்க்கண்ட தலைப்புக்களின் விளக்கவுரைகளைப் பற்றி ஒவ்வொன்றாகக் கீழே காண்போம்....

🔥 முதலில் பாலாசாஹேப் தேவ் என்ற பரம பக்தருடைய தாயார் அவர்கள்,  அனைவரின் நல்வாழ்வுக்காகவும் விரதங்களை அனுஷ்டித்து முடிவில் நிறைவு செய்வதற்கான நடத்தப்பட்ட  'உத்யாபன்' விழாவிற்கு,  எவ்வாறு பாபா சந்நியாசி வடிவில் மற்ற இருவருடன் சென்று விருந்து உண்டார் என்பதைப்  பற்றிய அனுபவ  விளக்கவுரையை இங்கு காண்போம்...🔥

சத்குருநாதர் சீரடிபாபா, தம்மை நாடி வரும் அடியவர்களுக்கு  லௌகீக, மற்றும்  ஆன்மிக விஷயங்களைப் பற்றி எளிமையான உரைகள் மூலமாக  உயர்ந்த நெறிமுறைகளோடு வாழக்கூடியத் தன்மையைப் புகட்டினார்..மேலும் தம் பக்தர்கள் உயர்ந்த இறைப்பண்புகளுடன் வாழ வாழ்க்கைப்  பாதையையும், ஞானப் பாதையையும் ஒரு சேரப் புகட்டினார்.. ஒவ்வொரு பக்தர்களையும், அவரவர்கள்  வாழ்வின் இலட்சியத்தை  எய்தும் வண்ணம் அவர்களை ஊக்குவித்து மகிழ்வடையச்  செய்கிறார்..தன்னுடையப் பக்தர்களின் சிரத்தில் தம் கரங்களினால்  ஆசீர்வதிக்கும் போது,  தமது சக்தியை அவர்களிடம் மாற்றி, நான் என்ற அகந்தையையும், அகங்காரத்தையும்  அழிக்கிறார்.  த்வைத உணர்வின்றி, வித்தியாசமின்றி பக்தர்கள் கீழே வீழ்ந்து வணங்கும்போது, அவர்களை மிகுந்த தாய்மையுணர்வுடன்  அரவணைத்து  ஆசிர்வாதம் செய்கின்றார்...

மழைக்காலத்தில் கடல், ஆறுகளுடன்  கலப்பதுபோல், தம்முடைய  பக்தர்களுடன் ஒன்றாகி அவர்களுக்குத் தம் ஆற்றலையும், அனுக்கிரகத்தையும்  அளிக்கிறார்...கடவுளின் லீலைகளை  மட்டும் பாடிக் கொண்டிருப்போருக்கு நிகராக அல்லது அவர்களைக் காட்டிலும் கடவுளின் அடியவர்களின் லீலா வினோதங்களைப் பாடுவோர் பாபாவுக்குப் பிரியமானவர்கள் என்பது இதன்மூலம் அறியப்படுகிறது...  தற்போது இவ்வத்தியாயத்தில் கொடுக்கப்பட்டுள்ள  அனுபவ நிகழ்வின் விளக்கவுரைகளைக் காண்போம்....

தாணே ஜில்லாவிலுள்ள டஹாணூ மம்லதார் திரு .பாலாசாஹேப் தேவ் என்ற பரம பக்தருடைய தாயார் அவர்கள் பலவிதமான பூஜைகள் செய்து,  பிரார்த்தனைகளைச் சங்கல்பம் செய்து, அனைவரின் நல்வாழ்வுக்காகவும் விரதங்களை அனுஷ்டித்து முடிவில் நிறைவு செய்வதற்கான நடத்தப்பட்ட  'உத்யாபன்' விழா நடத்த ஏற்பாடு செய்தார்.. நூறு அல்லது இருநூறு அந்தணர்களுக்கு உணவளிப்பதும் இவ்விழாவுடன் சேர்ந்தவொரு அம்சமாகும். தேவ், விழாவுக்கு ஒரு நாளை நிச்சயித்தார்...  சாயிபாபாவின் அனுக்கிரகமும், விஜயத்தாலன்றி விழா உரியமுறையில் பூர்த்தி அடையாதாகையால், விழா விருந்தில் கலந்துகொள்ள பாபாவிடம் அறிவுருத்துமாறு,  அவரின்(தேவ்) சார்பில் பாபாவிடம் கூற பாபு சாஹேப் ஜோகிற்கு  ஒரு கடிதம் எழுதியிருந்தார்..பாபாவிடம் பாபு சாஹேப் ஜோக் அக்கடிதத்தைப் படித்துக் காண்பித்தார்.  பாபா, தேவின் தூய்மையான, உள்ளபூர்வமான அழைப்பினை கவனத்துடன் கருத்திற்கொண்டு கூறினார், "என்னை நினைவில் கொண்டிருப்பவனை நான் எப்போதும் நினைத்துக்கொண்டு இருக்கிறேன்...எனக்கு எவ்வித வாகனமோ, வண்டியோ, இரயிலோ, அல்லது விமானமோ தேவையில்லை...என்னை எவன் அன்புடன் கூப்பிடுகின்றானோ அவனிடம் ஓடிச்சென்று நானே வெளிப்படையாகக் கலந்துக்கொள்கிறேன்...நம்மில் மூன்றுபேர் (மூவர்) நான், நீ, மற்றும் ஒருவன் சென்று அவ்விழாவில் கலந்துக் கொள்வதாக அவருக்கு ஒரு மகிழ்வான பதில் எழுது" என்றார் பாபா...

ஜோக், பாபா கூறியதை தேவிடம் தெரியப்படுத்தினார்.. பின்னர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாராயினும், பாபா தாமே நேரிடையாக ராஹதா, ரூய், நீம்காவன் முதலிய இடங்களைத் தவிர வேறு இடங்களுக்குச் சென்றதில்லை என்று அவருக்குத் தெரியும்....பாபா சர்வவியாபியாய் இருப்பதால் அவரால் இயலாதது ஒன்றும் இல்லை என்றும், அவர் விரும்பினால் எந்த ரூபத்திலும் திடீரென்று வந்து தமது சொற்களை நிறைவேற்றலாம் என்றும் எண்ணினார்...இதற்கு சில நாட்களுக்கு முன்னர் வங்காள உடையிலுள்ள ஒரு சந்நியாசி, பசுக்களைப் பாதுகாத்தலே தனது குறிக்கோள் என்றுக்  கூறிக்கொண்டு, டஹாணு இரயில் நிலைய அதிகாரியிடம்  நிதி வசூலிக்க வந்தார்.  பின்னவர் அவரை ஊருக்குள் சென்று  தேவ்வைப் பார்த்து, அவரின் உதவியால் நிதி சேகரிக்கக் கூறினார்...அத்தருணம் மம்லதார் தேவ்  அங்குவர நேர்ந்தது..

இரயில் நிலைய அதிகாரி மசந்நியாசியை தேவ்ற்கு  அறிமுகப்படுத்தினார்.. இருவரும் மேடையில் இருந்து பேசிக் கொண்டிருந்தனர். தேவ், வேறு ஒரு தர்ம காரியத்திற்காக நிதி வசூலிக்க,  ஏற்கனவே ராவ் சாஹேப் நரோத்தம் ஷெட்டி என்ற பெரிய மனிதர் ஒருவரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், பிறிதொரு நிதி வசூலைத் தற்போது ஆரம்பிப்பது நன்றல்ல என்றும், அவர் இரண்டு அல்லது நான்கு மாதங்களுக்குப் பின்னர் அவ்விடத்துக்கு விஜயம் செய்தால் நல்லதென்றும் சந்நியாசியிடம் கூறினார்....இதைக்கேட்டு அத்துறவி அவ்விடத்தைவிட்டு அகன்றார். 

ஒரு மாதத்திற்குப் பின்னர் அத்துறவி ஒரு குதிரை வண்டியில் காலை சுமார் பத்து  மணியளவில் வந்து தேவ்வின் வீட்டின்முன் நின்றார்...தேவ் அவர் நிதிக்காக வந்திருப்பதாக நினைத்தார்... விழாவுக்கான ஏற்பாடுகளில் அவர் ஈடுபட்டிருப்பதைக் கண்டு, அத்துறவி தாம் பணத்துக்காக வரவில்லையென்றும், உணவிற்காக அங்கு வந்திருப்பதாகவும் கூறினார்...

தேவ் :  மிக்க நன்று...மிக்க மகிழ்ச்சி..உங்களுக்கு நல்வரவு...இவ்வீடு தங்களுடையது.. 

துறவி :  என்னுடன் மற்றும் இருவர் இருக்கின்றார்கள்.. அழைத்து வரட்டுமா என்று கேட்கின்றார்..

தேவ் :  நல்லது, அவர்களையும் அழைத்துக் கொண்டு வாருங்கள் என்று கூறுகின்றார்...

விருந்து நடைபெற இன்னும் இரண்டு மணிநேரம் இருந்ததால், எங்கு சென்று அவர்களை அழைத்து வரவேண்டுமென தேவ் கேட்டார்...  "அது தேவையில்லை...  குறிப்பிட்ட நேரத்தில் நானே அவர்களுடன் வருவேன்" என்றார்... தேவ் அவரை நடுப்பகலில் வரும்படி கூறினார்...  சரியாக மதியம் பன்னிரண்டு மணிக்கு அம்மூவரும் வந்து விருந்தில் பங்கேற்று, விருந்து உண்டபின் சென்றுவிட்டனர்... 

விழா முடிந்ததும் தேவ், பாபாவின் வாக்குறுதி மீறலைக் குறித்து வருந்தி பாபு சாஹேப் ஜோக்கிற்கு ஒரு கடிதம் எழுதினார்..  ஜோக் பாபாவிடம் அக்கடிதத்துடன் சென்று அதைத் திறக்கும் முன்னரே பாபா, "ஆ...! நான் வாக்குறுதி அளித்துவிட்டு ஏமாற்றிவிட்டதாக அவன் கூறுகிறான்...விருந்துக்கு நான் மற்ற இருவருடன் செல்லவே செய்தேன்... ஆனால் அவன் என்னைப் புரிந்துக் கொள்ளவில்லை..  உணர்ந்துக்கொள்ளவில்லை..பின்னர் எதற்காக என்னை அழைக்கவேண்டும்...?  சந்நியாசி நிதி கேட்க அவன் இல்லத்திற்கு  வந்திருப்பதாக அவன் எண்ணினான்...அதுப் பற்றி அவனது ஐயத்தை நான் நீக்கவில்லையா...?  மற்றும் இருவருடன் வருவதாக நான் கூறவில்லையா...? மூவரும் உரிய நேரத்தில் வந்து உணவு உட்கொள்ளவில்லையா...? 

இதோ பாருங்கள்...எனது மொழிகளைக் காப்பதற்கு நான் எனது உயிரையே தியாகம் செய்வேன்...எனது மொழிகளுக்கு மாறுபட்டு நான் இருக்கவே மாட்டேன்" என்றார்...  இப்பதில் ஜோக்கின் உள்ளத்தை மகிழ்வடையச் செய்தது...இவை அனைத்தையும் தேவ்வுக்குத் தெரிவித்தார்.அதை அவர் படித்தவுடனே ஆனந்தக் கண்ணீர் விட்டார்...வீணாக பாபாவைக் குற்றம் கூறியதற்காக தம்மைத்தாமே கடிந்துக்கொண்டார்...  துறவியின் முந்தைய வருகையினால், தான் எவ்வாறு ஏமாற்றப்பட்டார் என்பதையும், விருந்தில் கலந்துக்கொள்வதற்கு  தாம் இருவருடன் வருவதாகக் கூறிய துறவியின் கூற்றிலுள்ள குறிப்பை தான் எங்ஙனம் புரிந்துகொள்ளத் தவறிவிட்டார் என்பதையும் குறித்து மிகவும் ஆச்சரியப்பட்டார்.. 

அடியவர்கள் தாங்களே முழுமையாக சத்குருவிடம் சரணாகதி அடையும்போது, அவர்தம் வீட்டில் நடைபெறும் மதச்சடங்குகள் உரியமுறையில், தேவையான சம்பிரதாயங்களுடன் நடத்தப்படுகின்றனவா என்று அவர் கவனிக்கிறார் என்பதை இக்கதை நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது.... 

🔥ஹேமாட்பந்தின் கனவில் தோன்றி உம் வீட்டிற்கு உணவருந்த வருவேன் என்று அறிவுருத்தியப் பிறகு ,எவ்வாறு பாபா  சித்திர ரூபத்தில் ஹேமத்பந்தின்  வீட்டுக்கு  சென்று விருந்தில் கலந்துக்கொண்டார் என்பதன் அனுபவ விளக்கவுரையை இங்கு காண்போம்🔥

சீரடிபாபா, தமது சித்திர ரூபத்தில் தோன்றி தமது அடியவரின் ஆவலை எவ்வாறு  பூர்த்தி செய்தார் என்பதைப் பற்றி இங்கே காண்போம்... 1917-ஆம் ஆண்டு பங்குனி மாதம் பௌர்ணமி நாளில் ஹோலிப் பண்டிகையன்று காலை ஹேமாட்பந்த்க்கு ஒரு காட்சி தோன்றியது... பாபா அவரது கனவில் நன்றாக உடையணிந்த ஒரு துறவியைப்போன்று தோன்றி  அவரை எழுப்பி அன்று உணவுக்காக அவரது இல்லத்திற்கு  வருவதாக அறிவுருத்துகின்றார்.. கண்விழித்து எழுந்த அவர் துறவியையோ அல்லது சாயியையோ  காணவில்லை...ஆனால் அவர் கனவு நினைவுக் கூறத்  தொடங்கிய போது, கனவில் பாபா  கூறிய ஒவ்வொரு வார்த்தையையும் ஞாபகத்தில் கொணர்ந்தார்.....

ஏழு ஆண்டுகளாக ஹேமாட்பந்த்  பாபாவுடன் அவர் மிக நெருங்கியத்  தொடர்புடையவராக இருந்தாலும்,  பாபாவையே எப்போதும் தியானித்தப்  போதிலும், பாபா உணவுக்காகத் தம் வீட்டுக்கு வருவார் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.  ஆயினும் பாபாவின் உபதேச  மொழிகளால் மனம் மகிழ்ந்து,  தமது மனைவியிடம் சென்று அன்று ஒரு புனிதமான நாளாக இருப்பதால் ஒரு துறவி விருந்தாளி உணவுக்காக வருகிறார் என்றும், அதிகமான உணவு தயார் செய்ய வேண்டுமென்றும் கூறினார்...அவள் விருந்தாளியைப் பற்றி யார்...?  எப்போது வருகிறார்கள்? எனக் கேட்டாள்...தமது மனைவியிடம்  உண்மையை அதாவது கனவினைப் பற்றித் தெளிவாகக்  கூறினார்.

பாபா, அவ்விடத்திற்கு (பாந்த்ரா) சீரடியிலிருந்து அங்குள்ள நேர்த்தியான உணவை விடுத்து, சாதாராணமான தங்கள் வீட்டு உணவை ஏற்க வருவாரா என்று அவள் ஐயத்துடன் கேட்டாள்...  ஹேமாட்பந்த் தன் மனைவியிடம், பாபா நேரிடையாக வரமாட்டார் என்றும், ஒரு விருந்தினர் ரூபத்தில் வருவார் என்றும் உறுதியளித்து இன்னும் சற்று அதிகமாக சாதம் வடிப்பதினால் நாம்  இழக்கப்போவது ஒன்றுமில்லை என்றும் கூறினார்..

இதன்பின்னர் விருந்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு  மதியத்திற்குள் அது தயாராகியது...ஹோலி வழிபாடும் செய்யப்பெற்று இலை போடப்பட்டது...அதைச் சுற்றிலும் கோலமிடப்பட்டது…. நடுஸ்தானம் விருந்தாளிக்கெனவும், மற்றவர்களுக்கு இரண்டு வரிசைகளிலும் இலைகள் போடப்பட்டன...  குடும்பத்தின் எல்லா உறுப்பினர்களும், மகன்கள், பேரன்கள், புத்திரிகள், மருமகன்கள் அனைவரும் வந்து தத்தமது இடங்களில் அமர்ந்தனர்.. பல்வேறுவித உணவுவகைகள் பரிமாறப்பட்டன...இது நிகழ்ந்துக் கொண்டிருக்கையில் அனைவரும் விருந்தாளிக்காக எதிர்பார்த்திருந்தனர்....    

மதியம் கடந்துவிட்டபோதிலும் ஒருவரும் வரவில்லை.. பின்னர் கதவு  தாளிடப்பட்டது... பின் அன்னசுத்தி (நெய்) விடப்பட்டது.. இதுவே உண்ண ஆரம்பிப்பதற்கு அடையாளம்... அக்கினிக்கு முறையான சமர்ப்பணமும், கிருஷ்ணருக்கு நிவேதனமும் கூட ஆயிற்று... குடும்பத்தினர் உண்ண ஆரம்பிக்கும் அதே தறுவாயில் வாசலில் காலடிச் சத்தம் தெளிவாகக் கேட்டது...ஹேமாட்பந்த் உடனே சென்று கதவைத் திறந்தார்...அலி முகமது, மௌலான இஸ்மு முஜாவர் ஆகிய இருவரைக் கண்டார்... உணவு இலையில்  தயாராக இருப்பதையும், குடும்பத்தினர் உண்ணத் தயாராக இருப்பதையும், அவ்விருவரும் கண்டுணர்ந்து  ஹேமாட்பந்த்திடம் மிகுந்த வருத்தம் தெரிவித்துத் தங்கள் குறுக்கீட்டுக்கு மன்னிப்புக் கோரினர்....

அவர்கள், "எங்களுக்காக நீங்கள் இருக்கையை விட்டு  எழுந்து  ஓடி வந்திருக்கிறீர்கள்...  மற்றவர்கள் உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனர்...எனவே தயவுசெய்து தாங்கள்  இந்தப்  பொருளைப் பெற்றுக் கொள்ளுங்கள்...நாங்கள், அதன் வியத்தகு கதை முழுவதையும் தங்களுக்குச் சௌகரியப்படும்போது பின்னர் விவரிப்போம்" என்று கூறினார்கள்...இவ்வாறு கூறிக்கொண்டே பழைய செய்தித்தாள் ஒன்றை மேசையின்மேல் வைத்தார்கள்.ஹேமாட்பந்த் அதனைப் பிரித்துப் பார்க்கையில், அவருக்குப் பெரும் ஆச்சரியத்தையும், வியப்பையும் விளைவிக்கும் வகையில் சாயீபாபாவின் பெரிய அழகிய படம் (Bas-Relief) ஒன்றைக் கண்டார்...  உடம்பு முழுவதும் மயிர்க்கூச்செறிய, கண்களில் நீர்வழிய மிகவும் மனமுருகி தனது தலையைத்தாழ்த்தி படத்திலுள்ள பாபாவின் பாதங்களில் வைத்துக் கொண்டார்... பாபா இத்தகைய அனுக்கிரக லீலையால் தம்மை ஆசீர்வதித்திருப்பதாக கருதினார்...அறிவதற்கு ஆர்வம் மேலிட, அப்படத்தை அவர்கள் எப்போது வாங்கினார்கள் என்று கேட்டார்...

அலி முஹமது தாம் அதை ஒரு கடையிலிருந்து வாங்கியதாகவும், எல்லோரும் காத்திருப்பதால் அப்படத்தைப் பற்றிய எல்லா விவரங்களையும் பிறிதொரு சமயம் சொல்லுவதாகவும், மற்றவர்களுடன் அவரை உண்ணச் செல்லுமாறும் கூறினார்...ஹேமாட்பந்த் அவர்களுக்கு நன்றி தெரிவித்து வழியனுப்பிவிட்டு உணவருந்த  வந்தார்.  பின்னர் ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் படம் வைக்கப்பட்டு நிவேதனம்  உரியமுறையில் செய்தப்  பிறகு அனைவரும் உணவை  உண்ணத்  தொடங்கினார்கள்...படத்திலுள்ள அழகிய ரூபத்தைக்கண்டு அனைவரும் மிகமிக பேரானந்தமடைந்தனர்..  இவையெல்லாம் எங்ஙனம் நிகழ்ந்தன என்பது குறித்து வியந்தனர்.

ஹேமாட்பந்த்தின் கனவில் கூறிய மொழிகளை பாபா இவ்வாறாக நிறைவேற்றினார்... அனைத்து  விவரங்களுடன் கூடிய அப்படத்தின் கதை மற்றும் அதாவது எங்ஙனம் அலி முஹமது புகைப்படத்தைப்  பெற்றார்...?  ஏன் அதை அவர் வாங்கினார்...?  ஹேமாட்பந்த்திடம் பின் ஏன் அதைக் கொடுத்தார்...? என்பவை எல்லாம் அடுத்த அத்தியாயத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது..

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🙏.

ஸ்ரீ சாயீயைப் பணிக... அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்...🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுயவிழிப்புணர்வு தியானபீடம்..🙏

வெள்ளி, ஜூன் 18, 2021

ஶ்ரீ சீரடிபாபாவின் சாய்சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாயத்தின் வெளியீடு... (39)மற்றும்(50)

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான ஶ்ரீசாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள  இன்றைய அத்தியாய வெளியீடு....🙏🏼 🙏🏼🙏🏼

🙏ஶ்ரீசாய் சத்சரித்திரம்🙏

🙏அத்தியாயம்:: முப்பத்தொன்பது மற்றும் ஐம்பது (39)மற்றும்(50)🙏

🔥முதலில் புனித வேத நூலான ஶ்ரீசாய்  சத்சரித்திரம்  பாராயணம் செய்வதன்  முக்கியத்துவமும், பெறப்போகும்  நன்மைகள்  என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥

ஶ்ரீசீரடி  சாய்பாபாவின் புனித வேத நூல் என்பது சாய் சத்சரித்திரம் என்பதாகும்...இதில் ஶ்ரீசீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத  எழுத்திலும் வியாப்பித்து  படர்ந்து இருக்கின்றது...

ஶ்ரீசாய்  சத்சரித்திரத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல், மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய்சத்சரித்திரம் செயல்படுகின்றது..ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து சாய் சத்சரித்திரத்தில்  இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்.....

இவ்வாறாக நாம் அனைவரும் சாய்  சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும்  அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்.. ஆகவே சாய் சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்.. நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக..🙏

🔥குறிப்பு::..சாய் சத்சரித்திர வேதப்  பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥

தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்.. மேலும் அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரியத் தன்மையை அடையலாம்...இவ்வேத பாராயணத்தின் மூலமாக ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரியத் தன்மையை  அடையும் நிலையைப்  பெறலாம்...மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம்,நேர்மை, மனிதநேயம் போன்ற  இறைப்  பண்புகளைப்  பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுப் பெறவும்  இந்த சாய் சத்சரித்திர  வேதப் பாராயணம் துணைப்புரிகின்றது...

மேலும் இப்பாராயணத்தின் மூலம்  மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில்  வெற்றி வாகை சூடலாம்... அவரவர்கள்  விரும்பி வேண்டியது கிடைக்கப் பெறும்...சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்...மேலும் அனைத்து விதமான  கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி  பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும்  ஒருசேரப்பெறலாம்..🙏

🔥அத்தியாயம்:: முப்பத்தொன்பது மற்றும் ஐம்பது (39 மற்றும் 50)🔥

🙏முன்னுரை...🙏

சத்குருநாதர் சீரடி பாபா, தன் ஆத்மார்த்தமான உயரியப் பக்தன், நானா சாஹேப் சாந்தோர்கர் சந்தேகத்தை நீக்கும் பொருட்டு, அவர்   எடுத்துரைத்த பகவத்கீதையின் செய்யுளில்  உள்ளடங்கியுள்ள  மறைபொருள்  ஞான மூல சூட்சம விளக்கத்தை எடுத்துக்கூறி,  பாபா, எவ்வாறு நானா சாஹேப்பின் அகந்தையையும், கர்வத்தையும், அறியாமையையும்   நீக்கினார்  என்பதன் அனுபவ மறைஞான விளக்கவுரை..

