ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼🙏🏼
ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாய வெளியீடு....🙏🏼🙏🏼🙏🏼
🙏ஶ்ரீசாய் சத்சரித்திரம்.🙏🏼
🙏🏼அத்தியாயம்::மூன்று(3) 🙏🏼
🔥முதலில் புனித வேத நூலான சீரடி பாபாவின் சாய்சத்சரித்திரம் பாராயணம் செய்வதன் முக்கியத்துவமும் ,பெறப் போகும் நன்மைகள் என்ன என்பதைப் பார்ப்போம்..🔥
சீரடி பகவானின் புனித வேத நூல் என்பது சாய் சத்சரித்திரம் என்பதாகும்...இதில் சீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு எழுத்திலும் வியாப்பித்து படர்ந்து இருக்கின்றது...
சத்சரிதத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல் ,மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது...ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து சத் சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்.....
இவ்வாறாக நாம் அனைவரும் ஶ்ரீசாய் சத்சரித்திர வேதப் பாராயணத்தை மேற்க்கொண்டால், சீரடி பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்....ஆகவே சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்...நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக.🙏🏼🙏🏼
🔥*குறிப்பு*.....சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥
தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்... அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரிய தன்மையை அடையலாம்....வேத பாராயணத்தின் மூலமாக ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரிய நிலையை அடையும் நிலையைப் பெறலாம்...மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம், நேர்மறை, மனிதநேயம் போன்ற இறைப்பண்புகளைப் பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுபெறவும் இந்த சத்சரித வேதப்பாராயணம் துணைப்புரிகின்றது....
மேலும் இப்பாராயணத்தின் மூலம் மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில் வெற்றி வாகை சூடலாம்..அவரவர்கள் வேண்டியது கிடைக்கப்பெறும்..சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்... மேலும் அனைத்து விதமான கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும் ஒருசேரப்பெறலாம்.... 🔥🔥
🙏🏼அத்தியாயம்.: மூன்று..🙏🏼🙏🏼
🙏🏼முன்னுரை...🙏🏼
பகவான் ஹேமாட்பந்திடம் கூறுகின்ற உபதேச அருள்மொழிகள் பற்றிய விளக்கவுரை...
சீரடி பகவான் அடியார்களுக்கு அளிக்கப்பட்ட பலதரப்பட்ட பணிகளைப் பற்றிய குறிப்புரை..
சீரடி பகவான் உபதேச மொழிகள் அனைத்தும், எவ்வாறு கலங்கரை விளக்காக வழிக்காட்டுகின்றது என்பதைப் பற்றிய விளக்கவுரை..
பகவான் தன்னை நாடி வந்த பக்தர்களிடம், எவ்வாறு தாய்மையுணர்வை வெளிப்படுத்தி உயரிய நிலையை அடைய வைக்கின்றார் என்பதன் விளக்கவுரை....
பகவான் தன் பக்தன் ரோஹிலாவின் மீது எவ்வாறு அன்பு செலுத்தி வழிநடத்தினார் என்பதை பார்ப்போம்....
சீரடி பாபாவின் இனியதும், பேர் அமுதத்தினைப் போன்ற உயரிய உபதேச அருள்மொழிகள் இங்கே...
மேற்க்கண்ட தலைப்புக்களின் விளக்கவுரைகளைப் பற்றி ஒவ்வொன்றாகக் கீழே காண்போம்....
