சனி, மே 15, 2021

ஶ்ரீ சீரடிபாபாவின் சாய்சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாயத்தின் வெளியீடு....🙏🏼🙏🏼🙏🏼அத்தியாயம்::மூன்று 🔥

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய்  சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள  இன்றைய  அத்தியாய வெளியீடு....🙏🏼🙏🏼🙏🏼

🙏ஶ்ரீசாய் சத்சரித்திரம்.🙏🏼

🙏🏼அத்தியாயம்::மூன்று(3) 🙏🏼

🔥முதலில் புனித  வேத நூலான  சீரடி பாபாவின் சாய்சத்சரித்திரம் பாராயணம்  செய்வதன் முக்கியத்துவமும் ,பெறப் போகும் நன்மைகள் என்ன என்பதைப் பார்ப்போம்..🔥

சீரடி பகவானின்  புனித வேத நூல் என்பது சாய் சத்சரித்திரம்  என்பதாகும்...இதில் சீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு எழுத்திலும் வியாப்பித்து  படர்ந்து இருக்கின்றது...

சத்சரிதத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல் ,மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது...ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து  சத் சரித்திரத்தில்  இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்.....

இவ்வாறாக நாம் அனைவரும் ஶ்ரீசாய் சத்சரித்திர வேதப்  பாராயணத்தை மேற்க்கொண்டால், சீரடி பகவானின் ஆசியையும்  அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்....ஆகவே  சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்...நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக.🙏🏼🙏🏼

🔥*குறிப்பு*.....சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥

தனி மனித உயிரின்   சித்தம் தெளிவடையும்... அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரிய தன்மையை அடையலாம்....வேத பாராயணத்தின் மூலமாக  ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரிய நிலையை அடையும் நிலையைப் பெறலாம்...மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம், நேர்மறை, மனிதநேயம் போன்ற இறைப்பண்புகளைப் பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுபெறவும்  இந்த சத்சரித    வேதப்பாராயணம் துணைப்புரிகின்றது.... 

மேலும் இப்பாராயணத்தின் மூலம்   மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில்  வெற்றி வாகை சூடலாம்..அவரவர்கள் வேண்டியது கிடைக்கப்பெறும்..சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்... மேலும் அனைத்து விதமான  கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி  பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும்  ஒருசேரப்பெறலாம்.... 🔥🔥

🙏🏼அத்தியாயம்.: மூன்று..🙏🏼🙏🏼

🙏🏼முன்னுரை...🙏🏼

பகவான்  ஹேமாட்பந்திடம்   கூறுகின்ற உபதேச அருள்மொழிகள் பற்றிய விளக்கவுரை...

சீரடி பகவான் அடியார்களுக்கு அளிக்கப்பட்ட பலதரப்பட்ட பணிகளைப் பற்றிய குறிப்புரை..

சீரடி பகவான் உபதேச மொழிகள் அனைத்தும்,  எவ்வாறு கலங்கரை விளக்காக  வழிக்காட்டுகின்றது என்பதைப் பற்றிய விளக்கவுரை..

பகவான் தன்னை நாடி வந்த  பக்தர்களிடம், எவ்வாறு தாய்மையுணர்வை வெளிப்படுத்தி உயரிய நிலையை அடைய வைக்கின்றார்  என்பதன் விளக்கவுரை....

பகவான்  தன் பக்தன் ரோஹிலாவின் மீது எவ்வாறு அன்பு செலுத்தி வழிநடத்தினார் என்பதை பார்ப்போம்....

சீரடி பாபாவின் இனியதும், பேர் அமுதத்தினைப்  போன்ற உயரிய உபதேச அருள்மொழிகள் இங்கே...

மேற்க்கண்ட  தலைப்புக்களின் விளக்கவுரைகளைப் பற்றி ஒவ்வொன்றாகக் கீழே காண்போம்....

🔥முதலில் பகவான்  ஹேமாட்பந்திடம்   கூறுகின்ற உபதேச அருள்மொழிகள் இங்கே🔥

முந்தைய அத்தியாயத்தில் விளக்கப்பட்டபடி சாயீபாபா தமது பூரண சம்மதத்தைத் நூலாசிரியர் ஹேமாட்பந்திடம்  தெரிவித்துக் கூறியதாவது,

"சத்சரிதம் எழுதுவதைப் பற்றி நான் உம்முடன் முழுமையாகச் சம்மதிக்கிறேன்...நீர் உமது கடமையைச் செய்யும்.....சிறிதளவும் அஞ்சாதீர்.... என் மொழிகளில் நம்பிக்கை வையும்,.. என்னுடைய லீலைகள் எழுதப்படுமானால் அறியாமை அகலும்...அவைகள் கவனத்துடனும், பக்தியுடனும் கேட்கப்படுமானால் இவ்வுலக வாழ்க்கையின் உணர்வு தணிந்து, பக்தி  மற்றும்   சத்திய அன்பு ஆகியவற்றின் வலிமையான அலைகள் மேலெழும்பும்....  என்னுடைய லீலைகளின் ஆழத்தில் ஒருவன் மூழ்குவானானால் அவன் ஞானமென்னும் விலை மதிப்பில்லாத முத்துக்களை எடுப்பான்."..

இதைக்கேட்டு இந்நூல் ஆசிரியர் மிக்க மகிழ்ச்சியடைந்தார்..உடனே தன்னம்பிக்கை உடையவராயும், பயமற்றவராயும் ஆனார்.  இப்பணி வெற்றிகரமாக நிறைவேறியே தீரவேண்டும் என்றும் எண்ணினார்.  பிறகு ஷாமாவிடம் (மாதவராவ் தேஷ்பாண்டே) திரும்பி பாபா கூறியதாவது, "ஒருவன் என் நாமத்தை அன்புடன் உச்சரிப்பானாகில், நான் அவனுடைய ஆசைகளைப் பூர்த்தி செய்து அவனுடைய பக்தியை அதிகப்படுத்துவேன்...என் வாழ்க்கையையும் செயல்களையும் இசையாகப் பாடுவானாயின் அவனுக்கு முன்னும் பின்னும் எல்லாத் திக்குகளிலும் சூழ்ந்திருப்பேன்.. என்னிடம் உள்ளத்தையும், உயிரையும் ஒப்புவித்த அடியார்கள் இந்நிகழ்ச்சிகளைக் கேட்டதும் இயற்கையிலேயே மகிழ்வெய்துவர்... நம்பிக்கையுடன் என் லீலைகளை எவனாவது இசைப்பானாயின் அவனுக்கு எல்லையற்ற பேரின்பத்தை நல்கி என்றும் நிலைத்திருக்கும் திருப்தியை அளிப்பேன்....

எவன் என்னிடம் பூரண சரணாகதி அடைகின்றானோ, எவன் என்னை விசுவாசத்துடன் வணங்குகின்றானோ, எவன் என்னை நினைவில் இருத்தி நிரந்தரமாகத் தியானம் புரிகிறானோ அவனை விடுவிப்பது எனது சிறப்பியல்பாகும்.  என் நாமத்தை உச்சரிப்பவர், என்னை வணங்குபவர், எனது வாழ்க்கை நிகழ்ச்சிகளைப் பற்றி எண்ணி இவ்வாறாக என்னை நினைவில் இருத்தி இருப்பவர்கள் எவ்வாறு  உலகப் பொருட்கள், உணர்ச்சிகள் இவைகளில் கவனம் உள்ளவர்களாக இருக்க முடியும்...?  என்று உணருங்கள்...சாவின் வாயினின்று அடியவர்களை நான் வெளியே இழுத்து விடுவேன்..

எனது கதைகள் கேட்கப்பட்டால் எல்லா நோய்களும் விலகும்....எனது கதைகளை மரியாதையுடன் கேட்டு அவற்றை எண்ணித் தியானம் செய்து கிரகித்துக் கொள்ளுங்கள்...  இதுவே மகிழ்ச்சிக்கும், திருப்திக்குமான மார்க்கமாகும்...இதனால்  என் அடியவர்களின் பெருமையும், அகம்பாவமும் அற்றுவிடும்.  கேட்பவரின் மனம் அமைதிப்படுத்தப்படும்... மேலும் ஆழ்ந்த  இதயபூர்வமும், முழுமையுமான பக்தியாயிருப்பின் மனம் உச்ச உணர்ச்சியுடன் ஒன்றாகி விடும்.. 'சாயீ சாயீ ' என்று சாதரணமாக ஞாபகமூட்டிக் கொண்டும், பகவான் உபதேசங்களைப் பற்றிப் பேசுவதாலோ அல்லது  கேட்பதன் மூலம் தனி  மனித உயிரின்  பாவங்கள் அனைத்தும் அழியும்...

🔥சீரடி பகவான் அடியார்களுக்கு அளிக்கப்பட்ட பலதரப்பட்ட பணிகளைப் பற்றிய குறிப்புரை🔥

ஆண்டவர் வெவ்வேறு பணிகளை, வெவ்வேறு அடியவர்களிடம் ஒப்புவிக்கிறார்...  சிலர் கோவில், மடம் ஆகியவற்றை கட்டுவதற்கும் சிலர் புண்ணிய தீர்த்தங்களுக்குப் படிக்கட்டுகள் அமைப்பதற்கும் நியமிக்கப்படுகிறார்கள்.  சிலர் ஷேத்ராடன  யாத்திரைக்கு அனுப்பப்படுகிறார்கள்..ஆனாலும் எனக்கு சத்சரித்திரம் எழுதும் புனிதமான  பணி  ஒப்படைக்கப்பட்டது... ஒன்றும் முழுமையாகத் தெரியாதவனைப் போன்ற நான், இப்பணிக்குக் கொஞ்சமும் தகுதியுடையவன் அல்லன்.  பின்னர் ஏன் அத்தகைய கடினமான வேலையை மேற்கொள்ள  வேண்டும்.  எவரே சாயீபாபாவின் உண்மை வரலாற்றை எடுத்தியம்ப முடியும்..?  சாயீபாபாவின் அருள் ஒன்றுமட்டுமே இக்கடின வேலையை நிறைவேற்ற ஊக்கம் அளிக்க முடியும்.    பெருமை அவரையே அடைகிறது.  என்னையல்ல..!

பிறப்பில் மறையவனாக இருப்பினும் ஸ்ருதி, ஸ்ம்ருதி  என்ற இரண்டு கண்கள் (பார்வை அல்லது காட்சிகள்) தேவையுள்ளவனாக இருந்தேன்....எனவே சத்சரிதத்தை எழுதவே இயலாத நிலையில் இருந்தேன்...ஆனாலும் ஆண்டவன் அருள், ஊமையைப் பேசவைக்கிறது...முடவனை மலையைக் கடக்கச் செய்கிறது..அவரின் விருப்பப்படி காரியங்களைச் செயற்படுத்தும் தந்திரத்தை அவர் ஒருவரே அறிவார். புல்லாங்குழலோ, ஹார்மோனியமோ எங்ஙனம் ஒலி எழுப்புகிறது என்பதை அறியா..இது அவற்றை வாசிப்பவனையேச்  சார்ந்தது..சந்திரகாந்தக்கல் கசிவதும், கடல் பொங்கியெழுவதும் சந்திரோதயம் காரணமாகவே.  அவற்றின் தன்மையால் அல்ல....

🔥சீரடி பகவான் உபதேச மொழிகள் அனைத்தும்,  எவ்வாறு கலங்கரை விளக்காக  வழிக்காட்டுகின்றது என்பதைப் பற்றிய விளக்கவுரை...🔥

 மாலுமிகள் மற்றும் படகோட்டிகள்  போன்றோர்களுக்கு  பாறைகள், அபாயங்கள் ஆகியவற்றிலிருந்து விலகி பத்திரமாக பயணம் செய்வதற்காக, கடலின் பல்வேறு இடங்களில் கலங்கரை விளக்கம் கட்டப்படுகிறது....  சம்சாரம் என்னும் சாகரத்தில் சாயீபாபாவின் கதைகள் அத்தகைய பயனை நல்குகின்றன...அவைகள் அமிர்தத்துக்குச் சுவையூட்டுகின்றன...நமது உலகப் பாதையை மிருதுவாகவும், கடப்பதற்கு எளியதாகவும் ஆக்குகின்றன...ஞானிகளின் கதைகள் ஆசீர்வதிக்கப்பட்டவைகள்.  நமது செவிகளின் வழியாக உள்ளத்தினுள் புகும்போது சரீராபிமானம் அல்லது அகங்காரம் மற்றும்  த்வைத உணர்ச்சி ஆகியவை மறைகின்றன...நம் உள்ளத்தில் அவைகள் தேக்கப்ப்படுமானால் சந்தேகம் பறந்தோடும், சரீரத்தின் பெருமை உணர்ச்சி கீழே இறங்கும்.  ஏராளமாக விவேகம் சேகரிக்கப்படும்....  பாபாவின் தூய புகழை விவரிப்பதும், அதையே அன்புடன் கேட்பதும் அடியாரின் பாபங்களை அழிக்கும்... கிருதயுகத்தின் ஆன்மீகப் பயிற்சியானது சமதமா (உள்ளம், உடல் இவற்றின் தனித்தன்மை), திரேதாயுகத்திற்கு தியாகம், த்வாபரயுகதிற்கு வழிபாடு, கலியுகத்திற்கு இறைவனின் புகழையும், நாமத்தையும் இசையாகப் பாடுவது என்பது குறிப்பிடத்தக்கது.. கடைசிப் பயிற்சியானது நான்கு வர்ணத்தைச் சேர்ந்த எல்லார்க்கும் உரியதாகும்...மற்றைய பயிற்சிகளான யோகம், தியாகம், தியானம், தாரணை (ஒரு முகப்படுத்துதல்) ஆகியவை பழகுவதற்கு மிகவும் கடினமானவை.  இறைவனது (சாயீபாபா) புகழைச் செவிமடுப்பது மிகவும் எளியதாகும்.. நாம் நமது கவனத்தை அவைகள் மீது திருப்ப மாத்திரமே வேண்டும்...  கதைகளைக் கேட்பதும், கீர்த்தனையாகப் பாடுவதும் புலனுணர்வுப் பொருட்கள் மீதுள்ள உறவை நீக்கி, அடியவர்களைப் பற்றறுத்தவர்களாக்கி முடிவில் ஆன்ம உணர்வுக்கு வழிநடத்திச் செல்லும்...  இக்குறிக்கோளையே கருத்திற்கொண்டு சாயீபாபா 'சத்சரிதாம்ருதா' என்னும் அவரது கதைகளை எழுதச்செய்ய மறை ஞான  குறிப்புக்களை வழங்கினார்..அடியவர்கள் இப்போது இக்கதைகளை எளிதாகப் படிக்கவோ, கேட்கவோ செய்யலாம். இவ்வாறு பாராயணம்  செய்யும்போது பகவானைத்  தியானித்து நாம் என்ற தன்மையில்  வாசிக்க வேண்டும்....

🔥பகவான் தன்னை நாடி வந்த  பக்தர்களிடம், எவ்வாறு தாய்மையுணர்வை வெளிப்படுத்தி உயரிய நிலையை அடைய வைக்கின்றார்  என்பதன் விளக்கவுரை....🔥

தன் இளங்கன்றை பசு எவ்வாறு  நேசிக்கிறது என்பதை யாவரும் அறிவர்...அதன் மடி எப்போதும் நிறைந்திருக்கிறது...கன்று பால் வேண்டி மடியை முட்டும்போது தடையின்றி பால் பெருக்கெடுக்கின்றது.  அவ்வாறே  தாயாரும் தக்க தருணத்தில் தன் குழந்தையின் பசியறிந்து முலையமுது தந்து ஊட்டுகிறாள்..அதற்கு ஆடை அழகுற அணிவிப்பதிலும், சிறப்புச் சிங்காரிப்பதிலும் முக்கிய கவனம் செலுத்துகிறாள்.  குழந்தை எதைப்பற்றியும் அறிவதுமில்லை... கவலையுறுவதுமில்லை..ஆயின் தன் குழந்தை நன்றாக உடை உடுத்தப்பட்டு அலங்கரிக்கபட்டு இருப்பதைக்  கண்ணுறும் தாயின் மகிழ்ச்சிக்கு ஓர் எல்லையில்லை...ஶ்ரீ  தாயன்பு விசித்திரமானது..அசாதாரணமானது.. பற்றில்லாதது... இணையில்லாதது...தமது அடியவர்களிடம் சத்குருவும் இத்தகைய தாயன்பு வெளிப்படுத்தி  காண்பிக்கின்றார்கள்.  இத்தகைய அன்பே சாயீபாபா என்னிடம் கொண்டிருந்தது. ..அதைப் பற்றிய நிகழ்ச்சியே கீழ்வருமாறு:....

நான் அரசாங்க வேலையிலிருந்து 1916..ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றேன்.. கௌரவமாக என் குடும்பத்தை நடத்துவதற்கு எனக்குத் தீர்மானித்துத் தரப்பட்ட பென்ஷன் போதவில்லை..குருபூர்ணிமா அன்று நான் சீரடிக்குச் சென்றிருந்தேன்.  அங்கு அண்ணா சிஞ்சணீகர் அவராகவே பாபாவிடம் எனக்காக வேண்டினார்.  "தயவு செய்து அவரை அன்புடன் நோக்குங்கள்....அவர் பெறும் பென்ஷன் அறவே போதாது...அவரது குடும்பமோ வளர்ந்து வருகிறது.  அவருக்கு வேறு வேலை ஏதும் கொடுங்கள்.  அவரது ஏக்கத்தினை  தீர்த்து, வேண்டியதை நிறைவேற்றி அவரை மகிழச்செயுங்கள்."...

பகவான் அதற்குப்  பதில் அளிக்கின்றார்..., அவர் வேறு ஏதாவது வேலை கண்டிப்பாக பெறுவார்...  ஆயின், இப்போது எனக்குப் பணி செய்து மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும்... அவரது உணவு எப்போதும் நிறைந்திருக்கும்.  ஒருபோதும் காலியாய் இராது... அவர் தனது கவனம் அனைத்தையும் என்பால் திருப்பி நாத்திகர்கள், மதப்பற்று அற்றவர்கள், கொடுமையாளர்கள்  இவர்களின் கூட்டுறவைத் தவிர்த்து, எல்லோரிடமும் பணிவாகவும், அடக்கமாகவும் இருந்து உள்ளத்தாலும், உயிராலும் என்னை வணங்க வேண்டும்....  இதைச் செய்வாராகில் அவர் எல்லையற்ற பேரின்பத்தை அடைவார்....எவருடைய வழிபாடு உபதேசிக்கப்பட்டு இருக்கிறதோ, அந்த நான் என்பது யார் என்னும் வினாவுக்கு சாயீபாபா என்பது யார் என்னும் குறிப்பில் முன்னமே இந்நூலில் சொல்லப்பட்டிருக்கிறது..

🔥பகவான்  தன் பக்தன் ரோஹிலாவின் மீது எவ்வாறு அன்பு செலுத்தி வழிநடத்தினார் என்பதை பார்ப்போம்...🔥

எல்லோரையும் அரவணைக்கும் சாயீபாபாவின் அன்பை ரோஹிலாவின் கதை நமக்குக் காட்டுகிறது.  உயரமாகவும், வாட்டசாட்டமாகவும், காளையைப் போன்ற வலிமை உடையவனாகவுமுள்ள ரோஹிலா என்பவன் சீரடிக்கு வந்தான்...நீண்ட கஃப்னி என்னும் உடை அணிந்திருந்தான்...பாபாவிடமுள்ள அன்பினால் அங்கு தங்கியிருந்தான்..இரவும், பகலும் கலிமாவை (திருக்குரானின்) பாடல்கள் சத்தமாகவும், குரூரமாகவும் ஒப்பித்து 'அல்லாஹு அக்பர்' (கடவுள் பெரியவர்) என்று கத்துவான்...சீரடியின் பெரும்பாலான மக்கள் பகலெல்லாம் தங்கள் வயலில் வேலை செய்துவிட்டு, இரவு வீட்டிற்குத் திரும்பும்போது ரோஹிலாவின் குரூர இரைச்சல்களாலும், கத்தல்களாலும் வரவேற்கப்படுவார்கள்.  அவர்கள் தூங்க முடியாமல் மிகுந்த தொல்லையும், அசௌகரியமும் அடைந்தனர்.  மௌனமாக இத்தொந்தரவைச் சில நாட்கள் பொறுத்திருந்து, அவர்களால் இனிமேல் இத்துயரம் படமுடியாது என்னும் நிலை வந்தவுடன், பாபாவை அணுகி இதைக் கவனித்து ரோஹிலாவின் தொந்தரவை நிறுத்தும்படி வேண்டிக் கொண்டனர்.  

பாபா அவர்களின் வேண்டுகோளைக் கவனிக்கவில்லை..மாறாக அவர்களைக் கடிந்தார்...அவர்களைத் தங்கள் வேலைகளைக் கவனிக்கும்படியும், ரோஹிலாவைக் கவனிக்க வேண்டாம் என்றும் கூறினார்...அவர் மேலும் ரோஹிலாவுக்கு மிகவும் கெடுதலான மனைவி ஒருத்தி இருக்கிறாள் என்றும் அவள் உள்ளே வரமுயன்று ரோஹிலாவையும், தம்மையும் தொந்தரவு செய்வதையும் ஆனால் ரோஹிலாவின் பிரார்த்தனைகளைக் கேட்டவுடன் அவள் உள்ள நுழையத் துணியவில்லையென்றும் ஆதலால் அவர்கள் மன அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்கிறார்கள் என்றும் கூறினார்.  உண்மையில் ரோஹிலாவுக்கு ஒரு மனைவியும் கிடையாது.  அவனுக்கு மனைவியாக பாபா குறிப்பிட்டது துர்புத்தி அதாவது கெட்ட எண்ணங்களாகும்...ஏனெனில் வேறெதைக் காட்டிலும் கடவுளிடம் வேண்டிக்கொள்வதிலும், முறையிட்டுப் பேரிரைச்சல்கள் செய்வதையும் பாபா விரும்பினார்...அவர் ரோஹிலாவின் பக்கம் இருந்து ரோஹிலாவின் இரைச்சல்களையும், கூக்குரல்களையும் பொறுத்துக் கொள்ளுமாறும் அவை சீக்கிரம் மறைந்துவிடும் என்றும் கூறினார்.இவ்வாறாக ரோஹிலா மீது பகவான்  அளவு கடந்து அன்பு செய்தார் என்பது புலனாகின்றது.....