சீரடி பாபா , தன் ஆத்மார்த்தமான பக்தர்களாகிய, ஶ்ரீமான் பாபு சாஹேப் பூட்டியின் வாதா கட்டும்  எண்ணமும்  மற்றும்  தீஷித் மற்றும் ஷாமா ஆகியோரின் கனவில் தோன்றி காட்சியளித்து,  வாதாவை கட்டுமாறு  அறிவுருத்திய பின், எவ்வாறு   வாதா என்ற சமாதி மந்திரைக் கட்டினார்கள் என்ற   நிகழ்வின் விளக்கமும், மேலும்  எவ்வாறு முரளிதரருக்காக கட்டப்பட்ட மேடையில் பாபாவின் புனித உடல்   சமாதியாக்கப்பட்டு சமாதி மந்திரானது என்பதன் அனுபவ விளக்கவுரை..   

மேற்க்கண்ட தலைப்புக்களின் விளக்கவுரைகளைப் பற்றி ஒவ்வொன்றாகக் கீழே காண்போம்...

🔥முதலில் சத்குருநாதர் சீரடி பாபா, தன் ஆத்மார்த்தமான உயரியப் பக்தன் நானா சாஹேப் சாந்தோர்கர் சந்தேகத்தை நீக்கும் பொருட்டு, அவர்   எடுத்துரைத்த பகவத்கீதையின் செய்யுளில்  உள்ளடங்கியுள்ள  மறைபொருள்  ஞான மூல சூட்சம விளக்கத்தை எடுத்துக்கூறி,   பாபா, எவ்வாறு நானா சாஹேப்பின்  அகந்தையையும், கர்வத்தையும், அறியாமையையும்   நீக்கினார்  என்பதன் அனுபவ மறைஞான விளக்கவுரையைப் பற்றி இங்கே பார்ப்போம் ..🔥

இந்த அத்தியாயம், பகவத்கீதையின் ஒரு செய்யுளை எடுத்துரைத்து  விளக்கம் கேட்ட நானா சாஹேப் சாந்தோர்கருக்கு, பாபா உபதேசித்த  மறை ஞான மூல சூட்சம  விளக்கத்தைப் பற்றியது... மகான்களும், சித்தர்களும்  தேகம்,  இனம், மொழி, ஜாதி , பற்று  ஆகியவற்றை கடந்தவர்கள் என்று அறியாமையின் காரணமாக பாபாவிற்கு  வடமொழி தெரியாது என்றும்,  பகவத் கீதையில்  உள்ள  செய்யுளின்  பொருள் விளக்கம் நானா சாஹேப் சாந்தோர்கரினுடையது என்றும் சிலர் ஆட்சேபித்ததால், ஹேமத்பந்த் அந்த ஆட்சேபத்தை மறுத்து, மற்றொரு அத்தியாயமான  ஐம்பதிலும்  பாபா உரைத்த மூல சூட்சம விளக்கத்தை  விவரிப்பதால் அதுவும் இந்த அத்தியாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது...

சீரடி பாபா மகாசமாதி எய்தும்வரை ஸ்ரீ சாய்பாபா  வாழ்ந்து நடமாடிய சீரடியும், துவாரமாகாயீயும் நற்பேற்றுக்குரியவைகள்... சீரடி பாபா எதற்காக சீரடி வருகைப் புரிந்தாரோ, எவருடைய நன்றிக்கடனுக்குத் தம்மை உரியவராக்கிக் கொண்டாரோ, அத்தகைய சீரடி மக்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்...  முதலில் சீரடி ஒரு குக்கிராமம்தான்...ஆனால் பாபாவின் வருகையால் சீரடி  அதீத  முக்கியத்துவம் பெற்ற  புனிதத்தலமாக  மாறியது... மேலும்  புனிதப் பயணத்திற்க்குரிய ஒரு புண்ணிய ஷேத்திரமாகவும் ஆனது.  சீரடியில் வாழ்ந்த அனைவரும்  அதே அளவு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்...பாபா மீது சீரடி மக்கள்  கொண்டிருந்த முழுமனதான சிதையாத நம்பிக்கையும், விசுவாசமும்,  பாபாவின் ஆசிர்வாதத்தை முழுவதுமாக  பெறுவதற்கு தகுதிகளாக  அமைந்தது... சீரடியில்  வாழ்ந்த பெண்மணிகள் அனைவரும் தன் அன்றாட இல்லறப் பணிகளை மேற்க்கொள்ளும்  போது  பாபாவின் புகழைப் பாடினார்கள்..அவர்களின் அன்பு நற்பேற்றுக்குரியது.  ஏனெனில் கேட்போரின்  மனதை ஈர்க்கக் கூடியதாக இருந்தது..ஆழ்மனதில்  இருக்கக்கூடிய துன்பத்தை   அகற்றி சாந்தப்படுத்தியது.  மிக அழகாக  இனிமையான  பாடல்களை அவர்கள் பாடினார்கள்..

சீரடி பகவான் உணர்த்திய மறைப்பொருள் ஞான மூல சூட்சம விளக்கம்  என்னவென்பதை இங்கே காண்போம்.. ஒருநாள் நானா சாஹேப் சாந்தோர்கர் என்ற பக்தருக்கு,  கீதையின் ஒரு செய்யுளுக்கு சிறந்த பொருள் விளக்கம் தெரியவில்லை...ஆனால்  பாபாவிற்கு வடமொழி தெரியாது என்று நானா சாஹேப் நினைத்தார்.. ஆனால்  பகவான் தன்னுடைய  எங்கும் நிறைந்த பேராற்றலாள்,  பகவத்கீதையில் அடங்கியுள்ள செய்யுளில்  உள்ளடங்கியுள்ள  மறைப்பொருள் மூல  சூட்சம விளக்கத்தை  எடுத்துக்கூறி வந்திருந்த அனைத்து பக்தர்களையும்  அதிசயத்தில் ஆழ்த்தினார்.  இதைப்பற்றிய சுருக்கமான விபரம் B.V.தேவ் என்னும் ஓய்வுபெற்ற மம்லதாரால் எழுதப்பட்டு, சாயிலீலா சஞ்சிகையில் (தொகுப்பு 7 'ஸ்புதவிஷயா' பக்கம் 563) மராத்தியில் பதிப்பிக்கப்பட்டது.... 

சகோதரர்  B.V.நரசிம்மஸ்வாமி எழுதிய இரு நூல்களான 'சாயிபாபாவின் சாஸனாம்ருதத் திருமொழிகள்' (பக்கம் 61), 'The Wonderous Saint Sai Baba' (page 36) ஆகியவற்றில் இதைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.. இது மேற்குறித்து ஸ்வாமி எழுதிய 'பக்தர்களின் அனுபவங்கள் மூன்றில் (பக்கம் 66) பதிப்பிக்கப்பட்டு இருக்கிறது... இப்பொருள் குறித்து நானா சாஹேப்பிடமிருந்தே B.V.தேவ் நேரடித் தகவல் பெற்றாராதலால் அவருடைய கூற்றையே கீழே அளிக்கிறோம்...

நானா சாஹேப் சாந்தோர்கர் வேதாந்தத்தில் ஒரு சிறந்த மாணவர்...அவர் கீதையை விளக்கங்களுடன் பயின்று இருக்கிறார்... மேலும் அவர்  எல்லாவற்றையும் பற்றி  கற்றுத் தான்  சிறந்த அறிவாளியெனக் கர்வமடைந்தார்..வடமொழியைப் பற்றி  பாபாவிற்கு ஒன்றுமே தெரியாது என்று கற்பனை செய்துக் கொண்டார்..எனவே,  பாபா தன் பக்தர் நானா சாஹேப்பின் அறியாமையை நீக்குவதற்காக பகவத்கீதை யின் செய்யுளில்   மறை ஞான விளக்கத்தை எடுத்துக்கூறி கர்வத்தைப் போக்கினார்...இந்த  நிகழ்வு நடந்தது எப்போது என்றால்,  பாபாவிடம் கூட்டம் திரளத் தொடங்குவதற்கு முன்புள்ள காலக்கட்டமாகும் ...அக்காலக்கட்டத்தில் தன்  அடியவர்களிடம் பாபா, தனியாக உரையாடல் நிகழ்த்துவதுண்டு.  நானா அவரருகில் பாபாவின் கால்களைப் பிடித்து விட்டுக் கொண்டிருந்தார்...

பாபா :  நானா, உனக்குள்ளே என்ன பேசிக்கொண்டு இருக்கின்றாய் என்று கேட்டார் பாபா...

நானா :  வடமொழியிலிருந்து ஒரு ஸ்லோகத்தை நான் ஒப்புவித்துக் கொண்டிருக்கின்றேன் என்று  நானா பதில் கூறினார்...

பாபா :  என்ன சுலோகம்...?

நானா :  பகவத்கீதையிலிருந்து ஒரு செய்யுள்....

பாபா :  அதைப் பலமாகக் கூறு என்று கேட்கின்றார்..

நானா :  (பகவத்கீதை அத்தியாயம்  நான்கில், முப்பத்து நான்காவது  ஸ்லோகத்தைப் பின்வருமாறு ஒப்பித்தார்.. 

தத்வித்தி ப்ரணிபாதேனே பரிப்ரஷ்னேன ஸேவயா உபதேக்ஷ்யந்தி தே ஞானம் ஞானினஸ்தத்வ தர்ஷின..

பாபா : அது உனக்குப் புரிகிறதா...?

நானா :  ஆம்

பாபா :  அப்படியானால் என்னிடம் அதை விளக்கமாகக்  கூறு....

நானா :  சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தும், குருவிடம் கேட்டும், பணிவிடை செய்தும், இந்த ஞானம் என்பது என்ன என்பதை அறிவாயாக... அப்போது உண்மை  ஞானத்தின் சத்பொருளை (பிரம்மத்தை) எய்திய அந்த ஞானிகள், ஞானோபதேசத்தை உனக்கு நல்குவார்கள் என்பது அதன் பொருள்.

பாபா :  செய்யுள் முழுவதற்குமான இத்தகைய திரள் கருத்து எனக்குத் தேவையில்லை.  ஒவ்வொரு சொல்லுக்கும் அதன் இலக்கண வேகம், பொருள் ஆகியவற்றை எனக்குச் சொல்வீராக...பின்னர் நானா அதைப் பதம் பதமாக விவரித்தார்...

பாபா :  வெறுமனே சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தால் போதுமா....?

நானா :  ப்ரணிபாத என்ற சொல்லுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் என்னும் பொருள் தவிர வேறு எப்பொருளும் எனக்குத் தெரியாது ...

பாபா :  பரிப்ரஷ்னா என்றால் என்ன....?

நானா :  கேள்வி கேட்டல் என்பது பொருள்..

பாபா :  ப்ரஷ்னா என்றால் என்ன பொருள்...?

நானா :  அதுவே (கேட்டல்)

பாபா :  பரிப்ரஷ்னாவைப் போல் ப்ரஷ்னாவும் அதே பொருளை உணர்த்தினால் வியாஸர் ஏன் பரி என்னும் அடைமொழியை முன்னால் சேர்த்தார்....?  வியாஸர் பைத்தியமாய் இருந்தாரா....?

நானா :   பரிப்ரஷ்னாவுக்கு அதைத்தவிர வேறெந்த பொருளும் எனக்குத் தெரியாது.

பாபா :  'சேவா' அது எத்தகைய சேவையைக் குறிக்கின்றது....?

நானா :  நாங்கள் எப்போதும் செய்துக் கொண்டிருக்கும் சேவையைத்  தான்.

பாபா :  அத்தகைய சேவை செய்தால் போதுமா...?

நானா :  'சேவை' என்ற சொல் அதைத்தவிர வேறு எதைக் குறிக்கிறது என்று எனக்குத் தெரியாது...

பாபா :  அடுத்த வாக்கியத்தில் 'உபதேஷ்யந்தி தே ஞானம்' என்பதில் ஞானம் என்ற சொல்லுக்கு வேறு எந்த சொல்லையாவது போட்டு அதை அங்ஙனம் படிக்க முடியுமா...?

நானா :  ஆம்.

பாபா :  என்ன சொல்...?

நானா :  அஞ்ஞானம் என்ற சொல்..

பாபா :  இந்தச் சொல்லைக் போட்டு (ஞானத்துக்குப் பதில்) செய்யுளிலிருந்து ஏதாவது பொருள் உணரப்படுகிறதா...? 

நானா :  சங்கரபாஷ்யம் அத்தகைய பொருள் தரும் அமைப்பு எதையும் தரவில்லை.

பாபா :  அவர் தராததைப் பற்றி இலட்சியம் செய்யாதே... அஞ்ஞானம் என்ற சொல் என்னும் சிறந்த பொருளை உணர்த்துமென்றால், அதை உபயோகிப்பதற்குத் தடை ஏதும் உண்டா...?

நானா :  அஞ்ஞானம் என்பதை அதில் வைத்து பொருளை உணர்வது எவ்வாறு என்பது எனக்கு விளங்கவில்லை. 

பாபா :  கிருஷ்ணர் அர்ஜுனனை ஞானிகளையும், தத்துவ தரிசிகளையும் நாடி அவர்களை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து தத்துவ விசாரணையையும், சேவையையும் செய்யுமாறு ஏன் சொல்கிறார்...?  கிருஷ்ணர் தாமே ஒரு தத்துவதரிசியும் உண்மையில் ஞானரூபமுமேயல்லவா...?

நானா :  ஆம்...  அங்ஙனமேயானால் அவர் அர்ஜுனனிடம் ஞானிகளை அணுகுமாறு ஏன் குறிப்பிட்டார் என்பது எனக்குப் புரியவில்லை...?

பாபா:  இதை நீ புரிந்துக் கொள்ளவில்லையா...?

நானா செருக்குக் குலைவுற்றார்...கர்வம் அழிக்கப்பட்டது..  பின்னர் பாபா விவரிக்க ஆரம்பித்தார்.... 

ஞானிகளின் முன்னால் வெறுமனே சாஷ்டாங்கமாக நமஸ்கரிப்பது மட்டும் போதாது.  நம் சத்குருவிடம் சர்வவாஸ்வ அதாவது பரிபூரண சரணாகதியடைந்து  சமர்ப்பணம்  செய்ய வேண்டும்..கேள்வி கேட்டால் மட்டும் போதாது.  ஒழுங்கற்றமுறையிலும், குருவை  சிக்கலில் மாட்டிவிடும் வகையிலும் கேட்கக்கூடாது... விடைகளிலுள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டவோ அல்லது பயனற்ற ஆர்வத்துடன் கேட்கப்படவோ கூடாது..அது ஆத்மார்த்தமான உண்மை  மனப்பான்மையுடன், ஆன்மிக முன்னேற்றம் அல்லது மோட்சத்தை அடையும் நோக்கத்துடன் இருக்கவேண்டும்..

சேவை என்பது ஏதோ ஒரு பணிசெய்வது அல்ல...நான் செய்கின்றேன் அல்லது செய்ய மறுக்கவும் உரிமையுள்ளவன் என்பது போன்ற உணர்வுகளைத் தன்னுள் இருத்திக்கொண்டு செய்வது சேவையன்று... உடலின் அதிபதி நான் அல்ல என்றும் உடல் குருவுக்கே அர்ப்பணமானது என்றும், அவருக்குச் சேவை செய்வதற்காக மட்டுமே உளதாய் இருக்கிறது என்றும் உணரவேண்டும்...இதன்படி நடந்தால் முந்தைய ஸ்லோகத்தில் குறிப்பிட்ட 'ஞானம்' என்பது எதனைக் குறிக்கிறது என்று சத்குரு உணர்த்துவார்..

சத்குரு அஞ்ஞானத்தைப் போதிக்கிறார் என்று கூறுவதன் பொருள் நானாவுக்கு விளங்கவில்லை...

பாபா :  எங்ஙனம் ஞானோபதேசம் செயற்படுத்தப்படுகிறது..?  அறியாமையை அழிப்பதே ஞானம்.. கீதை அத். 18-ல் 66வது சுலோகத்திற்கு ஞானேஷ்வரியின் விளக்கச்செய்யுள் 1396-ல் கூறப்படுவதாவது : 

"ஓ..! அர்ஜுனா, அறியாமையை அகற்றுவது இத்தகையது, அதாவது கனவும், தூக்கமும் மறைந்து விடுமானால் நீ உன்னுடையவனே.. அது அங்ஙனமே", மற்றும் கீதை அத்தியாயம் 5,  சுலோகம் 16- க்கு ஞானேஷ்வரியின் விளக்கச்செய்யுள் 83 கூறுவதாவது, அறியாமையை அழிப்பது என்பதைத் தவிர ஞானத்தில் மாறுபாடாகவோ தற்சார்புடையதாகவோ வேறு எதுவும் உள்ளதா...? (இல்லையென்பது குறிப்பு).  இருளைத் துரத்துவது என்றால் ஒளி எனப்பொருள்.

த்வைதத்தை அழிப்பதென்றால் அத்வைதம் எனப்பொருள்...த்வைதத்தை அழிப்பதுபற்றிப் பேசும் போதெல்லாம் நாம் அத்வைதத்தைப்பற்றிப் பேசுகிறோம்...இருளை அகற்றுவது பற்றிப் பேசும்போதெல்லாம் ஒளியைப் பற்றிப் பேசுகிறோம்...  அத்வைத நிலையை நாம் உணர வேண்டுமென்றால், நம் மனதிலுள்ள த்வைத உணர்வை நீக்கவேண்டும். அதுவே அத்வைத நிலையை நாம் உணர்வதாகும்...த்வைத நிலையை மனதில் கொண்டுள்ள ஒருவன், அத்வைத நிலையைப்பற்றி எங்ஙனம் பேசமுடியும்...?  அப்படி ஒருவன் பேசுவானாகில் அதே நிலையை அடைந்தாலொழிய அதை எங்ஙனம் ஒருவன் அறியமுடியம்...?  உணர முடியும்...?

மீண்டும் கூறுமிடத்து சீடனும் சத்குருவைப் போலவே உண்மையில் ஞானத்தின் பண்புருவமானவன்..  ஏக மனப்பான்மை, பற்றற்று வாழ்தல், உணரும் நிலை, மிகச்சிறந்த அமானுஷ்ய சத்துவநிலை, ஒப்பற்ற செயலாற்றல், ஐஸ்வர்ய யோகம் (தெய்வீக சக்திகள்) இவைகளிலேயே சீடனுக்கும், குருவுக்குமுள்ள வேறுபாடு நிலவுகிறது...குரு நிர்குணமானவர், சச்சிதானந்தமானவர்...  உண்மையிலேயே மனித வர்க்கத்தை உயர்த்தி உலகை உய்விப்பதற்கே அவர் மானுட உருவம் எடுக்கிறார்...ஆனால் அதன் பொருட்டாக அவரது உண்மையான நிர்குணத்தன்மை எள்ளளவும் பாதிக்கப்படுவதில்லை.... 

அவர்தம் வியாபகம் (அல்லது உளதாயிருக்கும் தன்மை) தெய்வீக சக்தி, ஞானம் முதலியன குறைவதில்லை...  சீடனும் அதே ஸ்வரூபத்தில்தான் இருக்கின்றான்..  கணக்கற்ற பிறப்பு, இறப்புக்களுடைய முன்வினைகளின் விளைவானது அறியாமை என்னும் ரூபத்தில் அவன் பார்வையினின்று, தான் சுத்த சைதன்யைன் என்பதை அறியவிடாமல் மறைக்கிறது...

(கீதை : அத். 5, சுலோகம். 15)  இங்ஙனமே மேலே கூறப்படும் விதமாக),

அவன் 'நான் ஜீவன்' தான் ஒரு தாழ்வான பரிதாபமான ஜீவன் என்று எண்ணுகின்றான்... சீடனின்  அறியாமையாகிய இவ்வேர்களை குரு கிள்ளியெறிந்து அவனுக்கு உபதேசம் அல்லது அறிவுரை அளிக்கின்றார்.. 

சீடனானவன் தாழ்வான ஈனமான  எல்லையற்ற பிறவிகளை எடுத்து,  பல முடிவில்லாத பிறப்புகளினால் திக்பிரமை அடைந்துள்ள சீடனுக்கு குரு நூற்றுக்கணக்கான பிறப்புகளில் "நீ கடவுள், நீ வலிமையுள்ளவன், நீ செல்வமுள்ளவன்' என்று உபதேசித்து அறிவுறுத்துகிறார்... பின்னர் தானே உண்மையில் கடவுள் என்பதை சிறிதளவு உணர்கிறான்.. சீடன் உழன்று கொண்டிருக்கும்  மாயத் தோற்றமானது யாதெனின்  தானே உடலென்றும், தானே ஜீவனென்றும் (அகங்காரம்), பரமாத்மாவாகிய கடவுளும், உலகமும் தன்னிலிருந்து வேறுபட்டவைகள் என்பதுமாகும்...இது கணக்கற்ற முற்பிறவிகளில் அவன் மரபுரிமையாகப் பெற்ற பிழையானதொரு கருத்தாகும்... மாயையின் அடிப்படையிலான செயல்களால் மகிழ்ச்சி மற்றும்  துயரம் இரண்டையும் கலந்து அனுபவிக்கிறான் சீடன்.

இம்மாயையை, இப்பிழையை, இந்த அறியாமையின் வேரை அகற்றுவதற்கு அவன் தனக்குள்ளே  விசாரணை செய்யத் தொடங்க வேண்டும்...எங்ஙனம் இந்த அறியாமை உண்டாகிறது..? அது எங்கு உள்ளது...?  என்பதன்  மூல சூட்சமத்தை சீடனுக்கு  உணர்த்துவது தான் குரு உபதேசம் என்பதாகும்.. 

அஞ்ஞானம் என்பது கீழ்க்கண்டவையே ...

 1.  நான் ஒரு ஜீவன் (ஜந்து)

  2.  உடம்பே ஆத்மா (நானே உடல்)

  3.  கடவுள், உலகம், ஜீவன் இவை    எல்லாம் வேறானவை

  4.  நான் கடவுளல்ல

  5.  உடல், ஆத்மா அன்று என்பதை அறியாமலிருத்தல்

  6.  கடவுள், உலகம், ஜீவன் இவைகள் எல்லாம் ஒன்று என்பதை அறியாமலிருத்தல்

இப்பிழைகளெல்லாம் அவனது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டாலன்றி ஜீவன், உலகம், உடம்பு இவைகளெல்லாம் என்ன..? அவைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவா..!, ஒன்றுக்கொன்று மாறுபாடானவையா..!  அல்லது அனைத்தும் ஒன்றேதானா என்பதை சீடன் அறிந்துகொள்ள முடியாது....  

இவைகளை அவனுக்குப் போதித்து, அவனது அறியாமையை அழிப்பதே  ஞானம்..அஞ்ஞானம் இவைகளின் போதனைகளாகும்.. ஞானமூர்த்தியாகிய ஜீவனுக்கு ஏன் இந்த ஞானம் போதிக்கப்பட வேண்டும்..?  உபதேசம் என்பது சீடனின் சிறுத் தவறைச் சுட்டிக்காட்டி அறியாமையை அழிக்கவேயாகும்....

பாபா தொடர்ந்தார்:..  'ப்ரணிபாத' என்பது சரணாகதி...அதாவது உடலால், உள்ளத்தால், செல்வங்களுடன் சரணாகதியடைய வேண்டும்.. ஏன் கிருஷ்ணர் அர்ஜுனனை வேறு ஞானிகளைக் கேட்கும்படி கூறுகிறார்...?

நல்ல பக்தன் யாவற்றையும் வாசுதேவன் எனக் கொள்கிறான்..(கீதை அத்.7, சுலோகம் 9)

எந்த குருவும் அடியவருக்குக் கிருஷ்ணராகின்றார்... குருவானவர் சீடனை வாசுதேவனாக நினைக்கின்றார்... இவர்கள் இருவரையும் கிருஷ்ணர் தம்முடைய பிராணனும், ஆத்மாவாக்கிக் கொள்கிறார். (கீதை அத். 7, சுலோகம் 18 ஞானதேவரின் விளக்கம்)  அத்தகைய பக்தர்களும், குருவும் இருப்பதைக் கிருஷ்ணர் அறிந்திருப்பதால் அவர்களின் பெருமை உயர்ந்து திகழுதற் பொருட்டாகவும்,  அனைவரும் அறிதற்பொருட்டாகவும் அர்ஜுனனிடம் அவர்களைப்பற்றிக் கூறுகின்றார்...

