சனி, செப்டம்பர் 16, 2023

நல்ல கர்மா எது..? கெட்ட கர்மா எது..?


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

நல்ல கர்மா எது..? கெட்ட கர்மா எது..?

ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பின்விளைவு உண்டு. உங்கள் செயலுக்கான விளைவு எப்படியிருந்தாலும், அதை நீங்கள் சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளத் தயாரானால், அது நல்லதா கெட்டதா என்ற கேள்வியே வராது. கர்மவினைகள் பற்றிய கவலையே இராது...மற்றபடி, பாவம், புண்ணியம் என்பதெல்லாம் சொர்க்கம் பற்றிப் பேசுபவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள்...இயற்கை என்பது கொடூரமானதும் இல்லை. கருணையானதும் இல்லை. நல்லது கெட்டது என்பதெல்லாம் மனிதரின் பார்வையில் உள்ள கோணம்தான்..

ஓம் ஶ்ரீ சாயீராம்....🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻

உலக வாழ்க்கை அல்லது ஆன்மீக பயிற்சி, எதுவாக இருப்பினும், அனைத்தையும் அது குருவிற்கு செய்யும் சேவை...!

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

🔥உலக வாழ்க்கை அல்லது ஆன்மீக பயிற்சி, எதுவாக இருப்பினும், அனைத்தையும் அது குருவிற்கு செய்யும் சேவை என எண்ணி செய்வதால் ஆன்மீக உணர்வு அதிகரிப்பதில் அதிகபட்ச பலன் கிடைக்கிறது..🔥

‘குரு என்பவர் யார்‘  ஒரு ஸாதகரின் வாழ்வில் குருவின் முக்கியத்துவம் என்ன என்பது பற்றி விளக்குகிறோம்....🙏🏻

இறைவனின் வெளிப்படாத  (நிர்குண) வழிகாட்டும் தத்துவத்தின் மனித (ஸகுண) ரூபமே குரு என்பவர் ஆவார். இவ்வாழ்க்கை இறைவனின் கருணையால் நாம் பெற்ற பரிசு ஆகும். இறைவனை உணர்ந்து அவருடன் ஒன்றர இணைய, பிறப்பு-இறப்பு சக்கரத்திலிருந்து விடுவிக்கும் பொருட்டு பல ஜென்மங்களாக குரு அல்லது இறைவனின் வழிகாட்டும் தத்துவம் பொறுமையாக நம்முடன் பயணித்திருக்கிறது. இறைவனுடன் ஒன்றியிருக்கும் நிலையில் அமைதியில் திளைக்கிறோம். குரு எவ்வளவு தூரம் நம்மை வழிகாட்டி வளர்த்து விடுகிறார் எனவும், நம்மை திரும்ப திரும்ப காப்பாற்றி இருக்கிறார் எனவும் புரிந்து கொள்கையில் நம்  நன்றியுணர்வு மேலோங்குகிறது.

குருவிற்கு செய்யும் சேவை இறைவனுக்கு செய்யும் சேவையாகும். மனித ரூபத்தில் இருக்கும் இறைவனுக்கு சேவை செய்து மகிழும் வாய்ப்பு நம்மில் அனைவருக்கும் கிடைப்பதில்லை. எனினும் நாம் செய்யும் எல்லா காரியங்களையும் குருவிற்கு செய்யும் சேவையாக எண்ணலாம்...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻

வெள்ளி, செப்டம்பர் 15, 2023

சுழற்சியை உடைப்பதுதான் ஆன்மீகம்

 

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த உபதேச பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

உங்களின் எண்ணங்களின் சுழற்சியை உடைப்பது தான் ஆன்மீகம்...🙏🏻

செக்குமாடு சுற்றி சுற்றி வருவதுபோல மீண்டும் மீண்டும் சுழல்கிறீர்கள். குழந்தையாக இருக்கும்போது விளையாட்டு, இளமையில் வேறு நாட்டம்… நாற்பது வயதைத் தாண்டினால், குழப்பமான மனநிலை. அறுபது வயதில் ‘என்ன நடக்கிறது எனக்கு..? எதற்காக இந்த வாழ்க்கை..?’ என்ற கேள்வி. இதைப்போய் ஒருசிலர் ஆன்மீகம் என்று நினைத்துக் கொண்டு விடுகிறார்கள். அப்படியல்ல, இது வெறும் சுழற்சிதான்...இப்படித் தான் உங்கள் மூதாதையர்களின் அதே பழைய சக்கரம் உங்கள் மூலமாக இப்போது சுழன்று கொண்டிருக்கிறது...

ஆன்மீகம் என்றால் உங்கள் தாத்தாவும், அப்பாவும், அம்மாவும் உங்கள் மூலமாக ஜீவிப்பதற்கு அனுமதிக்காமல் உங்களது வாழ்க்கையை ஒரு புத்தம்புது உயிராக, ஒரு புதிய சாத்தியமாக நீங்களாகவே உருவாக்கிக் கொள்வதுதான்...இதுதான் ஆன்மீகம்... இந்த சுழற்சியை உடைப்பதுதான் ஆன்மீகம்...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🏻🙏🏻🙏🏻


இறைவனின் அருளைப் பெற தடைகளாக இருப்பது என்னென்ன..? தடைகளை நீக்கி கொள்வது எப்படி..?


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த  உபதேச பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

இறைவனின் அருளைப் பெற தடைகளாக இருப்பது என்னென்ன..? தடைகளை நீக்கி கொள்வது எப்படி..?

இறைவன் எப்போதுமே அருள் செய்கிறான். அதனை உணர நமக்கு இருக்கும் தடை என்பது மும்மலங்கள்....ஆணவம் , கன்மம் , மாயை . என்பர். பெரியோர்..ஆணவம் - நான் எனது என்று வருவது...

கன்மம் - எனது என்கிற அகந்தையால் பிறரை இழிவாகவும் குறைவாகவும் நினைப்பது நடத்துவது , பொறாமைப் படுவது..

மாயை - வேடிக்கைகளில் மூழ்கி இருப்பது.

இவற்றை இந்த நொடி மட்டும் நீக்கினாலும் இறைவன் அருள்வதை உணரலாம். முயற்சித்துப் பாருங்கள்...அதற்கான உபாயமும் கூறுகின்றேன்....

நான் என்பதை விட எனது என்பனவற்றை சற்றே விலக்குங்கள்...அனைவரையும் உங்களின் ஒரு பிரதியாக பாருங்கள்....

மாயையை விலக்க உலக ஒட்டத்திலிருந்து சில நிமிடம் தள்ளி நின்று பாருங்கள்...

ஓம் ஶ்ரீ சாயீராம்....🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்..🙏🏻🙏🏻

திருமூலர் சொல்...!