🔥சீரடி பாபாவின் இனியதும், பேர் அமுதத்தினைப்  போன்ற உயரிய உபதேச அருள்மொழிகள் இங்கே...🔥

ஒருநாள் மத்தியானம் ஆரத்தி முடித்தபிறகு அடியார்கள் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். ... அப்போது பாபா கீழ்கண்ட அழகான அறிவுரையை விடுத்தார்....நீங்கள் எங்கு வேண்டுமானாலும் இருங்கள்...என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்.....ஆனால் இதை நன்றாக ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.  நீங்கள் செய்வது அனைத்தும் எனக்குத் தெரியும்...  நானே அனைவருடைய அந்தரங்க ஆட்சியாளனாக இதயத்தில் அமர்ந்து இருக்கிறேன். இந்த உலகில்  அசையும் - அசையா சர்வ  ஜீவராசிகளையும் அரவணைக்கின்றேன்...இப்பிரபஞ்சமென்னும் தோற்றத்தை நானே கட்டுப்படுத்துபவன்... ஆட்டுவிப்பவன், எல்லா வர்க்கங்களின் மூலமாதா நானே...முக்குணங்களின் கூட்டுறவும் நானே....

நானே எல்லா உணர்ச்சிகளையும் உந்துபவன்... படைப்பவன்...,காப்பவன்...அழிப்பவனுமாம்....  என்பால் கவனத்தை திருப்புபவனை எந்த துன்பம் விளைவிக்காது...ஆனால் மாயை, என்னை மறந்தவனை ஆட்டி உலுக்கும்.... எல்லாப் பூச்சிகள், எறும்புகள், கண்ணுக்குத் தென்படுபவை, அசையக்கூடிய , அசையமுடியாத உலகம் எல்லாம் என்னுடைய உடம்பு அல்லது உருவம் ஆகும்."

இத்தகைய அழகான விலைமதிப்பற்ற மொழிகளைக் கேட்டு, இனிமேல் என் குருவைத் தவிர வேறு யாருக்கும் நான் பணிவிடை செய்யப்போவதில்லை என்று என் மனதில் நான் தீர்மானித்தேன்...அண்ணா சிஞ்சணீகரிடம் பாபா விடுத்த பதில் (உண்மையில் அது எனக்கானதாகும்)  அதாவது நான் ஒரு வேலை கிடைக்கப்  பெறுவேன் என்ற எண்ணம் என் மனதில் சுழன்றது.. நான் அவ்வாறே  நிகழுமா என்று எண்ணிக் கொண்டிருதேன்.  எதிர்கால நிகழ்சிகளைக் காணுறும் போது பாபாவின் வார்த்தைகள் உண்மையாயின...நான் ஓர் அரசாங்க உத்தியோகத்தைப் பெற்றேன்...  ஆனால் குறுகியகால அளவுடையது. .. பிறகு நான் சுதந்திரம் அடைந்தேன்.  என் குரு சாயீபாபாவினுடைய சேவைக்கு என்னைப் பூரணமாகச் சமர்ப்பித்தேன்...

இவ்வத்தியாயத்தை முடிக்கும் முன்பாக பல்வேறு இடையூறுகளான தூக்கம், சோம்பல், மனது அலைபாய்தல் , தீய எண்ணங்களின் தாக்கம்  இவற்றை விட்டொழித்துவிட்டுத் தங்களுடைய முழுமையும், சிதைவுமற்ற கவனத்தை சாயீபாபாவின் கதைகளுக்கு அளிக்கும்படி இந்நூலைப் பயில்வோரிடம் நான் வேண்டிக்கொள்கிறேன். உங்களின்  அன்பு இயற்கையானதாக இருக்கட்டும்...பக்தியின்  ஆழத்தை உணர்ந்து  அறியட்டும்...மற்ற பல சாதனைகள் புரிந்து களைப்படைய வேண்டாம்.  ஓர் எளிய மருந்தை அவர்கள் பற்றட்டும். .. அதாவது சாயீபாபாவின் கதைகளைக் கேட்பது மற்றும் பாராயணம் செய்வது போன்றவை, ஒவ்வொரு தனி மனிதனின்  அறியாமையை அழித்து  முக்தி நல்கக்கூடியது....ஓர் உலோபி பல்வேறு இடங்களில் தங்கினாலும், தன்னுடைய புதைக்கப்பட்ட செல்வத்திலேயே சதா சிந்தனை உள்ளவனாக இருப்பதைப்போல், சாயீபாபா நம் அனைவரின் உள்ளமெனும் அரியாசனத்தில் வீற்றிருக்கட்டும் என்று பாவனை செய்யுங்கள்..

அடுத்த அத்தியாயத்தில் சாயீபாபாவின் சீரடி  விஜயத்தைப் பற்றிக் கூறுகிறேன்...

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🏼🙏🏼

ஸ்ரீ சாயீயைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்....🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏼🙏🏼🙏🏼

வெள்ளி, மே 14, 2021

ஶ்ரீ சீரடிபாபாவின் சாய்சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாயத்தின் வெளியீடு....🙏🏼🙏🏼🙏🏼


ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய்சத்சரித்திர அத்தியாய  இன்றைய வெளியீடு....🙏🏼🙏🏼🙏🏼

🙏🏼ஶ்ரீசாய் சத்சரித்திரம்🙏🏼

🙏🏼அத்தியாயம் ::இரண்டு(2).🙏🏼

🔥முதலில் புனித  வேத நூலான  சீரடி பாபாவின் சாய்சத்சரித்திரம் பாராயணம்  செய்வதன் முக்கியத்துவமும் ,பெறப் போகும் நன்மைகள் என்ன என்பதைப் பார்ப்போம்..🔥

சீரடி பகவானின்  புனித வேத நூல் என்பது ஶ்ரீசாய் சத்சரித்திரம்  என்பதாகும் ..இதில் சீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு எழுத்திலும் வியாப்பித்து  படர்ந்து இருக்கின்றது...

சத்சரிதத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல் ,மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது..ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து  சத் சரித்திரத்தில்  இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்....

இவ்வாறாக நாம் அனைவரும் சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும்  அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்..ஆகவே  சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்..நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக.🔥

🔥குறிப்பு...ஶ்ரீசாய் சத்சரித்திர வேதப்  பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்...🔥

தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்... அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரிய தன்மையை அடையலாம்....வேத பாராயணத்தின் மூலமாக  ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரிய நிலையை அடையும் நிலையைப் பெறலாம்...மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம், நேர்மறை, மனிதநேயம் போன்ற இறைப்பண்புகளைப் பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து,  தெளிவுப் பெறவும்  இந்த சாய் சத்சரித்திர  வேதப்பாராயணம்  துணைப்புரிகின்றது....  

மேலும் இப்பாராயணத்தின் மூலம்  மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில்  வெற்றி வாகை சூடலாம்....அவரவர்கள்  வேண்டியது கிடைக்கப்பெறும்..சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்... மேலும் அனைத்து விதமான  கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி  பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும்  ஒருசேரப்பெறலாம்.... 🔥🔥

🔥அத்தியாயம்..இரண்டு🔥

 🙏🏼முன்னுரை..🙏🏼

ஶ்ரீசீரடி சாய் பகவானுடைய  சாய்சத்சரித்திரம் ஹேமாட்பந்த் என்பவரால் எவ்வாறு எழுத்தாக்கம்  செய்யப்பட்டது என்பதைப் பற்றியும்.. சாய்சரித்திரம் எழுதக் காரணம் என்ன என்பதன் விளக்கமும் மற்றும் .அதனால் பெறப்போகும் பலன்கள் என்ன என்பதைப் பார்ப்போம்....

பகவானின் தரிசனத்தினால் நாம் அடையப்போகும் பலாபலன் என்ன என்பதன் விளக்கவுரை.. .

தன் ஞான திருஷ்டியால் தன் பக்தனின் ஒவ்வொரு  செயல்களை எவ்வாறு விழிப்புணர்வோடு உற்று நோக்குகின்றார்  என்பதன் விளக்கம் இங்கே...

சீரடி பகவானால் ஹேமத்பந்த் என்று  பெயரிட்டு  அழைக்கப்படக் காரணம் என்ன மற்றும்  சாய்சத்சரித்திர நூலாசிரியர் ஹேமந்த்பந்தின் சிறப்பியல்புகள் என்ன என்பதன் விளக்கவுரை இங்கே...

சத்குருவின்  தீவிர வழிக்காட்டுதலில் இருக்கின்ற  முக்கியத்துவம் பற்றிக்குறிப்புரை...

மேற்க்கண்ட தலைப்புக்களின் விளக்கவுரைகளைப் பற்றி ஒவ்வொன்றாகக் கீழே காண்போம்...

🔥முதலில் ஶ்ரீசீரடி சாய் பகவானுடைய  சாய்சத்சரித்திரம் ஹேமாட்பந்த் என்பவரால் எவ்வாறு எழுத்தாக்கம்  செய்யப்பட்டது என்பதைப் பற்றியும்,  சாய்சரித்திரம் எழுதக் காரணம் என்ன என்பதன் விளக்கமும் மற்றும் .அதனால் பெறப்போகும் பலன்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.....🔥 

முதலாம் அத்தியாயத்தில் கோதுமை  மாவரைத்து, அதை கிராம எல்லைகளில் தூவிவிட்டதன் மூலம் காலரா தொற்று  வியாதியைத் தடுத்து அழித்தது போன்ற சக்தி வாய்ந்த  சாயீபாபாவின் அற்புதத்தைக் கண்டோம்...ஹேமாட் பந்த் கூறுகின்றார்...நான் சாயீபாபாவின் பல அற்புத லீலைகளைப் பெரும் உள்ளக்கிளர்ச்சியுடன் கேட்டிருக்கின்றேன்....  அக்கிளர்ச்சியே இவ்வழகான பணியாகப் பொங்கி உருவெடுத்து, சாயீபாபாவின் சக்தி வாய்ந்த அற்புதங்களை எழுதக் காரணமாக அமைந்தது...பகவானின் அடியவர்களுக்கு உற்சாகமூட்டுவதாகவும் அறிவுறுத்துவதாகவும் இருப்பதுடன், பக்தர்களுடைய பாவங்களையும், தோஷங்களையும்  நீக்குகின்ற  காரணத்தால்  தான், நான் சாயீபாபாவின் புனித வரலாற்றையும், அவருடைய போதனைகளையும் இயற்றத் தொடங்கினேன்.  ஞானியின் வரலாறு என்பது தர்க்க சாஸ்திரத்துக்கோ, பட்டிமன்றத்துக்கோ உரியது அன்று... அதில்  உண்மையும், சத்திய வழியைக்  காண்பிக்கிறது...தாம் இப்பணியைச் செய்யத் தகுதியுடையவர் அல்ல என்று ஹேமத்பந்த் நினைத்தார்.  "எனக்கு நெருங்கிய நண்பனின் வாழ்க்கையே தெரியாது...அப்படியே எனது மனதையும் நான் அறியேன்.  இவ்வாறிருக்கையில் வேதங்களால் கூறவியலாத ஒரு ஞானியின் வாழ்க்கையை விவரிக்கும் ஒருவர் ஞானியாகவே இருக்கவேண்டும்... எனவே நான் எங்ஙனம் அவர்தம் புகழை விவரிக்க இயலும்..?  ஞானியின் வாழ்க்கையை வரைவதென்பது மிகக் கடினமானதாகும்... ஒருவன் ஏழ்கடல் ஆழத்தையும் அளவிட்டு விடலாம்.  துணி ஜோடனைகளால் ஆகாயத்தையும் அலங்கரித்து விடலாம்.  இது தீரமிக்க செயலாகும் என்று நான் அறிவேன்.  இது என்னைப் பார்த்து பிறர் நகைக்க இடங்கொடுத்துவிடும்" என நான் சாயீபாபாவின் அருளை நாடினேன்.அடியவர்கள் விரும்பும், வெற்றிகரமாய் முடிவுறும் இப்பணியை மேற்கொள்வதற்கு, ஞானியர் தம் வாழ்க்கை வரலாற்றை எழுதுவோரை கடவுள் விரும்புகிறார் என்று மஹாராஷ்டிரத்தைச் சேர்ந்த முன்னோடி கவியும், ஞானியுமான ஸ்ரீ ஞானேஷ்வர் மஹராஜ் என்பவர் எடுத்தியம்பியிருக்கிறார்... இப்பணியை ஞானிகள் சங்கல்பிக்கிறார்கள்....அடியவன், அம்முடிவை அடைய மறைமுகக் காரணமாகின்றான் அல்லது கருவியாகின்றான்.... உதாரணமாக சக வருடம் 1700-இல் கவிமஹிபதி, ஞானிகள் வாழ்கையை எழுதும் உயர்நோக்கம் கொண்டார்... ஞானிகள் அவரைச் சங்கல்பித்து பணியை நிறைவேற்றி வைத்தார்கள்.  அம்மாதிரியே சக வருடம் 1800ல் தாஸ்கணுவின் சேவையும் அங்கீரிகரிக்கப்பட்டது.  முன்னர் பக்த விஜயம், ஸந்த விஜயம், பக்த லீலாம்ருத், ஸந்த லீலாம்ருத் என்னும் நான்கு நூல்களையும் பின்னவர் நவீன ஞானியரைப் பற்றி விவரிக்கப்பட்ட பக்த லீலாம்ருத், சந்த கதாம்ருத் என்ற நூல்களையும் இயற்றினர்.

பக்த லீலாம்ருத்தின் 31, 32, 33 அத்தியாயங்களிலும், சந்த கதாம்ருத்தின் 57ம் அத்தியாயத்திலும் சாயீபாபாவின் சுவையான வாழ்க்கையும் ,அவரின் அறிவுரைகளும் நன்றாகச் சித்தரிகப்பட்டு இருக்கின்றன....  இவை சாயிலீலா சஞ்சிகையில்  (தொகுப்பு 11, 12, & 17) தனியாக பதிப்பிக்ப்பட்டிருக்கின்றன.  படிப்பவர்கள் இவ்வத்தியாயங்களைப் படிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்... அங்ஙனமே பாந்த்ராவைச் சேர்ந்த திருமதி சாவித்ரிபாய் ரகுநாத் டெண்டுல்கர் பதிப்பித்துள்ள சாயிநாத் பஜன்மாலா என்ற சிறிய அடக்கமான புத்தகத்திலும் சாயீபாபாவின் அற்புத லீலைகள் சித்தரிக்கப்பட்டு இருக்கின்றன... தாஸ்கணு மஹராஜும் பல்வேறு இனிய  பாடல்களை சாயீபாபா மீது எழுதியிருக்கின்றார்....  குஜராத்தில் அமிதாஸ்பவானி  மேதா என்னும்  சீரடியைச்  சேர்ந்த ஓர் அடியவர் சாயீபாபாவின் சில நிகழ்ச்சிகளைப்  பதிவிட்டுள்ளார்.  தஷிணபிஷா சன்ஸ்தானும் 'சாயீநாத் ப்ரபா'வை சில பதிப்புகள் செய்தனர்.....  இவ்வாறு சாயிபாபாவைப் பற்றிப் பல நூல்கள் இருக்கும்போது இந்த சத்சரிதம் ஏன் எழுதப்படவேண்டும்,  அதற்கான தேவையென்ன என்றும் எதிர்ப்புக் கேள்விகள் வருகின்றன...

 விடை தெளிவானதும், எளியதும் ஆகும்.  அகன்று ஆழ்ந்த எல்லையற்ற ஓர் பெருங்கடல் போன்று சாயீபாபாவின் வரலாறு உள்ளது...  அனைவரும் அதனுள் ஆழ்ந்து மூழ்கி விலைமதிப்பற்ற ஞானம், பக்தி என்ற முத்துக்களை எடுக்கலாம்.... நல்லுணர்வில் ஊறிக்கிடக்கும் மக்களுக்கு அவற்றைக் கொடுக்கலாம்.  சாயீபாபாவின் கதைகள், சிறுகதைகள், அறிவுரைகள் ஆகியவை மிகவும் அற்புதமானவை.  இவ்வுலக வாழ்க்கையினுடைய துன்பப் பெருஞ்சுமைகளைச் சுமந்து கொண்டிருப்பவர்கள், கவலையால் பீடிக்கப்பட்டோர்கள் ஆகியவர்களுக்கு மன அமைதியையும், மகிழ்ச்சியையும் அவை அளிக்கின்றன.  வேத அறிவையொத்த விறுவிறுப்புள்ளதும், அறிவூட்டுவதுமான சாயீபாபாவின் இப்போதனைகளெல்லாம் கேட்கப்பட்டு நற்சிந்தனை செய்யப்பட்டால் அடியவர்கள் கோரும் 'பிரம்மத்துடன் ஐக்கியமாதல்', 'அஷ்டாங்க யோகம்', 'தியானப் பேரின்பம்' முதலியவற்றைப் பெறுவர்...எனவே இந்நிகழ்ச்சிகளைப்  தொகுக்க  எண்ணம் கொண்டேன்..அதுவே எனது சிறந்த வழிபாடு ஆகும் என்பதாலின், சாயீபாபாவின் தரிசனத்துக்கு கொடுத்து வைக்காத இவ்வெளிய ஆத்மாக்களின் கண்களுக்கு இந்நிகழ்ச்சித் தொகுப்புக்கள் பேருவையாகவிருக்கும்.  எனவே நான் சாயீபாபாவின் போதனைகளையும், இயற்கையானதும் எல்லையற்றதுமான தன்னுணர்வுக் கருத்துக்களையும் சேகரிக்க முற்பட்டேன்.  இப்பணியில் பாபாவே என் உள்ளுணர்வைக் கிளப்பிவிட்டார்.  உண்மையில் என்னுடைய அகங்காரத்தை அவர்தம் பாதத்தடியில் சமர்ப்பித்து இம்மை, மறுமை இரண்டிலும் என்னைப் பூரண சந்தோஷமாக்குவார் என்று எண்ணினேன்.

இப்பணிக்கு நானே, எனக்கு அனுமதி அளிக்கும்படி பாபாவைக் கேட்கமுடியவில்லை.  பாபாவின் நெருங்கிய அடியவரான மாதவ்ராவ் தேஷ் பாண்டே என்ற ஷாமாவிடம், பாபாவிடம் எனக்காகக் கேட்கும்படி வேண்டிக்கொண்டேன்.  அவர் எனது எண்ணத்திற்க்காக பாபாவிடம் வாதாடினார்.  "இந்த அண்ணா சாஹேப் தங்கள் வரலாற்றை எழுத விரும்பிகிறார்.  நான் ஓர் ஏழைப் பக்கிரி என்று கூறாதீர்கள்.  ஆயின் நீங்கள் சம்மதித்து அவருக்கு உதவியளிப்பதாகக் கூறினால் அவர் எழுதுவார்.  அன்றித் தங்கள் திருவடிக் கருணையே இப்பணியை நிறைவேற்றிவிடும்.  தங்கள் அருள் துணையின்றி எதுவும் வெற்றிகரமாகச் செய்ய இயலாது." சாயிபாபா இவ்வேண்டுகோலைத் திருச்செவிமடுத்தவுடன் உருகி, உதி என்னும் திருநீறளித்து ஆசீர்வதித்துத் தன்னுடைய வரம் நல்கும் கரத்தை என் தலைமேல் வைத்து, "இவர் நிகழ்சிகள், அனுபவங்கள் ஆகியவற்றைத் தொகுத்து குறிப்பெடுத்து வைத்துக் கொள்ளட்டும்...நான் இவருக்கு உதவி செய்வேன்...அவர் ஒரு புறக்கருவியே ஆவார்.  என்னுடைய வரலாற்றை நானே எழுதி, என்னுடைய அடியவர்களின் ஆவலைப் பூர்த்தி செய்யவேண்டும். அவர்தம் அகங்காரத்தை அறவே களைந்து என் பாதங்களில் சமர்ப்பித்துவிடட்டும்...வாழ்க்கையில் இங்ஙனம் செய்வபவனுக்கே நான் மிகவும் உதவி புரிகிறேன்.  என்னுடைய வாழ்க்கை நிகழ்ச்சிகளைப் பற்றி என்ன..? நான் அவருடைய வீட்டில் 'ஒல்லும் வகையெல்லாம் ஓவாதே' பணிபுரிகிறேன்.  அவருடைய அஹங்காரம் சிறுதுளியும் எஞ்சியிராமல் அறவே அழிக்கப்பட்டுவிட்டால், நானே அவருட் புகுந்து என் வாழ்க்கை நிகழ்சிகளை எழுதுவேன்.  அடியவர் தம் உள்ளங்களில் எனது நிகழ்ச்சிகள், அறிவுரைகள் நம்பிக்கையூட்டும்.  எளிதில் தன்னை உணரலாம், பேரானந்தப் பெருநிலையும் அவர்கள் எளிதில் பெறுவார்கள்.  ஆயின் ஒருவரது சொந்தக் கருத்தையே நிலைப்படுத்தல், மற்றவர் கருத்தை மறுக்கச் செய்யும் முயற்சிகள், ஒரு பொருளின் நன்மை - தீமை இவற்றைப் பற்றிய விவாதங்கள் இருத்தல் கூடாது" என்று பகர்ந்தருளினார்.

'விவாதம்' என்னும் சொல்லானது ஹேமத்பந்த் என்னும் பட்டத்தை நான் பெற்ற நிகழ்ச்சியை விவரிக்க கொடுத்து இருந்த வாக்குறுதியை ஞாபகமூட்டுகிறது.... அதையே இப்போது கூறுகிறேன்...  காகா சாஹேப் தீஷித், நானா சாஹேப் சாந்தோர்கர் ஆகியவர்களுடன் நான் நெருங்கிய நட்போடிருந்தேன்.  அவர்கள் என்னை சீரடிக்குப் போய் பாபாவின் தரிசனத்தைப் பெறும்படி வலியுறுத்தினார்கள்.  ஆயின் இடையில் கிளம்பிய ஏதோ ஒன்று என்னை சீரடிக்குப் போகவிடாமல் தடுத்தது.  லோனவாலாவில் உள்ள எனது நண்பனின் புதல்வன் காய்ச்சல் அடைந்தான்...  எனது நண்பன், வைத்திய முறை மற்றும் வேண்டுதல் முறைகளில் உள்ள எல்லா வழிகளிலும் முயன்றார்.  ஆயினும் காய்ச்சல் குறையவில்லை.  முடிவாகத் தனது குருவை தன் மகனின் படுக்கைக்குப் பக்கத்தில் அமரவைத்தார்.  இதுவும் கூடப் பலனளிக்கவில்லை.  இதைக் கேள்வியுற்றதும், "என் நண்பனின் பையனைக் காப்பாற்ற முடியாத குருவால் யாது பயன்..?  குரு நமக்கு எதையுமே செய்ய இயலாதவரானால் நான் ஏன் சீரடிக்குப் போகவேண்டும்..?" என்றவாறு எண்ணமிட்டு  எனது  சீரடி  விஜயத்தை ஒத்திப்போட்டேன்.  ஆயின் தடுக்கமுடியாதது நிறைவேறியே தீரவேண்டும் என்பது என்னுடைய  விஷயத்தில் பின்வருமாறு நடைபெற்றது....