🔥சீரடி பாபா , தன் ஆத்மார்த்தமான பக்தர்களாகிய, ஶ்ரீமான் பாபு சாஹேப் பூட்டியின் வாதா கட்டும் எண்ணமும்  மற்றும்  தீஷித் மற்றும் ஷாமா ஆகியோரின் கனவில் தோன்றி காட்சியளித்து,  வாதாவை கட்டுமாறு  அறிவுருத்திய பின், எவ்வாறு  வாதா என்ற சமாதி மந்திரைக் கட்டினார்கள் என்ற  நிகழ்வின் விளக்கமும், மேலும்  எவ்வாறு முரளிதரருக்காக கட்டப்பட்ட மேடையில் பாபாவின் புனித உடல்   சமாதியாக்கப்பட்டு சமாதி மந்திரானது என்பதன் அனுபவ விளக்கவுரையை இங்கு காண்போம்... 🔥  

தாம் நிறைவேற்றி முடித்தற் பொருட்டாக ஆர்வம் கொண்ட விஷயங்கள் குறித்து பாபா பேசியதோ வெற்று ஆர்ப்பரிப்பு செய்ததோ கிடையாது... ஆனால் நிதானமாக, நிச்சயமாக தீர்வுகள்  கிட்டுமாறு சூழ்நிலைகளையும், சுற்றுப்புறங்களையும் அவர் வெகு  திறமையாக அமைத்தது குறித்து மக்கள் ஆச்சரியப்பட்டனர்...  இந்தக் கருத்துக்கு  ஏற்றவாறு நடந்த  நிகழ்ச்சித் தான்  சமாதிமந்திரின் கட்டிடவேலையாகும்...

நாக்பூரைச் சேர்ந்த புகழ்பெற்ற கோடீஸ்வரரான ஸ்ரீமான் பாபு சாஹேப் பூட்டி தனது குடும்பத்துடன்  சீரடியில் வசித்து வந்தார்... அங்கு தனக்குச் சொந்தமான கட்டிடம் ஒன்று வேண்டும் என்று அவர் மனதில் எண்ணம் ஒன்று எழுந்தது....இந்த எண்ணம் கூட பாபா தோற்றுவித்தது தான் என்பது தான் சரி....  இதற்கு  சில நாட்களுக்குப் பிறகு தீஷித் வாதாவில் உறங்கிக் கொண்டிருக்கும்போது அவர் ஒரு காட்சி கண்டார்....

பாபா அவர் கனவில்தோன்றி அவருக்குச் சொந்தமான வாதா ஒன்றை கோவிலுடன் கட்டும்படி பணித்தார்.அங்கு தூங்கிக் கொண்டிருந்த ஷாமாவுக்கும்  அதே மாதிரி காட்சி தோன்றியது....பாபு சாஹேப் கண்விழித்தபோது, ஷாமா அழுதுக் கொண்டிருப்பதைப் பார்த்தார்.  ஏன் என்று அவரைக் கேட்டார் சாஹேப்...மேலும்  பாபா தம் கனவில், தமதருகில் நெருங்கிவந்து "வாதாவைக் கோவிலுடன் கட்டுவீராக..., நான் உங்களுடைய ஆசைகளைப் பூர்த்தி செய்வேன்...!" எனத் தெளிவாக ஆணையிட்டார்.  பாபாவின் இனிமையும், அன்பும் பொருந்திய மொழிகளைக் கேட்டு நான் உணர்ச்சிவசப்பட்டேன்....என் தொண்டை அடைத்தது.. எனது கண்களில் நீர் பொங்கி வழிந்தது...  நான் அழத் தொடங்கிவிட்டேன் என்றார்...    

பாபு சாஹேப் இருவரது கனவும் ஒத்திருந்ததைக் கண்டு ஆச்சயரியப்பட்டார்.. பணமும், வசதியும் பொருந்திய அவர் அங்கு ஒரு வாதா கட்டத் தீர்மானித்தார்... மாதவ்ராவுடன் கூடி ஒரு திட்டத்தை  தீட்டினார்...காகா சாஹேப் தீஷித்தும், அதை ஆமோதித்தார்....பாபாவின் முன்னர் அது சமர்ப்பிக்கப்பட்டபோது அவரும் அதை உடனே அங்கீகரித்தார்...பின்னர் கட்டிடவேலை முறைப்படி ஆரம்பமானது...  ஷாமாவின் மேற்பார்வையில் கீழ்த்தளம், உக்கிரான அறை, கிணறு முதலியன பூர்த்தியாயின.  லெண்டிக்குப் போகும்போதும் வரும்போதும், பாபாவும் சில கட்டிட    முன்னேற்றங்களுக்கான  யோசனை தெரிவித்தார்.  தொடர்ந்து மேற்படி வேலைகள்  அனைத்தும் பாபு சாஹேப் ஜோகிடம் ஒப்படைக்கப்பட்டது...அது நிறைவேறிக் கொண்டிருக்கும் போது திறந்த முற்றம் அல்லது மேடை இருக்கவேண்டும் என்றும்,  நடுவில் ஸ்ரீ முரளீதரின் உருவம் (கண்ணன் குழலுடன்) ப்ரதிஷ்டை செய்யப்பட வேண்டுமென்றும் பாபு சாஹேப் பூட்டிக்கு எண்ணம் உதித்தது.. இவ்விஷயத்தை பாபாவிடம் கூறி  பாபாவின்  சம்மதத்தைப் பெறுவதற்கு அவர் ஷாமாவைக் கேட்டுக் கொண்டார்...  பாபா வாதாவைக் கடந்து சென்றுகொண்டிருக்கும்போது ஷாமா இதைப்பற்றி அவரிடம் கேட்டார்.  ஷாமா கூறியதைக் கேட்டு பாபா சம்மதித்து "கோவிலின் வேலை முடிந்ததும் நான் அங்கு தங்குவேன்" என்றார்....

பின்னர் வாதாவை உற்றுப்பார்த்து மேலும் தொடர்ந்தார்...  "வாதா பூர்த்தியானதும் நாமே அதை உபயோகித்துக் கொள்ளலாம்..நாம் அங்கு வாழ்வோம், நடப்போம், விளையாடுவோம்,  ஒருவரையொருவர் கட்டியணைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருப்போம்".  பின்னர் ஷாமா பாபாவிடம் வாதாவின் மத்திய மண்டபத்துக்கு அஸ்திவாரம் போட இது மங்களம் நிறைந்த நேரமா   என்று கேட்டபோது பாபா சரியெனக் கூறினார்...  ஷாமா ஒரு தேங்காயை உடைத்து வேலையை ஆரம்பித்தார்...உரிய சமயத்தில் வேலை முடிவடைந்து முரளீதரின் சிலை ஒன்றுக்கும்  ஆர்டர்  கொடுக்கப்பட்டது...  ஆனால் அது தயாராகும் முன்னரே ஒரு புதிய நிகழ்ச்சி நேரலாயிற்று.. 

பாபா மிகவும் கடுமையாக நோயுற்று இயற்கை எய்தும் தருணத்தில் இருந்தார்...பாபா இயற்கை எய்தினால் தமது வாதா பாபாவின் திருவடிகளால் புனிதப்படுத்தப்பட இயலாமல்  போகும் என்றும், அவரது பணம் முழுவதும் (சுமார் ஒரு இலட்சம் ருபாய்) வீணாக்கப்பட்டுவிட்டது என்றும்,  பூட்டி நினைத்து மிகவும் வருத்தமும், மனச்சோர்வும் அடைந்தார்.  இயற்கை எய்துவதற்குச் சிறிது தருணத்துக்கு முன், "என்னை வாதாவில் வையுங்கள்" என்ற பாபாவின் மொழிகள் பாபு சாஹேபை மட்டுமல்ல, மற்ற அனைவரையுமே தேற்றின...உரிய தருணத்தில் பாபாவின் புனிதமேனி, முரளீதரருக்காகத் திட்டமிடப்பட்ட கோவிலின் மேடையில் சமாதியாக்கப்பட்டு பத்திரப்படுத்தப்பட்டது.  பாபா தாமே முரளீதரரானார்.  வாதாவும் சாயிபாபாவின் சமாதிமந்திர் (கோவில்) ஆனது...பாபாவின்  அற்புதமான வாழ்வு ஆழங்காண இயலாதது... சமாதி மந்திர் கட்டும் பணியில் ஈடுபட்ட அனைவரும் பாபு சாஹேப் பூட்டி, தீஷித், ஷாமா மற்றும்   கட்டிட நிபுணர்கள் போன்றோர்  அனைவரும்  ஆசீர்வதிக்கப்பட்டவர்...  அதிர்ஷ்டம் உள்ளவர்... வாதாவில் பாபாவின் புனிதமான  புனித தேகம் சமாதியாக்கப்பட்டு சமாதி மந்திராக அழைக்கப்பட்டது ..

ஓம் ஶ்ரீ சாய்ராம்..🙏🏼🙏🏼

ஸ்ரீ சாயீயைப் பணிக ..அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்...🙏🏼🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுயவிழிப்புணர்வு தியான பீடம்...🙏🏼🙏🏼🙏

வியாழன், ஜூன் 17, 2021

ஶ்ரீ சீரடிபாபாவின் சாய்சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாயத்தின் வெளியீடு..அத்தியாயம் முப்பத்தெட்டு(38)

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள  இன்றைய அத்தியாய வெளியீடு....🙏🏼🙏🏼🙏🏼 

🙏ஶ்ரீசாய் சத்சரித்திரம்🙏

🙏 அத்தியாயம் ::முப்பத்தெட்டு(38)🙏

 🔥முதலில் புனித வேத நூலான ஶ்ரீசாய்  சத்சரித்திரம்  பாராயணம் செய்வதன்  முக்கியத்துவமும், பெறப்போகும்  நன்மைகள்  என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் புனித வேத நூல் என்பது சாய் சத்சரித்திரம் என்பதாகும்...இதில் ஶ்ரீசீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத  எழுத்திலும் வியாப்பித்து படர்ந்து இருக்கின்றது...

ஶ்ரீசாய்  சத்சரிதத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல், மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய்சத்சரித்திரம் செயல்படுகின்றது..ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து சாய் சத்சரித்திரத்தில்  இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்.....

இவ்வாறாக நாம் அனைவரும் சாய்  சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும்  அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்...ஆகவே சாய் சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்...நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக..🙏

🔥குறிப்பு : சாய் சத்சரித்திர வேதப்  பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥

தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்.. மேலும் அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரியத் தன்மையை அடையலாம்...இவ்வேத பாராயணத்தின் மூலமாக  ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரியத் தன்மையை  அடையும் நிலையைப்  பெறலாம்...மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம்,நேர்மை, மனிதநேயம் போன்ற  இறைப்  பண்புகளைப்  பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுப் பெறவும்  இந்த சாய் சத்சரித்திர  வேதப் பாராயணம் துணைப்புரிகின்றது...

மேலும் இப்பாராயணத்தின் மூலம் மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில் வெற்றி வாகை சூடலாம்...அவரவர்கள்  விரும்பி வேண்டியது கிடைக்கப் பெறும்...சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்...மேலும் அனைத்து விதமான  கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி  பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும்  ஒருசேரப்பெறலாம்..🙏

 🙏அத்தியாயம் முப்பத்தெட்டு(38)🙏

🙏முன்னுரை..🙏

சத்குருநாதர் சீரடி பாபாவின், திருவடிகளை சரணாகதியடைந்து வணங்கிப் போற்றுதலைப் பற்றிய உரை....

சீரடி பாபா அன்னதானம் வழங்குவதன் முக்கியத்துவத்தையும், அதன்  சிறப்பையும், நற்பலன்களையும்  உலகத்தினருக்கு எடுத்துக்கூறி, அதற்கு எடுத்துக்காட்டாக தன் கரங்களினாலேயே  ஹண்டி என்ற பெரியப் பாத்திரத்தில் அன்னத்தைச்  சமைத்து, மிகுந்த தாய்மையுணர்வுடன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு  எவ்வாறு  அன்னதானம் வழங்கினார் என்பதைப் பற்றிய அனுபவ விளக்கவுரை....

குருபக்திக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த தாதா கேல்கரிடம், பாபா  தன்மீது வைத்திருந்த குருபக்தியை சோதிக்கும் விதமாக  என்ன  வாக்குருதிகளை  நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார் என்பதைப்  பற்றிய  அனுபவ விளக்கவுரை..

தன் பக்தர்கள் பேதமின்றி, பிற உயிர்களை நேசிக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக,  தன்னை எந்த  இனம்  மற்றும் மதம் சார்ந்த  எவ்வித ஒப்பிடுதலும், அடையாளமும்  இல்லாமல், எவ்வாறு   சாட்சியாக  வாழ்ந்தார் என்பதைப் பற்றி அனுபவ விளக்கவுரை..

எம்மதமும் சம்மதம் என்று போதித்து, அனைத்து மதம் சார்ந்த பண்டிகைகளையும் ஒருசேர நடத்தி, அதனை நிரூபிக்கும் வகையில், தன்னை தரிசனம் செய்ய வந்து  நானா சாஹேப் என்ற ஆத்மார்த்தமான பக்தரிடம் ,  எவ்வாறு அவர் தரசிக்காமல்  வந்த தெய்வத்தைப் பற்றி சூட்சமமாக உணர்த்தி உபதேசம் செய்ததைப் பற்றிய அனுபவ உரை..

பக்தர்களுடைய அனைத்து நிவேதனமும் ஒன்றாக கலந்து கதம்பக் கூட்டாக சேர்த்து, எவ்வாறு  பாபாவின் ஆசியால் புனிதமாக்கப்பட்டு  பிரசாதமாக வழங்கப்பட்டது என்பதன் அனுபவ உரை...  

பாபாவின் திருக்கரத்தால்  வழங்கப்பட்ட மோரை குடித்து மகிழ்ந்த ஹேமாட்பந்த்,  புனித வேதமான ஶ்ரீசாய்  சத்சரித்திரத்தை இயற்றி பக்தர்கள் அனைவரும் கடைத்தேற்றம் அடைய காரணமாக இருந்தார் என்பதை  உணர்வதற்கான சிறிய குறிப்புரை... 

மேற்க்கண்ட தலைப்புக்களின் விளக்கவுரைகளைப் பற்றி ஒவ்வொன்றாகக் கீழே காண்போம்...

🔥 முதலில் சத்குருநாதர் சீரடி பாபாவின், திருவடிகளை சரணாகதியடைந்து வணங்கிப் போற்றுதலைப் பற்றிய உரை....🔥

ஓ..! புனிதமான சத்குரு சாயீநாதரே உங்களின் பாதக் கமலத்தில் வீழ்ந்து பணிந்து  சரணாகதி அடைகின்றோம்..சித்தர்கள்  அனைவருக்கும் அதிபதியாக விளங்கும் சித்தாஸ்ரமரே உன்னை பணிந்து வணங்குகின்றோம்.. உலகமனைத்துக்கும் மகிழ்ச்சியை நல்கி அடியவர்களின் நலன்களை நிறைவேற்றி தங்களின் திருவடிகளைச் சரணடைந்தவர்களின்  பேரிடர்களைப் போக்குபவருமான தங்களை சிரம் தாழ்த்தி  கரம் குவித்து  வணங்குகின்றோம்.. மிகுந்த தாராள குணமுடையவராகவும், தங்களைச் சரணடைவோர்களின் பாதுகாவலராகவும், ரட்சகராகவும் விளங்கும் தாங்கள், மக்களுக்காக இரங்கி அவர்களுக்கு நன்மை செய்யவே அவதரித்திருக்கிறீர்கள்...

தூய ஆன்மாவின் சாராம்சமான சாறு, பிரம்மாவின் அச்சில் ஊற்றப்பட்டு, இதிலிருந்து ஞானிகளுக்குள் எல்லாம் மணிமகுடமாக  சாயீ  அவதரித்து விளங்குகின்றார்.. இந்த சாயீநாதர் ஆத்மராமனே ஆவார்...தூய தெய்வீகப் பேரின்பத்தின் இருப்பிடமாக இருக்கின்றார்... வாழ்க்கையின் அனைத்துக் குறிக்கோளையும்  தாமே அவர் எய்தியதோடு நில்லாது, தமது அடியவர்களைப் பற்றற்றவர்களாகவும், சுதந்திரமானவர்களாகவும் ஆக்கினார்.. எதிலும் பற்றில்லாமல் சாட்சியாக வாழ்ந்து தம் பக்தர்கள் அனைவருக்கும் பாடசாலையாக தன்னை உருமாற்றிக்கொண்டு, தன் இயல்நிலை வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்.. எம்மதமும்  சம்மதம் என்ற போதனையை போதித்தது மட்டுமில்லாமல், தானும் அவ்வாறே வாழ்ந்து, அனைத்து மனித உயிர்களையும் பேதமின்றி  தாய்மையுணர்வுடன் நடத்தினார்.... 

🔥சீரடி பாபா அன்னதானம் வழங்குவதன் சிறப்பையும், நற்பலன்களையும்   உலகத்தினருக்கு  எடுத்துக்கூறி , அதற்கு எடுத்துக்காட்டாக தன் கரங்களினாலேயே  ஹண்டி என்ற பெரியப் பாத்திரத்தில் அன்னத்தைச்  சமைத்து, மிகுந்த தாய்மையுணர்வுடன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு  எவ்வாறு  அன்னதானம் வழங்கினார் என்பதைப் பற்றிய அனுபவ விளக்கவுரை.🔥.

நமது சாஸ்திரங்களில், வெவ்வேறு காலங்களுக்கு வெவ்வேறு சாதனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. 

தவம்...கிருதயுகத்துக்கும்,

ஞானம்...திரேதாயுகத்துக்கும்,

யக்ஞம்... த்வாபரயுகத்துக்கும்,

தானம்.. கலியுகத்துக்கும்  

சிபாரிசு செய்யப்பட்டிருக்கின்றன...  தானங்கள் அனைவற்றிலும் அன்னதானமே சிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.. மத்தியான நேரத்தில் நமக்கு உணவு கிடைக்காதபோது நாம் மிகவும் குழப்பமடைகின்றோம்..அதைப்போன்ற சூழ்நிலைகளில் மற்ற ஜீவராசிகளும் அங்ஙனமே உணர்கின்றன.  இதையறிந்து எளியவர்களுக்கும், பசியால் வாடுபவர்களுக்கும்  உணவளிப்பவரே மிகச்சிறந்த கொடையாளி..அல்லது தர்மவான்... "உணவே பிரம்மம்  எனப்படுகின்றது... உணவிலிருந்தே எல்லா உயிர்களும் பிறக்கின்றன.பிறந்த பின்னும், உணவாலேயே உயிர் வாழ்கின்றன...அழிந்த பின்னும் உணவின் உள்ளேதான் மீண்டும் உட்செல்லுகின்றன" என்கிறது தைத்திரீய உபநிஷதம்...

விருந்தாளி ஒருவர் நம் இல்லத்திற்கு  வர நேர்ந்தால் அவருக்கு  உணவளித்து வரவேற்று உபசரிப்பது   ஒரு  சிறந்த கடமையாகக் கருதப்படுகின்றது... செல்வம், சொத்து, உடை முதலான மற்றவித தானங்கள் செய்வதற்கு  விவேகம் தேவைப்படுகின்றது...  ஆனால் உணவின் விஷயத்தில் அத்தகைய யோசனைகள்  எதுவும் தேவையில்லை... மத்தியான நேரத்தில் யார் வேண்டுமானாலும் நமது இல்லத்திற்கு  வரட்டும்.  நம்மால் முடிந்தளவு அவர்களுக்கு  உணவு அளிக்கப்பட வேண்டும்...அதிலும் முடவர்கள், சரியாக நடக்க முடியாதவர்கள், குருடர்கள், வியாதியஸ்தர்களான ஆண்டிகள், முதலியோருக்கு முதலில் உணவு அளிக்கப்பட வேண்டும்...முதலில் குறிப்பிட்டோருக்கு உணவளிப்பதால் உண்டாகும் புண்ணியம் பின்னால் குறிப்பிட்டவர்களுக்கு அளிப்பதைவிட மிகவும் சிறப்பானது.... தானத்தில் அன்னதானமே சிறந்தது...

அன்னதானம் இல்லாத மற்ற தானங்களெல்லாம், நிலவற்ற நஷத்திரங்கள் போன்றும், பதக்கமற்ற அட்டிகை போன்றும், முடிமணி அற்ற கிரீடம் போன்றும், தாமரையற்ற குளத்தைப் போன்றும், பக்தியற்ற பஜனையைப் போன்றும், குங்குமமற்ற சுமங்கலியைப் போன்றும், இனிமையான சாரீரமில்லாத பாடலைப் போன்றும், உப்பற்ற தயிரைப் போன்றே  இருக்கின்றது...வரண் என்கின்ற பருப்பு சூப்  மற்ற  பதார்த்தங்களையும் விடச் சிறந்திருப்பதைப் போன்று, மற்ற அனைத்து  புண்ணியங்களையும் விட அன்னதானமே  சிறந்திருக்கின்றது.  இப்போது பாபா எங்ஙனம் தானே உணவு சமைத்து, அதை  தன்னுடைய புனிதக் கரங்களினால்  வினியோகித்தார் என்பதைக் காண்போம்....

பாபாவுக்காக சிறிதளவே  உணவு தேவைப்பட்டது என்றும், அவருக்குத் தேவையானதும் சில வீடுகளில்    பிக்ஷையெடுத்துப் பெறப்பட்டது என்பதும், முன்பே எடுத்துக் கூறினோம்...ஆயின் அனைவருக்கும் உணவளிக்க வேண்டுமென்று பகவான்  தீர்மானித்ததால், பாபா தானாக அனைத்து  ஏற்பாடுகளையும் செய்கின்றார்... இந்த விஷயத்தில் பாபா  யாரையும்  சார்ந்திருக்கவோ, தொல்லைப்படுத்தவோ இல்லை...முதலில் கடைவீதிக்குச் சென்று சமைப்பதற்குத் தேவையான  அனைத்து  பொருட்கள்  எல்லாவற்றையும் பணம் கொடுத்து வாங்குகிறார்..  கோதுமை அரைத்தலையும் தாமே செய்கின்றார்...

மசூதிக்கு முன்னாலுள்ள திறந்தவெளியில், ஒரு பெரிய அடுப்பை வைத்து நெருப்பை மூட்டி அதற்குமேல் ஹண்டி என்னும் ஒரு பாத்திரத்தை சரியான அளவு தண்ணீர் ஊற்றி வைக்கின்றார்..இரண்டு விதமான ஹண்டிகள் இருந்தன...  ஒன்று சிறியது..  மற்றொன்று பெரியது.. சிறியப் பாத்திரத்தில்  ஐம்பது  பேருக்கு உணவளிக்க ஏற்றது..பெறியதில் நூறுப்  பேருக்கான உணவை தயார் செய்யலாம்..சில சமயம் பாபா மிட்டா சாவல் என்னும் சர்க்கரைப் பொங்கலைச் சமைத்தார்...  மற்றும் சில சமயங்களில் அனைத்து கலந்த புலவு என்ற உணவை   மாமிசத்துடன் சமைத்தார்...  சில சமயங்களில் கொதித்துக் கொண்டிருக்கும் வரண் என்னும் சூப்பில், கோதுமை மாவை சிறு உருண்டைகளாகவோ, அல்லது தட்டையான ரொட்டிகளாகவோ செய்து மிதக்கவிட்டார்...வாசனைப் பொருட்களை அம்மியில் வைத்து இடித்துத் தூளை சமையல் பாத்திரத்தில் போட்டார்...  உணவை மிகவும் சுவையானதாக்க அவர் எல்லாச் சிரமங்களையும் எடுத்துக்கொண்டார்...  ஜவ்வாரி (கேழ்வரகு) மாவைத் தண்ணீருடன் கொதிக்கவிட்டு அதைத் தயிருடன் கலந்து அம்பீல் (கூழ்) தயார் செய்தார்...  உணவுடன் இந்த அம்பீலை ஒரே மாதிரியாக விநியோகித்தார்... உணவு ஒழுங்காக வேகிறதா என்பதைச் சரிபார்க்க பாபா தனது கஃப்னியின் கைகளை மேலே சுருட்டிவிட்டுக் கொண்டு, தனது வெறும் கையைக் கொதிக்கும் பாத்திரத்தில் துளியும் பயமின்றி விட்டுக் கொதிக்கும் கலவையை நன்றாக மேலும் கீழும், பக்கங்களிலும் கலக்கிவிடுகிறார்.

