சனி, செப்டம்பர் 02, 2023

நம்முடைய சந்தேகங்கள் கேள்விகள், பதில்கள் மூலமாக தீர்க்கப்பட்டு விட முடியும் என்று நாம் அடிக்கடி நினைக்கிறோம்...!

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻

ஶ்ரீசீரடி சாயீன் உபதேச பொன்மொழிகள்...🙏🏻

நம்முடைய சந்தேகங்கள் கேள்விகள், பதில்கள் மூலமாக தீர்க்கப்பட்டு விட முடியும் என்று நாம் அடிக்கடி நினைக்கிறோம். ஒரு கேள்வியை பதிலளிப்பதென்பது,மனதில் வேறு பத்து கேள்விகளுக்கு வழிவகுக்கும்.ஒரு ஜோடி கேள்வி பதில் பத்து புதிய கேள்விகளுக்கு இடமளிக்கிறது, பின்னர் இந்த கேள்விகள், பதில்கள் சங்கிலி முடிவில்லாமல் தொடர்கிறது ஆனால் சந்தேகம் விலகுவதில்லை. நாம் கேவிகள் கேட்பதன் காரணமே நமது சந்தேகங்களைத் தீர்க்கவே, ஆனால், ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கூறுவது, அனைத்து சந்தேகங்களிலிருந்து விடுபட்டுள்ள ஒருவனே சத்தியத்தை அறியும் திறன் படைத்தவன் என்பதாகும். சந்தேகத்தின் பொருள், உன்னுடைய பிராணன்  முழுவதுமாக மலரவில்லை என்பதே, அது அதன் உன்னத நிலையை அடையவில்லை. பிராணன் உடலில் எங்கேயோ சிக்கியுள்ளது.

நீ முழுவதும் பிராணனாக இருக்கும் போது, அனைத்து சந்தேகங்களும் தானாகவே மறைகின்றன. ஆகவே தான் நீ மிகவும் சந்தோஷமாக இருக்கும் போது, உன் மனதில் சந்தேகங்கள் இல்லை. நீ ஆழ்ந்த அன்பில் இருக்கும் போது, உன்னுள் எந்த சந்தேகங்களும் எழுவதில்லை.சந்தேகம் என்றால் நீ ஒன்றை நம்புகிறாய், நீ அதில் நம்பிக்கையற்றும் இருக்கிறாய். நீ எதையாவது முழுவதும் நம்பவில்லையென்றால், அப்போது சந்தேகம் கிடையாது, நீ ஒன்றை முழுவதுமாக நம்பினால், அப்போதும் உனக்கு எந்த சந்தேகமும் இருக்காது.ஆகவே, நீ ஒன்றை நம்பியும், நம்பாமலும் இருக்கும் போது சந்தேகம் எழுகிறது, இந்த நிலையில், எவ்வாறு ஒருவன் அனைத்து சந்தேகங்களிலிருந்தும் விடுபட்டு, ஒன்றை முழுவதுமாக அறிந்து கொள்ள முடியும்..? இதுதான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுவதெல்லாம்: ‘ஞானம் தேஹம் ஸ-விஞானம் இதம் வக்ஸ்யாமி ஆஸேஸாத். யஜ் ஞாத்வா நேஹ பூயோ ந்யாஜ் ஞாதவ்யம் அவஸிஸ்யதே.(7.2), அவர் ‘இது ஒரு ஆழ்ந்த ஞானம் ஆனால் அதற்கு ஒரு விஞ்ஞானமும் இருக்கிறது. இதைத்தான் நான் உனக்கு சொல்லப் போகிறேன்,தெரிவதற்கு இல்லை என்று தெரிந்தபின்பு.

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா சொல்கிறார், ‘உனக்குத் தெரியாமல் நான் ஒன்றையும் வைத்துக் கொள்ளப் போவதில்லை. நான் உனக்கு முழு அறிவையும் வழங்குகிறேன்.’ அவர், அந்த அறிவின் ஒரு பகுதியை இன்றும், மிச்சமுள்ளதை நாளைக்கும் சொல்கிறேன் என்று சொல்லவில்லை...

ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்..🙏🏻

என்னுடைய யோக மாயையினால் எல்லோராலும் என்னைக் காண இயலாது...!

 ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻

ஶ்ரீசீரடி சாயீன் உபதேச பொன்மொழிகள்..🙏🏻

ஶ்ரீசாயீ கூறுகின்றார்...என்னுடைய யோக மாயையினால் எல்லோராலும் என்னைக் காண இயலாது. இந்தப் படைப்பில் எல்லா விதமான காரணங்களுக்கும் மூல காரணமாக இருப்பவன் நான். எந்த நிகழ்வுக்கும் காரணம் நான் தான். என்னில் எதுவும் குறையாது..

எதுவும் கூடாது. ஒரு மாற்றமும் இல்லாமல் இருப்பவன் நான். என்றும் பிறந்ததில்லை, இறக்கப் போவதும் இல்லை. மூடர்களுக்கு இது புரியாது.” “சிறிது அறிவு படைத்தவர்கள் கூட நான் தூய்மையான பரமாத்மா, பிறப்பு இறப்பு அற்றவன் என்று அறிவார்கள். பிறப்பு இறப்பை நான் எப்போதும் அனுபவித்ததில்லை. என்னைச் சுற்றி இருப்பவர்கள் காலப்போக்கில் வயது முதிர்ச்சி அடைகிறார்கள். மாறி கொண்டிருக்கிறார்கள். என்னில் எந்த மாற்றமும் இல்லாததால் நான் எப்படி இறக்க முடியும்..?” எது மாறிக் கொண்டிருக்கிறதோ, அதற்கு மட்டும் தான் அழிவு உண்டு...

ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்..🙏🏻🙏🏻

சீரடி தெய்வத்தின் மஹாசமாதி அருள்வாக்கு...!!!