பிராந்திய ஆபீசர் நானா சாஹேப் சந்தோர்கர் பஸ்சீனுக்கு சுற்றுலா போய்க்கொண்டிருந்தார்.  தாணேவிலிருந்து தாதருக்கு வந்து பஸ்சீனுக்குச் செல்லும் வண்டிக்காகக் காத்துக்கொண்டிருந்தார்....இடையில் பாந்த்ராவுக்கு செல்லும் ஒரு வண்டி வந்தது.... அதில் அவர் ஏறியமர்ந்து பாந்த்ராவுக்கு வந்து என்னைக் கூப்பிட்டு அனுப்பினார்... நான் சீரடி விஜயத்தைக் கைவிட்டது குறித்து என்னைக் கடிந்தார்.... எனது  சீரடி  பயணத்தைப் பற்றி நானாவின் வாக்குவாதங்கள் திருப்தி அளிக்கக் கூடியதாகவும், உற்சாக மூட்டுவதாகவும் இருந்தன....  எனவே நான் அன்றிரவே  சீரடி புறப்படத் திட்டமிட்டேன்..என்னுடைய சாமான்களைக் கட்டிமுடித்து  சீரடிக்குப் புறப்பட்டேன்.தாதருக்குப் போய் அங்கிருந்து மன்மாட் போகும் வண்டியைப் பிடிக்கத் திட்டமிட்டு, தாதருக்குப் பயணச் சீட்டு பெற்று வண்டியில் அமர்ந்திருதேன்.. வண்டி புறப்பட இருக்கும்போது ஒரு முஸ்லிம் பெரியவர் விரைவாக எனது பெட்டிக்கு வந்தார்.  எனது மூட்டை முடிச்சுக்களைப் பார்த்துவிட்டு "போகும் இடம் என்ன..?" என்று கேட்டார்.  நான் எனது திட்டத்தைக் கூறினேன்....பின்னர் அவர் என்னை தாதரில் நிற்காமல் போரிபந்தருக்கே நேராகப் போகும்படியும், ஏனெனில் மன்மாட் மெயில் தாதரில் நிற்காது என்றும் அறிவுருத்தினார்... இந்த அற்புதம் நிகழ்ந்திராவிடின் சீரடிக்குத் திட்டமிட்டபடி அடுத்தநாளே போய்ச் சேர்ந்திருக்க வாய்ப்பில்லை....

பல ஐயங்கள் என்னைக் கடுமையாகத் தாக்கியிருக்கக்கூடும்.  ஆயின் அடுத்தநாள் காலை 9 லிருந்து  10 மணிக்குள்ளாகவே சீரடியை அடைந்தேன்...அங்கே பாவ் சாஹேப் எனக்காகக் காத்துக்கொண்டிருந்தார்.... இது 1910...ஆம் ஆண்டில் நிகழ்ந்தது...... அப்போது யாத்ரீக அடியவர்களுக்கு ஒரே ஒரு தங்குமிடம்தான் இருந்தது.  அது சாதேனுவினுடைய வாதாவாகும்...  குதிரை வண்டியிலிருந்து இறங்கிய பின்னர் பாபாவின் தரிசனம்பெற ஆவலாய் ஏங்கியிருந்தேன்...  மசூதியினின்று திரும்பிவந்த பெரும் அடியவரான தாத்யா சாஹேப் நூல்கர், சாயீபாபா வாதாவின் மூலையில் இருக்கிறார், முதலில் ஒரு முன்னோடி தரிசனம் செய்துவிட்டு, குளித்தபின் சாவகாசமாகப் பார்க்கலாம் என்று கூறினார்.  இதைக் கேட்டவுடனே நான் பாபாவிடம் ஓடி சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தேன்..எனது மகிழ்ச்சிக்கு எல்லையில்லை.  நானா சாஹேப் சாந்தோர்கர் என்னிடம் கூறியதற்கு அதிகமாகவே கண்டேன்.  என்னுடைய புலன்களெல்லாம் திருப்தியடைந்தன....நான் பசி தாகத்தை மறந்தேன்...சாயீபாபாவின் பாதங்களைத்  தொட்டவுடன் ஆசீர்வதிக்கப்பட்ட ஓர் புத்தம் புதிய வாழ்வையே அவர் எனக்கு அருளியதை உணர்ந்தேன்.....  என்னை இச்செயலில் இடைவிடாமல் தூண்டி சாயீபாபாவின் தரிசனத்திற்கு  உதவி புரிந்தவர்களுக்கு கடமைப்பட்டதைக் கருதினேன்...அவர்களை உண்மை உறவினர்களாக நினைக்கிறேன்....  அவர்களுடைய கடனை நான் திருப்பித்தர முடியாது.  அவர்களை நினைத்து, அவர்கள் முன் வீழ்ந்து வணங்குகிறேன்.

🔥பகவானின் தரிசனத்தினால் நாம் அடையப்போகும் பலாபலன் என்ன ..🔥

சாயீபாபாவின் தரிசனத்திலுள்ள நூதனமானது நான் கண்டவாறு, நம்முடைய எண்ணங்கள் மாறுகின்றன, முன் கர்ம வினைகளின் வலிமை அழிக்கப்படுகின்றது, அல்லது பற்றற்ற நிலை அதிகரிக்கின்றது... முன் பிறவிகளில் செய்த நற்கருமங்களால்  அத்தகைய சுபதரிசனம் அடையப்படுகிறது....  நீங்கள் சாயீபாபாவை கண்டுவிட்டீர்களானால் புறவுலகு எல்லாம் பகவானாகத்  தோற்றமளிக்கிறது என்பதனை உணரலாம்...

🔥தன் ஞான திருஷ்டியால் தன் பக்தனின் ஒவ்வொரு  செயல்களை எவ்வாறு விழிப்புணர்வோடு உற்று நோக்குகின்றார்  என்பதன் விளக்கம் இங்கே...🔥

குருவின் தேவையைப்பற்றி எனக்கும், பாலா சாஹேப் பாடேக்கும் இடையில் ஓர் சூடான விவாதம்...அது என்னவென்றால்  நான் சீரடிக்கு  வந்த  தினத்தன்று நடைபெற்றது..... "நம் சுதந்திரத்தை நாம் ஏன் இழக்கவேண்டும், மற்றவர்களிடம் ஏன் சரணாகதி அடைய வேண்டும்" என்று நான் விவாதித்தேன்.... "நாம் நம்முடைய கடமையைச் செய்யும் போது  ஏன் குரு தேவைப்படுகிறார்..?  ஒருவன் தன்னாலான முயற்சிகளைச் செய்து தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.  சோம்பேறியாகத் தூங்குவதைத் தவிர வேறெதையும் செய்யாத ஒருவனுக்கு குரு என்ன செய்துவிட முடியும்...?"  என்பது போல்  நான் சுதந்திர எண்ணத்திற்கு வாதாடினேன். ... பாடே கர்மத்துக்காக (தலைவிதி) வாதாடிக் கூறியதாவது, "நடப்பது நடந்தே தீரும்.  பெரியோர்கள் எல்லாம் தோல்வியுற்று இருக்கிறார்கள்.... மனிதன் ஒருவழியில் நினைக்க, தெய்வம் வேறுவழியில் செயல்படுகிறது.  உம்முடைய புத்தி சாதுர்யத்தைத் தள்ளிடுக.. பெருமையும் அகங்காரமும் உமக்கு உதவாது".  கொள்கைகள், மாறுபாடுகள் இவற்றுடன் இவ்விவாதம் ஒரு மணி நேரத்திற்குமேல் நடைபெற்றும் வழக்கம்போல் ஒரு முடிவும் காணப்படாது முடிவாக களைப்படைந்து விட்டோம்.... நானும் மன அமைதியை இழந்தேன்...வலிவான சரீர அபிமானம், அகங்காரம் இவை இல்லாவிடில் விவாதமே இல்லையெனக் கண்டேன்...  அகங்காரமே விவாதத்தை வளர்க்கிறது என்றும் கூறலாம்...பிறகு நாங்கள் மசூதிக்கு மற்றவர்களுடன் சென்றபோது காகா சாஹேப் தீஷித்தை, பாபா பின்வருமாறு வினவினார்...  சாதே வாதாவில் என்ன நடந்துகொண்டிருந்தது? விவாதம் எதைப் பற்றியது..? என்று கூறி என்னை உற்று நோக்கி மேலும் வினவியதாவது, "ஹேமத்பந்த் என்ன கூறுகிறார்..?"  இவ்வார்த்தைகளைக் கேட்டு நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன்...நான் தங்கியிருந்ததும் விவாதம் நடந்ததுமான சாதே வாதாவானது மசூதியினின்று நல்ல தூரத்திலிருக்கிறது....  சர்வ வியாபியாகவும், அகத்திலிருந்து ஆட்டிவைப்பவராகவும் இல்லாவிடில் எங்களது விவாதத்தை பாபா எங்ஙனம் அறிந்திருக்க முடியும்..? என்று தோன்றியது.....

🔥சீரடி பகவானால் ஹேமத்பந்த் என்று  பெயரிட்டு  அழைக்கப்படக் காரணம் என்ன என்பதன் விளக்கம்  மற்றும்  சாய்சத்சரித்திர நூலாசிரியர் ஹேமந்த்பந்தின் சிறப்பியல்புகள் என்ன என்பதன் விளக்கவுரை இங்கே.🔥.

சாயீபாபா என்னை ஏன் ஹேமத்பந்த் என்னும் பெயரால் அழைக்கவேண்டும் என்று நான் எண்ணமிட ஆரம்பித்தேன்....இச்சொல் 'ஹேமத்ரியபந்த்' என்ற வார்த்தையிலிருந்து திருத்தப்பட்டதாகும்...இந்த ஹேமத்ரியபந்த் யாதவ அரசவம்சத்தைச் சேர்ந்த ராமதேவ் என்ற தேவகிரி அரசர்களின் புகழ்பெற்ற மந்திரியாவார்.

கல்வி, கேள்வி நற்பண்புகளில் சிறந்து விளங்கியவர்..இவர்  ஆன்மீக விஷயங்கள் அடங்கிய 'சதுர்வர்க சிந்தாமணி' மற்றும் 'ராஜ ப்ரஷஸ்தி' போன்ற பல உயர்ந்த நூல்களின் ஆசிரியருமாவார்.... கணக்குப் பேரேடுகளில் புதியமுறைகளைக் கண்டுபிடித்துப் புகுத்தியவரும் மற்றும் மராத்தியச் சுருக்கெழுத்தின் கர்த்தாவுமாவார்...ஆனால் நான் முற்றிலும் மாறுபட்டவன். அறிவற்ற, ஓட்டமற்ற நடுத்தர எண்ணத்தோன்.  எனவே அந்தப் பட்டம் எனக்கு எதற்காகச் சூட்டப்பட்டது என்பது விளங்கவில்லை.  ஆனாலும் அதைக் குறித்துத் தீவிரமாகச் சிந்தித்து அது என் அகங்காரத்தை அழித்து, பணிவாகவும் , அடக்கமுடனும் இருக்கவேண்டும் என்பதற்காகவே அளிக்கப்பட்டது என நினைத்தேன்.....  விவாதத்தில் எனக்குள்ள புத்தி சாதுர்யத்துக்காகவும் அது எனக்கு வழங்கப்பட்டதாகும்.

எதிர்கால நிகழ்ச்சிகளை உற்றுநோக்கில், பகவானுடைய  சொற்கள் (தாபோல்கரை ஹேமந்த் என்று  அழைத்தது) முக்கியமானதும் தீர்க்க தரிசனம் நிறைந்ததும் ஆகும்....  ஏனெனில் மிகவும் புத்திசாலித்தனமாக சாயீபகவான்  சமஸ்தானத்தின் நிர்வாகங்களைக் கவனித்தது,  மற்றும் எல்லாக் கணக்குகளையும் துல்லியமாக  வைத்திருந்தார்... தீவிர  முக்கியமான  ஆத்மார்த்த விஷயங்களான ஞானம், பக்தி, அவாவின்மை, 'நான்' தன்மையை சரணமிடுதல், தன்னையுணர்தல் போன்றவற்றைக் குறிக்கும் சாயீ சத்சரிதம் என்ற புனித வேதநூலை எழுதிய  ஆசிரியராகவும் இருந்ததைக் காண்கிறோம்...

🔥சத்குருவின்  தீவிர வழிக்காட்டுதலில் இருக்கின்ற  முக்கியத்துவம் பற்றிகுறிப்புரை🔥

 ஹேமத்பந்த், பாபா இவ்விஷயத்தைப்பற்றி என்ன கூறினார் என்று எவ்விதக் குறிப்பும் இல்லை....ஆனால் காகா சாஹேப் தீஷித் இவ்விஷயத்தைத் தனது குறிப்புகளில் பதிப்பித்துள்ளார்....ஹேமத்பந்திற்கும் சாயீபாபாவிற்கும் இடையேயான  சந்திப்பின் அடுத்த நாளில், பாபாவிடம் காகா சாஹேப் தீஷித் சென்று தான் சீரடியை  விட்டுப்போக வேண்டுமா எனக்கேட்டார்.  பாபா "ஆம்" என்றார்.  பிறகு "எங்கே போவது" என  கேட்டார்.  பாபா "உயர... மேலே...!" என்று கூறினார்.  அம்மனிதர் "வழி எப்படிப்பட்டது" என பாபாவிடம் வினவினார்.  பாபா கூறினார், "அங்கே போவதற்குப் பல வழிகள் உள்ளன... இங்கிருந்தும் (சீரடிடியிலிருந்தும்) ஒரு வழி உள்ளது... பாதை கடினமானது..புலிகளும், ஓநாய்களும் வழியிலுள்ள காடுகளில் உள்ளன"... நான் (காகா சாஹேப் தீஷித்) கேட்டேன், "ஒரு வழிகாட்டியை நாம் அழைத்துச் சென்றால் என்ன..?"  அதற்குப் பாபா கூறினார், "அப்போது கடினம் இல்லை.  புலி, ஓநாய், படுகுழிகள் முதலியவற்றிலிருந்து உன்னை விலக்கி, உன் குறிக்கோளை அடைய நேரடியாக அழைத்துச் செல்வார்.  வழிகாட்டி இல்லையென்றால் காடுகளில் நீ காணாமல் போகலாம் அல்லது படுகுழியில் விழும் அபாயம் இருக்கிறது."

இந்நிகழ்ச்சியின் போது தாபோல்கரும் அறை அருகே இருந்தார்....இதுவே குரு அவசியமா என்னும் விவாதத்திற்கு பாபாவின் பதில் என்று எண்ணினார்....ஒரு மனிதன் சுதந்திரமானவனா அல்லது கட்டுப்பட்டவனா என்னும் விவாதம் ஆன்ம விஷயங்களில் உபயோகமில்லை என்றும், இவ்வத்தியாயத்தின் மராத்தி மூலப்பதிப்பில் விளக்கப்பட்டபடி பெரிய அவதாரங்களான ராமர், கிருஷ்ணர், முதலியோர் தமது குருக்களான வசிஷ்டர், சாந்தீபனி ஆகிய முனிவர்களிடம் தன்னையறிவதற்காக சரணடைந்தார்கள் என்றும், குருவினுடைய உபதேசத்தினாலேயே பரமார்த்திகம் அடையப்படுகிறது என்றும், நம்பிக்கையும் - பொறுமையுமே அத்தகைய முன்னேற்றதிக்குத் தேவையான நற்பண்புகளாம் என்பதுமே பாபாவின் திருக்குறிப்பாகும்....

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🏼🙏🏼🙏🏼

ஸ்ரீ சாயீயைப் பணிக....அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.....🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்.....🙏🏼🙏🏼🙏🏼


வியாழன், மே 13, 2021

ஸ்ரீ சாயீ சத்சரித்திரம்:🙏 அத்தியாயம்...ஒன்று ஆரம்பம்....🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ..🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி சாய்பாபாவின்  சாய்சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள  இன்றைய  அத்தியாயத்தின் வெளியீடு....🙏🏼🙏🏼🙏🏼

🙏🏼ஶ்ரீசாய் சத்சரித்திரம்.🙏🏼

🙏🏼அத்தியாயம்:: ஒன்று(1)🙏🏼

🔥முதலில் புனித  வேத நூலான  சீரடி பாபாவின் சாய்சத்சரித்திரம் பாராயணம்  செய்வதன் முக்கியத்துவமும் ,பெறப் போகும் நன்மைகள் என்ன என்பதைப் பார்ப்போம்..🔥

பகவானின்  புனித வேத நூல் என்பது சாய் சத்சரித்திரம்  என்பதாகும் ..இதில் சீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு எழுத்திலும் வியாப்பித்து  படர்ந்து இருக்கின்றது...

சத்சரிதத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல் ,மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய்சத்சரித்திரம் செயல்படுகின்றது...ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து  சத்சரித்திரத்தில்  இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்...

இவ்வாறாக நாம் அனைவரும் சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும்  அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்..ஆகவே  சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்..நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில்  சரணடைவோமாக...🙏🏼

🔥குறிப்பு...சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥

தனி மனித உயிரின்   சித்தம் தெளிவடையும்... அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரிய தன்மையை அடையலாம்....வேத பாராயணத்தின் மூலமாக  ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரிய நிலையை அடையும் நிலையைப் பெறலாம்...மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம், நேர்மறை, மனிதநேயம் போன்ற இறைப்பண்புகளைப் பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுபெறவும்  இந்த சத்சரித    வேதப்பாராயணம் துணைப்புரிகின்றது....

 மேலும் இப்பாராயணத்தின் மூலம்   மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில்  வெற்றி வாகை சூடலாம்..அவரவர்கள்  வேண்டியது கிடைக்கப்பெறும்..சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்... மேலும் அனைத்து விதமான  கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி  பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும்  ஒருசேரப்பெறலாம்.... 🔥🔥

🙏ஸ்ரீ சாயீ சத்சரித்திரம்:🙏

அத்தியாயம்.::..ஒன்று ஆரம்பம்....🙏🏼

நமஸ்காரங்கள் -🙏🙏🙏 

புராதனமானதும், மிக்க மரியாதையை உள்ளதுமான வழக்கத்தின்படி, ஹேமாட்பந்த், இந்த சாயீசரித்திரத்தைப் பல்வேறு நமஸ்காரங்களுடன் எழுத ஆரம்பிக்கிறார்.

1.  முதலில் எல்லாவித இடையூறுகளை நீக்குதற் பொருட்டாகவும், தன் பணி வெற்றியுறவும் "ஐந்து கரத்தனை யானை முகத்தனை" மிக்கப் பணிவுடன் தலை தாழ்த்தி வணங்குகிறார்.  ஸ்ரீ சீரடி சாயீயே, கணபதி என்றும் கூறுகிறார்.

2. பின்னர் தன் மனத்திலே உதித்த எண்ணங்களை உயர்த்தி உணர்வூட்ட தம் தாய் சரஸ்வதியை நமஸ்கரிக்கிறார்.  ஸ்ரீ சாயீ 'அறிவின் தெய்வமே' என்றும், அவரே தன் வாழ்க்கை கீதத்தை அழகுடன் பாடுகிறார் என்றும் கூறுகிறார்.

3.ஆக்கல், காத்தல், அழித்தல் என்னும் முத் தொழிலையும் முறையே நிகழ்த்தும் பிரம்மா, விஷ்ணு, சங்கரர் ஆகியோரையும் வணங்கி சாயிநாதர் அவர்களுடன் ஒன்றானவர் என்றும், சம்சாரம் என்னும் ஆற்றினை நாம் தாண்ட, நம்மைச் சுமந்து செல்வதில் மாபெரும் சத்குரு என்றும் விளம்பி,

 4. பின்னர் பரசுராமரால் கடலினின்று உயர்த்தப்பட்ட கொங்கண தேசத்தில் அவதரித்துத் தம்மைக் காக்கும் தம் குலதெய்வமான நாராயண் ஆதிநாத் மற்றும் குடும்பத்தின் ஆதிபுருஷரையும் நமஸ்கரித்து,

 5.பின்னர் தனது கோத்திரத்தில் அவதரித்த பரத்வாஜ முனிவரையும், பல்வேறு ரிஷிகளான யக்ஞவல்க்யர், பிருகு, பராசரர், நாரதர், வேதவியாசர், ஜனகர், ஜனந்தனர், ஜனத்குமாரர், சுகர், சௌனகர், விஸ்வாமித்ரர், வசிஷ்டர், வால்மீகி, வாமதேவர், ஜைமினி, வைசம்பாயனர், நவயோகீந்திரர் முதலியோரையும் நவீன மகான்களாகிய நிவ்ருத்தி, ஞானதேவர், சோபான், முக்தாபாய், ஜனார்த்தனர், ஏக்நாத், நாமதேவர், துகாரம், கனகர், நரஹரி முதலானோரையும் பணிந்து தலைவணங்கி,

6...பிறகு தனது தாத்தாவான சதாசிவரையும், தகப்பனாரான ரகுநாதரையும், தம் இளம் வயதில் மறைந்த அன்னை மற்றும் அவரை வளர்த்த அத்தை, அன்பிற்குரிய அண்ணன் ஆகியோரையும் வணங்குகின்றார்...

7...பின்னர் வாசிப்பவர்களை  வணங்கி, தமது பணிக்கு முழு அன்பையும், சிதையாத கவனத்தையும் கொடுத்தருள வேண்டிக்கொண்டு,

8... கடைசியாக தனது ஒரே அடைக்கலமும், பிரம்மமே மெய்ப்பொருள், பாரனைத்தும் மாயத்தோற்றம் என்று தனக்கு உணர்விக்கின்ற ஸ்ரீதத்தாத்ரேயரின் அவதாரமான சத்குரு ஸ்ரீ சாயீபாபா அவர்களை நமஸ்கரித்து, அங்ஙனமே எம்பெருமான் வதியும் எல்லா ஜீவராசிகளையும் வணங்கித் துதிக்கின்றார்...பராசரர், வியாசர், சாண்டில்யர் முதலியோரது கருத்தின்படி 'பக்தியால் பலகாலும்' துதித்தவற்றைச் சுருக்கமாகக் கூறிய பின்பு ஆசிரியர் பின்வரும் நிகழ்ச்சியை விவரிக்கிறார்...