கை வெந்ததற்கான எந்த அடையாளத்தையோ, முகத்தில் பயத்தின் எவ்விதச் சாயலையோ காணமுடிவதில்லை...சமையல் முடிந்ததும், பாத்திரங்களை மசூதிக்குக் கொண்டுவந்து உரியமுறையில் மௌல்வியைக்கொண்டு புனிதமாக்கினார்...முதல் உணவின் ஒரு பகுதியை மகல்சாபதிக்கும், தாத்யா பாடீலுக்கும் அனுப்பிவிட்டு மிச்சத்தை எல்லா ஏழை எளியவர்களுக்கும், திக்கற்றவர்களுக்கும் அவர்கள் உளம் நிறையும் வண்ணம் தமது கரங்களினால்  பரிமாறினார்... பாபா தாமே சமைத்த உணவை, தமது கரங்களினால்  பரிமாறிய உணவை உட்கொண்டவர்கள் நிச்சயமாக ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.. அதிர்ஷ்டசாலிகள்.. இத்தருணத்தில் ஒரு சிலர் சந்தேகத்துடன் ஆராயலாம்.. பாபா காய்கறிகளையும், அசைவ உணவையும் பிரசாதமாக தமது அடியவர்களுக்கு ஒரே மாதிரியாகவா வழங்கினார்?  விடை வெளிப்படையானதும், எளிதானதுமாகும்...  அசைவ உணவை  உண்பவர்களுக்கு  ஹண்டியிலிருந்து பிரசாதமாக உணவு வழங்கப்பட்டது...அசைவ உணவு  சாப்பிடும்   பழக்கமில்லாதவர்கள், எவரையும்  அதைத்தொட அனுமதிப்பதில்லை.  இவ்வுணவை விசேஷமாக அனுசரிக்க அவர் அவர்களிடம் எவ்வித விருப்பத்தையோ, ஆவலையோ  தூண்டிவிட்டதில்லை..

🔥குருபக்திக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த தாதா கேல்கரிடம், பாபா  தன்மீது வைத்திருந்த குருபக்தியை சோதிக்கும் விதமாக , என்ன  வாக்குருதிகளை  நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார் என்பதைப்  பற்றிய  அனுபவ விளக்கவுரை..🔥

குருவே பிரசாதமாக எதையாவது அளிக்கும்போது, அது ஏற்றுக்கொள்ளத்தக்கதா, இல்லையா என்று எண்ணுபவன் நரகத்தை அடைகின்றான் என்னும் ஒரு கொள்கை நன்றாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது.. இந்தக் கொள்கையை எந்த ஒரு சீடனும் எவ்விதம் மனதில் ஏற்றுக் கொண்டிருக்கிறான் என்பதை அறிய சில நேரங்களில் பாபா சோதனைகள் நடத்துவார்...  உதாரணமாக பாபா ஒரு ஏகாதசி தினத்தன்று தாதா கேல்கரிடம் சில ரூபாய்கள் கொடுத்து, அவரையே நேராக கொரலாவுக்குச் சென்று அங்கிருந்து மாமிசம் வாங்கிவரும்படி கூறினார்...இந்த தாதா கேல்கர் ஒரு வைதீக பிராமணர்...எல்லா வைதீகச் சம்பிரதாயங்களையும் வாழ்க்கையில் அனுசரித்தவர்.. செல்வம், தானியங்கள், உடை முதலியவைகளை சத்குருவிற்குச் சமர்ப்பிப்பதெல்லாம் போதாதென்றும், முழுநிறை நம்பிக்கையுடன்  கீழ்ப்படிதலும்,குருவின்  உத்தரவுகளை சரி நுட்பமாக நிறைவேற்றுதலுமே, சத்குருவை  மிகவும் மகிழ்விக்கும் உண்மையான தக்ஷிணையாகும் என்பதை தாதா கேல்கர் அறிவார். 

எனவே தாதா கேல்கர் உடைகளை உடுத்திக் கொண்டு அவ்விடத்திற்குப்  புறப்பட்டார்...பிறகு பாபா அவரைக் கூப்பிட்டு "நீயே போகாதே... யாரையாவது அனுப்பு" என்று கூறினார்...  இதன் பேரில் தாதா, தமது வேலையாள் பாண்டுவை இதற்காக அனுப்பினார்...  பாபா அவரையும் திரும்பி வருமாறு கூறி, அதையும் ரத்து செய்துவிட்டார்... மற்றொரு சந்தர்ப்பத்தின்போது 'புலவ்' என்னும் மாமிசக்கறியில் உப்பு சரியாக இருக்கிறதா என்பதைச் சற்று சுவைத்துப் பார்க்கும்படி பாபா தாதாவைக் கேட்டார்.  பின்னர் சாதாரணமாகவும், முறைக்காகவும் அது சரியாக இருக்கின்றது என்று கூறினார்...அதற்கு பாபா, நீ அதைக் கண்ணால் பார்த்ததோ, நாவால் சுவைத்ததோ கிடையாது...பின்னர் அது சுவையாய் இருக்கிறது என்று எப்படி உன்னால் உரைக்கமுடியும்...பாத்திரத்தின் மூடியைத் திறந்து பார் என்று கூறிக்கொண்டே,  பாபா அவரது கையைப் பிடித்து பானைக்குள் அழுத்தி, "கையை முன்னால் நீட்டி கரண்டியை எடுத்து, வைதீகத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பதறாமல், கொஞ்சம் எடுத்து சாப்பாட்டில் போட்டுக்கொள்" என்றார்.

தாய்க்கு குழந்தையிடம் ஒரு உண்மையான அன்பின் அலை தோன்றும்போது, அதைக் கிள்ளிவிட்டு அழத் தொடங்கியதும் தன் மார்போடு அணைத்துக் கொள்கிறாள்... அவ்வாறே பாபா உண்மையான தாய் என்ற முறையில் தாதா கேல்கரை இவ்விதமாகக் கிள்ளிவிட்டார்.  உண்மையில் எந்த ஞானியோ அல்லது குருவோ தடுக்கப்பட்ட உணவைத் தமது வைதீகச் சீடனை உண்ணும்படி வற்புறுத்தி அதன்மூலம் தம்மை கீழ்மைப்படுத்திக் கொள்ளமாட்டார்...இந்த ஹண்டி விவகாரம் 1910ஆம் ஆண்டுவரை சிலகாலம் நடந்தது... பிறகு நின்றுவிட்டது...முன்னரே கூறியதைப் போன்று தாஸ்கணு என்பவர், பாபாவின் புகழை பம்பாய் மாகாணமெங்கிலும் தம் கீர்த்தனைகளால்  பரப்பினார்... அப்பகுதியிலிருந்து சீரடிக்கு மக்கள் திரளாக வந்து கூடத்தொடங்கினர்.. சீரடி சில நாட்களுக்குள்ளாகவே ஒரு புனித ஷேத்திரம் ஆகிவிட்டது...பக்தர்கள் வெகுமதி அளிப்பதற்காக பல்வேறு பொருட்களைக் கொணர்ந்தனர்... வெவ்வேறு உணவு வகைகளை நிவேதனமாகச்  சமர்ப்பித்தனர்...அவர்கள் அவ்வாறு அளித்த உணவுப் பொருட்கள் அனைத்தையும் பக்கிரிகளும், ஆண்டிகளும் வயிறு புடைக்க உண்டுவிட்டப் பின்பும்  மீதி இருக்கும் அளவு இருந்தது...மேலும் உள்ளூரில் இருந்த கோவில்களின் மீதும், தெய்வங்களின் மீதும் பாபாவுக்கு எத்தகைய மரியாதையும், ஆர்வமும் இருந்தது என்பதை விளக்கும் நானா சாஹேப் சாந்தோர்கரின் அனுபவ உரையை கீழே காண்போம்.. 

🔥தன் பக்தர்கள் பேதமின்றி, பிற உயிர்களை நேசிக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக,  தன்னை எந்த  இனம்  மற்றும் மதம் சார்ந்த  எவ்வித ஒப்பிடுதலும், அடையாளமும்  இல்லாமல், எவ்வாறு   சாட்சியாக  வாழ்ந்தார் என்பதைப் பற்றி அனுபவ விளக்கவுரை இங்கே...🔥

சிலர் தங்களுக்கே உரியமுறையில் அனுமானித்துக் கொண்டும், யூகித்துக் கொண்டும் சாயீ ஒரு பிராமணர் என்றும், சிலர் அவர் ஒரு முகம்மதியர் என்றும் கூறினர்...  உண்மையில் அவர் எந்த ஜாதியையும் சேர்ந்தவர் அல்ல...எப்போது எந்த சாதியில் பிறந்தார் என்பதையும், மேலும் அவரது இனம், மொழி,மதம்  பெற்றோர் யார் என்பதையும் ஒருவரும் நிச்சயமாக அறிந்திருக்கவில்லை.

முன்பே அத்தியாயம் ஏழில்  உள்ள பாபாவின் சொந்த கூற்றுப்படி, அவர் பிராமணர் என்றாலும் பரமாத்மாவிடம் தன்னை முழுவதும் சரணாகதிசெய்து, அகங்காரத்தையும், தேகம் மற்றும்  உணர்வின் மீதுள்ள பற்றுக்களை  ஒழித்து, பரமாத்மாவுடன்  ஒன்றிவிடுபவனுக்கு ஜாதி, தேசம், மொழி,  இனம்,  என்னும் கேள்விகள் குறித்துக் கருத்திற்கொள்வதற்கு ஏதுமில்லை...பின்னர் அவர் எவ்வாறு  ஒரு பிராமணராகவோ, முகம்மதியராகவோ இருக்கமுடியும்?  அவர் ஒரு முகம்மதியர் என்றால், மசூதியில் அணையாமல் எப்போதும் துனியை   எப்பொழுதும்  எவ்வாறு  எரியவைத்துக் கொண்டிருக்க முடியும்?  மேலும் மசூதியில்  துளசி பிருந்தாவனம்  எவ்வாறு இருக்க முடியும்..?சங்கோசை, மணி ஓசை, இன்னிசைக்கருவிகள் ஆகியவைகளை அனுமதிக்க முடியும்..?  மேலும் பாபா  இந்து வழிப்பாட்டு முறைகளின் அனைத்து  சாஸ்த்திர சம்பிராதயங்களையும், அம்சம்களையும் எங்ஙனம்  நடத்தியிருக்க  முடியும்..?  அவர் ஒரு முகம்மதியராக இருந்தால், அவர் காதுகள் குத்தப்பட்டிருக்குமா..?  ஹிந்து கோவில்களைச் செப்பனிடத் தம் கையில் இருந்த பணத்தை அவர் செலவு செய்திருக்க முடியுமா..?  மாறுபாடாக ஹிந்து கோவில்களையும், தெய்வங்களையும் மதியாமல் இருப்பதை அவர் சிறிதும் சகிப்பதில்லை...

🔥எம்மதமும் சம்மதம் என்று போதித்து, அனைத்து மதம் சார்ந்த பண்டிகைகளையும் ஒருசேர நடத்தி, அதனை நிரூபிக்கும் வகையில், தன்னை தரிசனம் செய்ய வந்து  நானா சாஹேப் என்ற ஆத்மார்த்தமான பக்தரிடம் ,  எவ்வாறு அவர் தரசிக்காமல்  வந்த தெய்வத்தைப் பற்றி சூட்சமமாக உணர்த்தி உபதேசம் செய்ததைப் பற்றிய அனுபவ உரை..🔥.

ஒருமுறை நானா சாஹேப் சாந்தோர்கர் பினிவாலே என்ற தனது ஷட்டகருடன் சீரடிக்கு வருகைப் புரிந்தார்...அவர்கள் மசூதிக்குச் சென்று பாபாவின் முன்னால் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது பாபா திடீரென்று நானா சாஹேபின் மீது கோபம் அடைந்தார்...  "நீ இவ்வளவு காலம் எனது கூட்டுறவில் இருக்கிறாய்...எங்ஙனம் நீ இவ்விதம் நடந்துக் கொள்கிறாய்..?" என்று சாஹேப்பிடம்   கேட்டார்... முதலில் நானா சாஹேப்பிற்கு ஒன்றும் புரியவில்லை... தாழ்மையுடன் விளக்கும்படி கேட்டுக்கொண்டார்... பாபா அவரை கோபர்காவன் எப்போது வந்தாரென்றும், அங்கிருந்து  சீரடிக்கு எங்ஙனம் வந்தாரென்பதையும்  கேட்டார்...உடனே நானா சாஹேப் தன் தவறைப் புரிந்துக் கொண்டார்...அ வர் சீரடிக்கு வரும்போதெல்லாம் கோபர்காவனில் இருக்கின்ற  கோதாவரிக் கரையிலுள்ள தத்தரின் கோவிலை வழிபட்டு வருவது வழக்கம்...  ஆனால் இம்முறை தத்தரின் பக்தரான தனது உறவினரையும், அக்கோவிலுக்குப் போகாமல் தடுத்து, தாமதத்தைத் தவிர்க்கும் பொருட்டு சீரடிக்கு நேரடியாக வந்துவிட்டார்.  இக்குற்றத்தை எல்லாம் அவர் பாபாவிடம் ஒப்புக்கொண்டு, கோதாவரியில் குளித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பெரியமுள் அவர் பாதத்தில் குத்தி விட்டதனால், அது அவருக்கு மிகுதியான தொல்லையைக் கொடுத்தது என்று கூறினார்.  பாபா அது அவருக்கு லேசான தண்டனை என்று கூறி எதிகாலத்தில் மிகவும்  விழிப்புணர்வுடன்  இருக்கும்படி கூறினார்.

🔥பக்தர்களுடைய அனைத்து நிவேதனமும் ஒன்றாக கலந்து கதம்பக் கூட்டாக சேர்த்து, எவ்வாறு  பாபாவின் ஆசியால் புனிதமாக்கப்பட்டு  பிரசாதமாக வழங்கப்பட்டது என்பதன் அனுபவ உரை.🔥 

நிவேதனம் பக்தர்களுக்கு  வினியோகிக்கப்படும் நிகழ்விற்குத்  திரும்புவோம்...ஆரத்தி நிகழ்ச்சி முடிந்த பின்னர்  பாபா, அனைவருக்கும்  உதியை வழங்கி,  ஆசீர்வாதம் செய்து அனைவரையும்  அனுப்பிய பிறகு, உள்ளே சென்று, நிம்பாரில் தமது முதுகைச் சாய்த்துக் கொண்டு இரண்டு வரிசையுள்ள பந்தியுடன் அமர்ந்திருப்பார்... நிவேதனம் கொண்டு வந்த பக்தர்கள் பூரி, மாண்டி, போளி, பாஸந்தி, சன்ஸா, சோறு முதலியவை உள்ள தங்களது உணவுப் பதார்த்தங்களை ஆவலுடன்  உள்ளே அனுப்புவார்கள்.

பாபாவினால் புனிதமாக்கப்பட்ட உணவின் பிரசாதத்திற்காக வெளியே காத்துக் கொண்டிருப்பார்கள்...எல்லா உணவுகளும் கதம்பக் கூட்டாகக் கலக்கப்பட்டு பாபாவின் முன் வைக்கப்படும்....அதை அவர் கடவுளுக்குச் சமர்ப்பித்து புனிதப்படுத்துவார்...பாபாவின் கரங்களினால் ஆசிர்வதிக்கப்பட்ட கதம்ப உணவை,  வெளியில் காத்துக்கொண்டிருக்கும் நபர்களுக்கு அளிக்கப்பட்டு, மீதம் உள்ளே பாபா நடுநாயகமாக அமர்ந்திருக்கும் மக்களுக்குப் பரிமாறப்படும்...இரண்டு வரிசையில் அமர்ந்திருக்கும் பக்தர்களும் வயிறார உண்பார்கள்.. புனிதமாக்கப்பட்ட உணவை உள்ளே அமர்ந்திருக்கும் அனைவருக்கும், ஒவ்வொருவரின் தேவையை அறிந்து  கவனித்துப் பரிமாறும்படி நானா சாஹேப் நிமொண்கரையும், ஷாமாவையும் பாபா தினந்தோறும் கேட்டுக்கொள்வார்...அவர்கள் இதை மிகவும் ஜாக்கிரதையாகவும், பிரியத்துடனும் செய்வார்கள்....இவ்வாறு அளிக்கப்பட்ட ஒவ்வொரு கவள உணவும் அடியவர்களுக்குப் போஷாக்கையும், திருப்தியையும் தந்தது.  எத்தகைய இனிமையான, விருப்பமான, புனிதமாக்கப்பட்ட உணவு அது..!  எப்போதும் புனிதமானது, தெய்வீகமானது. 

🔥பாபாவின் திருக்கரத்தால்  வழங்கப்பட்ட மோரை  குடித்து மகிழ்ந்த ஹேமாட்பந்த்,  புனித வேதமான ஶ்ரீசாய்  சத்சரித்திரத்தை இயற்றி பக்தர்கள் அனைவரும் கடைத்தேற்றம் அடைய காரணமாக இருந்தார் என்பதை  உணர்வதற்கான சிறிய குறிப்புரை..🔥. 

ஒருமுறை  மதியம் நேர உணவருந்தும்  நேரத்தின்  போது, ஹேமாட்பந்த் வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டார்.. அப்போது பாபா அவருக்கு ஒரு கிண்ணத்தில் மோர் வழங்கினார்..அதன் வெள்ளையான தோற்றம் அவரை மகிழ்வித்தது... ஆனால் வயிற்றில் அதற்கு இடம் இருக்காது என்று அஞ்சி  லேசாக மோரை அருந்தினார்..மிகவும் சுவையாக இருந்தது.. ஆனால் அவரது தடுமாறும் எண்ணத்தைப் புரிந்துக் கொண்ட பாபா, "எல்லாவற்றையும் குடித்துவிடு.... இனிமேல் இம்மாதிரி வாய்ப்பு உனக்குக் கிடைக்காது" என்று கூறினார்...  அப்போது ஹேமாட்பந்த் அதை முழுக்கவும் பருகினார்... பாபாவின் கூற்று  தீர்க்க தரிசனமானது என்று பின்னாளில் உணர்ந்துக் கொண்டார்..ஏனெனில் பாபா அதன் பிறகு விரைவில்  மகாசமாதியடைந்தார்...

இப்போது பக்தர்கள் அனைவரும்  ஹேமாட்பந்திற்கு  நன்றி செலுத்த வேண்டும்.. அவர் பாபா வழங்கிய  மோரை அருந்தினார்... அதனால்  பாபாவின் லீலைகள் என்ற ரூபத்தில் வேண்டிய அளவு சாய்சரித்திரம்  என்கின்ற  அமிர்தத்தை நமக்கு வழங்கினார்.. ஆகவே ஹேமாட்பந்த் நமக்கு வழங்குகின்ற சாய்சரித்திரம் என்ற புனித வேத  அமிர்தத்தை நாம் அனைவரும்  பாராயணம் செய்வோம். அதனால்  திருப்தியடைந்து மகிழ்வோம்... உயரிய நிலையை அடைவோம். பாபாவின் பாதக் கமலத்தில் ஆத்மார்த்தமாக சரணாகதி அடைவோம்....

ஓம் ஶ்ரீ சாய்ராம்..🙏🏼🙏🏼

ஸ்ரீ சாயீயைப் பணிக.. அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்...🙏🏼🙏🏼

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏼🙏🏼🙏

புதன், ஜூன் 16, 2021

ஶ்ரீ சீரடிபாபாவின் சாய்சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாயத்தின் வெளியீடு..அத்தியாயம் முப்பத்தேழு(37)

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள  இன்றைய  அத்தியாய வெளியீடு...🙏🏼🙏🏼🙏🏼

🙏ஶ்ரீசாய்  சத்சரித்திரம்🙏

🙏 அத்தியாயம் :: முப்பத்தேழு(37)🙏

  🔥முதலில் புனித வேத நூலான ஶ்ரீசாய்  சத்சரித்திரம்  பாராயணம் செய்வதன்  முக்கியத்துவமும், பெறப்போகும்  நன்மைகள் என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் புனித வேத நூல் என்பது சாய் சத்சரித்திரம் என்பதாகும்...இதில் ஶ்ரீசீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத  எழுத்திலும் வியாப்பித்து  படர்ந்து இருக்கின்றது...

ஶ்ரீசாய்  சத்சரிதத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல், மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய்சத்சரித்திரம் செயல்படுகின்றது..

ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து சாய் சத்சரித்திரத்தில்  இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்.....

இவ்வாறாக நாம் அனைவரும் சாய்  சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும்  அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்..ஆகவே சாய் சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்... நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக..🙏

🔥குறிப்பு..சாய் சத்சரித்திர வேதப்  பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥

தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்.. மேலும் அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரியத் தன்மையை அடையலாம்....இவ்வேத பாராயணத்தின் மூலமாக  ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரியத் தன்மையை  அடையும் நிலையைப்  பெறலாம்...

மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம்,நேர்மை, மனிதநேயம் போன்ற  இறைப்  பண்புகளைப்  பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுப் பெறவும்  இந்த சாய் சத்சரித்திர  வேதப் பாராயணம் துணைப்புரிகின்றது...

மேலும் இப்பாராயணத்தின் மூலம்   மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில்  வெற்றி வாகை சூடலாம்... அவரவர்கள்  விரும்பி வேண்டியது கிடைக்கப் பெறும்...சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்...மேலும் அனைத்து விதமான  கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி  பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும்  ஒருசேரப்பெறலாம்..🙏

🙏அத்தியாயம் ::முப்பத்தேழு(37)🙏

🙏முன்னுரை..🙏

சத்குருநாதர் சீரடி பாபா, தன்  இயல்  நடைமுறை வாழ்க்கையில் எவ்வாறு தன்னை வெளிப்படுத்திக் கொண்டு சாட்சியாக வாழ்ந்தார் என்பதைப் பற்றிய மூல சூட்சம விளக்கவுரை..

சாவடி ஊர்வலத்தின் போது  நடைபெறுகின்ற  முக்கிய நிகழ்வுகளைப்  பற்றிய விளக்கமும்,  சாவடி ஊர்வலத்தின் போது பக்தர்கள்,  எவ்வாறு பாபாவை  அலங்கரித்து, ஆராதனை செய்து  ஆசிப்பெற்று  மகிழ்ந்தனர் என்பதுப் பற்றி அனுபவ விளக்கவுரை...

மேற்க்கண்ட தலைப்புக்களின்  விளக்கவுரைகளைப் பற்றி ஒவ்வொன்றாக இங்கு கீழே காண்போம்..

🔥முதலில் சத்குருநாதர் ஶ்ரீசீரடி பாபா, தன்  இயல்  நடைமுறை வாழ்க்கையில்  எவ்வாறு தன்னை வெளிப்படுத்திக் கொண்டு சாட்சியாக வாழ்ந்தார் என்பதைப் பற்றிய சூட்சம விளக்கவுரையை இங்கு காண்போம்....🔥

சாயீயின் வாழ்க்கை முறை புனிதமானது... அவரது அன்றாட. நடைமுறையில் அவர் தனக்குள்ளே ஒரு  கட்டுப்பாட்டை வகுத்துக் கொண்டு, எளிமையும், சுய ஒழுக்கத்தையும்  கடைப்பிடித்தார்...பாபாவின்  வழிமுறைகளும், செயல்களும் விவரிக்க இயலாதவை...  ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை...சில நேரங்களில் அவர் பேரானந்தப் பெருநிலையில் (தெய்வீக ஆனந்தம்) இருந்தார். மற்றும் சில சமயங்களில் ஆத்ம ஞானத்துடன் அடக்கமாய் இருந்தார். ஏராளமான பல உயரியச்  செயல்களைச் செய்தாலும் சில சமயங்களில் அவைகளில் தொடர்பேதுமின்றித் தனித்து இருந்தார்.  முற்றிலும் செயலே அற்றவராகச் சில சமயம் தோன்றியபோதும் , அவர் தனக்குள் உலகத்தைக் கண்டு, மனித உயிர்களைக் கடைத்தேற்றம் அடைய வைக்கக்கூடிய  உன்னதக் காரியங்களை செய்தார்..