ஓம் ஶ்ரீ  சாயீநாதாய நமஹ..🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவானின் உபதேச பொன்மொழிகள்...🙏🏻

ஶ்ரீசீரடி தெய்வத்தின் மஹாசமாதியின் போது பகவான் அளித்த அருள்வாக்கு...!!!🙏🏻

நான் பிராணனை விட்ட பிறகும்கூட என் வாக்குகளை பிரமாணம் என்று பாவனை செய்யுங்கள். என் சமாதியில் இருந்து, என் எலும்புகள் உங்களுக்குத் தைரியத்தைக் கொடுக்கும். நான் என்ன, என் சமாதிகூட, உங்களுடன் பேசும். வேறொன்றும் வேண்டாமல், என்னைச் சரண்டைந்த பக்தர்களின் பின்னே நின்று சமாதி அசைந்து கொண்டேயிருக்கும். உங்களுடைய கண்ணுக்குக் காணாமல் இருந்தாலும், என்னைக் குறித்துச் சிந்தை வேண்டாம் மனம், புத்தி, இந்திரியங்கள் எந்த விதமாக இருந்தாலும் அவை ஜடம் என்று தெரிந்தவுடனேயே விஷயங்களில் விரக்தி உண்டாகி, ஞானத்தை மூடியிருக்கும் திரை விலகும். தன் நிஜ ஸ்வரூபத்தை மறந்து விடுவதே மாயை. ‘ஆத்மா நான்’ என்ற ஞானம் இல்லாவிட்டால், ‘சரீரமே நான்’ என்ற நினைவு வரும்..

ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻.

சாதிபூதாதிதைவம் மாம் சாதியஜ்ஞம் ச யே விதுஹ். பிரயாணகாலே அபி ச மாம் தேவிதுர்யுக்த-சேதசஹ்..!

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏

சாதிபூதாதிதைவம் மாம் சாதியஜ்ஞம் ச யே விதுஹ். பிரயாணகாலே அபி ச மாம் தேவிதுர்யுக்த-சேதசஹ்...🙏🏻

இங்கு ஸ்ரீகிருஷ்ண பகவான் கூறுகிறார்... ‘யாருடைய புண்ய செயல்களுக்கு பலன்கள் கிடைக்க ஆரம்பிக்கிறதோ அவர்கள் துன்பங்களில் இருந்து விடுபட்டு என்னை நோக்கி வரத் தொடங்குகிறார்கள். யாருடைய பாபங்கள் துடைக்கப்படவில்லையோ அவர்கள் அறியாமையிலும் மாயையிலும் சிக்கியிருப்பார்கள்.’ இது தான் பாவ  புண்ணியங்களுக்கு இடையேயான வித்தியாசம். இதுதான் இரண்டிற்குமான விளக்கம். உங்களை ஆன்மீகப் பாதைக்கு வர விடாமல் தடுப்பது தான் பாவம் என்பது. வெளிச்சத்தை நோக்கி நடந்தால் இருள் (அறியாமை) தானாக மறையும். ஆனால் உங்களை வெளிச்சத்தை நோக்கி நகர விடாமல் செய்வது தான் பாவம் எனப்படுகிறது. சோகம், வலி மற்றும் துயரம் இவற்றிற்கான காரணமும் இது தான்...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻

மோஹம் (பந்தம்)

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏

ஶ்ரீசீரடி சாயீபகவானின் உபதேச பொன்மொழிகள்...🙏🙏

ஶ்ரீசாயீ கூறுகிறார்...யாருக்காவது எந்த வகையிலாவது இழப்பு ஏற்பட்டால், அதைத் தாண்டி வேறெதையும் பார்க்க இயலாதவாறு அந்த இழப்பு அவர்களை முழுமையாக ஆக்ரமித்துக் கொள்ளும். இதைத்தான் ஸ்ரீ கிருஷ்ணர் மோஹம் (பந்தம்) என்று அழைக்கிறார்... மேலும் அவர் கூறுகிறார், ‘அத்தகைய பந்தங்களில் சிக்கியவர்களால் எல்லாவற்றிலும் பரவி இருக்கும் ஒரு தூய பேருணர்வு என்று என்னை உணர முடியாது. என்னுடைய விசாலமான புத்தியை உணர முடியாது. நான் அவ்வளவு பரந்தும் உயர்ந்தும் இருப்பதை பார்க்க முடியாது..

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்..🙏🙏

வெள்ளி, செப்டம்பர் 01, 2023

ஏன் சாய்பாபாவை நம்புகிறீர்கள் என்ற கேள்வி எனக்குள் பல கேள்விகளை எழுப்பின....!!!


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏

ஶ்ரீசீரடி சாயீபகவானின் உபதேச பொன்மொழிகள்...🙏🙏

ஏன் சாய்பாபாவை நம்புகிறீர்கள் என்ற கேள்வி எனக்குள் பல கேள்விகளை எழுப்பின....!!!

பகவானை உணராது இருந்த ஆரம்ப கால கட்டத்தில் என்னுடைய சுயநலத்திற்காக என் தேவைக்காக பிரார்த்தனை செய்ய ஆரம்பித்த எனக்கு பிறகு அந்த சுயநலம் மறைந்து படிப்படியாக என்னுடைய தேவைகளை குறைந்தன...என்னை முழுவதுமாக அப்பேராற்றலிடம் ஒப்படைத்தேன்...சாட்சியாக என்னை முன்னிருத்தி என்னை கவனிக்க என்னுள் உள்ளுணர்வால் பகவான்  எம்மை ஆட்க்கொண்டு வழிநடத்தினார்..படிப்படியாக யாமும் பகவானும் வேறல்ல என்ற நாம் என்ற தன்மையால் நான் பகவானோடு இரண்டறக் கலந்து என்னையே பகவானிடம் ஒப்புக்கொடுத்தேன்...கருணை, அன்பு, அறம், போன்ற பல உயரிய நற்குணங்கள் என்னுள் உருவேற்றமானது... எனக்காக கேட்டுக்கொண்டிருந்த என்னுடைய பிரார்த்தனைகள் இப்பொழுது பிறருக்காக பிராத்தனை செய்ய ஆரம்பித்தேன். அதுவும் நடைபெற ஆரம்பித்தது. சாய்பாபாவின் இரண்டு குறிக்கோள்கள் பொறுமை மற்றும் நம்பிக்கை இரண்டும் கடைப்பிடித்தால் போதும் நாம் நம் பிறப்பு இறப்பு என்ற சூழலில் இருந்து எளிதில் விடுபட்டு விடலாம் மேலும் பிறவா வரத்தை எளிதில் அடையலாம். சாய்பாபா நம் பிரார்த்தனைகளை நிறைவேற்றி வைத்து விடுவார். நாம் பசியாறினால் இந்த உலக விஷயத்தில் நாட்டம் கொள்ளாமல் பற்று வைக்காமல் இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக உணர்ந்தால் நாம் பிறவா வரத்தை அடையலாம் அதற்காகத்தான் நம் பிரார்த்தனைகளை நிறைவேற்றி வைக்கிறார் இதை உணராமல் நாம் திரும்பத் திரும்ப தவறுகள் செய்து மீண்டும் பிறக்கிறோம். மேலும் சாய்பாபாவை வணங்குவதற்கும் நாம் புண்ணியம் செய்து இருக்க வேண்டும் அது மிகவும் முக்கியம். எல்லோருக்கும் சத்குருவின் அருள் கிடைக்காது அப்படி கிடைத்துவிட்டால் நமக்குள் சுய விழிப்புணர்வு அடையப் போகிறோம் என்றும் பொருள் அவர்மேல் முழு நம்பிக்கையும் பொறுமையும் கொண்டால் பிறப்பு இறப்பு சூழல்களிலிருந்து நாம் எளிதில் கடந்துவிடலாம் நமக்கு தேவை ஒன்றும் இருக்காது எனக்கு அந்த ஆன்மீக அனுபவம் கிடைத்துக் கொண்டிருக்கிறது..