 

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேச உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

வணங்க வேண்டாம் வடிவை அறிந்தபின்...

இணங்க வேண்டாம் இனி உலகோருடன்...

நுணங்கு கல்வியும் நூல்களும் என் செய்யும்

பிணங்க வேண்டாம் பிதற்றை ஒழியுமே"

திருமூலர்...🙏🏻

வெறுமனே நூல்களைப் படிப்பதனால் கடவுளைப் பற்றிய அறிவு கிடைக்காது. கடவுளின் உண்மையான வடிவத்தை அறிந்து கொண்டால் அதன் பிறகு இந்த உலகத்தில் நீ வேறு எதுவமே தெரிய வேண்டியதில்லை, தேவையில்லாமல் சண்டை (பிதற்றல்) போட வேண்டாம் என்று திருமூலர் கூறுகிறார்...

ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🏻🙏🏻

எங்கு இருந்தாலும், எந்தப் பிறவியெடுத்திருந்தாலும் பக்தன் எப்படி இருக்க வேண்டும் என்பதில் ஒரு நியதி இருக்கிறது .


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த உபதேச பொன்மொழிகள்.....🙏🏻🙏🏻

வண்டு அங்குமிங்கும் பூக்களைத் தேடி அலைவது போல ஆழமான மடுவிலும், மக்கள் நடமாட்டமில்லாத கொடிய காட்டிலும், பரந்த மலையிலும் (உம்மை) தேடிப் புகுந்து அலைகிறான் அறிவில்லாத மனிதன்.... உமையின் மணாளா..! 🙏🏻

உமக்கு மனமாகிற ஒரே ஒரு தாமரையைச் சமர்ப்பித்துவிட்டு, இங்கங்கு அலையாமல் ஒரே இடத்தில் சுகமாக இருப்பதற்கு மனிதன் அறிந்துக் கொள்ளவில்லையே..! என்னே ஆச்சரியம்..!..எங்கு இருந்தாலும், எந்தப் பிறவியெடுத்திருந்தாலும் பக்தன் எப்படி இருக்க வேண்டும் என்பதில் ஒரு நியதி இருக்கிறது . அதுதான் அவனது மனநிலையைப் பற்றியது....

சரணடைய வேண்டும் என்ற ஆவல் மட்டும் ஒருவனுக்கு இருந்தால் போதாது. அதைச் செய்து, அது நீடித்து நிற்பதற்கு அவனது மனநிலை பக்குவப்பட்டிருக்க வேண்டும். உலக வாழ்வில் அல்லல்பட்டு, ஏற்றம் இறக்கம் எல்லாம் கண்டு அனுபவித்த ஒருவனுக்கு பக்தி செய்து சரணடைவது என்பதும், தொடக்கத்தில் மற்றும் ஒரு உலகியல் செயல் போலத்தான் தோன்றும். ஏனென்றால் அவன் அப்படியொரு பழக்கத்திற்கு அடிமை போல் ஆகிவிட்டான். அதனால் மற்ற செயல்களைப் போலவே அதையும் நினைத்துக்கொண்டு வெவ்வேறு விதமான பூக்களைக் கொண்டு ஆராதிப்பது என்பது ஒரு வழக்கம் என்பதால் அவன் எங்கெங்கோ போய் கஷ்டப்பட்டு விதவிதமான பூக்களையெல்லாம் தேடிக்கொண்டு வந்தால் பகவானுக்கு மிகவும் பிடித்திருக்கும் என்று நினைத்து அதைச் செய்ய முயல்கிறான். ஆனால் பகவான் விரும்புவதோ ஒன்றே ஒன்றைத்தான்.....

அதுதான் அவனது மனமாகிய தாமரைப் பூ. அதை அவரிடம் சமர்ப்பிப்பது ஒன்றே சரணாகதியின் முழு அடையாளம். அது தெரியாமல் இருக்கிறானே என்று அவர் ஆச்சரியப்படுவார்....இங்கு மனத்தை தாமரைப் பூவோடு ஒப்பு நோக்கியிருப்பது மிகவும் பொருத்தமானது ஆகும். பூஜை செய்யும்போது தாமரை மொக்கை ஒவ்வொரு இதழாகப் பிரித்து வரும் முழுத் தாமரைப் பூவை பகவானுக்குச் சமர்ப்பிப்பார்கள். அதாவது மனத்தை அப்படி சமர்ப்பிக்கவேண்டும் என்பது அதன் பொருள். ஏனென்றால் மனம் என்று தனியான பொருள் ஒன்று கிடையாது. ரமணர் “எண்ணங்களே மனம், யாவினும் நான் எனும் எண்ணமே மூலமாம்” என்று சொல்வார். 

அதாவது எண்ணங்களின் தொகுப்பே மனம்.... எண்ணங்கள் எல்லாவற்றிலும் முதல் எண்ணம் “நான்” என்னும் அகந்தை... அது பகவானை விட்டுவிட்ட தனியான “நான்” எனும் எண்ணம். அதை பகவானிடம் சமர்ப்பித்தால் மற்ற எண்ணங்கள் எல்லாமும் அவரிடம் தஞ்சம் ஆன மாதிரிதான். எண்ணங்கள் எதுவுமே தனியாக வராது. அலை அலையாகத் தான் கிளம்பும்.... ஒவ்வொன்றும் தாமரையின் இதழ்கள் போல ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவைதான்... அவை அனைத்தையும் கோர்த்து வைத்திருப்பது அந்த முதல் எண்ணமான அகந்தை. அதை பகவானிடம் கொடுத்து விட்டு, நிம்மதியாக இருப்பதை விட்டு, உலகில் உள்ள மற்ற பூக்களைத் தேடி பக்தன் ஏன் போக வேண்டும்..? அதற்கு அவசியமில்லை...உன்னிடம் உள்ளத் தாமரையைக் கொடுத்து விட்டு உள்ளதை உணர் என்று இங்கு உணர்த்தபடுகிறது...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻

வியாழன், செப்டம்பர் 14, 2023

கடவுள் என்னுடன் தொடர்பில் இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்வது எப்படி..?

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ....🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

கடவுள் என்னுடன் தொடர்பில் இருக்கிறார் என்பதை தெரிந்துக் கொள்வது எப்படி..?