🔥முதலில் பகவான் ஹேமாட்பந்திடம் கூறுகின்ற உபதேச அருள்மொழிகள் இங்கே🔥
முந்தைய அத்தியாயத்தில் விளக்கப்பட்டபடி சாயீபாபா தமது பூரண சம்மதத்தைத் நூலாசிரியர் ஹேமாட்பந்திடம் தெரிவித்துக் கூறியதாவது,
"சத்சரிதம் எழுதுவதைப் பற்றி நான் உம்முடன் முழுமையாகச் சம்மதிக்கிறேன்...நீர் உமது கடமையைச் செய்யும்.....சிறிதளவும் அஞ்சாதீர்.... என் மொழிகளில் நம்பிக்கை வையும்,.. என்னுடைய லீலைகள் எழுதப்படுமானால் அறியாமை அகலும்...அவைகள் கவனத்துடனும், பக்தியுடனும் கேட்கப்படுமானால் இவ்வுலக வாழ்க்கையின் உணர்வு தணிந்து, பக்தி மற்றும் சத்திய அன்பு ஆகியவற்றின் வலிமையான அலைகள் மேலெழும்பும்.... என்னுடைய லீலைகளின் ஆழத்தில் ஒருவன் மூழ்குவானானால் அவன் ஞானமென்னும் விலை மதிப்பில்லாத முத்துக்களை எடுப்பான்."..
இதைக்கேட்டு இந்நூல் ஆசிரியர் மிக்க மகிழ்ச்சியடைந்தார்..உடனே தன்னம்பிக்கை உடையவராயும், பயமற்றவராயும் ஆனார். இப்பணி வெற்றிகரமாக நிறைவேறியே தீரவேண்டும் என்றும் எண்ணினார். பிறகு ஷாமாவிடம் (மாதவராவ் தேஷ்பாண்டே) திரும்பி பாபா கூறியதாவது, "ஒருவன் என் நாமத்தை அன்புடன் உச்சரிப்பானாகில், நான் அவனுடைய ஆசைகளைப் பூர்த்தி செய்து அவனுடைய பக்தியை அதிகப்படுத்துவேன்...என் வாழ்க்கையையும் செயல்களையும் இசையாகப் பாடுவானாயின் அவனுக்கு முன்னும் பின்னும் எல்லாத் திக்குகளிலும் சூழ்ந்திருப்பேன்.. என்னிடம் உள்ளத்தையும், உயிரையும் ஒப்புவித்த அடியார்கள் இந்நிகழ்ச்சிகளைக் கேட்டதும் இயற்கையிலேயே மகிழ்வெய்துவர்... நம்பிக்கையுடன் என் லீலைகளை எவனாவது இசைப்பானாயின் அவனுக்கு எல்லையற்ற பேரின்பத்தை நல்கி என்றும் நிலைத்திருக்கும் திருப்தியை அளிப்பேன்....
எவன் என்னிடம் பூரண சரணாகதி அடைகின்றானோ, எவன் என்னை விசுவாசத்துடன் வணங்குகின்றானோ, எவன் என்னை நினைவில் இருத்தி நிரந்தரமாகத் தியானம் புரிகிறானோ அவனை விடுவிப்பது எனது சிறப்பியல்பாகும். என் நாமத்தை உச்சரிப்பவர், என்னை வணங்குபவர், எனது வாழ்க்கை நிகழ்ச்சிகளைப் பற்றி எண்ணி இவ்வாறாக என்னை நினைவில் இருத்தி இருப்பவர்கள் எவ்வாறு உலகப் பொருட்கள், உணர்ச்சிகள் இவைகளில் கவனம் உள்ளவர்களாக இருக்க முடியும்...? என்று உணருங்கள்...சாவின் வாயினின்று அடியவர்களை நான் வெளியே இழுத்து விடுவேன்..