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்..🙏🙏

நான் கடந்த காலத்தில் நடந்த அனைத்தையும் அறிவேன்...!

 ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏

ஶ்ரீசீரடி சாயீபகவானின் உபதேச பொன்மொழிகள்...🙏

ஶ்ரீசாயீ கூறுகிறார்....நான் கடந்த காலத்தில் நடந்த அனைத்தையும் அறிவேன். நிகழ்காலத்தில் எல்லாவற்றையும் அறிவேன். வருங்காலத்தில் நடக்கப்போகிற எல்லா நிகழ்ச்சிகளை பற்றியும் நான் அறிவேன்.” என்று பகவான் சொல்கிறார். நமக்குள் ஆழ்ந்த நிலையில் உள்ள ஆத்மா எல்லாவற்றையும் அறியும். கடந்த கால நிகழ்ச்சிகளைப் பற்றியும், வருங்காலத்தில் நடக்கப் போகும் அனைத்து நிகழ்சிகளைப் பற்றியும் ஆத்மா அறியும். இவற்றை அறிய வல்லதையே நாம் ஆத்மா என்று சொல்கிறோம். பகவான் சொல்கிறார். நான் எல்லாவற்றையும், எல்லோரையும் அறிவேன். ஆனால் எல்லோரும் என்னை அறிவதில்லை. எல்லாவற்றையும் அறியும் சக்தி ஒன்று மட்டுமே. அது ஆத்மா...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏

என் யோக மாயையினால் நான் எல்லோருடைய கண்களுக்கும் காட்சி அளிப்பதில்லை. ..!

 

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏

ஶ்ரீசீரடி சாயீபகவானின் உபதேச பொன்மொழிகள்...🙏🙏

என் யோக மாயையினால் நான் எல்லோருடைய கண்களுக்கும் காட்சி அளிப்பதில்லை. அதனால் தான் எல்லோரும் என்னை அறிவதில்லை.. என்னை (இறைவனாக) அறிந்தவர்கள் புத்திசாலிகள். அறியாதவர்கள் மூடர்கள். சூரியனைப் பார்த்து இது தான் சூரியனா..? என்று கேட்பவனை என்னவென்று அழைப்பாய்..? சூரியனின் கிரணங்கள் உன் தலையில் படும் போது, அதன் வெப்பம் பூமியைத் தகிக்கும் போது யாராவது இப்படிக் கேட்பார்களா..? இது தான் சூரியன் என்பதற்கு வேறு ஆதாரம் தேவையில்லை..

ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏

உண்மையான ஆன்மீக சாதனை என்பது..!?

 


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவானின் உபதேச பொன்மொழிகள்....🙏🙏

🔥உண்மையான ஆன்மீக சாதனை என்பது அனைத்து வேலைகளையும் இறைவனின் பணியாக எண்ணிச் செய்வதுதான். வெறும் ஜபம், தியானம் இவையெல்லாம் அல்ல. கடவுள் எங்கும் நிறைந்தவர். இதைத்தான் வேதம் இவ்வாறு உரைக்கிறது.🔥.


          ஸர்வதஃப் பாணிபாதம் தத்

          ஸர்வ தோட்சி ஸிரோ முகம்,

          ஸர்வத ஸ்ருதி மல்லோகே ஸர்வமாவ்

          ரித்ய திஷ்டதி..!

(அவரது கண்கள், கரங்கள், பாதங்கள், சிரங்கள், வாய், காதுகள் எல்லா இடத்திலும் வியாபித்திருக்க, கடவுள் இப்பிரபஞ்சம் முழுவதையும் ஊடுருவி நிற்கிறார்). நீங்கள் யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம். ஆனால் கடவுளை மட்டும் ஏமாற்ற முடியாது. அவர் எப்போதும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார். அவர் நிரந்தர சாட்சி. அவர் உன்னிடம் இருக்கிறார். எப்படி… உன் கண்ணில் பார்வை எங்ஙனம் நிறைந்திருக்கிறதோ அப்படி. ஒரு புல்லின் நுனியும் கூட அவரது சங்கல்பமின்றி அசையாது. ‘நான் செய்தேன்’ என்ற எண்ணத்தில் மயங்கிவிடுவது முட்டாள் தனம். ஆகவே உனது சாதனைகளைப் பற்றிய வீண் பெருமை வேண்டாம். இறைவனே செய்கிறான், அதன் பலனையும் அனுபவிக்கின்றான் என்ற புனித உணர்வுகளை வளர்த்துக் கொள்ளுங்கள். எல்லாமே இறைவனின் சங்கல்பம் என்ற எண்ணம் வேண்டும். உனக்கு எது நடந்தாலும், அது லாபமோ, நஷ்டமோ, துன்பமோ, மகிழ்ச்சியோ, அது கடைமுடிவாக உனக்கு நன்மையையே தரும் என்ற உறுதியான நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏

செவ்வாய், ஆகஸ்ட் 29, 2023

என் தெய்வீக ரூபம் என்றும் இருப்பது. இவ்வுலகில் இருக்கும் எந்தப் பொருளுக்கும் ஈடில்லாதது. ..!