கடவுளிடமிருந்து வந்த உறுதிப்படுத்தப்பட்ட செய்தி...நான் ஒவ்வொரு மனிதனிடமும் பேசுகின்றேன்.. எப்பொழுதும்.... நான் யாரிடம் பேசினேன் என்பது அல்ல கேள்வி, யார் யாரெல்லாம் நான் பேசியதை கவனித்தார்கள் என்பது தான் என் கேள்வி...இப்படி உங்களோடு தொடர்பு கொள்ள இந்த பரந்த அண்டம் (பிரபஞ்சம்) முழுவதும் இயங்குகின்றேன். ஆகவே இனிமேலாவது நான் பேசுவதை, வெவ்வேறு வழிகளில் உங்களோடு தொடர்பு கொள்வதை கவனிக்க ஆரம்பியுங்கள்.. மிகவும் கவனமாகவும், நுட்பமாகவும்...அடுத்து நீங்கள் கேட்கும் பாடலின் சில வார்த்தைகளாகவோ, வாசிக்கும் கட்டுரையில் சில தகவல்களாகவோ, தற்செயலாக நீங்கள் கேட்கும் அறிமுகமற்ற ஒருவரின் அபிப்பிராயமாகவோ அது வெளிப்படலாம்...

மேலும், சலசலக்கும் ஆற்றின் ஓசையும், ஆர்ப்பரிக்கும் கடலின் அலையோசையும், மென்மையாக தொட்டு செல்லும் தென்றலின் கிசுகிசுப்பும் உங்களிடம் பேச நான் படைத்த சில உத்திகள் தான். இவற்றில் ஏதாவது ஒன்றில் உட்புகுந்து வருவேன்....எண்ணங்கள், உணர்ச்சிகள், அனுபவங்கள், வார்த்தைகள் எல்லாமே என்னுடைய வழிமுறைகள் தான்.. நீங்கள் கவனிக்க வேண்டும், அவ்வளவு தான்...மேலும் , நீங்கள் அழைக்காமல் நான் வருவதில்லை....ஆனால், என்னுடைய அதிமுக்கியமான கருவி உங்கள் உள்ளேயேயிருந்தே பேசும் எனது குரல் தான்…இதன் மூலம் உங்களை விரைவில் அணுக முடிகிறது. மேலும், உங்களுக்கும் மிக நெருக்கமாக இருப்பதால, நான் உரத்த குரலில் பேசுவது போலிருக்கும்...அந்த குரல் தான் உண்மையா, பொய்யா; சரியா, தவறா..நல்லதா, கெட்டதா என்பதை உங்களுக்கு சொல்லும் குரல்....அந்த குரல் தான் உங்கள் வாழ்க்கை படகு கரை சேர திசைகாட்டும் கருவி.ஆனால், அதை நீங்கள் ஏற்றுக்கொண்டு அனுமதிக்க வேண்டும்..ஆகவே, கடவுள், உங்களுக்கான சரியான எண்ணங்கள், வார்த்தைகள் அல்லது உணர்வுகளை தேவையான சரியான நேரத்தில் கொண்டு வருவார் - தேவை விழிப்புணர்வு மட்டுமே....

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻

இறைவன் இருக்கிறார் என்பதன் தீவிர விழிப்புணர்வே ஆன்மீக உணர்வு ஆகும்..!

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த உபதேச பொன்மொழிகள்...🙏🏻🙏🏻🙏🏻

இறைவன் இருக்கிறார் என்பதன் தீவிர விழிப்புணர்வே ஆன்மீக உணர்வு ஆகும். இறைவன் மீது கொண்டுள்ள ஆன்மீக உணர்வை அதிகரிப்பது நம்  ஆன்மீக பாதையின் முக்கியமான அங்கமாகும். ஏனென்றால், இறைவன் மீது தீவிர ஆன்மீக உணர்வை கொள்ளும்போது, அது இறைவன் மீது தீவிர பக்தி உருவாக வழிவகுக்கிறது. இவ்வாறு தீவிர பக்தி உருவாகும்போது, நம்மைப் பற்றிய எண்ணம் எதுவும் இல்லாமல் இறைவனை பற்றி மட்டுமே சிந்தனை செய்கிறோம். இந்த நிலையை அடைந்த பின், இறைவன் நம் மீது அருள் பொழிய, நாம் மேலும் மேலும் ஆனந்தத்தை அனுபவிக்கிறோம்....

ஆன்மீக பயிற்சியை செய்வதால் மட்டுமே ஆன்மீக உணர்வு விழிப்படையும் என பல ஸாதகர்கள் எண்ணுகிறார்கள். தத்துவ ரீதியாக இது சரியாக இருப்பினும், ஆன்மீக பயிற்சி செய்யும் சகலராலும் இந்நிலையை இலகுவாக அடைய முடியும் என்ற உத்தரவாதம் இல்லை. ஏனென்றால், நாம் அனுபவிக்கும் ஆன்மீக உணர்வு, ஆன்மீக பயிற்சியினால் மட்டுமே ஏற்பட்டதெனில், அதற்கு பல காரணிகள் இருக்கலாம். ஆன்மீக பயிற்சி மேற்கொள்வதன் நோக்கம், இறைவனோடு ஒன்றிணைவதில் உள்ள தீவிர ஆர்வம், நமது ஆழ்மனதில் இறைவனை பற்றி உருவாகியுள்ள மையம், ஒருவர் செய்யும் ஆன்மீக பயிற்சி மற்றும் அவர் பின்பற்றும் ஆன்மீக பாதை போன்றவை அக்காரணிகளாம். விரைவாக ஆன்மீக உணர்வை அதிகரிக்க, முதலில் நமது ஆன்மீக உணர்வை அதிகரிக்கும் விஷயங்கள் யாவை என தெரிந்துகொண்டு, அதன் பின், முக்கியமாக, அவற்றை நடைமுறைப்படுத்துவது சாலச் சிறந்ததாகும்...

ஓம் ஶ்ரீ சாயீராம்....🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🏻🙏🏻🙏🏻

புதன், செப்டம்பர் 13, 2023

கற்கும் மனப்பான்மை..!


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேச பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

கற்கும் மனப்பான்மை...

எல்லாம் இறைவனால் நடப்பதாகவும், எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பாகவும் எண்ணுவதற்கு முயற்சி செய்யவேண்டும். நல்லதோ கெட்டதோ, எல்லா சந்தர்ப்பங்களிலும் இது பொருந்தும். இவ்வாறு கற்கும் மனப்பான்மையோடு வாழ்க்கையை எதிர்நோக்கும்பொழுது நாம் எப்பொழுதும் ஆனந்தத்தில் திளைக்கிறோம். ஏனென்றால், இறைவன் நம் அருகிலேயே இருந்து, எவ்வாறு ஒரு சிறந்த ஸாதகராக இருப்பது என நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு விஷயத்தின் மூலமும் நமக்கு கற்றுத்தருவதாக எண்ணுகிறோம்...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻

பரமாத்மாவின் உன்னத ஆளுமையாக விளங்கும் வாசுதேவரின் மகனான ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கு எனது வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன்.

