ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏
ஶ்ரீசீரடி சாயீபகவானின் உபதேச பொன்மொழிகள்...🙏🙏🙏
உண்மையை தேடி...!🙏
குருஷேத்திரபோர் என்றால் நாம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது இருபுறமும் படைகள் அணிவகுத்திருக்க, கிருஷ்ணர் தேர் சாரதியாய் வீற்றிருக்க, அர்ஜுனன் இருக்கையில் அமர்ந்தபடி இருக்கும் படக்காட்சிதான் நினைவுக்கு வரும்...இது வெறும் படம் மட்டுமில்ல. நம் வாழ்வியல் தத்துவத்தை எடுத்துச்சொல்வதே இப்படம். இதில் இருக்கும் ஒவ்வொரு குறியீடும் நம்மில் இருக்கும் அம்சத்தின் குறியீடாகும்...
முதலில் நம்மிடம் இருக்கும் எவையெல்லாம் குறியீடுன்னு சொல்றேன் நிதானமாக கேளுங்கள்...நாம் வாழும் இந்த பூமிதான் போர்க்களம், நம்மோட வாழ்க்கைதான் அதில் நடக்கும் போர்...கிருஷ்ணனும் அர்ஜுனனும் அமர்ந்திருக்கும் தேர் நமது உடல்...அர்ஜுனர் தான் நம்ம ஆன்மா, உயிர், ஜீவன் எனப்படும் தனிமனிதன்...தேர்க்குதிரைகள் நம்ம மனசு, கிருஷ்ணர்தான் நம்ம மனசாட்சி, உள்ளுணர்வு வடிவில் இருக்கும் பரமாத்மா, பரம்பொருள் எனப்படும் கடவுள்...கிருஷ்ணர் கையிலிருக்கும் குதிரையின் கடிவாளம் நம்ம விதி...கிருஷ்ணர் கையிலிருக்கும் சாட்டை- நம்ம அறிவு புத்திசாலித்தனத்தை குறிக்குது...அர்ஜுனனின் தேர்க்கொடியிலிருக்கும் ஆஞ்சனேயர்- நம்முடைய நல்ல நடத்தை, நல்லொழுக்கம். எதிர் அணியில் அணிவகுத்து நிற்கும் கௌரவப்படைகள்தான் நம்மோட தப்புகள் எனப்படும் கர்மா, வினை தீவினைகள். கௌரவர்கள் எப்படி வியூகம் மாத்தி, மாத்தி அமைச்சு போரிட்டாங்களோ..! அதுமாதிரி நமது தீவினைகள்/ கர்மாக்கள் ஒரு பிரச்சனை மாற்றி ஒரு பிரச்சனையாக கொடுத்துக்கொண்டே இருக்கும்...அர்ஜுனன் பக்கமிருக்கும் பாண்டவர் படை நாம் செய்த புண்ணியங்கள். அவை நமக்கு சாதகமாக நம்மை காப்பாற்ற முயற்சிக்கின்றன. நாம் செய்த தீவினைகள் கொடுக்கும் தொல்லைகளை சமாளிக்க நாம் செய்த புண்ணியங்கள் போராடும். குதிரைகள் இழுத்துச் செல்லும் திசையில் எப்படி தேர் செல்கிறதோ அப்படிதான் நம் உடலும் மனம் இழுத்துச் செல்லும் திசையில்போகுது. உடலின் தேவைக்கேற்பதான் மனசு செயல்படும். பசியெடுத்தால் உணவினை தேடி கால்கள் செல்லும். அதனால்தான் தேர் நம்ம உடம்பை குறிக்குது. அர்ஜுனர்தான் தனிமனிதன்னு சொன்னேன்ல. அர்ஜுனர் தேரில் நிற்பதை போன்று ஜீவாத்மா நம் உடலில் உரைகிறது. அர்ஜுனர் அம்புகள் எய்வது மாதிரிதான் நமது செயல்கள் கடமையை செய்வது மட்டுமே! .மனம் குதிரை போன்றது. அது ஒரே சமயத்தில் நான்கு விஷயங்களை சிந்திக்கும் ஆற்றல் கொண்டது. ஒரேசமயத்தில் நான்கு விஷயத்தை சிந்திக்கக் கூடியதா இருந்தாலும், ஒரு முகப்பட்டு செயல்பட வேண்டும். மனதை அடக்கி நம் விருப்பப்படி நடக்க வைப்பதும் குதிரையை அடக்குவது போலதான். மிகவும் முரட்டுத் தனமாக நடந்து கொண்டால் குதிரை முரண்டு பிடிக்கும். அதனால் மெல்லமெல்ல தட்டி கொடுத்து வழிக்கு கொண்டு வர வேண்டும். கொள்ளு வைக்கவேண்டிய நேரத்தில் கொள்ளு வைத்தும், நீர் வைக்கவேண்டிய நேரத்தில் நீரினை காட்டியும் அதை தாஜா பண்ணனும். அதேமாதிரிதான் நம்ம மனசும் அப்படித் தான். ஓரேயடியாக அடக்கி வைத்தால் மன அழுத்தம், சோர்வு வரும். அதனால, மனசு சொல்றதை முழுக்க ஒதுக்காம, அது ஆசைப்படியும் அப்பப்ப நடக்கனும். அப்பதான் அது கிருஷ்ணர் ஓட்டிச்செல்லும் குதிரை போல கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். கிருஷ்ணர் கையிலிருக்கும் கடிவாளம்தான் விதி. மனம் விதியின் பிடியில் இருக்குது. விதி எந்த திசையில் திரும்புகிறதோ மனமும் அந்த திசையில்தான் பயணிக்கும்...
கடிவாளத்தை பிடித்துக்கொண்டிருக்கும் கிருஷ்ணர் கடவுள். விதியை கடவுள் இயக்குகிறார். கடவுள் நம் விதியை இயக்கனும்ன்னா நாம இறைவனின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கனும். கிருஷ்ணர் கையிலிருக்கும் சாட்டைதான் நம் புத்தி/அறிவு. புத்தி மனசாட்சியின் பிடியில் இருக்குது. புத்தி மனசாட்சியின் பிடியில் இருந்தால் மனம் சரியான திசையில் போகும்போது அதை வேகப்படுத்தும். தவறான திசையில் போகும் போது இயங்காமல் இருந்து, வேகத்தை குறைச்சுடும். கிருஷ்ணர் எனப்படும் கடவுள் மனசாட்சி, ஆழ்மனம், பேருணர்வு, பரமாத்மா.. இந்த மனசாட்சியானது இந்த வாழ்க்கையால் துளிகூட பாதிக்கப்படுவது இல்லை. இது ஜீவாத்மாவிற்கு துணையாக இந்த வாழ்க்கையில் பங்கெடுக்குது. நல்லொழுக்கமெனும் தேர்க்கொடியிலிருக்கும் ஆஞ்சநேயர்- . ஆஞ்சநேயர் நல்லொழுக்கத்தை குறிக்கிறார். நல்லொழுக்கம் நம்மக்கிட்ட இருக்கும்வரை நமக்கு எந்த பாதிப்பும் வராது.. இந்த வாழ்வியலை உணர்த்துவதே இந்த அர்ஜுனர்-கிருஷ்ணர் இருக்கும் பகவத் கீதை குருஷேத்திர போரின் தத்துவம்...
ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