ஓம்  ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவானின் உபதேச பொன்மொழிகள்...🙏🙏

என் தெய்வீக ரூபம் என்றும் இருப்பது.... இவ்வுலகில் இருக்கும் எந்தப் பொருளுக்கும் ஈடில்லாதது. என் ரூபம் யார் கண்ணுக்கும் தெரியாதது. என்னை அறியாதவர்கள் என்னுடைய கண்ணுக்குத் தெரியும் மனிதனைப் போன்ற உருவத்தையும் என்னுடைய இந்த குணங்களையும் மட்டும் நினைப்பவர்கள் மூடர்கள். நான் ஒரு தெய்வீக சக்தி. மனிதன் அல்ல. நான் தூய்மையான ஆத்மா. எங்கும் நிறைந்திருப்பவன். இந்த தெய்வசக்தியை அறியாதவர்களின் கண்ணுக்கு நான் சாதாரண மனிதனாகக் காட்சி அளிக்கிறேன். இது ஒரு குறுகிய கண்ணோட்டமாகும். குறுகிய கண்ணோட்டம் என்றால் என்ன..? சின்னச் சின்ன விஷயங்களில் சிக்கிக் கொள்வது. உதாரணத்துக்கு“அவர் அவனைப் பார்த்தார். என்னைப் பார்க்கவில்லை. அவனோடு பேசினார். என்னோடு பேசவில்லை. இதெல்லாம் வேண்டாதவையாகும்...

ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏

கர்மவினை என்றால் என்ன..?

 

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவானின் உபதேச பொன்மொழிகள்...🙏🙏

கர்மவினை என்றால் என்ன..? கர்மவினை ஓர் சங்கிலித் தொடர்...புத்தர்.புத்தர் ஞானமடைந்த பின் அவர் உறவினர் தேவதத்தன் அவருக்கு விஷமிட முயற்சி செய்தான்...அவரைக் கொல்லப் பல முறைகளைக் கையாண்டான்..ஆனால் எல்லா முயற்சிகளிலும் தோல்வி அடைந்தான்...ஒருமுறை ஒரு மதம் பிடித்த யானையை புத்தரின் அருகில் ஏவி விட்டான்..ஆனால் அது புத்தர் அருகே வந்ததும் அமைதியாகி,கண்களை மூடிக் கொண்டது சிலர் புத்தரைக் கேட்டார்கள்,'தேவதத்தன் சிறு வயதிலிருந்தே உங்களுக்குப் பல வகையிலும் தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறான்.

ஆனால் நீங்கள் அவனை ஒன்றும் செய்வதில்லை.ஏன்..?அவன் ஏன் இம்மாதிரி செய்கிறான்..?'புத்தர் சொன்னார், ''என்னுடைய கடந்த காலச் செயல்களால் தான் இவை எல்லாம் நடக்கின்றன..கடந்த காலத்தில் நான் ஏதாவது வகையில் அவனைத் தொந்தரவு படுத்தியிருப்பேன்....அந்த சங்கிலித் தொடரின் பிரதிபலிப்பாக அவன் இப்படி செய்து கொண்டிருக்கிறான்....இது அவனுடைய செயல் அல்ல...அதேபோல் கடந்த காலத்தில் இந்த யானைக்கு நான் ஏதேனும் உதவி செய்திருப்பேன்...அப்படியில்லை என்றால்அது எப்படி இவ்வாறு சாந்தமாக என் அருகில் நிற்கும்..?இப்போது நான் தேவதத்தன் செயல்களுக்கு சாட்சியாக இருக்க வேண்டும்...அப்படி இல்லாமல் நான் பதிலுக்கு ஏதேனும் செய்தால மீண்டும் ஒரு சங்கிலி உருவாகி விடும்...என் கடந்த காலச் செயல்களுக்கு இப்போது தேவதத்தன் செய்யும் செயல்களோடு தேவதத்தனுடைய விசயங்கள் முடிந்து போகட்டும்...நான் இனி ஒரு புதிய சங்கிலியை வினையை கர்மத்தை எதிர்காலத்தில் உருவாக்கப் போவதில்லை.'' என்றார்.....

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏

ராம பாணத்தால் தாக்கப்பட்டு, வெட்டுண்ட மரம் போல் கீழே விழுந்தான் வாலி..!?.

 

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவானின் உபதேச பொன்மொழிகள்....🙏🙏

ராம பாணத்தால் தாக்கப்பட்டு, வெட்டுண்ட மரம் போல் கீழே விழுந்தான் வாலி.. ராமன் தான் தன்னை மறைந்திருந்து தாக்கியுள்ளான் என்பதை உணர்ந்த வாலி, ராமனைப் பலவாறு ஏசினான்...அத்துடன் ராமனிடம் ஆறு கேள்விகளைக் கேட்டான் வாலி...உனது நாட்டுக்குள் வந்து நான் என்ன தவறு செய்தேன்..? உனக்கும் எனக்கும் ஏதாவது முன் விரோதம் உண்டா..? உனக்கும் எனக்கும் முன் அறிமுகம் உண்டா..? காட்டில் வாழும் மிருகத்தை நாட்டில் வாழும் மனிதன் எதற்காகத் தேடி வந்து தாக்க வேண்டும்..?ஒருவேளை நீ வேட்டையாட நினைத்திருந்தாலும், எதற்காக ஒரு குரங்கை வேட்டையாட வேண்டும்..? ஏன் மறைந்திருந்து என்னைத் தாக்க வேண்டும்..?

இவற்றுள் முதல் ஐந்து கேள்விகளுக்கு ராமன் விடையளித்தான்....