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேச பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

பரமாத்மாவின் உன்னத ஆளுமையாக விளங்கும் வாசுதேவரின் மகனான ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கு எனது வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன்.  எல்லாக் காரணங்களுக்கும் முதன்மையான காரணமாகவும், எவரிடமிருந்து எல்லா வெளிப்பட்ட பிரபஞ்சங்களும் எழுகின்றனவோ, யாரில் அவை வாழ்கின்றனவோ, யாரால் அழிக்கப்படுகின்றனவோ, அவரையே நான் தியானிக்கிறேன்.  எல்லா வெளிப்பாடுகளையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் உணர்ந்து அவற்றைக் கடந்தும் நித்திய ஒளிமயமான இறைவனை நான் தியானிக்கிறேன்.  முதன் முதலில் படைக்கப்பட்ட பிரம்மாவின் இதயத்திற்கு வேத அறிவை வழங்கியவர் அவர் மட்டுமே.  அவர் மூலம் இந்த உலகம் ஒரு மாயை போல, பெரிய முனிவர்களுக்கும் தேவர்களுக்கும் கூட உண்மையானதாகத் தோன்றுகிறது.  அவர் காரணமாக, இயற்கையின் மூன்று முறைகளால் உருவாக்கப்பட்ட ஜடப் பிரபஞ்சங்கள், உண்மையற்றவையாக இருந்தாலும், அவருக்கு உண்மையாகத் தோன்றுகின்றன.  ஆதலால் நான் அவரையே தியானிக்கிறேன், முழுமையான உண்மை, அவர் தனது ஆழ்நிலை வாசஸ்தலத்தில் நிரந்தரமாக இருக்கிறார், அவர் எப்போதும் மாயையிலிருந்து விடுபடுகிறார்...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🏻🙏🏻

யோகம் என்பது என்ன...?

 ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபாபாவின் உபதேச பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

பக்தர் :

யோகம் என்பது என்ன...?

பகவான் :..முடிவாம் உண்மை நிலையை அடைவதற்குற்ற வழிகள் யாவுமே யோகமெனப்படும் . கர்மம் , பக்தி , ஞானம் யாவுமே யோகமெனப்படும் . யோகம் என்பது ஒன்று சேருதல் என்று பொருள்படும் . ஒன்று சேருதற்கு , யார் எதனின்று பிரிபட்டிருக்கிறானென்று பார்த்தால் , பிரிவுணர்ச்சியுறும் ஜீவவகந்தை மறைந்து , பிரிவேதுமில்லா அகண்ட - ஏகசொரூபம் ஒன்றே என்றுமிருப்ப தென்று உணர்வோம் . அதுவே யோகம்.

பக்தர் :

தியானிப்பது எப்படி...?

பகவான் : 

ஒரே விருத்தியில் மனத்தை நிறுத்தலே சாதாரணமாய் தியானமெனப்படுகிறது . அதனால் மனம் பலவாறு சிதறாது ஒருமுகமாய்க் குவிகிறது . அப்போது , அவ்வொரு விருத்தியும் ஓய்ந்து , சுத்த சைதன்யம் ஒன்றே துலங்கும் . அதுவே நமது இயல்பு நிலை ...

ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்..🙏🏻🙏🏻

செவ்வாய், செப்டம்பர் 12, 2023

நீங்கள் சரண் செய்ய வேண்டிய எதுவும் ஏற்கனவே இறைவனுடையது அல்லவா..?

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

நீங்கள் சரண் செய்ய வேண்டிய எதுவும் ஏற்கனவே இறைவனுடையது அல்லவா..? ஆனால், உங்களுடையது என்று நீங்கள் நினைக்கும் எதையும் ‘விட்டு விடுங்கள்’ என்றே நான் சொல்வேன்..! எதையாவது நீங்கள் இறுகப் பற்றிக்கொண்டிருந்தால்,‘ தளர்வாகுங்கள்..!’ தளர்வதே சரணாகதி; வேறு எதுவும் இல்லை....🙏🏻

உங்கள் மனதை ஏதாவது உறுத்திக் கொண்டிருந்தால், அந்தக் கவலையை சரண் செய்வதே சரணாகதி. இது ஆகுதி போலத்தான். (ஆகுதி என்பது யாகத் தீயில் பிரார்த்தனையுடன் போடப்படும் பொருட்கள்).எனவே உங்களை என்ன உறுத்திக் கொண்டிருந்தாலும் அல்லது உங்களிடம் கவலை இருந்தாலும் அதை ஆகுதியாகக் கருதி இறைவனிடம் அளித்து விடுங்கள்...எதை உங்களால் சமாளிக்க முடியவில்லையோ, எது உங்களுக்கு பாரமாக இருக்கிறதோ; எதை சுமப்பதால் நீங்கள் சோர்வடைகிறீர்களோ, அதை அப்படியே போட்டுவிட்டுச் சென்றால் போதும். சரணாகதி என்பதின் பொருள் இதுதான். இல்லையென்றால் சரணாகதிக்கு என்ன இருக்கிறது,.? உங்கள் உடம்பு இறைவனுடையது. உங்கள் மனம் கூட இறைவனுடையது தான்....எல்லாம் இறைவனுடையது. ஆனால், இது உங்களுடையது என்று நினைக்கிறீர்கள். எனவே, எல்லாம் போகட்டும், இறுக்கம் தளந்து புன்னகை செய்தால் போதும்...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻

நான் எனும் அகந்தை...!????

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த உபதேச  பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

நான் எனும் அகந்தை...!????

நானார் என மனம் உள்நாடி உளம் நண்ணவே

நானாம் அவன் தலை நாணமுற – நான் நானாய்த்

தோன்றும் ஒன்று தானாகத் தோன்றினும் நானன்று பொருள்

பூன்றம் அது தானாம் பொருள்...

பொருள் :...

“நான் யார்..?” என்னும் ஆன்ம நாட்டத்தினால் மனம் உள்முகமாக நாடி விசாரித்து, இதயத்தைச் சார்வதால் நான் என்று தேகாத்ம வடிவில் தோன்றும் அகங்காரத்தின் தலை சாய்ந்து இதயத்தில் ஒடுங்கிவிடும். அகங்காரம் ஒடுங்கியதும், “நான்-நான்” என்று இடைவிடாமல் ஒன்று தானாகவே தோன்றும். அவ்வாறு தோன்றினாலும், அது தேகத்தை நானென்று நினைக்கும் அகங்காரமல்ல. அது குறைவற்ற பரிபூரண பரம்பொருளான ஆத்மாவாகிய உண்மைப் பொருளாகும்.