தமது சொந்த ஆன்மாவிலேயே கட்டுண்டு இருந்தார்...அமைதியான, நிசப்தமான, அசைவற்ற கடலைப்போல காணப்பட்டாலும் அவர் அளவிட முடியாத ஆழமானவர்...அவரின் செயல்முறைகள் அதீத வியாபகமுள்ளது...எவர் நம் சத்குரு பாபாவின்  சொல்லில் அடங்காப் பெருங்குணத்தையும், மூல சூட்சமத்தையும்  விவரிக்க இயலும்...? அவர் ஆண்களை சகோதரர்கள் என்றும், பெண்களை சகோதரியாகவும், தாயார் ஆகவும் கருதினார்... பேதம் பாராது அனைவரையும் சமமாக நடத்தினார்.. மிகுந்த தாய்மையுணர்வுடனும், சகிப்பத்தன்மையோடும், கருணையோடும், பேரன்போடும் அனைவரையும்  தன் குழந்தைகளாக  அரவணைத்து  ஏற்றுக்கொண்டார்.. எல்லோரும் அறிந்துள்ளபடி அவர் பரிபூர்ண தூய நிரந்தர புனித பிரம்மச்சாரியாவார்.  அவர்தம் கூட்டுறவால்  பெரும் ஞானமானது நிரந்தரமாக நம் அனைவரிடமும்  திகழட்டும்...அவர்தம் பாதங்களுக்கு எப்போதும் முழுமையான பக்தியுடன் சேவை செய்வோம்... அவரை அனைத்து ஜீவராசிகளிடமும் காண்போம்.. பாபாவின்  நாமத்தை எப்போதும் ஜெபிப்போம்.. ஆத்மார்த்தமான, உள்ளார்ந்த, தூய்மையான அன்புடன் பாபாவை பூஜித்து,  சரணாகதி அடைவோம்..இறை அவதாரப் புருஷராக இருப்பினும், எளிமையாகத் தன்னை காண்பித்துக் கொண்டு, நம்மிடையே இரண்டறக் கலந்து சேவகனாக  தன்னை உருவேற்றிக்கொண்டு, நம்மைக் கடைத்தேற்றினார் நம் சத்குருநாதர் பாபா... அடுத்ததாக சாவடி ஊர்வலத்தைப் பற்றிப் பார்ப்போம்.. 

🔥சாவடி ஊர்வலத்தின் போது  நடைபெறுகின்ற  முக்கிய நிகழ்வுகளைப்  பற்றிய விளக்கமும், சாவடி ஊர்வலத்தின் போது பக்தர்கள், எவ்வாறு பாபாவை  அலங்கரித்து, ஆராதனை செய்து  ஆசிப்பெற்று  மகிழ்ந்தனர் என்பதுப் பற்றி அனுபவ விளக்கவுரையை இங்கு காண்போம்🔥

பாபா துயில் கொள்கின்ற நிலையானது மிக அழகானது.. ஒருநாள் அவர் மசூதியில் உறங்கினார்... மறுநாள் சாவடியில் (மசூதிக்கு அருகில் ஓரிரண்டு அறைகள் உள்ள கட்டிடம்)  துயில் கொண்டார்.. இவ்வாறு இடம்பெயர்ந்து  தூங்குவது பாபா மஹாசமாதி அடையும்வரை நடைபெற்றது...1909-ஆம் ஆண்டு மார்கழி 10ம் தேதி முதல், அடியார்கள் பாபாவிற்கு சாவடியிலேயே முறையான வழிபாடு நடத்தத்  தொடங்கினர்...சாவடிக்குப் போகும்முறை வந்ததும் மக்கள் மசூதியைச் சூழ்ந்து கொள்வர்...மண்டபத்தில் சில மணிநேரம் பஜனை செய்வர்...அவர்களுக்குப் பின்னால் துளசி பிருந்தாவனத்தின் வடதிசையில்,  பாபாவின் முன்புள்ள இடைப்பட்ட இடத்தில் ஒரு அழகிய ரதம் இருந்தது...பஜனையில் விருப்பமுள்ள மக்கள் இருந்தனர்.. பஜனையில் விருப்பமுள்ள ஆண்களும், பெண்களும் உரிய நேரத்தில் வந்தனர்... தங்கள் கைகளில் தால் (ஜால்ரா), சப்ளா கட்டை, கர்தால் (கஞ்சிரா), மிருதங்கம், கோல் (டோலக்கு) முதலிய இன்னிசைக் கருவிகளை வைத்துக்கொண்டு பஜனை நடத்தினர்.  அங்குள்ள அடியவர்கள் அனைவரையும்  ஈர்த்து இழுத்த காந்தம் சாயிபாபா ஆவார்...புறத்தேயுள்ள திண்ணையில் சிலர் தங்கள் தீவட்டிகளை ஒழுங்குபடுத்தினர்...சிலர் பல்லக்கை அலங்கரித்தனர். 

சிலர் தங்கள் கைகளில் பிரம்புக்குச்சியை வைத்துக்கொண்டு பாபாவுக்கு ஜெயகோஷம் முழங்கிக்  கொண்டிருந்தனர்..மசூதியின் மூலையானது ஜோடனைத் துணிகளால் அலங்கரிக்கப்பட்டது...மசூதியைச் சுற்றிலும் எரியும் விளக்குகளின் பேரொளியால் அந்த பகுதியே தெய்வீகத் தன்மையோடு இருந்தது.. ஷ்யாம் கர்ணா என்ற பாபாவின் குதிரை முழுவதுமாக அலங்கரிக்கப்பட்டு வெளியே நின்றுக் கொண்டிருந்தது...பின்னர் தாத்யா பாடீல் சில ஆட்களுடன் பாபா அருகில் வந்து, அவரைத்  தயாராகும்படி  கேட்டுக் கொள்கின்றார்...

தாத்யா, தனது கைகளை பாபாவின் கரத்தின் அடியில்  கொடுத்து அவருக்கு உதவி செய்யும் வரை பாபா அமைதியாக அமர்ந்திருப்பார்... தாத்யா பாபாவை மாமா என்றழைத்தார்... உண்மையில் அவர்களது உறவு மிகமிக நெருக்கமானது...தமது உடம்பில் பாபா வழக்கமான கஃப்னியை அணிந்து சட்காவைத் (சிறு கைத்தடி) தமது கரத்தின் அடியில்  வைத்துக்கொண்டு, தம் சில்லிம் (புகைபிடிக்கும் மண்குழாய்), புகையிலை இவற்றோடு ஒரு துணியைத் தன் கரங்களில்  போட்டுக்கொண்டு புறப்படுவதற்கு  ஆயத்தமாகின்றார்...பின்னர் தாத்யா பொன்னாலான  வேலைப்பாடு  செய்யப்பட்ட ஓர் அழகிய சால்வையை பாபா மீது அணிவித்தார்.. இதன்பின் பாபா,  பின்னால் இருக்கும் விறகுக் கட்டைகளைத் தமது வலதுகால் கட்டை விரலால் சிறிது இழுத்து, வலது கையால் எரிந்துக் கொண்டிருக்கும் விளக்கை அணைத்துவிட்டுச் சாவடிக்குப் புறப்படுகின்றார்.. டாஷே (முரசு), பேண்டு, சங்குகள், மிருதங்கம் முதலிய எல்லாவிதமான இசைக்கருவிகளும் தங்கள் விதவிதமான ஒலிகளை எழுப்புகின்றன...வாண வேடிக்கைகள் மாறுபாடான வெவ்வேறு வகையான வர்ணஜாலக் காட்சிகளைக் காட்டுகின்றன... 

வீணை, மிருதங்கத்துடன் இணைந்து ஆண்களும், பெண்களும் பஜனை செய்துக் கொண்டு, பாபாவின் பெயரைப் பாடிக்கொண்டு நடக்கத் துவங்குகின்றார்கள்... சிலர் மகிழ்ச்சியால் நடனமாடினர்..சிலர் பலவகையான கொடிகளையும், கம்புகளையும் எடுத்துச் செல்கின்றனர்..மசூதியின் படிகளுக்கு பாபா வந்ததும் பல்தார்கள் பாபாவுக்குக் கட்டியம் கூறினர்...  பாபாவின் இரண்டு பக்கங்களிலும் சாமரம் பிடித்துக் கொண்டிருப்பவர்களும், விசிறுபவர்களும் நின்றுக் கொண்டிருந்தனர்...அடியவர்களின்  கைகளால் தாங்கப்பட்டவாறே  பாபா நடந்துவரும் வழியில் துணியால் கம்பளம்  விரிக்கப்பட்டிருந்தன... தாத்யா பாடீல் அவரது இடது கையையும், பாபு சாஹேப் ஜோக்  அவர்கள் பாபாவின்  தலைமீது குடையைப்  பிடித்திருந்தார்...

இவ்விதமாக பாபா சாவடிக்கு நடந்து செல்கின்றார்...முழுமையும் அலங்கரிக்கபட்ட ஷ்யாம் கர்ணா என்ற சிவப்புக் குதிரை வழிவகுத்துக் கொண்டு சென்றது.  அதன்பின் பல்லக்குத் தூக்கிகள், ஏவலாட்கள், இசைப்பாடுவோர் மற்றும் அடியவர் கும்பலும் வந்தனர்...ஹரி நாமமும், சாயீ நாமமும் இசையுடன்  இணைந்த  குரலின் ஒலியோசை  வானைப்பிளந்தது...இவ்விதமாகவே ஊர்வலம் வீதி முனையை அடைந்தது...இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட யாவரும் மிக்க மகிழ்ச்சியடைந்து களிப்புடனும் பரவசத்துடன்  காணப்பட்டனர்... 

வீதியின் இந்த முனைக்கு வந்ததும் பாபா சாவடியை நோக்கி நின்றுக் கொண்டார்.. ஒரு தெய்வீக ஒளியுடன் அவர் பிரகாசித்தார்... அதிகாலையைப் போன்றோ, உதயசூரியனின் பிரபையைப் போன்றும், வானில் தெரியும் நட்சத்திரத்தைப் போன்றும், பாபாவின்  முகம் சுடரொளியால்  பிரகாசித்தது.. ஒருமுகப்பட்ட மனதுடன் பாபா அங்கு யாரையோ கூப்பிடுவோர் போல் வடக்குத் திசையை  நோக்கி நிற்கின்றார்.. எல்லா  இசைக் கருவிகளும் ஒலித்துக் கொண்டிருக்கும்போது,  பாபா தமது வலது கையை  மேலும்கீழும் சிறிதுநேரம் அசைக்கிறார்.. இதற்கிடையில்  காகா சாஹேப் தீஷித் குலால் என்பவர்,  சிவப்புப் பொடியுடன் கலந்த மலர்களைக் கொண்ட வெள்ளித்தட்டுடன் முன்னேவந்து, அவைகளை பாபாவின் திருமேனியில் அடிக்கடி மலர்களைத்  தூவினார்.  இத்தருணத்தில் இன்னிசைக் கருவிகள் மிகச்சிறப்பாக ஒலித்தன..பாபாவின் முகம் நிலையுறுதியான அதீத  சாந்தியுடனும், அழகுடனும்  மிளிர்ந்தது....அனைத்து  மக்களும் இந்த சுயம்பு  ஜோதியான பாபாவின் திருமுகத்தை  தங்கள் மனநிறைவு கொள்ளும்வரை பருகுகிறார்கள்..

இந்நிகழ்ச்சியின் காட்சியையும், உயர்வான கீர்த்தியையும் விவரிக்க வார்த்தைகள் தவறி விடுகின்றன.. சாவடி ஊர்வலத்தைப்  பற்றிய நிகழ்வினை  சொற்களால்  விவரிக்க முடியாத வகையில் ஆழமான காட்சிகளையும் தன்மைகளையும் உள்ளடக்கியுள்ளது.. சில சமயங்களில் மகல்சாபதி ஏதோவொரு ஆவேசம் பிடித்தவர் போல் ஆடுகிறார்..அதனைக் கண்டும்  பாபாவின் ஏகாந்திரச் சித்தம் (கவனம்) சிறிதளவும் கலைக்கப்படாதது கண்டு அனைவரும் அதிசயித்தனர்.  தமது கையில் விளக்குடன் தாத்யாபாடீல் பாபாவின் இடப்புறத்திலும், பகத் மகல்சாபதி வலப்புறத்திலும் பாபாவின் ஆடையின் நுனியைப் பிடித்துக்கொண்டு வருகிறார்கள்.. எத்தகைய  சுந்தர ஊர்வலம்..! எத்தகைய பக்தியின் உயரிய  பாங்குகள்...! இதைக்காண ஆண்களும் , பெண்களும், ஏழைகளும், பணக்காரர்களும் அங்கு ஒன்றாகத் திரண்டுள்ளனர்.  பாபா மிக மெதுவாகவே நடக்கிறார்...

பக்தர்கள் இருமருங்கிலும் அன்புடனும், பக்தியுடனும் தொடர்கின்றார்கள்.  அவ்விடத்தில் வான் மண்டலம் முழுவதும் பேரானந்தமும், பேர் மகிழ்ச்சியும்  ஊடுருவிப் பரந்து ஊர்வலம் சாவடியை அடைகிறது.. அக்காட்சியும் அந்நாட்களும் சென்றுவிட்டன... ஒருவரும் அவைகளை இப்போதோ அல்லது எதிர்காலத்திலோ பார்க்கமுடியாது.  எனினும் அக்காட்சியின் தோற்றத்தை நினைவுகூர்ந்தும், மனக்கண்முன் கொணர்ந்தும் நமது உள்ளங்களுக்கு அமைதியையும், திருப்தியையும் வழங்கலாம்...

சாவடியும் நல்ல வெண்மையான கூரை, கண்ணாடிகள், பல்வேறுவித விளக்குகள் இவைகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது... அதை அடைந்ததும் தாத்யா முன்னால் சென்று ஒரு ஆசனத்தை விரித்து ஒரு திண்டை வைத்துவிட்டு பாபாவை அங்கு அமரச்செய்து நல்ல கோட்டையும் அணிவிக்கிறார்.. பின்னர் அடியவர்கள் அவரைப் பல்வேறு விதங்களில் வழிபடுகின்றனர்... இறகுகளுடன் கூடிய கிரீடத்தை அவருக்குச் சூட்டுகின்றார்கள்...அவர் கழுத்தைச் சுற்றி பூமாலைகளையும், சந்தன  மாலைகளையும்  அணிவித்து,, நறுமணம் கமழும் நேர்கோடுகளையும், ஒரு புள்ளியையும் (வைணவ அடியார்களைப் போன்று) இட்டு பக்தர்கள்  பாபாவை  உள்ளம் நிறைவடையும் வண்ணம் நீண்டநேரம் கூர்ந்து பார்க்கின்றார்கள்.தலைப்பாகையை அடிக்கடி மாற்றுகின்றனர்... தூக்கியெறிந்து விடுவாரென்று பயந்து அவர் தலையிலிருந்து எடுத்து மேலே சிறிது தூக்கிப் பிடிக்கிறார்கள்... பக்தர்களின் உள்ளத்தில் இருக்கின்ற ஆவல்கள் அனைத்தும் பாபா அறிகின்றார்.

அடக்கமாகவும்,அமைதியாகவும் தடைச் செய்யாமலும் அவர்கள் விருப்பங்கள் அனைத்தையும்  நிறைவேற்றிக் கொள்ள  பாபா சாதுவாகக் கீழ்ப்படிகின்றார்.  இவ்வலங்காரங்களுடன் அவர் வியக்கத்தக்க அழகுடன் திகழ்கிறார். நானா சாஹேப் நிமோண்கர் கம்பைச் சுற்றிச் செய்யப்பட்டுள்ள அழகான குஞ்சரங்களுடன் கூடிய குடையை மேலே பிடிக்கிறார்... பாபு சாஹேப் ஜோக் ஒரு வெள்ளிப் பாத்திரத்தில் பாபாவின் பாதங்களைக் கழுவுகிறார்..  அர்க்கியமும், பூஜையும் உரிய சம்பிரதாயங்களுடன் செய்துவிட்டு அவர் கைகளில் சந்தனம் பூசி, தாம்பூலம் அளிக்கிறார்... பாபா தமது ஆசனத்தில் அமரும்போது தாத்யாவும், மற்றவர்களும் நின்றுக் கொண்டிருக்கிறார்கள்... அவர் பாதங்களில் வீழ்ந்து பணிகின்றார்கள்... பாபா வசதியாக திண்டின்மேல் சாய்ந்து அமர்ந்துக் கொண்டிருக்கும்போது இருமருங்கும் உள்ள அடியவர்கள் சாமரமும், விசிறியும் வீசுகின்றார்கள்..

பின்னர் ஷாமா சில்லிம் (புகைபிடிக்கும் மண்குழாய்)  தயார்செய்து, அதை தாத்யா பாடீலின் கையில் கொடுக்க, அவர் அதைத் தமது சுவாசத்தால் ஒருமுறை உறிஞ்சிய பின்னர் பாபாவிடம் கொடுக்கிறார்..பாபா புகைத்த பின்னர் அது பகத் மகல்சாபதியிடம் கொடுக்கப்பட்டு பின்னர் சுற்றி எல்லோரிடமும் வழங்கப்படும்.. ஜடமான சில்லிம் புனிதமாக்கப்பட்டது..அது பலவித தண்டனைகளுக்கும், துயரங்களுக்கும் ஆட்படவேண்டியிருக்கிறது... குயவர்களால் மிதியுண்டும், வெயிலில் காய வைக்கப்பட்டும், நெருப்பில் சுடப்பட்டும் இருப்பினும், பாபாவின் கைகளில் படுவதற்கும், அவரின் முத்தத்தைப் பெறுவதற்கும் அது நல்லதிர்ஷ்டம் பெற்றிருக்கிறது சில்லிம் ..இதன் பின்னர் விழா முடிவடைந்து பூமாலையை பாபாவின் கழுத்தில் அடியவர்கள் அணிவிக்கின்றார்கள்... பூச்செண்டும் அளிக்கின்றார்கள்....

எதிலும் சாட்சியாக பற்றில்லாமல் இருக்கும் சாய்நாதர்,  எந்த வஸ்துவின் மீதும்  அவாவின்மையும், பற்றின்மையின்  அவதாரமாகிய சாயீநாதர்,  அட்டிகை, அணிமணிகள், பூமாலைகள் மற்றும்பல அலங்காரங்கள் இவைகளைப் பற்றியெல்லாம்  சிறிதளவும் கவலைப்படுவதில்லை.. சாட்சியாக அமர்ந்து அனைத்தையும் ஏற்றுக்கொண்டார்... ஆனால் தம் அடியவர்களிடம் உள்ள உண்மையான அன்பின் காரணமாக, அவரவர்கள் தாங்கள் விரும்பிய  வழிகளைக் கையாண்டு மகிழ்வடைய அனுமதித்தார்... முடிவாக இன்னிசைக் கருவிகள் தங்கள் புனித ராகங்களை ஒலித்துக் கொண்டிருக்க பாபா சாஹேப் ஜோக் எல்லா சம்பிரதாயங்களுடனும் ஆரத்திக்  காண்பிக்கிறார்.  இந்த ஆரத்தி முடிவுற்றதும் அடியவர்கள் ஒவ்வொருவராக வணங்கி விடைபெற்றுக் கொண்டு வீடுகளுக்குத் திரும்புகின்றார்கள்.

தாத்யா பாடீல் பாபாவிற்குச்  சில்லிம், பன்னீர், அத்தர்,  சென்ட் இவைகளை அளித்துவிட்டுப் புறப்படுவதற்காக எழும்போது,  பாபா அவரிடம் அன்புத் ததும்ப "என்னைப் பார்த்துக்கொள்...  வேண்டுமானால் போ...  இரவில் சில சமயங்கள் வந்து என்னை விசாரித்துக்கொள்".. என்று கூறுகிறார்...சரியென விடையளித்துக் கொண்டு தாத்யாபாடீல் சாவடியை விட்டு வீட்டுக்குச் செல்கிறார்...பின்னர் பாபா தாமே படுக்கையைத் தயாரித்துக் கொள்கிறார்... ஒன்றின்மேல் ஒன்றாக ஐம்பது, அறுபது வெள்ளைத் துண்டுகளை விரித்துப் படுக்கையைத் தயார் செய்துக் கொண்டு இளைப்பாறச் செல்கிறார்.  பக்தர்கள் ஒவ்வொரு நாளும் உறங்கச் செல்வதற்கு முன் சாயீபாபாவின் உபதேச மொழிகளையும், அவரது சாவடி ஊர்வலத்தையும்  நினைவு கூரும்படியான வேண்டுகோளுடன் இந்த அத்தியாயத்தை முடித்து அனைவரும் இளைப்பாறுவோமாக..

ஓம் ஶ்ரீ சாய்ராம்..🙏🏼🙏🏼🙏🏼

ஸ்ரீ சாயீயைப் பணிக.. அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்..🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்..🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

செவ்வாய், ஜூன் 15, 2021

ஶ்ரீ சீரடிபாபாவின் சாய்சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாயத்தின் வெளியீடு..அத்தியாயம் முப்பத்தாறு (36)

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள  இன்றைய அத்தியாய வெளியீடு..🙏🏼

🙏ஶ்ரீசாய் சத்சரித்திரம்🙏

🙏அத்தியாயம் ::முப்பத்தாறு (36)🙏

 🔥முதலில் புனித வேத நூலான ஶ்ரீசாய்  சத்சரித்திரம்  பாராயணம் செய்வதன்  முக்கியத்துவமும், பெறப்போகும்  நன்மைகள்  என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥

ஶ்ரீசீரடி  சாய்பாபாவின் புனித வேதநூல்  என்பது சாய்  சத்சரித்திரம் என்பதாகும்..இதில் ஶ்ரீசீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத  எழுத்திலும் வியாப்பித்து  படர்ந்து இருக்கின்றது...

ஶ்ரீசாய்  சத்சரிதத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல், மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது..ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து சாய் சத்சரித்திரத்தில்  இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்.

இவ்வாறாக நாம் அனைவரும் சாய்  சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால், சீரடி பகவானின் ஆசியையும்  அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்...ஆகவே சாய் சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்...நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக..🙏

🔥குறிப்பு..சாய் சத்சரித்திர வேதப்  பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥

தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்.. மேலும் அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரியத் தன்மையை அடையலாம்...இவ்வேத பாராயணத்தின் மூலமாக  ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரியத் தன்மையை  அடையும் நிலையைப்  பெறலாம்...

மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம், நேர்மை, மனிதநேயம் போன்ற  இறைப்  பண்புகளைப்  பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுப் பெறவும்  இந்த சாய் சத்சரித்திர  வேதப் பாராயணம் துணைப் புரிகின்றது...மேலும்  இப்பாராயணத்தின் மூலம்  மிகச்சிறந்த கர்ம யோகியாக  புற வாழ்வியலின்  இயக்க செயல்பாடுகளில்  வெற்றி வாகை சூடலாம்...அவரவர்கள்  விரும்பி வேண்டியது கிடைக்கப் பெறும்...

சகல சௌபாக்கியங்கள் பெற்று  மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்... மேலும் அனைத்து விதமான  கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி  பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும்  ஒருசேரப்பெறலாம்🙏

🙏அத்தியாயம்::முப்பத்தாறு(36)🙏

🙏முன்னுரை..🙏

சீரடி பகவான், தன்னை நாடி வந்த பக்தர்களிடம் ஏன் தக்ஷிணையப் பெற்றார் என்பதன் விளக்கமும், சிலர் தாமாக  தக்ஷிணை  அளிக்க  விரும்பினாலும் பாபா அதனைப் பெற மறுத்ததன் மூல சூட்சமம் என்பதன் அனுபவ உரை...

சீரடி பாபா நிறைபேரறிவுடையவர், எல்லையற்றவர், அனைத்தையும் அறிந்தவர் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக, தன்னை தரிசிக்க வந்த பக்தர்களின் வாழ்க்கையில் நடந்த அத்தனை நிகழ்வையும்  பொதுவாக சுட்டிகாண்பித்து, தான் அவர்களுக்கு  செய்த ஆசியையும் அற்புதத்தையும் மறைமுகமாக உணர்த்தி, பக்தர்களின் தேவைகளை எவ்வாறு  பூர்த்திச் செய்தார்  என்பதன் அனுபவ விளக்கவுரை....