1.. மலை, காடு, சிறுகாடு, குறுநிலங்கள் ஆகிய அனைத்தும் அயோத்திப் பேரரசுக்கு உட்பட்டவையே. எனவே உன்னைத் தண்டிக்க எனக்கு அதிகாரம் உண்டு...

2 . நான் எப்போது சுக்ரீவனோடு அக்னி சாட்சி யாக நட்பு பூண்டேனோ, அப்போதே அவனது சுக துக்கங்கள், சொத்துக்கள் அனைத்திலும் எனக்கும் பங்கு உண்டு. என் நண்பனது ராஜ்ஜியத்தையும் மனைவியையும் அபகரித்த நீ எனக்கும் விரோதியே ஆவாய்..

3... சுக்ரீவனிடமிருந்து ராஜ்ஜியத்தையும் அவனது மனைவியையும் தட்டிப் பறித்துப் பெருங்குற்றம் செய்திருக்கிறாய். அக்குற்றத்துக்குத் தண்டனையாகவே இப்போது நான் உன்னைத் தாக்கினேன். 

4.. தவறிழைத்தவனைத் தண்டிக்கும் போது, முன்பின் அறிமுகம் இருக்க வேண்டிய அவசியமில்லை.

5.. நீ நாட்டில் இருந்தாலும் சரி, காட்டில் இருந்தாலும் சரி, நீ மனிதனாக இருந்தாலும் சரி, மிருகமாக இருந்தாலும் சரி, அயோத்திப் பேரரசுக்கு உட்பட்ட எந்தப் பகுதியில் வாழும் யார் தவறு செய்தாலும், அவரைத் தேடிச் சென்று தண்டித்தல் என் கடமையாகும்...குரங்கை வேட்டையாடுவதால் எனக்குப் பயனில்லை என்றாலும், மன்னர்களான நாங்கள் பொழுது போக்குக்காக வேட்டையாடுவது உண்டு. அதற்குப் பயன் இருக்க வேண்டிய அவசியமில்லை..இப்படி ஐந்து கேள்விகளுக்கு விடையளித்த ராமன், ஆறாவது கேள்விக்குப் பதிலளிக்கவில்லை...ஆனால் ராமனின் மனக்கருத்தை நன்கு அறிந்த லட்சுமணன் அந்தக் கேள்விக்கு விடையளித்தான்..

“வாலி..! அன்று உனது தம்பியான சுக்ரீவன் உன் கால்களில் விழுந்து சரணாகதி செய்த போது, அவனை மன்னித்தாயா..? இல்லையே..! கொல்லப் பார்த்தாய்..! காலில் விழுந்து சரணடைந்தவனைக் காக்கத் தெரியாத உனக்கு, தன்னிடம் சரணாகதி செய்யும் வாய்ப்பைக் கூடத் தரக்கூடாது என நினைத்தான் ராமன். எங்கே ராமன் உன் எதிரில் வந்து உன்னைத் தாக்க முயன்றால் நீ சரணாகதி செய்து விடுவாயோ என்று கருதியே மறைந்திருந்து உன்னைத் தாக்கினான்..!” என்றான் லட்சுமணன்....

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏.

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏

திங்கள், ஆகஸ்ட் 28, 2023

ஒருவர் எந்த தெய்வத்தை வணங்கினாலும்,(நான் விதித்தபடி) அதற்கான பலன்களை அந்த தெய்வத்திடமிருந்து பெறுவார்...!

 ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏

ஶ்ரீசீரடி சாயீபகவானின் உபதேச பொன்மொழிகள்...🙏🙏

ஒருவர் எந்த தெய்வத்தை வணங்கினாலும்,(நான் விதித்தபடி) அதற்கான பலன்களை அந்த தெய்வத்திடமிருந்து பெறுவார். பிரார்த்தனையின் பலன்களை அளிப்பது என்னைத் தவிர வேறு யாரோ என்று நினைக்காதே... எல்லா விதமான பிரார்த்தனையின் பலன்களும் என்னிடமிருந்து தான் கிடைக்கிறது. எல்லா தெய்வங்களும் என் சொருபமே. இது இயற்கையின் நியதி. நீ உன் கையை நெருப்பில் வைத்தால், இயற்கை நியதிப்படி அது உன் கையைச் சுடும். நீரில் கை வைக்கும் போது அதன் குளிர்ச்சியை உணரலாம். ..

🔥பகவான் சொல்கிறார்..எல்லாமே இயற்கையின் விதிகளின் படி தான் நடக்கிறது. இந்த விதிகளை உருவாக்கியது நான் தான். ஆகவே எல்லோருக்கும் கிடைக்கும் பிரார்த்தனையின் பலன்களை அளிப்பதும் நானே....🔥

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏

ஓம

நீங்கள் எது செய்தாலும், அது கடவுளின் பணி. ..!

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவானின் உபதேச பொன்மொழிகள்...🙏🙏

நீங்கள் எது செய்தாலும், அது கடவுளின் பணி. உதாரணமாக, நீங்கள் மூச்சு விடுவதும் கூட – உள்மூச்சு, வெளிமூச்சு ஒரு ஆனமீக சாதனைதான். மூச்சை உள்ளிழக்கும் போது, அது ‘ஸோ’ என்ற ஒலியுடன் (அது), இணைத்துப் பார்க்கப்படுகிறது. மூச்சை வெளியிடும் போது, ‘ஹம்’ (நான்) என்ற ஒலியுடன் வெளிவருகிறது. ஆகவே ‘ஸோஹம்’ என்பது ‘I am that’ (இறைவன்) என்ற பொருள் தருகிறது. ‘ஸோ’ என்பது தெய்வீகத்தையும், அஹம் என்பது அஹங்காரத்தையும் குறிக்கிறது. ஆகவே ‘ஸோஹம்’ என்பது நல்லதை உள்ளிழுத்து அல்லதை வெளித்தள்ள வேண்டும் என்பதை பாடமாக் கற்பிக்கிறது. இந்த உள்மூச்சு, வெளிமூச்சு என்பதை ஒரு நாளில் 21,600 முறை தொடர்ந்து நடைபெறுகிறது. அதாவது உன்னுள் ஒரு குரல், ஒரு நாளைக்கு 21,600 முறை உன்னைக் கடவுள் நீதான் என உணர்த்துகிறது. துரதிருஷ்டவசமாக நீதான் அந்தச் செய்தியை ஏற்கத் தயாராக இல்லை. இந்த உண்மையைப் புரிந்து கொள்ளத்தான், இறைவன் உனக்கு இந்த உடலைப் பரிசாகத் தந்திருக்கிறார். கடவுளை உன்பூஜையறையுடன் நிறுத்தி விடாதே. கடவுள் உனது உயிர் மூச்சு...

ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏

ஒருசில சமயங்களில் நம் செயல்களுக்கு...!


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏  

ஒருசில சமயங்களில் செயல்களுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் இருக்கலாம். அவை நம் அறிவுக்கெட்டா விட்டாலும் தகுந்த காரணங்களாலேயே தான் இருக்கும். ஆனாலும் கூட அதுகுறித்த கவலையோ, பதட்டமோ அந்த நிலையை மாற்றி விடப் போவதில்லை. எனவே தான் பலனைக குறித்த சிந்தனையை செயல் புரியும் சமயத்தில் அப்புறப்படுத்தி விட அறிவுறுத்துகிறார் ஸ்ரீகிருஷ்ணர்...பற்றுடைய செயல் வெறும் செயலாக இருக்கையில் பற்றற்ற செயல் யோக நிலைக்கு உயர்த்தப்படுகிறது...

ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்..🙏🙏

கர்மயோகம்...!

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவானின் உபதேச பொன்மொழிகள்...🙏🙏

கர்மயோகத்தின் முழுமைத்தன்மை எதனை வலியுறுத்துகின்றது என்பதை இங்குப் பார்ப்போம்...🙏

கர்மயோகம் குறிக்கோளில்லாமல் இருக்கச் சொல்லவில்லை...அர்த்தமில்லாமல் செயல் புரியச் சொல்லவில்லை. செய்யும் செயலை விட்டேற்றியாகச் செய்யச்சொல்லவில்லை... சிறப்பாகச் செய்து முடித்த ஆத்மதிருப்தியை இழந்து விடச்சொல்லவில்லை...செயலில் கிடைக்கும் சின்னச் சின்ன சந்தோஷங்களை இழந்து விடச்சொல்லவில்லை..மாறாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதிலும் எப்படிச் செய்ய வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கச் சொல்கிறது. நம்மைச் செய்யும் செயலில் முழுமையாக ஈடுபடச் சொல்கிறது. செயலில் கீழ், மேல் என்ற பாகுபாடுகள் இல்லை என்று சொல்கிறது. பலன், புகழ், கவலை, பயம் என்று நமதுசக்திகளை வீணடிக்காமல் செய்யும் செயலில் கண்ணாயிருக்கச் சொல்கிறது. பலன்தானாக வரும் என்கிறது கீதை...

ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏

இன்பங்கள், துன்பங்கள் எதுவுமே நிரந்தரமில்லை...??!!

 


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவானின் உபதேச பொன்மொழிகள்...🙏🙏

இன்பங்கள், துன்பங்கள் எதுவுமே நிரந்தரமில்லை !!!...

ஒரு மருத்துவர், நோயாளி ஒருவருக்கு அவசர சிகிச்சை தேவைப்படுவதாக அழைக்கப்பட்டிருந்ததால்,வேகமாக மருத்துவமனைக்குள் நுழைந்தார்...விரைவாக தன் உடைகளை மாற்றிக்கொண்டு சிகிச்சைப் பிரிவுக்கு சென்று கொண்டிருந்தார்... அங்கே சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய இளைஞனின் தந்தை மருத்துவரின் வரவுக்காக காத்துக் கொண்டிருந்தார்..மருத்துவரைக் கண்டதும் கோபமாக,"என் மகன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான்...ஏன் நீங்கள் இங்கு வர இவ்வளவு தாமதம்?  உங்களுக்கு பொறுப்புணர்ச்சி இருக்கிறதா?" என்று கதறினார்...மருத்துவர் புன்னகையுடன், "மன்னியுங்கள், நான் மருத்துவமனையில் இல்லை... எனக்கு அழைப்பு வந்ததும் என்னால் இயன்ற அளவு விரைந்து வந்தேன்...சற்று பொறுமையாக இருங்கள்" என்று கூறினார் பொறுமையாக இருக்கவா?" அந்த தந்தை மேலும் ஆத்திரத்துடன், "உங்கள் மகன் இவ்வாறு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தால் நீங்களும் பொறுமையாக இருப்பீர்களா? உங்கள் மகன் இறக்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள்" என்று கொந்தளித்தார்...மருத்துவர் சிரித்த முகத்துடன், "எங்களால் இயன்ற அளவு முயற்சி செய்கிறோம். நீங்களும் கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள்" என்றார்..."கையறுநிலையில் இருப்பவனுக்கு அறிவுரை கூறுவது மிகவும் எளிது" தந்தை முனுமுனுத்தார். அறுவைசிகிச்சை சில மணி நேரங்கள் நடைபெற்றது...மருத்துவர் மகிழ்ச்சியுடன் வெளியே வந்தார், "உங்கள் மகன் பிழைத்துவிட்டார்" என்று சொன்னபடி,.."மேற்கொண்டு ஏதும் சந்தேகம் என்றால் செவிலியரைக் கேட்டு அறிந்துகொள்ளுங்கள்" என்று கூறியபடி அவசரமாக போய்விட்டார்..சற்று நேரத்தில் வந்த செவிலியரிடம், "அந்த மருத்துவர் அத்தனை அகங்காரம் பிடித்தவரா? என் மகனின் நிலையை என்னவென்று கூறக்கூட நேரமில்லையா?"என்று நொந்துகொண்டார் தந்தை...அதற்கு அந்த செவிலி கண்ணீர் மல்க, "அந்த மருத்துவரின் மகன் நேற்று ஒரு விபத்தில் இறந்துவிட்டார்... இன்று, அவர் மகனை அடக்கம் செய்யும் சடங்கில் இருந்தார். உங்கள் மகனுக்காக அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்று அழைத்தவுடன் அந்த வேலையை ஒத்தி வைத்துவிட்டு ஓடி வந்து உங்கள் மகனையும் காப்பாற்றிவிட்டார்...