நமது முதல் உணர்வே நான் எனும் தன்மை உணர்வு. இதையே அகந்தை, அகங்காரம், மனம் என்று விதவிதமாகச் சொல்லப்படுகிறது. இந்த “நான் யார்..?” என உள்முகமாக தன்னை விசாரிக்க, நான் எனும் பொய்த்தோற்றம், கயிற்றில் காணப்பட்ட பாம்பு போல், மறைந்து விடுகிறது. அப்படி ஞான விசாரம் செய்து மனம் அழிந்தோர்க்கு, அகங்காரம் தலை தூக்க வாய்ப்பேயில்லை. அந்த “நான்” என்பது மறைந்து “நான்-நான்” என்ற மெய்ப்போதம் தானே பிரகாசிக்கிறது. இது எப்படியென்றால் திரைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஒளி விளக்கு திரையை விலக்கியதும் பிரகாசிப்பது போல என்பார்கள். இதில் நாம் காண வேண்டிய முக்கிய அம்சமானது ஒளி என்றுமே இருந்தது, புதிதாக வந்ததில்லை என்பதே. அதே போல் நாம் என்றும் உள்ள நிலை நமது எண்ணங்களால் மறைந்திருந்தது. அவை நீங்கியதும் நமது உள்ள நிலையை உணர்கிறோமே அன்றி, அது முன்பு இல்லாமல் புதிதாக வந்த ஒன்று அல்ல..

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

.

ராம கிருஷ்ண பரமஹம்சர், ரமண மகரிஷி,ஷீரடி சாய்பாபா போன்றோரை வழிபட்டு வருபவர்கள் அடைந்த நன்மைகள் என்ன...!

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த உபதேச பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

ஶ்ரீராம கிருஷ்ண பரமஹம்சர், ரமண மகரிஷி,ஷீரடி சாய்பாபா  போன்றோரை வழிபட்டு வருபவர்கள் அடைந்த நன்மைகள் என்ன...!🙏🏻

ஒரு பக்தரின் உண்மை அனுபவ கதை..!

எனக்கு வாய்ப்பு கிடைக்கின்ற போது மானச பூஜா என்று தியானத்தில் அமர்வது உண்டு. அதாவது.. மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தெற்கு கோபுரத்தின் வழியாக உள்ளே நுழைகிறேன். முதலில் பொற்றாமரைகுளத்தில் கை கால்களை கழுவி விட்டு விபூதி பிள்ளையாரை வணங்குகிறேன். அடுத்து வழியில் கிளிக்கூண்டு இருக்கும் அங்கே கிளிகளுக்கு ஆப்பிள், வாழைப்பழங்கள், போன்றவை வைத்துவிட்டு அம்மன் சன்னதி செல்கிறேன். அப்படியே சுற்றி இருக்கும் தெய்வங்களை வணங்கி விட்டு வெளியில் வந்து முக்குருணி பிள்ளையாரை வணங்குகிறேன். அதன் பிறகு சுவாமி சன்னதி நோக்கி செல்கிறேன். இத்தனையும் தியானத்தில் இருந்து எனக்கு நானே நினைத்துப் பார்த்து வீட்டில் அமர்ந்திருக்கிறேன்...இப்படி சுவாமி சன்னதி நுழைகின்ற போது.. திடீரென்று என் தோள்களைப் பிடித்து இரு.. நானும் உன்னோடு வருகிறேன் என்று குரல் ஒலிக்கிறது. திரும்பிப் பார்த்தால் நம்ம ரமணர்தான்..அவர்..!!சுவாமி.. சரணம்.. அபயம்.. என்று இரண்டு கைகளை எடுத்து வணங்குகிறேன். அதுதான் நல்லா வரப்போறியே.. இன்னும் என்ன அபயம் சொல்ற. எப்போதும் போல ராமானு சொல்லு. என்கிறார் அவர்..!! இது நடந்தது-மானச பூஜாவில்..!! கனவு அல்ல... கற்பனை அல்ல...அது சமயத்தில் ரமணரை பற்றி எதுவும் நான் நினைக்கவும் இல்லை... இது எப்படி நடந்தது..? எனக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது..!! அன்று உண்மையாகவே மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போக வேண்டும் என்று நினைத்து அன்று மாலையே செல்கிறேன். தெற்கு கோபுரம் நோக்கி செல்கிற போது_அருகில் தான் ரமணரின் இல்லம் இருக்கிறது. அங்கே ரமணரின் திருஉருவ படத்தை பார்த்துவிட்டு.. கொஞ்சம் கேலியாகவே.. இப்போது நான் கோயிலுக்கு தான் போறேன்.சாமி வரிங்களா..? என்று அவர் படத்தைப் பார்த்து நினைத்துக் கொள்கிறேன்.

அங்கே இருக்கும் பூசாரி அவர்கள் நான் யாரு..? ஏது..? எங்க போறேன்..?என்று..? எதையும் கேட்கவில்லை. மாறாக எனது கையில் ஒரு மாலையை கொடுத்து.. இதை சொக்கநாதனுக்கு கொடுத்து விடுங்கள் என்கிறார்..! நானோ.. நான் கோயிலுக்கு போகவில்லை. ஒரு வேலை விஷயமாக இந்த பக்கம் போறேன் என்று அவரிடம் பொய் சொல்கிறேன். அவர் சிரித்துக் கொண்டே.. பரவால்ல.. கோயிலுக்கு போயிட்டே போ.நீ நல்லா வரணும்ல அதற்குத்தான் சொல்றேன் என்கிறார். இப்போது ரமணர் படத்தை பார்க்கிறேன். அவர் சிரிப்பது போல காட்சி தெரிகிறது...இது எனது பத்து வருடங்களுக்கு முன் நடந்த உண்மை சம்பவம். அதன் பிறகு ரமணரை நினைத்து மானஷ பூஜாவில் நான் இருப்பது உண்டு. அப்போதெல்லாம்..அவர் குரல் எதுவும் கேட்டதில்லை.. ஆனால் தியானம் முடிந்து எழுகின்ற போது எனக்குள்ளே ஏதாவது தத்துவம் போல தோன்றும்.. 

அடைந்த நன்மைகள் என்ன..? இதுதானே கேள்வி. ஆம்.! நன்மைகள் அடைந்திருக்கிறேன்.எப்படி..? என்னையும் அறியாமலே நிறைய ஒழுக்க சிந்தனைகளும், எம்மதமும் சம்மதம் என்கிற உணர்விற்கு வந்தது தான் அது,,.!!

ஓம் ஶ்ரீ சாயீராம்....🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🏻🙏🏻🙏🏻

குருவின் அருட்பார்வை..!

 ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த உபதேச பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

குருவின் அருட்பார்வை..! நாரதருக்கு ஞானிகளின் அருட் பார்வைக்கு பலன் உண்டா என்ற சந்தேகம்வர அவர் கிருஷ்ணனிடம் கேட்டார். பரமாத்மா கிழக்குத் திசையில் ஓர் குப்பைமேடு இருக்கின்றது அங்கு ஓர் புழு இருக்கின்றது அதனிடம் கேள் என்றார். நாரதர் அவ்விடம் சென்று குப்பை மேட்டில் உள்ள புழுவைப்பார்த்து அந்தக் கேள்வியைக் கேட்டார். உடனே அந்தப் புழு ஒரு துள்ளுதுள்ளி கீழே விழுந்து இறந்தது. வருத்தத்துடன் கிருஷ்ணரிடம் இதைக் கூற அவர் அப்படியானால் மேற்குத் திசையில் கோவில் கோபுரத்தில் வசிக்கும் புறாவினைக் கேள் என்றார். நாரதர் ஆவலுடன் அப்புறாவிடம் அந்தக் கேள்வியைக் கேட்டார். உடனே புறா தன் சிறகைப் படபடத்து நாரதரின் பாதங்களில் விழுந்து உயிரை விட்டது. தன் கேள்வி இரண்டு உயிர்களைப் பழிவாங்கிவிட்டதே என்று மிகவும் வேதனையுடன் கிருஷ்ணரிடம் சென்று நடந்ததைக் கூறினார். சரி, இந்தமுறை நீ வடக்குத் திசையில் ஓர் வீட்டில் அழகிய ஆண்குழந்தை பிறந்துள்ளது. நீ அதனிடம் சென்று கேள். முன்பு நடந்ததுபோல் இம்முறை நடக்காது என ஆறுதல் சொல்லி அனுப்பினார். நாரதர் அந்த வீட்டை அடைந்தார். அந்தக் குழந்தையைப் பார்த்து தன் கேள்விதனை தயக்கத்துடன் கேட்டார்.

அந்தக் குழந்தை சொல்லியது. தேவரிஷியே..! குப்பைமேட்டில் புழுவாக இருந்த என்னை தங்களின் அருபார்வையால் புறாவாக்கினீர்கள். புறாவான எனக்கு மீண்டும் தரிசனம் தந்து உயர்குலத்தில் பிறக்க வைத்தீர்கள். தற்போது மீண்டும் எனக்கு நீங்கள் நேத்திர தீட்சை அளித்து என்னை தேவனாக்கியுள்ளீர்கள். இந்த 3 பிறவிகளிலும் தங்களின் அருளே எனக்கு கிடைத்த வரப்பிரசாதம். என்னை வாழ்த்தி விடைகொடுங்கள் என தேவலோகம் சென்றது. நாரதர் புரிந்து தெளிந்தார்....

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🏻🙏🏻

திங்கள், செப்டம்பர் 11, 2023

மிக மிக நுட்பமான சக்தி ஒன்று அனைத்தையும் சமநிலையில் வைத்திருக்கிறது....!!!



ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த உபதேச பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

மிக மிக நுட்பமான சக்தி ஒன்று அனைத்தையும் சமநிலையில் வைத்திருக்கிறது....!!!அதனை உணருங்கள்...அதனை கிரகியுங்கள்...அதனிடம் திறந்திருங்கள்...🙏🏻

முட்டையிடுவதற்கான நேரம் வருவதற்கு முன்பாகவே பறவைகள் கூடுகளை கட்டத் தொடங்குகின்றன...ஆனால் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளாமலேயே பறவை செய்து கொண்டிருக்கிறது...! யாரோ அதற்கு வழிகாட்டுகிறார்கள்...!அதனை இயற்கை என்று அழையுங்கள்..! கடவுள் என்கிற வார்த்தை ஒருவேளை உங்களுக்கு பிடிக்காவிட்டால் அதனை இயற்கை என்று அழையுங்கள். இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் எதுவுமில்லை...இரண்டும் ஒன்றுதான்..ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதி...விஷயங்கள் அனைத்தும் கவனிக்கப்படுகின்றன...! பிறகு எதற்கு இந்த பொறுமையின்மை, எதற்காக இந்த திட்டமிடுதல்..? பிறகு எதற்காக இந்த பரபரப்பு, பிறகு எதற்காகஇந்த வருத்தம்,

பொறுமையாக இருங்கள்...காத்திருங்கள்...

நம்புங்கள்...,உணருங்கள்.....!!!

பார்வைக்கு புலப்படாத சக்தி ஒன்று உங்களைச் சுற்றிலும் வியாபித்திருக்கிறது.

அந்த சக்தியை நீங்கள் கடவுள் என்றாலும் சரி இயற்கை என்றாலும் சரி..!!

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻

ஆன்மீகத்தில் எப்படி சிறிய சொற்களில் பெரிய தத்துவங்களை உணர வைக்க முடிந்தது..?


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த உபதேச பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

ஆன்மீகத்தில் எப்படி சிறிய சொற்களில் பெரிய தத்துவங்களை உணர வைக்க முடிந்தது..?

ஆன்மீகத்தின் பெரிய வலிமையே அதுதான்...!எடுத்துக்காட்டாக, நம்மாழ்வாரை, ஆதிநாதன் ஆலயப் புளியமரத்தடியில் கண்மூடி மௌனத்தில் அமர்ந்திருந்த நம்மாழ்வாரைக் காண, அருகே திருக்கோளூரிலிருந்த மதுரகவி ஆழ்வார் வருகிறார்...! நல்மாழ்வாருக்கு அருகில் ஒரு சிறு கல்லை இடுகிறார்...! ஓசை கேட்டுக் கண்மலர்ந்த நம்மாழ்வார் மதுர கவியை ஏறிடுகிறார்....

மதுர கவி ஒரு புதிர் போடுகிறார், “செத்தது வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்” என வினவுகிறார்...!

நம்மாழ்வார், புன்னகையுடன் விடையளிக்கிறார், “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்”...!

விடையைக் கேட்ட மதுரகவி, ஆஹா! என மகிழ்ந்து நம்மாழ்வார் அடிகளில் வீழ்ந்து வணங்குகிறார்..?

இவர் என்ன கேட்டார், அவர் என்ன பதில் சொன்னார் ஏதாவது புரிந்ததா..? இது தான் ஆன்மீகப் புதிர்...!

அவர் கேட்டது, அழியும் (செத்தது) உடலை அடையும் ஆன்மா ( சிறியது) எத்தைத் தின்று ( எதனைத் துய்த்து) எங்கே இருக்கும்...?

இவர் சொன்னது. அத்தைத் தின்று (உடலின்பம் துய்த்து) அங்கே கிடக்கும் ( உடலெடுத்தவாறே இருக்கும்).