ஔரங்கபாத்கர் என்ற பெயர்க்கொண்ட  பக்தரின்  மனைவிக்கு,  எவ்வாறு பாபா  குழந்தையின்மை குறையை நீக்க ஆசிர்வதித்தார் என்பதன் விளக்கமும், மற்றும் உயரிய பக்தர் ஷாமா எவ்வாறு பகவானிடம் விவாதித்து குழந்தைப் பிறக்கும் வரத்தை அப்பெண்ணிற்குப்   பெற்றுத் தந்தார் என்பதைப் பற்றிய அனுபவ விளக்கவுரை..

மேற்க்கண்ட தலைப்புக்களின் விளக்கவுரைகளைப் பற்றி ஒவ்வொன்றாக இங்கு கீழே காண்போம்...

🔥முதலில் சீரடி பகவான், தன்னை நாடி வந்த பக்தர்களிடம் ஏன் தக்ஷிணையப் பெற்றார் என்பதன் விளக்கமும், சிலர் தாமாக  தக்ஷிணை  அளிக்க  விரும்பினாலும் பாபா அதனைப் பெற மறுத்ததன் மூல சூட்சமம் என்பதன் அனுபவ உரையை இங்கு காண்போம்...🔥

ஒருமுறை சாயீபாபாவின் தரிசனத்தைப் பெறுவதற்காக கோவாவிலிருந்து இருவர் வந்து, அவர்முன் வீழ்ந்து பணிந்தனர்.இருவரும்  ஒன்றாக வந்தபோதும் அவர்களில் ஒருவரிடம் மட்டுமே, பாபா தக்ஷிணையாக ரூ.15 கேட்டார்.. அதுவும் விருப்பமுடன் கொடுக்கப்பட்டது... மற்றொருவர் தாமாகவே முன்வந்து ரூ.35 அளித்தார்..மற்ற அனைவரும்  ஆச்சரியப்படும் படியாக பாபா அத்தக்ஷிணையைப்  பெற்றுக் கொள்ளவில்லை.. அங்கிருந்த ஷாமா பாபாவிடம், "என்ன பாபா...! இருவரும் ஒன்றாக வந்தனர்...ஒருவரின் தக்ஷிணையை நீங்கள் கேட்டுப் பெறுகிறீர்கள்...மற்றொருவர்  தாமாகவே அளித்தபோதும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டீர்கள். ஏன் இந்த வேறுபாடு...?" என்றார்...

அதற்கு பாபா கூறுகின்றார்.. "ஷாமா உனக்கு ஒன்றுமே தெரியாது...நான் ஒருவரிடமிருந்தும் ஒன்றும் எடுத்துக் கொள்வதில்லை..  இம்மசூதியின் ஆளும் தெய்வமான மசூதிமாயீ குறிக்கப்பட்ட கடன் தொகையைக் கேட்கின்றாள் அதனை வருகின்ற பக்தர்கள் எனக்கு தக்ஷிணையாக  அளித்து, அவர்கள்  கடனிலிருந்து விடுபடுகின்றார்கள்...  கவனிக்கும்படியாக எனக்கு எவ்வித வீடோ, சொத்தோ, குடும்பமோ இருக்கிறதா...?  எனக்கு எதுவுமே தேவையில்லை அல்லவா..எப்போதும் சுதந்திரமாகவே யான்இருக்கிறேன்.. கடன், பகைமை, கொலை ஆகியவைகளுக்குப் பரிகாரம் தேடப்பட்டே ஆகவேண்டும்...தப்ப வழியே இல்லை"  என்று கூறிவிட்டுப் பின் தமக்கே உரித்தான பாணியில் பின்வருமாறு கூறத்தொடங்கினார்...

முதலில் தன்னை தரிசிக்க வந்த பக்தர்  வறுமையில் இருந்ததாகவும்,  அவருக்கு ஒரு வேலை கிடைத்தால் முதல் மாதச் சம்பளத்தை காணிக்கையாகச் செலுத்துவதாகவும் வேண்டிக்கொண்டார்.  மாதம் ரூ.15 சம்பளமுள்ள ஒரு வேலை அவருக்குக் கிடைத்தது.. பின்னர் சம்பளம் படிப்படியாக உயர்ந்து ரூ.700ஐ அடைந்தது...ஆனால் பணியின் காரணமாக பக்தர் எம்மிடம்  வைத்த  பிரார்த்தனை சங்கல்பத்தை  முழுமையுமாக மறந்துவிட்டார்.. ஆனால் மீண்டும் எம்மின்  ஆசியால்  இவ்விடம் வரவழைக்கப்பட்டார்..அதனால் அத்தொகையை நான் அவரிடமிருந்து தஷிணையாகப் பெற்றேன் என்று கூறினார் பாபா...

🔥சீரடி பாபா நிறைபேரறிவுடையவர், எல்லையற்றவர், அனைத்தையும் அறிந்தவர் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக, தன்னை தரிசிக்க வந்த பக்தர்களின் வாழ்க்கையில் நடந்த அத்தனை நிகழ்வையும்  பொதுவாக சுட்டிகாண்பித்து, தான் அவர்களுக்கு  செய்த ஆசியையும் அற்புதத்தையும் மறைமுகமாக உணர்த்தி, பக்தர்களின் தேவைகளை எவ்வாறு  பூர்த்திச் செய்தார்  என்பதன் அனுபவ விளக்கவுரையை இங்கு காண்போம்...🔥

தன்னை தரிசிக்க வந்த பக்தர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவத்தை சூட்சமமாக உணர்த்துகின்றார் பாபா ஷாமாவிடம். யான்  கடற்கரை ஓரமாக நான் உலவித் திரிந்துக் கொண்டிருந்தபோது ஒரு பிரமாண்டமான மாளிகையை வந்தடைந்தேன்...அதன் தாழ்வாரத்தில் அமர்ந்தேன்.  வீட்டுக்காரர் எனக்கு நல்ல வரவேற்ப்பளித்து, வயிறார உணவளித்தார்.  உறங்குவதற்காக அலமாரிக்கு அருகிலுள்ள தூய சுத்தமான இடத்தை எனக்குக் காண்பித்தார்.  அங்கு உறங்கினேன்...  நான் ஆழ்ந்த துயில் கொண்டிருக்கும்போது அம்மனிதன் சுவற்றை இடித்து  உள்நுழைந்து என் பையிலிருந்த பணத்தையெல்லாம் கத்தரித்து எடுத்துக்கொண்டார்...  கண்விழித்தபோது எனது ரூ.30,000மும் திருடப்பட்டுவிட்டதை அறிந்தேன்.. பெரிதும் கவலையுற்று புலம்பிக் கொண்டிருந்தேன்.. ஆகவே உணவிலும், பானத்திலும் எனது விருப்பத்தையெல்லாம் இழந்து அந்தத் தாழ்வாரத்திலேயே பதினைந்து நாட்கள் புலம்பி அழுதுக்கொண்டு அமர்ந்திருந்தேன்...

 பதினைந்து நாட்கள் கழிந்ததும், வழிப்போக்கரான ஒரு பக்கிரி நான் அழுதுக் கொண்டிருப்பதைப் பார்த்து  எனது துன்பத்திற்கான காரணத்தை விசாரித்தார்.. நான் அவரிடம் எல்லாவற்றையும் ஒளிவுமறைவின்றிக்  கூறினேன்..அதற்கு அவர் "நான் கூறியப்படி  செய்தீரேயானால், நீ இழந்த ஐஸ்வர்யம்  திரும்பக் கிடைக்கும் என்றார்... .மேலும் கூறுகின்றார் ..ஒரு பக்கிரியிடம் செல்லும்...நான் அவரைப் பற்றிய ஒரு விபரம் தருகிறேன்...அவரிடம் உம்மை முழுவதும் சமர்ப்பித்து விடும்..அவர் உமது இழந்தப்  பணத்தை மீட்டுத் தருவார்...இந்த  இடைப்பட்ட வேளையில் பணம் திரும்பக் கிடைக்கும்வரை உமக்குப் பிடித்தமான உணவை விட்டுவிடவும்" என்றார்.. அப்பக்கிரியின் அறிவுரையைப் பின்பற்றி நடந்து  எனது பணத்தைத் திரும்பப்பெற்றேன்.. பின்னர் வாதாவி விட்டு நீங்கி கடற்கரையை அடைந்தேன்..அங்கு ஒரு நீராவிக் கப்பல் நின்றுக் கொண்டிருந்தது... அதில் கூட்டமாக இருந்ததால் ஏற முடியவில்லை..ஆனால் அங்கிருந்த நல்ல குணமுடைய பியூன் ஒருவன் எனக்காகக் குறுக்கிட்டதால் அதிர்ஷ்டவசமாக உள்ளே ஏறினேன்.  கப்பல் என்னை அக்கரை கொண்டுச் சேர்த்தது..அங்கிருந்து ரயில் ஏறி மசூதிமாயிடம் (துவாரகாமாயீடம்) வந்தேன் என்று கூறி முடித்தார் பாபா.

மேலும்  பாபா, ஷாமாவிடம் அவ்விருந்தாளிகளை அழைத்துச்சென்று அவர்களின் உணவுக்கு ஏற்பாடு செய்யும்படி கேட்டுக்கொண்டார்.  பின்னர் ஷாமா அவர்களை வீட்டிற்கு அழைத்துச் சென்று உணவளித்தார்...  உணவின்போது ஷாமா அவர்களிடம் பாபாவின் கதை விளங்காத புதிராக இருப்பதாகவும், ஏனெனில் அவர் கடற்கரைப் பக்கமே சென்றது கிடையாதென்றும், ரூ.30,000 போன்ற எவ்வித பணத்தையும் பாபா  வைத்திருக்கவில்லையே என்றும்,  மேலும் பயணம் செய்ததேயில்லை, பணத்தைத் தொலைத்ததேயில்லை,  மீண்டும் அதைத் திரும்பப் பெற்றதேயில்லை என்றும் கூறி, அதை நீங்கள்  புரிந்துக்கொண்டு, அதன் குறிப்பு நுட்பத்தை அறிந்துகொண்டீர்களா என்று கேட்டார் ஷாமா...விருந்தினர் ஆழ்ந்து மனமுருகி கண்ணீர் சிந்தினார்...தொண்டை அடைக்கும் குரலில் அவர்கள், "பாபா நிறைபேரறிவுடையவர், எல்லையற்றவர், தன்நிகர் இல்லாத முழுமுதற்பொருள் (பரப்பிரம்மம்) என்று  உணர்ந்தனர்...பாபா  உரைத்த நிகழ்வானது  சரிநுட்பமாக எங்களது வாழ்க்கையில் நடந்த அனுபவ நிகழ்வாகும்... பாபா  பேசியது அனைத்தும்  எங்களைப் பொறுத்தவரை ஏற்கனவே நடந்துவிட்டன.  இதையெல்லாம் அவர் எங்ஙனம் அறிந்தாரென்பது ஆச்சரியத்துள் எல்லாம் ஆச்சரியம்...!

 எல்லாத் தகவல்களையும் நாங்கள் உணவுக்குப்பின் உரைக்கின்றோம் என்று கூறினார்கள்...உணவுக்குப்பின் அவர்கள் வெற்றிலை போட்டுக் கொண்டிருக்கும்போது  விருந்தினர் தங்கள் கதையைச் சொல்ல ஆரம்பித்தனர்....அவர்களுள் ஒருவர் கூறுகிறார்.. மலைத் தொடரின் மீதுள்ள ஒரு கோடைவாசஸ்தலமே எனது சொந்த ஊர்...ஒரு வேலைதேடிப் பணம் சம்பாதிக்கும் பொருட்டு கோவாவுக்குச் சென்றேன்.  தத்தர் தெய்வத்திடம் எனக்கு வேலை கிடைத்தால் முதல் மாத ஊதியத்தைச் சமர்ப்பிப்பதாக வேண்டிக் கொண்டேன்...அவரது அருளால் ரூ.15 சம்பளமுள்ள ஒரு வேலை கிடைத்தது.. பாபா குறிப்பிட்டபடியே எனக்கு உத்தியோக உயர்வும் கிடைத்தது....எனது வேண்டுதலைப் பற்றியெல்லாம் அதன்பிறகு நிச்சயமாக மறந்தேவிட்டேன்.  இவ்வகையாக பாபா அதை நினைவுபடுத்தி ரூ.15 என்னிடமிருந்து மீட்டுப் பெற்றுக்கொண்டார்...மற்றவர்கள் நினைக்கும் விதமான அது தஷிணையன்று, பழைய கடன் ஒன்று  அடைத்தலும், நீண்ட நாள் மறந்துபோன வேண்டுதலை நிறைவேற்றுதலும் ஆகும்.

உண்மையில் ஒருபோதும் பாபா எந்தப் பணத்தையும் யாரிடமும் யாசிக்கவில்லை   தமது அடியவர்களையும் யாசிக்க அனுமதிக்கவில்லை..ஆன்மிக முன்னேற்றத்துக்குப் பணத்தை ஒரு அபாயமாக, தடையாக அவர் கருதினார்...தமது பக்தர்களை அதன் பிடியில் விழ அனுமதிப்பதேயில்லை... இது விஷயத்தில் பகத் மகல்ஸாபதி ஓர் உதாரணம் ஆவார்...அவர் பரம ஏழை...  வரவையும் செலவையும் ஒன்றாக்க அவரால் இயலவில்லை..பாபா அவரை ஒருபோதும் எந்தப் ஐஸ்வர்யத்தையும்  சம்பாதிக்க அனுமதிக்கவில்லை.. தமது தக்ஷிணைப் பணத்தினின்றும் ஏதும் கொடுக்கவுமில்லை மகல்சாபதிக்கு...  ஒருமுறை ஹம்ஸ்ராஜ் என்ற  தாராள குணத்தைக் கொண்ட   ஒரு வியாபாரி பாபாவின் முன்னால் மகல்சாபதிக்கு ஒரு பெருந்தொகை அளித்தார்..ஆனால் பாபா அதை ஏற்றுக்கொள்ள அவரை அனுமதிக்கவில்லை.

பின்னர் மற்றொருப் பக்தர் தனது வாழ்வில் நடந்த நிகழ்வைக்  கூறுகின்றார்...எனது பிராமண சமையல்காரன் எனக்கு முப்பத்தைந்து  ஆண்டுகள் விசுவாசத்துடன் பணிவிடை செய்துவந்தான்.துரதிர்ஷ்டவசமாக தீய வழிகளில் இறங்கினான்.அவன் மனம் மாறி என்னுடைய செல்வத்தையே கொள்ளையடித்தான்...நாங்களெல்லாம் தூங்கிக் கொண்டிருக்கும்போது உள்ளே வந்து எனது அலமாரி வைக்கப்பட்டுள்ள அறையின் சுவற்றைத் துளைத்து  கரன்சி நோட்டுக்களாக நான் சேகரித்திருந்த ரூ.30,000 முழுவதையும் எடுத்துச் சென்று விட்டான்.. பாபா அதே தொகையை எங்ஙனம் குறிப்பிட்டார் என்பது எப்படி என்று எனக்குத் தெரியாது.  இரவும், பகலும் நான் அழுதுக் கொண்டிருந்தேன்.

எனது விசாரணைகளின் பலன் ஒன்றுமில்லை.  ஆழ்ந்த கவலையில் அரைமாதத்தைக் கழித்தேன்...தாழ்வாரத்தில் நான் அமர்ந்திருந்தபோது அவ்வழியாகப் போய்க்கொண்டிருந்த ஒரு பக்கிரி, வருத்தப்பட்டு மனம் வருந்திய  எனது  நிலையைக் கவனித்து விட்டு அதன் காரணத்தை விசாரித்தார்.அனைத்தைப் பற்றியும் அவரிடம் கூறினேன். கோபர்காவன் தாலூக்கா, சீரடியில் சாயீ என்ற பெயருடைய ஞானி  ஒருவர் இருப்பதாக அவர் கூறினார்...அவரிடம் ஒரு வேண்டுதல் செய்துகொள், உனக்கு மிகவும் பிடித்த  உணவு ஒன்றை மனதில் நினைத்து உமது தரிசனம் பெறும்வரை அவ்வுணவு உண்பதை நிறுத்திவிட்டேன்  என்று சங்கல்பமாக  கூறிக்கொள் என்றார்..பின்னர் அவ்வாறே நான் பிரார்த்தனை செய்துக் கொண்டேன்.  அரிசிச்சோறு சாப்பிடுவதை விட்டுவிட்டேன் என்று பிரார்த்தனையை மேற்க்கொண்டேன்.. இழந்தது  கிடைக்கும் வரை இதனை பின்பற்றுவேன் என்று உறுதியோடு இருந்தேன் என்றார்"....

இதன்பின் பதினைந்து நாட்கள் கழிந்தன.  அந்தப் பிராமணன் தானாகவே என்னிடம் திரும்பிவந்து எனது பணத்தைத் திருப்பிக் கொடுத்துத் தன் செயலுக்காக வருந்தி, "எனக்குப் பைத்தியம் பிடித்து இவ்வாறு நடந்துகொண்டேன்...இப்போது உமது காலடிகளில் என் தலையை வைக்கிறேன்... தயவு செய்து மன்னித்தருளும்" என்றார்.. இவ்வாறு எல்லாமே நலமாகவே முடிவடைந்தன.. என்னைச் சந்தித்து எனக்கு உதவிய பக்கிரி மீண்டும் காணப்படவில்லை...அப்பக்கிரி எனக்கு அறிவுருத்திய  பாபாவை காணவேண்டும் என்று  ஒரு தீவிர ஆர்வம் என்னுள் எழுந்தது...எனது வீடுவரை வந்த அப்பக்கிரி சாயிபாபாவைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் நினைத்தேன்.  என்னைக் காணவந்து எனது தொலைந்துப் போன பணத்தை மீண்டும் பெற்றுத் தருவதற்காக எனக்கு உதவி புரிந்த அவரா முப்பத்தைந்து ரூபாய் பெறுவதற்காக ஆர்வமாயிருப்பார்...? மாறாக எங்களிடமிருந்து எதையும் எதிபார்த்துக் கொண்டிராமல்,  நம்மை  ஆன்மிக முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதில் பாபா  தம்மாலான முழு முயற்சியை எப்போதுமே செய்கிறார்.

திருடப்பட்ட எனது பணம்  மீண்டும் கிடைத்தவுடன் நான் பெருமகிழ்வுற்றேன்.  அந்த ஆர்வத்தில் எனது வேண்டுதல் அனைத்தையும்  மறந்துவிட்டேன்.  பின்னர் நான் கொலாபாவில் இருந்தபோது ஒருநாள் இரவு கனவில் சாயிபாபாவைக் கண்டேன்....இது நான் சீரடிக்கு வருகிறேன் என்று எடுத்திருந்த பிரார்த்தனையை எனக்கு நினைவூட்டியது.  அதனால் கோவாவுக்குச் சென்று அங்கிருந்து கப்பலில் பம்பாய் வழியாக சீரடிக்குச் செல்ல விரும்பினேன்.  ஆனால் துறைமுகத்துக்கு வந்தபோது அக்கப்பல் ஏற்கனவே கூட்டமாயிருப்பதையும், இடமில்லாததையும் அறிந்தேன்...கப்பல் தளபதி என்னை அனுமதிக்கவில்லை.. நல்ல குணமுடைய எனக்கு பழக்கமில்லாத ஒரு பியூன் குறுக்கிட்டதால் எனக்கு கப்பலில் இடம் அனுமதிக்கப்பட்டு பம்பாய் வந்து சேர்ந்தேன்..பின்னர் ரயில் மூலமாக சீரடி  வந்தேன்...பாபா அண்டசராசரத்திலும்  வியாபித்து இருப்பவர் என்றும், எல்லாமறிந்தவர்  என்றும் நான் நிச்சயமாக நம்புகிறேன்..நாங்கள் யார்..?  எங்கள் வீடு எங்கே இருக்கிறது..?  பாபா எங்களது பணத்தை மீட்டுக்கொடுத்து, தாமே எங்களை ஈர்த்து இங்கு  வரவழைத்தது  எங்களது நல்ல அதிர்ஷ்டம் தான்.. எவ்வளவு பெரியது...?  சீரடியைச் சேர்ந்த மக்களாகிய நீங்கள் நிச்சயமாக எங்களைக் காட்டிலும் எல்லையற்ற அளவு மேலானவர்களாகவும், மிகுந்த அதிர்ஷ்டம் வாய்ந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்...பாபா விளையாடி, சிரித்து, உரையாடி இவ்வளவு ஆண்டுகள் வாழ்ந்துக் கொண்டிருப்பதும் உங்களுடனேயே அல்லவா...?  உங்களுடைய பூர்வபுண்ணிய பலன் அளவிடற்கரியதாக இருக்கவேண்டும்.  ஏனெனில் அதுவே பாபாவை சீரடிக்கு இழுத்துவிட்டிருக்கிறது.  சாயியே எங்களது தத்தர்.  அவரே வேண்டுதலுக்குக் கட்டளையிட்டார்.  கப்பலில் ஓர் இடமும் அளித்து என்னை இவ்விடம் சேர்ப்பித்தார்.  இவ்விதமாக பகவான்,  எங்கும் நிறைந்து அண்ட சராசரத்தில் உள்ள அனைத்துயிர்களிலும்   வியாப்பித்து  ஆட்சி புரிகின்றேன் என்கிற சாட்சி  நிரூபணத்தை நமக்கு  அளித்திருக்கின்றார்..

🔥ஔரங்கபாத்கர் என்ற பெயர்க்கொண்ட  பக்தரின்  மனைவிக்கு, எவ்வாறு பாபா  குழந்தையின்மை குறையை நீக்கி ஆசிர்வதித்தார் என்பதன் விளக்கமும், மற்றும் உயரிய பக்தர் ஷாமா எவ்வாறு பகவானிடம் விவாதித்து குழந்தைப் பிறக்கும் வரத்தை அப்பெண்ணிற்குப்  பெற்றுத் தந்தார் என்பதைப் பற்றிய அனுபவ விளக்கவுரையை இங்கு காண்போம்....🔥

சோலாபூரைச் சேர்ந்த சகாராம் ஔரங்கபாத்கர் என்பாரின் மனைவிக்கு இருபத்தேழு  ஆண்டு காலமாகக் குழந்தையில்லை... கணக்கற்ற பிரார்த்தனைகளை, அவர்கள் அனைத்து தெய்வத்திடமும், மகான்களிடமும், தேவதா சக்திகளிடமும் பிரார்த்தனை செய்து கொண்டார்கள்..ஆனால் வெற்றிபெறவில்லை.  பின்னர் அவள் பெருமளவு நம்பிக்கை இழந்தவளாக ஆனாள்..இவ்விஷயத்தில் இறுதியான முயற்சியாகத் தனது சகோதரியின் புதல்வனான விஸ்வநாத்துடன்  சீரடி  வந்து பாபாவுக்குச் சேவை செய்துக் கொண்டு இரண்டு மாதங்கள் தங்கியிருந்தாள்.. மசூதிக்கு அவள் சென்றபோதெல்லாம் கூட்டத்தால் மசூதி நிரம்பி இருப்பதையும், பாபா பக்தர்களால் சூழப்பட்டிருப்பதையும் கண்டாள்...அவள் அவரைத் தனியாகக்கண்டு வீழ்ந்து வணங்கித் தனது இதயத்தைத் திறந்து பிள்ளை வரம் வேண்ட விரும்பினாள்.. ஆனால் உரிய சந்தர்ப்பம் கிடைக்கவே இல்லை..  முடிவாக அவள், பாபாவிடம் அவர் தனியாக இருக்கும்போது தனக்காகப் பேசும்படி ஷாமாவிடம் கேட்டுக் கொண்டாள்.  ஷாமா அவளிடம் பாபாவின் தர்பார் வெளிப்படையானது என்றும், எனினும் அவளுக்காக தான் முயற்சிப்பதாகவும், கடவுள் அவரை ஆசீர்வதிக்க வேண்டும் என்றும் ஷாமா  கூறினார்.  தேங்காயுடனும், ஊதுபத்தியுடனும் முன்னிருக்கும் திறந்தவெளியில் பாபாவின் உணவு நேரத்தில் தயாராக இருக்கும்படியும், அவர் அவளுக்கு சைகையால்  காண்பித்ததும் வரவேண்டும் என்றும் கூறினார்...ஒருநாள் உணவுக்குப்பின் பாபாவின் ஈரக்கையை ஷாமா துண்டால் துடைத்துவிட்டுக் கொண்டிருந்தார்.  பாபா அப்போது அவர் கன்னத்தைக் கிள்ளிவிட்டார்.