இப்போது மீண்டும் மகனை அடக்கம் செய்யப் புறப்படுகிறார்" என்று கூறினாள்.

நீதி: எவரின் மனநிலையையும் நாமே தீர்மானிக்கக் கூடாது, அவர்கள் வாழ்க்கையைப் பற்றியும், மனோநிலையைப் பற்றியும் நாம் அறிந்திருக்காதவரை!!"நம் வாழ்க்கையில் பாதி பிரச்சனைகள் கற்பனையானவை... மீதி பிரச்சினைகள் தற்காலிகமானவை..."

இன்பங்கள், துன்பங்கள் எதுவுமே நிரந்தரமில்லை...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏

ஞாயிறு, ஆகஸ்ட் 27, 2023

தன்னலமற்ற பிரேமை பக்திக்கான கண்ணணின் நாடகம்..!


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவானின் உபதேச பொன்மொழிகள்...🙏🙏

தன்னலமற்ற பிரேமை பக்திக்கான கண்ணணின் நாடகம்..!🙏ஒரு முறை துவாரகையில் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை காண நாரத மகரிஷி வந்தார் அப்போது அவர்கள் இருவரும் உரையாடி கொண்டிருக்கையில் நாரத முனிவர் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை நோக்கி கேட்டார். துவாராகையில் உள்ள தங்களது பத்தினிகளை பிருந்தாவனத்தில் இருக்கும் கோபிகைகளிடம் தங்கள் மனம் எப்போதும் எண்ணி கொண்டிருப்பதன் காரணம் என்ன. அதை நான் எவ்வாறு உணர்ந்து கொள்வது என்றார்..பகவான் கிருஷ்ணரும் நாரதரை நோக்கி சிரித்து பின்னர் மௌனமானார்...சிறிது நேர உரையாடலுக்கு பின்னர்  பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் நாரதரை நோக்கி எனக்குத் தலை ரொம்ப வலிக்கிறது" என்று சொன்னார். அதற்கு நாரதர், "இதற்கு ஏதாவது மருந்து இருந்தால் சொல்லுங்கள், எப்பாடு பட்டாவது கொண்டு வருகிறேன்" என்று சொன்னார்..கிருஷ்ணரும், "நாரதரே,.! எங்கும் செல்ல வேண்டாம். இந்தத் தலைவலி என்னுடைய பக்தர்களின் காலடி மண்ணைத் தடவினால் சரியாகிவிடும். இங்கு யாரேனும் தம்முடைய காலடி மண் இருந்தால் கொடுங்கள், அதை என் நெற்றியில் தடவினால் என் வலி தீரும் என்று சொன்னார். ருக்மிணியும் ஸத்யபாமாவும்,"எங்கள் காலடி மண்ணை உம்முடைய நெற்றியில் தடவுவதா..? நாங்கள் உம்முடைய பத்தினிகள் அல்லவா..? மகாபாவம் வந்து சேருமே" என்று பதறினார்கள். நாரதர், மற்றும் அங்கு உள்ள அனைவரும், அந்தப் பாவத்தை நாங்கள் சுமக்க முடியாது" என்று கூறி மறுத்துவிட்டனர். நேரம் ஆக ஆக, கிருஷ்ணருக்கு தலை வலி அதிகரித்தது கொண்டே இருக்கிறது என்றார்.

பின்னர் நாரதரிடம் நீ உடனே பிருந்தாவனம் சென்று கோபிகைகளிடம் அவர்களது பாததூளியைக் கேட்டு வாங்கி வா. சீக்கிரம்" என்று சொன்னார். , நாரதர் உடனே பிருந்தாவனம் சென்று இடைப்பெண்களிடம் கண்ணனுடைய தலைவலியைப் பற்றியும், அதற்கான தீர்வையும் கூறினார். அதைக் கேட்ட உடனேயே, ஒரு கோபிகை தனது மேலாக்கை அவிழ்த்துத் தரையில் போட்டாள். எல்லா கோபிகைகளும் மண்ணில் குதித்து, தங்களது காலில் ஒட்டியிருந்த மண்ணை அந்த மேலாக்கில் ஏறி நின்று உதிர்த்தனர் இவ்வாறு ஒரு சிறு மண் மூட்டையை செய்து நாரதரிடம் கொடுத்தனர். கண்களில் நீர் வழிய , "நாரதரே.,! சீக்கிரம் சென்று எங்களுடைய பிரியமான கண்ணனுடைய நெற்றியில் இதைத் தடவுங்கள்" என்று சொன்னார்கள். நாரதர் அவர்களிடம், இது பெரிய பாவமென்று உங்களுக்குத் தெரியாதா என்று கேட்க, கோபிகைகள், "கண்ணனுடைய தலைவலி தீர்ந்தால் போதும், நாங்கள் எந்தப் பாவத்தைப் பற்றியும் கவலைப்படவில்லை" என்று கூறினார்கள்.....

நாரதரும் துவாரகை சென்று பகவான் கிருஷ்ணரிடம் அந்த மூட்டையைக் கொடுத்தார். கிருஷ்ணர், மூட்டையிலிருந்த கோபிகைகளின் பாததூளியை எடுத்துத் தன் நெற்றியில் தடவ தலைவலியும் சரியாகிவிட்டது. நாரதர், ருக்மிணி ஸத்யபாமாவிற்கும் உண்மையான பக்தியைப் பற்றிப் புரிந்தது. பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் கூறினார் , "தலையில் இருந்து ஒரு சுமையை இறக்கி வைத்தாற்போல் உள்ளது, தலைவலி சரியாகிவிட்டது" என்று சொன்னான் இவ்வாறு , பிருந்தாவனத்து கோபியர்களின் உண்மையான தன்னலமற்ற பிரேம பக்தியின் பெருமையை நாரதருக்கும் மற்றவர்க்கும் உணர்த்த விரும்பிய பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தலைவலி நாடகம் நடத்தி புரியவைத்தார்...

ஓம் ஶ்ரீ சாயீராம்....🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏

என்ன சுலோகம் சொல்லிக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டார் பாபா..!?