இந்த ரீதியில்தான் ஆன்மீக சொற்கள் இருக்கும்...!

நீ இருக்கிறேன் என உணருகிறாயல்லவா, அதைப் பின்பற்றி ஆழ யோசி’ என்கிற ரீதியில் இருக்கும்...!

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻

ஞாயிறு, செப்டம்பர் 10, 2023

பிரபஞ்சத்தில் மூன்று விஷயங்கள் சிரஞ்சீவியானது.

 ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ....🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த உபதேச பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

பிரபஞ்சத்தில் மூன்று விஷயங்கள் சிரஞ்சீவியானது... ஒன்று பிரபஞ்சம், எப்போதும் இருப்பது. இரண்டாவது ஆத்மா.. ஒரு தனிப்பட்ட ஆத்மா சிரஞ்சீவியானது. மூன்றாவது, ஆகப் பெரிய மனம், அல்லது கடவுள்.. எப்போதும் இருப்பது. இல்லையென்றால் அது கடவுள் என்று அழைக்கப்பட மாட்டாது. கடவுள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்தார், இப்போது இல்லையென்றால் அது கடவுளில்லை. அல்லது கடவுள் எதிர்காலத்தில் வருவார் என்றாலும் அது கடவுள் இல்லை. கடவுள் என்பவர் முன்பு இருந்தார், இப்போது இருக்கிறார், எதிர்காலத்திலும் இருப்பார்..அது எங்கும் எப்போதும் இருப்பது. கடவுள் ஒரு மனிதரல்ல. அது ஒரு சக்தி, அது ஒரு வெளி. உபநிஷத்தில் ஒரு அழகான கதை உண்டு.

ஒரு எட்டு வயதுச் சிறுவன் தன் தந்தையிடம் கேட்டான், அப்பா, கடவுள் எப்படி இருப்பார்..?’ எனவே, தந்தை தன் மகனை வீட்டுக்கு வெளியே அழைத்துச் சென்று, அவனிடம் கேட்டார், ’இந்த கட்டிடம் கட்டுவதற்கு முன்பு இங்கே என்ன இருந்தது..?’அந்தச் சிறுவன் சொன்னான், ‘ஒரு வெட்ட வெளி. ’அந்தத் தந்தை கேட்டார், இந்தக் கட்டிடம் எங்கே நிற்கிறது..?’அந்தச் சிறுவன் பதலளித்தான், ‘வெட்ட வெளியில்.’‘அந்தக் கட்டிடம் இடிக்கப்பட்டால்அங்கு என்ன இருக்கும்..?’ அந்தச் சிறுவன் கூறினான், வெட்ட வெளி’ அந்தத் தந்தை கூறினார், எனவே வெட்ட வெளி என்பது எப்போதும் இருப்பது அல்லவா..?’அந்தச் சிறுவன் கூறினான், ’ஆம்.அந்தத் தந்தை கூறினார், அது போலத்தான் கடவுள் இருப்பார்...

ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான படம்...🙏🏻🙏🏻

கடவுளுக்கு விருப்பமான பக்தி...!?

 


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த உபதேச பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

கடவுளுக்கு விருப்பமான பக்தி...!?

பக்தி செய்வது என்பது காவி அணிவது, மந்திரங்கள் ஜெபித்துக்கொண்டிருப்பது, பூஜை புனஸ்காரங்கள் செய்வது மட்டும் அல்ல. கடவுள் மீது முழுமையான நம்பிக்கை வைப்பதும், அவனே சரணம் என்று இருப்பதே கடவுளுக்கு விருப்பமான பக்தி. பக்தி செய்வது என்பது ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். கடவுள் என்பது இருக்கா, இல்லையா என்ற விசாரணைக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்... 

இதை விளக்கும் ஒரு சின்னக்கதை..! ஒரு ஊரில் இரண்டு பக்தர்கள் இருந்தார்கள். ஒருவர் சாதாரண தொழிலாளி. வீட்டில் சாமிபடத்துக்கு விளக்கேற்றி, கும்பிட்டுவிட்டு அவர் வேலையை கவனிக்க சென்றுவிடுவார். எல்லாம் கடவுள் செயல் என்பதில் உறுதியாக இருப்பவர். நிம்மதியான வாழ்க்கை அவருக்கு. இன்னொருவர் பெரிய செல்வந்தர். பெரிய பங்களாவில் ஆடம்பரமாக வசிப்பவர். தினமும் குளித்து, கோயில் அர்ச்சகரை அழைத்து பூஜை, வழிபாடுகள் செய்பவர். இருந்தும் ஏனோ செல்வந்தர் நிம்மதியில்லாமல் இருந்தார். பூலோகத்தில் இதை கவனித்த நாரதர் விஷ்ணுவிடம் சந்தேகம் கேட்டார்....அதற்கு விஷ்ணு, ‘நீங்கள் பூலோகம் செல்லுங்கள். என்னுடைய இரண்டு பக்தர்களையும் சந்தித்து, என்னை விஷ்ணு அனுப்பி வைத்துள்ளார். மேல் உலகில் இப்போது விஷ்ணு ஓர் ஊசியின் காது வழியாக யானையை நுழைத்துக் கொண்டிருக்கிறார். உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமா..? என்று கேட்டு வரச்சொன்னார் என்று சொல்லுங்கள். அவர்கள் சொன்ன பதிலை அப்படியே என்னிடம் வந்து கூறுங்கள். நீங்கள் கேட்ட சந்தேகத்திற்கு அதில் பதில் இருக்கும்’ என்றார் விஷ்ணு...நாரதர் செல்வந்தர் வீட்டுக்குச் சென்றார். பூஜையில் இருந்த அவரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு விஷ்ணு சொன்னதை அப்படியே சொன்னார். அதைக்கேட்டு கலகலவென சிரித்த செலவந்தர்,‘ அது எப்படி முடியும்..? ஊசிதுளையில் யானையை நுழைப்பது நடக்கிற காரியமா..?’ என்றார்...அடுத்து தொழிலாளி பக்தரிடம் சென்றார் நாரதர். விஷ்ணு சொன்னதைச் சொன்னார். ‘ இதெல்லாம் பெரிய விஷயமா அந்தக் கடவுளுக்கு..? ஒரு பெரிய ஆலமரத்தை ஒரு விதைக்குள் அடக்கியவர். இந்த உலகத்தை வாயிக்குள் விழுங்கி காட்டியவர். விஷ்ணுவில் சக்தி அளவிடக்கூடியதா, என்ன..?’ என்று சொல்லி வியந்தார். இரு பக்தர்களின் பதிலை அப்படியே விஷ்ணுவிடம் நாரதர் சொன்னார்.