🙏🏼முன்னுரை...🙏

பகவான் கோதுமை அரைக்க துவங்கியதன் மூல சூட்சமம் என்ன என்பதைப் பற்றிய விளக்கவுரை....

பகவான் கோதுமை மாவரைத்ததன் மறை ஞான  உட்கருத்தின் விளக்கம்....

மேற்க்கண்ட  தலைப்புக்களின் விளக்கவுரைகளைப்  பற்றி ஒவ்வொன்றாக இங்கே  கீழே  காண்போம்....

🔥 முதலில் பகவான் கோதுமை அரைக்க துவங்கியதன் மூல சூட்சமம் என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே..🔥

1910-ஆம் ஆண்டிற்குப் பின் ஒருநாள் நல்ல காலை நேரத்தில் மசூதிக்கு சாய்பாபாவைத் தரிசிப்பதற்காகச் சென்றிந்திருந்தேன்.  பின்வரும் நிகழ்ச்சியைக் கண்ட நான் ஆச்சர்யத்தால் தாக்கப்பட்டேன்.  தமது முகம், வாய் இவற்றைக் கழுவிய பின்பு, சாய்பாபா கோதுமை மாவு அரைக்கத் தயார்படுவதில் முனைந்தார்.  ஒரு சாக்கைத் தரையில் விரித்து அதன்மேல் திருகையை வைத்தார்.  பின்பு முறத்தில் கொஞ்சம் கோதுமையை எடுத்து தம்  கஃனியின் கைகளை மடக்கிவிட்டுக்கொண்டு கையளவு கோதுமையை திருகைக் குழியில் இட்டார்.  திருகையைச் சுற்றி கோதுமையை அரைக்கத் தொடங்கினார்...பிச்சை எடுத்து வாழ்ந்து, எவ்வித உடைமையும் சேமிப்பும் அற்ற இவர் கோதுமை மாவு அரைக்க வேண்டிய அவசியமென்ன என்றவாறு நினைத்தேன்....  

அங்குவந்த சிலரும் அவ்வாறே எண்ணினார்கள்...ஆயின், ஒருவருக்கும் பாபா என்ன செய்கின்றார் என்று கேட்கத் துணிவு வரவில்லை...பகவான்  மாவரைக்கும் இச்செய்தி உடனே கிராமத்தில் பரவி ஆண்களும், பெண்களும் பாபாவின் செய்கையைக் காணப் பெருந்திரளாக மசூதிக்கு வந்தனர்.  கூட்டத்திலிருந்த தைரியம் உள்ள நான்கு பெண்மணிகள் வலிய நுழைந்து, பாபாவை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு, திருகையின் கைப்பிடியைப் பற்றி பாபாவின் லீலைகளைப் பாடியவாறு மாவரைக்கத் தொடங்கினர்...

முதலில் பாபா கடுங்கோபம் அடைந்தார்.. ஆயின், அந்தப் பெண்மணிகளின் அன்பையும், பக்தியையும் கண்டு மிக்க சந்தோஷம் அடைந்து புன்னகை புரியலானார்...அவர்கள் அவ்வாறு அரைத்துக் கொண்டிருக்கையில் "பாபாவுக்கு வீடோ, பிள்ளைகளோ அன்றி அவரைக் கவனிக்க வேறு யாருமே இல்லையாதலாலும் அவர் பிச்சை எடுத்து வழ்ந்தவராதலாலும் அவருக்கு ரொட்டி செய்ய கோதுமை மாவு தேவையிருக்கவில்லை, எனவே இவ்வளவு மாவை என்ன செய்வார்?  ஒருவேளை பாபா அன்பாயிருக்கும் காரணத்தால், இம்மாவை நமக்குப் பகிர்ந்து கொடுத்துவிடுவார், " என்றவாறு எண்ணமிட்டபடி, பாடியவாறே அரைத்து முடித்து, திருகையை ஓரத்தில் நகர்த்திவிட்டு, கோதுமை மாவை நான்கு பிரிவாகப் பிரித்து ஆளுக்கு ஒவ்வொரு பகுதியாக எடுத்துக்கொள்ளத் தொடங்கினார்கள்.

இதுவரை அமைதியாகவும் அடக்கமாகவும் இருந்த பாபா கோபமடைந்து, "பெண்களே..! உங்களுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா..?  யாருடைய அப்பன் வீட்டுப் பொருளை இவ்வாறு அபகரிக்கிறீர்கள்...நீங்கள் தடங்கல் இன்றி மாவை எடுத்துச் செல்வதற்கு நான் முன்னம் உங்களிடம் கடன் பட்டிருக்கிறேனா என்ன..?  தயவுசெய்து இப்போது இதைச் செய்யுங்கள், இம்மாவை எடுத்துச்சென்று கிராம எல்லைகளில் கொட்டிவிட்டு வாருங்கள்" என்றார்...இதைக் கேட்டபின் அவர்கள் வெட்கமடைந்து தமக்குள் ஏதோ தங்களுக்குள்  பேசிக்கொண்டு கிராம எல்லைக்குச் சென்று பாபா குறிப்பிட்டபடி அங்கே மாவைப் பரப்பிவிட்டார்கள்...

பாபா செய்த இவைகளெல்லாம் என்னவென்று சீரடி மக்களை வினவினேன்.  காலரா நோய் கிராமத்தில் பரவிக்கொண்டு இருப்பதாயும், இது அதையே எதிர்க்க பாபாவின் பரிகாரமாகும் என்றும் கூறினர்...கோதுமை அரைக்கப்படவில்லை, காலராவே அரைக்கப்பட்டு கிராமத்திற்கு வெளியில் கொட்டப்பட்டது.  இந்நிகழ்ச்சியின் பின்னர் காலரா மறைந்து கிராம மக்கள் மகிழ்ச்சியுற்றனர்...நானும் இவற்றையெல்லாம் அறிந்துக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன..ஆனால் அதே சமயம் எனக்கு ஆச்சரியம் விளைந்தது.  காலராவுக்கும், கோதுமை மாவுக்கும் பூவுலகில் உள்ள ஒற்றுமை யாது..? சாதாரணமாக அவைகளுக்கு உள்ள உறவு என்ன..? அவை இரண்டையும் எங்ஙனம் இணைக்க முடியும்..?  இந்நிகழ்ச்சி விவரிக்க இயலாததாய் இருக்கிறது.  நான் இதைப்பற்றிச் சிறிது எழுதி என் மனம் நிறைவடையும்வரை பாபாவின் இனிக்கும் லீலைகளைப் பாடுவேன்.

இந்த லீலையைப் பற்றி இவ்வாறாக எண்ணமிட்டபின் என் உள்ளம் மகிழ்ச்சியால் நிறைந்தது.  இங்ஙனம் நான் பாபாவின் வாழ்க்கை வரலாறான சத்சரிதத்தை எழுத உணர்சியூட்டப்பட்டேன் என்கின்றார் ஶ்ரீசாய் சரித்திரத்தின் நூலாசிரியர்  ஹேமாட்பந்த்.. பாபாவின் அருளுடனும், ஆசியுடனும் இப்பணி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது என்பதையும் நாமறிவோம். 

🔥பகவான் கோதுமை மாவரைத்ததன் மறை ஞான  உட்கருத்தின் விளக்கவுரையை இங்கே காண்போம்...🔥

சீரடி மக்கள் இந்நிகழ்ச்சியை ஒட்டி அமைந்த காரணத்தைத் தவிர வேறு ஒரு தத்துவ உட்கருத்தும் இருப்பதாக நாம் நினைக்கிறோம்.  சாய்பாபா ஏறக்குறைய அறுபது ஆண்டுகள் சீரடியில் வாழ்ந்தார்...இந்நீண்ட காலத்தில் அவர் பெரும்பாலும் தினசரி  அரைத்தது   கோதுமையை மாத்திரமன்று..தன்னைத் தேடி வருபவர்களின்  பாவங்கள், உள்ளம் - உடல் ஆகியவற்றின் துன்பங்களையும், கணக்கில்லாத் தன் அடியவர்களின் துயரங்களையும் அரைத்துத் தீர்த்தார்.

கர்மம், பக்தி என்ற இரண்டு கற்கள் அவர் திருகையில் இருந்தது...முன்னது கீழ் கல்லாகும்..பின்னது மேற் கல்லாகும்.. பாபா பிடித்து அரைத்தக் கைப்பிடி ஞானமாகும்....  சத்துவம், ராஜசம், தாமசம் என்ற முக்குணங்களைச் சேர்ந்த நமது எல்லா உணர்சிகள், ஆசைகள், பாவங்கள், அஹங்காரம் இவைகளை நிகளந்துக்களாக்கி முன்னோடி வேலையாக அரைக்கப்பட்டாலன்றி 'ஞானம்' அல்லது 'தன்னை உணர்தல்' என்பது முடியாதென்பது பாபாவின் உறுதியான தீர்ப்பாகும்.. இக்குணத்தைத் தள்ளிவிடுவது அத்தகைய கடினமானது.. ஏனெனில் அவைகள் அவ்வளவு நுட்பமானவை...இது கபீரின் ஒரு நிகழ்ச்சியை இது ஞாபகமூட்டுகிறது...

அது என்னவென்றால்,  ஒரு பெண்மணி சோளத்தை அரைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு அவர் தன் குரு நிபத்னிரன்ஜனிரிடம், "திருகையில் இடப்பட்ட சோளத்தைப் போன்று இவ்வுலக வாழ்க்கை என்னும் திருகையாலே நசுக்கப்படும்போது நான் அஞ்சுவதனால் அழுகிறேன்" என்று கூறினார்...நிபத்னிரன்ஜனர் "பயப்படாதே, நான் செய்வது போல் இத்திருகையில் உள்ள ஞானமென்னும் பிடியைப் பிடித்துகொள்....  அதிலிருந்து நெடுந்தூரம் சென்று திரியாதே.  ஆயின் உட்புறமாகத் திரும்பு அப்போது நீ காப்பாற்றப்படுவது நிச்சயம்" என்று பதிலளித்தாராம்..இவ்வாறாக முதல் அத்தியாயம் முற்றிற்று.

ஓம் ஶ்ரீ சாய்ராம்....🙏🏼🙏🏼🙏🏼

ஸ்ரீ சாயீயைப் பணிக... அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்..🙏🙏🙏🏼

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🏼🙏🏼🙏🏼

🔥🔥உங்களின் அனைத்து கோரிக்கைகள் நிறைவேறும்...தீவிர நம்பிக்கையுடன் கூடிய விசுவாசத்துடன் காத்திருப்பீராக..🔥🔥

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நயஹ....🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி  சாய்பாபாவின் சாய்சரித்திர   அருள்மொழிகள் மற்றும் சுய விழிப்புணர்வு போதனைகள் இங்கே... 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

🔥🔥உங்களின் அனைத்து கோரிக்கைகள் நிறைவேறும்...தீவிர நம்பிக்கையுடன் கூடிய விசுவாசத்துடன் காத்திருப்பீராக..🔥🔥

உங்கள் வேண்டுதல், எனக்குக் கேட்காமல் இருக்குமா..?என் இதயம் இளகாமல் இருக்குமா..?ஸ்மரணை உங்களுடையதாக இருக்கையில், என் இதயத்தில் எதிர்வினை ஏற்படாமல் போகுமா..?

நான் சர்வமும் வியாபித்திருக்கின்றேன்....

உங்களுக்கு அருகிலேயே நான் இருக்கின்றேன்..

என்னுடைய கதைகளை{ஸ்ரீ சாய் சத்சரித்திரம்}சிரத்தையுடன் சிரவணம் செய்யுங்கள்..மனனம் செய்யுங்கள்...மனத்தில் இருத்திக் கொள்ளுங்கள்...அதில் உள்ள  .சத்திய உரைகளை கடைபிடியுங்கள்...

உங்கள் கோரிக்கைகள் எதுவானாலும் கண்டிப்பாக நிறைவேறும்....கர்மவினை எவ்வளவு பலமானதாக இருந்தாலும் கண நேரத்தில் நசிந்துவிடும்....என் அனுக்கிரகம் உங்களுக்கு நிரந்தரமாக இருக்கும்...ஆகவே பொருமை மற்றும்  நம்பிக்கை இங்கே அவசியமாகின்றது ..

ஓம் சாய்ராம்...🙏🏼🙏🏼

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுயவிழிப்புணர்வு தியான பீடம்...🙏🏼🙏🏼🙏🏼

🔥🔥யான் உபதேசிக்கின்ற சத்திய அருள்மொழிகளை பின்பற்றுங்கள்...சாய் சரித்திரத்தை பாராயணம் செய்யுங்கள்...அகத்தெளிவு பெறுவீர்கள்...🔥🔥

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் சாய்சரித்திர உரைகள் மற்றும் சுய விழிப்புணர்வு போதனைகள்🙏🏼🙏🏼🙏🏼.

🔥🔥யான் உபதேசிக்கின்ற  சத்திய அருள்மொழிகளை பின்பற்றுங்கள்...சாய் சரித்திரத்தை  பாராயணம் செய்யுங்கள்... அகத்தெளிவு பெறுவீர்கள்...🔥🔥

காலம் ஒரே மாதிரியாக இருக்கும் என்று கருதவேண்டாம்.....தங்க சிம்மாசனங்களும் கண்மறைவாகிவிடும்...அதிகாரங்கள் மறைந்து போகும்..செல்வவளம் சொல்லாமலேயே சென்றுவிடும்...கொடுக்கும் கரங்களே பெற்றுக் கொள்ளும் கரங்களாகி விடும்...அப்போது கொடுப்பவர்கள் இருக்க வேண்டுமல்லவா..!ஆகையால்[செல்வம்] இருப்பவர்கள் கொடுப்பதைப்  பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்....விதையை அப்படி விதைத்துக் கொண்டால் பலன் கிடைக்காமல் போகாது..... என்னுடையது, எனக்கு மட்டுமே என்ற பாவத்துடன் நாட்களைக் கடத்தி, தேவை எற்பட்டபோது எனக்கு யாரும் இல்லை என்று கருதினால் பிரயோஜனம் என்ன..?

தானம் செய்தது வீண் போகாது...ஆறுதல் சொன்னால் அது வீணாகாது....உதவி வீணாகாது.....நல்ல சொற்கள் வீணாகாது.. அன்பு வீணாகாது...தேவை நேர்ந்தபோது, அதிக பலனை இக்குணங்களே அந்த இறைவனின் வடிவத்தில் பிரத்தியட்சமாக உங்கள் கண் முன்னே வந்து நிற்கும்...இப்படிச் சேர்த்து வைத்தது எதுவோ அதுமட்டுமே ஜீவர்களுடன் வரும்....உயர்ந்த கதியை நல்கும்....ஆகையால் பிரம்ம ஞானத்தினால் பெரும் பிராப்தியை இவ்விதமாகவும் பெற முடியும்..!...என் சொற்களை மறந்து விடாதீர்கள்...

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🏼🙏🏼

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏼🙏🏼🙏🏼

🔥🔥சத்குருநாதர் சீரடி பாபாவுடன் எவ்வாறு நம்மை பிணைத்துக் கொண்டு ஆத்மார்த்தமாக பூஜிப்பது என்பதன் விளக்கம்....🔥🔥

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள் மற்றும் சுய விழிப்புணர்வு போதனைகள்....🙏🏼🙏🏼🙏🏼

🔥🔥சத்குருநாதர் சீரடி பாபாவுடன் எவ்வாறு நம்மை பிணைத்துக்கொண்டு  ஆத்மார்த்தமாக  பூஜிப்பது என்பதன் விளக்கம்....🔥🔥

பாபாவை அணுக விசேஷமான வழி முறைகள் ஏதுமில்லை...நம் தாயை எவ்வாறு  அணுகுவோமோ அவ்வாறே அனுக வேண்டும்..... சத்திய அன்புடன் பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்...அன்பு என்ன என்று குழந்தை உணருவதற்கு வெகு நாட்கள் முன்னதாகவே தாய் தன் குழந்தைகள் மீது அன்பைப் பொழிந்து வருகிறாள்...அதே போல் பகவான் தம்  குழந்தைகள் மீது அன்பைப் பொழியும் ஒரு கண்ணுக்குத் தெரியாத அன்னையின் பாத்திரத்தை ஏற்று, முற்பிறவிகளிலிருந்தே தொடர்ந்து தம் பக்தர்களாகிய குழந்தைகள் மீது அன்பைப் பொழிகிறார்...ஆனால் அவர்கள் இப்போது பாபாவை எப்படி அணுகுவது.,?அவர்கள் பாபாவை அணுகவேண்டும், என் மனப்பூர்வமாக விரும்பிய உடனே அணுகுமுறை  துவங்கி விட்டது...அக்கணத்திலிருந்தே அவர்கள் நிலையில் முன்னேற்றம் ஆரம்பமாகிவிட்டது... அவர்கள் மேலும் மேலும் உற்சாகம் அடைகின்றனர்..ஆகவே அதிகளவில் பலனை  அடைகின்றனர்...முதலில் ஒரு வித நன்றியுணர்வையும், நாளடைவில் பிரேம பக்தியையும் அவர்கள் பெறுகின்றார்கள்.... 

பக்தர்கள் பாபாவின் திருவுருவைத்  தங்களிடம் உள்ள லாக்கெட்டுகள், படங்கள் ஆகியவற்றில் அடிக்கடி பார்த்து,பாபாவின் திருவுருவை தினமும் மனதில் கொண்டுவர வேண்டும்.... கவிஞனின் கற்பனைகள் எல்லாவற்றையும் விட திறன்படைத்த பாபாவின் அற்புத லீலைகளை உணர சாய்சரித்திரப் பாராயணத்தை மேற்க்கொள்ளுங்கள்...பாபாவின் குணாதிசயங்களைப் பற்றித் தெரிந்துக் கொள்ள பாபாவின் அஷ்டோத்திர சத நாமாவளி [108 நாமாக்கள்] மிக்க சக்தி வாய்ந்த சாதனம்... ஆர்வமுள்ள பக்தர்கள் ஒன்று கூடி செய்யும் பூஜைகள், பஜனைகள் ஆகியவற்றில் பங்கு கொள்ள வேண்டும்...ஆத்மார்த்தமான உயரிய அன்பும் ஆர்வமும்,  ஏக்கமும்  உள்ள  சாதகனுக்கு பகவானே  மேற்க்கொண்டு உள்ள வழிகளைக் காட்டுவார்...

ஒவ்வொரு உண்மையான பக்தனுக்கும் பலவித வழிகளில் பாபாவுடன் மேற்கொண்டு தொடர்பு எப்படி வைத்துக் கொள்வது..அதை எப்படி வளர்த்துகொள்வது என்பது பற்றி பகவானே  உணர்த்துவார்..பாபா கடைபிடிக்கும் முறைகள் பலவகைப்படும்....உணர்ச்சிமிக்க துடிப்புள்ள சில பக்தர்கள் இன்றும் பாபாவைக் காண்கின்றார்கள்...விழிப்புடன்  இருக்கும் போதே அவருடன் பேசவும் செய்கின்றார்கள்... சிலருக்கு கனவுகளில் இந்த அனுபவம் கிட்டுகிறது.... பாபாவே தெய்வம் என்ற திடமான நம்பிக்கை கொண்ட சாயீ பக்தர்கள் எண்ணற்றவர்கள்....அவர்கள் தங்கள் பிரார்த்தனைகள் பாபாவால் ஏற்கப்பட்டு முழு  பலன்களைப் பெறுகின்றார்கள்...

ஓம் ஶ்ரீ சாய்ராம்..🙏🏼

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்..🙏🏼🙏🏼

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🙏 ஶ்ரீசீரடி சாய்பாபாவின் சாய்சரித்திர அருள்மொழிகள் மற்றும் சுய விழிப்புணர்வு போதனைகள் இங்கே...

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🙏🙏🏼

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் சாய்சரித்திர அருள்மொழிகள் மற்றும் சுய விழிப்புணர்வு போதனைகள் இங்கே...🙏🙏🏼🙏🏼

எனதருமை  குழந்தைகளே...உங்களுக்கு எதிராக எத்தனை பேர் செயல்படுகின்றார்கள் என்பதைப் பற்றி பொருட்படுத்த  வேண்டாம்... மனதைக்  குழப்பும் பிரச்சனைகள்  விரைவில் சரியாகி விடும் என்று மனதில் கூறி  விட்டு வேலையைப் பாருங்கள்..விரைவில் எங்களது வாழ்வில் அதிசயம் நடக்கும் என்றும், ஏற்படப் போகும் அதிசயங்களுக்கு நன்றி என்று ஆழமாகக் கூறிக்கொண்டே இருந்தால் போதுமானது...அது எப்படி சரியாகும்  என்பதன் வழிகளைப் பற்றியெல்லாம்  நீங்கள் ஆராய வேண்டாம்....

நமக்கு ஒரு சில வழிகள் தான் தெரியும், ஆனால் பிரபஞ்சத்திற்கு ஆயிரம் வழிகள் இருக்கும்.... அது எப்படியும் சரி செய்து விடும்...உங்கள் வார்த்தைகள் மற்றும் எண்ணங்கள் பிரபஞ்சத்திற்கு கட்டளைகளாக அனுப்பப்பட்டு விரைவில் சரி செய்து விடும்...உங்களைச் சுற்றி எதிராக நடப்பதை பற்றி கவலை பட வேண்டாம்.. பயம், குழப்பங்கள் வரும் போது பதட்டம் இல்லாமல் ஆழ்ந்த அமைதியாக இருக்கக் கற்று கொள்ளுங்கள்...நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன்,  விரைவில் அதிசயம் நடக்கும், ஏற்படப்போகும் அனைத்து அதிசயங்களுக்கும் நன்றிக்கூறவும்...

பிரபஞ்சத்திற்கு நன்றி என்று ஆழமாக மனதில் கூறிக்கொண்டே இருங்கள்... நிறுத்தாமல் கூறிக்கொண்டே இருங்கள்.. உங்கள் வார்த்தைகள்,  நம்பிக்கையான உணர்வுகள், சந்தோஷமான எண்ணங்கள் போதும் எல்லாவற்றையும் சரி செய்து விடும்...உங்களின் நேர் மறையான சக்தி இந்த பிரபஞ்சத்தை காட்டிலும் சக்தி வாய்ந்தது என்பதை மட்டும் உணருங்கள்...