ஷாமா : (பொய்க்கோபத்துடன்) தேவா இந்த மாதிரி என்னைக் கிள்ளுவது சரியா...?  இந்த மாதிரி கிள்ளிக் குறும்பு செய்யும் கடவுள் எங்களுக்குத் தேவையில்லை.  நாங்கள் உங்களையே சார்ந்து இருப்போரல்லவா...?  இதுதான் எங்களது நெருக்கமான உறவின் பலனா...?

பாபா : ஓ...! ஷாமா, கடந்த 72 தலைமுறைகளாக நீ என்னுடன் இருக்கிறாய். இதுவரை உன்னை நான் கிள்ளியதில்லை.இப்போது நான் உன்னைத் தொட்டதைக் குற்றமாகக்கொண்டு கோபித்துக் கொள்கிறாயே...?

ஷாமா : எங்களுக்கு எப்போதும் முத்தங்களையும்,  உண்பதற்கு இனிப்புக்களையும் கொடுக்கும் ஒரு கடவுளையே நாங்கள் விரும்புகின்றோம்..  தங்களிடமிருந்து எந்த மரியாதையையோ, மோக்ஷத்தையோ, புஷ்பக விமானம் முதலானவற்றையோ நாங்கள் வேண்டவில்லை. .தங்கள் பாதாம்புயத்தின் பால் எங்களது நம்பிக்கை எப்போதும் மிக நன்றாக தெளிந்த விழிப்பு நிலையில் இருக்கவேண்டும்.. அதற்கு ஆசீர்வதியுங்கள்.  

பாபா :  ஆம் உண்மையில் அதற்காகவேதான் நான் வந்திருக்கிறேன்.  நான் உங்களுக்கு உணவூட்டிப் பேணி வளர்த்து வருகின்றேன்..  உங்கள் மீது அன்பும், பாசமும் பூண்டிருக்கின்றேன்.

இதன் பின்னர் பாபா தமது இருக்கையில் போய் அமர்ந்தார்...ஷாமா அப்பெண்மணிக்கு சைகை  செய்தார்...அவள் மேலே வந்து வணங்கி தேங்காய், ஊதுபத்தி இவைகளை பாபாவிடம் அளித்தாள்.....பாபா அந்த முற்றல் தேங்காயை ஆட்டினார்....அதனுள்ளிருந்த பருப்பு உருண்டு சப்தம் செய்தது. 

பாபா : ஷாமா இது உருளுகிறதே, என்ன சொல்கிறதென்பதைக் கவனி...

ஷாமா::இப்பெண்மணி, அம்மதிரியாகவே ஒரு குழந்தையும் தனது வயிற்றில் உருண்டு உயிர்ப்பெற வேண்டுமென்று வேண்டுகிறாள்... எனவே அத்தேங்காயைத் தங்களது ஆசீர்வாதத்துடன் கொடுங்கள்.... 

பாபா : இத்தேங்காய் அவளுக்கு குழந்தைப் பாக்கியத்தை அருளுமா..?  இம்மாதிரி விஷயங்களில் எல்லாம் ஜனங்கள் இவ்வளவு முட்டாள் தனமாகவும், போலி நம்பிக்கையுடனும் இருக்கின்றார்கள்....

ஷாமா :  தங்களது மொழி, ஆசி இவைகளின் சக்தியை நானறிவேன்..தங்களது சொல் அவளுக்கு குழந்தைகளின் தொடரையே அளிக்கும்.  நீங்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறீர்களே தவிர உண்மையான ஆசியை அளிக்கவில்லை...

விவாதம் கொஞ்சநேரம் நடந்துக் கொண்டு இருந்தது...பாபா தேங்காயை உடைக்கும்படி மீண்டும் மீண்டும் ஆணையிட்டுக் கொண்டிருந்தார்.  ஷாமாவோ முழுத் தேங்காயையும் அப்பெண்மணிக்கே அளிக்கும்படி விவாதித்துக் கொண்டிருந்தார்... முடிவாக பாபா சம்மதித்தார். 

பாபா : அவளுக்கு ஒரு குழந்தை பிறக்கும்...

ஷாமா :  எப்போது...?

பாபா :  இன்னும் பன்னிரெண்டு  மாதங்களில்...

இதன் பேரில் தேங்காய் இரண்டாக உடைக்கப்பட்டு ஒரு பகுதியை இருவரும் உண்டனர்.. மறுபடி அப்பெண்ணிற்கு வழங்கப்பட்டது...

பின்னர் ஷாமா அப்பெண்மணியின் பக்கம் திரும்பி "அன்புள்ள அம்மையே...! நீ எனது மொழிகளுக்கு ஒரு சாட்சி....பன்னிரண்டு மாதங்களுக்குள் உனக்குக் குழந்தை ஏதும் பிறக்காவிட்டால் ஒரு தேங்காயை இந்த தெய்வத்தின் (சாயிபாபாவின்) தலையின்மீது அடித்து அவரை மசூதியிலிருந்து வெளியே விரட்டிவிடுவேன்.இதை நான் செய்யத் தவறுவேனாயின் என்னை மாதவ் என்று நானே அழைத்துக்கொள்ள மாட்டேன்... நான் கூறுவதை நீ விரைவில் உணர்வாய்" என்று சூளுரைத்தார் ..

அவள் ஓராண்டுக்குள் ஒரு புதல்வனைப் பெற்றெடுத்தாள்...புதல்வனது ஐந்தாவது மாதத்தில் அவனை மசூதிக்கு எடுத்து வந்தாள். கணவன், மனைவி இருவரும் பாபாவின் முன்னால் வீழ்ந்து வணங்கினார்கள்.  நன்றியுள்ள அத்தகப்பனார் ரூ.500ஐ அன்பளிப்பாகச் சமர்ப்பித்தார்...ஷ்யாம் கர்ணா என்ற பாபாவின் குதிரைக்கு ஒரு கொட்டகை கட்டுவதற்காக அத்தொகை செலவிடப்பட்டது...

ஓம் ஶ்ரீ சாய்ராம்..🙏🙏

ஸ்ரீ சாயீயைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்...🙏🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுயவிழிப்புணர்வு தியான பீடம்..🙏🙏🏻🙏🏻

https://youtu.be/Kv2wV48w0Lo


திங்கள், ஜூன் 14, 2021

ஶ்ரீ சீரடிபாபாவின் சாய்சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாயத்தின் வெளியீடு..அத்தியாயம் முப்பத்தைந்து (35)

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள  இன்றைய அத்தியாய வெளியீடு....🙏🏼🙏🏼

🙏ஶ்ரீசாய் சத்சரித்திரம்🙏

🙏 அத்தியாயம்:: முப்பத்தைந்து (35)🙏

🔥முதலில் புனித வேத நூலான ஶ்ரீசாய்  சத்சரித்திரம்  பாராயணம் செய்வதன்  முக்கியத்துவமும், பெறப்போகும்  நன்மைகள் என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் புனித வேத நூல் என்பது சாய் சத்சரித்திரம் என்பதாகும்..இதில் ஶ்ரீசீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத  எழுத்திலும் வியாப்பித்து  படர்ந்து இருக்கின்றது...ஶ்ரீசாய்  சத்சரிதத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல், மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய  ஶ்ரீசாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது...

ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து ஶ்ரீசாய் சத்சரித்திரத்தில்  இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்..இவ்வாறாக நாம் அனைவரும் சாய்  சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும்  அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்..ஆகவே சாய் சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்... நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக..🙏

🔥குறிப்பு : சாய் சத்சரித்திர வேதப்  பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥

தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்.. மேலும் அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரியத் தன்மையை அடையலாம்...இவ்வேத பாராயணத்தின் மூலமாக  ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரியத் தன்மையை  அடையும் நிலையைப்  பெறலாம்.. மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம், நேர்மை, மனிதநேயம் போன்ற  இறைப்  பண்புகளைப்  பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுப் பெறவும்  இந்த  ஶ்ரீசாய் சத்சரித்திர  வேதப் பாராயணம் துணைப்புரிகின்றது....

மேலும் இப்பாராயணத்தின் மூலம்  மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில்  வெற்றி வாகை சூடலாம்... அவரவர்கள்  விரும்பி வேண்டியது கிடைக்கப் பெறும்...சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்...மேலும் அனைத்து விதமான  கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, ஶ்ரீசீரடி  பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும்  ஒருசேரப்பெறலாம்..🙏

🙏அத்தியாயம் ::முப்பத்தைந்து(35)🙏

🙏முன்னுரை..🙏

குருவிற்கு ஏன் தக்ஷிணை அளிக்க வேண்டும் என்பதன் விளக்கமும்,  மற்றும் அவ்வாறு  தக்ஷிணை வழங்குவதில் இருக்கும் மூல சூட்சமம் என்ன என்பதைப் பற்றிய விளக்கவுரை....

ஆத்மார்த்தமாக அன்புடன் அளிக்கப்பட்ட தக்ஷிணையை மட்டும்,  எவ்வாறு பாபா தன் பக்தர்களிடம் பெற்றுக்கொண்டார் என்பதன் விளக்கவுரையும், மற்றும் தக்ஷிணை வழங்க மனமில்லையென்றால்  தக்ஷிணையை ஏற்றுக்கொள்ள மாட்டார் என்பதைப் பற்றியும்  அனுபவ விளக்கவுரை...

எங்கும் நிறைந்த தன்னுடைய பேராற்றலாலும், பேரறிவாளும் சாய் பகவான், தன்னை நாடி வந்த டக்கர் என்ற பக்தரின் ஆழ்மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு  ஏற்றவாறு  உபதேசித்து அருளாசி வழங்கி உயரிய நிலையை அடைய வைத்தார் என்பதன்  அனுபவ விளக்கவுரை....

தீயக் கனவுக் காட்சியின் காரணமாக தூக்கமின்மையால் பாதிக்கப்பட்ட பக்தர் ,எவ்வாறு பாபாவின் ஆசிப்பெற்ற உதியால் குணப்படுத்தப்பட்டார் என்பதன் அனுபவ உரை.....

பாபாவின் ஆத்மார்த்தமான உயரிய பக்தர் பாலாஜி பாடீல் நெவாஸ்கர் என்பவர், எவ்வாறு பாபாவிடம்  தன்னிடமுள்ள அனைத்தும்  ஒப்படைத்து சரணாகதி அடைந்து சேவை செய்தார் என்பதன் விளக்கவுரை...

பாபாவின் பேராற்றலும் , பேரருளும் நிறைந்த உதி என்ற விபூதியினால், எவ்வாறு உணவுப் பற்றாக்குறை  நீங்கி அள்ள அள்ளக் குறையாமல் அன்னத்தை அளித்து விருந்து அளிப்பவரின் மனக்குறையைத் தீர்த்தார் என்பதன் விளக்கவுரை...

அனைத்து உயிரினங்களிலும் பாபா நீக்கமற நிறைந்து இருக்கின்றார் என்பதை உணர்ந்து கொண்டதால்,  பாம்பையே பாபாவாகப்பாவித்து போற்றிய பாலாஜி என்ற பக்தரின் குடும்பத்திற்கு எவ்வாறு ஆசி வழங்கினார் என்பதன் விளக்கவுரை..

மேற்க்கண்ட தலைப்புக்களின் விளக்கவுரைகளைப் பற்றி ஒவ்வொன்றாகக் கீழே காண்போம்..

🔥 முதலில் குருவிற்கு  ஏன் தக்ஷிணை அளிக்க வேண்டும் என்பதன் விளக்கமும், மற்றும் அவ்வாறு  தக்ஷிணை வழங்குவதில் இருக்கும் மூல சூட்சமம் என்ன என்பதைப் பற்றிய  விளக்கவுரையை இங்கு காண்போம்....🔥

நம் சத்குருநாதார் சீரடி பாபா   வாழ்ந்த காலத்தில் பூஜைக்குப்பின் தக்ஷிணை அளிப்பது என்பது நியமமாக கடைப்பிடிக்கப்பட்டது...கல்ப விருக்க்ஷமாக , காமதேனுவாக குபேர பகவானாக வீற்றிருக்கும் போது   தக்ஷிணை ஏன் அளிக்கப்பட்டது என்றும்,  அவர் ஏன் அனுமதித்தார் என்பதும் பலருக்கும்  கேள்வி எழலாம்...எவருடைய அருகில் அஷ்டசித்திகளும் காத்துக்கொண்டு இருக்கின்றனவோ ,எவருடைய ஆணையை நவநிதிகளும் எதிர்பார்த்துக் கொண்டு சேவகம் செய்ய காத்து  இருக்கின்றனவே .அவருக்கு ஏன் தக்ஷிணை என்றும் நாம் நினைக்கலாம்..

இவ்வுலக வாழ்வில் அனைத்து இன்ப துன்பங்களையும் உதறியவரும்,தனக்கென்று எதுவும் வைத்துக் கொள்ளாதவரும்,வைரமும் கற்களும் சமமாக பாவித்த பகவான்  தக்ஷிணையை ஏன் ஏற்றுக்கொண்டார் என்பது அனைவருக்கும் புதிராக இருக்கின்றது அல்லவா..கேட்டதை அருளும் பாபா  தக்ஷிணையை பெற்றுக் கொண்டது ஏன் என்றால், தன்னுடைய  பக்தர்கள் அனைவரும், நான் என்கின்ற  அகந்தை, அகங்காரம் அற்று, உயரியப் பண்புகளைப் பெற்றிருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே...பலரிடம் தக்ஷிணை அதிகமாக கேட்டு வற்புருத்தியதால் அவர்கள் ஏழைகளிடம் யாசகம் பெற்று தக்ஷிணை அளிக்க  வேண்டும் என்ற சூழ்நிலைக்கு ஆளானார்கள் .இதன் மூலமாக அவர்களுடைய கர்வமும், நான் என்கின்ற பாவமும் நீக்கப்பெற்று அவர்கள் மேன்மை நிலையை அடைந்தார்கள்..

அனைவரையும் சமமாக நேசிக்க கற்றுக் கொண்டார்கள்..சாஸ்திர விதியின்படி எந்த பூஜையும் , பொன்னும் மலர்களும் தக்ஷிணையும் சமர்ப்பணம் செய்யப்படாமல் நிறைவு பெறாது.. இதை நித்திய வழிபாடு செய்தவர்கள் உணர்ந்து இருந்தனர்...பாத பூஜை செய்யும்போதும் குருபூஜை செய்யும்போதும் தக்ஷிணை அளிக்கப்பட்டது தக்ஷிணை கொடுப்பவர்கள் உயர்ந்த பதவியை அடைகின்றார்கள்.

பொருளை தக்ஷிணையாக கொடுப்பவர்கள் உயர்ந்த ஞானத்தையும் , பொன்னை தக்ஷிணையாக கொடுப்பவர்கள் மனத்தூய்மையும் அடைகிறார்கள்..அக்ஷதை சமர்ப்பணம் செய்வதால் ஆயுள் விருத்தியாகிறது...மலர்களும்,தாம்பூலமும் சமர்ப்பணம் செய்வதால் செல்வத்தையும் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தருகின்றன...அதுபோல தக்ஷிணை அளிப்பது  நிறைந்த செல்வத்தை தருகின்றன. குரு பூஜை செய்யும் போதும் பாத பூஜை செய்யும் போதும் தக்ஷிணை  அளிப்பது மிகவும் அவசியமாக கருதப்படுகிறது...

தக்ஷிணை அளிப்பதால் தன்னை நாடி வரும்  பக்தர்கள்  அனைவரும் மனத்தூய்மை அடையவேண்டும் என்று பகவான் விரும்பினார். யாகத்தால், தவத்தால், தானத்தால்  என்னும் தெளிவான சொற்களால் தக்ஷிணை அளிப்பது ஒரு சாதனை யுக்தி என்று ஆத்ம ஞானத்தை நாடுபவர்களுக்கு வேதம் சொல்கின்றது. பிரஜாபதியே தம் சிருக்ஷ்டியான தேவர்களுக்கும், அசுரர்களுக்கும், மனிதர்களுக்கும் குருகுலவாசம் முடிந்த பின்னர் உபதேசம் கேட்கும் போது * த * என்ற ஒரு எழுத்தை அளித்துவிட்டு இதில் இருந்து என்ன தெரிந்து கொண்டீர்கள் என்று கேட்டு உபதேசத்தை மனத்தில் பதிய வைத்தார்... தேவர்கள் * த -* வை  அடக்கத்துடன் வாழுங்கள் என்று புரிந்து கொண்டனர்..அசுரர்கள் அதே *த*  வை தயை காட்டுங்கள் என்று புரிந்து கொண்டனர்...மனிதர்கள் *த* வை தானம் செய்யுங்கள் என்று புரிந்து கொண்டனர்... சாய்மாதா தன் குழந்தைகளிடம் அவர்கள் நன்மைக்காக *த* என்னும் தன்மையில் புலனடக்கத்துடன் வாழுங்கள், தயை காட்டுங்கள், தானம் செய்யுங்கள் என்று கூறினார்.

குருராயர் இந்த ஒர் எழுத்து மந்திரத்தை தம் சிஷ்யர்கள் மூன்று தோஷங்களிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காகவே உபயோகித்தார்...பரம தயாளரான சமர்த்த சாயீ தம்முடைய பக்தர்களின் நலனுக்காகவே தக்ஷிணை கேட்டு வாங்கினார்..தன் குழந்தைகள் அனைவரும் நான் என்கின்ற அகந்தை நீங்கி நாம் என்ற உணர்வை எடுக்க வேண்டும் என்ற படிப்பிணையை அறிவுருத்திக் கொண்டேயிருந்தார்..வேத வசனத்தின் படியும் தஷிணை கொடுக்கப்படாமல் குருபூஜை நிறைவு பெறாது என்பதனை சுட்டிக் காண்பித்தார்...பொதுவாகவே உலகியல் நன்மைகளை விரும்பினாலும், ஆன்மீக முன்னேற்றத்தை அடைய விரும்பினாலும், தாம் விரும்பியதை அடைவதற்காகவும் குருமார்களுக்கு பாகுபாடின்றி தக்ஷிணை அளிக்க வேண்டும்...இன்றும் பகவானுக்கு பூஜை முடிந்த பிறகு நிறைவாக தக்ஷிணையாக இரண்டு ரூபாய், ஆறு ரூபாய், ஒன்பது ரூபாய் மற்றும் பதினொரு ரூபாய் இப்படி தக்ஷிணையை  பகவான் பாதத்தில் சமர்பிக்கின்றனர்.தக்ஷிணை இல்லாவிட்டாலும் கூட பகவானுக்கு  ஆத்மார்த்த  நன்றிகளை கூறி பாத சமர்ப்பணம் செய்யுங்கள்..

🔥ஆத்மார்த்தமாக அன்புடன் அளிக்கப்பட்ட தக்ஷிணையை மட்டும், எவ்வாறு பாபா தன் பக்தர்களிடம் பெற்றுக்கொண்டார் என்பதன் விளக்கவுரையும், மற்றும் தக்ஷிணை வழங்க மனமில்லையென்றால்  தக்ஷிணையை ஏற்றுக்கொள்ள மாட்டார்  என்பதைப் பற்றியும்  அனுபவ விளக்கவுரை இங்கே...🔥.

காகா மகாஜனியின் நண்பரொருவர் கடவுளை உருவமற்ற நிலையில் வழிபடுபவர்..உருவ ஆராதனைக்கு எதிர்ப்பாளர்..  வேடிக்கையாக அவர் சீரடிக்கு காகா மகாஜனியுடன் இரண்டு நிபந்தனைகளின் பேரில் வந்தார்..அந்த நிபந்தனை என்னவென்றால், தாம் சத்குருவின் முன் பணியவோ, தக்ஷிணை கேட்டால் கொடுக்கவோ இயலாது...காகா இந்த நிபந்தனைகளை  ஒத்துக்கொண்டார்...  அவ்விருவரும் ஒரு சனிக்கிழமை இரவு பம்பாயை விட்டுப் புறப்பட்டு சீரடிக்கு அடுத்தநாள் சென்றனர். 

மசூதிப்படிகளில் அவர்கள் காலடி எடுத்து வைத்தவுடனேயே பாபா அந்த நண்பரைத் தூரத்திலேயே பார்த்துக் கீழ்கண்ட இனிமையான சொற்களால் அழைத்தார்.. "காம் யாவேன் ஜி" அதாவது தமிழில் ஏன் வந்தீர் ஐயா...! என்று கூறினார்...இச்சொற்களை பாபா  பேசியக் குரல்  புதிய விதமாக இருந்தது.. பாபாவை தரிசிக்க   வந்திருந்த  அந்நண்பனின் தகப்பனார் குரலைப்  போலவே அச்சாக இருந்தது...அது மறைந்த தனது தந்தையைப் பற்றி பக்தருக்கு  நினைவூட்டியதால்  சந்தோஷத்தால் பேரானந்த  நிலையை அடைந்தார்...பாபாவின்  குரலுக்குத்தான் எத்தகைய வியத்தகு சக்தி என்று ஒரு கணம்  திகைத்து   ஆச்சரியப்பட்டு "இது எனது தந்தையின் குரல்தான் என்பதில் ஐயமில்லை" என்று கூறிவிட்டு, உடனே மேலே சென்று பாபாவின் பாதங்களில் தனது தலையை வைத்து வணங்கினார்..பின்னர் பாபா இரண்டுமுறை தஷிணை கேட்டார்.  காலை ஒருமுறையும், அவர்கள் விடைபெறும்போது மாலை ஒருமுறையும்...ஆனால் அதை காகாவிடமிருந்து மட்டுமே பெற்றுக் கொண்டார்...அவரது நண்பரைக் கேட்கவில்லை...நண்பர் காகாவிடம் கிசுகிசுத்தார்.. "இருமுறை பாபா உம்மிடமிருந்து தக்ஷிணை கேட்டார். நான் உம்முடனே இருந்தும் அவர் ஏன் என்னைப் புறக்கணிக்க வேண்டும்...?" என்றார்..அதற்கு காகா "பாபாவையே கேளும்" என்றார்...

பாபா, காகாவிடம் உம் நண்பர் என்ன  கூறுகின்றார் என்று கேட்டார்.. அப்போது அந்த நண்பர் தாம் ஏதும் தக்ஷிணை கொடுக்கலாமா என்று கேட்டார் என்று பதில் அளித்தார் காகா.. பாபாவும் "உமக்குக்  தக்ஷிணை வழங்க  மனமில்லை.. எனவே உம்மைக் கேட்கவில்லை,  இப்போது பிரியப்பட்டால் தக்ஷிணை அளிக்கலாம் " என்று பதிலளித்தார்..அவர் காகா அளித்த அதே தொகையான பதினேழு ரூபாயை தஷிணையாக அளித்தார்.. பின்னர் வந்திருந்த காகாவின் நண்பரிடம்,  பாபா பின்வரும் மொழிகளை உரைத்தார்.. "தேலியின் ( அதாவது நான் என்கின்ற  கோட்டையின் சுவராகிய  வேற்றுமை உணர்வு) சுவற்றை இடித்தால் தான் நாம் ஒருவரை ஒருவர் முகத்திற்கு முகம் பார்க்கலாம், சந்திக்கலாம்", நான் உம்மிடம் வரலாம், உன்னை உன்னுள் உருவேற்றிக் கடைத்தேற்றலாம்... பின்னர் பாபா, அவர்கள் புறப்படுவதற்கு அனுமதியளித்தார்.  வானிலை மப்பாகவும், பயமுறுத்துவதாகவும் இருந்தபோதும், பாபா அவர்களுக்கு பத்திரமான பிரயாணத்திற்கு உறுதி அளித்தார்.. இருவரும் சௌக்கியமாக பம்பாய் வந்தடைந்தனர்... அவர்கள் வீட்டுக்குச்சென்று வீட்டின் கதவு, ஜன்னல்களைத் திறந்தபோது இரண்டு பக்ஷிகள்  தரையில் விழுந்து இறந்து கிடப்பதையும், ஒன்று அப்போதுதான் ஜன்னல் வழியே பறந்து சென்றதையும் கண்டனர்.  ஜன்னலைத் திறந்து வைத்துவிட்டுப் போயிருந்தால் இரண்டு பக்ஷிகளும் காப்பாற்றப்பட்டிருக்கும்.  ஆனால் அவைகள் தங்களது விதியை எய்தின என்றும்,  மூன்றாவது பக்ஷியைக் காக்கவே பாபா தம்மை அனுப்பி இருப்பதாகவும் அவர் நினைத்தார்...