எனது கதைகள் கேட்கப்பட்டால் எல்லா நோய்களும் விலகும்....எனது கதைகளை மரியாதையுடன் கேட்டு அவற்றை எண்ணித் தியானம் செய்து கிரகித்துக் கொள்ளுங்கள்... இதுவே மகிழ்ச்சிக்கும், திருப்திக்குமான மார்க்கமாகும்...இதனால் என் அடியவர்களின் பெருமையும், அகம்பாவமும் அற்றுவிடும். கேட்பவரின் மனம் அமைதிப்படுத்தப்படும்... மேலும் ஆழ்ந்த இதயபூர்வமும், முழுமையுமான பக்தியாயிருப்பின் மனம் உச்ச உணர்ச்சியுடன் ஒன்றாகி விடும்.. 'சாயீ சாயீ ' என்று சாதரணமாக ஞாபகமூட்டிக் கொண்டும், பகவான் உபதேசங்களைப் பற்றிப் பேசுவதாலோ அல்லது கேட்பதன் மூலம் தனி மனித உயிரின் பாவங்கள் அனைத்தும் அழியும்...
🔥சீரடி பகவான் அடியார்களுக்கு அளிக்கப்பட்ட பலதரப்பட்ட பணிகளைப் பற்றிய குறிப்புரை🔥
ஆண்டவர் வெவ்வேறு பணிகளை, வெவ்வேறு அடியவர்களிடம் ஒப்புவிக்கிறார்... சிலர் கோவில், மடம் ஆகியவற்றை கட்டுவதற்கும் சிலர் புண்ணிய தீர்த்தங்களுக்குப் படிக்கட்டுகள் அமைப்பதற்கும் நியமிக்கப்படுகிறார்கள். சிலர் ஷேத்ராடன யாத்திரைக்கு அனுப்பப்படுகிறார்கள்..ஆனாலும் எனக்கு சத்சரித்திரம் எழுதும் புனிதமான பணி ஒப்படைக்கப்பட்டது... ஒன்றும் முழுமையாகத் தெரியாதவனைப் போன்ற நான், இப்பணிக்குக் கொஞ்சமும் தகுதியுடையவன் அல்லன். பின்னர் ஏன் அத்தகைய கடினமான வேலையை மேற்கொள்ள வேண்டும். எவரே சாயீபாபாவின் உண்மை வரலாற்றை எடுத்தியம்ப முடியும்..? சாயீபாபாவின் அருள் ஒன்றுமட்டுமே இக்கடின வேலையை நிறைவேற்ற ஊக்கம் அளிக்க முடியும். பெருமை அவரையே அடைகிறது. என்னையல்ல..!
பிறப்பில் மறையவனாக இருப்பினும் ஸ்ருதி, ஸ்ம்ருதி என்ற இரண்டு கண்கள் (பார்வை அல்லது காட்சிகள்) தேவையுள்ளவனாக இருந்தேன்....எனவே சத்சரிதத்தை எழுதவே இயலாத நிலையில் இருந்தேன்...ஆனாலும் ஆண்டவன் அருள், ஊமையைப் பேசவைக்கிறது...முடவனை மலையைக் கடக்கச் செய்கிறது..அவரின் விருப்பப்படி காரியங்களைச் செயற்படுத்தும் தந்திரத்தை அவர் ஒருவரே அறிவார். புல்லாங்குழலோ, ஹார்மோனியமோ எங்ஙனம் ஒலி எழுப்புகிறது என்பதை அறியா..இது அவற்றை வாசிப்பவனையேச் சார்ந்தது..சந்திரகாந்தக்கல் கசிவதும், கடல் பொங்கியெழுவதும் சந்திரோதயம் காரணமாகவே. அவற்றின் தன்மையால் அல்ல....