ஓம் ஸ்ரீ சாய்ராம்...🙏🙏🙏🏼

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுயவிழிப்புணர்வு தியான பீடம்...🙏🏼🙏🏼🙏🏼

🔥🔥 உங்களின் அனைவருடைய பாரத்தைச் சுமப்பேன்.... ஆனால் அதனை பெறுவதற்கு ஏற்றாற்போல் தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.. யான் அறிவுருத்தின உபதேசங்களை கடைப்பிடிக்க முயலுங்கள்..🔥🔥

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் சாய்சரித்திர உபதேச அருள்மொழிகள், சுய விழிப்புண்ர்வு போதனைகள்....🙏🏼🙏🏼🙏🏼

🔥🔥 உங்களின் அனைவருடைய  பாரத்தைச் சுமப்பேன்..ஆனால்  அதனை பெறுவதற்கு ஏற்றாற்போல் தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.. யான் அறிவுருத்தின உபதேசங்களைக் கடைப்பிடிக்க முயலுங்கள்🔥🔥

என்னைச்  சார்ந்திருப்பவர்களின் யோகச் ஷேமங்களிலேயே என் ஆனந்தம் இருக்கும்...இது உண்மை....இதமானவற்றைச் சொல்லவே நான் இருக்கிறேன்...கேட்டும் கேளாதவர் போல் இருப்பவரை எந்த சக்தியாலும் காப்பாற்ற இயலாது....காலத்தின் ஓட்டத்தால் அவ்வாறு நிகழ்ந்தது  என்று சமாதானப்படுவதால் பலன் ஒன்றும் இல்லை....நாமாக பின்பற்ற வேண்டிய ஜாக்கிரதைகள் உள்ளன.

சாத்தியமானவரை,  சாமார்த்தியமாகத் தப்பித்துக் கொள்ளும் முயற்சியும் கூட செய்யவேண்டும்...புதைச்சேறு இருக்கிறதென்று  தெரிந்தும்  கூட, எப்படியிருக்குமோ பார்க்கலாம் என்று இறங்குபவர்கள் அதன் பலனை அனுபவித்தேயாக வேண்டும்...நான் உங்கள் பளுவைச் சுமப்பேன் என்பது வாஸ்தவமே... எப்போது சுமப்பேன்..?  எனது பேச்சை நீங்கள் கௌரவித்து  என்னைச் சரணடைந்த போது மட்டுமே பாரத்தைச் சுமப்பேன்...

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🏼🙏🏼

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய  விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏼🙏🏼🙏🏼

புதன், மே 12, 2021

சீரடி பகவான் தம்முடைய பக்தர்களுடைய நோய்களை எவ்வாறு எளிதாக குணப்படுத்தினார் என்பதன் விளக்கம்..

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகளும் மற்றும் சுய விழிப்புணர்வு போதனைகளும்...🙏🏼🙏🏼🙏🏼

🔥🔥சத்குருநாதர் சீரடிபகவான் தம்முடைய பக்தர்களுடைய  தீவிர நோய்களை எவ்வாறு எளிதாக  குணப்படுத்தினார் என்பதன் விளக்கம்...🔥🔥

1930..ஆம் ஆண்டு டாக்டர் ருஸ்தம்ஜி என்பவர், நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு மும்பை பார்சி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்...மருத்துவர்கள்அவர் குணமடைவார் என்ற நம்பிக்கையை இழந்து விட்டார்கள்...மயக்க நிலையில் இருந்த மருத்துவர்  ருஸ்தம்ஜியின் முன்பு ஒரு பக்கீர் தோன்றி என்னைத் தெரியுமா..? என்று கேட்டார். தெரியாது என்று பதிலளித்தார் ருஸ்தம்ஜி.... முதலில் உன் உடல் நிலை தேறட்டும், அதன் பிறகு என்னைத் தெரியவரும் என்று கூறிய பக்கீர்,ஒருமுறை ருஸ்தம்ஜியின் கட்டிலை சுற்றி வந்து பிறகு மறைந்துவிட்டார். சற்று நேரத்தில் அவர் கண் விழித்துவிட்டார்...அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ருஸ்தம்ஜி பிழைத்துக் கொண்டதையும்,  உடல்நிலை நல்ல முறையில் இருப்பதையும் அறிந்து வியந்தனர்.

மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த ருஸ்தம்ஜி, தன்னை ஆசிர்வதித்த பக்கீரைக் காண ஏங்கினார், ஆனால் முடியவில்லை.... ஒருநாள் அவர் பேருந்தில்  பயணம் செய்து கொண்டிருந்தபோது, பக்கத்தில் அமர்ந்து ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்த நபரின் கையிலிருந்த புத்தகத்தில் தான்பார்த்த பக்கீர் படம் இருப்பதை அறிந்து இவர்தான் தன்னைக் காப்பாற்றினார் என சந்தோஷப்பட்டார்...அதன் பிறகு சாயீபாபாவின் புத்தகத்தை வாங்கிப் படித்தார்.. 1949-ஆம் ஆண்டு சீரடி சமஸ்தானத்தின்  மருத்துவராக நியமிக்கப்பட்டார்...ஒருமுறை இவரது மனைவி கண் வலியால் பாதிக்கப்பட்டபோது, மருத்துவர்கள்  எத்தகைய சிகிச்சை அளிப்பது எனத் திகைத்தார்கள்... ருஸ்தம்ஜி தனது மனைவியை சீரடிக்கு அழைத்துவந்து, பாபாவின் சமாதியை தினமும் சுற்றச் செய்தார்...தனது கண்கள் குணமடைந்து விட்டால்,  பாபா பல்லக்கிற்கான அழகிய வேலைப்பாடு அமைந்த ஒரு துணியை அளிப்பதாக,  மருத்துவரின்  மனைவி வேண்டுதல் வைத்தார்....படிப்படியாக நோய் குணமடைந்துவிட்டது ...

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏼🙏🏼🙏🏼

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼🙏🏼 ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகளும், சுயவிழிப்புணர்வு அறிவுரைகளும்,

ஓம்  ஶ்ரீ  சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகளையும், சுய விழிப்புணர்வு போதனைகளும்...🙏🙏🙏

ஒரு முறை பாபாவை காணவந்த சிலர், அவரைப் புகைப்படம் எடுக்க அனுமதிக்குமாறு கேட்டார்கள். முதலில் மறுத்த பாபா தனது பாதங்களை மட்டும் படம் எடுத்துக் கொள்ளுமாறு பின்னர் கூறினார்... இந்த அனுமதியை வைத்து அவர்கள் பாபாவை முழுவதுமாகப் படம் பிடித்தார்கள்.. ஒருவர் பாபாவின் அனுமதியின்றி பாபாவைப் படம் பிடித்தார். நெகடிவ்வைக் கழுவி பிரிண்ட் போட்டபோது படத்தில் பாபாவின் பாதம் மட்டும் பதிவாகியிருந்தது...பாபா அனுமதியில்லாமல் படம் எடுத்தவரின் புகைப்படத்தில் அவருடைய சொந்த குருவின் உருவம் பதிவாகியிருந்தது... இவை டாக்டர் கவாங்கர் என்பவர் எழுதிய புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

ஓம் சாய்ராம்...🙏🏼🙏🏼

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏼🙏🏼🙏🏼

🔥🔥உங்கள் உச்சிமுதல் உள்ளங்கால் வரை கவசமாய் நான் இருக்கிறேன்....ஆகவே அனைத்து செயல் திட்டங்களையும் என் பாதங்களில் சரணாகதி செய்துவிட்டு உங்கள் வாழ்க்கையை நடத்துங்கள்...🔥🔥

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் சாய்சரித உபதேச உரைகள் மற்றும் சுய விழிப்புணர்வு போதனைகள் இங்கே...🙏🏼.

🔥🔥உங்கள் உச்சிமுதல் உள்ளங்கால் வரை கவசமாய் நான் இருக்கிறேன்....ஆகவே அனைத்து செயல் திட்டங்களையும் என் பாதங்களில் சரணாகதி செய்துவிட்டு உங்கள் வாழ்க்கையை நடத்துங்கள்...🔥🔥

உங்கள் தொழில் எதுவானாலும் உங்கள் வேலையை என்னுடையதாக மாற்றி விடுகிறேன்...பார்வையும் பார்க்கப்படும் பொருளாகவும் நானே இருக்கிறேன்... இவ்வளவாக நான் உழைத்துக் கொண்டிருக்கும் போது பயம் ஏன்..? பயமற்று இருங்கள்..! ஏக்கம் ஏன்..? எனக்காகவே ஏங்குங்கள்.பரபரப்பு ஏன்..?என் மீதே மிக்க ஆவல் கொள்ளுங்கள்.கவலை ஏன்..? எனக்காகவே கவலைபடுங்கள்.பரஸ்பர அனுராகத்திலேயே நான் இருக்கிறேன்... ஆத்மார்த்த அன்பு எங்குண்டோ அங்கு நான் இருக்கிறேன்....விசாலமான சிருஷ்டியில் நம்பிக்கையை உதவியாகக் கொண்டு என்னுள் பிரவேசியுங்கள்.

ஸ்ரீ சாயீன்  திருவாய்மொழி..🙏🏼🙏🏼

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம் ....🙏🏼🙏🏼🙏🏼

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🏼🙏🏼 ஶ்ரீசீரடி சாய்பாபாவின் சாய்சரித்திர அருள்மொழிகளும் மற்றும் விழிப்புணர்வு போதனைகளும்... உண்மையான சேவை என்பது என்னவென்றால்...

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் சாய்சரித்திர  அருள்மொழிகளும் மற்றும்  சுய விழிப்புணர்வு போதனைகளும்... 🙏🏼🙏🏼🙏🏼

🔥🔥உண்மையான சேவை என்பது என்னவென்றால்...🔥🔥

சுகமும் துக்கமும் வெளியுலகில் இருப்பதாக மனிதன் எண்ணுகிறான்...அது அவரவர் மனதிலேயே இருக்கிறது...அறுசுவை உணவாக இருந்தாலும், பழைய கூழாக இருந்தாலும் இரண்டுமே பசியைத் தான் போக்கும்... இன்பமாகத் தெரியும் ஒன்றே ஒருநாள் துன்பமாகவும் மாறலாம்.... துன்பத்திற்கும் இதே தன்மை பொருந்தும்...பிறருக்காக உடல், மனம், பொருள் எல்லாவற்றையும் அர்ப்பணிப்பதே உண்மையான சேவை என்பதாகும் ...ஆகவே முடிந்த அளவு பிற உயிர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவிகளைச் செய்வது சாலச் சிறந்தது....

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🏼

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுயவிழிப்புணர்வு தியான பீடம் ..🙏🏼🙏🏼🙏🏼

🔥🔥சாய் பகவான் தன் பக்தர்களுக்கு மிகவும் எளிமையான வழியையே போதித்தார்..அதுவே நம்பிக்கை, பொறுமை🔥🔥

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🙏🙏🏼

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் சாய்சரித்திர  அருள்மொழிகள் மற்றும் சுய விழிப்புணர்வு போதனைகளும் இங்கே....🙏🏼🙏🏼🙏🏼

🔥🔥சாய் பகவான் தன் பக்தர்களுக்கு மிகவும் எளிமையான வழியையே  போதித்தார்..அதுவே நம்பிக்கை, பொறுமை🔥🔥

முதலில் பக்தர்களுக்கு பாபா ஒரு சத்குருவாக தோற்றமளித்தாலும், மிகுந்த நம்பிக்கை உள்ள பக்தர்களுக்கே தான் இறைவனின் அவதாரமாக வெளிப்படுத்திக் கொள்கின்றார்...மிகவும் வியாபார மயமாகிவிட்ட இவ்வுலகத்தில் பாபாவின் பெயரில், சாய் ஹோமம், பாபா எந்திரம், பாபா பூஜை என்று அவரவர்கள் தனிப்பட்ட முறையில்  பாபாவின் பேரைச் சொல்லி தேவையற்ற செயல் முறைகளைக் கையாள்கின்றார்கள்...சத்சத்சரித்திரமே நமது வேதம்....அதை நன்கு படித்தீர்களேயானால் நீங்கள் பாபாவின் முழுமைத் தன்மையை உணர்வீர்கள்.....

பாபாவிடம் சரணாகதி அடைந்தால் போதும். அதாவது தன்னை முழுமையாக அவரின்பால் ஒப்படைத்தல்.. பாபாவே அனைத்திற்கும் சூத்திரதாரி என்று உணர்ந்து கொள்வது... அனைத்து செயல்பாட்டுக்களையும் அவரின்பால் ஒப்படைப்பது...அப்படி உணர்ந்த பக்தர்களின் வாழ்க்கையை பகவான் பார்த்துக் கொள்வார்....சேவகனாகவும் இருப்பார்... இதனை உணர்ந்த பக்தர்கள் ஏராளமானோர்கள்...

பாபாவிற்க்கென்று தனிப்பட்ட  விசேஷ பூஜை முறைகள் எதுவுமில்லை...அன்றாட ஆத்மார்த்தமாக உங்கள் இல்லறத்தில் உருவாக்கி வைத்திருக்கின்ற பூஜை முறைகளில்,  பாபாவிற்கும்  சேர்த்து  பூஜை செய்து அனுக்கிரகத்தைப் பெறலாம்...பகவான் தன்னை  முழுமையாக நம்பும் பக்தனிடம்  எப்போதும் இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்...  

ஜோதிடம் பார்ப்பது, காரியம் நடப்பதற்காக எந்திரம் உபயோகிப்பது...மந்திர மாந்திரீக மற்றும் தாந்திரீக பூஜை  செய்வது, இவை அனைத்தும்  பாபா மீது நம்பிக்கை இல்லாமையையேக்  காட்டுகின்றது...விரதம் இருப்பதை பாபா ஒருபோதும் அனுமதித்ததில்லை..பசியோடு இறைவனை துதிப்பதை வேண்டாம் என்றே பாபா அறிவுருத்துகின்றார்...இப்போது கடைகளில் கிடைக்கும் சாயீ  விரத புத்தகங்களில் உண்மையும் இல்லை...

பகவான் விருப்பு  வெறுப்புத் தன்மைக்கு அப்பாற்ப்பட்டவர்...பகவான் கூறியதன் அடிப்படையில் பார்த்தோமேயானால்  "சாயீ..சாயீ...ஓம் சாய்ராம் .என்ற மகா மந்திரத்தையும் , சத்சரித்திரம் மற்றும் குருசரித்திரப் பாராயணத்தையும்  பாராயணம் செய்யுமாறு  அறிவுருத்தினார்..ஆனால் பின்னாட்களில் சாய் அன்பர்களால்  பல்வேறு மூல சூட்சமங்கள் அடங்கிய மந்திரங்கள், காயத்ரி மந்திரங்கள, சாயீன் வர்ணனைப் பற்றியப் பாடல்கள்,சுலோகங்கள் ஆகியவற்றை உருவாக்கினர் ....இதை உச்சரிக்கும் இடத்தில் எல்லாம் சாய் பகவான் வாசம் செய்வார் என்பது அவரது உறுதிமொழி....

பாபாவை ஒரு குறிப்பிட்ட கோவிலில் மட்டுமே மிகவும் சக்தி படைத்தவராக சிலர் ஸ்தாபணம் செய்ய  முயற்சிக்கின்றனர்...உண்மை அதுவல்ல.. பாபா மூன்றரை அடியில் மட்டுமே உருவகம் செய்யக்கூடிய  உருவமல்ல, எங்கும் நீக்கமற நிறைந்தவர்...பஞ்ச பூதங்களையும்  ஆட்சி செய்பவர் ...அவர் இல்லாத உயிரினங்களே இல்லை எனலாம்....பகவான் அனைத்திலும் அனைத்துமாக வியாபித்து இருக்கின்ற ஒரு மூல பேராற்றல்...இதனை பல்வேறு நிலைகளில் நாம் விழிப்புணர்வோடு இருந்தால், அன்றாட வாழ்க்கை செயல்பாட்டிலேயே பாபாலின் பேராற்றலை உணர முடியும்...பகீரதப் பிரயத்தனம் எதுவும் செய்ய வேண்டியதில்லை.   அவரின் பால் ஆத்மார்த்தமாக அன்பு கொண்டு, நான் என்ற அகந்தையின்றி நம்பிக்கையையும்... பொருமையையும்... கடைப்பிடித்து,  அவரின் சத்திய அருள்மொழிகளைப் பின்பற்றி, சூட்சமமாக உணர்த்துகின்ற விஷயங்களை உணர்ந்து சாட்சியாக எதிலும் பற்றில்லாமல்  வாழ்ந்தால் போதுமானது...

இவற்றையெல்லாம்  பின்பற்றி, குருவழிப்பாதையைக் கடைப்பிடித்து , இறைப்பண்புகளோடும் பிறர்க்கு தீங்கிழைக்காமல் வாழ்ந்து, நம்மால் இயன்ற அளவில் தான தருமங்களைக் கடைப்பிடித்தோமேயானால்   சாய் பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும் எளிதாகப் பெற்று வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவது திண்ணம் ...

ஓம் ஶ்ரீ சாய்ராம்.....🙏🏼🙏🏼

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

செவ்வாய், மே 11, 2021

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ..🙏🙏🙏 ஶ்ரீசீரடி சாய்பாபாவின் சாய்சரித உபதேச பொன்மொழிகள் மற்றும் சுய விழிப்புணர்வு போதனைகள் ....

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ..🙏

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் சாய்சரித்திர  உபதேச பொன்மொழிகள் மற்றும் சுய விழிப்புணர்வு போதனைகள் ....🙏🏼

🔥🔥சீரடி பகவான் எவ்வாறு அண்டச்சராசரத்தில் இருக்கின்ற அனைத்துயிரிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றார், என்பதற்கு  எடுத்துக்காட்டான ஒரு உவமான விளக்கம் இங்கே...🔥🔥

நானா சாகேப் தெங்களே எனும் ஒரு பக்தர் ஒரு முறை வெள்ளித்தட்டு நிறைய பலவகை ருசியான பண்டங்களைக்  கொண்டு வந்து பாபாவிடம் அவற்றை சாப்பிட வேண்டுமென வேண்டினார்... பாபா உரக்க கத்தினார்... ஒரு கருப்பு நாய் ஓடி வந்து அந்த உணவின் ஒரு பகுதியை நக்கிவிட்டது... அருகில் நின்று கொண்டிருந்த நானா சாகேப் இதை அருவெறுப்புடன் நோக்கினார்.. "இந்த கீழ்த்தரமான நாய்க்காகவா நான் இவற்றை தயார் செய்தேன்..!" என அவர் மனதில் எண்ணம் தோன்றியது...உடனே பாபா உணவுப் பொருட்களுடன் அந்த தட்டை தூக்கி எறிந்து. "இதை எடுத்துச் செல்" என உத்தரவிட்டார்.... அப்போது நான் அங்கிருந்தேன்  (தாமோதர் ஸாவால்ராம் ராஸனே)...ஈனமான ஜந்துக்களையும், தாழ்ந்த நிலையில் உள்ளோரையும் தமக்கு இணையாகவோ, அல்லது தாமாகவோ பாபா நடத்தி வந்ததை நான் எப்போதும் நினைவில்கொண்டுள்ளேன்... 

ஒரு சமயம் பாபா எங்கும் வரமாட்டார், என் விடுதியில் உணவு ஏற்கமாட்டார் என நன்கு அறிந்த நான் பாபாவிடம் சென்று பாலா படேலை எனது விருந்தாளியாக அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொண்டேன்..பாலா படேல் தாழ்ந்த குலத்தைச் சார்ந்தவர்....ஆகவே அவரை அனுப்ப சம்மதித்த பாபா, "அவனிடம் தட் தட் எனக் கத்தாதே...!" எனக் கூறினார்... அதாவது நாம் சாப்பிடும் இடத்திலிருந்து விலகி தனியே இலை போட்டு அவரை உண்ணவைத்து அவரை அவமரியாதை செய்யக்கூடாது என்பது அர்த்தம்.. நான் ஒப்புக்கொண்டேன்... அறுசுவை உணவு தயார் செய்து, பாபாவுக்காக ஒரு இலை போட்டு எல்லா உணவு வகைகளையும் அதில் பரிமாறி  "பாபா!வருக..!"என அழைத்தேன்...ஒரு கருப்பு நாய் ஓடிவந்து அந்த உணவை உண்டது. அது சாப்பிட்டு முடிக்கும் வரை நான் பயப்பக்தியுடன் காத்திருந்து, அதன் பின்னர் பிறருக்கு விருந்தளித்து நானும் உண்டேன். என் அருகில் பாலாவுக்கு ஒரு இலை போட்டு சாப்பிட வைத்தேன். வீட்டுக்கு வெளியில் அல்ல...

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🙏🙏 ஶ்ரீசீரடி சாய்பாபாவின் சாய்சரித உபதேச அருளுரைகளும் ,சுய விழிப்புணர்வு போதனைகளும்...🙏.

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🙏🙏
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் சாய்சரித உபதேச அருளுரைகளும் ,சுய விழிப்புணர்வு போதனைகளும்...🙏.🙏🏼🙏🏼

🔥🔥தன்னை ஆராய்ந்த ஆத்மார்த்தமான பக்தையை பகவான் எவ்வாறு  தேற்றினார் என்பதன் விளக்கம்...🔥🔥

பிரம்ம சமாஜம் என்ற அமைப்பைச் சேர்ந்த காசிபாய் கனிட்கர் என்ற பெண்மணி சீரடிக்கு வரும் போது, பாபா மாய வேலை செய்யும் முகமதியரா அல்லது இந்து சித்தரா..? என்று நினைத்துக் கொண்டு வந்தார். ஏற்கனவே அவர்கள் அமைப்பில் இதைப்பற்றி விவாதித்தார்கள்...அந்த அம்மையார் பாபாவை நெருங்கியபோது, பாபா தனது நெஞ்சைக் காட்டி “நான் ஒரு பிராமணன், தூய பிராமணன், எனக்கும் மாயமந்திர வேலைக்கும் தொடர்பு எதுவுமில்லை.

அது மாதிரியான சித்து வேலை செய்யும் எந்த முகமதியரும் இங்கு நுழையத் துணிய முடியாது” என்று கூறியதோடு, “இந்த பிராமணன் லட்சக்கணக்கான மக்களை தூய்மையான ஒளி நிறைந்த பாதைக்கு இழுத்து. அவர்களின் லட்சியத்தை அடைய இட்டுச் செல்வார். இது பிராமண மசூதி, இங்கு மாய வேலை செய்யும் எந்த முகமதியனின் நிழல்படவும் அனுமதிக்கமாட்டேன்” என்று கூறினார்.....அப்போது பகவானின் இந்த அறிவுருத்தலைக் கேட்டு அந்த பக்தை மன திருப்தியடைந்தாள் என்பது குறிப்பிடத்தக்கது....