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவானின் உபதேச பொன்மொழிகள்...🙏🙏

கீதை பிறந்த கதையின் மூல சூட்சமம் என்னவென்றால்...

ஒரு சமயம் சீரடி சாயீபாபாவின் காலை வலி தீர வருடிக் கொண்டும் பிடித்துக் கொண்டும் இருந்தார் மகா பண்டிதரான ஒரு பிரமாணர். அவருடைய கண்கள் மூடியிருந்தாலும், வாய் ஏதோ சுலோகங்களைச் சொல்லிக் கொண்டிருந்தது....என்ன சுலோகம் சொல்லிக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டார் பாபா. பாபா நான் பகவத்கீதையைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்றார் அந்தப் பண்டிதர். உடனே பாபா அந்த சுலோகத்தைச் சொல்லி இதைத் தானே சொல்லிக் கொண்டிருக்கிறாய் என்ற கேட்டார். அந்த பண்டிதருக்கு வியப்பு தாளவில்லை. தான் மனத்திற்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டிருந்த சுலோகம் இவருக்கு எப்படித் தெரிந்தது என்று வியந்தார். சரி.. அதற்குப் பொருள் கூறு என்றார் பாபா. பண்டிதரும் கூறினார். தவறு.. தவறு.. நீ சொன்ன பதில் தவறு. அது தான் உண்மையான பதில் என்று நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். ஸ்ரீ வியாசர் அந்த அர்த்தத்தில் எழுதியிருக்க மாட்டார் என்று சொல்லி சரியான பொருளைக் கூறி அந்த வேத பண்டிதரை மேலும் வியக்க வைத்தார் பாபா. அப்படித்தான் சூரியபகவானுக்கு ஆதிகாலத்தில் உபதேசிக்கப்பட்ட பகவத்கீதை பலரால் கற்கப்பட்டாலும், பல சமயங்களில் சரியான பதில் சொல்லப்படாததாலும், ஸ்ரீ கிருஷ்ணர் இரண்டாவது முறையாக அர்ஜுனன் மூலமாக நமக்கு உபதேசித்தார். இதுவே கீதை பிறந்த கதை..

ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏

ஒரு ஸாதகர் குருவின் பணியான ஆன்மீகத்தினை பரப்பும் காரியங்களை செய்து குருவின் அருளினைப் பெற்று விரைவான ஆன்மீக முன்னேற்றத்தினை அடைகிறார்.

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவானின் உபதேச பொன்மொழிகள்...🙏🙏

ஒரு ஸாதகர் குருவின் பணியான ஆன்மீகத்தினை பரப்பும் காரியங்களை செய்து குருவின் அருளினைப் பெற்று விரைவான ஆன்மீக முன்னேற்றத்தினை அடைகிறார். குருவின் அருளைப் பெறுதலை வேறு எந்த உலக வெற்றிகளுடனும் ஒப்பிட முடியாது. இருந்தாலும் பின்வரும் உதாரணம் இதனை நன்கு புரிந்து கொள்ள உதவும். வறுமையில் வாடும் மாணவன் ஒருவன் தன்னுடைய கடும் உழைப்பால் கோடீஸ்வரன் ஒருவரின் கவனத்தைப் பெறுகிறான். அதன் பின் அக்கோடீஸ்வரர் மிகச்சிறந்த பல்கலைக்கழகம் ஒன்றில் அவன் சேர்வதற்கான அனைத்து செலவினையும் ஏற்கிறார் மற்றும்  அவனது எதிர்கால வேலைவாய்ப்புக்களையும் பார்த்துக் கொள்கிறார். இதன் மூலம் பல வருடங்களாக வேலை செய்து மெதுவாக வேலைத்தளத்தில் உயர்வினை பெறும் காலம் சேமிக்கப்படுகிறது. அதுபோல் குருவின் அருளினைப் பெறும் இறைவனின் ஸாதகரும் மற்றைய ஆன்மீக பாதைகளில் செலவழிக்கும் பல வருட ஆன்மீக பயிற்சியினை சேமிக்கிறார்...

ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏

நமக்கு வரும் துன்பங்களில் பெரும்பாலான துன்பங்களுக்கு காரணம் புலன்களை முறையாக இயக்கத் தெரியாததே.

 


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவானின் உபதேச பொன்மொழிகள்...🙏🙏

இங்கே அஞ்சு என்று குறிப்பிடப் படுவது ஐம்புலன்கள்...நமக்கு வரும் துன்பங்களில் பெரும்பாலான துன்பங்களுக்குக் காரணம் புலன்களை முறையாக இயக்கத் தெரியாததே...மெய்,வாய், கண், மூக்கு, செவி ஆகிய உணர்கருவிகள் மூலம் பெறும், தொடு, சுவை, பார்வை, வாசணை, கேட்கும் உணர்வுகளில் மனமானது மயங்கி, மீண்டும் மீண்டும் அவைகளை உபயோகப்படுத்தி உடலுக்கும் உள்ளத்திற்கும் துன்பத்தை அளிப்பதோடு கருமையத்தையும் களங்கப்படுத்தி விடுகிறது. இதனாலேயே நமது முன்னோர்கள் இந்த ஐந்தையும் அடக்க வேண்டும் என்று கூறினார்கள்...ஆனால் உடல் மன இயக்கத் தேவைகள் இருக்கும்வரையில் இவைகளை அடக்கமுடியாது. அப்படியானால் என்ன செய்வது..?புலன்கள் வழியே செயல்படும் மனதை மீட்டு அதை புலன்களை வழிநடத்தும் மனதாக மாற்ற வேண்டும். இம்மன வலிமையால் புலன்களை முறையாக தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தி பிற நேரங்களில் அமைதிபடுத்த வேண்டும். ஏனெனில் அமரர் எனப்படும் தேவர்களால் கூட இவைகளை அடக்கமுடியாது..அப்படி இவைகள் அனைத்தையும் இயக்கவில்லை எனில் அது உயிரற்ற ஜடப்பொருளாக மட்டுமே இருக்கமுடியும்...எனவே ஐம்புலன்களை அடக்காமல் அளவறிந்து தேவைக்குமட்டும் பயன்படுத்தும் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்,..

ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