🔥சீரடி பகவான் உபதேச மொழிகள் அனைத்தும், எவ்வாறு கலங்கரை விளக்காக வழிக்காட்டுகின்றது என்பதைப் பற்றிய விளக்கவுரை...🔥
மாலுமிகள் மற்றும் படகோட்டிகள் போன்றோர்களுக்கு பாறைகள், அபாயங்கள் ஆகியவற்றிலிருந்து விலகி பத்திரமாக பயணம் செய்வதற்காக, கடலின் பல்வேறு இடங்களில் கலங்கரை விளக்கம் கட்டப்படுகிறது.... சம்சாரம் என்னும் சாகரத்தில் சாயீபாபாவின் கதைகள் அத்தகைய பயனை நல்குகின்றன...அவைகள் அமிர்தத்துக்குச் சுவையூட்டுகின்றன...நமது உலகப் பாதையை மிருதுவாகவும், கடப்பதற்கு எளியதாகவும் ஆக்குகின்றன...ஞானிகளின் கதைகள் ஆசீர்வதிக்கப்பட்டவைகள். நமது செவிகளின் வழியாக உள்ளத்தினுள் புகும்போது சரீராபிமானம் அல்லது அகங்காரம் மற்றும் த்வைத உணர்ச்சி ஆகியவை மறைகின்றன...நம் உள்ளத்தில் அவைகள் தேக்கப்ப்படுமானால் சந்தேகம் பறந்தோடும், சரீரத்தின் பெருமை உணர்ச்சி கீழே இறங்கும். ஏராளமாக விவேகம் சேகரிக்கப்படும்.... பாபாவின் தூய புகழை விவரிப்பதும், அதையே அன்புடன் கேட்பதும் அடியாரின் பாபங்களை அழிக்கும்... கிருதயுகத்தின் ஆன்மீகப் பயிற்சியானது சமதமா (உள்ளம், உடல் இவற்றின் தனித்தன்மை), திரேதாயுகத்திற்கு தியாகம், த்வாபரயுகதிற்கு வழிபாடு, கலியுகத்திற்கு இறைவனின் புகழையும், நாமத்தையும் இசையாகப் பாடுவது என்பது குறிப்பிடத்தக்கது.. கடைசிப் பயிற்சியானது நான்கு வர்ணத்தைச் சேர்ந்த எல்லார்க்கும் உரியதாகும்...மற்றைய பயிற்சிகளான யோகம், தியாகம், தியானம், தாரணை (ஒரு முகப்படுத்துதல்) ஆகியவை பழகுவதற்கு மிகவும் கடினமானவை. இறைவனது (சாயீபாபா) புகழைச் செவிமடுப்பது மிகவும் எளியதாகும்.. நாம் நமது கவனத்தை அவைகள் மீது திருப்ப மாத்திரமே வேண்டும்... கதைகளைக் கேட்பதும், கீர்த்தனையாகப் பாடுவதும் புலனுணர்வுப் பொருட்கள் மீதுள்ள உறவை நீக்கி, அடியவர்களைப் பற்றறுத்தவர்களாக்கி முடிவில் ஆன்ம உணர்வுக்கு வழிநடத்திச் செல்லும்... இக்குறிக்கோளையே கருத்திற்கொண்டு சாயீபாபா 'சத்சரிதாம்ருதா' என்னும் அவரது கதைகளை எழுதச்செய்ய மறை ஞான குறிப்புக்களை வழங்கினார்..அடியவர்கள் இப்போது இக்கதைகளை எளிதாகப் படிக்கவோ, கேட்கவோ செய்யலாம். இவ்வாறு பாராயணம் செய்யும்போது பகவானைத் தியானித்து நாம் என்ற தன்மையில் வாசிக்க வேண்டும்....