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுயவிழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🙏🙏 ஶ்ரீசீரடி சாயீன் சாய்சரித உபதேச உரைகள் மற்றும் சுயவிழிப்புணர்வு போதனைகள்....

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🙏🙏

ஶ்ரீசீரடி சாயீன் சாய்சரித்திர உபதேச உரைகள் மற்றும் சுயவிழிப்புணர்வு போதனைகள்.🙏🏼🙏🏼..

🔥🔥சீரடிபகவான், எவ்வாறு தன்னை நாடி வந்த நோயாளிகளின் தீர்க்க முடியாத வியாதிகளை குணப்படுத்தினார் என்பதைப் பற்றிய அனுபவ விளக்கம்....🔥🔥

பிறத்தல் அரிது.. ஆனால் அந்த மானிடப் பிறவியிலும் அரிதானவர்களாக இருந்து, மக்களுக்கு சமூக, ஆன்மிக தொண்டாற்றி இறைவனோடு கலந்தவர்களின் வாழ்க்கை புனிதத்துவம் வாய்ந்தது... அப்படிப்பட்ட புனிதர், மகான்களில் ஒருவதான் சீரடி  சாயீபாபா....ஒரு முறை மசூதியில் தங்கியிருந்த பாபாவிடம், உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் வந்தார். அவரது குறையைக்  கேட்டறிந்த பகவான் அவருக்கு மருந்தளித்தார்..... மருந்தை உட்கொண்ட  பக்தர்கள் உடனடியாக குணமடைந்து தெளிவடைந்தார்.

அந்த சம்பவத்தில் இருந்து சாயீபாபாவி டம், பூரண குணம் வேண்டி வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.... சாயீபாபாவின் சக்தி மீது அளவு கடந்த நம்பிக்கை கொண்டவர்களில் ஆமன்பாய் என்ற பெண்மணியும் ஒருவர்.... அவரது மகன் கண்பத்ஷரி கனாடே என்பவர் தொழு நோயினால் மிகவும் அவதிப்பட்டு வந்தார்... மேலும் அவருக்கு கடுமையான காய்ச்சலும் இருந்தது... இதனால் தனது வாழ்நாளை எண்ணிக்கொண்டிருந்த கனாடேவை, அவரது தாய் ஆமன் பாய், சாயீபாபாவிடம் அழைத்துச் சென்று, தன் மகனை குணப்படுத்தும்படி வேண்டிக்கேட்டார்...

கண்பத்ஷரி கனாடேவின் உடல் நிலையை பரிசோதனை செய்த பகவான்,  அவனுக்கு வந்திருக்கும் தொழுநோயை குணப்படுத்த முடியும் என்று கூறினார்...ஆனால் அதற்கான விஷம் தேவை என்பதையும் தெரிவித்தார்.... மருந்து தயாரிப்பதற்காக நல்ல பாம்பினை யார் பிடித்துக் கொண்டு வருவது என்பதில் இப்போது சிக்கல் ஏற்பட்டு விட்டது....அதற்கான வழியையும் பகவானே  தெரிவித்தார்.... கனாடேவிடமே, நல்ல பாம்பை பிடித்து வரும் படி கூறினார் பாபா..அவனோ அச்சம் காரணமாக தயங்கினான்... 'நல்ல பாம்பு, தொழு நோயாளியை கடிக்காது. எனவே எவ்வித அச்சமும் இன்றி பாம்பை பிடிக்கலாம்' ....என்று கூறி கனாடேவுக்கு ஊக்கம் அளித்தார் சாயீபாபா.....

பகவான்  கூறியபடியே காட்டுப் பகுதியில் அலைந்து திரிந்து ஒரு நல்ல பாம்பை பிடித்தான் கனாடே....அவன் கையில் சிக்கிய பாம்பு, அவனிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்றதே தவிர,  அவனை கடிக்க எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை...பாம்பைக்  கொண்டு வந்து பாபாவிடம் கொடுத்தான் கண்பத்ஷரி கனாடே..நல்ல பாம்பின் விஷத்தைக்  கொண்டு மருந்து தயாரித்து அவனுக்கு கொடுத்தார் சாயீபாபா.... மருந்தை சாப்பிட்ட சில நாட்களிலேயே கண்பத்ஷரியின் உடல் நலனின் அதிசயிக்கத்தக்க, ஆச்சரியப்படத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டு, அவர் முழுமையாக குணமடைந்தார்..பாபாவின் சிகிச்சை முறைகள் ஒவ்வொன்றும் விசித்திரம் உள்ளதாக இருந்தன.ஆராய்ச்சிக்கு அப்பாற்ப்பட்டவையே...

இங்கே நம்பிக்கையும் விசுவாசமுமே பகவான் நமக்கு ஆசியை வழங்க ஏதுவான வழியாகத் தெரிகின்றது....

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்..🙏🙏🙏

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🙏 ஶ்ரீசீரடி சாயீன் சாய்சரித்திர உபதேச அருள்மொழிகள் மற்றும் சுயவிழிப்புணர்வு போதனைகளும்....🙏 🔥குரு பக்தியைப் பற்றிச் சில அருள்மொழிகள்...🔥.

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீன் சாய்சரித்திர உபதேச அருள்மொழிகள் மற்றும் சுயவிழிப்புணர்வு போதனைகளும்....🙏

🔥குரு பக்தியைப் பற்றிச் சில  அருள்மொழிகள்...🔥.

சத்குருவின் மேல்  நம்பிக்கைக் கொள்வதற்கு .ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை" என்கின்றார் பாபா..அவ்விதமாகத்தான், தான் அனுபூதியடைந்ததாக பகவான் கூறுகின்றார்... சாய்பாபாவின் மேல் உள்ள நம் பக்தியை வளர்த்துக் கொள்வதற்குரிய சில கருத்துக்களை பகிர்வது  உபயோகமாயிருக்கும் என்று கருதுகின்றேன்....

முதன்முதலில் சாயீபாபாவின் ஓர் உருவப்படம் இன்றியமையாத ஒன்று...ஏனெனில், பாபாவும் அவரது உருவப்படமும் வேறல்ல...பகவானின்  ஒட்டுமொத்த பேராற்றல் உருவப்படத்திலும் அடங்கியுள்ளது...தவிர, அது பாபாவின் மேல் இடையறாது தியானம் செய்ய வேண்டியதன் உயர்வைப் பற்றிச் சக்தி வாய்ந்த முறையில் நினைவுபடுத்துகிறது...

பாபாவின் பிரசன்ன உருவப்படம் அத்தகைய குறிக்கோளை அடைய முயலும் படித் தூண்டுகிறது...பாபாவின் உருவப் படத்தை சிறு குழந்தையைப்  போன்ற பாங்கில், நம்மை வெற்றிடமாக வைத்துக் கொண்டு  உற்று கவனிப்பது என்பது  மிகவும் சக்தி வாய்ந்த சாதனையாகும்....சாய் பக்தர்கள் இதனை உணர்ந்தவர்கள் ஏராளமானோர்கள்  இருக்கின்றனர்..

இரண்டாவதாக, பாபாவின் வாழ்க்கைச் சரிதத்தைத் தவறாமல் பாராயணம் செய்வது,... நமது மனதை ஆத்மீகக் குறிக்கோளை நோக்கி இழுக்கும் வல்லமை வாய்ந்தது...நமது எல்லா எண்ணங்களும்,  உணர்வுகளும் பாபாவைப்பற்றியத் தெளிவையும்  உணர்தலையும் நமக்குள் ஏற்படுத்துவதற்கு வழியாக அமையும்....

மூன்றாவதாக, எப்போதுமே பாபாவின் நினைவிலேயே மூழ்கி, அவரது திவ்ய நாமத்தை இடையறாது உச்சரிப்பதில் நம் மனதை  ஒருநிலையில் ஈடுபடுத்தும்படியான வழக்கத்தை வளர்த்துக் கொள்ளல் வேண்டும்......

நான்காவதாக, நாம் எதை உண்பதாக இருந்தாலும்  அல்லது பருகினாலும்,அதை மானசீகமாகப் பாபாவுக்கு நிவேதனம் செய்தப் பிறகு ,அதைப்  பிரசாதமாக உண்ணும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளல் வேண்டும்....

ஐந்தாவதாக, நாளின் முதல் பதினைந்து  நிமிடநேரத்தை,நாள் முழுவதும் நாம் பாபாவின் நினைவில் லயித்துருப்பதாக, நம் பாவனையை இசைவு செய்துக் கொள்ளுவதில் செலவிடவேண்டும்...மீண்டும் தூங்குவதற்கு முன், நாளின் இறுதிப் பதினைந்து  நிமிடங்களையும் பாபாவைப் பற்றிச்  சிந்திப்பதிலும் செலவிட முயல வேண்டும்..?அன்றாட செய்த செயல்களின் படிவத்தை  இரவு பத்து நிமிடம், நாம் ஒரு முறை மீண்டும் நமக்குள்ளே கவனிக்க வேண்டும்...

ஆறாவதாக, ஸ்ரீ சாயீபாபாவின் விபூதியை நாள்தோறும் இட்டுக் கொள்ளும் வழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்...தண்ணீரிலும் கலந்து பருகலாம்...தினம் அல்லது  வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் பாபாவை மனமார வழிபடுவதற்காக ஒதுக்க வேண்டும்.... பாபா, தமது படத்தோடு ஒன்றுப்பட்டவர் என்பதைப் பலமாக நினைவுக்கூர்ந்து, அவரது இருப்பை உணர்ந்து, அவரது படத்தைப் பூஜை செய்ய வேண்டும்..... அவரின் பால் நம்மை பிணைத்துக் கொள்ள வேண்டும்...

குடும்பத்தில் இருக்கின்ற தாய் மற்றும் தந்தையைப் போன்று ஈடுபாடும் பெருமதிப்பும்  பகவானிடம் வைத்திருக்க வேண்டும்.... முடிந்த போதெல்லாம், தினசரி அல்லது வாரந்திர சாய் சத்சங்கத்தில் பங்கேற்க முயல வேண்டும்... சத்சங்க அருள்மோழிகளைப் படித்து அதன்படி நடக்க முயற்சி செய்ய வேண்டும்...இதனை அனைத்தும் கடைப்பிடித்து சாய் பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும் பெற்று வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவது சத்தியமே......

ஓம் ஶ்ரீ  சாய்ராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுயவிழிப்புணர்வு  தியான பீடம்....🙏🙏🙏

திங்கள், மே 10, 2021

🔥🔥நாம் அனைவரும் ஏன் குருமார்களிடம் அசையாத நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதைப் பற்றி விளக்கம்....🔥🔥

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🙏🙏

ஶ்ரீசீரடி சாய்பாபாவின்  சாய்சரித்திர அருள்மொழிகள் மற்றும் சுய விழிப்புணர்வு போதனைகள்...🙏🏼🙏🏼🙏🏼

🔥🔥நாம் அனைவரும் ஏன் குருமார்களிடம் அசையாத நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதைப் பற்றி விளக்கம்....🔥🔥

நம்பிக்கையும், பொறுமையும்  இல்லாதவர்களுக்கு பாபா அற்புதத்தைச் செய்வதே இல்லை... நம்பிக்கை இல்லாதவர்களுக்கு பாபாவிடமிருந்து அற்புதத்தைப் பெற இயலுவதுமில்லை என்றும் கூறலாம். எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் பாபா  மீது நம்பிக்கை வைக்கும்போது, அவர் நமக்குத் தெளிவையும், விழிப்புணர்வையும் , சரியானத் தீர்வையும் தருகின்றார்.. செயல்படுவதில் தீவிர நாட்டத்தையும்,வெற்றி அடைவதற்கான தீவிர  தன்னம்பிக்கையைத் தருகின்றார். உன்னுடைய கவலைகளை தூர எறி, உன்னுடைய துன்பங்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டன என்று அறிவுருத்துகின்றார்.... 

ஒருவன் எவ்வளவுதான் நசுக்கப்பட்டவனாக இருந்தாலும், இம்மசுதியில் கால் வைத்தவுடனே மகிழ்ச்சியின் பாதையில் செல்கிறான். இங்கேயுள்ள பக்கிரி மிகவும் அன்பானவர். இவர் இவ்வியாதியைக் குணப்படுத்துவார். அன்புடனும், ஆசையுடனும் எல்லோரையும் பாதுகாப்பார் என்று பக்தனுக்கு பாபா தன் சத்சரிதத்தில்  நம்பிக்கை வாசகங்களை கூறியிருக்கின்றார்...

பல வேளைகளில் நமது நம்பிக்கை ஆட்டம் காணும் அளவுக்குப் பிரச்சனைகள் அதிகமாகும். நம்பிக்கையே போய்விடும். வேறு எங்காவது போய் பார்க்கலாமா..? என எண்ணத்தோன்றும். இப்படி அடிக்கடி மனம் மாறுகின்றாயா..? தன்னம்பிக்கை இழக்கின்றாயா..? அல்லது வருவது வரட்டும், பாபா தான் என்னோடு இருக்கின்றாரே..! என தைரியமாக இருக்கின்றாயா..? என்பதை அவர் உற்று தன் பக்தனைக்  கவனிப்பார். என்ன செய்யப் போகின்றாய் என வேடிக்கையும் பார்ப்பார்..

ஆகவே நம் வாழ்வில் நடக்கின்ற அத்துனை காரியங்களையும், சாய் மாதாவின் பாத கமலத்தில் ஒப்படைத்து  வெரும் சாட்சியாக,நம் அப்பா அனைத்திற்கும் நல் வழி காண்பிப்பார் என்ற நம்பிக்கையோடும், பொறுமையோடும், வைராக்கியத்தோடும்  காத்திருந்து, நாம் நம்முடைய  வாழ்க்கை இயக்கத்தில் உள்ள  செயல்பாடுகளை மேற்கொண்டால், அனைத்திலும் குரு நம்மை உயர்த்துவார் என்பது திண்ணம் சாய் அன்பர்களே...

ஓம்  ஶ்ரீ  சாய்ராம்...🙏🙏🙏🏼

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🙏🙏 ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள்...

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🙏🙏

ஶ்ரீசீரடி  சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள் மற்றும் சுய விழிப்புணர்வு போதனைகள்...🙏🙏🙏

தினமும் சமைத்தவுடன் ஒரு கவளமாவது வீட்டிற்கு வெளியே வைத்துவிட்டால் கண்ணுக்குத் தெரிகிற மற்றும் தெரியாத லட்சக் கணக்கான ஜீவராசிகளுக்கு அன்னதானம் அளித்த புண்ணியம் கிடைக்கும்...அதை உண்ண யாரையும் அழைக்கவோ,விரட்டவோ கூடாது...

சாயீயின் முன்னால் எவன் சாஷ்டாங்க சரணாகதி செய்து, தனது இதயத்தையும் உயிரையும் அவரிடம் சமர்பிக்கின்றானோ, அவன் வாழ்கையின் நான்கு முக்கிய குறிக்கோளாகிய அறம் (தருமம்), பொருள் (செல்வம்), இன்பம் (ஆசை), வீடு (முக்தி) இவைகளை எளிதில் அடைகிறான்...

ஶ்ரீசாயீசத் சரித்திராவை கவனமாகவும், தொடர்ந்து இடைவிடாதும் படியுங்கள்... எல்லா விடைகளும் உங்களுக்கு கிடைக்கும்... எல்லா ஆன்மீகப் புத்தகங்களும், குருக்களின் வாழ்க்கை வரலாறுகளும் அடிப்படையில் உண்மையான வாழ்க்கை பாதை பற்றியே கூறுகின்றன..வெளிப்புறமாக நீங்கள் செய்யும் ஆராதனை, உங்களுக்குள் இருக்கும் என்னை அடைகிறது. அப்போது நான் சக்தி உடையவனாகி உங்களை காப்பாற்றுகின்றேன்..

ஓம் ஶ்ரீ சாய்ராம்....🙏🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுயவிழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏🙏🙏

https://youtu.be/UoUDuiPT2CgSub_confirmation=1


🔥🔥இன்பமும் துன்பமும் மாயையே...இவ்வுலகத்தில் தோன்றும் இன்பம் உண்மையான இன்பமாகாது.🔥🔥

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🙏🙏

ஶ்ரீசீரடி பாபாவின் சாய்சரித்திர  உபதேச உரைகளும் மற்றும் சுய விழிப்புணர்வு போதனைகளும்  இங்கே....🙏🏼🙏🏼🙏🏼

🔥🔥இன்பமும் துன்பமும் மாயையே... இவ்வுலகத்தில் தோன்றும் இன்பம் உண்மையான இன்பமாகாது.🔥

அதுவே உண்மையான இன்பம் என்று நம்பி விடுவதால் உலகப்பற்றுள்ள மனிதன் அதனால் விசையுடன் கவரப்படுகிறான்... ஒவ்வொருவருடைய பிரார்ப்தத்தின் படி ஒருவனுக்கு அறுசுவை உண்டிகள் கிடைக்கின்றன...ஒருவனுக்கு மக்கின ரொட்டி துண்டுகளும், வேறு ஒருவனுக்கு தவித்துக் கஞ்சியும் கிட்டுகின்றன...பிந்தியவர்கள் அதனால் மனவருத்தமடைகின்றனர்.. முந்தியவர்கள் தங்களுக்கு குறையொன்றும் இல்லை என எண்ணிக் கொள்கின்றனர்... ஆனால் இவைகளில் எதை உண்பதாலும் கிட்டும் பலன் ஒன்றே,..அதாவது பசி தீர்வது...ஒருவன் ஜரிகை துப்பட்டாவை போர்த்திக் கொள்கிறான்...இவருடைய நோக்கமும் ஒன்றே,...அதாவது உடலை மறைத்துக் கொள்வது....

இன்பமும்,துன்பமும் அவரவர் அபிப்பிராயத்தைப்  பொருத்தது....இது மாயையின் தோற்றம்....அழிவைத் தரக்கூடியது...மனதில் சுகம், துக்கம் என்ற எண்ணங்கள் தோன்றும் போது, அவற்றிற்கு இடம்கொடுக்காதே....எதிர்த்து நில்....அது முற்றிலும் மாயையே....

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுயவிழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🙏🙏 ஶ்ரீசீரடி சாய்பாபாவின் சாய்சரித உபதேச உரைகள் மற்றும் சுய விழிப்புணர்வு போதனைகள்.... 🔥விக்ரக வழிபாடும்..பாபாவும்..🔥🔥

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🙏🙏

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் சாய்சரித  உபதேச உரைகள் மற்றும்  சுய விழிப்புணர்வு போதனைகள்...🙏🙏🙏.

🔥விக்ரக வழிபாடும்..பாபாவும்..🔥🔥

ஏழு ஆண்டுகளாக குணப்படுத்த முடியாத தலைவலியுடன் பாபாவின் பக்தை வந்து பாபாவின் முன் அமர்ந்தார்...பகவான்  அந்த பக்தையின் சிரத்தை தொட்டு மென்மையாக வருடிக் கொடுத்து) உங்களுக்கு தலைவலி இல்லையா..?

பக்தை :... இருந்தது...இப்போது (நின்றுவிட்டது.தீராத தலைவலி உடனடியாக நிரந்தரமாக மறைந்தது) என்று கூறுகின்றார்...

பாபா : இவ்வளவு வருஷங்களாக எனக்கு நன்றாக உணவளித்து வருகிறீர்கள்...

பக்தை :....நான் தங்களை தரிசிப்பது இப்போதுதான்.

பாபா : சிறுபிராயம் முதலே நான் உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன்....பக்தை குழப்பமடைந்தார்.

பாபா :.. உங்கள் வீட்டில் என்ன பூஜை....

பக்தை : கணபதி பூஜை.

பாபா : உங்கள் தாயார் வீட்டில்...?

பக்தை:....கணபதி...நான் கணபதிக்கு எல்லாவித புஷ்பங்களும்,பழங்களும், தின்பண்டங்களும் சமர்ப்பித்திருக்கிறேன்.

பாபா : அவை எல்லாம் என்னை வந்தடைந்தன...ஆகவே சிறுமியாக இருந்த காலத்திலிருந்தே நான் உங்களை பார்த்து வருகிறேன்.....

பக்தை :.... பாபா,என் கணபதியின் ஒரு கரம் உடைந்து விட்டதால், அந்த சிலைதூக்கி எறியப்பட வேண்டுமென்கின்றனர்...

அது சரிதானா...?

பாபா : உங்கள் குழந்தை கையை ஒடித்துக் கொண்டால்,அதை நீரிலே தூக்கி எறிவீர்களா...?அந்த விக்கிரகத்தை தினமும் பூஜை செய்யவும்....

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்..🙏🙏🙏

🔥🔥நான் உன்னுடன் இருப்பேன் என்று கூறுகின்றார் பாபா... பாபாவிற்கும் பக்தர் ரேகேவிற்குமான உரையாடல்...🔥🔥

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🙏🙏

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள் மற்றும் சுய விழிப்புணர்வு போதனைகள்...🙏🙏🙏

🔥🔥நான் உன்னுடன் இருப்பேன் என்று  கூறுகின்றார் பாபா...பாபாவிற்கும் பக்தர் ரேகேவிற்குமான உரையாடல்...🔥🔥

பாபா : என் கஜானாவின் சாவி இப்போது உன் கைகளில்.எது வேண்டுமோ கேள்.மாதந்தோறும் ரூபாய் ஐந்து முதல் நூறு வரையோ அல்லது எது வேண்டுமோ,எதுவாயினும் நான் உனக்கு அளிக்கிறேன்....

பக்தர் (ரேகே) கேட்க மறுக்கிறார்.

பாபா :.. ஏதாவது கேள்....உனக்கு ஏதாவது கொடுக்க நான் ஆவலுடன் உள்ளேன்.

பக்தர் (ரேகே): நான் எது கேட்பினும் தாங்கள் கொடுப்பீர்கள் என் ஒத்துக் கொள்ளப்பட்டது தானே...?

பாபா : ஆம்....

பக்தர் (ரேகே): பாபா,அப்படியானால் நான் விரும்புவது இதுதான்.இப்பிறவியிலோ,இனி எனக்கு நேரக் கூடிய பிறவிகளிலோ,தாங்கள் என்னைவிட்டு பிரியக்கூடாது....எப்போதும் தாங்கள் என் கூடவே இருக்கவேண்டும்.

பாபா ; அப்படியே ஆகட்டும்.நான் உன்னுடன் இருப்பேன்.உன் உள்ளே இருப்பேன்,புறத்தே இருப்பேன்.நீ எப்படியிருந்தாலும்,என்ன செய்தாலும் அவ்வாறு இருப்பேன் என்று கூறுகின்றார்.....