‘உண்மையான பக்திக்கு சந்தேகம் வராது. பூர்ண நம்பிக்கையும், இறைவனே கதி என அடைக்கலம் ஆவதுதான்?...அது அந்த ஏழைக்கு இருந்தது. அதனால் அவன் நிம்மதி இருக்கிறான்.....செல்வந்தனுக்கு சந்தேகம்..விசாரணை எல்லாம் இருப்பதால் குழப்பம். குழப்பம் உள்ள மனதில் எப்படி நிம்மதி ஏற்படும்..?’ என்றார் விஷ்ணு...!

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🏻🙏🏻

எல்லா உருவமும் நானே..எல்லா தெய்வமும் நானே..(சாய் மொழி)

 

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த உபதேச பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ கூறுகிறார்...எல்லா உருவமும் நானே..எல்லா தெய்வமும் நானே.....

அணிலும் எலியும் – பகவான் ரமண மகரிஷி

அணிலும் எலியும்.. !பகவான் ரமணர் உரைகேட்கப் பக்தர்கள் இருந்தார்கள் அவர் முன் அமர்ந்தபடி அகமும் முகமும் மலர்ந்தபடிஅருளுரை சொன்னார் ரமணர் கனிந்தபடி..!

அணில்போல் இருங்கள்.. தவறில்லை..!

ஆனால் எலிபோல் கூடாது..!

மணிமொழி இதனை உதிர்த்தபடி

மவுனமானார்  ரமணர்..!

காரணம் வேண்டிப் பக்தர்கள்

காத்துக் கொண்டே இருந்தார்கள்

பூரண ஞானி விடைசொன்னார்

புன்னகை ஒன்றைத் தந்தபடி..!

உண்ணும் அணிலைப் பாருங்கள்...உண்டது போதும் என உணர்ந்தால் கொண்ட கனியை அதன்பின்னர்க் கொறிப்பதில்லை..ஓடிவிடும்..!ஆனால் எலியோ பதுக்குவதில் ஆசை கொள்ளும்..மறுபடியும் தானாய் வந்து பொருள்தேடும தனக்கு மீறிச் சேர்த்துவிடும்..!போதும் என்ற மனம் இன்றிப்பொருளைச் சேர்க்கக் கூடாது நீதி இதுதான், எனச்சொல்லி நிறுத்தி அருளினார் ரமணர்..!

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🏻🙏🏻

பற்று விடல்..!

 




ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த உபதேச பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

பற்றுவிடல்....சிறு வயதில் ஆசை ஆசையாக மணல் வீடு கட்டி, விளையாடி விட்டு பிறகு அதை காலால் எட்டி உதைத்துவிட்டு வந்தவர்கள்தான், இப்போது பொருட்கள் மீதும் மனிதர்கள் மீதும் பற்று வைத்து கவலைப்படுகிறோம். வாழ்க்கையில் விரும்பாதது வந்தாலும் துன்பம். விரும்பியது விலகினாலும் துன்பம். விரும்பியதை அடைந்து அதை இழந்தாலும் துன்பம்...ஒரு பொருளின் இருப்பில் கிடைக்கும் இன்பத்தைவிட, அதை இழந்துவிடுவோமோ அல்லது கிடைக்காதோ என்ற நினைப்பில் வரும் துன்பம்தான் அதிகம். இவை எல்லாம் ஒன்றின் மீது கொண்ட பற்று காரணமாக வரும் தொல்லை. இரண்டு மணி நேர ரயில்பயணத்தில் இது எனது இடம்; அது உனது இடம் என்று சண்டை போட்டு, அது ஓய்வதற்குள் சேருமிடம் வந்துவிடுகிறது. வாழ்க்கையிலும் இப்படித்தான்..! 

வாழும் சிறிது காலத்துக்குள், இது எனது நிலம், அது உனது நிலம் என்று சண்டை. இப்படி நமது துன்பத்துக்கு வகை வகையான காரணமாக இருப்பது பற்று வைப்பதுதான். அன்புக்கும் பற்றுக்கும் நிறைய வேற்றுமைகள் உண்டு. பறவையின் மீது பற்று கொண்டவன். அதை கூண்டில் அடைக்கிறான். அதை மகிழ்விப்பதாக எண்ணி அதன் சுதந்திரத்தைத் தடுக்கிறான். அதே பறவையின் மீது அன்பு செலுத்துபவன் அது ஆகாயத்தில் பறப்பதை ஆனந்தமாக வேடிக்கை பார்க்கிறான்.....

இது போன்று உலகப் பற்றில் இருப்பவனுக்கு கடவுளைப் பற்றிக்கொள்ள நேரமில்லை. ஆனால், பற்றற்றவன், கடவுளை பற்றிக் கொண்டு, கடவுளை எங்கும் காணும் அனுபவம் கண்டு, உலகப் பற்றை நீக்கி விடுகிறான். கணவன், மனைவி, பிள்ளைகள், பெண்கள் என்று மனிதர்களில் தொடங்கி ஆடு, மாடு, வீடு, செல்பேசி என்று எத்தனை ‘பற்றுக்கள்’ நமக்கு,.! நமக்கு எது நல்லது என்பதை கடவுள் அறிவார். நமது கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் எல்லாவற்றையும் அவர் அறிவார்..!

 நமக்கோ கடந்த வந்த பாதை தெரியும். இப்போது நடப்பது தெரியும்; நாளை என்பது பெரிய கேள்விக்குறி தான். இப்படி இருக்கையில் எல்லாம் அறிந்த கடவுளைப் பற்றாமல் எதை எதையோ பற்றுகிறோம். இந்த உலகில் நாம் பற்றியிருப்பவை நம்மைக் கைவிடலாம்.. நமது வாழ்க்கையை முழுவதும் அறிந்த கடவுள் நம்மைக் கைவிடமாட்டார். கடவுள் தான் நம் பலம். கடவுள் தான் நம் கவசம். அவரிடம் பற்று வைப்பதுதான் உண்மையான பற்று. ....

அவரிடம் எதற்காகப் பற்று வைப்பது என்பதை வள்ளுவர் மிகஅழகாக சொல்கிறார்.. பற்றுக பற்றற்றான் பற்றினை...அப்பற்றை பற்றுக பற்று விடல்... பற்றுக..பிடித்துக் கொள்ளுங்கள் பற்றற்றான் பற்றினை ..பற்றில்லாத கடவுளின் திருவடிகளை அப்பற்றினை ..அந்தத் திருவடிகளை பற்றுக ..கெட்டியாகப் பற்றுங்கள் பற்று விடல் - தேவை இல்லாத ‘பற்று’க்களை விடுவதற்காக..!

ஓம் ஶ்ரீ சாயீராம்....🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்.. 🙏🏻🙏🏻