🔥எங்கும் நிறைந்த தன்னுடைய பேராற்றலாலும், பேரறிவாளும்  சாய் பகவான், தன்னை நாடி வந்த டக்கர் என்ற பக்தரின் ஆழ்மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு  ஏற்றவாறு  உபதேசித்து அருளாசி வழங்கி  உயரிய நிலையை அடைய வைத்தார் என்பதன்  அனுபவ விளக்கவுரை இங்கே...🔥

டக்கர் தரம்ஸி ஜேடாபாஜி என்ற பம்பாய் வக்கீலின் கம்பெனியில் , காகா என்ற  பெயர்கொண்ட பாபாவை வழிபடும்  பக்தர் மேலாளராகப் பணியாற்றி வந்தார்.. முதலாளியும், மேலாளரும் நெருக்கமான பழக்கத்தில் இருந்தனர்.  காகா அடிக்கடி சீரடி போய்க் கொண்டிருப்பதும் அங்கு சில நாட்கள் தங்கி சேவை செய்வதும், பாபா அனுமதியளித்தப் பிறகு திரும்புவதும் டக்கருக்குத் தெரியும்.. டக்கர் என்பவர் பாபாவை தரிசிப்பது மட்டுமல்லாது  சோதிப்பதற்காகவுமே, காகாவுடன் ஷிம்கா விடுமுறையின்போது சீரடி செல்வதற்கு  முடிவுசெய்தார்.. காகா உடனே திரும்புவது நிச்சயமில்லை என்பதால், அவர் தன்னுடன் துணையாக வேறொருவரையும் அழைத்துக்கொண்டார்.  மூவரும் புறப்பட்டனர்.  காகா இரண்டு சேர் காய்ந்த திராட்சையை பாபாவுக்கு அன்பளிப்பாக வாங்கினார்.

அவர்கள் உரிய தருணத்தில் சீரடிக்குப் போய் மசூதிக்கு பாபாவின் தரிசனத்தைப் பெறுவதற்காகச் சென்றனர்..பாபா சாஹேப் தர்கட் அங்கு இருந்தார்...டக்கர் அவரை ஏன் இவ்விடம் வந்தீர்கள் என்று  விசாரித்தார்.. அதற்கு தர்கட் கூறிய  பதில் இங்கே..

தர்கட் :  பாபாவை நேடியாக  தரிசிக்க இங்கு வந்தேன் என்றார்..

டக்கர் :  ஏதாவது அற்புதங்கள் இங்கு நிகழ்கின்றனவா...?

தர்கட் :  எனது நோக்கம் அதுவல்ல (அற்புதத்தைப் பார்த்தல்)..ஆனால் பக்தர்களின் ஆர்வமிக்க பிரார்த்தனைகள் இவ்விடத்தில்  நிறைவேற்றப்படுகின்றன..

பின்னர் காகா பாபாவின்முன் விழுந்து நமஸ்கரித்து திராட்சையைச் சமர்ப்பித்தார்.. பாபா அவைகளை வினியோகிக்கக் கட்டளையிட்டார்...டக்கருக்கும் சில  கிடைத்தது...அவருக்குத் திராட்சை பிடிக்கவில்லை...மேலும் நன்றாகக் கழுவிச் சுத்தப்படுத்தாமல் அவைகளைச் சாப்பிடவேண்டாம் என்று மருத்துவர்கள்  டக்கருக்கு  கூறியிருந்தனர்..எனவே பாபா அளித்த காய்ந்த  திராட்சையைப் பெற  விரும்பவில்லை.ஒதுக்கித் தள்ளவும் முடியவில்லை...சம்பிரதாயத்துக்காக அவைகளை வாயிலிட்டுக் கொண்டார்..ஆனால் விதைகளை என்ன செய்வதென்று தெரியவில்லை..மசூதித் தரையில்  போடுவதற்கும்  அவரால் இயலவில்லை.. எனவே அவரது விருப்பத்துக்கு மாறாக அவைகளைத் தனது சட்டைப் பையில் போட்டுக்கொண்டார். 

பாபா ஒரு ஞானியாயிருந்தால் திராட்சையின் மீது தமக்குள்ள வெறுப்பை அவர் எங்ஙனம் அறியாமலிருந்து அதை உண்ணக்கூறி அவரை வற்புறுத்த முடியும் என்று தன் மனதுக்குள் கூறிக்கொண்டார்...  இவ்வெண்ணம் அவர் மனதில் எழும்பியதும், பாபா அவருக்கு மீண்டும் சில திராட்சைகளைக் கொடுத்தார்...அதை அவரால் உண்ண இயலாமல் கைகளில் வைத்துக் கொண்டிருந்தார்.  அப்போது பாபா அதை உண்ணும்படி அவரை அறிவுருத்தினார்.. அவரும் கீழ்ப்படிந்தார்...அவரது ஆச்சரியத்திற்கேற்ப அவைகளெல்லாம் விதையற்ற திரட்சைகளாயிருந்தன...  அற்புதங்களை அவர் காண விரும்பினார்...  இதோ ஒன்று...!  பாபா, தனது எண்ணத்தை அறிந்து அவரது விருப்பத்திற்கேற்ப விதையுள்ள திராட்சைகளை விதையற்றவைகளாக மாற்றிவிட்டார் என்பதை அவர் அறிவார்...

எத்தகைய வியத்தகு சக்தி,..! மேலும் சோதிக்க விரும்பி பக்கத்திலிருந்து தர்கட்டை அவர் எவ்வகைத் திராட்சை வைத்திருக்கிறார் எனக் கேட்டார்..தர்கட்  "விதையுள்ள திராட்சை" என்றார்.. டக்கருக்கு இதைக்கேட்டு  இன்னும் அதிக வியப்பாயிற்று...  தமது வளர்ந்துவரும் நம்பிக்கையை உறுதிப்படுத்த பாபா ஒரு உண்மையான ஞானியானால், திராட்சை காகாவுக்கு முதலில் கொடுக்கப்பட வேண்டுமென நினைத்தார்... இவ்வெண்ணத்தையும் படித்தறிந்த பாபா, காகாவிலிருந்து தொடங்கி வினியோகம் செய்யப்பட வேண்டுமென ஆணையிட்டார்.  இந்த நிரூபணங்களெல்லாம் தக்கருக்குப் போதுமானவைகளாய் இருந்தன...பின்னர் ஷாமா, டக்கரை காகாவின் எஜமானர் என்று பாபாவிடம்  அறிமுகப்படுத்தினார்.

பாபா :: காகாவின்  எஜமானராக இவர் எங்ஙனம் இருக்க முடியும்...? அவருக்கு முழுமையும் வேறொரு எஜமானர் இருக்கிறார்... காகா இப்பதிலைப் பாராட்டினார்.  தனது தீர்மானத்தை மறந்துவிட்டு டக்கர் பாபாவை வணங்கிய பின்னர் வாதாவுக்குத் திரும்பினார்.

மத்தியான ஆரத்தி முடிந்ததும் அவர்களெல்லாம் புறப்படுவதற்கு பாபாவின் அனுமதி பெறுவதற்காக மசூதிக்குச் சென்றனர்.  ஷாமா அவர்களுக்காகப் பேசினார்.  பின்னர் பாபா இவ்விதமாக உரைத்தார். நிலையற்ற புத்தியுள்ள ஒரு மனிதன் இருந்தான்...அவன் செல்வம், ஆரோக்கியம் முதலியை வாய்க்கப் பெற்றிருந்தான். மனோ வேதனைகளிலிருந்து விடுபட்டவனாக இருந்தான்.. எனினும் தேவையற்ற கவலைகளையும், பாரங்களையும் தன்மீது போட்டுக்கொண்டு, மன அமைதியை இழந்து இங்குமங்கும் சுற்றித் திரிந்தான்...சில சமயம் பாரத்தையெல்லாம் இறக்கிவிட்டும், சில சமயம் அவற்றை மீண்டும் சுமந்தவனாயும் இருந்தான்.  அவனது மனம் ஒரு உறுதிப்பாட்டையே அறிந்ததில்லை..தற்போது  அவனது நிலைகண்டு நான் இரக்கம் கொண்டேன்...அவனிடம் "இப்போது நீ விரும்பும் ஏதாவது ஒரு இடத்தின் (அதாவது குறிக்கோள்) மீது உனது நம்பிக்கையைத் தயவுசெய்து வைப்பாயாக, ஏன் இவ்வாறு சுற்ற வேண்டும்...?  அமைதியாக ஏதாவதொரு இடத்தைப் பற்றிக்கொள்" என்று கூறினேன்...உடனே டக்கர் அப்பொருத்தமான வர்ணனை தமக்குரியதேஎன அறிந்தார்...காக்காவும் தம்முடன் திரும்ப வேண்டுமென அவர் நினைத்தார்.. காகா அவ்வளவு சீக்கிரம் அனுமதிக்கப்படுவார் என்று ஒருவரும் எண்ணவில்லை...பாபா அவரின் இந்த எண்ணத்தையும் படித்தறிந்து காகாவை அவருடைய எஜமானர் டக்கருடன்  திரும்ப அனுமதியளித்தார்... மற்றொருவரின் மனதில் இருக்கும் எண்ணத்தையறியும் பாபாவின் திறமைக்கு மேலுமொரு நிரூபணம் அவருக்குக் கிடைத்தது...

பின்னர் பாபா, காகாவிடமிருந்து ரூ.15 தஷிணையாகக் கேட்டுப்பெற்றார்..அவர் காகாவிடம் பின்வருமாறு கூறினார்.  "எவரிடமிருந்தாவது ஒரு ரூபாய் தஷிணையாகப் பெற்றுக்கொண்டேன் என்றால், அவர்களுக்குப் பத்து மடங்காகத் திருப்பித்தர வேண்டியிருக்கிறது.  நான் ஒருபோதும் எதையும் விலை இல்லாமல் இலவசமாகப் பெறுவது கிடையாது.  சீர்தூக்கிப் பாராது நான் யாரிடமிருந்தும் தஷிணை பெறுவதில்லை.. .யாரை பக்கிரி (என் குரு) சுட்டிக் காண்பிக்கின்றாரோ அவரிடமிருந்து மட்டுமே நான் கேட்கிறேன்... யாரேனும் பக்கிரிக்கு முன்பே கடன்பட்டிருந்தால் அவரிடமிருந்து பணம் வசூலிக்கப்படுகிறது.  எதிர்காலத்தில் கணிசமான அறுவடை செய்வதற்கே அவர்கள் இப்போது கொடுப்பதன் மூலம் விதைக்கிறார்கள்....தர்மத்தைச் செயல்படுத்துவதில் செல்வம் ஒருவழியாக இருக்கவேண்டும்.  இது சுய இன்பத்துக்காகப் பயன்படுத்தப்பட்டால் அது வீணாக்கப்படுகிறது...

நீ அதை ஏற்கனவே கொடுத்திருந்தாலொழிய தற்போது அதைப் பெறமுடியாது..எனவே பெறுவதற்கு மிகச்சிறந்த வழி கொடுத்தலே...  தக்ஷிணை வழங்குவதால் மூலம்  வைராக்கியத் தன்மை மேம்படுகின்றது..  (பற்றின்மை)  அதன் மூலம் பக்தி, ஞானம் இவற்றை விருத்தி செய்கிறது.  ஒன்றைக் கொடுத்துப் பத்தாகத் திரும்பப் பெறுங்கள்"..இம்மொழிகளைக் கேட்டுத் தமது தீர்மானத்தை மறந்தவராய் டக்கர் தாமாகவே ரூ.15ஐ பாபாவின் கைகளில் வழங்கினார்...அவரது எல்லா ஐயங்களும் தீர்க்கப்பட்டு பலவற்றைக் கற்றுக்கொண்டார்.  ஆதலால் சீரடிக்குத் தாம் வந்தது நன்மையானது என்று அவர் எண்ணினார்.

இத்தகைய விஷயங்களைக் கையாளுவதில் பாபாவின் திறமை தனித்தன்மை வாய்ந்தது.  இவைகள் யாவற்றையும் அவர் செய்தபோதும் மொத்தத்தில் இவைகளின் மேல் சாராதவராகவே இருந்தார்.  யாராவது அவரை வணங்குவதோ, அல்லது வணங்காமலிருப்பதோ, அவருக்குத் தக்ஷிணை கொடுப்பதோ, கொடுக்காமல் இருப்பதோ, இவைகள் எல்லாம் அவருக்கு ஒன்றே... அவர் ஒருவரையும் அவமதிக்கவில்லை.  தாம் வணங்கப்படுவதால் அவர் மகிழ்ச்சியடைந்ததில்லை.  அன்றி தாம் மதிக்கப்படாததால் பாபா  துன்புற்றதுமில்லை...  மாறுபட்ட இருமைகளை (சுகம், துக்கம் போன்றவற்றை) அவர் கடந்து நின்றார்...

🔥தீயக் கனவுக் காட்சியின் காரணமாக தூக்கமின்மையால் பாதிக்கப்பட்ட பக்தர் ,எவ்வாறு பாபாவின் ஆசிப்பெற்ற உதியால் குணப்படுத்தப்பட்டார் என்பதன் அனுபவ உரை.இங்கே..🔥

பாந்த்ராவில் காயஸ்த பிரபு ஜாதியைச் சேர்ந்த ஒருவர் நெடுநாள் தூக்கமின்மை நோயால் அல்லலுற்றார்..  அவர் படுக்கையில் படுத்தவுடனே அவரது இறந்துபோன தந்தையார் கனவில் தோன்றி அவரைக் கடுமையாகத் திட்டினார்.. இது அவரது தூக்கத்தைக் கலைத்து இரவு முழுவதும் அவரை இருப்புக் கொள்ளாமல் செய்தது.  ஒவ்வொரு நாள் இரவும் இது நடந்தது..அம்மனிதருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.. ஒருநாள் பாபாவின் பக்தர் ஒருவரிடம்  இவ்விஷயத்தைப்  பற்றிக் கூறி கலந்தாலோசித்தார். சக்தி வாய்ந்த பல தீர்க்க முடியாத வியாதிகளை கணம் நேரத்தில்  போக்குகின்ற பாபாவின் உதி ஒன்றேப் போதுமானது என்று கூறினார்..

மேலும் அவருக்குச் சிறிது உதி கொடுத்து அவர் படுக்கைக்குப் போகும் முன்னர், அதைச் சிறிது நெற்றியிலிட்டுக் கொள்ளும்படியும், அவ்வுதிப் பொட்டலத்தை தலையணைக்கடியில் வைத்துக் கொள்ளும் படியும் கூறினார்.. இதனைக் கடைப்பிடித்தவுடன் உடனே மாற்றம் கிடைத்தது.. அவரது நம்பிக்கைக்கு ஏற்றாற்போல் அவருக்கு நல்ல உறக்கம் ஏற்பட்டது.  முன்னர் போல் எவ்விதத் தொந்தரவும் இல்லை...இந்தச் சிகிச்சையையே அவர் தொடர்ந்து பின்பற்றி எப்போதும் சாயீயையே நினைவு கூர்ந்தார்.  பின்னர் சாயீபாபாவின் படம் ஒன்றை பெற்று, தனது தலையணைக்கு அருகில் அதைத் தொங்கவிட்டு அதனை தினந்தோறும் வழிபடத் தொடங்கி வியாழக்கிழமைகளில் பூமாலை, நிவேதனம்  முதலியவற்றைச் சமர்ப்பித்தார்... முமுவதும் கனவுத் தொந்தரவிலிருந்து விடுதலை அடைந்தார்...

🔥பாபாவின் ஆத்மார்த்தமான உயரிய பக்தர் பாலாஜி பாடீல் நெவாஸ்கர் என்பவர், எவ்வாறு பாபாவிடம்  தன்னிடமுள்ள அனைத்தும்  ஒப்படைத்து சரணாகதி அடைந்து சேவை செய்தார் என்பதன் விளக்கவுரை இங்கே...🔥

இம்மனிதர் பாபாவின் ஒரு பெரும் பக்தர்... மிகமிகச் சிறப்பான பற்றற்ற பணியைப் பாபாவுக்கு அவர் செய்தார்... ஒவ்வொரு நாளும் சீரடியில் பாபா தமது தினசரி நியமமாக பக்தர்கள் நடந்து வரும் தெருக்கள், பாதைகள் எல்லாவற்றையும் பெருக்கி சுத்தமாக்கினார்.  அவருக்குப் பின்னர், இப்பணியானது ராதாகிருஷ்ணமாயீ  என்ற அம்மையாரின் மூலமாகவும், அதற்குப்பின் அப்துல் என்ற பக்தர் மூலமாக இப்பணி  சிறப்புடன் செய்யப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் பாலாஜி கோதுமை அறுவடை செய்தபோது அனைத்தையும் பாபாவுக்குக் கொண்டுவந்து சமர்ப்பித்துவிடுவார்...  மீதமாக பாபா எதைக் கொடுத்தாரோ அதைப் பெற்றுக் கொண்டு தமது குடும்ப சம்ரக்ஷணத்தை செய்தார்...இந்நடைமுறையானது நெவாஸ்கரால்  பல ஆண்டுகள் செய்யப்பட்டு அவருக்குப்பின் அவரது மகனாலும் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது...

🔥பாபாவின் பேராற்றலும் , பேரருளும் நிறைந்த உதி என்ற விபூதியினால், எவ்வாறு உணவுப் பற்றாக்குறை  நீங்கி அள்ள அள்ளக் குறையாமல் அன்னத்தை அளித்து விருந்து அளிப்பவரின் மனக்குறையைத் தீர்த்தார் என்பதன் விளக்கவுரை இங்கே...🔥

ஒருமுறை பாலாஜியின் திவசத்தின்போது சில விருந்தினர்கள் அழைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு சமைக்கப்பட்டது.. ஆனால் சாப்பாட்டு நேரத்தில் அழைக்கப்பட்டதைப் போல் மூன்று மடங்குபேர் வந்துவிட்டனர்...  பாலாஜியின் மனைவி திகைத்துப் போய்விட்டாள்.  குழுமியிருந்த மக்களுக்கு உணவு பற்றாது என்றும், அது பற்றாது போகுமானால் குடும்பத்தின் கௌரவம் பாதிக்கப்படும் என்றும் அவள் நினைத்தாள்.அவளது மாமியார் "பயப்படாதே, அது நம்முடைய உணவல்ல, சாயீயினுடையது.... ஒவ்வொரு பாத்திரத்திலும் கொஞ்சம் உதியைப் போட்டு ஒரு துணியால் மூடி அதைத் திறக்காமலே அவர்களுக்குப் பரிமாறு!.. சாயீ  நம்மை இந்த அவமானத்திலிருந்து காப்பார்" என்று கூறித் தேற்றினாள்..அவள் கூறியபடியே செய்தாள்.  தங்களது வியப்புக்கும், மகிழ்வுக்கும் ஏற்ப பரிமாறப்பட்ட உணவு எல்லோருக்கும் போதுமானதாக இருந்ததோடு மட்டுமல்லாமல் ஏராளமாக மீதமும் இருந்ததைக் கண்டார்கள்...  "ஒருவன் எவ்வளவு அதிகம் மனமார்ந்த அக்கறையுடன் உணர்கிறானோ அவ்வளவு அதிகமாக அவன் செயலுருவாக்கிக் காண்கிறான்" என்னும் மொழி இவ்விஷயத்தில் நிரூபணமாக்கப்பட்டது.

என்னுடைய நண்பரும் பாபாவின் ஆத்மார்த்தமான  பக்தருமான B.A.Soukul (First Class Sub-Magistrate) இதைப்போன்ற ஒரு விஷயத்தை என்னிடம் அறிவித்தார்...1943-ஆம் ஆண்டு மாசி மாதம், அகமத்நகர் ஜில்லாவிலுள்ள கர்ஜத்தில் பூஜைத் திருவிழாவும், பொதுஜன விருந்தும் நடந்தது...ஆனால்  நிகழ்ச்சிக்கு, விருந்துக்கு அழைக்கப்பட்டதைப் போல் ஐந்து மடங்குபேர் வந்துவிட்டனர்... அவர்கள் அனைவருக்கும் உணவு அளிக்கப்பட்டது...  பாபாவின் அருளால் அனைவரும் வியக்கும் வண்ணம் எவ்வித உணவுக்குறைவும் உணரப்படவில்லை...

🔥அனைத்து உயிரினங்களிலும் பாபா நீக்கமற நிறைந்து இருக்கின்றார் என்பதை உணர்ந்து கொண்டதால்,   பாம்பையே பாபாவாகப் பாவித்து போற்றிய பாலாஜி என்ற பக்தரின் குடும்பத்திற்கு எவ்வாறு ஆசி வழங்கினார் என்பதன் விளக்கவுரை இங்கே...🔥

ஒருமுறை சீரடியைச் சேர்ந்த ரகு பாடீல் என்பவர், நெவாசைச் சேர்ந்த பாலாஜி பாடீல் என்பவரை தொடர்புக் கொண்டார்..  அன்று மாலை மாட்டுத் தொழுவத்தில் ஒரு பாம்பு சீறிக்கொண்டு உள் நுழைவதைக் கண்டார்...  எல்லா மாடுகளும் பீதியடைந்து நகரத் தொடங்கின...வீட்டினரும் திகிலடைந்தனர்.. ஆனால் பாலாஜி தனது வீட்டில் சாயீயே பாம்பாகத் தோன்றியிருக்கிறார் என எண்ணினார்.  துளிகூட பயப்படாமல் ஒரு கிண்ணத்தில் பாலை கொண்டுவந்து பாம்பின் முன்வைத்து, "பாபா...! ஏன் சீறி சப்தப்படுத்துகிறீர்கள்.?  ஏன் எங்களைப் பயமுறுத்த விரும்புகிறீர்கள்..?  இந்தக் கிண்ணத்திலுள்ள பாலை அமைதியான மனதுடன் அருந்துங்கள்" என்று கூறிக்கொண்டே அதனருகில் குழப்பமுறாமல் அமர்ந்தார்.மற்றவர்கள் பீதியடைந்தனர்...என்ன செய்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை...சிறிது நேரத்தில் பாம்பு தானாகவே மறைந்து போய்விட்டது.. யாருக்கும் அது எங்கு சென்றதெனத் தெரியாது...மாட்டுத் தொழுவத்தில் தேடியும் அது காணப்படவில்லை.

பாலாஜிக்கு இரண்டு மனைவிகளும், சில குழந்தைகளும் இருந்தனர்.அவர்கள் அனைவரும்  சில சமயம் நெவாஸில் இருந்து பாபாவின் தரிசனத்துக்காக சீரடிக்கு வருவர்...அப்போது பாபா சேலையும் மற்ற உடைகளும் வாங்கி அவைகளைத் தமது ஆசியுடன் அவர்களுக்கு அளிப்பார்.....

(** கோயம்புத்தூரில் இதே மாதிரியாக 1943 தை 7ஆம் தேதி வியாழன் மாலை 3:30 மணிக்கு பாபா பாம்பாகத் தோன்றிய விவரம் சாயிசுதா சஞ்சிகையில் (தொகுப்பு 3 , எண் 7&8 , ஜனவரி 1943 , பக்கம் 26) பதிப்பிக்கப்பட்டிருக்கிறது.  அங்கு அப்பாம்பு பஜனையைக் கேட்டது. மலரையும், பாலையும் ஏற்றுக்கொண்டது... ஆயிரக்கணக்கான மக்கள் தன்னைக் காணவும், புகைப்படம் எடுக்கவும் அனுமதித்தது...போட்டோ எடுப்பதற்காக பாபாவின் படம் அதன் அருகில் வைக்கப்பட்டது....படமும், பாம்பும் புகைப்படப் பதிவில்  மிகச்சிறப்பாக பதிந்திருக்கிறது. விவரங்களுக்கும், புகைப்படத்திற்கும்  வாசகர்கள் மேற்குறித்த சாயிசுதாவை காண்க.)

ஓம் ஶ்ரீ சாய்ராம்..🙏🙏

ஸ்ரீ சாயீயைப் பணிக...அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்..🙏🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியானபீடம்...🙏🙏🏻🙏🏻

https://youtu.be/uShMTtBmHcM