🔥பகவான் தன்னை நாடி வந்த பக்தர்களிடம், எவ்வாறு தாய்மையுணர்வை வெளிப்படுத்தி உயரிய நிலையை அடைய வைக்கின்றார் என்பதன் விளக்கவுரை....🔥
தன் இளங்கன்றை பசு எவ்வாறு நேசிக்கிறது என்பதை யாவரும் அறிவர்...அதன் மடி எப்போதும் நிறைந்திருக்கிறது...கன்று பால் வேண்டி மடியை முட்டும்போது தடையின்றி பால் பெருக்கெடுக்கின்றது. அவ்வாறே தாயாரும் தக்க தருணத்தில் தன் குழந்தையின் பசியறிந்து முலையமுது தந்து ஊட்டுகிறாள்..அதற்கு ஆடை அழகுற அணிவிப்பதிலும், சிறப்புச் சிங்காரிப்பதிலும் முக்கிய கவனம் செலுத்துகிறாள். குழந்தை எதைப்பற்றியும் அறிவதுமில்லை... கவலையுறுவதுமில்லை..ஆயின் தன் குழந்தை நன்றாக உடை உடுத்தப்பட்டு அலங்கரிக்கபட்டு இருப்பதைக் கண்ணுறும் தாயின் மகிழ்ச்சிக்கு ஓர் எல்லையில்லை...ஶ்ரீ தாயன்பு விசித்திரமானது..அசாதாரணமானது.. பற்றில்லாதது... இணையில்லாதது...தமது அடியவர்களிடம் சத்குருவும் இத்தகைய தாயன்பு வெளிப்படுத்தி காண்பிக்கின்றார்கள். இத்தகைய அன்பே சாயீபாபா என்னிடம் கொண்டிருந்தது. ..அதைப் பற்றிய நிகழ்ச்சியே கீழ்வருமாறு:....
நான் அரசாங்க வேலையிலிருந்து 1916..ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றேன்.. கௌரவமாக என் குடும்பத்தை நடத்துவதற்கு எனக்குத் தீர்மானித்துத் தரப்பட்ட பென்ஷன் போதவில்லை..குருபூர்ணிமா அன்று நான் சீரடிக்குச் சென்றிருந்தேன். அங்கு அண்ணா சிஞ்சணீகர் அவராகவே பாபாவிடம் எனக்காக வேண்டினார். "தயவு செய்து அவரை அன்புடன் நோக்குங்கள்....அவர் பெறும் பென்ஷன் அறவே போதாது...அவரது குடும்பமோ வளர்ந்து வருகிறது. அவருக்கு வேறு வேலை ஏதும் கொடுங்கள். அவரது ஏக்கத்தினை தீர்த்து, வேண்டியதை நிறைவேற்றி அவரை மகிழச்செயுங்கள்."...
பகவான் அதற்குப் பதில் அளிக்கின்றார்..., அவர் வேறு ஏதாவது வேலை கண்டிப்பாக பெறுவார்... ஆயின், இப்போது எனக்குப் பணி செய்து மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும்... அவரது உணவு எப்போதும் நிறைந்திருக்கும். ஒருபோதும் காலியாய் இராது... அவர் தனது கவனம் அனைத்தையும் என்பால் திருப்பி நாத்திகர்கள், மதப்பற்று அற்றவர்கள், கொடுமையாளர்கள் இவர்களின் கூட்டுறவைத் தவிர்த்து, எல்லோரிடமும் பணிவாகவும், அடக்கமாகவும் இருந்து உள்ளத்தாலும், உயிராலும் என்னை வணங்க வேண்டும்.... இதைச் செய்வாராகில் அவர் எல்லையற்ற பேரின்பத்தை அடைவார்....எவருடைய வழிபாடு உபதேசிக்கப்பட்டு இருக்கிறதோ, அந்த நான் என்பது யார் என்னும் வினாவுக்கு சாயீபாபா என்பது யார் என்னும் குறிப்பில் முன்னமே இந்நூலில் சொல்லப்பட்டிருக்கிறது..