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏🙏🙏

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🙏🙏🙏 ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகளும் , சுய விழிப்புணர்வு போதனைகளும் இங்கே....

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🙏🙏🙏

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச 
அருள்மொழிகளும் , சுய விழிப்புணர்வு போதனைகளும் இங்கே....🙏🙏🙏

எமது குழந்தைகளே..உங்களைக் காப்பாற்றுவதற்காக யான் அவதரித்தவன்.. அவ்வாறு இருக்கும் போது ,யான் உணர்த்துகின்ற நடைமுறை கருத்துக்களை உள்வாங்கி அதன் வழி நடந்தால் போதுமானது... மேலும் என்னிடத்தில் எப்போதும் நம்பிக்கையும், பொறுமையும்‌ கொண்டிருங்கள். குருவான நான் உங்களிடமிருந்து வேறெதையும் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை ..நான் உங்களை ஒருபோதும் புறக்கணிக்கவும் இல்லை.  எப்போதும் உங்களைப் பாதுகாப்பேன்‌ நான் உங்களுடனே  சூட்சமமாக பின் தொடர்கின்றேன்..ஆனால் அதற்கு நான் கூறிய அறிவுரைகளைப் பின்பற்றி நடந்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்...எதனையும் பற்றில்லாமல் பார்க்க பழகிக்கொள்ள வேண்டும்..ஒரு சில சமயம் உங்களைப் பிரிந்து இருப்பேன் எனினும், உங்களிடம் யான் ஓருபோதும்  அன்பின்மையையோ காட்டுவதில்லை.. தாய் ஆமையானது தனது இளங்குட்டிகள் தன் அருகில் இருப்பினும், தன்னை விட்டு நீங்கி ஆற்றின் அக்கரையில் இருப்பினும் , தனது அன்புப் பார்வையால் பேணி வளர்ப்பதைப் போன்ற‌ அதேவிதமாக, நானும் உங்களை என் கண்ணோட்டத்தினாலேயே  எப்போதும் பேணிப் பாதுகாப்பேன்..!

ஸ்ரீசீரடி சாய்பாபா....🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுயவிழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏

ஞாயிறு, மே 09, 2021

இறை மற்றும் குருமார்களின் மீது நாம் வைக்கின்ற நம்பிக்கையின் மகத்துவத்தை உணர எளிய உவமான விளக்கம்....🔥

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ..🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் சாய்சரித்திர அருள்மொழிகள் மற்றும் சுய விழிப்புணர்வு போதனைகள்..🙏🏼🙏🏼🙏🏼

🔥🔥இறை மற்றும்  குருமார்களின் மீது நாம் வைக்கின்ற  நம்பிக்கையின்  மகத்துவத்தை உணர எளிய உவமான விளக்கம்....🔥🔥

நம்பிக்கை என்பது அழகிய நீரூற்று..🙏🏼

ஒருவன் மலை உச்சியில் இருந்த இயற்கை அழகை ரசித்துக்கொண்டி ருந்தான். ..திடீரென்று கால் தவறி அதள பாதாளத்தில் விழுந்த போது, தற்செயலாக பாறையின் விளிம்பில் நீட்டிக் கொண்டிருந்த ஒரு வேரைப்பற்றிக் கொண்டான்...பிடி தளர்ந்தால் கீழே விழுந்து உயிர் போகும் அபாயம்..! அவன் இது வரை கடவுளை நம்பியதில்லை. மரண பயத்தில் திடீர் கடவுள் நம்பிக்கை வந்தது... கடவுளை நினைத்து, நீ தான் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டினான்...அப்போது வானத்திலிருந்து ஒரு அசரீரி..!

அசரீரி : நீ என்னை நம்ப மாட்டாய்..!

மனிதன் : கடவுளே, என்னைக் கை விட்டு விடாதே... நிச்சயம் நம்புகிறேன்.

அசரீரி : எனக்கு நம்பிக்கை இல்லை.

மனிதன் : கடவுளே, உன் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது... நீ தான் காப்பாற்ற வேண்டும்.

அசரீரி : சரி, உன்னைக் காப்பாற்றுகிறேன்... முதலில் நீ பிடித்திருக்கும் வேரை விட்டு விடு.

மனிதன் : வேரை விட்டு விட்டால் கீழே விழுந்து இறந்து விடுவேனே...?

அதன் பின் வானத்தில் குரல் எதுவும் கேட்கவில்லை...நம் மீது நாம் வைக்கும்      நம்பிக்கை முக்கியம் என்றால், அதை விட முக்கியம், நாம் இறைவன் மீது வைக்கும் நம்பிக்கை என்பதை அறிவீர்களாக....

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🏻🙏🏻🙏🏼

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🏻🙏🏻🙏🏻 ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள்...

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் சாய்சரித்திர  உபதேச  அருள்மொழிகள் மற்றும் சுய விழிப்புணர்வு போதனைகள்...🙏🏼🙏🏼🙏🏼

🔥🔥எவ்வாறு  சிக்கலான சந்தர்ப்பங்களில் பொறுப்போடும் அதே சமயம் சாந்தமாகவும் ஒன்றிணைந்தவராகவும் இருப்பது என்பதன்  விளக்கம் ...🔥🔥

எமது குழந்தைகளே....கோபத்தின் மனோதத்துவம் என்னவென்றால் நீ எதையாவது  விரும்புகிறாய்.. நீ அதை பெறுவதற்கு யாரோ தடையாக இருக்கிறார்கள், நீ அதை பெறுவதை தடுக்கிறார்கள், ஒரு தடங்கலாக இருக்கிறார்கள்...உனது சக்தி முழுமையும் ஒன்றை பெற விரும்புகிறது, யாரோ அந்த செயலை தடுக்கிறார்கள். நீ விரும்பியதை பெற முடியவில்லை..அந்த விரக்தியடைந்த சக்தி கோபமாக மாறுகிறது... உன்னுடைய ஆசை பூர்த்தியடையக் கூடிய சாத்தியக்கூறை அழித்த மனிதர் மேல் கோபம் வருகிறது.... உன்னால் கோபத்தை தடுக்க முடியாது... ஏனெனில் கோபம் ஒரு தொடர் விளைவு, பின் விளைவு. ஆனால் அந்த பின் விளைவு நிகழாமல் இருக்க நீ ஏதாவது செய்யலாம்..

வாழ்வில் ஒன்றை மட்டும் நினைவில் கொள். வாழ்வா சாவா என்ற கேள்வி வரும் அளவு எதையும் ஆழ்ந்து விருப்பப் படாதே....சிறிது  விளையாட்டுத் தனமாகவும் இரு...விருப்பப் படாதே என்று நான் கூறவில்லை...ஏனெனில்  அந்த ஆவல் உன்னுள் அழுத்தப்பட்டுவிடும், விருப்பம் கொள், ஆனால் அதைப்பற்றி சிறிதுவிளையாட்டுத்தனத்தோடு இரு என்றுதான் சொல்கிறேன்... கிடைத்தால் நல்லது...கிடைக்காவிட்டால் பரவாயில்லை, அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம் . விளையாடுபவர் போல இருந்து பழக வேண்டும்....

நாம் நமது ஆசைகளுடன் ஒன்று பட்டு விடுகிறோம்... அது தடைபடும்போது அல்லது தடுக்கப்படும் போது நமது சக்தியே தீயாகி விடுகிறது...அது உன்னை எரிக்கிறது... அந்த நிலையில் கிட்டதட்ட மனம் தடுமாறிய நிலையில் நீ என்ன வேண்டுமானாலும் செய்வாய் , பிறரை  பழி வாங்குவதற்காக... உன்னுடைய வாழ்வு முழுவதும் தொடரக்கூடிய  சங்கிலி தொடர் நிகழ்ச்சிகளை அது உருவாக்கும்....நீ கோபத்தை நிறுத்த முயற்சி செய்யக்கூடாது. நீ செய்யவே கூடாது. எந்த வகையிலாவது கோபம் கரைந்து போக வேண்டும். இல்லாவிடில் அது உன்னை எரித்துவிடும். உன்னை அழித்துவிடும்....

நான் சொல்வது என்னவென்றால் அதன் வேர்களுக்கு செல். ஏதோ ஆசை தடைப்பட்டு, நிறைவேறாமல் உள்ளது. அந்த விரக்தி தான் கோபத்தை உண்டாக்குகிறது. இதுதான் அதன் ஆணி வேராக இருக்கும்...இது ஒருமுறை உன் இருப்பில் உரைத்து விட்டால் பின் எல்லாமும்  ஏற்றுக் கொள்ளப்பட்டுவிடும்...கோபம் மறைந்து விடும், அப்படி அது மறைவது உனக்கு ஒருபுது ஆச்சரியமாக இருக்கும் ஏனெனில் கோபம் மறையும் போது அது அதன்பின் கருணையும் அன்பும் நட்பும் நிறைந்த அளவற்ற ஆற்றலை விட்டு செல்லும்...

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🏻🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼


ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏻🙏🏻🙏🏻 ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள்....

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏻🙏🏻🙏🏼

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள் மற்றும் சுயவிழிப்புணர்வு போதனைகள்...🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

எமது குழந்தைகளே...முதல் கவளத்திலேயே ஈ விழுந்தது போல, சாதனையைத் துவங்கிய உடனே ஏதேதோ தடங்கல்கள், வேண்டாத எண்ணங்கள், வெறுப்புணர்வு போன்றவை ஆரம்பமாகின்றன.. அவைகள் கர்மாக்களின் வடிவங்களே...அதற்காக உங்கள் பாதையை மாற்றிக் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை...அவற்றின் வழியில் அவைகளை வரவிடுவீராக....உங்கள் சித்தத்தை என் பாதங்களின் மேல் ஸ்திரமாக வைத்து விடுவீராக. சபல சித்தனாக இராதே.... உங்களுக்கு சந்தேகமற்ற விசுவாசம் என் மேல் இருந்தால் உங்கள் சாதனைகளில் உங்களை வெற்றி பெறச்செய்கிறேன். உங்களுக்கு அந்த சக்தியை கொடுக்கிறேன்...உங்கள் குறிக்கோளை அடையச் செய்யும் பொறுப்பு என்னுடையதாக இருக்கும். எப்படிப்பட்ட உதவி வேண்டுமானாலும் நான் உங்களுக்குச் செய்கிறேன். உங்கள் லட்சியம் நானாக இருக்கட்டும் என்பதை மட்டும் மறவாதீர்கள்..

ஓம் ஶ்ரீ  சாய்ராம்...🙏🏻🙏🏻🙏🏼

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ.🙏🙏🙏 ஶ்ரீசீரடி சாய் பாபாவின் அருள்மொழிகள்....

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ.🙏🙏🙏

ஶ்ரீசீரடி சாய் பாபாவின் சாய்சரித்திர அருள்மொழிகளும் மற்றும் சுய விழிப்புணர்வு போதனைகளும்.🙏🏼.

🔥🔥பரமபாக்கியம் பெற்றவனே மனிதப்பிறவி பெறுகிறான்...ஆனால் இறைவனின் அருள் ஒன்றே அவனை சாயீயின் பாதங்களுக்கு கொண்டுவருகிறது...ஆகையால் கிடைத்ததற்கரிய பொக்கிஷமான  இந்த சாய் அன்னையை  குருவாக ஏற்றுக் கொண்டு, ஆன்மீக வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவோமாக...🔥🔥

சாயீயினுடைய லீலைகள் தர்க்கசிந்தனையால் புரிந்துகொள்ள முடியாதவை ; அவற்றைப் பற்றிய பூரணமான ஞானத்தை அடையவே முடியாது ! ஸாயீ லீலைகளின் ஒரு பகுதியையாவது அறிந்து கொள்ள முடிந்த மனிதன் மஹாபாக்கியசாலி..கோடிப் புண்ணியம்  செய்தும்,  மஹா பாக்கியங்களாலும்  இம்மனிதப்பிறவி கிடைத்திருக்கிறது...ஆகவே, இந்த நல்வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்தி பாபாவின் பாதங்களை இறுகப்பற்றிக் கொள்ளவேண்டும் நாம் அனைவரும்..பகீரதப் பிரயத்தனம் (கடுமையான தவம் ) செய்தாலும் மனிதப்பிறவியை அடையமுடியாது..அது விதி வசமாக கிடைக்கும் அதிர்ஷ்டமே !ஆகையால் இந்த மனிதப்  பிறவியை  வீணாகக் குப்பைத் தொட்டியில் போட்டுவிடாமல், பிறவி எடுத்ததன் பெரும்பலனை அடையக் காரணமாக இருக்கின்ற  குருவின் கரங்களில் நாம், நம்மை ஆத்மார்த்தமாக ஒப்படைக்க வேண்டும்.... 

மனிதவாழ்வில்  ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்காமல் பாபாவின் பக்தியில் முற்றிலும் மூழ்குங்கள் ! அசையாத நம்பிக்கை,  திடமான விசுவாசம்,  உறுதியான பக்தி இந்த மூன்றினால் மட்டுமே சாயீயின் பரிபூரண அனுபவம் கிட்டும்,  கேட்காமலேயே கிட்டும்.‌.. இதனோடு சேர்ந்து வைராக்கியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்..சாயீன் பக்தனாக நாம் இருப்பது என்பது ,பக்தனின் வாழ்வில் கிடைக்கும் ஒரு அற்புதம்‌ !..ஆகையினால் குருவோடு  நம்மை இணைத்துக் கொண்டால்,  அவரின்  பேராற்றலை உணர முடியும்  பின்னாட்களில் அன்பர்களே.    

ஆகையால் சாய் பகவான் காட்டிய சத்தியப் பாதையில் பயணித்து, சாயீன் அருள்மோழிகளை ஆத்ம உணவாக ஏற்றுப்  பாவித்து, அதனை சத்சங்கமாக பாராயணம் செய்து, ,சத்சரிதத்தில் இருக்கின்ற  வாழ்வியல் நெறிமுறைகளைக் படித்துக்  கடைப்பிடித்து, அதனை  வாழ்க்கையில் நாம் செயல்படுத்த முயற்சி செய்ய வேண்டும்..மேலும் பகவான்   கூறிய  தாரக மந்திரமான பொருமை மற்றும் நேர்மையைக்  கடைப்படித்து தன்னப்பிக்கையையும்,  சகிப்புத்தன்மையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்..,நாம் அனைவரும்  குருவிடம் ஒளிவு மறைவின்றி நம்மை ஒப்படைத்து, சிறு குழந்தையாக நம்மை பாவித்து அவரின் கருணைப் பார்வைக்காகவும் பேரன்புக்காகவும்,நான் என்கின்ற அகந்தையின்றி  காத்திருக்கப் பழக வேண்டும்.....

இவ்வாறாக நாம் நம்மை குருவோடு பிணைத்துக் கொண்டு, நம்முடைய  வாழ்க்கையை வாழ்ந்தோமேயானால், குருவானவர் நம்மை  பலர் போற்றும் அளவிற்கு  உயர்ந்த நிலையை அடையச் செய்து  பிறவி எடுத்தப் பலனையும் ஒரு சேரப்  பெறச் செய்வது என்பது  திண்ணம்.....ஆகையினால் குருவின் நாமத்தை உச்சரித்து, குருவைப் பணிந்து, குருவின் அருள்மொழிகளை வாசித்து குரு சேவையாற்றுவோம்......

ஓம்  ஶ்ரீ  சாய்ராம்.... 🙏🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புண்வு தியான பீடம்.....🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

🔥🔥🔥ஶ்ரீசீரடி சாய்பாபாவின் புனித வேதநூலான சாய்சத்சரித்திரம் யாரால் எவ்வாறு எழுத தொடங்கியது என்பதைப் பற்றிய விளக்கம்....🔥🔥

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🏻🙏🏻🙏🏻

ஸ்ரீசீரடி சாய்பாபாவின்  சாய்சரித்திர அருள்மொழிகள் மற்றும் சுய விழிப்புணர்வு போதனைகள்..🙏🏼🙏🏼🙏🏼

🔥🔥ஶ்ரீசீரடி சாய்பாபாவின் புனித  வேதநூலான சாய்சத்சரித்திரம் யாரால், எவ்வாறு  எழுத தொடங்கப்பட்டது  என்பதைப் பற்றிய அனுபவ விளக்கம்.🔥🔥

ஶ்ரீசாய் சத்சரித்திரத்தை  இயற்றியவர்  ஹேமாட்பந்த்  என்பவர் ஆவார்.., சீரடி பாபாவை தன் சத்குருவாக  ஏற்று, பாபாவின் ஆசியையும்,அனுக்கிரகத்தையும் ஒருங்கேப் பெற்ற  உயரிய பக்தராவார்...சீரடி சாய்  பாபாவைப் பற்றி எழுத பகவானின் ஆசி முதலில் தேவை என்று உணர்ந்த ஹேமாட்பந்த், மாதவ்ராவ் தேஷ் பாண்டே என்ற பாபாவின் நேரடிப் பக்தரை, அணுகினார்...இருவரும் பாபாவிடம் ஒருநாள் சென்று வணங்கினார்கள் அப்போது  மாதவ்ராவ் தேஷ்பாண்டே  பகவானிடம்  கூறுகின்றார்...பகவானே உங்கள் சரித்திரம் எழுத ஹேமாட்பந்த் மிகவும் ஈடுபாடும் ஆவலும் கொள்கின்றார் என்று அனுமதி கேட்கின்றார்..அதற்கு பகவான் என்னைப்பற்றி எழுத என்ன இருக்கிறது...நான் ஒரு சாதாரண பக்கிரி என்று கூறுகின்றார்..அதற்கு மாதவ்ராவ் அவ்வாறு கூறாதீர்கள்..உங்கள் ஆசியில்லாமல் அவரால் இது எழுத  துவங்க இயலாது.'' என்று கூறுகின்றார் மாதவ்ராவ்...பகவான் இதை கேட்டுவிட்டு சிறிதும் யோசிக்காமல் அருகே இருந்த உதியை  (சாம்பல்) எடுத்து ஹேமாட்பந்தை  அருகே வர ஜாடை காட்டி  சிரம் தொட்டு தலையில் இட்டு, ''அவன் எழுதட்டுமே  என்று ஆசி வழங்குகின்றார்....பக்தர்களின் கதை, அனுபவம்  எல்லாம்  சேமித்துக் குறிப்பெடுத்துக் கொண்டு எழுதட்டும்  நான் உதவுகிறேன் என்றும், அவன் என்னை வெளிப்படுத்தும் கருவி..ஆகவே  நான் அவனை  என்னைப் பற்றி சொல்ல  உபயோகித்துக் கொள்கின்றேன் என்று கூறுகின்றார்....என் பக்தர்கள் விரும்புவதை சாய்சரித்திர வேத சொற்கள்  நிறைவேறட்டும்  'என்கின்றார்  பகவான்....இதற்கு அகம்பாவம், தற்பெருமை  கூடாது... நானே கதி என்கிற சரணாகதி அவசியம்... அதெல்லாம் அவனிடம் உண்டாகும்போது நானே அவனுள் இயங்கி  என்னைப்பற்றி கூறிக் கொள்வேன்'' என்கிறார் பகவான்....

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🏻🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏼🙏🏼🙏🏼🙏🏼


ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🏻🙏🏻🙏🏻 ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள்...

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🏻🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி  சாய்பாபாவின் சாய்சரித்திர  உபதேச அருள்மொழிகள் மற்றும் சுய விழிப்புணர்வு போதனைகள்.....🙏🏼🙏🏼🙏🏼

🔥🔥பேராசை, மனிதர்களை பல வாய்ப்புகளைக் காட்டி ஈர்க்கிறது. ஒன்று இல்லாவிட்டால் மற்றொன்றில் மாட்டிக்கொள்ள வைப்பதே அதன் திட்டம். அதனால்தான் பகவான் ‘எப்போதும் பேராசை இல்லாதவர்களாக இருங்கள்’ என்று உபதேசம் செய்துக் கொண்டேயிருந்தார்...உலகில் எல்லோரையும் அலைக்கழிக்கும் பேராசையை தன் பக்தர்கள் பக்கம் வரவிடாதபடி காத்தார்...🔥🔥

உலகில், பாதுகாப்பாகத் தெரியும் வழிகளின் முடிவில் அபாயம் மறைந்திருக்கும்.... அழகாகவும் கவர்ச்சியாகவும் தெரிபவை பலவற்றின் மறுபக்கத்தில் குரூரமும், பயங்கரமும் நிறைந்திருக்கும்... வெளிப்புறமாகக் கண்டு அறியமுடியாத பல சூழ்ச்சிகளிலும் சிக்கல்களிலும் மாட்டிக் கொள்ளும் அபாயம் அனைவருக்கும் எப்போதும் இருக்கிறது...ஆனால், பாபாவுடைய பக்தர்களின் வாழ்க்கை வேறுவிதமானது. `சாயீ எப்போதும் நம்மோடு இருக்கிறார்’ என்கிற நம்பிக்கைதான் அவர்களை வழிநடத்துகிறது...

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🏻🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

சீரடிபகவான்,தான் மகா சமாதியடைந்த பின்பும் கூட, நம்பிக்கையோடு முழு மனதுடன் செய்யப்படும் தமது அன்பான பக்தர்களின் பிரார்த்தனைகளுக்கு எவ்வாறு செவிசாய்த்து நிறைவேற்றுகின்றார் என்பதைப் பார்ப்போம்..🔥

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் சாய்சரித்திர உபதேச  அருள்மொழிகள் மற்றும் சுய விழிப்புணர்வு போதனைகள்....🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

🔥நமது  சத்குருநாதர்  சீரடிபகவான், தான் மகா சமாதியடைந்த பின்பும்  கூட,  நம்பிக்கையோடு முழு மனதுடன் செய்யப்படும் தமது அன்பான பக்தர்களின் பிரார்த்தனைகளுக்கு எவ்வாறு  செவிசாய்த்து   நிறைவேற்றுகின்றார் என்பதைப் பார்ப்போம்..🔥

சீரடி பகவான் தன்  உண்மையான பக்தர்களின் வேண்டுதலை  ஏற்று, எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் அவர்களை காப்பாற்ற முன் வருகின்றார்..இன்றைக்கும் பலருடைய வாழ்வில் நடக்கின்றது  என்பதை அறிந்திருப்பீர்கள்..ஒவ்வொருவருடைய  கனவுகளிலும், காட்சிகளிலும் தோன்றி பூர்த்தி செய்கிறார்  என்பது குறிப்பிடத்தக்கது... பாபாவின் மிகப்பெரும் பக்தர் பக்த நாராயணராவ். பாபாவின் வாழ்நாளில் சீரடிக்கு அவர் இரண்டுமுறை விஜயம் செய்து பாபாவின் தரிசனத்தைப் பெரும் நல் அதிர்ஷ்டம் பெற்றிருந்தார்....