🔥பகவான் தன் பக்தன் ரோஹிலாவின் மீது எவ்வாறு அன்பு செலுத்தி வழிநடத்தினார் என்பதை பார்ப்போம்...🔥
எல்லோரையும் அரவணைக்கும் சாயீபாபாவின் அன்பை ரோஹிலாவின் கதை நமக்குக் காட்டுகிறது. உயரமாகவும், வாட்டசாட்டமாகவும், காளையைப் போன்ற வலிமை உடையவனாகவுமுள்ள ரோஹிலா என்பவன் சீரடிக்கு வந்தான்...நீண்ட கஃப்னி என்னும் உடை அணிந்திருந்தான்...பாபாவிடமுள்ள அன்பினால் அங்கு தங்கியிருந்தான்..இரவும், பகலும் கலிமாவை (திருக்குரானின்) பாடல்கள் சத்தமாகவும், குரூரமாகவும் ஒப்பித்து 'அல்லாஹு அக்பர்' (கடவுள் பெரியவர்) என்று கத்துவான்...சீரடியின் பெரும்பாலான மக்கள் பகலெல்லாம் தங்கள் வயலில் வேலை செய்துவிட்டு, இரவு வீட்டிற்குத் திரும்பும்போது ரோஹிலாவின் குரூர இரைச்சல்களாலும், கத்தல்களாலும் வரவேற்கப்படுவார்கள். அவர்கள் தூங்க முடியாமல் மிகுந்த தொல்லையும், அசௌகரியமும் அடைந்தனர். மௌனமாக இத்தொந்தரவைச் சில நாட்கள் பொறுத்திருந்து, அவர்களால் இனிமேல் இத்துயரம் படமுடியாது என்னும் நிலை வந்தவுடன், பாபாவை அணுகி இதைக் கவனித்து ரோஹிலாவின் தொந்தரவை நிறுத்தும்படி வேண்டிக் கொண்டனர்.
பாபா அவர்களின் வேண்டுகோளைக் கவனிக்கவில்லை..மாறாக அவர்களைக் கடிந்தார்...அவர்களைத் தங்கள் வேலைகளைக் கவனிக்கும்படியும், ரோஹிலாவைக் கவனிக்க வேண்டாம் என்றும் கூறினார்...அவர் மேலும் ரோஹிலாவுக்கு மிகவும் கெடுதலான மனைவி ஒருத்தி இருக்கிறாள் என்றும் அவள் உள்ளே வரமுயன்று ரோஹிலாவையும், தம்மையும் தொந்தரவு செய்வதையும் ஆனால் ரோஹிலாவின் பிரார்த்தனைகளைக் கேட்டவுடன் அவள் உள்ள நுழையத் துணியவில்லையென்றும் ஆதலால் அவர்கள் மன அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்கிறார்கள் என்றும் கூறினார். உண்மையில் ரோஹிலாவுக்கு ஒரு மனைவியும் கிடையாது. அவனுக்கு மனைவியாக பாபா குறிப்பிட்டது துர்புத்தி அதாவது கெட்ட எண்ணங்களாகும்...ஏனெனில் வேறெதைக் காட்டிலும் கடவுளிடம் வேண்டிக்கொள்வதிலும், முறையிட்டுப் பேரிரைச்சல்கள் செய்வதையும் பாபா விரும்பினார்...அவர் ரோஹிலாவின் பக்கம் இருந்து ரோஹிலாவின் இரைச்சல்களையும், கூக்குரல்களையும் பொறுத்துக் கொள்ளுமாறும் அவை சீக்கிரம் மறைந்துவிடும் என்றும் கூறினார்.இவ்வாறாக ரோஹிலா மீது பகவான் அளவு கடந்து அன்பு செய்தார் என்பது புலனாகின்றது.....
🔥சீரடி பாபாவின் இனியதும், பேர் அமுதத்தினைப் போன்ற உயரிய உபதேச அருள்மொழிகள் இங்கே...🔥
ஒருநாள் மத்தியானம் ஆரத்தி முடித்தபிறகு அடியார்கள் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். ... அப்போது பாபா கீழ்கண்ட அழகான அறிவுரையை விடுத்தார்....நீங்கள் எங்கு வேண்டுமானாலும் இருங்கள்...என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்.....ஆனால் இதை நன்றாக ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் செய்வது அனைத்தும் எனக்குத் தெரியும்... நானே அனைவருடைய அந்தரங்க ஆட்சியாளனாக இதயத்தில் அமர்ந்து இருக்கிறேன். இந்த உலகில் அசையும் - அசையா சர்வ ஜீவராசிகளையும் அரவணைக்கின்றேன்...இப்பிரபஞ்சமென்னும் தோற்றத்தை நானே கட்டுப்படுத்துபவன்... ஆட்டுவிப்பவன், எல்லா வர்க்கங்களின் மூலமாதா நானே...முக்குணங்களின் கூட்டுறவும் நானே....
நானே எல்லா உணர்ச்சிகளையும் உந்துபவன்... படைப்பவன்...,காப்பவன்...அழிப்பவனுமாம்.... என்பால் கவனத்தை திருப்புபவனை எந்த துன்பம் விளைவிக்காது...ஆனால் மாயை, என்னை மறந்தவனை ஆட்டி உலுக்கும்.... எல்லாப் பூச்சிகள், எறும்புகள், கண்ணுக்குத் தென்படுபவை, அசையக்கூடிய , அசையமுடியாத உலகம் எல்லாம் என்னுடைய உடம்பு அல்லது உருவம் ஆகும்."
இத்தகைய அழகான விலைமதிப்பற்ற மொழிகளைக் கேட்டு, இனிமேல் என் குருவைத் தவிர வேறு யாருக்கும் நான் பணிவிடை செய்யப்போவதில்லை என்று என் மனதில் நான் தீர்மானித்தேன்...அண்ணா சிஞ்சணீகரிடம் பாபா விடுத்த பதில் (உண்மையில் அது எனக்கானதாகும்) அதாவது நான் ஒரு வேலை கிடைக்கப் பெறுவேன் என்ற எண்ணம் என் மனதில் சுழன்றது.. நான் அவ்வாறே நிகழுமா என்று எண்ணிக் கொண்டிருதேன். எதிர்கால நிகழ்சிகளைக் காணுறும் போது பாபாவின் வார்த்தைகள் உண்மையாயின...நான் ஓர் அரசாங்க உத்தியோகத்தைப் பெற்றேன்... ஆனால் குறுகியகால அளவுடையது. .. பிறகு நான் சுதந்திரம் அடைந்தேன். என் குரு சாயீபாபாவினுடைய சேவைக்கு என்னைப் பூரணமாகச் சமர்ப்பித்தேன்...
இவ்வத்தியாயத்தை முடிக்கும் முன்பாக பல்வேறு இடையூறுகளான தூக்கம், சோம்பல், மனது அலைபாய்தல் , தீய எண்ணங்களின் தாக்கம் இவற்றை விட்டொழித்துவிட்டுத் தங்களுடைய முழுமையும், சிதைவுமற்ற கவனத்தை சாயீபாபாவின் கதைகளுக்கு அளிக்கும்படி இந்நூலைப் பயில்வோரிடம் நான் வேண்டிக்கொள்கிறேன். உங்களின் அன்பு இயற்கையானதாக இருக்கட்டும்...பக்தியின் ஆழத்தை உணர்ந்து அறியட்டும்...மற்ற பல சாதனைகள் புரிந்து களைப்படைய வேண்டாம். ஓர் எளிய மருந்தை அவர்கள் பற்றட்டும். .. அதாவது சாயீபாபாவின் கதைகளைக் கேட்பது மற்றும் பாராயணம் செய்வது போன்றவை, ஒவ்வொரு தனி மனிதனின் அறியாமையை அழித்து முக்தி நல்கக்கூடியது....ஓர் உலோபி பல்வேறு இடங்களில் தங்கினாலும், தன்னுடைய புதைக்கப்பட்ட செல்வத்திலேயே சதா சிந்தனை உள்ளவனாக இருப்பதைப்போல், சாயீபாபா நம் அனைவரின் உள்ளமெனும் அரியாசனத்தில் வீற்றிருக்கட்டும் என்று பாவனை செய்யுங்கள்..
ஸ்ரீ சாயீயைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்....🙏🏼🙏🏼🙏🏼
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏼🙏🏼🙏🏼