பாபா 1918-ஆம் ஆண்டில் மகா  சமாதியடைந்தார். இதற்குப்பின் ஒரு வருடத்திற்குள் நாராயணராவ் நோயாளியாகி படுத்தார்...மிகவும் கஷ்டப்பட்டார்... அவருக்கு அளிக்கப்பட்ட எவ்வித சிகிச்சைகளும் உரிய நிவாரணத்தை தரவில்லை..பாபா சமாதியாகி மூன்று  ஆண்டுகளுக்கு பின் நாராயண ராவ் சீரடிக்கு விஜயம் செய்ய விரும்பினார்..

மருத்துவர்கள்  கொடுத்த மருந்துகள் அவருக்கு எவ்வித பலனையும் அளிக்கவில்லை...எனவே அவர் பிரார்த்தனை செய்துகொள்ளவும் கஷ்டத்திலிருந்து விடுபடவும்  சீரடிக்கு போக விழைந்தார்...ஆனால் எப்படியோ, அவரால் சீரடிக்கு செல்ல இயலவில்லை,..இரவும் பகலும் பாபாவை அவர் தியானம் செய்ய ஆரம்பித்தார்...

ஒருநாள் இரவு பகவான்  அவரது கனவில் தோன்றினார்....ஒரு குகையிலிருந்து வருவது போன்று காட்சி கொடுத்து கீழ்கண்ட  மொழிகளை கூறி ஆறுதல் நல்கினார்.... " நாளைய தினத்திலிருந்து நீ முன்னேற்றமடைவாய்...ஒரு வாரத்துக்குள் நீ எழுந்து நடக்க ஆரம்பித்துவிடுவாய்"...என்று பாபா ஆசி வழங்கினார்..

சரி நுட்பமாக ஒரு வாரத்தில் கனவில் பகவான்  உறுதி கூறியபடி நாராயணராவ் தனது வியாதியிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டார் என்பது உறுதியாகின்றது.. ஆகவே பகவானிடம் நிலைமாறாது தூய்மையான  பக்தியுடன், ஒளிவு மறைவில்லாமல் அனைத்தும் ஒப்படைத்து சரணாகதி அடைந்தவர்களை, பகவான்  சத்தியமாக காப்பாற்றுவார் என்பது உணர்ந்து பகவானை வழிபடுவோம் ..

 ஓம்  ஶ்ரீ சாய்ராம்...🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுயவிழிப்புணர்வு தியான பீடம்...🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

🔥🔥 பகவான் உபதேசிக்கின்றார்... “எவரிடமிருந்தும் மந்திரமோ, உபதேசமோ பெற முயலவேண்டாம். என்னையே உங்களது எண்ணங்கள், செயல்கள் இவற்றின் ஒரே குறிக்கோளாக அமைத்துக் கொள்ளுங்கள்.... சந்தேகம் ஏதுமின்றி உங்கள் குறிக்கோளை அடைவீர்கள்..என்று தன் பக்தரான ராவ் பகதூர் ஹரி விநாயக் ஸதேயிடம் கூறுகின்றார்.. ...இதனைப் பற்றிய அனுபவ விளக்கம்..🔥🔥

 ஓம்  ஶ்ரீ  சாய்நாதாய நமஹ....🙏🏻🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் சாய்சரித்திர உபதேச அருள்மொழிகள் மற்றும் சுய விழிப்புணர்வு போதனைகள்....🙏🏼🙏🏼🙏🏼

🔥🔥 பகவான் உபதேசிக்கின்றார்... “எவரிடமிருந்தும் மந்திரமோ, உபதேசமோ பெற முயலவேண்டாம். என்னையே உங்களது எண்ணங்கள், செயல்கள் இவற்றின் ஒரே குறிக்கோளாக  அமைத்துக் கொள்ளுங்கள்.... சந்தேகம் ஏதுமின்றி உங்கள்  குறிக்கோளை அடைவீர்கள்..என்று தன் பக்தரான ராவ் பகதூர் ஹரி விநாயக் ஸதேயிடம் கூறுகின்றார்.. இதனைப்பற்றிய அனுபவ விளக்கம்..🔥🔥

ராவ் பகதூர் கூறுகின்றார்....பாபா யாருக்கும் உபதேசம் அளித்ததில்லை. ஆகவே எனக்கு மந்திரோபதேசம் வேண்டுமென நான் அவரிடம் வேண்டவில்லை. ஆனால் பல சந்தர்ப்பங்களில் மற்ற குருக்களிடம் உபதேசம் பெற நான் அழைக்கப்பட்டேன்..பகவான்  இருக்கும் பொழுது மற்ற குருக்களிடம் இந்த நோக்கத்துடன் நான் செல்லவேண்டுமா என்ற பிரச்னை எழுந்தது...பாபாவிடம் வேண்டினேன்; பாபா ஒப்புதல் அளிக்கவில்லை...பாபாவால் முறைப்படி தீக்ஷை அளிக்கப்படவில்லை எனினும், நான் திசைமாறா கவனத்துடன்  அவரையே நம்பியிருக்கவேண்டும் என்பதே சத்குருவின் விருப்பம்...தனது பக்தனின் லௌகீக, ஆன்மீக நலன்கள் யாவற்றையும் கவனித்துக் கொள்ள அவர் சக்தி படைத்தவராகவும், தயாராகவும் இருந்தார்...குரு பௌர்ணமி தினத்தன்று பாபாவை சத் குருவாக ஏற்று , எல்லா பக்தர்களும் கூட்டு வழிபாடு செய்ய  ஏற்பாடு  செய்யும்படி  என்னை பணித்தனர்...ஆனால் சிவராத்திரி நள்ளிரவில் அவரை சிவபெருமானாக நான் பூஜிக்க முயன்றபோது, அவர் அதை ஆமோதிக்கவில்ல..பாபா மற்றவர்களிடமிருந்து நான் உபதேசம் பெறுவதை விரும்பவில்லை.. எனினும் நான் சாதுக்களிடம் பணிவுடன் நடந்து கொண்டு அவர்களை உபசரிக்க வேண்டுமென விரும்பினார்...இதிலிருந்து  உணர்ந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் நமக்கு எது தேவை என்பதை சத்குருவே அறிவார்.. நம்முடைய  ஞான மார்க்க கதவுகளை திறந்து உயரிய நிலைக்கு அழைத்து செல்பவர் சத்குரு ஒருவரே...

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🏻🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வ சக்தி சுயவிழிப்புணர்வு தியானபீடம்...🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏻🙏🏻🙏🏻 ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள்....

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏻🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாய்பாபாவின்  சாய்சரித்திர உபதேச அருள்மொழிகள் மற்றும் சுய விழிப்புணர்வு போதனைகள்...🙏🏼🙏🏼🙏🏼

🔥🔥நான் சிலகாலமாக மிகுந்த கஷ்டத்தில் இருந்து வருகிறேன். என்னுடைய பிரார்த்தனைகளுக்கு பாபா செவி சாய்க்காததால் பல சமயங்களில் என்னுடைய நம்பிக்கையை இழக்கிறேன்..பாபாவின் உதவியை நாடி நான் பிரார்த்தனை செய்தபோதிலும், பாபா அதற்க்கும் செவி சாய்த்ததாகத் தெரியவில்லை... பாபாவிடமிருந்து எனக்கு ஏன் எந்த உதவியும் கிடைக்கவில்லை.? என்று நினைப்பவரா நீங்கள்....இதோ கேளுங்கள் ....🔥🔥

பகவான் குழந்தைகளே  சற்று கவனியுங்கள்.. தன்னுடைய பக்தர்களுக்கு  சீரடி பகவான் ஆசியையும், அனுக்கிரகத்தையும்  பேதம் பார்க்காமல் அனைவருக்கும்  ஒரே மாதிரித் தான்  வழங்குகின்றார். சீரடி பகவான் கேட்டதை வழங்கும்  கற்பக விருக்ஷமாக இருந்து வழங்குவது  என்பதில் பாரபட்சம் இல்லாமல் இருக்கின்றார்...ஆனால் குரு வழங்குவதைப் பெற தகுதியை வளர்த்துக் கொண்டோமா அல்லது அவர் காட்டிய சத்திய நெறி முறைகளைப் பின்பற்றி, அதனை வாழ்வியல் இயக்கத்தில் செயல்படுத்தினோமா அல்லது  ஆத்மார்த்தமான, உண்மையான, நிலைமாறாத  பக்திச்  செலுத்தி, முழுமையாகத் தன்னை அவரின்பால் ஒப்படைத்தோமா என்று, நாம் நம்மை ஆராய்தல் வேண்டும்....

குரு மற்றும் இறை நமக்கு அனைத்தையும் வழங்கத் தானே காத்துக் கிடக்கின்றது..ஆனால் நாம் தான், நான் என்ற அகந்தை, அகங்காரம் என்ற  மாயையினால் தன்னை மறைத்துக் கொண்டு குருவின் ஆசியைப் பெற தகுதியற்றவர்களாக  இருக்கின்றோம்...நமக்கு கிடைக்காதவை கூட ஒரு விதத்தில் நன்மையாக முடியும்...ஆதிசக்தி படைத்த  தன்  குழந்தைகளுக்கு  என்ன வழங்க வேண்டும் என்பது தெரியாதா...நம்மைக் கேட்டா அனைத்தையும் படைத்து கொண்டாடி இந்த களத்தை அலங்கரித்தது..நாம் கேட்டால் அவர்கள் வழங்குவதில் சிறிது குறைவாகவே இருக்கும்...ஆனால் நாம் கேட்காமலேயே நம்மை அறிந்து, அவர்கள்  நமக்குரியதை வழங்கும் போது அதன் வெளிப்பாடு அபரிமிதமாக, நீங்கள் கேட்க வேண்டும் என்று நினைத்ததை விட உங்களை வியப்பில் ஆழ்த்தக் கூடிய வகையில் இருக்கும்...இது தான் நிதர்சனமான உண்மை ....

ஆதி மூல திரு ஆற்றலின் இருப்பிடமே, குரு என்ற பேராற்றலின் தன்மையாக தாய்மை உணர்வோடு, நம்முன்னே பிரசன்னமாகி இருக்கின்றது...குரு என்பவர், நமக்கு  அனைத்தையும் வழங்கி நாம் பிறவி எடுத்ததன் வீர்யத்தை உணர்த்தி, மனித உயிர்களுக்கு என்று வகுத்த ஆதி மூல சத்தியக்  கோட்பாடுகளைப் பின்பற்றிட வழிமுறைகளை சூட்சமமாக  உணர்த்திட, நம்மோடு பாதுகாவலனாக  இருந்துக்  கொண்டு வழிநடத்துகின்றார்..ஆனால் நாம் அதனை விழிப்புணர்வோடு இருந்தால்  மட்டுமே,அவர் உணர்த்துகின்ற வழிமுறைகளை உள்வாங்க முடியும்..உணர்ந்து கடைப்பிடிக்கவும் முடியும்..இதற்குத் தான் நான் என்ற அகந்தையின்றி, சாட்சியாக விழிப்புணர்வோடு,எதன் மீது பற்று வைக்காமல்  இயங்கச் சொல்கின்றார்.

ஏனென்றால் நீங்கள், எந்த செயலைச் செய்யும் போதும், நான் தான்  அனைத்தையும் செய்கின்றேன் என்று இருமாப்போடு செயல்படும் போது, நீங்கள் இறைத் தன்மையை விட்டு சற்று விலகுகின்றீர்கள். .இந்த நான் எனது என்ற தன்மையானது, உங்கள் குருவின் பேராற்றலை செயல்பட அனுமதி அளிக்காமல் போகின்றீர்கள்.. இங்கே ஒரு அகங்கார மாய ஆதிக்கத்தை,அதாவது நான் என்ற தன்மையை எடுத்து விட்டீர்கள்...மீண்டும் அறிவுருத்துகின்றேன்...இது நான் எனது என்ற தன்மையில் என்னுடைய வேலையைத் தானே பார்த்தேன்..அவ்வாறுப் பார்த்தால் தானே கடமைகளை முடிக்க முடியும் என்று நீங்கள் நினைக்கலாம்.தவறில்ல..

ஆனால்  செயல்பாடுகளை பற்றில்லாமல்  மேற்க்கொள்ளல் வேண்டும்..ஆனால் நான் ..எனது என்ற தன்மையினால், குருவை உங்களுக்காக இயங்க வைப்பதில் தடையை  நீங்களே ஏற்படுத்துகிறீர்கள்..ஏனேன்றால் நான்..எனது.. என்ற நிலையில் எதைச் செய்தாலும் அங்கே அந்தச் செயலுக்கு நீங்கள் பொருப்பாளியாகிறீர்கள்..சாட்சிப் பாவனையைக் கடைப்பிடிக்கவில்லை... உங்களின் அனைத்து செயலையும் பற்றுடன்  பற்றிக்கொள்கிறீர்கள்.  அதாவது நான் ..எனது. என்ற அகந்தையில், நீங்கள் இறையாற்றலை எங்கே அனுமதிக்கிறீர்கள்... இடைவெளியே கொடுக்கவில்லை...

ஆகையால் தான்  குருவானவர், எதனையும் விழிப்புணர்வோடு பற்றில்லாமல்  சாட்சியாக செயல்பட  முயற்சி செய்யுங்கள் என்று தாரக மந்திரமாக செப்புகின்றனர்...அனைத்தையும் படைத்த மூலப் பொருளோன் பார்த்துக் கொள்வான்...நம்மை இயக்குவான் ...நம்மை இயங்கவும் வைப்பான்...நாம் இக வாழ்க்கை என்ற மேடையில் நடிக்க வந்த  நடிகனாக, அவன் வகுத்தப் பாதையில் பயணிகளாக இருக்க வந்தவர்கள் என்பதை ஆழமாகமனதில்  பதியம் போடுங்கள்..நாம்  ஆத்மார்த்தமாக, நம்பிக்கையோடும்,  பேரன்போடும், அவனின் பால்  அனைத்தையும் ஒப்படைத்து விட்டு   நாம் குருவை  நமக்குள்  இயங்க அனுமதிக்க வேண்டும்...இவ்வாறு முழுதும் நம்மை  குருவிடம்  ஒப்படைத்நு சரணாகதி அடைந்தால் நாம் பெறப் போகும் பலன்கள் ஏராளமாக இருக்கும்...அது நிலைத்து நிற்க கூடியதாக இருக்கும்...

சத்குருவானவர்  தன் குழந்தைகளுக்காக  செய்யும் எல்லா செயல்களையும்,  பக்தர்கள் அந்தந்த நேரத்தில் அறியமாட்டார்கள்..ஆனால்  பக்தருடைய முன்வினைகளை ( முந்தைய கர்மாக்களை ) நன்கு அறிந்த பாபா, அமைதியாக பக்தரிடம் மனமாற்றத்தை ஏற்படுத்த பல்வேறு நிலைகளில் முயற்சி செய்கின்றார்...அதனை விழிப்புணர்வோடு கவனித்தால் போதுமானது. பாபாவின் ஆசிகளின் பலனை ஒருவர் பெற வேண்டுமானால் அதற்கு மிகுந்த நம்பிக்கையும், பொறுமையும் தேவைபடுகிறது.... இக்காரணத்தினால் தான் சிரத்தாவுடன் கூடிய சபூரி அதாவது நம்பிக்கையுடன் கூடிய பொறுமை என்பதை பாபா முக்கிய தகுதிகளாகக் கூறியுள்ளார். ஒன்று, மற்றொன்று இல்லாமல் நிலைக்க முடியாது. ..

ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தை தினமும் படியுங்கள்... காதால்  கேளுங்கள்...முடிந்தளவு மீண்டும் மீண்டும் மனதில் பதியும் படி  சத்சங்க அருள்மொழிகளை  உருவேற்றுங்கள்.. நீங்கள் ஆத்ம மலர்ச்சிப் பெற்ற  சாயீன்  அருள்மொழிகளை, சத்திய வார்த்தைகளை குறைந்தது நான்கு பேருக்காவது எடுத்துரையுங்கள்..இதுவே குருவிற்கு நாம் செய்கின்ற  மானசீக அபிஷேகம்..சத்சரிதத்தை  விழிப்புணர்வுடன் பாராயணம் செய்யும் போதே, உங்களுடைய பல  கேள்விகளுக்கு பாபா தனக்கே உரித்தான முறையில்  சத்சரித வாசிப்பின் மூலமாகவே சூட்சமமாக பதில் கூறி வருகின்றார்...எதிலும் சற்று சுய விழிப்புணர்வுடன் இருப்பீராக...

ஓம் ஶ்ரீ  சாய்ராம்.....🙏🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ.....🙏🏼🙏🏼🙏🏼 ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்.....

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ.....🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி  சாய்பாபாவின் சாய்சரித்திர   உபதேச  பொன்மொழிகள் மற்றும் சுய விழிப்புணர்வு போதனைகள்..🙏🏼🙏🏼🙏🏼

🔥🔥நம்பிக்கை இருந்தால் சித்திரத்திலும் உயிருடன் இருப்பேன்'  என்று உறுதி அளித்துள்ளார்...ஶ்ரீசாயீநாதரின் இரண்டு மகத்தான உபதேசங்கள் நம்பிக்கையும் ,பொறுமையும்....நம்பிக்கை இருந்தால் கல்லிலும் கடவுளைத் தரிசிக்கலாம்..பாபா தாம் அனைத்து உயிர்களிலும் இருப்பவர் என்று கூறி இருக்கிறார். அவரே தொடர்ந்து என்னுடைய சித்திரத்திலும் நான் உயிருடன் இருப்பேன் என்றும் கூறி இருக்கிறார்..🔥🔥

இதை விவரிக்கும் வகையில் பகவானுடைய ஆத்மார்த்தமான பக்தை ஒருவரின் வாழ்க்கையில் சாய்நாதர்  நிகழ்த்திய அனுபவத்தைப் பார்ப்போம்...தார்க்காட் என்பவரின் மனைவியும், அவருடைய மகனும் தீவிரமான பாபா பக்தர்கள் ஆவார்கள். தார்க்காட் என்பவருக்கு பாபாவிடத்தில் அவ்வளவாக நம்பிக்கை இல்லை. ஒருமுறை திருமதி தார்க்காட்டும் அவருடைய மகனும் சீரடிக்குச் செல்ல விரும்பினர். ஆனால், அவர்களுக்குள் ஒரு தயக்கம். தாங்கள் இருவரும் சீரடிக்குச் சென்றுவிட்டால், தங்கள் வீட்டில் இருக்கும் பாபாவின் திருவுருவப் படத்திற்கு தினசரி செய்யப்படும் நைவேத்தியம் தடைப்பட்டு விடுமே என்று அவர்கள் தயங்கினர்.அவர்களுடைய விருப்பத்தைப் புரிந்துகொண்ட தார்க்காட், அவர்கள் இருவரும் தயங்காமல் சீரடிக்குச் செல்லலாம் என்றும், அவர்கள் சார்பில் தானே சாயிநாதருக்கு நைவேத்தியம் செய்வதாகவும் உறுதி அளித்தார். அதனால், தாயும் மகனும் சீரடிக்குச் சென்றனர்....

தார்க்காட் தினமும் தான் காலையில் அலுவலகம் செல்வதற்கு முன்பாக ஏதேனும் பிரசாதம் தயாரிக்கச் சொல்லி, பாபாவுக்கு நைவேத்தியம் செய்துவிட்டுச் செல்வார். மதிய உணவில் பாபாவுக்குப் படைக்கப்பட்ட நைவேத்தியம் பிரசாதமாகப் பரிமாறப்படும். மூன்றாவது நாள் பாபாவுக்கு நைவேத்தியம் செய்ய மறந்துவிட்டார். மதியம் உணவுக்கு வந்தவர், உணவில் பாபாவின் பிரசாதம் பரிமாறாமல் போகவே, பணியாளிடம் விவரம் கேட்டார். பணியாள் சொல்லித்தான் அன்று தான் பாபாவுக்கு நைவேத்தியம் செய்யாமல் சென்றுவிட்டது தார்க்காட்டுக்குத் தெரியவந்தது. மனைவிக்கும் மகனுக்கும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றாமல் போனது குறித்து மனம் வருந்திய தார்க்காட் அப்போதே  சீரடியில் இருந்த தன் மனைவிக்கு நடந்த செய்தியைத் தெரிவித்து,  இனிமேல் பாபாவின் நைவேத்திய விஷயத்தில் மிகவும் கவனமாக இருப்பதாக உறுதி கூறி ஒரு கடிதம் எழுதினார்.


அவர் கடிதம் எழுதிக் கொண்டிருந்த அதே வேளையில், துவாரகாமாயியில் பாபாவின் முன்பாக தார்க்காட்டின் மனைவியும் மகனும் அமர்ந்துகொண்டிருந்தனர். அவர்களைப் புன்னகையுடன் பார்த்த பாபா, ''இன்று மதியம் நான் உங்கள் வீட்டுக்குச் சென்றிருந்தேன். மிகுந்த பசியுடன் இருந்த எனக்கு அங்கே உணவு எதுவும் கிடைக்கவில்லை'' என்று கூறினார். சாயிநாதர் அப்படிச் சொன்ன காரணம் தார்க்காட்டின் மனைவிக்குப் புரியவில்லை. ஆனால், மகன் ஓரளவுக்கு விஷயத்தை ஊகித்துக்கொண்டான். தன்னுடைய தந்தை அன்றைக்கு பாபாவுக்கு நைவேத்தியம் எதுவும் செய்யவில்லை என்று தன்னுடைய தாயிடம் கூறினான்...இப்போது இருப்பதுபோன்ற தகவல் தொடர்பு வசதிகள் அப்போது இல்லாத காரணத்தால், உடனே தார்க்காட்டிடம் பேசி விவரம் தெரிந்துகொள்ள முடியவில்லை. சம்பவம் நடந்த மூன்றாவது நாள் தார்க்காட்டின் கடிதம் ஷீரடிக்கு வந்து சேர்ந்தது. தார்க்காட்டின் மனைவி மகன் ஊகித்துச் சொன்னது சரிதான் என்பதைத் தெரிந்துக் கொண்டாள்...

தன்னுடைய படத்திலும் தான் உயிருடன் இருப்பேன் என்று சாய்நாதர் கூறியதை, தன்னுடைய இந்த அருளாடல் மூலம் உணர்த்தி இருக்கின்றார்.... நம்பிக்கையுடன் அவருடைய திருவுருவப் படத்தை வணங்குபவர்களுக்கு, அவர் உடனுக்குடன் நன்மைகளை அருளவே செய்கிறார்....

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🏼🙏🏼🙏🏼